Feb 12, 2005

அசோகமித்ரன் - 50

முதலில் காப்பி - ஆஹா! ஒஹோ!!

திரு. எஸ்.வைதீஸ்வரன் - ஆங்!! ஆவ்!! (நன்றி: மாண்டீ )
திரு. பிரபஞ்சன் -- அட!!
திரு. சுந்தர ராமசாமி - வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
திரு. வேங்கடசலபதி - ஓ!
திரு. ஞானக்கூத்தன் - ம்க்கும்!
திரு. பால் சக்கரியா - அடடா!! ஆஹா !!
திரு. அசோகமித்ரன் - ம்..ம்...ம்...ம்....ம்...ம். ("ம்" கொட்டுங்க!!)


எல்லாத்துக்கும் மேலாக, விழாவினை ஒருங்கிணைத்த பத்ரிக்கு...ஜோரா ஒரு ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Comments:
ம்ம்ம்
 
ஆ!! (ஆச்சரியம் இன்னும் நீங்கள் தூங்காமல் இருப்பது!!)
 
வைதீஸ்வரன்...
 
சு.ரா வாவ்!!??

மன்னிக்கணும், அந்த அளவுக்கு அவரு வாவலைங்கறது அடியேனோட தாழ்மையான கருத்து. அசோகமித்திரன் பத்தி ரொம்ப அருமையா பேசிகிட்டே வந்தவரு ஒரு அஞ்சு நிமிஷம் அசோகமித்திரன் மாதிரி கற்பனைக் கதை சொல்றேன்னு ஆரம்பிச்சு பண்ண சேட்டை மோசமா இருந்தது. ரொம்ப கேவலமான பட்டவர்த்தனமான நக்கல். அதுக்கப்புறமும் ஒண்ணுமே நடக்காத மாதிரி அவரு அசோகமித்திரனைப் புகழ்ந்து பேசி முடிச்சிகிட்டதுதான் வாவ்!

அசோகமித்திரன்தான் நிஜமான வாவ். அவரு வயசுக்கு நாமெல்லாம் நட்டுக்கிட்டு கெடப்போம்னு நெனைக்கறேன்.
 
Lateaaa vanthuttu.. latestaa post pottaachaa?! Konjam neram irunthuttu poirakalamee..iyaaa.!
 
சாயந்திரம் ஆறு மணியாகிடகுடாதே!!!நீஙக் கூட்டம் நடக்குதுன்னு பார்த்துட்டு பைக் எடுத்துட்டு போய்டுதுறது......

அன்புடன்
கி.அரவிந்தன்.
வெங்காலூர்...

(இதுபோன்ற இலக்கிய கூட்டங்களுக்கு போக்முடியாத சுழ்நிலையில்..வாழும் ஒரு கால் பாய்)...
 
சங்கருக்கு,
நீங்கள் சொன்ன கருத்தில் கருத்து வேறுபாடு உண்டு. அவர் வாவலை என்பதை நன்றாக தெரிந்துக் கொள்ள, உயிர்மை வலைப்பதிவினைப் பார்க்கவும் ;-) (சிண்டு முடியாதே நாராயணா)

ராம்கி,
உண்மையிலேயே இருக்க வேண்டும் என்ற ஆசைதான். ஆனாலும், என்னுடைய அமெரிக்க கிளையண்டோடு ஒரு அரட்டை அடிக்க வேண்டியதிருந்ததால் அடித்து, பிடித்து கிளம்ப வேண்டியதாகப் போயிற்று. அத விடுங்க, சந்திரமுகி ரிங் டோன் வந்துட்ச்சாமே உண்மையா ?

மாண்டீ,

வைத்தீஸ்வரன், அசோகமித்திரனின் நீண்ட கால நண்பர். அவரின் முதல் (இல்லை இரண்டாவது என்கிறார் அ.மி) நூலுக்கு முன்னுரை எழுதியவர்.

அரவிந்தன்,

புரியுது, புரியுது, எங்கேயோ புகையற வாசனை கேக்குது. விடுங்க தலைவா, தன் புத்தகம் படிக்கலைன்னா, இழப்பு எதுவும் இல்லைன்னு, அசோகமித்திரனே சொல்லிட்டாரு,அதனால, பெரிசா இழப்புகள் எதுவும் இருக்காது.
 
சொல்லாமல் போனால் நன்றியற்றவனாகட் தெரிவேன். இப்ப சொல்றதே லேட்டுதான். ஐகாரஸ் பிரகாஷிற்கு மிக,மிக,மிக நன்றி. நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்தத்திற்கும், தொடர்ந்து என்னுடன் இருந்து என் கொஞ்ச நஞ்ச அச்சத்தினை கொன்றதுக்கும், சிகரெட் பிடிக்க எழுந்து போகும் போதும் என்னை கட்டாயப் படுத்தாமல் தனியாய் சென்றதற்க்கும்.
 
அதில்லை, வந்தது எஸ்.வைதீஸ்வரன் எனில், அவர் 'வைத்தீஸ்வரன்' இல்லை, 'வைதீஸ்வரன்'. விரித்த உள்ளங்கையால் மரப்பலகையைத் தட்டுவதற்கும் மூடிய முஷ்டியால் மரப்பலகையைத் தட்டுவதற்கும் உள்ள சப்தவேறுபாடுதான், இருந்தாலும், அதுதான் சொல்லநினைத்தது.
 
மாத்திட்டேன் தெய்வமே!!
 
உங்களை சந்திக்கத் தவறி விட்டேன்.

அடுத்த முறை சந்திப்போம்.

suresh kannan
 
சுரேஷ், நீங்கள் ஒன்றும் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை ;-) லோக்கல் மெட்ராஸ் ஆள் தானே, வெகு விரைவில் சந்திக்கும் தருணங்கள் அமையும் என எதிர்பார்ப்போம்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]