Mar 18, 2005

No boom-boom, just ngam-ngam

காகங்கள் நேற்றிரவு என்னிடத்தில் பேசிக்கொண்டிருந்தன. பாவம் காகங்கள், சரியான கறிசோறு சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிறதாம். என் வீட்டில் அதற்கு வழியில்லை. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதுவல்லாமல், சென்னையின் தெருவோர கையேந்தி பவன்களில், காகங்களை அடித்துக்கொன்று, அதையே சிக்கன் கறி என விற்கிறார்களாம். பாவம் ஒரு பக்கம் கறிசோறுக்கு ஆசை, இன்னொரு பக்கம் தானே கறியாகிவிடும் அபாயம். கஷ்ட ஜீவனம்தான் காகமாய் இருப்பது. காகங்களுக்கு கறிசோறு எப்படி போடுவது ?

------------------------------------------
அமெரிக்க போருக்கு பிறகு வியட்நாம் சின்னாபின்னாமாகிவிட்டது. வேலையில்லை. எங்கு பார்த்தாலும் போரில் இறந்துபோன ஆண்களை தவிர எஞ்சியிருப்பவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் தவிர கொஞ்சமே ஆண்கள். பொருளாதார சீர்கேடு, வறுமை, நோய்கள் என உலகின் எல்லா சீர்கேடுகளும் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தன. ஏதாவது வேலை கிடைக்குமா ?

---------------------------------

Page 3 பார்த்த பாதிப்பில் கொஞ்சம் துருவி துருவி இந்தியாவில் இந்த மாதிரி விசயங்கள் நடக்கிறதா என்று நோண்டிக்கொண்டிருந்தேன். கிடைத்த விவரங்கள் அதிர்ச்சியாயிருந்தது. வழக்கம்போல இது ஏதாவது பத்திரிக்கைகளின் சர்க்குலேஷன் ஜிகினாக்கள் என்று நினைத்து விட்டேன். ஆனாலும், தெஹல்காவின் மீது எனக்கு அபார நம்பிக்கையிருக்கிறது. இந்தியாவின் இருண்ட விஷயங்களை தெஹல்காவைப்போல் வேறெந்த வார இதழும் சொல்லுவதில்லை. இருந்தாலும் கொஞ்சமும் நம்பிக்கை வராமல் படித்து விட்டு மூடிவிட்டேன். இந்தியாவில் இதுவா..ச்சீசீ ?

---------------------------------------------

கேரளாஏரோடிகா என்கிற இணையதளம் மிகச் சிறப்பான இணையதளம். நவரசம் சொட்டும் பாலியல் கதைகளை (நம்மூரு லோக்கல் செக்ஸ் புத்தகங்கள் போல) தினமும் பதிந்து தொடர்ந்து சிறப்பான சேவையாற்றி வருகிறார்கள். எல்லாவிதமான கதைகளும் இலவசமாக கிடைக்கும்.

-------------------------------------

கம்போடியா என்றால் நமக்கு நினைவுக்கு வருவது அங்கோர் வாட் கோயிலும், அதன் இராமயண சிறப்புகளும் (சரியா நா.கண்ணன், நீங்கள் இப்போதுதானே போய்விட்டு வந்தீர்கள்) சற்றே உள்ளே தள்ளி போனால், நல்ல இடம்தான். என்ன ஒரே குறை, எங்கு பார்த்தாலும் பெண்கள், பாலியல் தொழில்..இதை தொழில் என்று சொல்லுவது அபத்தம், அவர்கள் பாலியல் கொத்தடிமைகள். தினமும் 4-5 வாடிக்கையாளர்களை கையாள வேண்டிய நிர்பந்தம். 10-15 பெண்களை ஒரே அறையில் தங்கவைத்து வாடிக்கையாளருக்காக மட்டுமே வெளியெ விடப்படும் நிலைமை. தப்பி ஓட நினைத்தீர்களோ தீர்ந்தீர்கள். ஒரே புல்லட்டில், சுமங்கலியாய் நெற்றிக்கு பொட்டிட்டு அனுப்பிவிடுவார்கள். புல்லட் வராத வழிகள் உண்டா தப்பியோட?

---------------------------------

அவன் அவளை அருகில் வா என்று சைகை செய்தான். அவள் அவனருகில் வந்தாள். மிக நீண்ட முத்தத்தோடு தொடங்கியது. அவளை நிர்வாணமாகி முத்தங்களை அள்ளி இறைக்கத் தொடங்கினான். சற்று நேரம் கழித்து, அவன் அவளிடம் "ம்ம்...வேலையை பார்" என உத்தரவிட்டான். அவளும் அவனின் வெற்று மார்ப்பினூடே பயணித்து, பேண்ட் ஜிப்பினை கழற்ற துவங்கினாள். அவளின் முக்கிய வேலையே அங்கே அதுதான். இன்னும் இன்றைக்கு எத்தனை பேரின் ஜிப்போ?

-----------------------------------------------

இந்தோனேசியாவில் ட்சுனாமியினால் அநாதையான குழந்தைகள், சிறார் பாலியல் தொழிலுக்காக தத்தெடுக்கப் படுகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும், இந்தோனேசிய அரசு, தத்தெடுப்புக்கு தடை விதித்து விட்டது. எங்கே போனார்கள் மற்ற சிறுவர்கள்?

-----------------------------------------------
இந்த மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்திருக்கும் ஒரு செய்தி. சிறுவர் பாலியல் பலாத்காரங்கள் உலகெங்கிலும் அதிகரித்து உள்ளது. உலகெங்கிலும் மிக வேகமாக பீடோஃபைல்கள் (Pedophile) அதிகரித்து வருகிறார்கள். புரியாதவர்களுக்கு, பீடோஃபைல்கள் எனப்படுபவர்கள் சிறுவர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளுபவர்கள். எவ்விதமான சட்டங்களிட்டும் சிறுவர் பாலியல் பலாத்காரத்தினை தடுக்கமுடிவதில்லை. முக்கியமாக, ஐரோப்பியர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்களுக்கான சிறுவர்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த, இந்த "மாமா" வேலை செய்பவர்கள் உலகெங்கிலும் தங்களுக்கான இடங்களை அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள். அதுவும் ஆசியா ஒரு மிகப் பெரிய விற்பனை சந்தை.

ஒரு மாத முந்திய தெஹல்காவில் கோவா எப்படி பீடோஃபைல்களின் சொர்கமாக மாறி வருகிறது என்பதைப் பற்றிய ஒரு அதிர்ச்சி அறிக்கை வந்திருக்கிறது. ஆயுர்வேத சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா என்பது போல், சற்றே சிறார் பாலியல் சுற்றுலா தேசமாக கோவா மாறி வருகிறது. சின்னஞ்சிறு சிறுவர்கள், வெளிநாட்டு பயணிகளின் வேட்கையை தீர்க்க வேட்டையாடப்பட்டு, கொத்தடிமையாக ஆகப்பட்டுள்ளார்கள். இதுப்பற்றிய கவலைகள் ஏதுமின்றி, கவர்னர் செய்தது தவறு என பிஜேபியும், சரி யென்று காங்கிரஸும் சண்டைப் போட்டுக்கொண்டு.

இதன் பின் எனக்கு எழும் கேள்விகள் மூன்று. 1. பீடோஃபைல்கள் உருவாக காரணமென்ன? 2. உளவியல் ரீதியாக இன்றைக்கு பலியாகும் சிறுவர்களின் எதிர்காலம் என்னவாகும் ? மாறிவரும் பாலியல் சுதந்திரப் போக்கும், இம்மாதிரியான சீர்கேடுகளையும் எவ்வாறு இனம் பிரிப்பது ? இதுப்பற்றிய அறிவார்ந்தோர் கருத்தினை எதிர்ப்பார்க்கிறேன்.

--------------------------------------------------------
Page 3-யில் இடம் பெற்றிருப்பது, உத்தரபிரதேஷத்திலிருந்து நட்சத்திர பார்ட்டிகளுக்காக கடத்தி வரப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படும் சிறுவர்கள்.

கம்போடிய பாலியல் சந்தையில் அதிகமாய் விற்கப்படுபவர்கள், வியட்நாமிய, தாய்லாந்து பெண்கள், சிறுவர்கள். ரீடர்ஸ் டைஜஸ்டில் ஆயிரக்கணக்கில் இருக்கும் சிறுவர் பாலியல் வன்முறையின் சராசரி வயது 15.. 4 வயதான பெண் குழந்தைகள் கூட அவர்களின் ஆல்பங்களில் உண்டு, சராசரியாக 8 -13 வயதுள்ள பெண் சிறார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 5 வாடிக்கையாளர்களை கவனித்தல் வேண்டும்.

தெஹல்காவில் குறிப்பிடப்பட்டிருப்பது கோவா சிறுவர் பாலியல் சுற்றுலா தளமாக மாறிவருவதும், பிற நாடுகளில் அப்பயணிகள் துரத்தியடிக்கப்பட்டவர்கள் என்பதும்.

ஜிப்பினை இறக்கிய அவள் 8 வயதேயான வியட்நாமிய பெண், கம்போடிய சந்தையில் அமெரிக்க, ஜரோப்பிய ஆண்களுக்கான விற்கப்பட்டவள்.

"no boom-boom, just ngam-ngam" என்பது வியட்நாமிய ஸ்லேங்கில் நான் வாய் உறவு(oral sex) கொள்வேன் என்று சொல்லும் கீழ்த்தரமான வார்த்தை)

கேரளா ஏராடிகாவில் அதிகமாய் இடம்பெறுபவை வேலைக்கார சிறுமிகளுடனும், சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களுமான உடலுறவு (புனைவு/நிஜக்) கதைகள்

பீடோஃபைல்களின் குறிகளை "ரோசாவசந்த்" ட்ரீட்மெண்ட் கொடுத்து, காக்கைகளுக்கும் இடலாம். எவ்வளவு நாட்கள் தான் காக்கைகள் வெஜிடேரியன்களாக இருப்பது.

Comments:
தெகல்ஹா கட்டுரை ஒரு நல்ல கட்டுரை. மாமல்லபுரம் இந்த விசயத்தில் ஒரு ஹாட் ஸ்பாட். குழந்தைகள் வெளிநாட்டினருடன் பழகி நிறைய பணம் கொண்டு வருவதால் சில பெற்றோர் கண்டு கொள்வதில்லை. இலங்கையும் இந்தச் சுற்றுலாவில் முக்கிய இடம் வகிக்கிறது.

நல்ல பதிவு! நன்றி!
 
congratulations... on becoming a magical realist :-)
 
magical realist and me? என்ன பண்றது பிரகாஷ், எழுததான் முடியுது, கசாப்பு கடைக்காரன் வேலையா செய்ய முடியும்.

தங்கமணி, மாமல்லபுரம் பற்றியும், இலங்கையின் நிலவரம் பற்றியும் அறிந்திருக்கிறேன். ட்சுனாமி வந்ததைக் கூட யாரோ, தாய்லாந்தில் நடக்கும் பீடாஃபைல்களைப் பார்த்த கடவுளின் கோவம் என்றெல்லாம் பீலா விட்டார்கள். சட்டங்களினால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்கிற கையாலாகததனம் தான் என் கோவத்தினை அதிகரிக்கிறது.
 
நல்ல பதிவு நாராயணன். உங்களின் இது போன்ற நடையை மனதில் வைத்தே, உங்களின் 'பலூன் பார்கும் பெண்கள்' பதிவை ஒரு சிறுகதையாய் எழுத கேட்டேன். பாராட்டுக்கள்!
 
நல்ல பதிவு நாராயணன். உங்களின் இது போன்ற நடையை மனதில் வைத்தே, உங்களின் 'பலூன் பார்கும் பெண்கள்' பதிவை ஒரு சிறுகதையாய் எழுத கேட்டேன். பாராட்டுக்கள்!
 
இது ஒரு கசப்பான நிஜம். என்னவென்றே புரியாத நிலையில் சிறுவ ர்களும், சிறுமிகளும் பாலியல் கொடுமைக்கு ஆ ளாவதும், உள்வியல் ரீதியில் தாக்கப் படுவதும் அதிகம். இ த்தகைய சிறுவர்களுக்கு இது தவ று என்று சொன்னாலும் ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் மேலும் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். தன்னுடைய வாடிக்கையாளரை இழந்துவிடுமோ என்ற அச்சத்தில் அ வரின் கேவலமான ஆசைகளை நிறைவேற்றி அல்லலுறும் 7 வயது சிறுமி ஒ ருத்தியை STD Clinicல்சந்திக்க நேர்ந்தது. Step mom, dad என்று வாழும் சமூகத்தில் இது அதிகம் என்றாலும், பெற்றோரே தன் குழந்தைகளுடன் இவ்வாறு பழகுவது இந்தியாவிலும் சகஜம் தான்.ஒரு முதல்வரே(பீஹாரோ, M.P மறந்து போய்விட்டது) இப்படி பல சிறுவர்களுடன் பழகியதும், அவர்கள் தப்பி போகாதவறு மின்சாரமூட்டிய வேலி வைத்திருந்ததையும் படித்திருக்கிறேன். இந்த கொடுமை நீங்க சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பாலியல் பற்றி சொல்லித்தரவேண்டும்.
நன்றாக எழுதுகிறீர்கள். இந்த வாரம் முழுதும் கசப்பான உண்மைகளின் வாரமா?
 
நரேன், பலவித சிந்தனைகளை கிளப்பி விட்டு விட்டீர்கள். ஆனால் இந்த வக்கிரங்களுக்கு காரணம் வறுமைதான். பணம் படைத்தவர்களின் பொழுது போகாமல், புதுமையை தேடி அலையும் குணமும், பணமும், செல்வாக்கும் இருந்தால் எதையும் வாங்கலாம், எதனையும் செய்யலாம் என்ற திமிர். இதே குற்றசாட்டு அன்று சார்லிசாப்ளினிடமும், இன்று மைக்கேல் ஜாக்சன் மேலும் வீசப்பட்டுள்ளது. மிருக உணர்ச்சி என்று சொல்லுகிறார்கள். ஆனால் மிருகங்கள், தங்கள் உணவுக்கும், தற்காத்துக் கொள்ளவும் மட்டுமே பிற உயிர்களை வதைக்கிறது.
பத்மா, நீங்கள் சொன்ன பாலியல் கல்வி இங்கு எப்படி வருகிறது?
அப்புறம் நரேன், நேயர் விருப்பம்- இந்த 360 டிகிரி இண்டராக்டிவ் பற்றி சொல்லுங்களேன், இதை பற்றி முன்பே எழுதி விட்டீர்களா? நல்ல சுவையான சப்ஜெட் ஆயிற்றே!
உஷா
 
உஷா
தவறான் இடங்களில் தந்தையே ஆனாலும் தொடுவதும், முத்தமிடுவதும் தவறு என்று சொல்லித்தர வேண்டும். இங்ஏ 6 வயது குழந்தைகளுக்கு அந்தரங்க பாகங்களை யாரேனும் தொட்டாலோ, கில்ளினாலோ பள்ளிகளில் கவுன்சிலரிடம் சொல்லுமறு உடல் நலம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். தறென்று விவரம் புரியாத வயதில் எது சரி என்ரு என்பது தெஇர்யவேன்Dஆமா. இதற்கான brochures அரசே தருகிறது
 
Usha
it is important to teach children taht the should no tlet any one touch their parivate parts. we request the parents to ask children if any one touched or forced them to touch thair body frequently during a conversation or fun activities. Oral sex has become common among lower and middle school children. It is shocking to know such violations (sporadic)in day care centers as well.We aslo request parents to check the kids under age 5 when they give them shower.
 
நரேன்,
முக்கியமான நிகழ்வைத் தேவையான நடையில் எழுதியிருக்கிறீர்கள். தாய்லாந்து சிறார்களின் நிலையை விவரணைப் படமொன்றில் பார்த்தபொழுது நிலைகுலையச் செய்வதாக இருந்தது. pedophile, bestiality போன்றவை பாலியல் வன்முறை என்ற தளத்திலே வைத்தே பார்க்கவேண்டும் என்ற கருத்து பரவலாகவேண்டும். நல்ல பதிவு. தேன் துளி குழந்தைக்கல்வியைப் பற்றிக் கூறியிருப்பதும் முக்கியமானது
 
//it is important to teach children taht the should no tlet any one touch their parivate parts.//
இது மிக அவசியம். ஆனால், வெகு சில downsidesம் உள்ளன. உதாரணத்துக்கு, ஃபிரான்ஸில் செட்டிலாகிவிட்ட என் நண்பனின் உறவினர் குடும்பம் ஒன்று வெகுநாள் கழித்து இந்தியா போக, தாத்தா பாட்டிகள், மாமா அத்தைகள் என்று அனைவரும் அந்தக் குடும்பத்து இரு சிறுவர்களையும் நம் ஊர் வழக்கப்படி, கன்னத்தைக் கிள்ளுவது, மடியில் உட்காரவைத்துக்கொண்டு கொஞ்சுவது என்று இருக்க, சிறுவர்கள் இரவுபூராவும் ஓ என்று அழுகை. 'தொடக்கூடாத இடத்தில் அனைவரும் தொடுகிறார்கள்' என்று. என் நண்பன் சொன்னது இது. ஆனாலும், இதெல்லாம் isolated incidents என்பதால், இதுகுறித்த விழிப்புணர்ச்சி மிகஅவசியமே.

மற்றப்படி, நாராயணன், இந்த வாரம் இனிய வாரம் என்ற ரேஞ்சுக்கு படு ஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. கலக்குங்கள்.
 
பத்மா அரவிந்தின் கூற்று மிக அவசியமானதும் முக்கியனானதுமாகும். இதுப்போன்ற விஷயங்களைப் பற்றிய தெரிதல் இந்தியாவில் குறைவு. எந்த பள்ளிகளிலும் சொல்லித்தர படுவதில்லை. அனாவசியம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. நீங்கள் சொன்ன அந்த கையேடு இருந்தால் பதியுங்கள், அல்லது அனுப்பி வையுங்கள்.

இந்த பதிவில் எழுத நினைத்து எழுதாமல் போனதை மாண்டீ சுட்டிக் காட்டிவிட்டார். குழந்தைகளைத் தொடும்போது பயத்துடனும், சர்வ ஜாக்கிரதையுடனும் இருக்க வேண்டியிருக்கிறது.

உஷா, 360 டிகிரி இண்டரக்டிவ் என்பது என் சொந்த நிறுவனம். நட்சத்திர பட்டம் துறந்தபின் எழுதுகிறேன். எல்லாம் வெட்டி முறிக்கும் மென்பொருள் துறைதான்.

மாண்டீ, கலக்கலாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் நன்றி. ஏதோ என்னாலானது.
 
சொல்ல மறந்தது, கசப்பான உண்மைகளின் வாரமென்றெல்லாம் இல்லை. நான் பார்க்கும், படிக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். "ரெளத்ரம் பழகு" என முண்டாசு கவிஞன் சொன்னாலும், சூழ்நிலை அவ்வாறு இருக்க வைத்திருப்பதில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த பதிவு. இதைத்தாண்டி பெரிதாக யாருக்கும் தெரியாத உண்மைகள் எதையும் நான் சொல்லிவிடவில்லை. இதில் என் பங்கு ஏதாவது இருக்குமென்றால் அது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது கவனத்தையும், நுட்பமான அலசலையும் உண்டாக்கும் கவனஈர்ப்பினை உண்டாக்குவதே.
 
அமெரிக்க தொலைக்காட்சியில் கலந்துரையாடல் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்கள். கனடாவிற்கும் அமெரிக்காவிற்குமாக வருடம் 2 மில்லியன் பெண்கள் பாலியல் ரீதியான (கொத்தடிமை) வேலைக்காக ஆசிய நாடுகளிலிருந்து முக்கியமாக பிலிபைன்ஸ் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து அழைத்து வரப்படுகின்றார்கள் என்று. பலர் தாதி வீட்டு வேலை என்று பொய் சொல்லி அழைத்து வரப்பட்டு இங்கே விற்கப்படுகின்றார்களாம். அவர்களது பாஸ்போட் மற்றைய பொருட்களை அழைத்து வந்தவர்களே வைத்துக் கொள்வதால் இவர்கள் தப்பிச் செல்லவும் முடிவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். இதைக் கூச்சமில்லாமல் செய்வது உலகில் முன்னேறிவிட்டதாகக் கூறும் முக்கிய நாடுகள் இந்த நிலையில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விடும் என்று மக்கள் நம்பவேண்டும் என்கின்றார்கள். என்னத்தைச் சொல்ல. ஒருமுறை உலகம் அழிந்து மீண்டு வந்தால்தான் எதுவுமே சாத்தியம் என்பது என் கருத்து
 
This comment has been removed by a blog administrator.
 
யாரை நோவது...?
-குழந்தைகளை இந்த வேலையை தெரிந்தே செய்யவைக்கும் பெற்றோர்களையா?
-இடைத் தரகர்களையா?
-குழந்தைகளை இந்த வேலையை வாங்கும் மனிதர்களையா?

பாலியல் கல்வியும் வறுமை ஒழிப்பும் ஒருவேளை சிறிது நிவாரணம் கொடுக்கலாம்.

ஒருவேளை மிருகங்கள் போல் "உடலுறவு" என்பது இன விருத்திக்காக மட்டுமே என்கிற தன்மையை மனித
உடல் அடைந்தால், புதுப் புது வழிகளில் பாலியல் வக்கிரங்கள் அமல்படுத்தப் படாமல் போகலாம்.

அன்புடன்,
கணேசன்
 
I will write on sex education to kids, and how we encourage parents to teach kids.If possible will translate and blog the brochures as well.
 
// குழந்தைகளுக்கு பாலியல் பற்றி சொல்லிக்கொடுக்கும் சில வழிகள்

நான் பணி நிமித்தம் பல்வேறு குழுக்களில் ( Advisory boards)பங்குபெறுவதும், என் எண்ணங்களை சொல்வதும் இத்துறையில் விற்பன்னர்களாய் இருப்போரது எண்ணமும் அறிந்தவள் என்ற முறையிலும், இதை எழுதுகிறேன்.

ஒரு குழந்தையின் மனம் ஒரு தூய காகிதம், அதில் பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிக்கிறார்கள் . அ துவும் பிறந்த 6 மாதத்திலிருந்து ஒர் நாளைக்கு குறைந்தது 5 மணி நேரம் பெற்றோரைவிட்டு பிரிந்து இ ருக்கிறார்கள்.
ஒரு குழந்தையின் ம த,ம், நேர்மை, அறிவு சார்ந்த விஷயங்களில் பெற்றோரின் தாக்கம் மிகப் பெரிது. அறிவென்பது ஒரு சக்தி. அந்த சக்தியை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் ஒரு பெற்றோர் தங்கள் குழந்தைகளை சக்தி உள்ளவர்களாக மாற்றுகிறார்கள். ஆளும் வ ள ர னும் அறிவும் வளரனும் அது தாண்டா வளர்ச்சி என்பதை புரிந்து கொள்கிறீர்கள் தானே. போட்டி நிறந்த இவ்வுலகில் வெற்றி பெற படிப்பறிவோடு தாங்கள் விரும்பப் படுகிறோம் என்பததயும், பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதையும் அந்த குழந்தைகள் புரிந்து கொள்ள அவர்களின் மொழியில் பேசுவது அவசியம்.
எண்களும் எழுத்துக்களும் சொல்லித்தரும் பெற்றோர், பாலியல் என்று வந்ததும் ஏனோ தயங்கிவிடுகிறார்கள். இது இயல்பாய் வந்த கூச்சத்தாலோ, எப்போது சரியான பருவம் என்பது தெரியாததாலோ இருக்கலாம். புலம் பெயர்ந்தவர்களிடயே இருக்கும் ஒரு தன்னுடைய கலாசாரத்தின் மீது இருக்கும் ஒரு அசாத்திய நம்பிக்கை யும் ஒரு காரணமாகிறது. ஒன்றை புரிந்து கொள்ளுதல் அவசியம். நாம் வாழ்ந்த சூழ்நிலை வேறு, இந்த குழந்தைகள் வாழ்கிற சூழ்நிலையும் சந்திக்கிற மனிதர்களும் வேறு. இப்போது இந்தியாவிலேயே குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகள் அதிகரித்திருப்பதையும், பெரும்பாலானோர் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதையும் சமீபத்தில் ஒரு ஐ . நா. சபை உறுப்பினர் ஒரு வருடன் பேசிக்கொண்டிருக்கையில் அறிந்தேன்.

எப்போது சொல்லி தர வேண்டும் என்ற வினாவிற்கு கீழே உள்ள அட்டவணை பதில் சொல்லும்.

18 மாதம் முதல் 2 வருடம் வரை : உடல் உறுப்புகளின் அறிமுகம், அவற்றின் சரியான பெயர் சொல்லித்தருவது அவசியம். மூக்கு எங்கே, காது எங்கே என்பது போல அவர்களுக்கு அந்தரங்க உறுப்புகன் பெயரும் தெரிய வேண்டும்.

2- 5 வயது வரை: அந்தரங்க உறுப்புகளின் பெயரும், எப்போது ம றுப்பு தெரிவிக்க வேண்டும் என்பதும், அவர்களின் உடம்புக்கு அவர்களே ராஜா /ராணிஎன்பதும் சொல்லித்தரவேண்டும்

5-8 வயது: நல்ல தொடுகை, கெட்ட தொடுகை என்பது பற்றி சொல்லுங்கள். உங்களின் உடலை ஒரு எடுத்துக்காட்டாய் எடுத்துக் கொண்டு, அவர்கள் மேலே குதிக்கும் போது திட்ட வட்டமாக ம றுப்பு சொல்லி அதை அ வர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மறுப்பு சொல்வதற்கும் அனபு செலுத்துவதற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பதை மேற் சொன்ன உதரணம் விளக்கும். தவறான தொடுகை அனுபவித்திருந்தால் அதை பற்றி பேசவும், அ வர்கள் மீது உங்அளுக்கு சினம் வராது என்பதையும் சொல்லி இதில் அவர்கள் வெட்கப்படத்தேவையில்லை என்பதையும் புரியவைக்க வேண்டும். அவர்கள் சொல்வதை கேளுங்கள். அ தற்கு மேல் அவர்களின் உணர்ச்சியை புரிந்து கொள்ளுங்கள். தனியாக பேச பெண் அ ழைத்தால், இங்க இப்ப அப்பா மட்டும் தான இருக்கா, இங்கேயே சொல்லு என்றெல்லாம் அ தட்டாதீர்கள். தந்தைக்கு தெரிய வேண்டும் என்றாலும் பிறகு சொல்லிக் கொள்ளலாம்.அதேபோல மகன் தந்தையிடம் பேசும் போது, நீங்கள் அவர்களின் தனிமையை மதிக்க வேண்டும்.
8-12 வயது வரை: உங்அள் குடும்ப விதிமுறைகளை தெஇர்யப் படுத்துங்கள். அதில் உங்களின் நிலைப்பாட்டினையும் (stand point)தெரியப் படுத்துவது அவசியம்.

13-18 வயது வரை: பாலியல் வன்முறை, சொந்த பாதுகாப்பு முறை, குடிக்கின்ற பானத்தை நண்பர்களுடன் இருக்கும் போது தவறியும் கீழே வைக்காமல் இருக்கும் முறை இவை சொல்லித்தரப் படவேண்டும்.

இவை ஒவ்வொன்றையும் உதாரணங்களோடு பிறகு எழுதுகிறேன். படிக்க சில குழந்தைகள் புத்தங்களின் பட்டியலும் தருகிறேன்.// - தேன்துளி

இந்த பதிவு தேன்துளியில் பத்மா அரவிந்தால் பதிக்கப்பட்டது. அங்கே பின்னூட்டம் இடமுடியவில்லை. மேலும், ஒரு பதிவின் தொகுப்பாய், பின்னூட்டங்களின் வரிசையில் இருக்கும்போது, சில காலங்களுக்கு பிறகு இப்பதிவினை படிக்கும் நண்பர்களுக்கு உதவும் என்பதனாலேயே இந்த மறுபதிப்பு.

தேன்துளியின் பதிவின் சுட்டி
 
நானா (நாராயணன் என்பதின் சுருக்கம். என் தந்தையை அவர் நண்பர்கள் அப்படித்தான் அழைப்பர்):

அக்ங்கோர் வாட் பற்றிச் சொல்லியிருப்பது வரிக்கு, வரி உண்மை. மசாஜ் என்று சொல்லுவார்கள். கொலு மாதிரி பெண்களை அடுக்கி வைத்திருப்பர் நீங்கள் போய் உங்கள் தேர்வைச் செய்யலாம். சுற்றுலா அந்த நாடுகளின் வளத்திற்கு முக்கிய காரணி. சுற்றுலா தேசங்கள் எல்லாவற்றிலும் இது உண்டு. அரசுகள் அதிகம் கண்டு முடியாத அளவு அந்நிய செலாவணி மயக்கம் (தாய், கம்போடியா).

நேற்று மீண்டும், Artificial Intelligence பார்த்தேன். அதில் சொல்லும் 'மெக்கா' பாலியல் substitues எவ்வளவோ தேவலை. Robots can do that. குழந்தைகளை பாலியலில் ஈடுபடுத்துவது போன்ற கொடுமை வேறேதுமில்லை. எல்லோரும் திட்டிய என் கதையில் அதன் பாதிப்பைச் சொல்லியிருக்கிறேன். ஐரோப்பாவில் நிறைய artificial gadgets உண்டு. முன்பொரு கதையில் சொன்ன மாதிரி பணக்கார நாடுகளின் பொம்மை = வளரும் நாடுகளின் மனிதர்கள். இதுதான் முதலாளித்துவ சதவிகிதம்!
 
நரைன் இலங்கையைப் பற்றி தங்கணியும் நீங்களும் குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை.கூடுதலாக தென்னிலங்கைக் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த சிங்களச் சிறுவர் சிறுமிகளே இதனால் பாதிக்கப்படுகிறார்கள்.சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நீர்கொழும்பு பெந்தோட்டை,காலி போன்ற இடங்களில் பெற்றோராலேயே வெளிநாட்டவருடன் சேர்த்துவிடப்படும் குழந்தைகள் பற்றிய கட்டுரை ஒன்று படித்திருக்கிறேன்.வறுமைதான் இதற்கெல்லாம் காரணமென்றாலும் பெற்றோராலேயெ இந்நிலைக்கு ஆளாக்கப்படுதல் தடுக்கப்படவேண்டிய ஒன்று அரசாங்கமும் அந்நியச் செலவாணியை முன்னிட்டு கண்டும் காணாமலும் இருக்கிறது.
 
தெற்காசியாவில் பாதிக்கபடும் குழதைகள் பெண்கள் பற்றி இங்கொன்றும் அங்கொன்றுமாகப் படித்திருக்கிறேன்.

2002 டைம் பத்திரிக்கையைச் சேர்ந்த நிருபர் இரண்டு பெண்களை வாங்கி ஊருக்கு அனுப்பியதில் ஒரு பெண் திரும்ப வந்துவிட்டதையும் பிறகு எழுதியிருந்தார்.

சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் நிருபரும் இந்த மாதிரி செய்திருக்கிறார். message boardஇல் அந்த நிருபருடன் பலரும் கதைத்தார்கள்.

நீங்கள் பின்னூட்டமிட்ட ரிக்கி மார்ட்டின் பதிவுதான் நினவி வந்தது.

http://mathy.kandasamy.net/musings/2005/01/31/159#comments

மறுபடியும் நல்லதொரு பதிவு நாராயணன்
 
கணேசன், காமம் மிஞ்சியிருக்கிறது என்று எதை வைத்து சொல்கிறீர்கள். பீடோஃபைல்களும், சிலுக்கின் ஆளுமையையும் பற்றி எழுதுவது காமமாக தோன்றவில்லை. மாறாக, எவ்வளவு புரிதல் இல்லாத உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பற்றிதான். மரணதண்டனையை எதிர்ப்பவன் என்றாலும், பீடோஃபைல்களைப் பற்றி பேசும்போது சவுதி அரெபிய சித்ரவதைகள் சரிதானோ என்று தோன்றுகிறது.பாலியல் தொழிலாளிகளிடம் போவதைக் கூட சில தளங்களில் நியாயப்படுத்த இயலும், ஆனால், பீடோஃபைல்களை எந்த காரணத்தினை முன்னிட்டும் நியாயப்படுத்தல் இயலாது. ஒரு சமூக அங்கவீனம்.குறைபாடு. கேன்சரைப்போல் தொடர்ந்து பேசாவிட்டால், பரவிவிடும் வாய்ப்புள்ள ஒரு தொற்றுநோய். இதை நீங்கள் காமமாக பார்ப்பீர்களேயானால், இன்னமும் அதிகமாக காமத்தினை கண்டிப்பாக முன்னிறுத்துவேன். காமத்தினைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமலிருப்பதால் தான் இவ்வளவு நிகழ்வுகளும். இதை சொல்லுவதால், நான் ஒழுக்க விதிமுறைகளை படிக்கிறவன் என்கிற பொருளல்ல. எல்லா மதங்களிலும் கட்டமைக்கப்பட்டுள்ள பாலியல் நியதிகளின் மீதும் என் கேள்விகள் உள்ளது. என் பணி சமூக மேம்பாட்டிற்காக என்னால் இயன்ற கேள்விகளையும், அதனூடே அதன் பரிமாணங்களையும், முடிந்தால் விடைகளையும் கண்டறிவதே.
 
மதி, ரிக்கி மார்ட்டினைப் பற்றி பேசும் போது இன்னொரு ஹாலிவுட் பிரபலத்தினைப் பற்றி பேசாமல் போனால் நன்றாக இருக்காது. ஆஞ்சலினா ஜோலி தெரியுமா? பெப்ரவரியில் நடந்து முடிந்த உலகப் பொருளாதார ஃபோரத்தில், கம்போடியா குழந்தைகளின் எதிர்காலம் பற்றி அவர் எழுப்பிய கேள்விகள் வந்திருந்தோரை வாயடைய செய்துவிட்டது. ஒரு கம்போடிய குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பதும் செய்தி. பல ஆண்டுகளுக்கு முன் இதே ஆஞ்சலினா ஜோலியின் நியூடு படத்திற்காக அடித்துக் கொண்டதை நினைத்தால், வெட்கமும், கேவலமாகவும் இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை தவிர என்றே சில சமயங்களில் தோன்றும்.
 
ஆமாம் நாராயணன். சமீபத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து ஒரு குழந்தை தத்தெடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

ஆஞ்செலினா ஜோலியின் புகைப்படத்துக்காக நீங்கள் அடித்துக்கொண்டீர்களென்றால், நான் மற்றக்கட்சி - இவருக்கு நடிக்கவே வரவில்லை என்று காமெண்ட் அடித்து போன வருடம் க்ளைவ் ஓவனுக்காக ஒரு ப்டத்தைப் பார்த்தேன். காதல் படத்துக்காக அப்பிரிக்கா, கம்போடியா கிழக்கு ஐரோப்பா என்று குழந்தைகள் பாதிப்புக்குளாகும் இடங்களையும் கலவரம் நடக்கும் இடங்களையும் களங்களாக வைத்து படம் எடுத்திருந்தார்கள். அந்தப் படத்தில் நடிக்கும்போதுதான் ஆஞ்செலினா ஜோலிக்கு குழந்தைகளைத் தத்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் விழிப்புணர்வும் ஏற்பட்டதாம். ஐநாவின் தூதுவராகவும் இருந்ததும் அதற்குப்பிறகு நடந்ததுதான்.

டயானாவைப் பிடித்த காரணம்
நடிகை என்பதையும் தாண்டி ஔட்ரி ஹெப்பர்னைப் பிடித்தது எல்லாம் அவர்களின் மனிதாபிமினத்துக்காக. அவர்களின் செயல்பாடுகளுக்காக.
 
//நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள், நம்மை தவிர என்றே சில சமயங்களில் தோன்றும். //

சத்தியமான உண்மை நாரயணன்.
 
நரைன் குழந்தைகளை பாலியல் வன்முறைக்காளாக்குபவர்களுக்கு அதியுட்சபட்சத் தண்டனை கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னதுதான் எனது கருத்தும்.சிங்கப்பூரில் இவ்வாறான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் மறுபேச்சு இல்லை.மரணதண்டனை தான்.
 
Your artilcle brings so many questions.

1. why do the pedophiles do that?

2. how it affects children?

3. why it is only humen who involve in such actions, which we do not see in other living beings?

4. why there is a wide-spread belief that sex is something bad?

5. can free sex will solve the perversions?

6. how sex has become a commodity?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]