Jan 27, 2005

போராடினால் ட்சுனாமி வரும் - புது சித்தாந்தம்

சுனாமியிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது:-

சுனாமியினால் அதிக அழிவுகள் ஏற்பட்ட இடங்கள் இந்தோனேசியாவில் உள்ள Aceh எனும் இடமும் இலங்கையில் வட பகுதிகளும் அதாவது மனிதன் அதிகம் போராடும் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

http://groups.yahoo.com/group/agathiyar/message/31604
இந்த கடிதத்தில் உள்ள வரிகளில் சில ...

"மேலும் இப்படியான மாறுதல் இவ்வுலகில் சில அழிவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் மேலும் அந்தப்படியான அழிவுகள் பல யுகங்களாக நடந்தும் இருக்கும் என்பதால் நம் வித்துகளில் அதுவே நமது Survival instinctஐ தூண்டி இது நிகழும் காலத்தில் அருகே மனிதனிடையே போர்களை தூண்டுவதாக கொள்ளலாம்.அதே சமயம் இப்படியான அழிவுகளில் இருந்து மனிதனின் தப்புவிற்கும் முயற்சி, இந்த நூற்றாண்டுகளின் கண்டுபிடிப்புகளின் பிரவாகத்திற்கும் காரணம் எனக்கொள்ளலாம்.இதனால் உலகம் அழியாது,ஆனால் மனிதன் எங்கு அதிகாமாக போராடுகிறானோ அங்கு அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதாக உணருகிறேன்,அதனால் தான் கூறுகிறேன்...போராடாதீர்கள் அல்லது போராடும் இடத்தில் வாழாதீர்கள்.போராடுவது என்றால் சண்டையிடுவது மற்றுமல்ல "survival" எனும் கருத்து அதிகம் உள்ள இடங்களும் அடங்கும் என்பதே.......அதாவது மிகப்பெரிய நகரங்களும் உலகை ஆளும் நாடுகளும் இதில் அடங்கும்."
இந்தக் கடிதத்தை எழுதிய நண்பர் ஒரு சிந்தனை சிற்பி. சங்கராச்சாரியின் கைதால் தான் ட்சுனாமி வந்தது என்பதைக் கூட மன்னிக்கலாம் எனத்தோன்றுகிறது இப்போது. என்னத்தான் சொன்னாலும் இருப்பது ஒரு சில சங்கர மடங்கள் தான், ஆனால் உலகமுழுக்க, நிறைய போராட்டங்கள். ஆனால், இந்த கடிதத்தில் அதைவிட நான் பார்ப்பது சாதுரியமாக போராட்டத்தை நசுக்கும் உத்தி. அதை உயிர்வாழ்ந்திருத்தல் என்ற போர்வையில் சாமர்த்தியமாக நெய்திருக்கும் எழுத்துக்கள். இவர் சொல்வதைப் பார்த்தால், வியட்நாமையோ, பாலஸ்தீனத்தையோ, குரோசியாவையோ ட்சுனாமி, பூகம்பம் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் தாக்கி அழிவு ஏற்படுத்தி இருக்கவேண்டும் ஏன் ஏற்படவில்லை. இதில் உள்ள உட்பொருளை கவனியுங்கள். நவீன காலனி மனப்பான்மையை உயர்த்திப் பிடிக்கக்கூடிய நாடுகளைச் சொல்லாவிட்டால், எங்கே சண்டைக்கு வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போகிற போக்கில் போனால் போகிறதென்று "மிகப் பெரிய நகரங்களும், உலகை ஆளும் நாடுகளும் இதில் அடங்கும்" என்ற ஒற்றை வரியில் எச்சரிக்கை வேறு.

இந்தக்கடிதத்தை எப்படி புரிந்துக்கொள்வது ? அடிப்படை உரிமைகளை, தன் நாட்டை, தன் நிலத்தை இழந்த மக்கள் போராடக்கூடாது. போராடுதல் தவறு. யார் எக்கேடு கெட்டால் என்ன, நீ யார் பேச்சையும் கேட்காதே. அரசாங்கத்தை பகைத்துக்கொள்ளாதே. எதுவும் உனக்கு சொந்தமில்லை. உனக்கு அளிக்கப்பட்டதை வைத்துக்கொண்டு, கேள்வியேதும் கேட்காமல் அடங்கி வாழ். வாழ்தலுக்காக எதையும் முயற்சிக்காதே. "survival" என்பது உனக்களிக்கப் பட்ட பிச்சை, அதை அதனளவில் வைத்துக்கொண்டு வாழு. எல்லாவற்றுக்கும் மேலாக, "மேல இருக்கறவன் பார்த்துப்பான்" அல்லது "எல்லாம் விதி" என நம்மை சிந்திக்கவிடாமல் அடக்கி வைக்கும் தந்திரம்.

போராடுதல் என்பது மனித இயல்பு. கோடிக்கணக்கான விந்தணுக்களில் போராடி ஜெயித்த ஒரு விந்தணு தான் நானும் நீங்களும். தெருநாய் கூட கல்லால் அடித்தால், திருப்பி குரைக்கும். போராடாமல் இருப்பது வேண்டுமானால், "பெஞ்சு கிளார்க்' உத்தியோகத்திற்கு பெருமையாக இருக்கலாம். மனிதர்களுக்கில்லை. இந்த வார்த்தைகளின் பின் உக்கிரமாய் ஒளிந்திருக்கும் கோரமான நிதர்சங்களை எண்ணுகையில் எப்பேற்பட்ட அடிமை வாழ்க்கைக்கு இது அடிகோலுகிறது என்பது தெரியும்.

இதன் பின்னுள்ள சூட்சுமான அடக்கிவைத்தலை, அடிமையாய் இருத்தலை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும். இந்த வார்த்தைகளை யார் முன் வைப்பார்கள் என்பதும், யார் இப்படியான 'உலக மக்களுக்கு நன்மை பயக்கும் அருள் மொழிகளை' நமக்கு அளிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொண்டால் இதன் வேர் யாரென விளங்கும். இப்படி எல்லாவற்றையும் துருவி, நோக்கி, உள்ளர்த்தம் உணர்ந்து படித்தல் என்பது எத்தனை பேருக்கு சாத்தியமாகும் என தெரியவில்லை. நான் சந்திக்கும் நிறைய நண்பர்கள், ஊடகங்கள் சொல்லிகுடுத்ததை திருப்பி சொல்லும் கிளிப்பிள்ளைகள் போலத்தான் இருக்கின்றார்கள். இவர்களின் முன் இப்படிப்பட்ட 'கருத்துப் பெட்டகங்கள்' வைக்கப்பட்டால், அதன் நம்பகத்தன்மையும், பரவலாகும் சாத்தியங்களும் என்னை சற்றே அச்சுறுத்த செய்கின்றன.

நன்றி: அகத்தியர் யாஹு விவாதக்களம், திரு. ரமேஷ் அப்பாதுரை.

இந்த அஞ்சல் திரு. ரமேஷ் அப்பாதுரை என்பவரால் மரத்தடியில் இடப்பட்டிருந்த பதிவு. இந்த அஞ்சலில் குறிப்பிடப்பட்டிருப்பது அகத்தியர் யாஹு விவாதக்களத்தில் இடம்பெற்றிருந்த ஒருவரின் கருத்தே.

Comments:
Carol Reed in "Third Man" படத்தில் Orson Welles பேசும் ஓரு புகழ்ப்பெற்ற வசனம்

"In Italy for 30 years under the Borgias they had warfare, terror, murder, and bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci, and the Renaissance.
In Switzerland they had brotherly love - they had 500 years of democracy and peace, and what did that produce? The cuckoo clock."ஜபருல்லா
 
Will respond in detail later. Life is real and not reel. The democracy produced a lot of good things for so many people, i am afraid, you havent' had a look at that all. Just want to quote what Pamaran said on the split of USSR sometime back in his article

"USSR என்ற இந்த 'சனியன்' ஒழியும்னு நான்கூட நெனைச்சேன். கொஞ்ச நாள் கழிச்சு... ஆகா க்ம்யூனிசம் வீழ்ந்தது. உலகம் வாழ்ந்த்துன்னு மத்தவ்ங்க ஆனந்தக் கூத்தாடுனதெல்லாம் பார்த்துப் புல்லரிச்சுப்போச்சு... இப்ப என்னடான்னா...ரஷ்யாக்காரன் ஊர்ல பசியாமா...ப்ட்டினியாமா...சோத்துக்கு சிங்கி அடிச்ச்டுக்கிட்டு நெருப்புக்கோழி வித்து வயுத்த கழுவராங்களாமா...இதை சென்ற வார உலகத்துல சொன்னாரு ஒரு மனுஷன்...ஏம்ப்பா, இதுக்காகவா 'அது' வீழணும்? "

இதேப் போல்தான் இருக்கிறது உங்களின் லாஜிக்கும்.
 
நாராயணன், சங்கராச்சாரியார் கைதால் சுனாமி என்று சொன்னபோது வந்த கோபம் இப்போது என்ககு வரவில்லை. ஏனென்றால் எனக்கு பொதுவாகவே ரமேஷின் கட்டுரைகள் புரிவதில்லை. அதனால் அவருடைய கருத்துக்கும் உங்கள் பதிவுக்கும் எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை.

ஆனாலும் நீங்கள் இவரது மற்ற கட்டுரைகளைப் படித்திருக்கிறீர்களா? ஒரே ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு தனிமனிதரைப் பற்றிய கருத்து சொல்வதைவிட அவருடைய பிற கட்டுரைகளையும் நீங்கள் படித்துவிட்டு சொல்லலாம் என்று நினைக்கிறேன். உங்கள் தகவலுக்கு அவரது பிற கட்டுரைகள் மரத்தடியிலிருந்து..
http://www.maraththadi.com/ListArticle.asp?TypeId=26

I repeat, இந்தப் பின்னூட்டம் என் கருத்துக்கானது இல்லை, ஒரு தகவலுக்காகவே.
 
Jsri, நீங்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் ரமேஷின் மேல் எந்தச் சொல்லும் சொல்லவில்லை. அதற்கு மேலாக, அவரின் மின்னஞ்சலை ஆதாரமாக வைத்துத்தான் இதனை எழுதினேன். மேலும், ரமேஷே இதனை "quote" செய்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். என்னுடைய எதிர்ப்பு இதனை எழுதியவரின் மீதே அல்லாமல், ரமேஷ் மீது அல்ல
 
ramesh appadurai writes utter nonsense that deserve no reply.his writings are a mumbojumbo of fanciful theories,mysterious 'mysticism''predictions' and psuedo-science.you cant even read them as jokes.
 
http://www.huffingtonpost.com/2013/08/01/climate-change-and-violence_n_3692023.html
 
http://www.huffingtonpost.com/2013/08/01/climate-change-and-violence_n_3692023.html
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]