Jan 31, 2005

நரசிம்ம அவதாரம் உண்மையாகுமா?

நண்பன் அனுப்பிய மின்னஞ்சலின் உரலைப் பார்த்து, படித்துமுடிந்த பின் ஒரு பக்கம் பயமாகவும் இன்னொரு பக்கம் மலைப்பாகவும் இருந்தது. கைமரா (Chimera) என்று சொல்லக்கூடிய கூட்டு உயிரினங்களைப் பற்றிய பதிவு அது. கைமரா என்பதற்கு சிங்கத்தலையும், ஆட்டின் உடம்பும், பாம்பின் வாலும் கொண்ட நெருப்பைக் கக்கக் கூடிய ஒரு பெண் ராட்சத மிருகம் என்று கிரேக்க மொழியில் பொருள் (கைமரா).

அறிவியல் ரீதியிலான விளக்கம்- கைமரா என்பது இரண்டு அல்லது மூன்று உயிரினங்கள் அடங்கிய ஒரே உயிரினம். நம்முடைய நரசிம்ம அவதாரம் போல (The National Academy of Sciences) கேட்பதற்கு sci-fi போலத் தோன்றினாலும், உலகில் உள்ள சில ரகசிய ஆராய்ச்சி அறைகளில் அவற்றை ஆய்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது யார் காதிலும் பூ சுத்த அல்ல. இதை வேறு யாராவது சொல்லியிருந்தால், அவர்களை நன்றாக கலாய்த்து அனுப்பியிருப்பேன். ஆனால், இந்த தகவல்கள் நேஷ்னல் ஜியோகிராபிக் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. அது அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது.சில விசயங்களை இந்த தளத்தில் படித்து வியந்தும் பயந்தும் போனேன் என்றால், அது மிகைப்படுத்தப் பட்ட வார்த்தையல்ல.

என் வியப்புகள் முழுதும் அறிவியலின் வீச்சைப் பற்றியே. எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால், என்னால் வியக்காமல் இருக்க இயலவில்லை. என் பயங்கள் அனைத்தும் இவற்றின் சமூக பங்களிப்பைப் பற்றியே.

சில தகவல்கள்:
2003-ல், ஷாங்காய் இரண்டாவது மருத்துவப் பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த மாணவர்கள், முயலின் முட்டையையும், மனித செல்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிவிட்டு அழித்துவிட்டார்கள்.

சென்ற ஆண்டு, மின்னசோட்டாவின் மாயோ கிளினிக்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மனித ரத்தம் ஒடக்கூடிய பன்றிகளை உருவாக்கிக் காட்டினார்கள்.

இந்த வருட இறுதியில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக்த்தினர், மனித மூளையின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு எலியை உருவாக்க உள்ளனர். இந்த எலி மனித மூளையின் 100-ல் ஒரு பங்கை ஒத்திருக்கும் எனக் கூறுகிறார்கள் ( இதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் போகணும், எங்க வீட்டு எலிக்கு அத விட மூளை அதிகம். எலி பிடிக்க வைத்திருக்கும் எலிப்போனில் உள்ள வடையை சாப்பிட்டு, "ஆயா கடைல வாங்காதே....அப்துல் காதர் கடையில வாங்கி வை. அங்க தான் நல்ல எண்ணெயில வடை சுடுறாங்க" என நோட் போட்டு போகும் என கலாய்க்கிறான் நண்பன் )
ஆராய்ச்சியாளர்கள் இதனை ஒரு ஆய்வு மாடலாகப் பார்க்கிறார்கள். அவர்களின் வாதம், இதன் மூலம், நம்மால், மனித அங்கங்களுக்கான ஒரு 'ஸ்பேர் பார்ட்ஸ்' களை உருவாக்குதல், அவைகளின் (அது?!! அவன்?!! அவள்?!!) மேல் மருந்து மற்றும், நோய்முறிவுகளை பரிசோதித்துப் பார்த்தல், புதிய மருந்துகளை கண்டறிதல், ஒரு வாழும் உயிரினத்தில், செல்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்தல் என பல்வேறு வகையில் நீளுகிறது.

வியக்காமல் இருக்க முடியவில்லை, அதே சமயத்தில் இதன் பல்வேறு பின் விளைவுகளைப் பற்றி நினைத்து பயப்படாமலும் இருக்க முடியவில்லை. இதுப்போன்ற ஹைபிரிட் உயிரினங்களைப் பற்றிய விவாதங்கள் தற்போது உலகெங்கிலும் அதிகரித்து வருகின்றன.

இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நிறைய விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளார்கள். மனித இனத்தின் வாழ்வும், இன்னமும் நம்மால் வேட்டையாடப்படாத விலங்குகளின் வாழ்வும் இந்த நூற்றாண்டில் நிச்சயிக்கப்பட்டுவிடும் எனத் தோன்றுகிறது.

இதை எழுதுவதை விட படிக்க ஆவலாகவும், பயமாகவும் இருக்கிறது.
படிக்க: நேஷ்னல் ஜியோகிராபிக் தளத்தின் உரல்

Comments:
மெய்யாலுமே பயமா கீதுப்பா. இந்த மாதிரி ஆய்வுகள் நாசக்காரர்களின் கையில் கிடைக்காமல் போக வேண்டும். கற்பனை செய்யக் கூட பயமாக இருக்கிறது. ரோட்டில் போகும் ஆடு இல்ல மாடு நம்மைப் பார்த்து "மச்சி செளக்கியமா இருக்கிறியான்னு" கேட்க ஆரம்பித்தால் என்ன ஆகும். அப்புறம் ஹலிவுட்ல ஸ்டார் வார்ஸ் படத்துல வர்ற மாதிரி வித விதமான டிசைனில் மனுசன் இருப்பான். ஹாலிவுட் மாக்கான் பசங்களுக்கு நல்ல ஒரு மேட்டர் கிடைச்சிருச்சி.
 
ஹாலிவுட் மாக்கானுங்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி. அவனுங்க இதெயெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டானுங்க. கவனிச்சிங்களா, 9/11 க்கு அப்புறம் சென்டிமென்ட் படம் தான் பிச்சிக்கிட்டுப்போது. ஏலியன் ஜிகினால்லாம் ஒடறது. ஒருவேளை இப்ப நம்ம ராமராசன் அங்க போனா கல்லா கட்டுவாரோ?
 
மனிதனுக்கு ஆறறிவு ஏன்? மேலும் மனிதன் ஏன் இவ்வுலகை ஆராய வேண்டும்:-

விஞ்ஞான ஆராய்ச்சிகளின் படி இந்த உலகம் தோன்றி 400 கோடி ஆண்டுகள் ஆகி விட்டன என்றும், நாம் வாழும் சூரிய மண்டலத்தில் உள்ள சூரியன் தோன்றி 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் இந்த சூரியன் தனது எரிபொருள் எல்லாம் எரிந்து முடிக்க இன்னமும் 500கோடி ஆண்டுகள் ஆகும் எனவும் கூறுகிறது. மேலும் இப்பூவலகில் உயிரினங்களும் ஏறக்குறைய 300கோடி ஆண்டுகளாக இருக்கின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான உலகில் உயிரினங்கள் தோன்றி பல்கிப்பெருகும் போது இடையிடையே அவைகள் பெருவாரியாக அழிக்கப்பட்டதாகவும் (ஏறக்குறைய 90%) பின்பு மிஞ்சிய உயிர்களில் இருந்து அடுத்ததான ஓர் புதிய உயிரினக்கூட்டங்கள் உண்டாயின எனவும் அதனைப் பல பகுதிகளாகப்பிரித்தும், மேலும் அப்படியான யுகங்களின் இடையேயும் உயிரின அழிவுகள் நடந்து பின்பு உருவாக்கப்பட்டதாகவும் கண்டுள்ளனர். (இந்த யுகங்களின் பிரிவுகள் பற்றி விரிவாக முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்).

இப்படியான பல அழிவுக்குப்பின்னான இப்போதய உலகில் தான் உயிரினங்களிலேயே முதலாவதாக ஆறறிவு உள்ளதான உயிரினமாக மனிதர்கள் உருவாகியுள்ளனர் எனக்கண்டுள்ளனர்.

அப்படியான யுகங்களை இந்து வேதங்களிலும் உணர்ந்து எழுதியுள்ளனர். மேலும் இந்து வேதங்களில் இப்படியாக அழிக்கப்படுவதும் ஆக்கப்படுவதும் ஒரு சுழற்சி முறை விதியெனவும் இதன் காரணகாரியங்களை ஆராயவேண்டாம் என குறிப்பிடுள்ளது என நினைக்கிறேன். மேலும் இப்படியாக இந்து வேதங்களில் குறிப்பிட்டுள்ள அழிவுகளில் வாழ்ந்தவைகள் பிற உயிரினங்கள் மட்டுமா அல்லது அதிலும் மனிதர்கள் இருந்தார்களா என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா எனத்தெரியவில்லை. (பைபிளில் ஒரிடத்தில் ஆதிகாலத்தில் ராட்சதர்கள் இருந்தனர் என்பதாக உள்ளது. அதுவும் ஒரு வரி தான் குறிப்பிடப்பட்டுள்ளது). வேதங்களில் இப்போது நாம் வாழும் காலம் கலியுகம் எனக்கூறியுள்ளது. அதன் முடிவுக்குப் பின்னான உலகு பற்றி என்னவாக உள்ளது என்பதனை நான் படிக்கவில்லை.

இப்போதய விஞ்ஞானத்தின்படி இவ்வுலகில் மனிதன் என்பவன் ஒரு தனித்துவம் பெற்ற ஆறறிவுடன் படைக்கப்படவில்லை. பரிணாம வளர்ச்சியின் மேலான நிலையிலேயே மனிதனின் அறிவு என்பதானது ஆறறிவாகி அவன் மற்ற உயிரினங்களில் தனித்துவம் பெற்றவனாகி இருக்கிறான். இப்படியான நிலையில் மனிதன் எனும் உயிரினம் மட்டும் தன்னைத்தான் அறிந்தவனாயிருக்கிறான். அவ்வாறு அறியும் நிலையிலேயே மதரீதியான உணர்ந்து கொள்ளலில் அல்லது தர்க்கரீதியான உணர்ந்து கொள்ளலில் இவ்வுலகினைப் படைத்தவன் ஒருவன், அவனைச் சென்று அடைவதே இப்பிறவியின் பயன் என்பதாக உணர்ந்து கூறியுள்ளனர்.

இப்போதய விஞ்ஞானமும் அப்படியான படைத்தவனைத் தேடுவதிலேயே பல உண்மைகளைக் கண்டுகொண்டுள்ளது. இப்படியான இவ்விரண்டு விஞ்ஞானத்திலும் மனிதன் படைத்தவைகளைக் கண்டு உணர்ந்து ஆராய்ந்து தான் அப்படியான உண்மைகளை உலகுக்குத் தெரிவிக்கிறான்.

(மனிதனின் உணர்ந்து கொள்ளல் மூன்று விதமானது. ஒன்று அரூருபமாக- wave nature. மற்ற இரண்டு Physical- அதாவது பார்த்து ஆராய்தல் & கணக்குகளாகச் செய்தல், மேலும் தொட்டு ஆராய்ச்சி செய்தல். (logical, mathematical and expirimental) இவை மூன்றும் மனிதனிடத்தில் உள்ள மூன்று விதமான புலன்களின் மூலம் வருவது. அதாவது கேட்டல், பார்த்தல் மற்றும் தொட்டு உணர்தல் இதில் மதரீதியானது மனரீதியாக அருரூபமாக அறிதல். விஞ்ஞானம் ரூபமாக அறிதல். அதாவது ஞானப்பழம் வேண்டிய இருவரில் பெற்றோரைச் சுற்றிய பிள்ளையார் மதரீதியான ஞானிகள் என்றால், உலகைச் சுற்றிய முருகன் இக்கால விஞ்ஞானிகள்).

இவ்வாறான மனிதனின் உணர்தலில் படைத்தவைகள் அன்றி தனித்து நிற்கும் வேறொன்று உலகில் அறியப்படவில்லை. ஏனென்றால் மனிதன் மதரீதியாக மனம் எனும் தனது எண்ணங்களின் வெளிப்பாடுகளை அடக்கி அதன் மூலமாக தான் உருவாக்கப்பட்ட அடிப்படைக்கூறுகளை அறிந்து அதன் மூலம் கொண்ட சிந்தனையின் வெளிப்பாடுகளே, அவ்வாறான மதரீதியான கருத்துகள். அவ்வாறு கூறப்பட்டவைகளில் அருரூபமான ஒன்றை உணர்ந்ததால் அதுவே அவனை உருவாக்கிய கடவுள் என்பதாகக் கூறியுள்ளான்.

ஆனால் இப்போதய விஞ்ஞானம் அப்படியான அடிப்படைக்கூறுகளை அணு என்பதாகவும் அதன் குணாதிசயம் DUAL NATURE எனும் பொருள்-ஆற்றல் எனக்கண்டுள்ளது. அப்படியான விஞ்ஞானத்தின் மூலம் பார்ப்போமானால் நமது உடல் எனும் பொருளின்- அணுக்களின் ஆற்றல் வடிவமே மனம் என்பதாகும். அதனைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். மேலும் இப்படியான மனிதன் தன் ஆறறிவு கொண்டு தன்னை அறிந்து பரலோகம் எனும் மோட்சம் அடைந்து அவன் அங்கு அக்கடவுளை தினந்தோறும் வணங்கிக்கொண்டிருப்பதற்காகவே என்பதும் சரியென்பாதாகப் படவில்லை. ஏனென்றால் அதனைத்தான் அவன் இங்கிருந்தும் செய்யலாமே.

இதன் உண்மையான காரணம் மனிதன் எனும் அணுக்களின் ஒரு நுணுக்கமான தொகுப்பான உயிர் இவ்வுலகில் பல்கிப்பெருகி வாழும் நிலையில் அப்படி உருவாகியுள்ள இவ்வுலகமே அழியப்போவதான ஒரு நிலையினை உணர்ந்ததால், அப்படியான இவ்வுலகில் இருந்து தப்பிசெல்லுவதற்கான முயற்சியின் முதல் படியே பரிணாமத்தின் மேலான ஆறறிவு (இதற்கு முன்பதான பூமியின் அழிவுகளில் பூமியின் பெருவாரியான உயிரினங்கள் தான் அழிந்தன. ஆனால் இப்போது இந்த உலகமே அழியப்போகிறதான ஒரு உணர்தல்).

மேலும் மதங்களில் அவ்வாறு தோன்றிய ஞானிகள் தாங்கள் உணர்ந்ததை கூறியவைகள் கூட ஒரு பரிணாம வளர்ச்சியையே கொண்டுள்ளது.

அதில் இயேசு தனது வெளிப்பாடுகளில் இவ்வுலகம் சிறிது காலத்தில் அழிந்து விடும் என்றும், அப்போது தான் மீண்டும் வந்து நல்லவர்களைத் தன்னுடன் கூட்டிகொண்டு செல்வேன் என்பதாகவும் கூறியுள்ளார். அவரின் அப்போதய வருகையின் போது சூரியன் ஒளியிழந்து விடுவதாகவும் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் விழும் என்பதாகவும் கூறியுள்ளார். முகமது நபியும் இது போன்று கூறியுள்ளார்.

போகர் எனும் சித்தரின் வாழ்க்கையை விளக்கும் படங்களை நெட்டில் இருந்து பார்த்தேன். அதில் அவர் வானில் பறந்து உலகம் முழுவதையும் பார்ப்பதாக உள்ளது. மேலும் இயேசுவும் வான மண்டலத்திற்கு ஏறிச்சென்றதாகவும் உள்ளது. வள்ளலார் சுவாமிகளும் ஒளியாகிச் சென்றதாக உள்ளது. இது எவ்வாறு என்பதனை ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்துடன் நமது மனதின் கூறுகளை அணுக்களாகக் கொண்டால் அப்படியான மனதின் எண்ணங்களை அடக்கினால் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பதாக முன்பு எழுதியிருந்தேன். அதாவது அவர்கள் அனைவரும் தங்களை உடல் எனும் பொருள் ரீதியாக உணர்ந்து கொள்ளாமல் மனம் எனும் ஆற்றல் வடிவில் உணர்ந்ததால் ஓளியின் வேகத்தில் இவ்வுலகில் இருந்து பறந்து சென்றிருக்க வேண்டும். அதற்கு நம் மன ஆற்றலை அடக்கவேண்டும். அவர்கள் மட்டும் அல்ல மேலும் பலரும் சென்றிருக்க வேண்டும். முக்கியமாக மயன் எனும் ஒரு இனம் அமெரிக்காவில் இருந்து மிகப்பெரிய கோபுரங்களைக் கட்டிய அவர்கள் ஒரு தடயமும் இன்றி மறைந்து உள்ளனர். அவர்கள் அவ்வாறு மறைந்தது என்பது இவ்வுலகினை விட்டு தப்பியதானதாகவே இருக்க வேண்டும்.

இப்போதய உலகு அவ்வாறு தப்பித்துச் செல்வதற்கான தேடுதலில் விளைந்ததே மனிதனின் வேகம் எனும் உத்வேகம். அதன் உச்சக்கட்டமாக ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம், அதன் மூலம் மனிதன் ஒளியின் வேகத்தில் சென்றால் காலம் என்பதே அவனுக்கு இல்லை என்பதாக அவர் கண்டறிந்து கூறியுள்ளார். ஏன் அவ்வாறு தப்பித்து செல்லுவதற்கு ஒளியின் வேகம் தேவைப்படுகிறது? மேலும் பூமியில் இருந்து எங்கு தப்பி செல்வதற்கு அப்படியான வேகம் தேவைப்படுகிறது? மேலும் அவ்வாறு அவர்கள் உணர்ந்து கூறிய காலம் இப்போதய விஞ்ஞானிகள் கணித்ததான 400கோடி ஆண்டுகள் என்பதற்கும் சிறிதும் பொருத்தமில்லாததாக உள்ளதே?

இதில் தான் நான் சிறிது காலத்திற்கு முன்பு இப்படியான விஞ்ஞானப் புத்தகங்களைப் படித்துவரும்போது எழுதிய ஒரு தர்க்க ரீதியான STATEMENT இயேசுவும், முகமது நபியும் கூறிய கூற்று உண்மை என்பதாக ஏற்கும்படி வரும். அதாவது இப்போதய விஞ்ஞானம் இந்த அண்டம் விரிந்து கொண்டே செல்கிறது என்றும் அதற்கு EXPANDING UNIVERSE என்பதாகக் கூறியுள்ளது, ஆனால் அதனை நான் CRUNCHING GALAXY என்பதாகப் பின்வருமாறு எழுதியுள்ளேன். Expanding means ,the distance between an observer and an object is increasing. The distance between an observer and an object increases with increases in space-time wrapping.S pace-time wrapping increases with increasing matter concentration. If the matter concentration increases above a critical limit, the galaxy will crunch into nothing.

மேலும் இப்போதய விஞ்ஞானம் இந்தப் படியான expansion ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு 5-10% விரிவதாகக் கண்டறிந்துள்ளது. இதில் இந்தக் குறைந்த பட்ச 5சதவீதத்தை, நமது galaxy தோன்றி 20 பில்லியன் வருடங்கள் என்பததாகக் கண்டறிந்ததுடன் சேர்த்து அதனை crunching என்பதாகப் பார்த்தால் அது சரியாக 100% நாம் வாழும் இந்த milkyway galaxy சுருங்கிவிட்டதாக வருகிறது. (இதில் சுருங்குவது என்பது என்ன எனப் பின்பு எழுதுகிறேன்). அப்படியானால் ஞானிகள் கண்டறிந்த சிறிது காலத்துடன் இது பொருந்திப் போகிறது. அப்படியானால் இவ்வுலகின் ஆயுள் 400 கோடி ஆண்டுகள் என்பது என்னவாகும் என்றால், அங்கு ஐன்டீனின் சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் காலம் சுருங்கி விடும் 400 கோடி ஆண்டுகள் 4 ஆயிரம் ஆண்டுகளாய் விடும்.

அதாவது அந்த critical concentration நெருங்கியவுடன் இப்போதய காலம் சுருங்கிவிடும். எப்படியென்றால் இப்போது நமது பூமியினைச் சுற்றும் ஒரு செயற்கைகோள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பூமியைச் சுற்றி வருகிறது. அப்படியான அந்தக் கோள் ஒரு குறிப்பிட்ட critical distance பூமியின் அருகில் வந்தவுடன் சடாரென்று பூமியில் விழுகிறது. அதாவது அது சுழலும் காலம் சுருங்குகின்றது. அது போல நமது பூமியின் ஆயுள் காலம் சுருங்கிவிடும். நான் மேலே எழுதியுள்ள கூற்று உண்மையென்றால் இதுவும் உண்மையென்றாகிவிடும்.

அப்படியான அழிவிலிருந்து மனிதன் எனும் அணுக்களின் ஒரு நுணுக்கமான தொகுப்பான உயிரினம் தப்பிப்பதான முயற்சியின் பரிணாமமே ஆறறிவு.

அதாவது ஜே.கேயின் வார்த்தைகளில் சொல்வதானால், படைக்கப்பட்டவைகளே படைத்தவன். படைத்தவனே படைக்கப்பட்டவைகள்.

அவ்வாறில்லாமல் படைக்கப்பட்டவன் எனும் ஒருவன் இருந்தால் அவன் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் நாம் அறிகின்றதும் மதங்கள் கூறுவதும் நம் புலன்களால் உணரக்கூடியதே. அதனால் மனிதனே படைத்தவைகளை அறிந்து படைப்பவனாக உணர்ந்து அவனைக் காத்துக்கொள்ளவே ஆறறிவு.

எழுதியவர்: ரமேஷ் அப்பாதுரை
 
நன்றி ரமேஷ். நீங்கள் கூறிய பின்னூட்டத்திற்கு எனக்கு சில கருத்து வேறுபாடுகளிருப்பினும், சித்தர்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன். சித்தர்கள் பற்றிய நிசங்களை விட புனைவுகளை இங்கு அதிகம் என்பதை ஒத்துக்கொள்வோம். சித்தர்கள் பற்றிய பதிவுகளோ, தளங்களோ இருப்பின் இங்கே பின்னூட்டமிடவும். இது எனக்கு ஒரு உண்மை அறிதல் முயற்சி என்றேத் தோன்றுகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]