Mar 23, 2005

இது எப்படி தோணுது?

டீக்கடையில் உட்கார்ந்திருந்த சமயம் (ராம்கி, இது நுங்கம்பாக்கம் கடை இல்ல) வித்தியாசமாய் மாட்டிய பதிவு இது. இந்த பதிவில் மாநில சுயாட்சி, இந்திய அரசியல் கட்டமைப்பு பற்றிய சில விவரங்கள் இருந்தன. இவற்றில் சிலவற்றை தவிர பிற விஷயங்களை நானறியேன். ஒரு கூட்டமைப்பு நாட்டில் (இந்தியா, அமெரிக்கா) பல மாநிலங்களின் சுமையை சில மாநிலங்கள் தாங்க வேண்டுமா? அவ்வாறு தாங்குதலின் முன்/பின் விளைவுகள் என்னவாய் இருக்கும் ?

கூட்டுக்குடும்பத்திலேயே வேலையே செய்யாமல் சும்மா இருந்தால், "தண்டச்சோறு" எனத் திட்டி, கொஞ்சம் விவகாரமாக போனால், வெளியே அனுப்பி விடுவார்கள். இதுப் போல ஒரு நாட்டுக்கும் பொருந்துமா?

அந்த பதிவினை படித்து விட்டு இங்கு வந்து பின்னூட்டமிடுங்கள் . விஷயம் தெரிந்தவர்கள் விவாதித்தால் நன்றாக இருக்கும்.

Comments:
பாவம், ஏதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார். உட்டுடுங்க.. நான் கூட சில வருடங்களுக்கு முன்பு, இது மாதிரி சிந்தித்ததுண்டு. நம் மாநிலத்தின் முக்கியத்துவத்தை, உணர வைக்க உருப்படியாக வழிகள் இருக்கலாம். இவர் சொல்வது கிட்டதட்ட ஒத்துழையாமை இயக்கம்.
 
உருப்படியான வழிகள் ? நீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தராத இன்னொரு மாநிலத்தையும், கொலை குற்றங்கள் புரிந்தும் ஒரு மாநிலத்துக்கு முதல்வராய் இருந்து விசா கிடைக்காமல் எகிறுபவரையும், பிரச்சனை ஏற்பட்டாலேயொழிய, இந்தியாவில் வடகிழக்கு என்கிற திசையே இல்லை என்று இருக்கும் மத்திய அரசுக்கும், சொந்த மண்ணில் எடுக்கப்பட்ட கச்சா பெட்ரோலுக்கு குறைவான விலை குடுத்து பின் மாணவர் சமுதாயத்தின் எழுச்சி மூலம் மத்திய அரசுக்கு ஆப்பு வைத்த மாநிலத்துக்கும் எவ்விதமான உருப்படியான யோசனைகளின் மூலம் பாடம் கற்றுக் கொடுப்பீர்கள் ? நான் இதனை ஒத்துழையாமை இயக்கமாக ஆக்க சொல்லவில்லை, பின்னெந்த வகையில் இதனை சீர்செய்ய இயலும் என்பதுதான். போகுமிடமெல்லாம், பேக்கேஜ் தூக்கிச் செல்ல நாமென்ன VIP-ஆ இல்லை Samsonite-ஆ?
 
நாராயணன், முதலில் நமது பங்களிப்புக்கு ஏற்ற வசதிகளைப்பெறுதல் என்பது நமது உரிமை என்பதை உணரவேண்டும். இதை மாநிலக் கட்சிகள் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும். மக்களாட்சி அமைப்பில் மக்களுக்கு எவ்வளவு விசயம் தெரிகிறது என்பதுதான் பலமே.

இதற்கிடையில் இந்த மாதிரி சுரண்டலை மைய அரசு இரண்டு வழியில் பண்ணலாம். முதலாவது அஸ்ஸாம், மணிப்பூர் மாதிரி இராணுவத்தை அங்கு கொண்டுபோய் குவித்துவிட்டு பெட்ரோலையும் மற்ற வளங்களையும் கொஞ்சம் பிச்சைக்காசைப்போட்டு விட்ட்டு எடுத்துவந்துவிடலாம். ஆனால் அது இங்கு (த.நா) நடக்காது. அல்லது இது எல்லாம் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் அப்படீங்குற கருத்தை வளர்த்து மக்களிடம் பரப்பி இப்படி முன்னேறிய, முன்னேறுகிற மாநிலங்களை ஏமாற்றி சுரண்டலாம். இதுதான் இப்போது செய்யப்படுகிறது. (இந்த இரண்டாவது வழி பல குடும்பங்களில் செய்யப்பட்டு யாராவது ஒருவர் மொட்டையடிக்கப்படுவார்)

இது ஒரு கூட்டமைப்பு என்பதும் (Indian Union), இதில் உறுப்பினர்களின் வசதியும், வளமும்,சுதந்திரமுமே இந்த அமைப்பு நீடிக்க, சிறப்பாக செயல்பட ஒரே வழி என்பதை புரியவைக்கவேண்டும்.
ஒரே பிரச்சனை புரியுமா என்பதே! இன்னும் ரயிலில் டிக்கெட் எடுத்துத்தான் பிரயாணம் செய்யவேண்டும் என்று வடக்கில் புரிவதற்கே ரொம்ப காலம் ஆகும் என்று தெரிகிறது. இதில் வடக்கத்திய திமிர் வேறு கண்ணை மறைக்கும் போது என்ன உருப்படியான வழியோ?
 
உண்மை தங்கமணி. எனக்கென்னவோ பிரகாஷ் சொன்னதில் நம்பிக்கையில்லை. அந்தந்த மாநிலங்களின் பிரதிநிதிதுவத்திற்கு மரியாதை தராமல், டெல்லியில் இருப்பதனாலேயே எல்லாம் நடக்கும் என்று நினைக்கும் நினைப்பினை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆஸ்திரேலியாவினைப் போல் ஏன் இந்தியாவிறகும் இரண்டு தலைநகரங்கள் இருக்கக்கூடாது ? ஏனெனில் என்னத்தான் வரிந்து கட்டி பேசினாலும், சப்பாத்தி சாப்பிடுபவர்களுக்கு, சாதத்தின் அருமைகளும், பிரச்சனைகளும் தெரியாது. தென் மாநிலங்களை முன் வைத்து ஏன் தனியாக ஒரு தலை நகரம் அமையக்கூடாது ? இதன்மூலம் நிர்வாகம் திறம்படவும், பிரச்சனைகளை சுலபமாக தீர்த்தளிக்கவும் இயலும். முக்கால்வாசி தென்மாநிலங்கள், மாநில கட்சிகளாலேயே ஆளப்பட்டு வந்திருக்கின்றன, அவ்வகையில் தேசிய கட்சிகளின் இருப்பு என்பது ஏதோ ஒப்புக்கு சப்பாணிப் போல தான் இருந்து வருகிறது ... அது காங்கிரஸாயிருந்தாலும், பி.ஜே.பியாய் இருந்தாலும், கம்யூனிஸ்டுகளாயிருந்தாலும் (கேரளா தவிர்த்து)கூட.

இந்தியா போல ஒரு பல மொழி, பல இனம் வாழும் நாட்டின் ஏதோ ஒரு உச்சாணிக்கொம்பில் இருந்து நாட்டை கட்டிக்காப்பது அக்பருக்கும், பாபருக்கும் வேண்டுமானால் தோதாய் இருந்திருக்கலாம். ஆனால், மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் இது ஒரிடத்தில் அதிகாரங்களைக் குவித்து, டெல்லி என்னமோ, சர்வாதிகாரி போலத்தான் தெரிகிறது.
 
Folks,
Though I would give one arm and a leg to post in Tamil, I simply don't know how to.

Anyways the point of my post was not to divide the nation or question the idea of "Unity in Diversity". It has more to with practical governance and electoral reality.
 
நரேய்ன் உங்களுடைய கடைசி விவாதத்தில் எனக்கு உடன் பாடு இல்லை. உலகம் சுறுங்கி கொண்டிருக்கிற இந்த வேலையில் இந்தியாவின் ஆட்சியை வேறு ஒரு நாட்டிலிருந்து கூட இயக்க முடியும். அதற்கு இரண்டு தலை நகரங்கள் என்ற போர்வையில், எந்த உறுப் படியான செயல்களும் நடக்காமல் இருப்பதற்கு, இருக்கின்ற ஒன்றை வைத்தே உறுப் படியாக திட்டங்களும், மாநிலங்களின் சம பங்களிப்பும் இருக்க செய்ய வேண்டும்.

சில மாநிலங்கள் தன்னிறைவு அடையாத போது, மற்ற மாநிலங்களின் வருமானத்தை உபயோகப் படுத்தினால், குறைந்த வட்டி முறையை கொண்டு வரலாம். அதாவது ஒரு மாநிலம் மற்ற மாநிலத்திற்கு உதவி செய்யும் போது அதற்கான வருமானம் கிடைக்கிறது.

பல பெரிய கார்ப்போரேஷன் கம்பெனிகள், எப்படி நிற்வகிக்கின்றன. ஒவ்வொரு யூனிட்டும் சுயலாபம் அடைய வேண்டும், தேவையான போது கடனோ உதவியோ அளிக்கப் படும், ஆனால் அதனை திருப்பி செலுத்த் வேண்டியது, இலாபத்தினை கொடுக்க வேண்டியதும் ஒவ்வொரு யூனிட்டின் கடமையாகும்.
 
அந்த வலைப்பூவில் நான் இட்டப் பதிவு இதோ.
"A few self immolations here and there, and a fervent public display passion will make the guy who caused this - the next Anna."
But one thing is sure. In such an eventuality, the self immolations will not be from the family of the future Anna. They will be from other misguided families and will be forgotten in the course of the new Anna's reign. What is more, a close relative of the new Anna will become a central minister, as he has in the meantime learnt Hindi, while misguided people will have neglected that language for two generations, influenced by the propaganda of the new Anna.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
டோண்டு ராகவன்,
Why would learning another language which is not on the path of modern economic growth be of any consequence?

I can understand someone wanting to learn English - because all the latest research is more often than not published in English. Why would I want to learn a language which is neither aesthetic nor has any practical purpose?

I can't speak Hindi - tell me what am missing.
 
கங்கா, இன்னொரு தலைநகரம் என்று பேசுவதால், நான் இந்தி எதிர்ப்பாளனாக, பின்னால் வரும் மறுமொழிகளால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன். ஹிந்தி எதிர்ப்பு வேறு, ஹிந்தி அல்லது பிறமொழி பேசும் வடநாட்டவர்களை புரிந்து கொள்ளுதல் வேறு. ஹிந்தி எதிர்ப்பாளனாக இருந்தால், தனி தமிழ்நாடு என்கிற கோஷத்தினை கையில் எடுத்திருக்கலாம். நான் சொல்லவந்தது அதுவல்ல. ஒரே மொழி பேசும் நம்மிடையே கூட, திருநெல்வேலி தமிழ் பேசும் தமிழனும், சென்னை தமிழ் பேசும் தமிழனும், பேசும் மொழி ஒன்றாய் இருப்பினும் கூட, அவரவர்கள் கூட்டத்தில் அவரவர்கள் இருப்பது இயல்பு. இதை குற்றமாய் சொல்லவில்லை. ஆனால், இதுதான் நிதர்சனம். ஒரு மொழி பேசுவதிலேயே இவ்வளவு பிரிவுகள் இருக்கையில், இதற்கு சற்றும் உடன்படாத, சம்பந்தமில்லாத இன்னொரு மொழி பேசி, 2000 கிலோமீட்டர் தள்ளி உட்கார்ந்து கொண்டு இருப்பவனுக்கு எவ்வாறு பங்கனப்பள்ளி விவசாயியின் மீதோ, தெலுங்கானா பற்றியோ, நாகர்கோயில் பற்றியோ, வடக்கு கர்நாடகத்தினைப் பற்றியோ புரிதல் இருக்கும்? எவ்வாறு அவனிடத்தில் நீங்கள் இதனை எதிர்பார்த்தல் இயலும்? சொல்லப்போனால், இது டெல்லியின் தவறு என்று கூட முழுவதுமாக சொல்லிவிட முடியாது. தூரமும், மக்களைப் பற்றிய புரிந்துணர்வும் குறைவு. இதைத்தான் என் மறுமொழியில் குறிப்பிட்டிருந்தேன். எங்கே போனாலும், சாப்பாடு இல்லாமல், சாப்பிட்டது போல் இருக்காது நம்மவருக்கு. இங்கே வந்தாலும், சப்பாத்தியும், சுக்கா ரொட்டியும் இல்லாமல், இருக்காது அவர்களுக்கு, இவ்வாறு இருக்கையில், 'வேற்றுமையில் ஒற்றுமை' என ஜல்லியடிப்பது எதற்காக? இங்கே பிரிவினைவாதம் எங்கு வந்தது ?

நான் சொல்லுவது நிர்வாக சீரமைப்பு. செம்மையாக மத்திய அரசின் பணிகளை திறம்பட நிர்வகிக்கும் ஒரு அமைப்பு அவ்வளவுதான். நான் சொன்னதின் உள்ளர்த்தம், மக்களாட்சி என்பது, மக்களின் அருகாமையில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். மக்கள் எளிதில் அரசினை அணுகும் ஆட்சியாக இருக்க வேண்டும். நாம் என்ன மன்னராட்சியிலா இருக்கிறோம், டெல்லி மகாராஜாக்கள் பவனி வரும் போது தேர் வாயில் விழுந்து குறைகள் சொல்ல?

ராகவன், உங்களின் கோவங்கள் புரிகிறது. நான் என்றைக்குமே மொழி கற்றுக் கொள்வதின் எதிர்ப்பாளனாக இருந்ததில்லை. ஆனால், மொழியின் அவசியத்தையும், அதன் பயன்பாட்டையும் பற்றி யோசிப்பவன். செளகார்பேட்டையில் இருக்கும் சேடுகளுக்கும், ராஜஸ்தானிகளுக்கும், மார்வாடிகளுக்கும் ஹிந்தி நன்றாக தெரியும். வட இந்தியாவிலேயே பொழைக்க வேண்டியது தானே. நிறைய பேர்களின் வாக்குப்படி ஹிந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலை கிடைக்கும் என்பதுதான். இவர்களுக்கு கூட ஹிந்தி தெரியும், எதற்காக, சென்னையிலும், பங்களுரிலும், கோயம்புத்தூரிலும் குடும்பத்தோடு வந்து தங்கி வணிகமோ, வேலையோ செய்ய வேண்டும். ஆக வணிகமொழியறிவு என்பது சூழலைச் சார்ந்தது, அது தானாக வரும்.

நான் இங்கே முன்வைப்பது மொழி எதிர்ப்புவாதமல்ல. இந்த நாட்டில் தென்மாநிலங்கள் புரிந்து கொள்ளப்படாமல் போனதற்கும்,அவர்களின் இந்திய இருப்பினை தக்கவைத்துக் கொள்ளுதலின் அவசியத்தையும், அதற்கான நிர்வாக மாற்று அணுகுமுறைகளும் தான். இன்னும் ஏன் பிரிட்டிஷ் செய்துவிட்ட போன நிர்வாக முறைகளிலேயே காலத்தை கழிக்க போகிறோம் ? உலகின் எல்லா புனிதங்களும், சட்டங்களும், புரிதல்களும் கட்டுடைக்கப்படும்போது, இந்திய தலைநகரம் ஏன் கொஞ்சம் தன் "சர்க்கார் பாபு" தனத்தை விட்டு வெளியே வரக்கூடாது?
 
GDP சதவிகிதத்தை வைத்து ஒரு விவாதம் நடக்கிறது. அதிலும் குறிப்பிடப்பட்ட மாநிலங்களின் தனிப் பங்கு நிலவரம் பற்றி அறியாத நிலையில். Maharashtra மற்றும் Gujaratஇன் பங்கு நம்மைவிட அதிகமாக இருக்கலாமென்பது என் கணிப்பு. ஆகையால், இவ்வாதம் நம்மைவிட அவர்களுக்கே மிகவும் பொருந்தும். இத்தகைய சிந்தனைகளை அவர்களும் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. போகட்டும். பிற குறியீடுகளையும் எடுத்தாராய்ந்தால் நன்றாக இருக்கும். உதாரணம், நம் தேசப் படைகளில் மாநிலவாரியாகப் பங்கேற்பு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் இத்தகைய சதவிகிதங்கள், இயற்கை வளங்கள், இந்நான்கு மாநிலங்களில் உள்ள migrant labourersஇன் மூலம், என எல்லாவற்றையும் எடுத்து ஆராயலாமே?

நான் கூற வருவது என்னவென்றால், GDP என்ற ஒரே குறியீட்டை மட்டும் வைத்துக் கொண்டு, நாட்டு நலனுக்கு நாம் அதிகம் பங்களித்து விட்டதாக assume செய்து கொண்டு விட முடியாது. பரஸ்பர சார்புள்ள (inter-dependant) உலகத்தின் உண்மையிதுவே.

Narain,
//நான் சொன்னதின் உள்ளர்த்தம், மக்களாட்சி என்பது, மக்களின் அருகாமையில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும். மக்கள் எளிதில் அரசினை அணுகும் ஆட்சியாக இருக்க வேண்டும்.//

இதில் எனக்கு முழு உடன்பாடே. மாநிலங்களுக்கு அதிக உரிமைகள், சர்காரியா கமிஷன் பரிந்துரைகளை நடைமுறையாக்குதல், என இத்திசையில் முனையலாம்.

தங்கமணி,
//இன்னும் ரயிலில் டிக்கெட் எடுத்துத்தான் பிரயாணம் செய்யவேண்டும் என்று வடக்கில் புரிவதற்கே ரொம்ப காலம் ஆகும் என்று தெரிகிறது. இதில் வடக்கத்திய திமிர் வேறு கண்ணை மறைக்கும் போது என்ன உருப்படியான வழியோ?//

உங்களது கருத்து எனக்குக் கொஞ்சம் prejudicedஆகத் தெரிகிறது. மனதிலேற்றிய stereotypeகளை அகற்றிப் பார்த்தால் அவர்களிலும் உம்மை, எம்மைப் போன்ற எளிய மனிதர்களைக் காண்பீர். Anyways, your call :)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]