Mar 31, 2005

டெலிபோனில் முடிந்த திருமணம்

சாதாரணமாய் இந்த டெலிபோன் காதல் எல்லாம் "காதல் கோட்டை" அகத்தியன் சமாச்சாரங்கள். இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்த படம் புதிதாய் இருக்காது. இந்த படம் உருதுவில் டப் செய்யப்படவில்லை. ஆனாலும், அவர்களுக்கு விவரம் தெரியும். காரணம், அவர்கள் படம் பார்க்காமல் நேரிலேயே ஒரு ஹீரோவை பக்கத்தில் வைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோ: சோயப் மாலிக். பத்ரியின் பதிவில் ஜாகீர்கானுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த பெண்ணினை பற்றிய செய்தி வந்திருந்தது. நம்மை விட பாகிஸ்தானியர்கள் புத்திசாலிகள்.

சோயப் மாலிக் பாகிஸ்தானில் வளர்ந்து வரும் ஆட்டக்காரர் மற்றும் ஆப் ஸ்பின்னர். போன பாகிஸ்தான் டூரில் சதமடித்ததாக ஞாபகம். சோயப் மாலிகின் காதலி ஒரு இந்திய பெண். இதுல எங்கய்யா காதல் கோட்டை வருதுன்னு சொல்றிங்களா? மேட்டரே அங்கதான் தொடங்குது. காதலி, ஆயிஷா சித்திக் இருக்குமிடம் ஹைதராபாத் (இது நம்மூரு நாயுடுகாரு இடம், பாகிஸ்தானிய ஹைதராபாத் இல்லை). காதல் தொடங்கியது 1999ல்

2002 ஆம் ஆண்டு டெலிபோனிலேயே அவர்கள் மண வாக்குறுதிகளைக் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்கள். இஸ்லாமிய ஷரியா சட்டங்களின் படி இது முறையான திருமணமே. ஷிரியா சட்டத்தில் மணமக்கள், திருமண வாக்குறுதிகளை, மனஒப்பந்தத்தை டெலிபோன் மூலமே பரிமாறிக் கொள்ளலாம்.

பல்வேறு விதமான இந்திய-பாகிஸ்தான் அரசியல் பிரச்சனைகளுக்கிடையில் முடிவாக கடந்த செவ்வாய்க்கிழமை பெண் வீட்டுக்காரர்கள் ஹைதராபாத்தில் மொத்த பாகிஸ்தான் அணிக்கும் விருந்து கொடுத்து, அவர்களின் மாப்பிள்ளையை வரவேற்றனர். ஆயிஷா, ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தான் சென்று தன் இல்லற வாழ்க்கையை தொடங்குவார் என்று தெரிகிறது. இதுதான் சோயப் மாலிக் கீளின் போல்டான கதை.

இந்த திருமணம் செல்லுமா? போனில் எப்படி இவ்வளவு பெரிய வாழ்வின் மிக முக்கியமான விசயம் நடக்கலாம் ? இது பெண்ணுரிமையா , ஆணுரிமையா ? மதங்கள் இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றலாமா ?போன்ற கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம், ஆயிஷா பாகிஸ்தான் போகும்வரை. அப்புறம் எல்லோரும் கிளம்பி "மெட்டி ஒலி"யோ "மனைவி"யோ பார்க்கப் போய்விடலாம். இல்லை, தமிழ் புத்தாண்டு சிறப்பு தள்ளூபடியில் போதீஸிலோ, சென்னை சில்க்ஸிலோ போய் வாங்குவதற்கான பட்ஜெட்டினை போட ஆரம்பிக்கலாம்.

பார்க்க:
1. http://in.rediff.com/cricket/2005/mar/31malik.htm
2. http://www.rediff.com/cricket/2005/mar/28malik.htm

இது தாண்டி, என் மொபைல் எண்ணினை தருகிறேன். ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் ;-) அதுவரை 'தேவுடா..தேவுடா...'

Comments:
நரேன்...

விஜய்க்கு போல, உங்களுக்கும் 'வீட்டல' ஆளில்லையா? இருந்தாலும் இதையெல்லாம் படிக்க மாட்டாங்கன்ற தைரியமா? என்னவோ போங்க! மறுபடியும் அல்வாசிட்டியின் 'இயக்குனர் மகேந்திரன்' பதிவுக்கு போய் வாருங்கள். உங்களுக்கான ஒருகடுதாசியை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டேன்.

- சந்திரன்
 
//இது தாண்டி, என் மொபைல் எண்ணினை தருகிறேன். ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் ;-) அதுவரை 'தேவுடா..தேவுடா...'//

தேவுடா, தேவுடா :))
 
//என் மொபைல் எண்ணினை தருகிறேன். ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் ;-)//

தேடல் ஆரம்பித்துவிட்டது.

சந்திரன்,

நாராயணன் சொல்லி நான் தெரிந்துக் கொண்டது, தற்போதைக்கு அவர் "கட்டை பிரம்மச்சாரி" . என்ன கட்டை என்று கேட்காதீர்கள்.
 
சந்திரன், என் வீட்டில் என்னை காலச்சுவடு வாங்கிய காலக்கட்டத்திலிருந்து ஒரு மாதிரியாக பார்த்து ஒதுக்கிவைத்து விட்டார்கள் ;-) அதனால், எதுவும் பெரியதாய் விளைவுகளை ஏற்படுத்தாது..

விஜய், நான் "செமகட்டை" இல்லை ;-)
 
சொல்ல மறந்து விட்டுப் போனது, இப்படியே போனால், யாஹூ தூதுவனிலோ, அல்லது குறுஞ்செய்திகளிலோ கூட திருமணங்கள் நடக்கலாம். எங்கேயோ படித்தது, குறுஞ்செய்தியில் "தலாக்" சொல்லப்பட்டு, விவாகரத்து கோரப்பட்டது என்று. ஒரு விதத்தில் மதங்கள், மாறிவரும் தொழில்நுட்பத்தினை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகின்றது என்ற அளவில் அல்ப சந்தோஷமே.
 
தகவல் தொழில் நுட்பத்தில் இப்படியும் ஒரு வசதி.

காதலர்களுக்கு வாழ்த்துக்கள். எப்பொழுதும் மிகவும் பரபரப்புடன் ஆரம்பிக்கும் காதலும், கல்யாணமும், விவாகரத்தில் முடிந்து விடுகிறது. (ஒரு வேளை மற்றொரு பரபரப்பனா செய்திக்கா?). அது போல் எதுவும் ஆகாமல் இருந்தால் சரிதான்.
 
கலியாணம்கறது ஆயிரங்காலத்து பயிரு. அதனால எதச் செஞ்சாலும் சரியா செய்யனும். சின்ன புள்ல வுட்ட வெள்ளாமை வூடு வ்னது சேராதுன்னு சொல்லுவாங்கெ. எதுக்கும் பஞ்சாயத்து பெரிய மனுஷங்கள ஒரு வார்த்தை கேட்டுப்போட்டு அதும்படி நடக்கோனும். பதினாறும் பெத்து பெருவாழ்வு வாழோனும்னு அவுங்க ரெண்டுபேத்தையும் வாழ்த்துறேன்.
 
//என் வீட்டில் என்னை காலச்சுவடு வாங்கிய காலக்கட்டத்திலிருந்து ஒரு மாதிரியாக பார்த்து ஒதுக்கிவைத்து விட்டார்கள் ;-) அதனால், எதுவும் பெரியதாய் விளைவுகளை ஏற்படுத்தாது..//
ஹீஹீ...இப்படி ஒதுக்கப்பட்ட நம்மைப்போன்றவர்களுக்கு பாண்டிச்சேரியில் உள்ள கள்ளுக்கடையில் ஒரு சந்திப்பு இந்த வருட முடிவில் நடைபெறவுள்ளது. கண்ணீரும் கம்பலையுமாய் அனைவரையும் திரண்டு வரும்படி அன்போடு அழைக்கின்றேன்.
 
அப்படிப் போடு டிசே. ஆக, பாண்டிச்சேரியை பைத்தியமாக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு.... பைத்தியமானா பரவாயில்லை..பீகார் ஆகாம இருந்தா சரி ;-)
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]