Jan 20, 2005
்சசில படங்களும், சில படிப்பினைகளும்
நேற்று இரவு பார்த்தப் படங்கள்
- City of God
- Abandoned
- 42 UP
பொழுதுபோகவில்லை , தூக்கம் வரவில்லை என்பதால், இந்த 3 படங்களையும் மீண்டும் பார்த்தேன். இன்னமும், தெருவோரக்குறிப்புகள் பற்றி எழுதாதற்கு என்னை கரித்துக் கொட்டுங்கள். சரியான வார்த்தை சொல்லாடல்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
உலகமே சாட்சி சொல்லும் City of God-ன் குருரமான ரிஜோ டி ஜெனிரோவின் வாழ்வியல் பற்றி,எஸ்.ராமகிருஷ்ணன் முதல் மணிரத்னம் வரை, நிறைய பேர் பார்த்து, எழுதி, சுட்டு படம் பண்ணி விட்டதால், நானும் இங்கே தொடர விரும்பவில்லை. அதனால், ஒவர் டு "அஃபாண்டண்ட்"
Abandoned - ஹங்கேரிய மொழிப்படம். யாரும் பார்த்துக் கொள்ள முடியாத, கண் பார்வை மங்கி வரும் தாயாரிடமிருந்து பிரித்து, ஒரு சிறுவனை நரகமாய்த் தோன்றும் ஒரு ஹாஸ்டலில் சேர்ப்பதிலிருந்து தொடங்கும் படம். இந்த படம் பற்றி எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு சிறுவனின் மறுக்கப்பட்ட குழந்தைத்தனம், அடக்கப்பட்ட உணர்வுகள், சிறுவர்களின் உலகம், சர்வாதிகாரியான ஹாஸ்டல் வார்டன் என விரியும் படம், இறுதியில், இதைவிட, இன்னொரு கொடுமையான ஹாஸ்ட்லுக்கு போவதாக முடியும். முழு நீள உடலுறவு காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் உள்ள படத்தில், அவைகளை ஒரு சிறுவர்க் கூட்டம் பார்க்கும் பார்வையிலிருந்து பார்க்கும்போது, அவர்களின் உலகம் எப்படி சபிக்கப்பட்டுள்ளது என இதயத்தை கனக்க வைக்கும் படமிது.
படம் முழுக்க, ஒரு விதமான பச்சை நிறமும், சொல்லவியலா அமானுஷ்ய தன்மையுமாய், மிகக் குறைவான ஒலியமைப்புகளோடு, மிகக் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முடிகையில் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்.
42UP - The world is not enough தந்த ஒரு பிரிட்டிஷ் இயக்குநரின் விவரணப் படமிது. இந்தக் கதைக்கரு மிகவும் எளிமையானது. 7 சிறுவர்கள். அவ்ர்தம் வாழ்க்கையை, 7 வருடக் காலவெளியில், தொடர்ந்து படம் பிடித்து, வாழ்வின் சூட்சுமங்களே, தோல்விகளை, வலிகளை, கனவுகள் கொன்று வாழ்க்கை தேர்ந்தெடுத்த பாதைகளை, எந்த அலங்காரங்களுமின்றி, நேரடியாக சொல்லும் படமிது. இதில் சொல்லப்படும் விவரணைகள், கதைகள், சம்பவங்கள் அனைத்துமே நம் வாழ்விலோ, அல்லது, நமக்கு தெரிந்தவர் வாழ்விலோ, குறைந்தபட்சம் நடந்திருக்கக்கூடிய ்கூடிய சாத்தியங்கள் உண்டு. இதே இயக்குநரின் இந்த வரிசையில் வந்த படங்கள் - 7 Up, 21 Up, 28 Up
இப்படிப்பட்ட படங்கள் பார்க்கும்போது எப்போதும் எழும் தவிர்க்கவியலாத கேள்வி, நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எடுக்கும் திறமையில்லையா அல்லது மக்கள் ரசனை என்ற பேரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறோமா அல்லது இங்கே மக்கள் இதற்கெல்லாம் தயாராக இல்லையா ?
நிற்க. யாராவது "மேடம் சாடா" பார்த்து விட்டீர்களா!! ஒரு மார்க்கமாகத் தான் எல்லா விமர்சனங்களிலும் சொல்லுகின்றார்கள். பார்த்து விட்டால், எழுதுங்கள் சாமி, புண்ணியமாக போகும். படித்து விட்டு பார்த்துக் கொள்ளுகிறேன்.
- City of God
- Abandoned
- 42 UP
பொழுதுபோகவில்லை , தூக்கம் வரவில்லை என்பதால், இந்த 3 படங்களையும் மீண்டும் பார்த்தேன். இன்னமும், தெருவோரக்குறிப்புகள் பற்றி எழுதாதற்கு என்னை கரித்துக் கொட்டுங்கள். சரியான வார்த்தை சொல்லாடல்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
உலகமே சாட்சி சொல்லும் City of God-ன் குருரமான ரிஜோ டி ஜெனிரோவின் வாழ்வியல் பற்றி,
Abandoned - ஹங்கேரிய மொழிப்படம். யாரும் பார்த்துக் கொள்ள முடியாத, கண் பார்வை மங்கி வரும் தாயாரிடமிருந்து பிரித்து, ஒரு சிறுவனை நரகமாய்த் தோன்றும் ஒரு ஹாஸ்டலில் சேர்ப்பதிலிருந்து தொடங்கும் படம். இந்த படம் பற்றி எழுதுவது அவ்வளவு சுலபம் இல்லை. ஒரு சிறுவனின் மறுக்கப்பட்ட குழந்தைத்தனம், அடக்கப்பட்ட உணர்வுகள், சிறுவர்களின் உலகம், சர்வாதிகாரியான ஹாஸ்டல் வார்டன் என விரியும் படம், இறுதியில், இதைவிட, இன்னொரு கொடுமையான ஹாஸ்ட்லுக்கு போவதாக முடியும். முழு நீள உடலுறவு காட்சிகள், நிர்வாணக் காட்சிகள் உள்ள படத்தில், அவைகளை ஒரு சிறுவர்க் கூட்டம் பார்க்கும் பார்வையிலிருந்து பார்க்கும்போது, அவர்களின் உலகம் எப்படி சபிக்கப்பட்டுள்ளது என இதயத்தை கனக்க வைக்கும் படமிது.
படம் முழுக்க, ஒரு விதமான பச்சை நிறமும், சொல்லவியலா அமானுஷ்ய தன்மையுமாய், மிகக் குறைவான ஒலியமைப்புகளோடு, மிகக் குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் முடிகையில் நம்மை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்.
42UP - The world is not enough தந்த ஒரு பிரிட்டிஷ் இயக்குநரின் விவரணப் படமிது. இந்தக் கதைக்கரு மிகவும் எளிமையானது. 7 சிறுவர்கள். அவ்ர்தம் வாழ்க்கையை, 7 வருடக் காலவெளியில், தொடர்ந்து படம் பிடித்து, வாழ்வின் சூட்சுமங்களே, தோல்விகளை, வலிகளை, கனவுகள் கொன்று வாழ்க்கை தேர்ந்தெடுத்த பாதைகளை, எந்த அலங்காரங்களுமின்றி, நேரடியாக சொல்லும் படமிது. இதில் சொல்லப்படும் விவரணைகள், கதைகள், சம்பவங்கள் அனைத்துமே நம் வாழ்விலோ, அல்லது, நமக்கு தெரிந்தவர் வாழ்விலோ, குறைந்தபட்சம் நடந்திருக்கக்கூடிய ்கூடிய சாத்தியங்கள் உண்டு. இதே இயக்குநரின் இந்த வரிசையில் வந்த படங்கள் - 7 Up, 21 Up, 28 Up
இப்படிப்பட்ட படங்கள் பார்க்கும்போது எப்போதும் எழும் தவிர்க்கவியலாத கேள்வி, நமக்கு இப்படிப்பட்ட படங்கள் எடுக்கும் திறமையில்லையா அல்லது மக்கள் ரசனை என்ற பேரில் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகிறோமா அல்லது இங்கே மக்கள் இதற்கெல்லாம் தயாராக இல்லையா ?
நிற்க. யாராவது "மேடம் சாடா" பார்த்து விட்டீர்களா!! ஒரு மார்க்கமாகத் தான் எல்லா விமர்சனங்களிலும் சொல்லுகின்றார்கள். பார்த்து விட்டால், எழுதுங்கள் சாமி, புண்ணியமாக போகும். படித்து விட்டு பார்த்துக் கொள்ளுகிறேன்.
Comments:
<< Home
City of Godக்கும் ஆய்த எழுத்துக்கும் சம்பந்தமில்லை. அது வேறு இது வேறு. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது கூட Amores Perrosஐயும் ஆய்த எழுத்தையும் ஒப்பிட்டே. அதிலும் வடிவத்தைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. அமோரஸ் பெர்ரோஸின் மூன்று கதாபாத்திரங்கள் - நாய்ச்சண்டை செய்து பணம்பார்த்தவாறு, தன் அண்ணி மேல் ஒரு கண் வைத்திருக்கும் ஒரு இளவயதினன்; கார்ல் மார்க்ஸ் போல உருவத்தோற்றம் கொண்ட ஒரு கூலிக் கொலைகாரன்; மற்றும் காலொடிந்த மற்றொரு supermodel. ஆய்த எழுத்தின் மூன்று பாத்திரங்களும் இவையேவா என்றும் பார்க்கவும் ;)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]