Jan 30, 2005
பயாஸ்கோப்பில் பார்க்காமல் டிவிடியில் பார்த்தது ;-)
மூன்று நாட்களாக எதுவும் எழுதாமலிருந்தற்கு மிக முக்கியமான காரணம், வேலை மற்றும் தொடர்ச்சியாக சில நல்ல படங்களைப் பார்த்து முடித்தேன். இதில் எழுதுவதற்கு எவ்வளவோ விசயங்களிருப்பினும், ஒரே மூச்சில் எழுதி விடமுடியாது. அவ்வளவும் விலாவாரியாக சொல்லி சிலாகிக்க வேண்டிய படங்கள். ஒவ்வொன்றாய் எழுத முயற்சிக்கிறேன். நான் கடந்த சில நாட்களில் பார்த்த மிக முக்கியமான படங்கள்.
வாய்ப்புகளிருப்பின் இவையத்தனையும் மிகச்சிறந்த படங்கள். தவறவிடாதிர்கள். நாளை வேலை சற்று குறைவாக இருப்பின், போர்களின் பிண்ணணியில் எடுக்கப்பட்ட 2 மிகச்சிறந்த ஆவணப்படங்களைப் பற்றிய தகவல்களை பதிகிறேன்.
- அகிரா குரோசாவின் "ரேன்"
- மைக்கேல் விண்டர்பாட்டமின் "இன் திஸ் வேர்ல்டு"
- பிரேசிலிய படமான "பஸ் 174
- நளின் பாலின் "சம்சாரா"
- பார்பரா சொன்பர்னின் "ரிக்ரெட் டூ இன்பார்ம்"
- பிரடரிக்கோ பெலினியின் "லே ஸ்ட்ராட்டா" மற்றும்
- மீண்டுமொருமுறை "சிட்டி ஆப் காட்"
Subscribe to Posts [Atom]