Jan 31, 2005

பச்சத்தமிழன். சிகப்பு தமிழன்.

அன்புள்ள டாக்டர் ராமதாஸ் ஐயாக்கும், தொல். திருமாவளவன் அவங்களுக்கும்,

கும்புடறேன் சாமியோவ். ஒரே கஷ்டமா இருக்குங்க நம்ம அம்மா தமிழ்படங்களுக்கு தமிழைத்தவிர இந்தி, இங்கிலிஷு, மராத்தி, துளு பேருல எல்லாம் பேரு வச்சிக்க சொல்லிட்டாங்க. பச்சத்தமிழனோட செவுப்பு ரத்தம் கொதிக்குது. மரத்தமிழனோட மண்ட காயுது. ஒரே கவுரத குறைச்சலா வேற இருக்கு. தமிழ்நாட்டுல தமிழ்படங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க முடியலைன்னா, யூகோஸ்லாவியாவிலய தமிழ் பேரு வைப்பான். உங்க அறிவிப்பு வந்தவுடனே மனசுல ஒரே சந்தோசமா இருந்திச்சு, இனிமே புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து ன்னு என்னை உஸ்கூல் படிக்கும்போது சித்ரவதை பண்ண தமிழாசிரியருக்கு சமமா நமக்கும் தமிழ் தெரிஞ்சுடும் அப்படின்னு ஒரே நக்கலு எனக்கு.

நீங்க கமலோட மும்பை எக்ஸ்பிரஸை தமிழ்ல மாத்த சொல்லி மிரட்டினப்போ எனக்கு தென்னக ரயில்வேவை நினைச்சு ஒரே பகிர்ன்னுச்சு...ஏன்னா இங்க சென்னை சென்டிரல, எழும்பூர்ல இருந்து ஒடுற எல்லா ரயிலுக்கும் ஏதாவது ஒரு பேரு இருக்கும். அந்தப் பேரும் ஏதோ எக்ஸ்பிரஸு, மெயிலு, பாஸஞ்சர்ன்னு தான் முடியும். அவ்ளோ ரயிலுக்கும் பேரு வைக்கினோம்னா எவ்வளோ எம்.எல்.ஏ, எம்.பி தேவைப்படுவாங்கன்னு நினைச்சாலே தலை சுத்துது. வெளியூர்ல இருக்கற புண்ணியவான்களுக்கு, இன்னாத்துக்கு எம்.எல்.ஏ, எம்.பி ன்னு கேக்காதிங்க, ஏன்னா எங்க ஊருல எல்லாத்துக்கும் பேரு வைக்கிற உரிமை இவங்களுக்குதான் இருக்கு.

ஒரு சின்ன சந்தேகம் அய்யா. ரஜினி, கமல், விஜயகாந்த் மட்டும் தான் தமிழ்ல பேரு வைக்கணுமா இல்ல எல்லாருமா ? ஏன் கேக்கிறன்னா 7ஜி ரெயின்போ காலனி, ட்ரீம்ஸ், M. குமரன் s/o மகாலட்சுமி இதல்லாம் கூட தமிழ்படங்கள் தான், இதவுட்டிங்களேன்னு ஒரு சந்தேகம். ஒரு வேளை நீங்க சொல்றாப்போல, பெரிய நடிகர்கள் தான் தமிழ் வளர்க்கணும், சின்ன நடிகர்கள் எல்லாம் இங்கிலிஷ் வளர்க்கணும் அப்படின்னு ஏதாவது உங்க கூட்டத்துல பேசி வச்சிருந்திங்கன்னா, மன்னிச்சிருங்க, கிறுக்கு பய புள்ள, தப்பா கேட்டுப்புட்டேன்.

எனக்கு இருக்கற ஒரு டவுட்டை உங்க முன்னாடி வக்கிறேன். தமிழ்நாட்டுல ஒரு வருஷத்துல 80 படங்கள் தான் எடுக்கறாங்க. அதுல நல்லா ஒடுற படங்கள் 20% கூட கிடையாது. ஆக, மக்களுக்கு படங்கள் மூலமா போய் சேர இங்கிலிஷு கொஞ்சம் தான், அதுக்கூட நல்லா புழக்கத்துல இருக்கற, தெரிஞ்ச இங்கிலிஷு வார்த்தையைத் (நியூ, ரெட்) தான் வைப்பாங்க இல்லன்னா, நம்மாளு ஏதோ இது பிரெஞ்ச் படமுன்னு ஷகிலா படம் பாக்க போயிடுவான். கல்லா ரொம்பாது.

படத்தை வுடுங்க. படம் தியேட்டருலே வரத்துக்குள்ளேயே நம்மாளு VCD-ல பார்த்துருவான். ஆனா, உங்க தமிழ்ப்பற்றை கொஞ்சம் தொலைக்காட்சி பக்கம் திருப்புங்க. நிறைய பேரோட சண்டைப் போடலாம்.மிரட்டலாம். அறிக்கை விடலாம்.உங்க கூட்டணி தலைவரு (அதான் தலிவரு முன்னாடி சொல்லிட்டாருல்ல, சன் டிவிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை....ஆனா, காலை,மதியம், மாலை ன்னு 3 அறிக்கை குடுத்தா அது மட்டும் சன் டிவில படிப்பாங்க?!!) தொலைக்காட்சில வர்ற ப்ரொக்ராம்மு தலைப்பை கொஞ்சம் பாருங்க (காமெடி டைம், சென்னை டைம்ஸ், மைடியர் பூதம், மங்கையர் சாய்ஸ்) அதுவும் SCVன்னு ஒரு அலைவரிசையில கொஞ்சமா தமிழ் பேசி, அத ஒரு உலகத்தொலைக்காட்சி தரத்துக்கு உயர்த்த முயற்சி செய்யறாங்கோ. அதுல வர்ற ப்ரொக்ராம்மு பேரு கேட்டா முதல்ல ஏதோ இங்கிலிஷ் சானலுன்னு தான் நினைச்சேன். அப்புறம் அதுல வர்ற ஒரு காம்பியர நம்ம பெரம்பூர் பிரிட்டிஷ் ஒயின்ஸ் பக்கமா பார்த்த பொறவுதான் ஆஹா இது தமிழ் சேனலுதான்னு முடிவு கட்டினேன். (லவ்லி சாய்ஸ், டிராபிக் ஜாம், லேடீஸ் சாய்ஸ், மசாலா மெயில், டியர் SCV, டிரிங் டிரிங், ஹி! குட்டிஸ், போஸ்ட் பாக்ஸ், ஹலோ ஹலோ) நம்ம ஊருல இருக்கற 61/2 கோடி பேருல குறைஞ்ச பட்சம் ஒரு 5 கோடி பேராவது டிவி பொட்டி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு சீரியலுக்கு அழுவறாங்க. தமிழ்நாடே ஒரே அழுக்காச்சியா போச்சி!! இன்னா ஒரே பிரச்சன தமிழ்நாட்டு தாய்க்குலம் கட்டய தூக்கிட்டு ஓடியாந்துரும்.

அதுவும் வேணாம்னா, இருக்கவே இருக்கு நம்ம ஊருல இருக்கற சின்ன கடைகள் வச்சிருக்கறவங்க. அவங்களுக்கெல்லாம் தமிழ்ப்பற்றை இல்லீங்கய்யா. இன்னா தெனாட்டுல இருந்தா பொண்டாட்டி நகைய அடமானம் வச்சி, ஊருல இருக்கற நிலத்த வித்து சென்னையில வந்து கட போடுவாங்க.(நிர்மலா பேன்சி ஸ்டோர்ஸ், திருமுருகன் ஹார்டுவேர்ஸ்)அவன எல்லாம் தமிழ்நாட்டை விட்டே விரட்டனம்மய்யா. என்னா தில்லு இருந்தா ஒழுங்கா வேலை செஞ்சி, குடும்பத்த காபாத்துவானுங்க. அதெல்லாம் நடந்துட்டா நம்ம எதுக்கு? நம்ம படைய திரட்டுங்கய்யா. தமிழ் பற்று இல்லாத இந்த மாதிரி கடைகள அடிச்சி ஒடச்சி, தமிழன் பெருமைய காப்போம்மய்யா. எலேய், அவன் பட்டினி கிடந்து சாவான்னு எவன்லே கூட்டத்துல குரல் உடறது. அப்படி சாவரத்து முன்னாடி அவனுக்கு பிரியாணியப் போட்டு அவனை வாழவைப்போம்டா மக்கா. பிரியாணி போடறது, கஞ்சி ஊத்தறது இதுல எல்லாம் நாங்க எஃஸ்பர்ட் அப்பு.

இப்படி நம்ம கூட்டணியே டாப்ல வக்க நிறைய திட்டங்கள் கையில வச்சிருக்கேன் அய்யா. போறதுக்கு முன்னாடி, வேதம் புதுதில் சத்யராஜைப் பார்த்து ஒரு அயிரு புள்ள கேக்கற மாதிரி ஒரு கேள்வி....ஊரு முழுக்க தமிழ் பரப்பணும்ன்னு சொல்ற நீங்க, ஏன் எல்லா போஸ்டருலேயும், அறிவிப்பிலேயும் "டாக்டர் ராமதாஸ் அழைக்கிறார். டாக்டர் ஐயா பேசுகிறார்" ன்னுப் போடசொல்றிங்க. ஏன்? ஏன்? ஏன்?

அன்புடன்
ஒரு வேலைக்காகத தமிழன்.

[செய்தி: தமிழ்ப்படங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் பேர் வைக்கலாம். நடிகர்களை அச்சுறுத்துவதா ? ஜெயலலிதா எச்சரிக்கை ]

Comments:
ஹா ஹா.... கூல் டவுன் நாராயண். இந்த ஓல்டு ஏஜ்ல இப்படி டாக்ட்ர் அய்யா பண்ற நான்சென்ஸ் டாக்கைக் கண்டு இப்படி டென்ஷன் ஆகலாமா?

டாக்டர் அய்யாவுக்கு சின்ன வயசுல வரும் இன கவர்ச்சி மாதிரி அப்பப்போ மீடியா கவர்ச்சி வந்து டமிழ்ல உட்டாலங்கடி பாடுவாரு.

எப்படி டாக்டர் அய்யா சொல்ற க்ளியர் டமிழ்ல பீட்பேக் கொடுத்தேனா?
 
கலக்கல் தலைவா! தமிழ் இவனுங்க கிட்ட மாட்டிகிட்டு படாத பாடு படுது. ஏதோ கட்சியை ஆரம்பிச்சமா, ஜாதியை வளத்தமானு இல்லாம...
 
"டாக்டர் ஐயா ராமதாஸ்" யாரு? எனக்கு "மருத்துவர் ஐயா ச.ராமதாசு"-வைத்தான தெரியும். ஊரு உலகத்துல நான் தெரிஞ்சுக்க நிறைய இருக்குதப்பு.
 
±øÄ¡§Á ¾¢øÄ¡Äí¸Ê ¾¡ý... áÁ¾¡Š ¾Á¢úô¦ÀÂ÷ýÛ ¬ÕôÀ¡ ¦º¡ýÉÐ?? þáÁÉʨÁ «ôôÊýÛ §À¨Ã Á¡ò¾¢ì¸î ¦º¡øÖí¸ôÀ¡...
 
அன்புள்ள அனாமதேய நண்பருக்கு, இந்த வலைப்பதிவு யூனிகோட்டில் பதியப்படுகிறது.உங்களிடத்தில் எ-கலப்பையோ அல்லது முரசு அஞ்சலோ இன்றி தமிழில் பதிய இயலாது. அப்படியே பதிக்க நினைப்பவர்கள், எந்த கவலையுமின்றி ஆங்கிலத்தில் பதிந்துவிட்டுப் போங்கள் படித்துக் கொள்கிறேன். நீங்கள் டஸ்கியில் பதிந்துவிட்டுப் போயிருக்க்கூடும் என்பது என் அனுமானம்.
 
மேலேயுள்ள அனானிமஸ் பதிவின் யுனிகோட் எழுத்தமைப்பு(?):

அன்புடன்,
கணேசன்.
-----------------------------
எல்லாமே தில்லாலங்கடி தான்... ராமதாஸ் தமிழ்ப்பெயர்ன்னு ஆருப்பா சொன்னது?? இராமனடிமை அப்ப்டின்னு பேரை மாத்திக்கச் சொல்லுங்கப்பா...
 
அன்பு நாராயணன்,
சீட்டுக்காக எதையும் செய்வார் எங்கள் தலிவர்.
நீங்கள் ஒரு எம்.எல்.ஏ சீட்டு தந்தால் "மருந்துச் சீட்டைக்" கூட தமிழில் எழுத ஒரு சட்டம் செய்வோம்.எங்க சின்ன ராச "அன்பு மணி" தான் "சென்ட்ரல்" மினிஸ்டரு ஆமா.
அன்புடன்,
கணேசன்.
 
This comment has been removed by a blog administrator.
 
அய்ய, இதுக்கெல்லாம் போயி எங்க தலிவரு கலங்குவாரா என்ன. மருந்து சீட்டு மட்டுமல்ல, இனிமேல் தமிழ்நாட்டுல எல்லாரும் தமிழ் தான் படிக்கணும், இங்கிலிஷைக் கூட இனிமேல் நாங்க தமிழ் படுத்தித் தான் தருவோம். இங்கிலிஷ் பட ஹீரோ தமிழ் பேசும்போது, இன்னாத்துக்கு எங்களுக்கு இங்கிலிஷ் - அப்படின்னு, ஒரெயடியா போடுவோம் மக்கா.

எங்கள இன்னா ஒரே மாம்"பயம்"ன்னு நினைச்சிட்டிங்களா ?
 
narain, even you have succumbed to the media gimmick of the so called Tamil protectionist. These jokers always want to be seen in the media else they will be forgotten by their (kanmanigal) followers, hence these statements. My feeling is even the CM shouldn't have reacted to these comments. If a law & order crisis arises then the forces should chip in and take control. Infact Kamal Haasan shouldn't have changed the name Sandiyar, instead should have raised it with the NFDC for protection (atleast let them do this for Indian cinema).
Its shame on Mr. Manmohan Singh to have people like Anbumani, Lalu, Shibu,,,...... the list goes. He has lost the respect gained over these years by accepting the PM post thereby succumbing to power politics. Anyway let Keynes save our PM from more damage.
 
Yessel, the entire post is a satairitical on what Ramadoss/Thirumavalavan is doing. Unfortunately, coming from a 'Dalit' background, Thiruma gotta get down to these kind of political stands to secure his position in the ever turbulent TN politics. I am noway succumbed to these jokers. All I am trying to put in perspective is that, these Jokers can go to any length to the so called "tamil" protection.

Kamal should have gone to NFDC is a different debate to work with. and what does NFDC can do with that? It's a central government body and they wont make role up their sleeves and get down with state politics. In fact, from my view, NFDC & Censor Board are two useless Central Government organisations for Indian Cinema. Audience are the ultimate judge. They always make the right decision (maybe occasionally can go wrong) why you need a Censor board to control.

The sacking of Anupam Kher has raised a lot of controversies. The thing which everybody forgot today is that Kher with the then governement's so called 'saffronisation' advice, stopped "Final Solution" a documentary on Godhra Riots. That actually kindled his sacking once the Congress came into power.

Regarding Mr.Singh I can't comment anything.What was once said for Vajpayee certainly fit for Mr.Singh too. Right man in the wrong place.

Think about it, when a metro city like Chennai is being blessed with some head turning highway projects, who inaugurated the project. It is not the Chief Minister of Tamilnadu. It's one political party's supremo. We live in a country full of political vendatta and power politices. Just dont want to talk about that anymore.

Sorry for hitting politics in this.
 
எனக்கு எல்லாமே ஆச்சரியமாக உள்ளது.

மருத்துவர் ஐயாவும், தொல்.திருமாவளவன் அவர்களும் தாங்கள் சார்ந்த அரசியலலை விட்டு வெளியில் உள்ள சினிமாத்துறையில் இப்டித்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அவர்களிடம் இரண்டு நிபந்தனைகளை கூறினால் போதும், அவர்கள் குறைந்தது 25 வருடங்களுக்கு சினிமாத்துறை பக்கமே தலை வைக்கமாட்டார்கள்.

1.உண்மையில் தமிழ்,தமிழர்,தமிழ்நாடு என்று தமிழ் உணர்வுமிக்கவர்களானால், தங்கள் கட்சிகளில் பிறப்பால், இனத்தால் தமிழர் அல்லாதவர்களை சேர்த்துக்கொள்வதில்லை.

2.பிறப்பால், இனத்தால் தமிழர் அல்லாதவர்கள் தலைமையில் உள்ள கட்சிகளுடன் எந்தவிதமான தொடர்புகளோ, அரசியல் கூட்டணி இல்லை, மற்றும் எந்த சந்தர்ப்பத்திலும் பிறப்பால், இனத்தால் தமிழர் அல்லாதவர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆவதற்கு துணைபோகமாட்டோம்.

உண்மையில் சினிமாத்துறையினர் புத்திசாலிகள் என்றால் என்றைக்கோ இக்கேள்விகளை கேட்டு
ஐயாவினை அடக்கி இருக்கலாம்

-குமரேஸ்-
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]