Mar 27, 2005
ஒரு படமும் சில பார்வைகளும்
ஆஸ்கார் கொண்டாட்டங்கள் முடிந்து, எல்லாரும் போற்றி, பாராட்டி, அவரவர் வேலைகளைப் பார்க்க போனபின், மிக மெதுவாக இந்திய திரையரங்குகளில் மில்லியன் டாலர் பேபி, வெள்ளிக்கிழமை வந்திறங்கியது. முதல் நாள் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒரு பாக்ஸிங் கதை என்று கேள்விப்பட்டவுடனே, எந்த விமர்சனங்களையும் நான் படிக்கவில்லை. ஏனெனில் சில வருடங்களுக்கு முன் இதைப் போல ஒரு பாக்ஸிங் வீரனின் கதையை பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் பாதிப்பில் உழன்றது நினைவுக்கு வந்தது. அதனாலேயே விமர்சனங்களுக்கு தடா (அ) பொடா.
ஒரு வழியாக சனி இரவு காட்சிக்கு டிக்கெட்டினை ரிசர்வ் செய்து வைத்து போனோம். போகும்போதும் ஒரு சொதப்பல், ரொம்ப சீக்கிரமா சத்யம் திரையரங்குக்கு வந்து விட்டோம் என்று நினைத்ததால், பக்கத்திலிருக்கிற ரிலையன்ஸ் வெப் வெர்ல்டுக்கு போய் அகலபாட்டையில் ஆப்பிளில் வந்திருக்கிற புதுப்பட டிரைய்லரும், ஐபிலிமிலின் முதல் உலகப்படங்கள் டிரைய்லரும் பார்க்க போய் உட்கார்ந்து, பொழுது போனது தெரியாமல்,சடாலென கடிகாரத்தைப் பார்த்து, அரக்க பறக்க ஒடிவந்து உள்ளேப் போனால், 5 நிமிஷ படம் போயே போயிந்தி.
படத்தினைப் பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு போய்விடலாம். பாக்ஸிங் சேம்பியன் ஆகும் ஆசையுடன் இருக்கும் பெண், பாக்ஸிங் ஜிம் நடத்தும் பயிற்சியாளர் + பாக்ஸிங் மேனேஜர், அவரின் நண்பன், இவர்களை சுற்றி சுழலும் கதை. எப்படி, முதலில் பயிற்சியாளாரால் உதாசீனம் செய்யப்பட்ட பெண், பின் அதே பயிற்சியாளாரால் பயிற்சி கொடுக்கப்பட்டு, உலக சாம்பியன்ஷிப்பினை அடைந்து, பின் மிகவும் நெகிழ்ச்சித்தரதக்க இறுதி முடிச்சோடு முடியும் படம். 4 ஆஸ்கார் விருதினை வாங்கி குவித்திருக்கும் படம். பெண் பாக்ஸராக நடித்திருக்கும் ஹிலாரி ஸ்வாங்கின் நடிப்பினை ஏற்கனவே பாய்ஸ் டோண்ட் க்ரை படத்தில் பார்த்து பிரமித்து போனவன் நான். மார்கன் ப்ரீமேன், கிளிண்ட் ஈஸ்ட்வுட் போன்ற பழம் தின்று கொட்டைப் போட்டவர்களின் நடிப்பினைப் பற்றி எழுதுவது சிறுபிள்ளைத்தனம்.
ஆனால், இந்தப்படம் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது, லெனின் "நாக் அவுட்". தேசிய விருது பெற்ற குறும்படம். இறந்து கிடக்கும் ஒரு ஏழை குத்துச்சண்டை வீரனின் நிலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். நண்பர் சத்யேந்திரா ("சத்யா"வில் அமலாவிடமிருந்து, செயினை திருடிக் கொண்டு போகும் திருடனாக நடித்திருப்பார். மிகச் சிறந்த மாற்று சினிமா நடிகர். பன்மொழி வித்தகர்) மிக அருமையாக நடித்திருப்பார். இந்த படமும், மில்லியன் டாலர் பேபியின் முடிவும் ஏறக்குறைய ஒன்றுதான்.
குத்துச்சண்டை என்பது விளையாட்டா இல்லை, எல்லா மனிதர்களுக்குள்ளும் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தின் வெளிப்பாடா ? வெறிக் கொண்டு கத்தும் பார்வையாளர்களின் உற்சாங்களை தாங்கி, தன்னோடு விளையாடுபவனை மரண அடி அடிக்கத்தூண்டுவது எது ? உணவுக்காக, பிற உயிரினங்களை தாக்கும் விலங்குகளைக் கூட மன்னித்து விட்டு விடலாம். விளையாட்டு எனக் கூறிக்கொண்டு வெறித்தனமாய் அடுத்தவரை காயப்படுத்துதலும், உடலால் பலவீனமடைய செய்தலும், எந்த விதத்திலும் நாகரீகமான மனிதர்களை முன்னிறுத்துவதில்லை. இதில் கிக் பாக்ஸிங் என்றொரு வகையுண்டு. இதில் கால்களும் உபயோகப்படுத்தப்பட்டு எதிர் அணி வீரர்களைத் தாக்குவார்கள். எத்தகைய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
என்ன கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், நாம் அடுத்த தலைமுறைக்கு ? சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் WWF என்றழைக்கப்படும் ரைஸ்லிங் பெடரேஷனின் மனிதத்தனமையற்ற விளையாட்டு என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்லுதலும், கையில் கிடைத்ததைக் கொண்டு பிறரை அடிப்பதும், ஒருவரின் அங்கங்களை தாக்கி ஊனப்படுத்தலையும், குழந்தைகள் சர்வ சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது நாம் இன்னமும் மனித மேன்மையில் ஒரு சிறு அடியை கூட எடுத்துவைக்கவில்லை என்பதை தான் உணர்த்துகிறது. ரோமானிய கலோசியங்களில் அடிமைகளின் மீது சிங்கங்களையும், விலங்குகளையும் ஏவி விட்டு, அதனை வேடிக்கைப் பார்க்கும் காட்டுமிராண்டித்தனமிருந்தது. கிளேயேடிட்டர்கள் விலங்குகளோடோ, சக அடிமைகளோடோ போரிட்டு உயிர் பிழைத்தல் கேளிக்கையாக பார்க்கப்பட்டது. 21-ஆம் நூற்றாண்டிலும் பெரிதாய் நாம் வளர்ந்துவிடவில்லை என்பதற்கு சான்றுகள் தான் WWFம், ப்ரொப்ஷனல் கிக் பாக்ஸிங்கும், குத்துச்சண்டைப் போட்டிகளும். ஒரு மனிதனின் திறமையை முன்னிறுத்தி அடுத்தவரை தோற்கடித்தல், அதுவும் ஆரோக்கியமான முறையில், என்பது தான் சிறந்த விளையாட்டாக இருக்க முடியும். இதைத்தாண்டி, சக மனிதனை கொலைவெறியுடன் ரத்தகளாரியாய் தரையில் சாய்த்தலை எந்த விளையாட்டிலும் சேர்க்க முடியாது. இது நம்முள் இருக்கும் மிருகத்திற்கு தீனிப்போடும் காட்டுமிராண்டித்தனம்.
வாங்கிய குத்துகளாலும், வீழ்த்திய நபர்களாலும், இன்று குத்துச்சண்டையின் திருஉருவாக திகழும் முகமது அலியின் நிலையென்ன ? பார்க்கின்சன் (அல்லது அல்சைமரா ?) நோயின் உச்சக்கட்டத்தில், நிற்கக்கூட திராணியற்று, நடுநடுங்கிக் கொண்டு இருக்கிறார், எல்லாம் உடலில் வாங்கிய குத்துக்களின் பின்விளைவுகள். அது அப்படியென்றால், மிருகத்தனத்தினை ஊட்டி வளர்த்து, காதை கடித்து, பெண்ணை கற்பழித்து, ஜெயில் கம்பிக்கும், கோர்ட்டுக்கும் இடையில் வலம் வருகிறார் மைக் டைசன். தளர்ச்சியாலும், உடல் பலவீனத்தாலும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் பணத்தினை எதிர்நோக்கியிருக்கும் எத்தனையோ மல்யுத்த, குத்துச்சண்டை வீரர்களின் கண்ணீர்கதைகள் அவ்வப்போது செய்திகளில் அடிபடும். இத்தனையும் தாண்டி, மனதால் வளரும் வன்முறையினை விளையாட்டு என்கிற பெயரில் அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
வரலாற்றிலிருந்து மனிதர்கள் பாடம் கற்றுக் கொள்ளவே மாட்டார்களா?

Comments:
<< Home
நாராயணன், கொஞ்சம் புரியவில்லை. பாக்ஸிங் 'விளையாட்டு' குறித்த உங்கள் மன சஞ்சலத்தை கேள்விகளை பதிவின் இறுதியில் வைத்திருக்கிறீர்கள். 'மில்லியன் டாலர் பேபி' இதில் எதையாவது தொட்டு செல்கிறதா? அல்லது பாக்ஸிங் மீண்டும் glorify செய்யப்படுகிறதா?
நாக் அவுட் படத்தில் பாக்ஸிங் குறித்து எந்த விமர்சனமும் இல்லை. ஒரு குத்து சண்டை வீரனின் அறுமையை புரிந்து கொள்ள முடியாத மக்களாய் கூட்டமாய் சமூகம் பார்க்கப்பட்டு, அந்த விதத்தில் குத்து சண்டை என்பது உன்னதமாக்கப்பட்டிருக்கும்.

பாக்ஸிங் என்கிற விளையாடு glorify செய்யப்படுதல் தான் கவலைக்குள்ளாகும் விஷயம். நாக் அவுட்டில் ஒரு விளையாட்டு வீரனின் அருமை என்கிற விதத்தில், சமூகத்தின் குறைமுகம் காட்டப்பட்டிருக்கும். என் சிந்தனைகள் அனைத்தும், பாக்ஸிங் என்கிற விளையாட்டினை உள்ளடக்கியதே. வெவ்வேறான கோணங்களில் இந்த இரண்டு படங்களும், பாக்ஸிங் என்கிற விளையாட்டினை சொல்லும் படங்கள். மி.டா.பே ஒரு பெண்ணின் பாக்ஸிங் வீரராகும் கனவினைத் தொடர்ந்து செல்லும் படம். இது போல எழுதாமல் விட்டது ராக்கி, அமெரிக்க ஹீரோயிசத்தின் உச்சத்தன்மையை ஒரு மனிதனை மனிதன் வீழ்த்தும் விளையாட்டின் மூலம் நிலைநிறுத்தியிருக்கும்.
இந்த பதிவு, அந்த விளையாட்டைப் பற்றியும், அவ்விளையாட்டு சமூகத்தில் உண்டாக்கி வைத்திருக்கும், உண்டாக்கும் கலவரமான மனநிலைகளின் தாக்குதல் குறித்தே.

நாராயணன்!!!...குத்துச்சண்டையை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால் எல்லா வீர விளையாட்டுகளையும் நீங்கள் கேள்விகேட்க வேண்டி வரும்...அப்படிப்பார்த்தால் போரில் ஈவு இரக்கமின்றி தலைகளை வெட்ட்டிச்சாய்த்தனரே அதை என்ன சொல்லவது...ஒரூ அணு ஆயுதததால் இலச்சக்கனக்கான் மக்களை கொன்று குவித்தனரே..அவர்களை என்னவென்று சொல்வது..இதில் முக்கியமான விடயன் என்னவென்றால் குத்துச்சணடையில் எதிராளியை எதிரி என்று கருதுவதில்லை..சக போட்டியாளர் என்றளவில்தான் நினைத்து போட்டியிட்டனர்...சென்னை யானைகவுனி பகுதியில் ஒருக்காலத்தில் இருந்த கண்ணப்பர் திடலில் எராளமான குத்துச்சண்டை போட்டிகள் நடந்த்தது உங்களுக்கு நினைவிருக்கிறாதா..? அதற்க்கான விளம்பரங்கள் வித்தியாசமாக இருக்கும்.."ஒரு ஜோடி ரோஷமான குத்துச்சண்டை" நாயக்கர் அவர்களின் வாரிசுகள் மோதும் காட்சிகள் காணத்தவறாதீர்கள்".....இப்போது கண்ணப்பர் திடலும் இல்லை..குத்துச்சண்டைகளும் நடப்பதுமில்லை..
நாராயணன், எனக்கு விளையாட்டு என்பது playfulness என்ற அளவில்தான் ஒத்துக்கொள்ள முடியும். விளையாட்டு என்பது விளையாட்டின் கணத்துக்கண சந்தோசத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும், இரண்டு நாய்க்குட்டிகள் விளையாடுவதுபோல. விளையாட்டுப்போட்டி என்பதே ஒரு முரண்நகை. அதுவே இயல்பான விசயமல்ல என்றே படுகிறது. விளையாட்டுப்போட்டிக்கும் யுத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது விளையாட்டும் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
நன்றி!
நன்றி!
//விளையாட்டுப்போட்டிக்கும் யுத்தத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அது விளையாட்டும் இல்லை என்றுதான் //
அப்படி தோன்றவில்லை தங்கமணி. ஒரு வேளை கிரிக்கெட் இல்லயென்றால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போட்டு மக்களின் ஈகோவை தணிக்க வேண்டியிருந்திருக்கும். இன்று போரின்(அதுவும் மிகவும் அபாயகரமாய் மாறக்கூடிய ஒரு போரின்) தேவையில்லாமல், கிரிகெட்டை பார்த்து மக்கள் அந்த சந்தோஷத்தையும், போட்டி மனப்பானமையையும் பெறுகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் யுத்தத்தை தவிர்பதாய், அதை பதிலீடு செய்வதாய் உள்ளதாய் தோன்றுகிறது.

"சக மனிதனை கொலைவெறியுடன் ரத்தகளரியாய் தரையில் சாய்த்தலை எந்த விளையாட்டிலும் சேர்க்க முடியாது. இது நம்முள் இருக்கும் மிருகத்திற்கு தீனிப்போடும் காட்டுமிராண்டித்தனம்.-Narain"
- Wordsworthpoet: ஒருவேளை இப்படி இருக்கலாமோ? அதாவது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கும் மிருகம் தன்னை வெளிப்படுத்த எப்போது தக்க சமயம் வாய்க்கும் என்று காத்திருக்கிறது; தான் செய்ய நினைப்பதையும் அதற்கு மேலும் கொடூரமான செயல்களையும், அதன் விளைவுகளையும் கண்முன் கண்டபின், தானே அதை செய்து முடித்த திருப்தியில் மென்மேலும் அப்படிப்பட்ட சிந்தனை வளர்வது கட்டுப்படுத்தப்பட்டு, வேற வேலய பாக்க கெளம்பிடுது.

வசந்த், கிரிக்கெட் வேண்டுமானால் அப்படியிருக்கலாம். ஆனாலும், கிரிக்கெட்டும் கொஞ்சம் அபாயகரமான விளையாட்டுதான் என்று சில சமயம் தோன்றுகிறது, அதைப் பார்க்கும் மக்களைப் பொறுத்து. கொல்கத்தாவில் இலங்கையிடம் சென்றதற்கு முந்திய உலகக்கோப்பை செமி பைனலில் தோற்ப்போம் என்று தெரிந்தவுடன் ஈடன் கார்டன் எரிந்தது. சென்ற உலகக்கோப்பையில் முதலாட்டம் ஆஸ்திரேலியாவுடன் தோற்றவுடன், கங்குலியின் வீடும், திராவிடின் வீடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. என்ன சொல்லி இதனை நம்மால் விளக்க முடியும்?
ஆனால், நான் சொல்ல வந்தது, சொல்ல விழைவது வேறு. நான் பார்ப்பது, வன்முறையை முதலீடாக, உடல் பலத்தினையும், எதிராளியினை தரையில் சாய்த்தலையும் வெற்றி என்று சொல்லுதலில் எனக்கு உடன்பாடில்லை. விளையாட்டு என்பது பார்ப்பவர்களையும், பங்கு பெறுபவனையும் குதூலிக்க செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன், மற்ற விஷயங்களை ஒதுக்கித் தள்ளி விட்டு ஒரு வித யோக நிலையை, ஒரே குறிக்கோளை அடையும் விதமாய் விளையாட்டுகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால், ஒரு விளையாட்டின் வெற்றி என்பது ஒரு மனிதனின் வீழ்ச்சி என்பதை என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை.
குத்துச்சண்டை, கிக் பாக்ஸிங், ரைஸ்லிங் என நீளும் பட்டியலில் நான் கண்கூடாய்ப் பார்ப்பது வன்முறையும், அடக்கி வைக்கப்பட்ட கோவங்களுமே. இதனை ரசிப்பவர்களின் மனநிலையினை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம். சற்றே சென்னையின் எந்த இணைய சேவை மையம் சென்றாலும், எதிராளியை சுட்டுக் கொண்டிருக்கும், ரத்தம் கசிய வாளால் வெட்டிக் கொண்டும், கொலைவெறியோடு தாக்கிக் கொண்டும், கணினி விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கும் பதின்ம வயதினரை பார்க்க இயலும். எவ்விதமான அணுகுமுறையை, வாழ்க்கையை இவ்விளையாட்டுகள் கற்றுக் கொடுக்குமென்று நினைக்கிறீர்கள். உடல் பலத்தினால், நான் வலியவன் என பறைசாற்றிக் கொள்ளுதலில் உங்களுக்கு, ஆதி மனிதனின் சுவடுகள் தெரியுமென்று நினைக்கிறேன்.

//கிரிக்கெட்டும் கொஞ்சம் அபாயகரமான விளையாட்டுதான் என்று சில சமயம் தோன்றுகிறது, //
நாநா, நான் சொல்லவந்தது கிரிக்கெட் ஆபத்தா, ஆபத்தில்லையா என்பது பற்றியல்ல. ஒருவேளை கிரிக்கெட் என்பது போரை பதிலீடு செய்கிறதோ, கிரிகெட் -நீங்கள் ஆபத்தானதாக் குறிப்பிடும் - தேசிய ஆசாபாசங்களுக்கும், கோபங்களுக்கும் ஒரு வடிகாலாக இருக்கிறதோ என்ற ஒரு வியப்பை மட்டுமே! உங்கள் பழைய பதிலுக்கு நன்றி!

விளையாட்டு வினையாகாமல் இருக்கும் வரை பரவாயில்லை. இங்கே அமெரிக்காவில் குழந்தைகள் கால்பந்து விளையாடும் போது பெற்ரோர் படுத்தும் அட்டகாசமும், மற்ற பிள்ளையைவிட தன் பிள்ளை நன்றாக விளையாடவேண்டும் என்று போடும் கட்டளைகளும் தாங்க முடியாது. இந்த விளையாட்டு போலன்றி, குத்து சண்டையும், மல்யுத்தமும் பள்ளி மாணவர்களால் பெரிதும் விரும்பப் படுகிறது. தொலைக்காட்சியில் வரும் குத்துசண்டைகள் பார்த்துவிட்டு, அதே போல ஒரு 11 வயது சிறுவன் (ilonel tate)தன்னுடன் விளையாட வந்த 6 வயது சிறுமியிடம் சண்டையிட்டு முடிவு விபரீதமான கதை 6 மாதங்களுக்கு நீதிமன்றங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது.
Narain,
This comment does not relate to this post. So, please bear with me.
In one of Kanchi Films post, I read your comment. The following lines are from that comment.
Narain wrote: "மேலும், ரவிக்குமார் தவிர்த்த தலித் எழுத்தாளர்களே, பெரியாரின் பெருமைகளையும், இருப்பினையும், தலித் மக்களின் மீதான அவரின் பங்கையும் நிறுவுகின்றனர். (மதிவாணன், அழகியபெரியவன், சிவகாமி)"
Can you please tell me where and when Sivakami wrote, proving Periya's need, contributions to Dalits etc.
I just want to read it to learn about it.
Thanks for your help.
Regards, PK Sivakumar

PKS, read that in a magazine article long time. Can't remember now, but anyway let me search for it.
நன்றி வசந்த், நீங்கள் சொல்வதும் உண்மையே, இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் ஒருவகையில் Ego satisfiers too.
தேன்துளி, பின்னூட்டத்துக்கு நன்றி. அதை தான் நானும் சொல்லுகிறேன். கால்பந்தாவது ஒரு குழு விளையாட்டு, ஆனால் நான் குறிப்பிட்ட விளையாட்டுகள் எல்லாமே தனி நபர் விளையாட்டுகள், இதில் விளையாட்டின் பங்கினை விட வன்முறையின் பங்கு தான் அதிகம்.

சிவக்குமாரின் கேள்வி தொடர்பாக,(என்னை கேட்கவில்லை எனினும்).
சிவகாமி சமீபத்திய எழுத்துகளில் பெரியாரை மிகவும் தாக்கியே எழுதியிருக்கிறார்.உதாரனமாய் புதிய கோடாங்கியிலேயே எழுதியிருக்கிறார். நாராயணன் அதை அறியாமல் இருந்திருக்கலாம். அதை முன்வைத்தே சிவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளதாக நினைக்கிறேன்.
ஆனாலும் நாராயனன் சொன்னது உண்மையாய் இருக்க வாய்புண்டு. சிவகாமி தனது பழைய எழுத்துகளில் பல இடங்களில் பெரியாரை புகழ்துள்ளார். (பழைய) கோடங்கியில் எழுதியுள்ளார். நேரடியான அவரது கணையாழி பேட்டியில் கூறியுள்ளார். உண்மை இதழுக்கு அளித்த பேட்டியில் வானளாவவே புகழ்ந்துள்ளார். அதெல்லாம் பழசு.இப்போது ரவிக்குமார், அ.மார்க்ஸ் ஈகோ சண்டை பெரிதாகி அதற்கு பெரியாரை பலி கொடுக்க முடிவு செய்தபின் சிவகாமி தன் நிலைபாட்டையும் மாற்றிகொண்டுள்ளார். இது சிவகாமிக்கு மட்டுமல்ல. ரவிக்குமாருக்கும் மற்ரவர்களுக்கும் கூட பொருந்தும். (காரல்) மார்க்ஸைவிட பெரிய ஆளாக பெரியாரை ரவிக்குமார் புகழ்ந்து பேசியதையும், "பிற்படுத்த பட்டவர்களின் பிரதிநிதியாக மட்டும் பெரியாரை பார்க்க முடியாது' என்று திருவாய் மலர்ந்தருளியதையும் பெரியாரியம் தொகுப்பில் பார்க்கலாம். காலத்தால் கருத்துக்களில் மாற்றம் ஏற்படலாம்தான். ஆனால் இது கருத்து மாற்றம் மட்டுமா என்பதுதான் ஆராய்சிக்குரியது. அதை இங்கே, அதுவும் சிவக்குமாரை வைத்துகொண்டு செய்ய முடியும்' என்று தோன்றவில்லை. என் பதிவில் இந்த பிரச்சனையை அணுகும் நோக்கம் உள்ளது. அதற்கு தேவையான ரவிக்குமாரின் சில கட்டுரைகள் கைவசம் இல்லை. பார்போம்!

நன்றி வசந்த். நான் சிவகாமியினை வாசித்து சில ஆண்டுகளாகின்றன. சிவக்குமாருக்கு உங்களின் பின்னூட்டம் பதிலாக இட பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன். ரவிக்குமாரினைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை தனிமடலாக எழுதுகிறேன். ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சியும், அதன் பின் இருக்கும் அரசியலிக்கு பலிகடாவாகவும் ஆக்கப்பட்டு விட்டதன் பரிதாபமும் தெரியும். ஆனால், இதற்கு மேல் இந்த பதிவில் இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது நன்றாக இருக்காது. Over and out.
பாக்ஸிங் பற்றிய பேச்சுக்கள் தொடரும், இலக்கியத்தைத் தவிர்த்து.

நன்றி வசந்த், நான் சொன்னது விளையாட்டுப்போட்டியும், போரும் ஒன்றான தன்மையை தன்னகத்தே கொண்டிருப்பதால்தான் ஒன்று இன்னொன்றின் பதிலியாக முடிகிறது இல்லையா? நான் சேதங்கள், உயிர்கொலைகள் பற்றிச் சொல்லவில்லை. அடிநாதமாக அமைந்த உணர்வைக்குறிப்பிடுகிறேன். மாறாக விளையாட்டுத்தனம் என்பது முற்றிலும் வேறானது; அது விளையாடிற்காகவே (அந்தக் கணங்களில்) வெற்றி தோல்வி என்ற இரட்டை நிலையைக் கருதாமல் செய்யப்படும் விளையாட்டு.
நாராயணன், ரவிக்குமார் பற்றிய செய்திகளை நான் அறியலாமெனில், ரோசாவுக்கு அனுப்பும் போது எனக்கும் (ntmani@yahoo.com) அனுப்பினால் நல்லது. நன்றி. அது உங்களிருவரின் தனிப்பட்ட விசயங்கள் சார்ந்தது எனில் இதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. :)

N.., Thanks! pl do write. But beyond all the criticism, I consider Ravikumar's writings and views as very important, which we have already discussed in a chat. I just want to say that again.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]