Feb 22, 2005
தேர்தல் முறைகளில் மாற்றம் தேவையா ?
"வாக்காளர் பட்டியலில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் 39 மக்களவை தொகுதிகளிலும் நடந்த தேர்தலை செல்லாது என்று அறிவித்து விட்டு மறு தேர்தல் நடத்தவேண்டும் என்றூ முதலைமச்சர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்துக்கு வழக்கு எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்திருக்கிறார். வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் பற்றி விசாரிக்க மத்திய தேர்தல் ஆணையம் நியமித்த கேரள அதிகாரி தாமஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரிகள் பலருக்கு விளக்க நோட்டிஸை ஆணையம் அனுப்பியிருக்கிறது. சென்னை நகரத்தில் மட்டும் 2001-ல் 32 லட்சம் வாக்காளர்கள் என்றிருந்த கணக்கு2004ல் 26 லட்சமாகிவிட்டது.
இந்த முறைக்கேட்டுக்கு காரணம் தி.மு.க சார்பு அதிகாரிகளும் தேர்தல் ஆணையமும் தான் என்று ஜெயலலிதாவும், அ.தி.மு.க அரசின் அராஜகம்தான் காரணம் என்று கலைஞர் கருணாநிதியும் குற்றம் சாட்டி வருகிறார்கள்
அடுத்தபடியாக சட்டமன்றத் தொகுதிகளை சீரமைக்கும் பணி இப்போது நடக்கிறது. இதிலும் தொகுதி எல்லைகளை மாற்றி அமைக்கும்போது கட்சி ரீதியில் எது சாதகம் என்ற அடிப்படையில் இஷ்டத்திற்கு மாற்றி அமைப்பதாக தி.மு.க குற்றம் சாட்டுகிறது. வரையறை செய்வது அ.தி.மு.க அரசு அல்ல, தேர்தல் ஆணையம்தான் என்று அ.தி.மு.க பதில் குற்றச்சாட்டு வைக்கிறது.
இந்த முறைகேடுகளுக்கு யார் பொறுப்பு என்ற ஆராய்ச்சி தேவைதான். பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கையும் தேவைதான். ஆனால் அந்த ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபடுவது அடிப்படைப் பிரச்சினையை கவனிக்க விடாமல் தடுத்துவிடும்.
அடிப்படை பிரச்சனை நமது தற்போதைய தேர்தல் முறைதான். சிம்பள் மெஜாரிட்டி முறையும், தொகுதி அடிப்படை முறையுமாக உள்ள இந்த தேர்தல் முறையில்தான் இத்தகைய முறைகேடுகள் தொடர்ந்து நடக்க வாய்ப்பு அதிகம். விகிதாசாரப் பிரதி நிதித்துவ முறையும், தொகுதியில்லாமல், பிரதிநிதிகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டால் இத்தகைய முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை.
எம்.எல்.ஏ, எம்.பி பதவிகளுக்கு தொகுதி முறை தேவையில்லை என்ற தீவிர மாற்றத்தை நாம் கொண்டு வந்தாக வேண்டும். தொகுதி அடிப்படை இருக்கும் வரை கட்சிகளின், வேட்பாளர்களின் ஜாதி, வட்டார செல்வாக்குதான் பிரதானமாக இருக்கும். ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ இருக்கும் ஜாதி, வட்டார செல்வாக்கை மாற்றியமைக்க தொகுதி வரையறையை மாற்றுவது என்ற சூழ்ச்சியில் இன்னொரு கட்சி இறங்கும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே பல முறை நாம் வலியுறுத்தியது போல, சாலை, சாக்கடை, விளக்கு, குடி நீர் பிரச்சினைகள், உள்ளாட்சிப் பிரதி நிதியான பஞ்சாயத்து, ந்கராட்சி பிரச்சினைகளாகும். எம்.எல்.ஏ, எம்.பி பொறுப்புகள் மாநில, இந்திய அளவில் கொள்கை, சட்டம் வகுப்பதற்கான பணிகள் மட்டுமேயாகும்.
இந்த அடிப்படையை ஏற்றுக்கொண்டால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் எண்ணிக்கையை நிர்ணயிப்பது அவசியமில்லாமல் போய்விடுகிறது. அந்த அளவுகோல் உள்ளாட்சி அளவில் மட்டும் இருந்தால் போதுமானது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய யூனியனில் சமமான எண்ணிக்கையில் எம்.பிக்கள் இருக்க வேண்டும். இந்த எம்.பிகளுக்கு தொகுதி கிடையாது. தேவையில்லை. அவர்கள் மாநிலத்தின் பிரதிநிதிகள்.
அவர்களை எப்படி தேர்ந்தெடுப்பது ? தனியே வேட்பாளர்களாக யாரும் நிற்கத் தேவையில்லை. கட்சிகள் மட்டுமே தேர்தலில் நிற்கும். எல்லா கட்சிகளும் எல்லா ஊர்களிலும் தேர்தலில் நிற்கின்றன. எல்லா ஊர்களிலும் எல்லா வாக்காளர்களும் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம். மாநிலம் முழுவதும் ஒரு கட்சி பெற்ற வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் மொத்த எம்.பி எண்ணிக்கையில் அதன் பங்கு ஒதுக்கப்படும். ஒரு மாநிலத்துக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று வைத்துக்கொண்டால் ஒரு கட்சி 5 சத விகிதம் ஒட்டு பெற்றிருந்தால் அதற்கு ஒரு எம்.பி சீட் கிடைக்கும்.
ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைத்த எம்.பி சீட்டுகளுக்கு யாரை அனுப்பப் போகிறோம் என்று அறிவிக்கும். அந்தப் பெயர்களில் ஆட்சேபத்துக்குரியவர்கள் இருந்தால் அதை தேர்தல் ஆணையமோ, நீதி மன்றமோ பரிசீலிக்கலாம். இப்படி எம்.பிகளை அறிவிக்கும் போது ஒவ்வொரு கட்சியும் அதில் 50 சதவிகிதமோ அல்லது 33 சதவிகிதமோ பெண்களாக இருக்க வேண்டும் என்று வரையறுக்கலாம். இந்த முறையில் உயர் சாதி பெண்கள் மட்டுமே அதிகமாக உள்ளே வந்துவிடுவார்கள் என்ற சில கட்சிகளின் அச்சம் அகற்றப்படும்.
இந்த அடிப்படைகள் பின்பற்றப்பட்டால், சிம்பிள் மெஜாரிட்டி அராஜகம் ஒழியும். போடப்படும் ஒவ்வொரு ஒட்டுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும். கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கட்சிக்கும் அசல் பலம் என்னவோ அதற்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். தலித்துகளுக்கு இரட்டைத் தொகுதிகள் தேவைப்படாது. ஒவ்வொரு தலித்தும் எந்த் மூலையில் இருந்தாலும் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பும் அப்படி அளித்த வாக்குக்குப் பயனும் கிடைக்கும். பெண்களுக்கான இட ஒதுக்கீடை இன்னமும் எளிதாக்க முடியும். உண்மையான மாநில சுயாட்சியையும், சமத்துவமுள்ள மத்திய கூட்டமைப்பையும் நோக்கிச் செல்ல சரியான பாதையாக இது இருக்கும். தொகுதி வரையறை இல்லாததால், சாதி, இதர அடிப்படைகளில் வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுகள் செய்வதற்கு எந்தப் பயனும் இல்லாமல் போய்விடும்.
எனவே சமூக அரசியல் மாற்றங்களை விரும்புவோர் தேர்தல் முறையை மாற்றுவது பற்றி ஆழமாகவும் விரிவாகவும் விவாதிப்பது உடனடி தேவையாகும்."
நன்றி: ஞாநி - தலையங்கம் - தீம்தரிகிட
இதை படித்தவுடன் முதலில் தோன்றியது இதுதான். ஏன் இதனை ஒரு விவாதமாக ஆரம்பிக்கக்கூடாது. என்னளவில் ஒரு உத்தரவாதத்தை தர இயலும். உண்மையிலேயே இது நல்ல விவாதமாக சென்றால், முமு பதிவினையும், பின்னூட்டங்களையும் திரு. ஞாநியிடம் தந்து அதன்மூலம் இனி வரும் தீம்தரிகிட இதழிலோ அல்லது பிற இதழ்களிலோ இதனை ஆணித்தரமாக முன்னிறுத்த முயற்சிப்பேன். இப்போது இட்டது மட்டுமே என் பணி. இதனுள் எழும் கேள்விகளையும், சந்தேகங்களையும் பின்னூட்டமாகவே பதிகிறேன்.

Comments:
<< Home
anaiththu maanilangkalukkum samamaana itangkal kotuththaal arunacahala pradhesam pondra siriya manilangkal valarum vaayppu undu. 40 kku power kurainthu 10 aakivitum. (250/25 thorayamaa ) periya katcikal mattume naattai aala mudiyum. ippodhu indha rendayum vitta vera vazhi illaya endru amerikkarkal thalayai sorivathu pola naamum thalayai soriya vendi varum. maanila katchikalin balam kuraindhuvidum endre thondrugirathu.
நரேய்ன்
//ஒவ்வொரு கட்சியும் தனக்குக் கிடைத்த எம்.பி சீட்டுகளுக்கு யாரை அனுப்பப் போகிறோம் என்று அறிவிக்கும்//
மக்கள் கட்சிக்கு என்று ஓட்டுப் போடும் போது, கட்சித் தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால், தி மு க தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், லல்லு தனது மனைவியின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மட்டுமே அதனை பயன் படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, முகம் தெரிவதால் மாநிலங்களுக்குத் தேவையானவற்றை தேர்ந்தேடுத்தவரிடம் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது.
அது பறிபோவதற்கும் வாய்ப்பு உள்ளது

தட்டச்சு செய்யும் போது விட்டுப்போனது
"ஒவ்வொரு மாநிலத்துக்கும் இந்திய யூனியனில் சமமான பிரதி நிதித்துவம் என்ற அடிப்படையில் எல்லார்க்கும் சம்மான எண்ணிக்கையில் எம்.பிகள் இருக்க வேண்டும். இந்த எம்.பிகளுக்கு தொகுதி கிடையாது. தேவையில்லை. அவர்கள் மாநிலத்தின் பிரதிநிதிகள்

கங்கா, விரைவாக பதிவது இதுதான். நீங்கள் சொல்லும்படி வைத்துக்கொண்டாலும், எம்.பிகளின் தேவையே சற்றே ஆட்டம் கண்டுவிடும். அப்படியிருக்கையில், இந்த குடும்பத்தினர்கள் எம்.பிகளாக மாறுவதன் பயன் என்னவாக இருக்க முடியும் ?
//மக்கள் கட்சிக்கு என்று ஓட்டுப் போடும் போது, கட்சித் தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால், தி மு க தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், லல்லு தனது மனைவியின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மட்டுமே அதனை பயன் படுத்திக் கொள்ளலாம்.//
வெற்றி பெற்றால் யாரெல்லாம் அனுப்பப்படுவார்கள் என்ற, வரிசைப்படி அமைந்த பட்டியல் ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன்னமேயே தரவேண்டும். அப்போது கங்கா சொன்ன பிரச்னை எழாது. அப்படி குடும்ப ரேசன் கார்டு பட்டியலையே வேட்பாளர ்பட்டியலாக்கினால்;-) மக்கள் அதையே முதல் தகுதிக்குறைவாகப் பார்ப்பார்களே. (அப்படிப் பார்க்காத மக்கள் எக்கேடு கெட்டால் என்ன?) மொத்தம் 100 இடங்களுக்கு ஒரு கட்சி பட்டியல் தந்தால், அதில் 25 இடங்களுக்குத்தேவையான ஓட்டுகள் பெற்றால், முதல் 25 பேர் பதவியேற்பார்கள். என்வே வரிசைப்படி பட்டியல் இருக்கவேண்டும். 33% பெண்கள் என்றால், ஒவ்வொரு 3 பேருக்கு 1 பெண் என்ற படி வரிசயாக பட்டியல் இருக்கவேண்டும். தகுதியிழப்பெல்லாம், நீதிமன்றங்கள் தேர்தலுக்கு முன்பே சரிபார்த்துவிடவேண்டும்.
இப்படி செய்தால் இது நடைமுறைக்கு வர வாய்ப்பிருக்கிறது.

காசி சொல்றது சரின்னுதான் படுது. ஆனா, இப்போ சில தொகுதிகளில் எம்.ல்.ஏ-க்களின் பரிந்துரைகளின் பெயரில் (சில தொகுதிகளிலாவது) மேம்பாடுத் திட்டங்கள் செயல்படுத்த படுகின்றது.
பாரிய அளவில் இதில் உள்ள சிக்கல் என்ன வென்றால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (காசி சொன்ன பட்டியலிலிருந்து) எவ்வளவு தூரம் மக்களின் இருக்கும் இடம் சார்ந்த பிரச்சினைகளை தெரிந்து வைத்திருப்பர் என்ற கேள்வி. இதுக்கெல்லாம் பரிட்சை வைக்க முடியாது.:)
ஆனாலும் உண்மையான நிலவரம் அந்த பகுதி சார்ந்த ரெப்ரசென்டெடிவ்-தான் கொடுக்க முடியும் என்பது எனது எண்ணம். இதையும் இத்தகைய சீர்திருத்தத்தில் எப்படி பொறுத்துவது என்ற வழிமுறைகளை ஆராய வேண்டும்.

பாலாஜி, நீங்கள் சொல்வது ஏற்புடையதுதான். அந்தந்த பகுதி மக்களின் பிரதிநிதிகளின் முக்கியத்துவமே இந்த தேர்தல் முறைக்கு அடித்தளம். ஆனால், காசியின் என்வரிசைப்படியான வேட்பாளர் பட்டியல் எந்த அளவிற்கு சாத்தியமென்று தெரியவில்லை.
உதாரணத்திற்கு, தி.மு.க போல ஒரு கட்சியை எடுத்துக்கொண்டால், முதல் 20 வேட்பாளர்கள் நமக்கு தெரிந்த ஆனால் ஒன்றுக்கும் பிரயோசமில்லாத வேட்பாளர்களாக தான் இருப்பார்கள் (உதா. அன்பழகன், ஆற்காடு வீராசாமி etc) இவர்களால், இவர்களின் கட்சிக்கும், கூட்டம் கூட்டுவதற்கும் பயன்படுவார்களேயன்றி, வேறு பயன்கள் இல்லை. ஆனால், பிரதிநிதித்துவ அடிப்படையில், தி.மு.கவிற்கு 30 இடங்கள் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம், மீண்டும் இந்த பழைய பெருச்சாளிகளே வர வாய்ப்புள்ளது.
என்னளவில், உள்ளூரானாலும், மாநிலமயமானாலும், நான் விரும்பும் ஒருவரை தேர்ந்தெடுக்கக் கூடிய வலிமை என் ஓட்டில் இருக்கிறதா என்பதே கேள்வி. சென்ற தேர்தலில் நடந்த விவாதத்தில், ஞானியோ அல்லது வேறெவரோ ஒரு கருத்தினை சொல்லியிருப்பார், அதாவது வாக்கு சீட்டில் உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் விரும்பும் வேட்பாளர் இல்லாவிடில், அதற்கென ஒரு தனியான இடம் கொடுத்து, உங்கள் வேட்பாளரின் பெயரை பரிந்துரை செய்யலாம். உள்ளூர்களில் அதிகமாக மக்களுக்காக உழைக்கக்கூடிய எவ்வள்வோ நல்ல உள்ளங்கள் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகளுள்ளது என்பது என் எண்ணம்.

இதனைத் தவிர்த்து, இதன் மூலம் வேட்பாளரின் தொகுதி குறித்த அக்கரையையும், மக்களின் வாக்கின் மீதுள்ள பயத்தையும் அதிகரிக்கலாம். ஆகவே, வேட்பாளர்களோ அல்லது தேர்தலில் நிற்க ஆசைப்படுபவர்களோ, மக்களோடு, மக்களாக உழைக்காமல், மக்களுக்கு ஏதும் செய்யாமல் ஜெயிக்க இயலாது.
ஊடகங்கள் பெருகிவிட்ட காலத்தில், தவறாக வாக்கினை எண்ணி விட்டார்கள் என்பதும், நிறைய ஒட்டுகளை எண்ணவில்லை என்று சொல்லாமல் இருப்பதிற்கும், வாக்கு எண்ணிக்கையை 'லைவ்'வாக அரசு தொலைக்காட்சிகளில் காண்பித்து விடலாம். இதன் மூலம் ட்ரான்ஸ்பெரன்சி என்பது எல்லா விசயங்களிலும் வர வழி வகுக்கலாம்.

நரேய்ன்..
//நீங்கள் சொல்லும்படி வைத்துக்கொண்டாலும், எம்.பிகளின் தேவையே சற்றே ஆட்டம் கண்டுவிடும். அப்படியிருக்கையில், இந்த குடும்பத்தினர்கள் எம்.பிகளாக மாறுவதன் பயன் என்னவாக இருக்க முடியும் ? //
என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எம்.பிகளுக்கு இப்போது இருக்கிற வாய்ப்புகளும், வசதிகளும் இல்லை எனில் முதலில் தி மு க மற்றும் லல்லு குடும்பங்கள் வேறு வரும்படி இருக்கிற தொழிலுக்கு போய்விடும்.
கட்சி நடத்துவதும் ஒரு வியாபரம் நடத்துவதும் ஒன்றுதான். முதல், மூலதனம் மற்றும் அல்லாமல் அடியாட்களும் கட்சிக்கு தேவை.
In USA for the president election, they use Electrol method.. Like that is there any chance to use for MP's within the state. I'm not very familiar to Politics. So, If I'm giving wrong lead.. I appologize for the same
//நீங்கள் சொல்லும்படி வைத்துக்கொண்டாலும், எம்.பிகளின் தேவையே சற்றே ஆட்டம் கண்டுவிடும். அப்படியிருக்கையில், இந்த குடும்பத்தினர்கள் எம்.பிகளாக மாறுவதன் பயன் என்னவாக இருக்க முடியும் ? //
என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எம்.பிகளுக்கு இப்போது இருக்கிற வாய்ப்புகளும், வசதிகளும் இல்லை எனில் முதலில் தி மு க மற்றும் லல்லு குடும்பங்கள் வேறு வரும்படி இருக்கிற தொழிலுக்கு போய்விடும்.
கட்சி நடத்துவதும் ஒரு வியாபரம் நடத்துவதும் ஒன்றுதான். முதல், மூலதனம் மற்றும் அல்லாமல் அடியாட்களும் கட்சிக்கு தேவை.
In USA for the president election, they use Electrol method.. Like that is there any chance to use for MP's within the state. I'm not very familiar to Politics. So, If I'm giving wrong lead.. I appologize for the same
//மக்கள் கட்சிக்கு என்று ஓட்டுப் போடும் போது, கட்சித் தலைவர்கள் யாரை வேண்டுமானாலும் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் என்றால், தி மு க தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், லல்லு தனது மனைவியின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மட்டுமே அதனை பயன் படுத்திக் கொள்ளலாம்.//
ஆக, கங்காவுக்கு கருணாநிதி, லாலு குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுவிடுவார்கள் என்பது தான் விகிதாச்சார முறையில் இருக்கும் பெரும்பிரச்சினை. அவர்களைத் தடுத்து நேரு, சிந்தியா, மூப்பனார் போன்ற குடும்பங்களின் உறுப்பினர்கள் மட்டும் நியமிக்கப்படும் சாத்தியமிருந்தால் விகிதாச்சார முறையை ஏற்றுக் கொள்ளலாம்.
இந்தியச் சூழலில் விகிதாச்சார முறையில் அதிகாரக் குவிப்பு இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது. அதாவது கட்சிகளின் தலைமையிடத்தில். பதவிக்கு வர ஆசைப்படுபவர்கள் குறைந்தபட்சம் தேர்தலின் போதாவது பொதுமக்களிடம் கொஞ்சிக்குழைய வேண்டிய தேவை கூட இருக்காது. வி.முறையில் தேர்தலின்போதோ, தேர்தலுக்குப் பிறகோ மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. தலைமையை பணம் கொடுத்தோ, பல்லிளித்தோ சரிகட்டினால் போதும். இது சட்டம் செய்பவர்களை மக்களிடமிருந்து மேலும் அந்நியப்படுத்தவே உதவும். இப்போதுள்ள முறையிலாவது ஒரு தொகுதியில் இல்லாவிட்டாலும் இன்னொரு தொகுதியிலாவது மக்கள் செல்வாக்கு பெற்றவர்களை வேட்பாளர்களாக நியமிக்கவேண்டிய கட்டாயம் கட்சிகளுக்கு ஏற்படுகிறது. இது அடிமட்டத்தொண்டர்கள் படிப்படியாக உழைத்து, மக்கள் செல்வாக்கு பெறவும் ஊக்குவிக்கும். இதன் விளைவே சில நேரங்களில் தலைமையால் நியமிக்கப்படாதவர்கள் சுயேச்சைகளாக வெற்றிபெறுவதும். வி.முறையில் இந்த நிர்பந்தம் அறவே இல்லாமல் போய்விடும். மேலவை உறுப்பினர் நியமனங்கள் இப்படித்தான் நடக்கின்றன. அவர்களின் செயல்பாடுகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களை விட எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன? அங்கு, ஹேமமாலினிகளுக்கும், சோ. ராமசாமிகளுக்கும், எஸ்.எஸ். சந்திரன்களுக்கும் தான் முன்னுரிமை. இவர்கள் மக்களுக்கு பதில் சொல்லவேண்டியதேயில்லை.
இப்போதுள்ள "first past the post" முறையின் ஒரே குறைபாடு சிறுபான்மை வாக்கு பெற்றவர்(கள்), அது பெரும்பான்மையைவிட ஒரே வாக்கு குறைவாயிருந்தாலும், முற்றிலுமாக ஒதுக்கப்படுவதுதான். இதைத் தவிர்க்க ஒரு தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை (இருவர் அல்லது மூவர்; அல்லது குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றவர்கள்) தேர்ந்தெடுத்து அனுப்பலாம். முதலாவதாக வெற்றிபெற்றவர்கள் பெரும்பான்மையாக உள்ள கட்சி ஆட்சி அமைக்கலாம். எல்லா கட்சிகளிலும், முதலாவதாக வெற்றிபெற்றவர்களுக்கு சபையில் அதிக உரிமைகள் வழங்கலாம். இரண்டாவது, மூன்றாவதாக வந்தவர்களுக்கு உரிமைகளும், சலுகைகளும் சற்று குறைத்துத் தரலாம் (விவாதங்களில் பங்கு பெறலாம், ஆனால் முடிவில் ஓட்டு போடமுடியாது; குறைந்த சம்பளம் போன்று). இதனால் ஒரே தொகுதியில் ஒருவர் இல்லாவிட்டாலும் இன்னொருவர் ஏதாவது உருப்படியாக செய்யவும் வாய்ப்புண்டு. முதல் உறுப்பினர் அகால மரணமடைய நேரிட்டால் இடைத்தேர்தல் இல்லாமல் அடுத்தவர் முதலிடத்திற்கு செல்லலாம்.
முடிந்தால் நாளை தொடர்கிறேன்..
சுந்தரமூர்த்தி
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]