Apr 16, 2005

பைனாகுலர் 10344

சபீர் பாட்டியா, ஞாபகமிருக்கிறதா? ஹாட்மெயிலினை நிறுவி, பின் அதனை மைக்ரோசாப்டிற்கு விற்று கோடிகள் ஈட்டியவர். நடுவில் செய்த சில விஷயங்கள் சொதப்பிவிட்டன (ஆர்சூ.காம்). இப்போது மீண்டும் புயலென ஒரு புதிய சேவையோடு, மைக்ரோசாப்டின் கோட்டைக்குள் கலகம் செய்ய நுழைந்திருக்கிறார். மைக்ரோசாப்ட் வேர்டு, எக்ஸெல் போன்ற செயலிகள் கூட்டுப்பங்கேற்போடு (Colloboration) செய்ய மைக்ரோசாப்டில் வழியில்லை. நம்மாளு, அந்த சைக்கிள் கேப்பில் ஆட்டோ இல்லை, ஆகாயவிமானமே ஒட்டியிருக்கிறார். அவரின் இன்ஸெட்டாகோல் (InstaColl) கூட்டு பங்கேற்பு முறையினை புரட்சிகரமாக மாற்றியமைத்திருக்கிறது. இப்போது இலவசமாக இந்த சேவையினை இறக்கிக் கொண்டு பயன்படுத்தலாம். நான் சோதித்துப் பார்த்ததில் எனக்கென்னமோ கொஞ்சம் திருப்தியாக தான் இருந்தது. நிறைய போட்டிகள் வரும். நிறைய விஷயங்கள் சேர்க்கப்படலாம்.ஆனாலும், எவ்வளவு நாள் இலவசமாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அதுவரை என்சாய். - பார்க்க | பதிவிறக்க

கூட்டுப் பங்கேற்பு என்றவுடன், சொஞ்ச நாட்களுக்கு முன்பு படித்த பஸ்வண்ணா பற்றிய நினைப்பு வந்தது. கி.பி.1100 களில் கர்நாடகத்தில் பிறந்து, சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக போராடி, எல்லாரும் ஒரினமே என்று பேசி, பின்னாளில் லிங்காயத்துகளின் தலைவராய் விளங்கியவர். எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சிறந்த சிந்தனை யாளர், சமூக சமய சீர்திருத்தவாதி. கன்னட இலக்கியத்தில் வசனம் என்ற புது நடையைத் துவக்கியவர். வீரசைவம் அல்லதுலிங்காயத் மதப் பிரிவின் பெருந்தலைவர். ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம், லிங்காயத்துகள் உயர்சாதிக் காரர்களாக தானே இன்னமும் வடக்கு கர்நாடகத்தில் கருதப்படுகிறார்கள் ? என்னமோ, ஆனாலும், சுருக்கமான, சுவையான பஸ்வண்ணா புராணம் - பார்க்க

சாதி ஏற்றத்தாழ்வுகள் என்று பேசினாலே தலித்துகள் பற்றிய பேச்சு இல்லாமலிருக்காது. தலித்தியம் உரக்கப் பேசப்படும் இன்றைய காலகட்டத்தில் தலித்துகள் (பறையர்கள்) ஒரு காலகட்டத்தில் சமூக அமைப்பில் மிக உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்று சொன்னால் ஆச்சர்யமாக இருக்காது ? நிறைய சந்தேகமும் (வரலாற்று ரீதியிலான உண்மையா?), பெருத்த ஆச்சர்யமும் பொங்க இந்த பதிவினை படித்து முடித்தேன்.
"தீண்டாத தொழிலாளர்கள் நிலவுடைமை உரிமையுள்ள சாதிகளுக்கு சொந்தமான "இனாம்" நிலங்களை விளைவிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்; பல சந்தர்ப்பங்களில் (குறிப்பாக தஞ்சாவூரில்) உயர் சாதிகளிலுள்ள ஏழைகள் போல நேரடியான குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

மேலும்/ இவர்கள் தங்களின் அந்தஸ்து உயர்வுக்கு வேளாண் பொருளாதாரத்திற்கு வெளியிலும்/ அதாவது நெசவு/ கட்டிடம்/ இராணுவம் மற்றும் பிற தொழில்களிலும் வாய்ப்புகள் பெற்றிருந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் (பிந்தைய பகுதியில்) காலனிய அதிகாரிகள் சாதி அந்தஸ்தையும் உண்மையான பொருளாதார செயல்பாடு மற்றும் ஊதியத்தையும் இணைக்க முற்பட்ட போது சாதிய அமைப்பின் எச்சத்தின் உறுதியின்மையால் மிகவும் குழம்பிப் போயிருந்தனர். கோயில்/ பரம்பரை மற்றும் அரசு மரியாதை முறைகளில் இருந்த நெகிழ்வுத்தன்மை பொருளாதார முன்னேற்றம் சமூக அந்தஸ்து அளவிலும் வெளிப்பட்டதை உணர்த்துகிறது."
- பார்க்க

சந்தோஷமும், சந்தேகமும் இருந்தாலும், இன்றைய தலித்துகளின் நிலை வருந்தத்தக்கது. தமிழகத்தில் எழுந்துள்ள குரல்களைப் போலவே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் குரல் உரத்து ஒலிக்கத்தொடங்குகியிருக்கிறது. இதில் பீஹாரில் நிலைமை ரொம்ப மோசம். சாதாரணமாகவே, எனக்கு பீஹார் இன்னமும், ஏதோ ஒரு ஆப்ரிக்க சர்வாதிகாரியாளும், குறுங்குடியாக தான் தோன்றுகிறது. அதிலும், தலித்துகள் என்று வந்தால், சொல்லவே தேவையில்லை. நிழல் வரிகள் (Shadow lines) என்கிற தலைப்பில் தலித் குரல் என்கிற தலைப்பில் தொடர்ந்து தெஹல்காவில் முனைவர். ஷியராஜ் சிங் பெச்செய்ன் (Dr. Sheoraj Singh 'Bechain') என்கிற ஹிந்தி எழுத்தாளர் எழுதி வருகிறார். தலித்திய சிந்தனைகளிலும், செயல்பாடுகளிலும், இந்திய அளவில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருபவர் இவர். இவரின் ஜனநாயகமென்பது ஒரு சமூகமா அல்லது கட்டமைப்பா என்கிற கடிதம், இந்தியாவின் தலித் புள்ளிவிவரங்களை துல்லியமாக சொல்லுகிறது. நான் பார்த்த படித்த தலித்திய சிந்தனைகளில், மிகவும் தர்க்க ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் இந்த கடிதமைந்திருக்கிறது.
(உதா. தலித்துகள் இந்தியாவில் நான்கில் ஒரு பங்காக இருக்கிறார்கள் [16.48% SCs 8.08% STs]. 100 கோடி மக்கள் தொகையில் இது 20-25 கோடி நபர்கள். இது பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். ஆனாலும், இன்றுவரை ஒரு தலித்திய பத்திரிக்கையாளனும், டெல்லியின் ஊடகங்களில் இல்லை).
ஆழமாகவும், அகலமாகவும் போகிறது இந்த கட்டுரை - தெஹல்காவின் நிழல் வரிகள் | சிங்கின் கடிதம்

டெல்லியிலிருந்து நேராக புதுக்கோட்டைக்கு வந்தால், நமது ஆசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் "கல்வெட்டுகள், செப்பேடுகள் காட்டும் தலித் வாழ்வியல்" என்கிற தலைப்பில், தலித் அமைப்பின் உட்கட்டமைப்புகள், கல்வெட்டு சான்றுகளோடு அடுக்குகிறார். பேரா. ஆ. சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் மிக முக்கியமான சமூக விஞ்ஞானிகளில் ஒருவர். (எனக்கு தெரிந்த இன்னொருவர் "பண்பாட்டு அசைவுகள்" எழுதிய பேரா. தொ.பரமசிவம்) நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். புதுவிசையில் தொடர்ந்து தலித்துகள், பழந்தமிழர் மரபுகள் பற்றி எழுதி வருபவர். இவரின் "கிறிஸ்துவமும் சாதியும்" பற்றி ஏற்கனவே
முந்தைய பைனாகுலரில் சொல்லியிருந்தேன். - பார்க்க

வார் ஆப் தி வேர்ல்ட்ஸ் இன் டிரைய்லரைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஏனோ மைனாரிட்டி ரிப்போர்ட் ஞாபகம் வந்தது. இரண்டும் ஸ்பீல்பெர்க்கின் படங்கள் என்பதை தாண்டி, மைனாரிட்டி ரிப்போர்ட் எனக்கு தனிப்பட்ட அளவில் பிடித்த படம். ஏனெனில், வருங்காலத்தில் மாறுகடை துறையில் என்னனென்ன வசதிகள் வரும் என்பதை இயல்பாகவும், ரசிக்கத்தக்க அளவிலும் சொன்ன படம். கில்லர் ஜீன்ஸ் என்று நினைக்கிறேன். கடைக்குள் நுழையும் டாம் குருஸ்ஸின் இடுப்பளவினை சரிப்பார்க்க சொல்லும் இயக்கிகள், பில்போர்டிலிருந்து உங்களின் பெயரை சொல்லி அழைக்கும் பெண் என நீளும் படத்தில் மிக முக்கியமான விஷயம், டாம் உபயோகிக்கும் கணி(னி தேவையில்லை என்று ஐயா இராம.கி சொல்லிவிட்டார் : )) மவுஸ், விசைப்பலகையின்றி, வெறும் க்ளவுஸ் மாட்டிய கைகளினாலேயே உபயோகிக்கும் வசதியுடன் இருக்கும். அது இன்னும் சிறிது நாட்களில் நிறைவேறிவிடும் போலிருக்கிறது. அமெரிக்காவில் ராணுவ பொருட்களை தயாரிக்கும் ரேதியான் அதேபோலொரு நுட்பத்தினை பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. அண்டர்கோப்ளர் என்கிற அறிவியல், நுட்ப வஸ்தாதுவினை கொண்டு அவரின் கீழியங்கும் ஒரு குழு அத்தகைய ஒரு ஸிஸ்டத்தினை பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. வந்தால், இந்த மவுஸ் நகராமல் விண்டோஸ் செத்துப் போவதை பாராமல் இருக்கலாம் - பார்க்க

நேற்று கூச்சல், களேபாரங்களுக்கிடையே எஸ்.எஸ்.ஆர். பங்கஜமில் மும்பை எக்ஸ்பிரஸ். நேற்று இரவு டிக்கெட் கவுண்டரில் கிடைத்தது. படம் - எனக்கென்னவோ தேறுமுன்னு நம்பிக்கையில்லை. கமலுக்கு, கிரேசி மோகனின் அருமை இப்போது புரிந்திருக்கும். வசனங்களில் சிரிப்பு வருவதற்கு பதிலாக வெறுப்பு தான் வருகிறது. கிளைமேக்ஸூக்கு ஒரு 20 நிமிடங்களுக்கு முன் நடக்கும் ஆள்மாறாட்ட சங்கதிகள் கொஞ்சமாய் சிரிப்பினை வரவழைக்கின்றன. ஆனால், இதையெல்லாம் தாண்டி, படம் என்னமோ கல்யாண கேசட்டினை பார்க்கு உணர்வினை ஏற்படுத்துகிறது. எடிட்டிங்கும், காட்சிகளும் படுமோசமாய் இருக்கிறது. டிஜிட்டல் நுட்பம், எச்.டி என்றெல்லாம் சுஜாதா போலவே ஜல்லியடித்த கமல் இறுதியில் படத்தினை பிலிமில் தான் வெளியிட்டிருக்கிறார். இத்தனைக்கும் இந்த படம் டிஜிட்டலில் தான் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. சென்னனயில் சத்யம், உதயம், அபிராமி, தேவி திரையரங்குகளில் ரியல் இமேஜ் நிறுவனத்தினரின் " கியுப் சினிமா " என்கிற டிஜிட்டல் புரோஜெக்ட்டர் இருக்கிறது. Mr.கமல், உங்களுக்கு நுட்பத்தின் மீது ஆசையிருக்கலாம். ஆனால், தயவுசெய்து அடுத்தமுறை ஏதாவது பத்திரிக்கைக்கும், ஊடகங்களுக்கும் பேட்டி கொடுக்கும் முன் விஷயம் தெரிந்தவர்களை கூட அமர்த்திக் கொண்டு, செய்கிற விஷயத்தினை முழுமையாக செய்யுங்கள். சும்மா சீன் போட்டு ஊரை ஏமாற்றாதீர்கள். (இதே துறையில் நானும் இருப்பதால் எனக்கு எங்கெல்லாம் சொதப்பியிருக்கிறார்கள் என்பது கண்கூடாக தெரிகிறது. அதிலும் இந்தியாவிலேயே முதல்முறையாக முழு எச்.டியில் எடுக்கப்பட்ட படம் என்பதற்கு என்ன சான்றுகளிருக்கிறது என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து "கிஷ்கிந்தா" அவர்களின் தீம்பார்க்குக்காக ஏற்கனவே ஒரு எச்.டி படமெடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற ஒரு சந்தேகமுண்டு)

Comments:
நாரயணன், பயனுள்ள பதிவு. சுட்டிய கட்டுரைகளை இனிதான் படிக்க வேண்டும். சுட்டியதற்கு நன்றி.

லிங்காயத் இன்னமும் ஆதிக்க ஜாதிகள்தான். இன்று தலித் மீது வன்முறை வைக்கும் ஜாதியும் ஆகும். வீரசைவ இயக்கத்தை பார்பன ஆதிக்க இயக்கமாய் பார்க்கும் அளவிற்கு, ஜாதி ஒழிப்பு இயக்கமாய் பார்க்கமுடியவில்லை. கட்டுரையை படித்துவிட்டு சொல்கிறேன்.

பீகார் நிலமை மோசம்தான். என்றாலும் எல்லோரும் பொத்தாம் பொதுவாய் பீகாரை ஒரே விதத்தில் திட்டுவது சரியாய் தோன்றவில்லை. இந்தியாவில் மோசமான மானிலமாய் எந்த விழிப்புணர்வும், எதிர்பியக்கமும் இல்லாத மானிலம் குஜராத்தான். மற்றபடி மத்தியபிரதேசம், உபி, பிகார் எல்லா இடத்திலும் ஏதாவது எதிர்ப்பு சிந்தனை என்று ஏதோ இருக்கிறது. குஜராத் அளவிற்கு எந்த மானிலத்திலும் நிலமை மோசமாய் எனக்கு தெரியவில்லை. பீகாரில் நிலமை எவ்வளவு மோசமானாலும் ரன்பீர் சேனா போன்ற அமைப்பையே ஓரளவு எதிர்த்து அடிக்கவும் திராணி இருப்பதை பார்க்க வேண்டும்.
 
"...அதிலும் இந்தியாவிலேயே முதல்முறையாக முழு எச்.டியில் எடுக்கப்பட்ட படம் என்பதற்கு என்ன சான்றுகளிருக்கிறது என்று தெரியவில்லை...."

Tamizhil kaniniyil adippadhu ariyaadhadaal, aangilathil ezhuthugiraen...

"Vaanam Vasappadum" - The film by ,ace cinematographer, P.C.Sriram is the first full length High Definition Commercial film in India.
 
அது தெரியும் அருண். ஆனால், அந்த படம் டிஜிட்டலில் ரிலிஸாகவில்லை என்று நினைக்கிறேன். கொஞ்ச நாள் கழித்து, பொட்டிக்குள் போனபிறகு, பி.சி. மீண்டும் அதனை தூசிதட்டி எடுத்து அபிராமி திரையரங்கில் டிஜிட்டலில் திரையிடுவதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை அது நடக்கவில்லை.
 
நாம் சந்தித்து வெகுநாட்களாகிவிட்டது இல்லையா நாராயண். இப்போது உங்களை இணையத்தின் ஊடாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பதிவுகளை சமீப காலமாக தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன.

ஒரு வகையில் உங்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டவன். சிங்கை பழனியின் அறிமுகம் எனக்கு உங்கள் மூலமாக கிடைத்த பின்புதான் தமிழ் உலகம் மூலமாக தமிழில் எழுதத்துவங்கினேன். காலம் எவ்வளவு மாற்றங்களை நம்முள் விதைத்திருக்கிறது

நீங்களும் இப்போது எழுத வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை வரும் போது உங்களை சந்திக்க ஆவல்.

டிஜிடல் வீடியோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தமிழ் குறும்படங்களுக்குஎப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றியும் இணைய வழி வினியோகம் பற்றியும் சில யோசனைகள் இருக்கின்றன.

இது பற்றி நம் போன்ற ஆர்வமுள்ளோர் கலந்து பேச ஒரு இணைய அரங்கம் விரைவில் அமைக்கிறேன்

அன்புடன்,
இர.அருள் குமரன்
 
ஆஹா...எவ்வளவு நாடகளாகிவிட்டது. மனைவியும், குழந்தையும் சுகம்தானே. நன்றிக்கடன் எல்லாம் தேவையில்லை அருள். நன்றாக இருக்கிறீர்களா, அவ்வளவுதான். மேட்டர் அதோட முடிஞ்சது.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நானே எழுத நினைத்தாலும், அடோப் மற்றும் மேக்ரோமீடியா இணைப்பினை விரிவாக நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். ஏற்கனவே மேக்ரோமீடியாவில் யுனிகோடு ஒரளவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப்பும் இதை செய்கிறது. இணைப்பினால், இந்திய மொழிகளுக்கு, குறிப்பாக தமிழ் யுனிகோட் மாறுதலுக்கு என்ன நடக்கும், அல்லது நாம் என்ன வற்புறுத்த வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக எழுதினால் நன்றாக இருக்கும். ப்ளாக்கர் சொதப்பியதால், செல் மின் - நூலுக்கு வாழ்த்துக் கூற முடியவில்லை. வாழ்த்துக்கள் அருள்.
 
Hi Narain,
I'm posting this in English only 'cause I'm unable to run ekalappai 2 seamless in my PC. btw, your post on digital cinema is interesting but i have some points against you.
The fact that Mumbai Xpress(MX) was censored in digital format and the movie is being screened using the Cube is most of the theaters is the fact. 1. on the film by Kishkintha, it has not been screened for public viewing, probably you would have had seen the film in a private screeing and condemning MX is not appreciable.
2. The fact that people like Sujatha, Kamal and the like (for their for personal gains or for educating/exposing the Tamizh people to the latest in technology) take an earnest effort in learning the latest developments and dare to experimenting. This effort should atleast not be condemned if not appreciated.
an old advt. of Godrej refrigerator comes to my mind - the PUF ad, infact Kelvinator had the PUF lining well before Godrej but it was Godrej who said it first and took the lead. There's nothing wrong in that.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]