Jan 22, 2005
காதலுக்கு மூக்கில்லை!!
என் பணி நிமித்தமாக அடிக்கடி, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம் செல்லவேண்டி வரும். என் அலுவலகம், கே.கே.நகரில் இருப்பதால் ஒவ்வொரு முறையும், சின்மயா நகர் தொட்டு, கோயம்பேடு வழியாகத் தான் நூறடி சாலை பிடித்து செல்வேன். கோயம்பேடு அங்காடியின் 'வாசனைப்' பற்றி நான் சொல்ல தேவையில்லை. அதற்கு இன்னமும் வாசனையூட்டுவது, அங்கிருக்கும் குப்பை கொட்டுமிடம். கோயம்பேடையும், அதனை சுற்றியுள்ள இடங்களிலுமிருந்து, திரட்டி வரப்படும் குப்பைகள் இங்குதான் குவிக்கப்பட்டிக்கும், இது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இடமில்லை எனினும், இங்கே தான் அனைத்தும் கொட்டப்பட்டிருக்கும். அப்படியொரு "வாசனை" வாசஸ்தலம் அந்த இடம். மூக்கினைப் பொத்தாமல், மூச்சினை அடக்காமல் அந்த இடத்தினை தாண்டமுடியாது.
சமீபகாலமாக, நான் காணும் காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு முறையும் அந்த இடத்தினை கடக்கும்போதும், குறைந்தது, 3,4 காதல் (?!) ஜோடிகளையாவது அங்கே பார்க்க முடிகிறது. பைக்கினை ஒரமாய் நிறுத்திவிட்டு, எந்த கவலையும் இல்லாமல், அவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்களையேப் பார்த்து செல்லும் பொதுஜனங்களைப் பற்றிய எவ்வித கவலையுமின்றி அவர்கள் உலகத்தேயே மறந்து பேசி, சிரித்துக் கொண்டிருப்பார்கள். காலை, மதியம், மாலை என ஒரே காதல் அரங்கம் தான். மூச்சா போகவே கர்சீப் முடி போகுமிடத்தில், மூக்கினைப் பொத்தாமல், மூச்சினை அடக்காமல் சர்வசாதாரணமாய் இருக்கிறார்கள் என்பது என்னை ஆச்சரியத்திலாழ்த்தும் நிகழ்வு.
ம்ம்ம்.....ஒரு வேளை, காதலுக்கு கண்ணில்லை என்பது போல், காதலுக்கு மூக்கும் இல்லையோ.
இதற்கு சற்றும் குறையாத இன்னொரு இடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள, டென்னிஸ் அரங்கின் பின்புற சாலை, அதை சாலை என்பதை விட, மூத்திர சாலை என்பது தான் பொருத்தமாயிருக்கும். அங்கும் இதே போன்ற ஜோடிகளைப் பார்க்கலாம்.

Comments:
<< Home
அர்ஜுனன் வில்வித்தை கற்ற கதை உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்! மரம், கிளை, இலை எதுவும் தெரியாது, இலக்கின் கண் மட்டுமே தெரிந்ததாம்.. Dedication... Boss dedication... என் ஆச்சரியம் எல்லாம் இந்த கவனக்குவிப்பு எல்லாம் ஏன் நமக்கு மற்ற வேலைகளில் வருவதில்லை என்பது தான்...!
Lession learned : வாழ்வில் முழு இன்பம் பெற... " காரியத்தில் கண் வையடா.. தாண்டவகோனே...! "
Lession learned : வாழ்வில் முழு இன்பம் பெற... " காரியத்தில் கண் வையடா.. தாண்டவகோனே...! "
மத்ததெல்லாம் வேலை அதனால தான் போல இருக்கு. ஆனா, இது அந்த மாதிரியான மேட்டரில்லியே, அதான், இன்னா நான் சொல்றது. இது மாதிரி நிறைய இடமிருக்கு சென்னையிலே.
ஆமாம்... நமது நோக்கம் ஒன்றே அங்கு குறிக்கோள். மற்றெல்லாம் தேவையில்லாத விசயங்கள். கடலை..கடலை...கடலை...
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]