Mar 16, 2005

கெட்ட வார்த்தைகளின் அரசியல்

எச்சரிக்கை சங்கு: இந்த பதிவு முழுவதும் மூன்றாம் தர கெட்டவார்த்தைகள் மலிந்திருக்கும். நாகரீகமான சமூக மனிதராக உங்களை நீங்கள் எண்ணுபவராயின் இப்போதே இந்த பதிவினை மூடிவிடலாம். மேம்போக்காக சமூகத்தின் மூன்றாம் தர கெட்ட வார்த்தைகளை பேசுபவர்களை ஒதுக்குபவராயின் நீங்களும் ஒதுங்கிவிடலாம். இந்த பதிவு வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுத பட்டது அல்ல.

முக்கியமாய் இந்த பதிவினை படிக்கும் பெண்களுக்கு எந்நிலையிலும் இந்த பதிவு உங்களை சங்கடபடுத்துமேயானால், கலவரபடுத்துமேயானால், அப்படியே வெளியேறி விடுங்கள். இந்த வார்த்தைகள் கக்கும் விஷங்களின் பொசுங்கல்களை மிக அருகிலிருந்து பார்த்தவன் என்பதாலேயே இந்த கூடுதல் சங்கு. இனி காதைப் பொத்திக்கொண்டு படிக்க முயற்சியுங்கள்.

எல்லா மொழிகளிலும் கெட்ட வார்த்தைகளுண்டு. மிக சாதாரண வார்த்தைகளிலிருந்து, மிக மோசமான வார்த்தைகள் வரை எல்லா மொழிகளிலும் உண்டு. நான் அறிந்த தமிழ், ஆங்கிலம் மற்றும், கெட்டவார்த்தைகளும் கொஞ்சமே சம்பாஷனைகளுக்கு உதவும் வார்த்தைகளும் அறிந்த ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் இருக்கிற, பேசப்படுகிற கெட்டவார்த்தைகள் அனைத்தையும் அறிந்து சற்றே யோசித்து கொண்டிருக்கையில் உறுத்திய விசயங்கள் தான் இந்த பதிவு.

புதிதாக தமிழ்நாட்டில் காலடி எடுத்துவைத்தால், எல்லோரிடமும் பரவலாய் கேட்கக்கூடிய "ங்கோத்தா" வில் தொடங்கி மயிரு, டாபர், டோமர் என பேட்டைக்கு பேட்டை நீளும் கெட்ட வார்த்தைகளை கொண்டு சர்வசாதாரணமாய் ஒரு இழிசொல் அகராதி போடலாம்.

தமிழில், அதுவும் சென்னையில் மிக சாதாரணமாக கேட்க கூடிய முதல் 10 கெட்டவார்த்தைகளில் கீழ்க்கண்டவை மேலிடங்களில் வரக்கூடிய சாத்தியக்கூறுகளுண்டு. "தேவடியா பையா" , "ஒங்காமாளை ஓக்க" "வக்காலவோழி" "தாயோளி" "கூதி அதுப்பு" "புண்டை மவனே" என நீளும். காது கொள்ளாத தமிழ் வார்த்தைகளில் தொடங்கி, பெஹன்சூத், லவ் டே கா பால், மாதாசோத் என திட்டும் செளகார்பேட்டை சேடுகளிடமும், லஞ்சாகொடுக்கு என வைது கொண்டே ரிக்சாவில் ஏறும் செட்டியார்களும், ஈசிஆரில், வெளிநாட்டு கார்களில் வந்து, கூட்டமாய் கூடிக்கொண்டு fuck you bitch, bastard, motherfucker என வெள்ளைக்காரனின் பேரன்களாய் அவதாரமெடுக்கும் மென்பொருள் / உயர்தட்டு சமூகத்தினிரின் இழிசொற்களிடம் வெளிப்படும் கெட்டவார்த்தைகளின் பட்டியல், இந்திய அரசாங்க விசாரணை கமிஷன்களின் வாழ்வு காலங்களை விட நீளமானது.

ஏன் கெட்டவார்த்தைகளையாய் இவைகள் அறியப்படுகிறது ? ஏன் இவ்வார்த்தைகளை கொண்டு ஒரு தனிநபரை இகழ, கேவலபடுத்த வேண்டும்? சற்றே கூர்ந்து கவனித்தால் இதன்பின் சர்வசாதாரணமாய் இருக்கும் அரசியல் புரியும். ஒரு தனிமனிதனை கேவலபடுத்தவோ, இழிவு படுத்தவோ, இன்னொரு நபர் கையில் (வாயில்!) எடுக்கும் ஆயுதம் கெட்டவார்த்தைகள். தேவடியா பையா என ஒரு தனி நபரை திட்டும்போது முன்னிறுத்தப்படுவது திட்டப்படும் நபர் அல்ல, அவரின் தாய். பெஹன்சூத் என சொல்லும்போது முன்னிறுத்தப்படுவது, அந்நபரின் சகோதரி. ஆக, ஒரு தனிநபரை இழிவுபடுத்துவதின் மூலமாக பெண்களை இழிவு படுத்துகிறோம்.

ஆண் குடும்பதலைவன். அப்படிதான் எல்லா ரேஷன் கார்டுகளிலும் இருக்கிறது. ஒரு குடும்பத்தினை அவமதிக்க நாம் யாரும் அந்த குடும்பத்தின் ஆணினை கேவலபடுத்துவதில்லை, மாறாக, அந்த குடும்பத்தின் பெண்ணை தான் முன்னிருத்துகிறோம். "தேவடியா பையா" என இகழ படும் போது அவ்வார்த்தையின் வன்முறை அடங்கிய வீரியத்தினை சுமப்பவள் யார் ? எல்லா மொழிகளிலும், எல்லா வாய்சண்டைகளிலும், குறிவைக்கப்படுவது பெண். "தேவடியா பையா" என வையும் வாய்களில் டிராகன்கள் குடியேறிவிட்டன என்று தோன்றுகிறது. யாரை தேவடியா என்று குறிப்பிடுவீர்கள் ? தேவர் அடியாள் மகள் என முன்பொரு காலத்தில் பேசப்பட்ட ஒரு வார்த்தை, இன்று அதனளவில் மரியாதை தேய்ந்து, விபசாரம் (மன்னிக்க, என்னளவில் நான் இதனை பாலியல் தொழில் என்று கூறினாலும், சமூக அடையாளங்கள் இன்னமும் முற்றிலும் மாறிவிடவில்லை) செய்யும் பெண் என்ற அளவில், ஒரு பெண்ணின் பரப்பை குறுக்கி, உடலே பெண்ணாகவும், பெண்ணே உடலாகவும் பார்க்கும் பிரபுநிதித்துவத்தை இன்னமும் கைவிடாமல்தான் இருக்கிறோம். என்றைக்காவது நாம் திட்டும் நபரின் தந்தையையோ, சகோதரனையோ அவமதிப்பதுபோல் பேசியிருக்கிறோமா. கண்டிப்பாக இல்லை. எனக்கு தெரிந்த மொழிகளில் ஆணினை மையமாக வைத்து பின்னப்பட்ட வார்த்தைகள் மிகக்குறைவு. அப்படியே ஆணின் அந்தரங்கத்தை மிக மோசமாக தாக்க வேண்டுமானால், பிரயோகிக்கப்படும் வார்த்தை "போடா பொட்டை". ஆணின் இந்திரியத்தையும், அவனின் ஆண்மையையும் கேள்விக்குள்ளாக்கும் இந்த வார்த்தை, எல்லா ஆண்களையும் கலவரபடுத்தும்.இதை தவிர்த்து ஆணினை மையமாக கொண்ட கெட்டவார்த்தைகள் மிகக்குறைவு. இதிலும் கூட, பெண்ணின் இன்னொரு உருவம்தான் முன்வைக்கப்படுகிறது.

ஒரு தனிநபருக்கும், நமக்கும் இருக்கிற சண்டையின்/மனஸ்தாபத்தின்/ஆத்திரத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி, அவரின் குடும்பபெண்களை இழிவுபடுத்துகிறோம். பெண்களை இழிவுபடுத்துதலின் மூலமாக ஒரு ஆணினை இழிவு படுத்துவதாக எண்ணி சந்தோஷமடைகிறோம். எல்லா வகையிலும் பார்த்தால், இது ஒரு ஆணாதிக்க மனபான்மை. பெண்களின் கற்பினை அல்லது பெண்களை உடலாக பாவித்து, அவ்வுடலின் மீதான நம் கட்டுபாடுகளை, கட்டமைப்புகளை நிறுவுவதின் மூலம், ஒரு ஆணாதிக்க மனப்பான்மையை, பெண்களை உடல்களாக பாவிக்கும் நம் அதிகாரத்தை நிலைநிறுத்த முயலுகிறோம். இது மிகப்பெரிய அரசியல்.

வடசென்னையில் 25 வருடங்கள் வாழ்ந்து இருந்ததால், எல்லாவிதமான கெட்டவார்த்தைகளையும், வீதி சண்டைகளையும், "பஜாரி"தனங்கள் என்றழைக்கபடும், சேரிமக்களின், குடிசைவாழ் மக்களின் தினசரி கூச்சல்களையும், கூப்பாடுகளையும் கேட்டிருக்கிறேன். நான் கேட்டவார்த்தைகளில் மிக மோசமாக பாலியல் உறுப்புகள் சார்ந்து சித்தரிக்கபடும், சந்தி சிரிக்கவைக்கும் வார்த்தைகள் ஏராளம். இவையனைத்துமே பெரும்பாலும் பெண்களையும், பெண்களின் பாலியல் சார்ந்த உறவுகளின் அமைவுகளையும் மையமாக வைத்தே அமைந்திருக்கிறது. சற்றே யோசித்தோமானால், ஒவ்வொரு முறையும் அறிந்தோ/அறியாமலோ மிகமோசமாய் நாம் அடுத்தவரை இகழும்போது நாம் நம்மையும் அறியாமல் முன்னிறுத்துவது பெண்களின் மீதான நம் ஆளுமை.

பெண்களை மையப்படுத்தி இழிவுபடுத்துவதின் மூலமாகவும், கற்பு என்கிற ஒற்றை தன்மை சொல்லாடலை கையிலெடுத்து அதனையே பெண்/ஆண்களின் உறவுகளின் மீதான அதிகாரங்களுக்கான கேள்விகளாகவும், அதிகார வரம்புமீறல்களை நிலைநிறுத்தலின் மூலமாகவும் பெண்கள் மீதான நம் உரிமைகளையும், உரிமையாக நினைத்து கொண்டிருப்பவைகளையும் வன்முறையாய் பிரயோகித்து கொண்டிருக்கிறோம். இன்னமும், தமிழ் செய்தித்தாள்களில் கற்பழிப்பு என்கிற வார்த்தை வழக்கொழியவில்லை (குறிப்பாக தினந்தந்தியில்). பார்க்க: தான்யாவின் "கற்பை அழித்தல்" [இன்றைக்கு படித்த கூடுதல் தகவல், மாலனின் கருப்பை அரசியல் ] இதை தான் அரசியலாகவும், கண்ணுக்கு தெரியாமல் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையாக பார்க்கிறேன். சில சமயங்களில் சில வார்த்தைகள் பெண்களை பிரத்தேயகமாக திட்டுவதற்கே கூட (அவுசாரி முண்டை, கூதி அதுப்பெடுத்து அலையறா) உபயோகிக்கப்படுகிறது. இங்கும், பாலியல் சார்ந்த விசயங்கள் தான் கையிலெடுத்துக்கொள்ள படுகின்றன. ஆக ஒரு மனிதனை கேவலபடுத்தும் காட்டுமிராண்டிதனத்திலேயே கூட பெண்களை அழுத்தும் அரசியல் தொடங்கிவிட்டது.

அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ந்துவிட்ட காலங்களிலும், இன்னமும், வார்த்தை சவுக்குகளினால், தினமும், நம் எல்லைமீறிய அதிகாரத்தையும், பெண்களின் மதிப்பு, மரியாதை, அந்தரங்கம் குறித்த நம் குறைசிந்தனையையும் முன்னிறுத்தி வன்முறையை சன்னமாக ஆனால் வீரியமாக செலுத்தி ஆண்டு கொண்டு இருக்கிறோம்.

கெட்டவார்த்தைகள் பேசாத மனிதர்கள் குறைவு. இழிச்சொற்கள் பேசாமலேயே வாழ்ந்துவிடமுடியும் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனாலும், அடுத்தமுறை ஒவர்டேக் செய்து போகும் காரினுள் அமர்ந்திருக்கும் முகம் தெரியாத அவன்/அவளை you fuckin bitch என்று திட்டும்போது நீங்கள் யாரை அவமதிக்கிறீர்கள் என்று சிக்னலுக்கு காத்திருக்கும்போது யோசிக்கவும் செய்யலாம்.

குண்டூசி: 2000 ஆண்டு புத்தக கண்காட்சி. புத்தகங்களை புரட்டி கொண்டிருக்கிறேன். ஒரு புத்தகத்தில் இடம்பெற்றிருந்த வரிகளை பார்த்தவுடன் கோவம் தலைக்கேறியது. கன்னாபின்னாவென்று எழுத்தாளரை திட்டிக்கொண்டே நண்பருடன் வெளியேறிவிட்டேன். என் மனதில் அந்த எழுத்தாளரை பற்றி மிகக்கேவலமான பிம்பமே தங்கியிருந்தது. 3-4 வருடங்கள் கழித்து, சாருவின் நட்பு இறுகியவுடன், மறுவாசிப்பு செய்த போது, அந்த எழுத்தாளர் உயிரோடு இல்லை. இந்த வார ஆ.விகடனில் எஸ்.ராவின் கதாவிலாசத்தில் அவரைப் பற்றிய குறிப்பு வந்திருந்தது. வாழ்வின் அபத்தங்களை, மத்திய தர வர்க்க மனநிலையை, இயலாமையை அற்புதமாக வடித்த கலைஞன். மிகத்தீவிரமான படைப்புகளை தமிழுக்கு தந்து வறுமையில் செத்துபோன அந்த எழுத்தாளன்: திரு. கோபி கிருஷ்ணன் நான் திட்டி தீர்த்த அந்த புத்தகம்: டேபிள் டென்னிஸ்

Comments:
துணிச்சலாய் ஒரு பதிவு/அலசல். யாரும் இந்த கெட்டவார்த்தைகளில் இறங்கி ஆராய்ந்திருக்கமாட்டார்கள். பாராட்டுக்கள் நாராயணன்.

ஆனால் ஏன் அடிக்கடி நீங்கள் மூச்சுக்கு 300 தடவை சாருவின் நண்பன் சாருவின் நண்பன் என்று சொல்கிறீர்கள்?
 
மற்றவை நேரம் கிடைக்கும் போது விரிவாக...
 
இதில் இன்னொரு அரசியலும் இருக்கிறது நரைன் காலங்காலமாக ஒன்றை(அது மனித உறுப்பாகக் கூட இருக்கலாம்)குறிப்பிடப்பப் பயன்படுத்திய சொல் தூசணமாகவும் அதைக் குறிக்கும் இன்னொரு சொல் நல்ல சொல்லாகவும் கருத்தப்படுவதின் அரசியல் புரியவில்லை.இதையே உயிர்மையில் மங்கலம் குழூ உக்குறி என்னும் கட்டுரையில் நாஞ்சில்நாடன் எழுதியிருந்தார்.
உதாரணத்துக்கு நீங்கள் குறிப்பிட்ட விபச்சாரம் என்பதை ஏன் பாலியல் தொழில் என அழைக்கவேண்டும் பாலியல் தொழில் தவறில்லாத போது விபச்சாரம் எப்படித் தவறாகும்?
 
அடுத்தவர் நம்மை திட்டும் போது நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது எப்பது பற்றி "மனசே ரிலாக்ஸ் பிளிஸில்" ஒரு நல்ல பகுதி உண்டு. படித்திராவிட்டால் படிக்கவும், படித்திருந்தால் அடுத்தவர் நம்மை திட்டும்போது நினைவில் கொள்ள வேண்டும்.
 
இந்தக் கெட்ட (?) வார்த்தைகளை கவனித்தால் தெரியவருவது இரண்டு விசயங்கள் தான்.

1. உடம்பின் மேல் இருக்கும் கடுமையான கண்டனம்/வெறுப்பு/பயம். உடம்பைக்கண்டு சதா ஒரு பயமும் வெறுப்பும் எல்லா நாட்டு/மத/இன மக்களிடமும் இருக்கிறது. இதனடிப்படை மதம். உடலைக் கண்டிக்காத மதமெதுவும் கிடையாது. இந்துமதம் ஒப்பீட்டளவில் உடம்பை குறைவாகக் கண்டிக்கிறது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் நிறுவனமயப்படுத்தும் போக்கில் இப்போது அதுவும் மற்ற மதங்களுக்கு அருகிலேயே இருக்கிறது. இப்படி உடம்பைக் கீழ்மைப்படுத்தி உண்டாக்கப்பட்ட குற்ற உணர்ச்சியின் பேரிலேயெ மதங்கள் கட்டப்பட்டிருகின்றன. எனவே ஒவ்வொருமுறை திட்டும்போது நாம் மதவழிப்பட்ட ஒரு புனிதக் காரியத்தைச் செய்கிறோம் என்றே அர்த்தம்.

2. பெண்களை ஒரு சொத்தாகக் கருதும் தன்மை. ஒவ்வொரு தாக்குதலிலும் எதிரியின் சொத்துக்களை நாசப்படுத்துதலும், எரித்தலும், சிதைத்தலும் ஆதிகாலந்தொட்டே வழமையானது. இன்னும் அது தொடர்கிறது. பெண்களை (தாய், மனைவி, சகோதரி) ஆண்களின் சொத்தாகக் கருதுவதால் சொத்தை தாகுதல், நாசப்படுத்ததல் என்ற அளவிலேயே ஒருவரை அவரது பெண்களைக் குறித்து திட்டுதல் நடக்கிறது. ஒவ்வொருமுறை அவ்வாறு திட்டும்போதும் இனப்படுகொலை, மதக் கலவரங்களில் வல்லுறவு கொள்பவர்களை விட அதிக வித்தியாசமாய் நாமொன்றும் செய்யவில்லை.

டேபிள் டென்னீஸ் ஒரு அருமையான புத்தகம். அது ஒரு உள்ளார்ந்த அமைதியும், கவிதைத்தன்மையும் கொண்டது. அதுவே ஆசிரியரின் நேர்மையைக் காட்டவல்லது. (தன் காதலிக்காக தன் காதுகளை அறுத்துகொடுத்தவனை நான் பித்தனென்று சொல்லமாட்டேன்..)

ஈழநாதன், விபச்சாரம் என்பது கண்டனத்துக்குள்ளான, கற்போடு பிணைக்கபட்டு இழிவு படுத்தப்பட்ட, ஆயிரக்கணக்கான ஆண்டு மதப்பிண்னனியில் இறுகிப்போன குற்றச்செயல் என்கிற வசை. அந்தச் சொல்லை பாவிப்பதன் மூலம், கற்பு, சொத்து, உடல்மேலான கண்டனம் இவைகள் மீளுறுதி செய்யப்படுகின்றன. இதனால் தான் விபச்சாரி இருக்கிறாள்; விபச்சாரன் இல்லை. சட்டரீதியிலான பாதுகாப்பு இல்லை. பாலியல் தொழில் இந்தக்கருத்தாக்கங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, மற்ற தொழில்கள் போல ஒன்று என்ற கருத்தாக்கத்தைக் கொண்டிருக்கிறது..
 
விடுபட்டது: நல்ல பதிவு நாராயணன், நன்றி!
 
ஒரு மத்திமருக்கு துணிச்சலான கட்டுரை! எனக்குத்தெரிந்த தமிழ் பேசக்கூடிய ஒரு பிரெஞ்சுப் பெண் தமிழின் கெட்ட வார்த்தைகளைச் சொல்லுமாறு சொன்னபோது நீங்கள் கூறும் காரணத்திற்காகவே சொல்லமுடியாமல் கூச்சப்பட்டேன். பெண்,பொன்,மண் என்பது சொத்துடமைச் சமுதாயத்தின் அடிக்கோடு இல்லையா? சுக வாழ்வின் ஜீவிதம் அங்குள்ளது.

மெஞ்ஞானிகள் எனப்படும் சித்தர்களும் பெண்ணை, பெண்ணின் உறுப்பைத் திட்டியிருக்கிறார்கள். உண்மையில் ஆண்களின் பிரச்சனைக்கு பெண்களைத் திட்டித்தீர்த்து இருக்கிறார்கள்.

கிராமத்தில் வளர்ந்த எனக்கு கொச்சைத்தமிழ் அந்நியமல்ல. ஆணாகட்டும், பெண்ணாகட்டும் பாலியல் அர்த்தமில்லாத சொல்லாடல் என்பதே கிராமப் பேச்சில் காண்பது அரிது. கக்கூஸ் கழுவும், தெலுங்கு பேசும் குரத்திகள் வன்மமான சண்டையில் தங்களது பால் உறுப்புகளைக் காட்டி மற்றவளை இழிவு படுத்துவதைக் கண்டுள்ளேன். அவுசாரி என்று சொல்வது ஒரு பெண் மற்றவளை இழிவு படுத்தும் சொல்.

ஆண் இழிவு படுத்தப்படும் ஒரு பிரயோகம் அலிகளிடம் உண்டு. ஒரு அலியை நீங்கள் கோபப்பட வைக்க வேண்டுமெனில் "நீ ஒரு ஆண்" என்று சொல்ல வேண்டும் :-))

Desmond Morris எழுதிய Man Watching எனும் புத்தகத்தில் ஆண்/பெண் இவர்களின் கண் பார்வை போகும் பிரதேசங்களை ஆய்வு பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். எங்கு நம் எல்லோரின் பார்வை போகும் என்பது உங்கள் யூகத்திற்கே. உயிரியல் ரீதியாகவும் நாம் பாலுறுப்புகளிடம் ஈர்க்கப்படுகிறோம். எனவே தெரிந்த ஒன்றை வைத்து வைவது எளிது. கிராமத்தில் ஆண் குறி வைத்த வசவும் உண்டு. இப்போது சினிமாவில் மிகவும் பிரபலமாகிவிட்ட 'வெண்ணெய்' என்பதும் 'இன்னொன்றும்' ஆண் குறி வசவுகளே!

இந்தப் பதிவிற்கு வரும் பின்னூட்டங்களை கணக்கிடுங்கள். அதுவும் ஒரு உண்மையைச் சொல்லும்.
 
நரேன்...

இந்த பதிவின் இறுதியில் 'குண்டூசி' என்று extra fitting கொடுத்திருப்பதன் விவரம் புரியவில்லை. ஒருவேளை கோபி கிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்' மறுவாசிப்பின்போது தோன்றிய சிந்தனைதான் இந்தப் பதிவுக்கு காரணமா? அல்லது அ.வி. பார்த்து, உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கோபி கிருஷ்ணன் நினைவுகள் எழும்பி இந்த சுனாமியை கிளப்பியதா? - சந்திரன்
 
பின்னூட்டங்களுக்கு நன்றி. மீண்டும் வந்து பதிகிறேன்.

//மெஞ்ஞானிகள் எனப்படும் சித்தர்களும் பெண்ணை, பெண்ணின் உறுப்பைத் திட்டியிருக்கிறார்கள். உண்மையில் ஆண்களின் பிரச்சனைக்கு பெண்களைத் திட்டித்தீர்த்து இருக்கிறார்கள்.//

பட்டினத்தாரை தானே சொல்லுகிறீர்கள்?
 
சந்திரன்,

குண்டூசிகளை தொடர்ச்சியாக படித்து வாருங்கள். சம்பந்தமில்லாமல் போல தோன்றினாலும், போடப்பட்ட பதிவோடு கொஞ்சமாய் சம்பந்தமிருக்கும். ஒட்டுமொத்த குண்டூசிகளும் நான் நட்சத்திர பட்டத்தை துறக்கும் ஒருநன்நாளில் மறுவாசிப்பு செய்யப்படும். கொஞ்சமே நான்கு நாட்கள் காத்திருங்கள்.
 
நல்ல பதிவு!!!

நாரயண்!!!...சாலை வண்டி ஒட்டிச்செல்லும்போது பக்கத்தில் வருவர் தவறாக வண்டி ஓட்டினாலோ,அல்லது நம்மை இடிக்கிறமாதிரி வண்டி ஓட்டுபவர்களை நாம் கெட்டவார்த்தைகளீல் வதிட்டுகிறோமே அப்போது நம்க்கு கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு எதேனும் உண்டா...???
2000 புத்தக கண்காட்சியில் நாம் சாருவைக்கூட மோசமாக திட்டினோம்..ஆனா இப்ப..?????
 
முதலில் குண்டூசி. பின் என்று ஆங்கிலத்தில் கூறுவதை நீங்கள் "பின்" ஐ குண்டூசி என்றுத் தமிழில் வேடிக்கையாக மொழி பெயர்த்ததாகத்தான் நான் புரிந்துக் கொண்டேன். அதாவது பின்னூட்டம் > பின் > குண்டூசி).
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
உங்களுக்கு நிம்மதி கிடைக்கிறது என்பதற்காக ஒரு குடும்பத்தினை இழிவு படுத்த வேண்டுமா? நான் சாருவினை திட்டியது உண்மை.அது வெறும் பயலாய் சுற்றியபோது. விசயங்கள் தெரிந்தவுடன் நான் எந்த எழுத்தாளனையும் திட்டியதில்லை. நிறைய பேரின் எழுத்துகளுடன் எனக்கு கருத்து வேறுபாடுகளுண்டு, ஆனால் மோதல்கள் கிடையாது. இத்தனைக்கும், சாருவுக்கு பிடிக்காத அல்லது அபிப்ராய பேதங்க்ளுடைய பிரேம்-ரமேஷ், எஸ்.ராமகிருஷ்ணன்,ஞாநி ஆகியோரும் எனக்கு பிடித்த எழுத்தாளர்கள்
 
இந்த விஷயத்தில் ஒரு நல்ல ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரையை (அச்சுப் பிரதியாக) சில வருடங்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. எல்லா மொழிகளிலுமே இது சமமாகவே உள்ளது.

ஆனால் பெண்கள் பெண்கள் மீது பிரயோகிக்கும் வசைகளையும் சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
 
கெட்ட பதிவு:)

'பறப்பயல...' என்று தலித்தை இழுப்பது அவமானத்தின் மேல் இன்னொரு அடுக்கு! தலித்துகளின் மீதான வன்முறைகளும் அப்பெண்களைக் குறிவைத்தே இருக்கும். உங்கள் பதிவைப் படிக்கும்போது இதைக்குறித்து ராஜ்கவுதமன் எழுதிய கட்டுரையொன்று நினைவுக்கு வருகிறது.

இன்னொரு சேதி: கெட்ட! வார்த்தைகள் நமக்கு ரெண்டு தரம் வருகின்றன. ஒன்று பேசக் கற்றுக் கொள்ளும்போது. இதைச் சுமார் 3-5 வயசுக் குழந்தைகளிடம் பார்க்கலாம். அவர்களுக்கு என்ன அர்த்தமென்று தெரியாது. சொல்வார்கள், சாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போவார்கள். அய்யோ என்று பெற்றோர் பாய்ந்து பிடுங்கும்போது ஆகா என்னமோ இருக்கு அந்த வார்த்தையில என்று பதிஞ்சு போகும். இன்னொரு முறை பதின்ம வயதில். ஆர்வம் காரணமாக. ஆனால் இந்த வார்த்தை வன்முறை பதின்ம ஆம்பளப் பையங்க கிட்டதான் அதிகமாயிருக்குன்னு எனக்குத் தோனுது. இந்த ரெண்டு நிலையையும் தாண்டி வரும் வார்த்தைகளை "பழக்கம், சும்மானாச்சுக்கும், விளையாட்டுக்காய்" என்று எந்தப் புட்டிக்குள் போட்டாலும் நீங்க சொன்ன அரசியல்தான் அடிக்காரணம்.
 
இனிமேல் திட்டும் பொழுது "ரோஸாவசந்த்" என்று திட்டுங்கள்.
ஒரு பெரிய மூட்டை அளவு கெட்டவார்த்தைகள் இதில் அடங்கும்
 
உண்மை. கிராமப்புறங்களில் பெண்கள் உபயோகிக்கும் கெட்டவார்த்தைகளும்கூட பெரும்பாலும் பெண்களைக்குறித்தேதான் இருக்கும். இன்னொரு சின்ன வித்தியாசமாக உணர்ந்தது - பெரும்பாலும் தென்மாவட்டங்களில் கெட்டவார்த்தைகள் ஏகத்துக்கு இருந்தாலும், 'மகனே' விகுதி வார்த்தையுடன் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் கைகலப்பு அடிதடியில்தான் முடியும். ஆனால், சென்னையில் பல வருடங்கள் வாழ்ந்திருந்த அனுபவத்தில், 'மகனே' இணைப்பு, சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, சிலசமயம் ஒரு jovialஆன விளியாகக்கூட ஆகிப்போனதைச் சிலகாலம்வரை அதிர்ச்சியுடனேதான் பார்க்கமுடிந்தது. ஆங்கிலத்திலும்கூட பேச்சுவழக்கில் "You lucky bastard" என்கிறார்கள் (jovialஆக). வலைப்பதிவுகளில் அநாகரீகப் பின்னூட்டங்கள் இருப்பின், அக்கா தங்கச்சியோட பிறக்கலியா நீ என்றுதான் பதில் கேள்வி வருகிறது. ஏதோ ஆண் அநாகரீகப் பின்னூட்டம் இட்டால்கூட, "நீ வா தம்பி, உனக்கு ரிவிட் அடிக்கறேன்" என்று பொதுவாக யாரும் சொல்வதில்லை...

சுவாரஸ்யமான பதிவு...
 
அன்புள்ள அநாமதேய நண்பருக்கு, இந்த பதிவு உங்களுக்கும் ரோசாவசந்திற்குமான சண்டை போடும் களமல்ல. உங்களுக்கு ஏதேனும் அவரிடத்தில் சொல்லவேண்டியதிருப்பின் அவரின் பதிவுக்கு சென்று பதியுங்கள். இது இடமல்ல. அவரின் பதிவு உரல் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கிறேன். இல்லையெனில் தமிழ்மணத்தில் தேடிப்பாருங்கள்.
 
நாரயணன்,
"வார்த்தைகள்" என்று மட்டும் இருந்து விட்டால் பிரச்சனையே கிடையாது.
"நல்ல" வார்த்தைகள் என்று வரும் போது அதுவே "கெட்ட" வார்த்தைகளுக்கு வாசல் அமைத்துக் கொடுத்து விடுகிறது.

"கெட்ட" வார்த்தைகள் பெரும்பாலும் பெண்களை நோக்கியே இருக்கும். எந்த மொழிக் கெட்ட வார்த்தைகளும் இதற்கு விலக்கல்ல.

ஆண்கள் தான் பெண்களை நோக்கி வார்த்தை தொடுக்கிறார்கள் என்பது போல் உள்ளது உங்களின் கட்டுரையின் 'தொனி'.

இந்த வார்த்தைகள் ஆண்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் (அதிலென்ன சந்தேகம்). ஆனால் நடைமுறையில் இதுவே பெண்-பெண் சண்டையிலும் மிகவும் "கடினமாக"
வீசப்படும். ஆண் "போடா ங்கோத்" என்று அதனை மலிவாக உச்சரிக்கும் வேலையில் பெண்களோ அதற்கு "முகவுரை", "விளக்கவுரையுடன்" வீசுவார்கள்.
சென்னை வாழ் பெண்களின் (இது அனைத்துப் பெண்களையும் குறிப்பது அல்ல....கெட்ட வார்த்தை பேசும் பெண்களை மட்டுமே) "பஜாரி" தனங்கள் உங்களுக்குத்தெரியாதது அல்ல.
(சென்னை திருமங்கலம் - கலெக்டர் நகருக்கு இடையே அமைந்துள்ள "பாடிக்குப்பத்தில்" பல வருடம் குப்பை கொட்டிய அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது.)

ஏன் இப்படி?

//அவன்/அவளை you fuckin bitch என்று திட்டும்போது நீங்கள் யாரை அவமதிக்கிறீர்கள் என்று சிக்னலுக்கு காத்திருக்கும்போது யோசிக்கவும் செய்யலாம்.//

சரியாகச் சொன்னீர்கள்...
யாரும் சிந்த்திப்பது கிடையாது...
இல்லை என்றால் மூச்சுக்கு முன்னூறு தரம் "SHIT" என உச்சரிக்கும் வெள்ளைக்காரனின் பேரன்களாகிய மென்பொருள் / உயர்தட்டு சமூக ஆண்களும், பெண்களும் (இது மிக முக்கியம்)
"SHIT" ற்குப் பதிலாக பீ/மலம் என்று தங்கள் வாயால் சொல்லத் துணிவார்களா?

இதெல்லாம்..சும்மா அப்படியே வெள்ளைக்காரனைக் காப்பி அடிப்பது.
கெட்ட வார்த்தை என்பது ஒரு கோபத்தின் வெளிப்பாடே..இதனை பயன் படுத்துபவரில் மிகச் சிலரே அதன் உள்ளர்த்தத்துடன் பயன் படுத்துகின்றனர்.

அனைவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டால் பயன் பாடு குறைய வாய்ப்புண்டு என்றே நினைக்கின்றேன்.

அன்புடன்,
கணேசன்.
 
This comment has been removed by a blog administrator.
 
கெட்ட வார்த்தைகளைப் பற்றிய ஒரு ஒரு நல்ல பதிவு ;-)

இந்த வார நட்சத்திரம் (STAR) ஆனவுடன், SUPERSTAR ரேஞ்சுக்கு கலக்க ஆரம்பிச்சுட்டீங்க :-)

என்றென்றும் அன்புடன்
பாலா
 
நல்ல பதிவு

ஜாதி சம்பந்தப் பட்ட கெட்ட வார்த்தைகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதற்குக் குறைவில்லை. சமீபத்தில் நான் மதிக்கும் உறவினரொருவர் ஒரு சிறுவனைக் கிண்டலாக ஜாதி/தொழிலைச் சொல்லி கிண்டலடித்தது மிகவும் அதிர்ச்சியாக வருத்தமாக இருந்தது. பொதுவாக அப்படிப்பட்ட எண்ணமில்லாத அவரிடம் அதுகுறித்துப் பேசி, மற்ற உறவினர்கள் வந்து அப்படியில்லை இது முசுப்பாத்திதானே. நாங்க யாரும் அப்படியெல்லாம் பழகிறதில்லை என்று சொல்லி சப்பைக்கட்டுக் கட்ட தொடர்ந்துபோனது.

பெண்கள் சம்பந்தப்பட்ட கெட்ட வார்த்தைகளோடு இவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எந்த மொழியை எடுத்தாலும் ஏன் ஆபாச வார்த்தைகள் பெண்கள் சம்பந்தப் பட்டதாகவே இருக்கின்றன என்று ஒரு கட்டுரை எங்கோ வாசித்திருக்கிறேன். சேமித்து வைத்ததாக நினைவு. அகப்பட்டால் இங்கு இடுகிறேன்.

பி.கு: ரோசாவசந்த் இப்போது எழுதியிருக்கும் பதிவும் முக்கியமானது -
 
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி. என்னாலான ஒரு சிறு பொறியினை தூண்டி விட்டிருக்கிறேன். தங்கமணியின் மறுமொழி மிக முக்கியமானது. விபசாரத்திற்கும், பாலியல் தொழிலுக்குமான வித்தியாசங்கள், அதன்பின்னிருக்கும் அரசியல் காரணங்களும். ம்தியின் மறுமொழிக்கு நன்றி. எங்கே இந்த பதிவினை பெண்கள் தவறாக புரிந்து கொள்ளப்போகிறார்களோ என்கிற மெல்லிய பயமிருந்தது. இதனை தாண்டி, ரோசாவசந்தின் பதிவினில் தான்யா விட்டிருக்கும் பின்னூட்டம் மிக முக்கியமானது. நேர பற்றாக்குறையினால் அதிகமாக எழுத இயலவில்லை. மீண்டும் காலையில் பதிகிறேன்.
 
நரேன், கொஞ்சம் விவகாரமான விடயத்தைச் சுவாரசியமாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.
.........
மாண்ட்ரீஸர் சொன்னமாதிரி எனக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருந்தது. ஒருமுறை ஒரு தமிழ்நாட்டு தம்பதிகளின் விட்டுக்கு, நானும் எனது தோழியும், அவளது fianceயும் போயிருந்தோம். எனது தோழியின் fiance ன் அவர்கள் கனடாவிற்கு வந்தபோது பலவிதங்களில் உதவியிருந்தார். அந்ததமிழ்நாட்டு அண்ணா தஞ்சாவூரைச் சொந்த இடமாகவும், அவரது துணைவியார் சென்னையில் வளர்க்கப்பட்டவர் என்றும் சொல்லியிருந்தார்கள்.
நாங்கள் இங்கே மவனே என்ற சொல்லை (அதிகமாய் பெண்கள்) ஒருவித அந்நியோன்னியத்திற்கு பயன்படுத்துவோம். கூடக் கிண்டலடித்தால், எனது தோழி, உடனே மவனே என்றபடிதான் உரையாடத்தொடங்குவார். இப்படி கதைகளினியே அடிக்கடி தோழி மவனே என்று போட்டு கதைக்கத்தொடங்க, அந்தத் தம்பதிகள் முழிக்கத்தொடங்கிவிட்டனர். அது பத்தாது என்று, சென்னைப் பெண்ணின் தாயாரும் அந்த சமயம் அங்கு நின்றிருந்தார். இது என்னடா அவர்கள் எங்கள் உரையாடலில் கலந்துகொள்ளாமல் விலகி நிற்கின்றார்களே என்று யோசித்தபோதுதான் எனது ஆறாவது
அறிவு விழித்துக்கொண்டது (ஆகா எனக்கும் ஆறறிவு இருக்கிறது என்பதைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்டது :-) ). ஏற்கனவே இந்த 'மவனே' குறித்து எங்கோ வாசித்திருந்ததால், அவர்களிடம் இதுவா bother செய்கின்றது என்று கேட்டபோதுதான் உண்மை புரிந்தது. பிறகு நாங்கள், இந்த 'மவனேயை' தமிழ்நாட்டில் உபயோகிக்கும் அர்த்தத்தில் பயன்படுத்துவதில்லை என்றபோதுதான் அவர்கள் நிம்மதியடைந்து எங்களின் உரையாடலில் கலந்துகொண்டார்கள்.
இன்னும் ஒன்றைச் சொல்லமறந்துவிட்டேன். அவர்கள் வெங்காயம், வாழைக்காய், என்ற பல்வேறு மரக்கறிகளில் செய்து தந்த பஜ்ஜியையும் தொட்டுக்கொள்ள விதம்விதமாக தந்த (சட்னி என்றா சொல்வது?) பதார்த்தத்தையும் இப்போது நினைத்தாலும் வாயூறுகிறது. நரேன், நான் சென்னைக்கு வந்தால் இதுவும் வாங்கித் தருவீர்கள் தானே? அப்படி வாங்கித்தருவது கஷ்டமென்றால், யாராவது பெண் பார்க்கப்போகும்போது கூடவே ஒட்டிக்கொள்வோம், சரியா?
 
நரேன்
நல்ல பதிவு. நேரம் இல்லை இதைப் பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்.
 
//ம்தியின் மறுமொழிக்கு நன்றி. எங்கே இந்த பதிவினை பெண்கள் தவறாக புரிந்து கொள்ளப்போகிறார்களோ என்கிற மெல்லிய பயமிருந்தது//

இதில் தவறாகப் புரிந்துகொள்ள என்ன இருக்கிறது? எனக்கு சமூக அக்கறையோடு எழுதப் பட்ட நல்ல பதிவாகவே தெரிகிறது.

மற்றும்படி ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாவிட்டாலும், மிச்சமெல்லாம் பள்ளிக்கூடத்தில் தெரிந்துகொண்டவைதான்.
 
கொசுறு டி.ஜே.க்கு:

பஜ்ஜி பற்றி நீங்களும் கதைக்கிறீங்களா? ஆஹா!
http://mathy.kandasamy.net/musings/2005/03/15/176

இங்க ஒருத்தர் கவிதை பாடியிருக்கிறேர்
முதல் பத்தி இங்கே:
Ackees, chapatties
Dumplins an nan,
Channa an rotis
Onion uttapam,
Masala dosa
Green callaloo
Bhel an samosa
Corn an aloo.

கொஞ்சம் தயக்கத்தோடேயே இதை மேலேயிருப்பதைச் சேர்க்கிறேன். நாராயணன், தோழியர் வலைப்பதிவில் இருப்பதைப்போல கதைக்கிறதுக்கு தனியாக வசதி செய்து கொடுக்கலாமே? பதிவும் திசைமாறாது.
 
மதி நன்றி. கொஞ்சம் சுயநலக்காரன் நான். என் பதிவு எனக்கான வெளி. என் பாதிப்புகளின் கூச்சல். என் சந்தோஷங்களின் பாய்ச்சல். இதில் மற்றவர்கள் கதைக்கும்படியாக வசதியினை இருந்தாலும் ஏற்படுத்தி தரமாட்டேன் ;-) தோழியர் வேறு, அது கூட்டுப் பதிவு. கூட்டுப்பதிவில் அது சாத்தியம், இங்கல்ல. சென்னை வாருங்கள், உங்களுக்கும் டிசேவுக்கும் தனியாய் கடற்கரையில் பஜ்ஜி மேளாவே (வாழைக்காய், வெங்காயம், குடைமிளகாய், உருளைக்கிழங்கு, ப்ரெட், மிளகாய் தனித்தனியே சங்கமம்) நடத்திவிடுகிறேன்.

நிஜமாகவே சில வார்த்தைகள் புரியாவிட்டால், தனி மடல் எழுதுங்கள். உபயோகிக்கும் அவசியம் இல்லாவிடினும் தெரிந்து கொள்ளுதல் நலம்.
 
பின்னூட்டத்தில் சொல்லநினைத்து சொல்லாமல் விடுபட்டது: இந்தமாதிரிக் கெட்டவார்த்தைகள் எதுவும் உபயோகிக்காமலேயே, வெகுஜனத் தளத்தில் நாகரீக முகமூடியுடன் எவ்வளவு கீழ்த்தரமாக எழுதமுடியுமென்று பார்க்கவேண்டுமானால், வரிசையாக நாலைந்து வாரம் வாரமலரின் "துணுக்கு மூட்டை" படித்துப் பார்க்கலாம்!!
 
நாராயணன் - யோசிக்க வேண்டிய விஷயம் பெண்களை முன்னிலைப்படுத்துவது. ஒரு புறத்தில் தாய் என்றும் தெய்வமென்றும் தொழுதற்குரியவளாக அவளைச் சித்தரிக்க மறுபுறத்தில் இழிவதற்கான கருவியாகவும் பெண்ணிருக்கிறாள். இரண்டுக்கும் இடைப்பட்டு உண்மையாகப் பெண்ணை சகமனிதமாகக் கருதும் நிலை வரவேண்டும்.

நான் வேறொரு கோணத்திலும் இந்தக் கெட்ட வார்த்தைகளைப்பற்றி யோசித்திருக்கிறேன். அதவாது அதன் உள்ளர்த்தங்களின் தோற்றுவாய் குறித்து. எங்க தஞ்சாவூர் பக்கம் சாண்டே குடிக்கி என்றொரு வார்த்தை சரளமாகப் பேசப்படும். இதற்கு உண்மையான அர்த்ததைத் தெரிந்துகொண்டால் மயக்கம் போட்டு விழுந்துவிடுவீர்கள். அதேபோல நாய்க்குப் பிறந்ததாகவும், தாயையும் தமக்கையையும் புணர்வதாகவும் சொல்லப்படும் வசவுகள் எங்கிருந்து வந்தன? சமூகத்தில் அத்தகைய பழக்கங்கள் இல்லாமலிருந்தால் வெறும் பேச்சில் மட்டும் எப்படி வரும்? எனவே, வெள்ளைக்காரனின் கேடுகளாகக் கருதப்படும் beastiality, pedophilia, necrophilia, இன்னபிற அபத்த வழக்குகள் நம் சமூகத்திலிருந்தாலும் அது வசவில் தவிர வேறெங்கும் பேசப்படுவதில்லை. வசவுகள் அடிமனத்தின் ஆழத்திலிருந்து வெளிக்கிளம்புபவை அவற்றில் ஜோடனைக்கு இடமில்லை, அவை உண்மையின் வெளிப்பாடுகள்தான். மாறாகப் புகழ்ச்சி??

சாராயம் உடலுக்குக் கேடு என்று சொல்பவர்கள் விஸ்கியைப் புகழ்வதைப் போலத்தான் ஆங்கில வசவுகளைப் பயன்படுத்துவதும். இதெல்லா யோசித்தா செய்கிறார்கள்.

மதி - ஜாதியை வைத்துத் திட்டுவது ஒரு புறமாக மாத்திரமில்லை. பாப்பார நாயே, பாப்பாரப் புத்தி, செட்டிப்புத்தி என்றெல்லாம் வசைகள் இருக்கின்றன. இது தம் குழுவினுள்ளே ஒருவனை அந்நியப்படுத்தி இழி செய்யும் முறை. இதில் மேல்-கீழ் வித்தியாசமில்லை.

தன்னில் நம்பிக்கை கொண்டவன் பிறரை இழிசெய்ய முயற்சிப்பதில்லை. அவன் வாயிலிருந்து வசவுகள் எளிதில் புறப்படுவதில்லை.
 
// உங்களுக்கு ஏதேனும் அவரிடத்தில் சொல்லவேண்டியதிருப்பின் அவரின் பதிவுக்கு சென்று பதியுங்கள். இது இடமல்ல//
நாரயணன், உங்களது இந்தப்பதில் அதிர்ச்சியாய் உள்ளது. என்ன திடீரென்று அனானிமஸுக்கெல்லாம்
போதனை பண்ணிக்கொண்டுள்ளீர்கள். ரோசவசந்தைப்பற்றி உங்களுக்கு தெரியும் என்ற போது இதை அகற்றவேண்டியதுதானே. இல்லை உங்களைப்பார்த்து இந்தப் பதிவு ரேஞ்சிலே யாராவது எழுதினால் தான்
சுரணைவருமா உங்களுக்கு? அதை வேண்டுமானால் நான் செய்து புண்ணியம் வாங்கிக்கொள்கிறேன்..
கொஞ்சம் கேரீட் ஓவர் ஆகிவிட்டீர்களோ என்ற வருத்ததுடன். ;-)

பதிவைப்பற்றி: நல்ல பதிவு. இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். நேரமின்மை இன்னும் 4 நாட்கள் இருக்குm.
 
நீங்க குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை எல்லாம், அதனதன் அர்த்தம் புரியாமலேயே உபயோகித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது... . சபாபதி பார்த்திருக்கிறீர்களா? பம்மல் சம்மந்த முதலியாரின் படம். கூடத்தில், சகோதரி, அம்மா சகிதம் உட்கார்ந்து, பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு காட்சியிலே, சபாபதி தன் மாமியார் வீட்டுக்கு வந்து, புறப்படும் போது, மாமியார் சொல்லுவார், " இருங்க மாப்பிள்ளை தேவிடியா கச்சேரிக்கு ஏற்பாடு செஞ்சிருக்கேன். பாத்துட்டுப் போகலாம்" என்று. ஒரு நிமிடம் வெலவெல என்று ஆகிவிட்டது. அந்தக் காலகட்டத்தில், அந்த வார்த்தைக்கு அர்த்தம், நடனப் பெண்மணி என்று லேட்டாய்த்தான் புரிந்தது. ( தேவர் அடியாள் -> தேவடியாள்)
 
ஹப்பாடா கொஞ்சம் புதிய கெட்டவார்த்தைகளைக் கற்றாயிற்று..

"தேவடியாபசங்களே" யும் "வேசிமகனும்" உம் பெண்களை இழிவு படுத்துகின்றன என்கின்றீர்கள். அது எப்படி வந்தது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? பெண்கள் ஆண்களுக்குச் சுகம் கொடுக்க வந்த சதைப்பிண்டங்கள். அதனால்தான் தேவடியாட்களும் வேசிகளும் உருவானார்கள். வேசிகளிடமும் தேவடியாள்களிடமும் போகும் பெருங்குடிமகனுக்கு கெட்ட பெயர் இல்லை. (காமுகன்??) அவன் எப்போதுமே தலைவன்தான் (பெருமையான) ஆணானுக்கு காமம் கிளர்ந்தால் அது பெருமை. பெண்ணுக்கு அது தரமற்ற கெட்ட குணமாகப் பார்க்கப்படுகின்றது. தேவடியாள் எனும் போது பெண் கூசிப்போகின்றாள். காமுகன் என்றால் அது பெருமை. வேசிகளையும் தேவடியாட்களையும் உருவாக்கியதே ஆண்கள்தானே? அனேகமாகத் திட்டுவதும் ஆண்கள்தான்ää திட்டுக்கேட்பதும் ஆண்கள்தான். இதில் பெண்ணுக்கு என்ன கேவலம்?

பிற்குறிப்பு – மிகமிக நெருக்கமான உறவுகளை கெட்டவார்த்தையில் திட்டும்போது ஒரு சுகம் இருக்கிறது அனுபவித்துப் பார்த்துண்டா?
 
கார்த்திக் பதட்டப்படாதீர்கள். போதனை எல்லாமில்லை. நான் எதற்காக அகற்றவேண்டுமென்பது தான் கேள்வி. நான் விட்டுவைத்ததன் காரணம், ரோசாவசந்த் இதனைப் பார்த்தாரா இல்லையா என்பது தான்.என்னை விட ரோசாவசந்த் இதற்கு பதிலளிப்பார் என்கிற நம்பிக்கையுடன் தான் விட்டு வைத்திருக்கிறேன்.மேலும் எப்பேர்ப்பட்ட கீழ்த்தரமான பதிவென்றாலும் அதனை நான் அழிக்கமாட்டேன். இதன்மூலம் வலைப்பதிவில் உலாவரும் வக்கிரங்கள் வெளியில்வரும்.நீங்கள் இதற்கு மேலும் திட்ட ஆசைப்பட்டால், தாராளமாய் திட்டுங்கள்.
 
It is an interesting article. I never knew that there are somany bad words. I did not try to understand as well.கனியிருப்ப காயை விரும்புவானேன். தன் கருத்தின் மீதும் தன் மீதும் நம்பிக்கை உள்ளவர், தன் சினத்தை அழக்காக் வெளிப்படுத்த தெரிந்தவர் கடின வாரத்தைகளை கூறப்போவதில்லை. யோசித்துப் பாருங்கள் யாரோ முகம் தெரியாதவரிடம் காரில் கூறும் வார்த்தைகளை மேலதிகாரியிடம் கூறுவோமா என்று்
 
தம் பிள்ளைகள் முன்னிலையில் 'வேசி' எனத் திட்டப்பட்டு, கூனிக்குறுகிப்போகிற பெண்முகங்கள் வந்துபோகிறது. அவசியமான பதிவு நாராயணன்.
 
//வடசென்னையில் 25 வருடங்கள் வாழ்ந்து இருந்ததால், எல்லாவிதமான கெட்டவார்த்தைகளையும், வீதி சண்டைகளையும், "பஜாரி"தனங்கள் என்றழைக்கபடும், சேரிமக்களின், குடிசைவாழ் மக்களின் தினசரி கூச்சல்களையும், கூப்பாடுகளையும் கேட்டிருக்கிறேன்.//

அப்படியே தமிழக சட்டசபை பக்கமும், கட்சி அலுவலகங்கள் பக்கமும், எஸ்.எஸ்.சந்திரன், தீப்பொறி ஆறுமுகம் போல அரசியல்வாதிகள் பேசும் மேடை பக்கமும் போனால் இதை விட அதிகமான வார்த்தைகளை கேட்கலாம்.

//தேந்துளி: யோசித்துப் பாருங்கள் யாரோ முகம் தெரியாதவரிடம் காரில் கூறும் வார்த்தைகளை மேலதிகாரியிடம் கூறுவோமா என்று் //

தவறு. நேராக கூற மாட்டோம் மனதுக்குள்ளும் இல்லை நண்பர்களிடமும் மேலாதிகாரியை டார் டாராக கெட்டவார்த்தை போட்டு அழகாக பேசுவோம்.
 
//வடசென்னையில் 25 வருடங்கள் வாழ்ந்து இருந்ததால், எல்லாவிதமான கெட்டவார்த்தைகளையும், வீதி சண்டைகளையும், "பஜாரி"தனங்கள் என்றழைக்கபடும், சேரிமக்களின், குடிசைவாழ் மக்களின் தினசரி கூச்சல்களையும், கூப்பாடுகளையும் கேட்டிருக்கிறேன்.//

அப்படியே தமிழக சட்டசபை பக்கமும், கட்சி அலுவலகங்கள் பக்கமும், எஸ்.எஸ்.சந்திரன், தீப்பொறி ஆறுமுகம் போல அரசியல்வாதிகள் பேசும் மேடை பக்கமும் போனால் இதை விட அதிகமான வார்த்தைகளை கேட்கலாம்.

//தேன்துளி: யோசித்துப் பாருங்கள் யாரோ முகம் தெரியாதவரிடம் காரில் கூறும் வார்த்தைகளை மேலதிகாரியிடம் கூறுவோமா என்று் //

தவறு. நேராக கூற மாட்டோம் மனதுக்குள்ளும் இல்லை நண்பர்களிடமும் மேலாதிகாரியை டார் டாராக கெட்டவார்த்தை போட்டு அழகாக பேசுவோம்.
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயண நாராயண,
இப்படி என்னை நிறைய எழுத வெச்சா எப்படி நாநா? தமிழில்தானே எழுதினேன்.நான் எங்கே பதட்டப்பட்டேன்? உங்களுக்கு பொறுப்புஇல்லையா என்று நேரடியாகத்தானே கேட்டேன். ஒரு அனானிமசுக்கு, **எந்த லாஜிக்கும் இல்லாமல்" மட்டையடிக்கும் மயிரு புடிங்கிக்கு , "அதெல்லாம் ரோசாவுக்கும் உனக்கும் உள்ள பிரச்சினை அங்கே போயி புடுங்கு என்று வீரமாய் போதித்தது போல் வாசித்தேன். வாசிப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும். இதற்கு நிஜமாலுமே ரோசா வந்து பார்க்கும்போது பதிலளிக்கவெண்டும் என்று நினைப்பது , காத்திருப்பது ,முட்டாள்த்த்னாமாக பட்டது. அனானிமஸ் யாருன்னு தெரியாமல் என்ன பதிலை சொல்வது. குறிப்பாய் அதில் எதுவும் இல்லாமல், தாக்குவதற்க்கே ஒரு புண் ..க்கும் இல்லாது கறந்துட்டுப்போகும் ஒரு அனானிமசுக்க்கு ஜனாநாயகம் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. நான் அடித்த ஜொக்கை நீங்கள் வாசித்த்தற்கு என்ன சொல்வது.. திட்டுவதென்றால் முன்னறிவுப்பெல்லாம் கொடுக்கமாட்டேன் லாஜிக்க் இல்லாமல் எழுதும் அடுத்த நிமிடமே திட்டுவேன். இப்போதும் தடுப்பது சக வலைப்பதிவாளர் என்று ரோசாவை நினைத்த அதே உணர்வும் , உங்கள் சிந்தனை யுள்ள எழுத்தும்தான். தயவு செய்து பதட்டப்பட்டேன் என்றெல்லாம் உளறாதீர்கள். இந்த மூத்திரங்களை குறைக்கலாம் என்ற யோசனையில் சொன்னது அது.. :) :-) :))
 
நாராயண நாராயண,
இப்படி என்னை நிறைய எழுத வெச்சா எப்படி நாநா? தமிழில்தானே எழுதினேன்.நான் எங்கே பதட்டப்பட்டேன்? உங்களுக்கு பொறுப்புஇல்லையா என்று நேரடியாகத்தானே கேட்டேன். ஒரு அனானிமசுக்கு, **எந்த லாஜிக்கும் இல்லாமல்" மட்டையடிக்கும் மயிரு புடிங்கிக்கு , "அதெல்லாம் ரோசாவுக்கும் உனக்கும் உள்ள பிரச்சினை அங்கே போயி புடுங்கு என்று வீரமாய் போதித்தது போல் வாசித்தேன். வாசிப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும். இதற்கு நிஜமாலுமே ரோசா வந்து பார்க்கும்போது பதிலளிக்கவெண்டும் என்று நினைப்பது , காத்திருப்பது ,முட்டாள்த்த்னாமாக பட்டது. அனானிமஸ் யாருன்னு தெரியாமல் என்ன பதிலை சொல்வது. குறிப்பாய் அதில் எதுவும் இல்லாமல், தாக்குவதற்க்கே ஒரு புண் ..க்கும் இல்லாது கறந்துட்டுப்போகும் ஒரு அனானிமசுக்க்கு ஜனாநாயகம் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. நான் அடித்த ஜொக்கை நீங்கள் வாசித்த்தற்கு என்ன சொல்வது.. திட்டுவதென்றால் முன்னறிவுப்பெல்லாம் கொடுக்கமாட்டேன் லாஜிக்க் இல்லாமல் எழுதும் அடுத்த நிமிடமே திட்டுவேன். இப்போதும் தடுப்பது சக வலைப்பதிவாளர் என்று ரோசாவை நினைத்த அதே உணர்வும் , உங்கள் சிந்தனை யுள்ள எழுத்தும்தான். தயவு செய்து பதட்டப்பட்டேன் என்றெல்லாம் உளறாதீர்கள். இந்த மூத்திரங்களை குறைக்கலாம் என்ற யோசனையில் சொன்னது அது.. :) :-) :))
 
நாராயண நாராயண,
இப்படி என்னை நிறைய எழுத வெச்சா எப்படி நாநா? தமிழில்தானே எழுதினேன்.நான் எங்கே பதட்டப்பட்டேன்? உங்களுக்கு பொறுப்புஇல்லையா என்று நேரடியாகத்தானே கேட்டேன். ஒரு அனானிமசுக்கு, **எந்த லாஜிக்கும் இல்லாமல்" மட்டையடிக்கும் மயிரு புடிங்கிக்கு , "அதெல்லாம் ரோசாவுக்கும் உனக்கும் உள்ள பிரச்சினை அங்கே போயி புடுங்கு என்று வீரமாய் போதித்தது போல் வாசித்தேன். வாசிப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும். இதற்கு நிஜமாலுமே ரோசா வந்து பார்க்கும்போது பதிலளிக்கவெண்டும் என்று நினைப்பது , காத்திருப்பது ,முட்டாள்த்த்னாமாக பட்டது. அனானிமஸ் யாருன்னு தெரியாமல் என்ன பதிலை சொல்வது. குறிப்பாய் அதில் எதுவும் இல்லாமல், தாக்குவதற்க்கே ஒரு புண் ..க்கும் இல்லாது கறந்துட்டுப்போகும் ஒரு அனானிமசுக்க்கு ஜனாநாயகம் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. நான் அடித்த ஜொக்கை நீங்கள் வாசித்த்தற்கு என்ன சொல்வது.. திட்டுவதென்றால் முன்னறிவுப்பெல்லாம் கொடுக்கமாட்டேன் லாஜிக்க் இல்லாமல் எழுதும் அடுத்த நிமிடமே திட்டுவேன். இப்போதும் தடுப்பது சக வலைப்பதிவாளர் என்று ரோசாவை நினைத்த அதே உணர்வும் , உங்கள் சிந்தனை யுள்ள எழுத்தும்தான். தயவு செய்து பதட்டப்பட்டேன் என்றெல்லாம் உளறாதீர்கள். இந்த மூத்திரங்களை குறைக்கலாம் என்ற யோசனையில் சொன்னது அது.. :) :-) :))
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயண நாராயண,
இப்படி என்னை நிறைய எழுத வெச்சா எப்படி நாநா? தமிழில்தானே எழுதினேன்.நான் எங்கே பதட்டப்பட்டேன்? உங்களுக்கு பொறுப்புஇல்லையா என்று நேரடியாகத்தானே கேட்டேன். ஒரு அனானிமசுக்கு, **எந்த லாஜிக்கும் இல்லாமல்" மட்டையடிக்கும் மயிரு புடிங்கிக்கு , "அதெல்லாம் ரோசாவுக்கும் உனக்கும் உள்ள பிரச்சினை அங்கே போயி புடுங்கு என்று வீரமாய் போதித்தது போல் வாசித்தேன். வாசிப்பில் பிழையிருந்தால் மன்னிக்கவும். இதற்கு நிஜமாலுமே ரோசா வந்து பார்க்கும்போது பதிலளிக்கவெண்டும் என்று நினைப்பது , காத்திருப்பது ,முட்டாள்த்த்னாமாக பட்டது. அனானிமஸ் யாருன்னு தெரியாமல் என்ன பதிலை சொல்வது. குறிப்பாய் அதில் எதுவும் இல்லாமல், தாக்குவதற்க்கே ஒரு புண் ..க்கும் இல்லாது கறந்துட்டுப்போகும் ஒரு அனானிமசுக்க்கு ஜனாநாயகம் பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. நான் அடித்த ஜொக்கை நீங்கள் வாசித்த்தற்கு என்ன சொல்வது.. திட்டுவதென்றால் முன்னறிவுப்பெல்லாம் கொடுக்கமாட்டேன் லாஜிக்க் இல்லாமல் எழுதும் அடுத்த நிமிடமே திட்டுவேன். இப்போதும் தடுப்பது சக வலைப்பதிவாளர் என்று ரோசாவை நினைத்த அதே உணர்வும் , உங்கள் சிந்தனை யுள்ள எழுத்தும்தான். தயவு செய்து பதட்டப்பட்டேன் என்றெல்லாம் உளறாதீர்கள். இந்த மூத்திரங்களை குறைக்கலாம் என்ற யோசனையில் சொன்னது அது.. :) :-) :))
 
அழுந்தம் திருத்தமா உங்க கருத்தை சொல்றதுக்காகவா இத்தனை பதிவு ;<) கார்த்திக். சரி இந்த ஊடல் எதுக்கு நமக்குள்ள, வேலைய பாப்போம்யா :-))

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. இன்றைய பதிவு கொஞ்சம் தாமதமாகவே வருமென்பதையும் இந்த கேப்பில் சொல்லி கொள்கிறேன். : )
 
கார்திக், நாராயணன்,

என் பதிவில் பதில் எழுதிவிட்டு இப்போதுதான் இங்கே வர முடிந்தது. நான் அநானிமஸ் சொன்ன கருத்தை (வழக்கம் போல) எனக்கு கிடைத்த மிக பெரும் பாராட்டாக எடுத்து கொள்கிறேன். ஒரு கருத்து யாரிடம் இருந்து வருகிறது என்பது முக்கியம். அதை பொறுத்து தான் அதை அணுகமுடியும். ஒருவேளை இந்த அனானிமஸ் என்னை பாராட்டினால் கவலை வந்திருக்கும்!

என் பதிவிலேயே எதையும் நீக்குவதில்லை, நாராயாணன் எதற்காக நீக்க வேண்டும்? அதனால் அவர் நீக்காததை மதிக்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

கெட்டவார்த்தை விவாதத்தில் கலந்து கொள்ள ஆசையிருந்தும் நேரமில்லை. நாராயணணுடன் சில விஷயங்கள் சேட் செய்தேன். எனக்கு சொல்ல விடுபட்டது, கெட்ட வார்த்தைகள் அந்தந்த சந்தர்பத்திற்கு ஏற்பவே பொருள் பெறுகின்றன. இதை நா. கண்ணணும் குறிப்பிட்டிருந்தார். கூவாகம் போன போது அலிகள் ஒருவரை ஒருவர் 'சீ..போடி தேவிடியா!" என்று அழைத்து கொள்வார்கள். இது எந்த விதத்திலும் வசை வார்த்தையில்லை. அவர்கள் கொஞ்சி கொள்ளும் மொழி இது. அதே நேரம் அலிகள் பல இடங்களில் மிக மோசமாய் ஹராஸ் செய்யப்படும்போது, 'அம்மா, ஆத்தாவை' வைத்தே வசவுகள் வரும். ('போய் உங்காத்தாளை போய் நோண்டு!") இங்கே அம்மாவை திட்டுவதல்ல நோக்கம். அம்மாவை பற்றி சொன்னால் மட்டுமே அந்த ஆளுக்கு ஏதேனும் உரைக்ககூடும் என்ற நிலமை. சமய வந்தர்பங்களுக்கு ஏற்பவே இவை பொருள் கொள்ளபடுகின்றன!

நல்ல பதிவு!
 
\\கணேசன் said... ஆண்கள் தான் பெண்களை நோக்கி வார்த்தை தொடுக்கிறார்கள் என்பது போல் உள்ளது உங்களின் கட்டுரையின் 'தொனி'.\\

²ü¸É§Å þó¾...Å¡÷ò¨¾¸¨Ç §¸ðÊÕó¾¡Öõ «ÐìììÌõ §Áø ´Õò¾¢ìÌ ´Õò¾¢ ºñ¨¼Â¢Îõ §À¡Ðõ ºÃ¢,கணவனோடு (¿Îò¦¾ÕÅ¢ø)சண்டையிடும் §À¡துõ ºÃ¢ «ó¾ô ¦Àñ¸û சொல்வா÷¸ளே(¬ñ¸Ù측É)வார்த்தைகள்...

அதெல்லாம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன்.

¿§Ãöý «¦¾øÄ¡õ §¸ð¼¾¢ø¨Ä§Â¡?

Á(¨)Èó§¾ §À¡É Å¡÷ò¨¾¸û ¦¸¡ñ¼ À¾¢×!


Á£É¡.
 
\\கணேசன் said... ஆண்கள் தான் பெண்களை நோக்கி வார்த்தை தொடுக்கிறார்கள் என்பது போல் உள்ளது உங்களின் கட்டுரையின் 'தொனி'.\\

²ü¸É§Å þó¾...Å¡÷ò¨¾¸¨Ç §¸ðÊÕó¾¡Öõ «ÐìììÌõ §Áø ´Õò¾¢ìÌ ´Õò¾¢ ºñ¨¼Â¢Îõ §À¡Ðõ ºÃ¢,கணவனோடு (¿Îò¦¾ÕÅ¢ø)சண்டையிடும் §À¡துõ ºÃ¢ «ó¾ô ¦Àñ¸û சொல்வா÷¸ளே(¬ñ¸Ù측É)வார்த்தைகள்...

அதெல்லாம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன்.

¿§Ãöý «¦¾øÄ¡õ §¸ð¼¾¢ø¨Ä§Â¡?

Á(¨)Èó§¾ §À¡É Å¡÷ò¨¾¸û ¦¸¡ñ¼ À¾¢×!


Á£É¡.
 
மீனாவின் பின்னூட்டம் யூனிகோடில் ...

//ஏற்கனவே இந்த...வார்த்தைகளை கேட்டிருந்தாலும், அதுக்கும் மேல் ஒருத்திக்கு ஒருத்தி சண்டையிடும் போதும் சரி, கணவனோடு (நடுத்தெருவில்) சண்டையிடும் போதும் சரி அந்தப்பெண்கள் சொல்வார்களே (ஆண்களுக்கான) வார்த்தைகள்.....

அதெல்லாம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன்.

நரேய்ன் அதெல்லாம் கேட்டதில்லையோ?

ம(றை)றந்தே போன வார்த்தைகள் கொண்ட பதிவு!//
 
நாநா,
ப்ளாக்கருக்கு என் கருத்து ரொம்ப பிடித்துவிட்டது போல. ;-)
பன்முறை பின்னூட்டம் என் தவறல்ல. மன்னிக்கவும். ரோசா இந்த அனானிமசுங்களிடமிருந்து உங்களுக்கு என்னிக்கு விமோசனமோ? இது குறித்து மெதுவாக எழுதுகிறேன். ஒரு பின்னூட்டம் எழுதினால், விளக்கவேண்டி நான்கு பின்னூட்டங்கள் இடவேண்டிய அவலத்தமிழிலே அலைகிறேன்...நேரமில்லை..நேரமில்லை நேரமில்லை...பேசாம பெயரிலி மாதிரி பேரை நேரமில்ன்னு வைத்துக்கொள்ளலாம் போல இருக்கு. :)
 
வெற்றிகரமான 50வது பின்னூட்டம் இடச்செய்ய, ஒரு பதிவு எழுதிய நரேனுக்கு வாழ்த்துக்கள் (இது 52posting என்றாலும், கார்த்திக் 3முறை ஒரு postingஐ இட்டதால், எனது postingயே accurateயான 50வது பதிவு என்று கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து முடிவெடுத்திருக்கின்றேன்). நரேன் இப்படியொரு உண்மையைக் கண்டுபிடித்ததால் உங்களது வெற்றிவிழாவில் எனக்கு ஏதாவது பரிசு உண்டா? அதுசரி, இப்படி அடிக்கடி ஹிட் பதிவுகள் கொடுக்கும் இரகசியத்தை, நரேன் எனக்கு தனிமடலில் எழுதி அனுப்பிவிடவும் அல்லது உங்களின் assistant directorயாய் ஆக்கிவிடவும் :-).
//...பேசாம பெயரிலி மாதிரி பேரை நேரமில்ன்னு வைத்துக்கொள்ளலாம் போல இருக்கு. :) //
பெயரிலியை கொஞ்சநாள்களாய் காணவில்லை. உண்மையில் Mexicoவிற்கு vacation போய்விட்டாரா?
 
டிசே இப்படியெல்லாம் நீங்கள் என் வாயினை கிளற வேண்டுமா. நான் பார்த்ததை, படித்ததை பதிகிறேன் அவ்வளவுதான். இன்னமும் நான் நிறைய வலைப்பதிவாளர்களை பார்த்து வியப்புறுகிறேன். பெயர்கள் சொன்னால் நன்றாக இருக்காது என்பதால் தவிர்க்கிறேன். ஹிட் ரகசியம், புடலங்காய் எதுவுமில்லை, எனக்கு தோன்றியதை எழுதுகிறேன் அவ்வளவுதான், இதைவிட பெரிய ரகசியம் வேறெதுவும் கிடையாது. கஷ்டப்பட்டு ஆராய்ச்சி செய்து கண்டிப்பிடித்திருப்பதால், உங்களுக்கு கண்டிப்பாக கெளரவமுனைவர் பட்டம், நான் பொறியல் கல்லூரியோ மருத்துவ கல்லூரியோ கட்டும்போது அளிக்கிறேன். மெக்சிகோவிற்கு போயிருந்தால் ஏதேனும் சூடான, சுவையான ஸ்பானிஷ் விஷயங்களோடு எழுதுவாரா?
 
நாராயணன்
கெட்ட வார்த்தையை எங்கள் பகுதிகளில் தூஷணம் என்றுதான் சொல்வார்கள்.
உங்களது இந்தப் பதிவை வாசித்த பாதிப்பில் நேற்று
 
ஒரு ஆணை ஒரு பெண் திட்டினால் அது என்ன ஆதிக்கத்தின் வெளிப்பாடு? அதுவும் ஆணாதிக்கம்? எப்படி ஒரு பெண்ணுக்கு ஆணாதிக்கம் இருக்க முடியும்? அல்லது தன்னாதிக்கம்? ஒரு வேளை தன்னைத் தானே

அடிமைப் படுத்திக்கொண்ட வெளிப்பாடோ அது? நல்ல வேடிக்கைதான் போங்கள்.

இயலாமையால் துவண்டு விடக்கூடாது என்று சமாதானப் படுத்த நமது ஈகோவுக்குச் சொல்லும் சமாதானமே

பிறரைப் புண்படுத்துவது. பிறரைப் புண்படுத்துவதற்கு எளிமையான ஒரு வழி, அவர் விரும்பு/அவர் மதிக்கும்

ஒன்றைத் தாழ்த்திப் பேசுதல். தாயு, சகோதரியும், மனைவி எல்லாம் ஒரு ஆண் மதிக்கும் தலையானவற்றுள்

அல்லது முக்கியமானவற்றுள் சில. இப்படிப்பட்ட ஈகோ satisfaction இருபாலருக்கும் பொருந்தும். அவ்வளவுதான்.

இதைப் போய் ஆண் ஆதிக்கம், பேண் ஆதிக்கம் என்றெல்லாம் சொன்னால் ஆண்கள் குல முன்னேற்ற சங்கத்தில் இருந்து வக்கீல் நோட்ட்ஸ் வரும் என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன் யுவர் ஆனர்!

இங்கனம்,
சு. க்ருபா ஷங்கர்,
தலைவர்,
அகில உலக ஆண்கள் குல முன்னேற்ற சங்கம்
 
நோட்டிஸ் அனுப்புங்கள், நீதி மன்றத்தில் சந்திக்கிறேன் ;-)
 
இந்த பதிவினை தாண்டி, டிசேயின் எண்ணத்தை செயலாக்கலாம் என்று தோன்றுகிறது. 25 பதிவுகளை வலைஞர்களை (கலை செய்பவன் கலைஞன் என்றால், வலைபதிபவன் வலைஞனாகலாம் அல்லவா... இல்லையெனில் I am a blogger என்பதை தமிழில் எவ்வாறு சுருக்கமாய் கூறுவீர்கள்?) கொண்டு தெரிவு செய்யலாம். இந்த பதிவுகள் வித்தியாசமான எழுத்தாய் இருக்கலாம். அலசலாய் இருக்கலாம். மறுமொழிகளின் வாயிலாய் கிளர்ந்த விவாதங்களாய் இருக்கலாம். புது விசயமாய் இருக்கலாம். என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், சுவாரசியமாய் இருத்தல் அவசியம். டிசே சொன்னது போல், இது இலக்கியவாதிகளுக்கான சவாலான முயற்சியல்ல, மாறாய், எந்த வித இலக்கிய அந்தஸ்தும், ப்ராண்டும் இல்லாத சாதாரணமாய் எழுதும் மனிதர்களின் தொகுப்பு. இங்கே யாரும் தான் எழுதியது நன்றாக இருக்கிறது என்பதற்காகவோ, அதிக மறுமொழிகள் வந்ததற்காகவோ இலக்கியவாதியாய் மாறிவிடப்போவதில்லை. பின் நவீனத்துவ இலக்கியவாதிகளின் பாணியில் சமூகத்தின் அடியாழத்தைப் பற்றிய அலசல்களை கொண்டதாய் இருப்பின் மகிழ்வேன். இணையத்தில் பதியும் வலைஞர்கள் வெறும் கணினி அறிவு உடையவர்கள், சமூக சிந்தனை பெரிதுமில்லாதவர்கள் என்கிற மனப்பான்மையை உடைப்பதாக இது அமையும் என்று நினைக்கிறேன். யாராவது இதனை ஒரு பதிவாய் போட்டு விவாதித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.
 
வோணாம்பா! ஆண்பாவம் செல்லாதது. வக்கீலய்யா சொல்ல சொல்ட்டாரு. அல்லாரும் ஒரே ஆண்ஜாதியாம், வுட்ருண்ட்டாரு.
 
நாராயணன்,

முதலில் வாழ்த்துக்கள் ஆயிரம். இத்தனை உருப்படியானதொரு ;-) பதிவை சமீபத்தில் படித்ததாக எனக்குத் தோன்றவில்லை.

வசவுகள் ஒரு துவக்கமே. இரு சமூகங்களுக்கிடையில் கலவரமோ சச்சரவோ நிகழும் போது முதலில் குறிவைக்கப்படுவது பெண்களே. மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்த கலவரத்தில் முஸ்லிம் மாதர்களின் கொங்கைகள் அறுக்கப்பட்டன. குஜராத் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். இது தொன்று தொட்டு நிகழ்ந்துவரும் ஒரு அசிங்கம். பாகிஸ்தான் பிரிவினையின் போது பல ஆயிரம் பெண்கள் இரண்டு பக்கமும் சூறையாடப்பட்டனர். இதற்குப் பயந்து அந்தந்த சமூகத்தின் ஆண்மகன்கள் தன் வீட்டுப் பெண்களையே வெட்டிக்கொன்றார்கள். அல்லது மொத்தமாக கிணற்றில் தள்ளிய அவலமும் நிகழ்ந்தது.

கீழ் ஜாதியிலும் கீழ் ஜாதி பெண் ஜாதி தான். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆண் ஒரு முறை தான் சமூகத்தால் அவமதிக்கப் படுகிறான். ஆனால் பெண் தாழ்த்தப்பட்டவள் என்று ஒரு முறையும், பெண் என்பதால் மறு முறையும் அவமதிக்கப்படுகிறாள். ' Color Purple' (ஸ்பீல்பர்க் இயக்கத்தில் வூப்பி நடித்தது) என்கிற ஆங்கிலப் படம் பாருங்கள். நான் சொல்வது நன்றாக விளங்கும்.
 
நரேன், சந்தோசமான விடயம். உலகப்பந்தெங்கும் தமிழர்கள் பரவியிருந்தாலும், இணையம் ஏதோ ஒருவழியில் எல்லோரையும் ஓரிடத்தில் இணைக்கின்றபடியால் ஓரளவு சுலபமாய் காரியங்கள் ஆற்றமுடியும் என்று நம்புகின்றேன். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, இதைத் தனிப்பதிவாக எழுதி சற்று விரிவாக விவாதித்தால் நல்லது. ஒரு குறிப்பிட்ட காலத்தை எல்லையாக முன்னரே வரையறுத்தோம் என்றால் இந்தத் திட்டத்தை செயலாக்குவது இலகுவாயிருக்கும் என்று நம்புகின்றேன்.
.....
//கலை செய்பவன் கலைஞன் என்றால், வலைபதிபவன் வலைஞனாகலாம் அல்லவா... இல்லையெனில் I am a blogger என்பதை தமிழில் எவ்வாறு சுருக்கமாய் கூறுவீர்கள்?) //
சரிதான். ஆனால் அந்த 'ன்' விகுதிதான் கொஞ்சம் இடிக்கிறது (seriousயாய் எல்லாம் யோசிக்கவேண்டாம்). வலைஞன் என்று மீனவர்களுக்கும் ஒரு சொல் இருக்கிறது என்று சின்ன வயதில் படித்ததாய் ஞாபகம். தமிழ் தெரிதோர் உறுதிப்படுத்தினால் நல்லது.
 
60
 
வலைஞர்களை (கலை செய்பவன் கலைஞன் என்றால், வலைபதிபவன் வலைஞனாகலாம் அல்லவா.........i have this 'word' in my tagline from day one of my blogging..
 
காம ரசம் சொட்டும் தமிழ் கதைகள். அருமையான தமிழ் செக்ஸ் ஜோக்ஸ். பெண் நண்பர்கள், ஆண் நண்பர்கள் தேட இங்கே வாருங்கள்.
www.tamilstory.tk
click
 
நல்ல தெளிவான பதிவு. நாம் உபயோகிக்கும் கெட்ட வார்த்தைகளின் பின்னால் படிந்துள்ள ஆணாதிக்கத்தின் நாற்றம் பிடித்த பக்கத்தினைத் தெளிவாகப் பதிந்துள்ளீர்கள் நரைன்.பெண்கள் பெண்களே உருவாக்கிய கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிக்கும் காலத்தில் வேண்டுமானால் இந்த ஆணாதிக்கம் மெல்ல நிறமிழக்குமோ என்னவோ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]