Jan 22, 2005

புலிகள் ஆதரவும், எதிர்ப்பும்

ஒரு சில விஷயங்களை புரிந்துக்கொள்ள, என்னைப் போல், வலைப்பூ எழுதும் எத்தனையோ நண்பர்கள் சார்பில் இந்த பதிவு.

இரண்டொரு நாட்களாக, சோபாசக்தியின் "ம்" பற்றி, வசந்தும், டிசெதமிழனும் தங்கள் பதிவில் பதித்திருந்தனர். இதில் மிகப்பெரியதாய் எழும் கேள்வி, விடுதலைப்புலிகளின் ஆளுமை. புலிகளை ஆதரிப்பதா, வெறுப்பதா என்பது அவரவர் சொந்தப் பிரச்சனை.

ஆனால், சென்னையில் சொகுசாக உட்கார்ந்துக்கொண்டு என்னால், குழந்தைப் போராளிகளைப் பற்றி பேச இயலாது. அப்படி யாராவது பேசினால், அது ஒரு "அறிவுஜீவித்தனமான" வாதமாய் இருக்குமே தவிர, பொருட்பதிந்ததாய் இருக்காது என்பது என் எண்ணம். அவரவர் வாழ்வியல் சூழ்நிலைகளைப் பொறுத்தே, எந்த விஷயத்தையும் அநியாய/நியாயப்படுத்த முடியும். என் போன்ற பலரின் புரிதல்களில் பெரும் குழப்பங்கள் உண்டு. ஊடகங்கள் சொல்லிக்குடுத்த அல்லது வளர்த்தெடுக்கப்பட்ட தோற்றங்களை வைத்துக் கொண்டு என்னால், புலிகளைப் பற்றி பேச இயலாது.
பதில்கள் பரிமாறிக்கொள்வதின் மூலம், ஒரு சில என்னைப் போன்ற குழப்பவாதிகளூக்கு தெளிவு பிறக்குமென நம்புகிறேன்.

Comments:
அன்புள்ள நாராயணன்,

இப்போதைக்கு எந்த முடிவையையும் கையில் வைத்து கொள்ளாமல், பதிவுகள் விவாதகளத்தில் நடந்த சண்டைகள், இன்னும்ன் பல குழுமங்களில் நடந்த சண்டைகள் (எல்லாவற்றிலுமே விவாதம் குறைவு, அதை சண்டை என்றுதான் பொதுவாய் சொல்லவேண்டும்) ஆகிவற்றையும், ஈழம் தொடர்பான பல செய்திகள் (அதன் சார்பையும் உணர்ந்து) படியுங்கள். கொலையுண்ட ராஜினி திரணகம உடபட்ட பழைய UTHR வெளியிடான முறிந்த பனை போன்றவற்ற்றை படியுங்கள். புலிகள் சார் இணைஉய தளங்கள் பலவற்றையும் படியுங்கள். புஷ்பராஜாவின் 'ஈழபோராட்டம் எனது சாட்சியம்' ஷோபாவின் கொரில்லா போன்றவற்றை படியுங்கள்.

அதற்கு பிறகு இதே கேள்விகளை கேளுங்கள் - நல்லவரா, கெட்டவரா கேள்வியை தவிர்த்து.
இது பொதுவாய் எனது ஆலோசனை. மற்ரவர்கள் ஏதும் சொன்னால் அதையும் கண்க்கில் கொண்டு செயல்படுங்கள்.
 
1. தெரியாது (நாயன் ஸ்டைல் தான்). ஆனால் மைய இலட்சியத்தை பொறுத்தவரை கபட நோக்கம் கொண்டவர்கள் அல்ல.

2.ஊன்றுகோல்

3. விமர்சனங்கள் உன்னத இலட்சியத்துக்கு எதிரானவையாகலாம். விளைவுகள் வழிமுறைகளை நியாயப்படுத்துகின்றன. இலட்சியத்தை அடஈய என்ன விலை கொடுத்தும் கட்டுக்கோப்பான இராணுவத்தைப் பேண வேண்டும். தமிழீழத்தை பெற்றுத்தரும் திறமையும் அருகதையும் புலிகளுக்கு மட்டுமே உண்டு

4. பதில் சொல்வார்கள். ஆனால் பதிலின் நேர்மையும் அதன்பின்னாலுள்ள பொறுப்புணர்வும் எப்படியிருக்கும் என்று தெரியாது

5. உலகெங்கும் தேசியவாத இயக்கங்களுக்கெதிராக முன்வைக்கப்படுபவைதான். (புலிகள் முற்போக்கான தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் - பிற்போக்குத்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்))

6. முனிறுத்துவது பற்றி தெரியவில்லை. புலிகள் இல்லாத தமிழீழம் இப்போதைக்கு சாத்தியமில்லை.

7. கடலில் சேரும் நதிகளெல்லாம் எங்கெங்கோ மலையில் தோன்றுகின்றன.

8. கட்டுக்கோப்பின்மை பிரதான காரணம். தவறான சில அரசியல் கணிப்புக்கள். கொலைப் போட்டியில் புலிகள் வெற்றிபெற்றமை

9. ஏன்?-அத்தனையும் அவசரமாக இப்போதே பதிலளிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதியவை.
போதாமைகள் நிறைய உண்டு.
இனி கருத்து சொல்பவர்களோடு இணைந்து இன்னும் சொல்கிறேன்
 
An adequate (with a silent bias) examination of many such issues can be found at Prabakaran series at www.sangam.org.

I think the Eelam Liberation Movement was initially progressive in terms of caste (against caste rigidities), women (for women equality), religion (secularism, and separation of state and religion), economics (socialist), and environment. Also, self-respect, self-sufficiency, and Tamil nationalism were key parts of the ideology. During the 70's one of the initial principals of Non-violence got eroded, and violence or militancy was made to seem inevitable. During 80's and 90's violence was the chief conflict resolution mechanism.

Today, most of the progressive ideals remain. With the emigration and globalization, diplomacy and other conflict resolution models have been emphasized, and are being employed for external disputes. However, there is a dictatorship tendency in the LTTE, and internal disputes are settled primarily with a gun. Internal reconciliation is harder than external, because there are no mediators.

Having immigrated to West, we want Tamil Eelam society to be democratic, transparent, open civil society. But, Tamils never had such a society, and never aspired to be built such a society. It is a noble Western ideal, that I think Tamils are not yet ready for. Nevertheless, an ideal towards which we should strive for.
 
This comment has been removed by a blog administrator.
 
To add to my above comments:

The Eelam Liberation Movement's founding causes were:
(1)discrimination against Tamils in jobs and education (perceived by Sinhalese as Affirmative policies to counter balance the former British Tamil favoritism)
(2)Sinhala only legislation (later repelled, and Tamil was made an official language of Sri Lanka)
(3)Sinhala colonization of Tamil areas (Tamil live in Sinhala areas ex: Colombo, central SL)
(4)systematic Sinhala mob and state violence against Tamils (must be seen at the context of Sri Lanakan society where 30 000 Sinhala Marxists were put down be the state)
(5)lack of adequate political mechanisms to deal with Tamil issues
 
நண்பர் நரைன்
புலிகளின் மறுபக்கங்களை நிறைய ஊடகங்களில் வாசித்திருப்பீர்கள்.நிறையப் பேர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.நிறைய திரிபுகள் அவை திரிபு என்ற அடையாளங்கள் ஏதுமின்றி உங்களை வந்தடைந்திருக்கும்.
நான் இங்கே தருபவை கடுமையான பிற்போக்குவாதத்தினை தூக்கித் திரிந்த என்னுடைய சமூகத்தில் புலிகள் ஏற்படுத்திய மாறுதல்.இவை சரியா தவறா என்று தீர்மானிப்பது உங்கள் கையில்.

சாதீய ஆதிக்கங்களை ஒழிப்பதில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்கள்.உதாரணமாக ஒருவரை கீழ்சாதிக்காரன் என்று ஏசினால் அல்லது விலக்கினால் நடுத்தெருவில் வைத்து 1 கிலோ பச்சைமிளகாய் சாப்பிடவேண்டும்.இது குரூரமாகத் தோன்றினாலும் அதைப் பார்த்தவன் எவனுக்குமே தனது சாதியே மறந்துபோயிருக்கும்.கோவில்களில் எல்லோரையும் அனுமதிப்பது வழக்கத்திற்கு வந்தது.முரண்டுபிடித்த கோவில்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
சாதியை ஒழிப்பதில் அவர்கள் பெற்றது 80 சதவீத வெற்றி மட்டுமே என்றாலும் அவர்களில்லாவிட்டால் முழுதாகச் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி.

பெண்களுக்குச் சரியான அந்தஸ்தைப் பெற்றுக்கொடுக்கப் போராடினார்கள்.குடித்துவிட்டு வந்து மனைவியரை உதைத்த கணவன்கள்,வீதியில் நின்று பெண்களை துன்புறுத்தியவர்கள்,பெண்களுடன் தகாத முறையில் நடக்க முயற்சி செய்தவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டார்கள்.
உண்மையைச் சொன்னால் புலிகளின் கை ஓங்கியிருந்த காலத்தில் வயது வந்த பெண்கள் எவ்வளவு தூரப்பிரதேசத்திற்கும் தனியே போய்வர முடிந்தது.
குடிமைசார் வழக்குகள்,விவாகரத்து வழக்குகள் பெண்களின் நலனை முன்னிறுத்தி தீர்ப்பளிக்கப்பட்டன.இவர்களது தொல்லையிலும் பார்க்கச் சேர்ந்து வாழ்வது எவ்வளவோ மேல் என்று முடிவெடுத்த கணவன் மார் பலர்.
இவற்றை விட விதவைப் பெண்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் பரந்த அளவில் முன்னெடுக்கப்பட்டன.

சீதன ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவந்தார்கள்.பாரியளவு எதிர்ப்பு ஏற்பட்டபோதும் அதனை நடைமுறைப்படுத்துவதில் விடாப்பிடியாக நின்றார்கள்.(யாழை விட்டு விடுதலைப்புலிகள் வெளியேறியதுடன் அது சீதன வழக்கு மீண்டும் வந்துவிட்டது)
தொடர்வேன்..
 
நன்றி ஈழநாதன். நான் இப்போது பல்வேறூவிதமான பத்தகங்களைப் படித்து புலிகளைப் புரிந்துக் கொள்ள முயன்றுக்கொண்டிருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]