Jan 26, 2005

சென்னையில் போர்த்துகிசிய திரைப்பட விழா

சென்னையில் அண்மையில் இரண்டாவது உலகத்திரைப்படவிழாவை வெற்றிக்கரமாக முடித்து வைத்த ICAF-ன் இந்த வருடத்தின் திரைப்படவிழாக்கள், 28-ம் தேதி முதல் தொடங்குகின்றது. இந்த விழா உறுப்பினர்களுக்காக மட்டுமே எனப் போட்டிருந்தது. நான் ஏற்கனவே உறுப்பினன்.ஆனாலும், உலகசினிமாவின் மேல் காதல் உள்ளவர்கள், உறுப்பினராதல் நலம் எனத் தோன்றுகிறது. 500 ருபாய் செலவில் வருடமுழுக்க உலகசினிமா பார்க்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதைச் சாக்காய் வைத்தாவது உறுப்பினராகுங்கள்.

இந்த விழாவில் திரையிடப்படும் படங்கள்

28.01.2005 - O, Defim (2002)
29.01.2005 - A Selva (The Forest) (2002)
30.01.2005 - Palabra Y Utopia ( Word * Utopia) (2000)
31.01.2005 - Zona J (1998)

அனைத்துப் படங்களும் சென்னை ஃபிலிம் சேம்பர் திரையரங்கில் மாலை 6.30 க்கு திரையிடப்படும். 30ந்தேதிப் படமான Word & Utopia மட்டும் மாலை 3.30க்கு திரையிடப்படும். இது தவிர்த்து, 30ந் தேதி மாலை, சென்னை திரைப்படவிழாவில் அதிகமான பாராட்டைப் பெற்ற "சம்சாரா" என்ற திபெத்திய படம், மக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்படுகிறது. தவறவிடாமல் பார்க்கவேண்டிய படமது.

சம்சாரா ஒரு புத்தத் துறவியின் வாழ்க்கைப் பற்றிய கேள்விக்களும், ஒரு பெண்ணின் வாழ்வின் மீட்டெடுப்பும் பற்றி நிறைய கேள்விகளை உள்ளடக்கிய படம்.

சென்னையிலிருந்தால், இதனை தவறவிடாதிர்கள். மேலும் விவரம் மற்றும் விசயங்கள் தேவைப்படுபவர்கள் எனக்கு மின்னஞ்சல் [narain[at]gmail[dot]com] அனுப்பவும்.

Comments:
வயெத்தெரிச்சல கிளப்பாதீங்கய்யா!
 
அட போங்கப்பா!! அங்கிருக்கும் போது ஒரு மேட்டரும் தெரியல... இங்கன வந்த பிறகு வொலகப் படத்தை பாக்குனும்னு ஆசை வரும் போது தொடர்புகள் கிடைக்காம வொலக மேப்பு தான் பாக்க முடியுது. படம் பார்த்துட்டு வாங்க.... நல்ல விமர்ச்சனத்தை பதிவா போடுங்க. நாங்களும் அதை பதிஞ்சி வச்சிக்கிறோம்.... காலம் கனிஞ்சி வரும் போது ஒன்னு வொன்னா பார்க்குறோம். அவ்ளோ தான் பண்ண முடியும்.
 
விஜய் எல்லா விசயங்களும் சென்னையில் இருக்கிறது, என்ன ஒரே குறை, யாரும் எதையும் வெளியில் சொல்லாமல் இருப்பதுதான். என்னால் முடிந்தவரை எதை எதையெல்லாம் சொல்லமுடியுமோ அதை செய்கிறேன். நான் ஒரு மெஸ்ஞ்சர் மட்டுமே.
 
கட்டாயம் செய்யுங்கள். இது என்ன யாஹூ மெஸ்ஞ்சர் மாதிரி 'உருப்படாத' மெசஞ்சரா?... ஹி... ஹி... just kidding... never mind-la
 
உண்மையில், எங்கெங்கே படம்பார்க்க சென்னையில் வாய்ப்புக்கள் கிடைக்கிறது என்பதே பலருக்குத் தெரியாது என்பதே நிஜம். ரஷ்யக் கலாச்சார மையம், ஃபிலிம் சொசைட்டி போன்றவை குறித்த தகவல்கள் பரவலாகத் தெரியவந்தாலே பெரும்பாலானோருக்கு உபயோகமாயிருக்கும்...மூன்று வருடங்கள் தண்டமாகச் சுற்றியபின்தான் அவைகளுக்கெல்லாம் நுழையத்தொடங்கியது....
 
உண்மை மான்ட்ரீசர். நானெல்லாம், அடித்து, பிடித்து, தேடிப் பார்ப்பதற்க்குள் வருடங்கள் கடந்துவிட்டது. எனினும், இதனை ஒரு பதிவாகபோடும் அளவிற்கு என்னிடம் விசயங்கள் இல்லை. கொஞ்சம், கொஞ்சமாய் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். பேரலல் சினிமாவிற்கு தற்போது சென்னையில் கொஞ்சம் மதிப்பு கூடியிருப்பதாக தெரிகிறது. நிறைய மனிதர்களை, உற்சாகமுள்ள இளைஞர்களை நிறையவே பிலிம் சேம்பரில் பார்க்கிறேன்.

ஆனால், பெரிய குறை என்னவென்றால், சரியான சந்தை இல்லாமலிருப்பது. தமிழ்க்குறும்படங்களுக்கான ச்ந்தைப் பற்றிப் பெரிய அறிதல் எனக்கில்லை. அப்படியிருந்தால், பதியுங்கள். இப்போது நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பது, கூட்டுப் பதிவுகள் போல், ஏன் வெவ்வேறு இடங்களிலிருந்து ஒரு கூட்டு இணைப்படம் எடுக்க கூடாது என்ற சிந்தனை ஒடிக் கொண்டிருக்கிறது.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இதனை முழுமையாய் பதிகிறேன்.
 
'கூட்டு இணைப்படமா?'. கேட்க நல்ல இருக்கிறது. கட்டாயம் அதைப் பற்றிய ஐடியாவுடன் ஒரு பதிவைப் போடவும்.
 
பல வருடங்களா கூட்டு இணைய படங்கள் பத்தி நாம பேசிட்டுத்தான் இருக்கோம்..இந்த முறையாவது படம் பண்னிடுனும்..இத்தனைபேர் ஆர்வமா கேக்கராங்க...ஒரு சிடிக்கு பத்து டாலர் கொடுக்கமாட்டேன்னா சொல்ல போறாங்க
 
சோக்கா போட்டிங்களே பத்து டாலர்ன்னு. இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன். ;-)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]