Jan 19, 2005

சாரு டாராயிட்டாரு

நம்ம தோஸ்து சாரு ஊருல இல்லை. ஆனா, நம்ம மக்கள் டிசேதமிழனும் தோழர் வசந்தும் சாருவை ஒரு புடி புடிக்கறாங்கோ!! இன்னா பண்றது, தோஸ்தா இருந்தாலும், எனக்கே சில சமயம் கருத்து வேறுபாடு சாரு மேல இருக்கு. ஆனா, மேட்டர் இன்னான்னா, சாரு, பல பேரை விட எவ்வளவோ பரவாயில்லை. அவரு, RSS-அ தூக்கிப் பிடிக்கலை. தன்னைப் பத்தி விமர்சனம் பண்ணவரை, பையனை விட்டு, கேஸ் போட வைக்கலை. யார் கிட்டையும் ் "ரஜினி சார், சிம்பு சார்" ன்னு குனியலை. அதவிட முக்கியம், கலைஞர் இலக்கியவாதியே இல்லை, காந்தி காங்கிரஸ்காரரே இல்லை ன்னு யாரையும் வம்புக்கிழுக்கலை.

இன்னா, கோணல் பக்கங்கள்லே, கொஞ்சம் சுய புலம்பல் அதிகமாயிருக்கும். பழகின வரைக்கும் கொஞ்சம் ரிஜெண்டான பார்ட்டித்தான் நம்மாளு. ஆனா, சும்மா சொல்லக்கூடாது, செம்மையான டிஸ்கஸன் தான்.

"யக்கக்கோவ், யக்கக்கோவ்வ்வ்வ் கிழி கிழின்னு கிழிக்கப்போவ்"

Comments:
நரேன்,
அது என்ன 'மோட்சம், மினிமோட்சம்'. எங்களுக்கும் கொஞ்சம் தெளிவுபடுத்துங்களேன்!!!
 
டிசேதமிழன், மோட்சம் & மினி மோட்சம் இரண்டும் 2 திரையரங்குகள். முக்கால்வாசி நாட்கள், நல்ல படங்கள் எதுவும் இங்கே திரையிடப்படாது. வெறும் மூன்றாம்தர மலையாளப்படங்கள் மட்டுமே. ஒரு எள்ளல்லாக்காகவே அதனைப் பயன் ப்படுத்தியிருக்கிறேன்.
 
நாராயணன், சாருவை நான் கிழிக்கவில்லை. நல்லதாய்தான் சொல்லியிருக்கிறேன். நேர்மையாய் எழுத நினைக்கும் யாரும் இதற்கு மேல் நல்லதாய் சாரு பற்றி எழுதமுடியாது. நிலமை அப்படி.
 
வசந்த்,கிழித்தாலும் தப்பில்லை.நீங்கள் கிழிக்கவில்லை என்பது உண்மை.ஆனாலும், யாரும் எவரும் பொதுப் பார்வைக்குத் தப்பமாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]