Apr 21, 2005

பைனாகுலர் 10345

நவோமி கிளெய்ன் தெரியுமா? விளம்பரத் துறையிலிருப்பின் கண்டிப்பாக தெரிந்திருக்கும். உலகமெங்கும் பரபரப்பினை உண்டாக்கிய No Logo என்கிற புத்தகத்தினை எழுதியவர். அந்த புத்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் திரு உரு (Brand) என்கிற பெயரில் அடிக்கும் கூத்துக்களை வெட்ட வெளிச்சமாக்கியிருப்பார். உதாரணத்திற்கு, அமெரிக்காவில் நைக்கி நிறுவனம் $145 விற்கும் ஷூவினை தயார் செய்யுமிடம் பிலிப்பெய்ன்ஸ். அங்குள்ள உற்பத்தி நிறுவனங்களில் (sweat shops) பிலிப்பினோ தொழிலாளிகள் 14 மணிநேரம் வேலை செய்து இந்த ஷூக்களை தயாரிக்கிறார்கள். ஒரு பிலிப்பினோ தொழிலாளியின் மாத சம்பளம் $150க்கும் குறைவு. ஆனால், நைக்கி என்கிற திரு உரு இருக்கின்ற காரணத்தினால், விலையதிகம். தொழிலாளியின் வாழ்க்கைப் பற்றிய கவலை படாதவர்கள், மில்லியன் டாலர்கள் செலவு செய்து சூப்பர் பொளலில் விளம்பரம் செய்வார்கள். இதேப் போல கோக், ஜி ஈ என எல்லோரையும் பற்றி எழுதியிருப்பார். மேட்டர் அதுவல்ல. ஜனநாயகம் இன்று என்கிற தளத்திற்காக அவர் தந்த நேர்காணலில் இருந்த செய்தி உலுக்கியெடுத்துவிட்டது. அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாய் பேரழிவு முதலாளித்துவத்திற்கு (Disaster Captalism) மாறிக் கொண்டிருக்கிறது என்பதேயது. முன்னெச்சரிக்கை போர் அறிவிப்பு என்றறிவித்து இராக்கின் மீது தொடுத்த போருக்கு பின்னால் நடந்த சங்கதிகளைப் படித்தால் வில்லங்கமாக இருக்கிறது. ஆகஸ்ட் 5,2004 இல் வெள்ளை மாளிகை மறுசீரமைப்பு நிலைநாட்டல் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு உக்ரைனிலிருந்த முந்நாளைய அமெரிக்க தூதுவரான கார்லோஸ் பாஸ்கலை தேர்ந்தெடுத்தது. அவர், நேர்காணலில் ஒரு நாட்டினை முழுவதுமாக சீரமைக்க குறைந்தது 5-7 வருடங்களாகும், இப்போதைக்கு மூன்று நாடுகளோடு முழு அளவில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது" என்று கூறியிருக்கிறார். அதற்கு முன்பேஅமெரிக்க உளவுத்துறையின் மூலம், உலகமுழுவதும் 25 நாடுகளை தேர்ந்தெடுத்து அவற்றின் மீது போரினை துவக்கும் ஆயத்தங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன. அதன் விளைவுதான் ஈரானை எச்சரிப்பதும், வடகொரியாவின் மீது பொருளாதார தடை விதித்தலும், துருக்கியினை பிடித்து கேள்வி கேட்க ஆரம்பித்திருப்பதும்.
Gone are the days of waiting for wars to break out and then drawing up ad hoc plans to pick up the pieces. In close cooperation with the National Intelligence Council, Pascual's office keeps "high risk" countries on a "watch list" and assembles rapid-response teams ready to engage in prewar planning and to "mobilize and deploy quickly" after a conflict has gone down. The teams are made up of private companies, nongovernmental organizations and members of think tanks--some, Pascual told an audience at the Center for Strategic and International Studies in October, will have "pre-completed" contracts to rebuild countries that are not yet broken. Doing this paperwork in advance could "cut off three to six months in your response time.
இதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் அமெரிக்க மக்களை தொடர்ந்த அச்ச நிலையில் வைத்திருக்க விரும்புகிறது. இதேப் போல ஒரு செய்தியினை நீங்கள் பாரன்ஹீட் 9/11-லிலும் பார்க்க முடியும். அதே சமயம், அது போர்தொடுக்கும் ஒவ்வொரு நாட்டின் மீதும் ஏதேனுமொரு காரணத்தினை சொல்லி அந்நாட்டினை நிர்மூலமாக்கி, மறுசீரமைப்பு செய்ய உதவி செய்வதாக சொல்லி, அத்தனை குத்தகைகளையும் அமெரிக்க நிறுவங்களுக்கே வழங்கி, காசு பார்க்கும். அமெரிக்க அரசாங்கத்தின் புதிய முதலீட்டு திட்டமாக இது மாறிவருகிறது. பொருட்களை விற்று, வாங்கி காசுப் பார்த்து சலித்துப் போன அமெரிக்க அரசு, தற்போது பொருட்களுக்கு பதிலாக மனித உயிர்களை பண்டமாற்றாக பேசத்தொடங்கியிருப்பது அபாயகரமானதாக தெரிகிறது - பார்க்க நேஷனில் வந்த செய்தி | நோ லோகோ புத்தகம் | நவோமி களெயினின் இயக்கம்

புதிய போப்பினைப் பற்றி நிறைய பேர்கள் எழுதிவிட்டார்கள். மறைந்த போப் ஜான் பாலுக்கு பிறகு பதவியேற்றிரும் இரட்சிங்கர் ஒரு அடிப்படைவாதி. ஜனநாயகம் இன்று தளத்தின் செய்தி தலைப்பே புது போப் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடுகிறது. Pope Benedict XVI: Anti-War, Anti-Gay, Anti-Choice, Anti-Reform. இந்த தளத்தின் நிறுவனர் ஆமி குட்மேன் பல்வேறு சமய, மத, பல்கலைக் கழக வாதிகளிடம் நடத்திய நேர்காணல் சுட்டியில் உள்ளது. மிகப் பெரிய பயமாக பார்க்கப் படுவது, புதிய போப் ஒரு அடிப்படை பழமைவாதி. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது என்கிற கருத்தாக்கத்தினை முழுவதுமாக நம்புவர். பைபிளின் படி நடக்கவேண்டும் என்று நினைப்பவர். லிபரேஷன் தியாலஜி கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர். கடந்தாண்டு அமெரிக்க தேர்தலில் மிக முக்கிய பங்கு வகித்தவர். அவரின் உத்தரவு படியே, அமெரிக்க கிறிஸ்துவ பிஷப்புகள் ஜான் கெர்ரியினை எதிர்த்து மக்களை வாக்களிக்க சொன்னார்கள். காரணம், கெர்ரி கருக்கலைப்பினை ஆதரித்தவர். ஒரினச்சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு தருபவர். கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பார்கள். இங்கே போப்பாக ஒரு அடிப்படைவாதியிருக்கிறார். அமெரிக்க அதிபராக இன்னொரு அடிப்படைவாதி இருக்கிறார். விஷயமறிந்தவர்கள் கவலையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் இயேசு கிறிஸ்து. இனி அவரை மக்கள் தான் காபாற்ற வேண்டும். - பார்க்க

கே.வி. ஆனந்த் இந்தியாவின் முதன்மையான கேமராமேன்களில் ஒருவர். வடசென்னை வாசி. சரியாக சொல்லவேண்டுமென்றால் ஏழுகிணறு பார்ட்டி. இந்தியாவின் எல்லா பெரிய இயக்குநர்களோடும் வேலை செய்தவர். தற்போது இயக்குநராக பதவிஉயர்வு பெற்று "கனாக் கண்டேன்" என்றொரு படமெடுக்கிறார். ஸ்ரீகாந்த், கோபிகா இருவரும் இணை. தமிழ் சினிமா வெவ்வேறு காலகட்டங்களில் பெரும்பாலான கதாநாயகிகளை பக்கத்து மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்வது வழக்கம். சிம்ரன், ஜோதிகா, சோனியா அகர்வால் என்று விந்திய மலைக்கு அப்பாலிருக்கும் நாயகிகளை இறக்குமதி செய்து அலுத்துவிட்டதோ என்னவோ, இப்போது காற்று கேரளா பக்கம். மீரா ஜாஸ்மின், கோபிகா, நயன் தாரா, அசின், நவ்யா நாயர் என்று ஒரே சேச்சிகளாக இருக்கிறது. மலையாளத் தேசத்தினைப் போல நூறு மடங்கு எழுதப்படிக்க தெரிந்தவர்களாகிறோமோ இல்லையோ, மலையாள நாயகிகளோடு கனவில் டூயட் பாடுகிறோம். எண்பதுகளில் இதேப் போல ராதா, அம்பிகா,ஷீலா என சேச்சி ராஜ்ஜியமாக இருந்தது. அப்புறம் கொஞ்சமாய் மணவாடு பக்கம் திரும்பி, பானுப்பிரியா, மீனா, ரோஜா, சினேகா என்றாகி, இப்போது மீண்டும் சேர நாட்டு பெண்களோடு டூயட் பாடப் போய்விட்டது. இப்போது தான் பாடல்களைக் கேட்டேன். வித்யா சாகர் இசையில் 6 பாட்டில் 3 தேறிவிடும். அதிலும் "சின்ன சின்ன சிகரங்கள் காட்டி" என்கிற பாடல் சென்சாராகுமா என்று தெரியாது. வைரமுத்து என்று நினைக்கிறேன் [ஏனெனில் பாடலில் "ட்சுனாமி" என்ற வார்த்தை 3 இடங்களில் வருகிறது ;-)] பூடகமாக ஒரே பச்சைமயம். இது தாண்டி, "சின்னப் பொண்ணு சொன்னா கேளு" என்றொரு பாடல் சயனோரா பிலிப் என்கிற புது பாடகி பாடியிருக்கிறார். கொஞ்சம் ரஸ்டிக்கான குரல், நமது மால்குடி சுபா, இலாஅருண், அனுபமா சாயல். குரலில் அலட்சியமும், வித்யாகர்வமும், கொஞ்சமே ஆண்மையும் தெறிக்கும். ஆனால் எனக்கு பிடித்திருக்கிறது. அது தாண்டி, பேஜாராக தத்துவவிசாரங்களடங்கிய ஒரு குத்துப் பாடல், தன் செந்தமிழால் கலக்கியிருக்கிறார் உதித் நாராயணன். மற்றப் பாடல்களும் பரவாயில்லை. ஆனந்த் இயக்குநராக தேருவாரா என்று காத்திருந்து பார்ப்போம். அதுவரைக்கும் "ஐய்யா ராமய்யா ஆசை இல்லாத ஆளை சொல்லய்யா ஒய்ய்ய்ய்ய்ய்யா" - பார்க்க

அவன் ஒரு பெரிய நிறுவனத்தின் நிர்வாகி. அவள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகி. இருவரும் கணவன் மனைவியர்கள். அவர்கள் சந்திப்பதெல்லாம் விமான நிலைய லொன்ஞ்சுகளிலும், ஹோட்டல் செக்-அவுட்களிலும், ட்ரான்சிட் விமானங்களிலும் தான். இருவரும் தங்களின் ப்ரீப்கேசில் குறைந்தது 6-7 கைக்கடிகாரங்கள் வைத்திருப்பார்கள். பறக்குமிடத்துக்கேற்றார்போல. அவன் டாம் ஹேங்ஸ். அவள் ஆஞ்சலினா ஜோலி. இவர்களிருவரும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை எப்படி மீட்சி செய்கிறார்கள், எப்படி இணைகிறார்கள் என்பதுதான் கதை. நிறைய கார்ப்ரேட் டிராமா, கொஞ்சம் இந்திய சென்டிமெண்ட்ஸ், அமெரிக்கா, ஐரோப்பா,சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா என மாறும் களன்கள், வால் ஸ்ட்ரீட் அழுத்தங்கள், சாதாரண அமெரிக்கனின் வாழ்க்கை, வியாபார ஒப்பந்தங்களின் பின்னடக்கும் கைமாறல்கள், அரசாங்கத்தினை ஏமாற்றுதல் என பயணிக்கும் கதையில் சுவாரசியத்துக்கு பஞ்சமில்லல. உடனே ஐம்டிபியில் தேடாதீர்கள் என்ன படமென்று. இந்த படம் இதுவரையில் வரவில்லை இனிமேலும் வருமா என்கிற உத்தரவாதமில்லை. ஏனெனில் இது நான் உருவாக்கிய கதை. பாஸ்ட் கம்பெனி தளத்தில் எக்ஸ்ட்ரீம் வேலைகள் என்கிற செய்தி படித்ததிலிருந்து உருவி உருவாக்கிய கதை. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்பவர்களளப் பற்றிய குறிப்பு. இது பிலிப்பைன்ஸ், ஆப்ரிக்கா போன்ற மூன்னேறிக் கொண்டிருக்கும் தொழிலாளிகள் பற்றிய கதையல்ல. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் கார்ப்பரேட் தலைகளைப் பற்றிய கதை. தமிழ்மணம் படிப்பவர்களில் யாருக்காவது ஹாலிவுட் ஏஜெண்ட்கள் தெரியுமானால், கதை பிடித்து தேர்ந்தெடுத்தால் என் சம்பளத்தில் 25% தருவதாக வாக்களிக்கிறேன் - பார்க்க

இந்தியாவிலிருந்தால் , டிஸ்கவரி சேனலில் ஏப்ரல் 24லிருந்து ஒரு வாரத்திற்கு எகிப்து பற்றிய விவரணப்படங்கள் திரையிடப்படுகின்றன. செட்டாப் பாக்ஸ் பிரச்சனையால் என் வீட்டில் டிஸ்கவ்ரி சேனல் வருவதில்லை. சென்னையில் செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் செல்வந்தர்களுக்காக (:-)) நிகழ்ச்சி நிரல்
ராம்சேஸ் - கடவுளின் சாபமா அல்லது மனிதர்களின் சாபமா? - ஏப்ரல் 24 - 8PM IST
ஸ்பின்ங்ஸ் - மூகமூடிகள் தாண்டி - ஏப்ரல் 25 - 8PM IST
கிளியோபாட்ராவின் மர்ம மரணம் - ஏப்ரல் 26 - 8PM IST
பாரோவின் வெஞ்சினம்: மறக்கடிக்கப்பட்ட எகிப்து புதையல்கள் - ஏப்ரல் 27 - 8PM IST

சாபமிடுகிறேன் அனைவருக்கும். பார்த்து நாசமாய் போங்கள் ; ) - பார்க்க

Comments:
சுப்பர்போல் இணைப்பினைக் கவனியுங்கள்.
 
நன்றி பெயரிலி. மாத்தியாச்சு.
 
//ராம்சேஸ் - கடவுளின் சாபமா அல்லது மனிதர்களின் சாபமா? - ஏப்ரல் 24 - 8PM IST
ஸ்பின்ங்ஸ் - மூகமூடிகள் தாண்டி - ஏப்ரல் 25 - 8PM IST
கிளியோபாட்ராவின் மர்ம மரணம் - ஏப்ரல் 26 - 8PM IST
பாரோவின் வெஞ்சினம்: மறக்கடிக்கப்பட்ட எகிப்து புதையல்கள் - ஏப்ரல் 27 - 8PM IST
//

சிங்கப்பூர்ல தெரியுமான்னு தெரியலையே. இன்னிக்கு போய் டிஸ்கவரி சேனல் விளம்பரத்தை கவனிக்கிறேன். உங்கள் வயித்தெறிச்சல் அதுல என்னதுன்னு பாக்கனுமே :-)
 
நல்ல பதிவு. நன்றிகள் நாராயணன்.

நாய் விற்ற காசு குலைக்குமா?
இல்லை வெடிக்குமா?
 
நாராயணன்
தொடர்ந்து எழுத உங்களுக்கு எங்கிருந்துதான் காலம் கிடைக்கிறதோ. மெக்ஸிகோவில் இதே னைகி ஷூக்களை தாயரிக்கும் பெண்கள், ஆண்கள் ஒருநாளைக்கு 20 மணி உழைக்க வேண்டும் என்பதும், அவர்களை ஒரு தொழிற்சாலையில் போட்டு பூட்டிவிடுவதும் ஒரு மணிக்கு 10செந்ட்் சம்பளம் தருவது தெரிந்த ஒன்று. சில பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்து மனித உரிமை கமிஷனில் புகாரிட்டும் அது பாட்டுக்கு நடந்து கொண்டிதானிருக்கிறது. அமெரிக்க கம்பெனிகள் பற்றி நிறைய எழுதவேண்டும். நன்றி
 
(டைமண்ட் கவிஞரை பற்றி)
செம நக்கல் பா....
(நைக்கி நிறுவனம்)
இந்த பாட்டா கும்பெனி கூட அப்படித்தான்னு கேள்வி (குறைந்த பட்சம் இந்தியாவில்)
போப்: பார்க்க பெயரிலியின்
http://weirdworldfocus.blogspot.com/2005/04/habemus-papam.html

வலைபதிவுலகிலிருந்து ஹாலிவுட்டிற்கு இன்னொரு சியாமளன்...
உருப்படற நாராயணன்...
பராக்...பராக்....
(நீங்க செய்வீங்க..;))
 
Brother Narain, rather say comrade Narain, I was hoping that you would right about the plist of soldier Jeewan Kumar
but you seemed to obessed more about outside world, pope, capitalism while your binocular blurred out about our Indian Soldier Jeewan Kumar
http://us.rediff.com/news/2005/apr/19kanch.htm
I am little disappointed. :(
The media apathy on this regard is disgusting!! Looks like human rights these are meant only for terrorist and naxalites.
 
டிஸ்கவரி எகிப்தியப் படங்கள் பற்றிய தகவலுக்கு நன்றி. நான் பார்க்கப் போகிறேன். வேண்டுமென்றால் அதைப்பற்றி தினமும் ஒரு பதிவு பதிந்தால் ஆயிற்று!
 
//வித்யா சாகர் இசையில் 6 பாட்டில் 3 தேறிவிடும். அதிலும் "சின்ன சின்ன சிகரங்கள் காட்டி" என்கிற பாடல் சென்சாராகுமா என்று தெரியாது. வைரமுத்து என்று நினைக்கிறேன் [ஏனெனில் பாடலில் "ட்சுனாமி" என்ற வார்த்தை 3 இடங்களில் வருகிறது ;-)] பூடகமாக ஒரே பச்சைமயம். இது தாண்டி, "சின்னப் பொண்ணு சொன்னா கேளு" //

ஆப்பு வெச்சிட்டாங்கோ....

சென்ஸார்லே இந்தப் பாட்டுக்கு ஆப்பு அடித்து விட்டார்கள் என்று இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் ( சென்னைப் பதிப்பு ) சொல்கிறது.

When the producer wanted to telecast the song as promos in television channels, and submitted it to the censors, they took great umbrage to the opening lines of the song...

"chinna china sigarangal kaatti chella kathaikaL sollaathe
kollai azagu, uru thandi ennai kollaathee
thottuth thadavi soodetrivittu, kattuk kathaikal sollaadhe
kuththu kambu, viralai ennai kuththudhe..."

They immediately asked the lyrics to be changed, because they felt that it had sexual innuedos.

செய்தியின் கடைசி வரிகள் தான் காமெடி....
.
".... but what is more surprising is that these lyircs have been written by Vairamuthu, a poet laureate and national award winner.

இதிலே ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? அது சரி, அவர்களே போன மாசம் வந்து இங்கே குடியேறினார்கள். போகப் போகத் தெரிந்து கொள்ளுவார்கள்.
 
நன்றி விஜய், தங்கமணி, பத்மா அரவிந்த், பாலாஜி, பத்ரி, பிரகாஷ். பத்ரி, பதியுங்கள் படித்தாவது தெரிந்து கொள்ளுகிறேன் என்ன போட்டார்கள் என்று. என் வீட்டு சின்னஞ்சிறுசுகள் சனிக்கிழமை படம் பார்க்காத நேரத்தில் நான் மட்டும் தனியாக உடகார்ந்து கொண்டு போகோவில் "Walking with Dinosaurs" பார்த்துக் கொண்டிருக்கிறேன் (மாமா.. இது போர் ப்ரோக்ராம், நீ ரிமோட்டை கொடு என்று கூச்சலிடுவாள் என் தங்கை மகள்) என்னத்த சொல்றது.

பிரகாஷ், வைச்சிட்டாங்களா ஆப்பு, அப்படிப் போடு,போடு,போடு....
 
கிகிறுக்கன், அது வருந்தத்தக்க விஷயமே, இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், இந்தியாவில் வந்தேறிய பங்களாதேஷிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள். காலையில் என்.டி.டிவியில் மஹாராஷ்டிரா அரசு, தீடீரென்று டான்ஸ் பார்களில் ஆடிய பெண்களில் பலர் பங்களாதேஷிகள் என்றும், அவர்கள் இந்தியாவில் இருப்பது இந்திய இறையாண்மைக்கு நல்லதில்லை என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்கள். தன் உடலைக் காட்டியாடும் டான்ஸ் பார் பெண்களால் இந்தியாவுக்கு ஆபத்து வருமென்று என்பதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இதைத் தாண்டி, 58 வருடங்களாக வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், இன்றைக்கு ஒரு ஜவான் கொல்லப்பட்டதற்காக வருந்துகிறீர்கள். இதே வலியையும், வேதனையும் எத்தனைமுறை நம் ராணுவத்தினர் வடகிழக்கு மாநில மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பது பற்றி படியுங்கள். விவரங்கள் புரியும். மணிப்பூரில் வீடு புகுந்த இந்திய ராணுவத்தினரால் வன்புணரப்பட்ட பெண்களை பற்றியும், பிற பெண்கள் நிர்வாணமாக இந்திய ராணுவ முகாமிற்கு முன் நின்று "Indian Army. Rape Us" என்று கோஷமிட்டபோது எங்கே போனது உங்களின் மனிதாபிமானமும், மனித உரிமைகளும்.

ஒரு ஜவான் இறந்து போனது வருத்தப்படும் விஷயமே. உடனே, பங்களாதேஷிகளுக்கு ஐஎஸ்ஐயோடு தொடர்பு, பிற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு என்று எதற்காக பேச ஆரம்பிக்கிறீர்கள் ? பிரச்சனை இந்தியாவிலுமிருக்கிறது. அது தெரியுமாதலால் தான், அவ்விறப்பினைப் பற்றி எழுதவில்லை.

இது தாண்டி, இந்த தோழர், காம்ரேட் வகையறாக்களில் நான் வரமாட்டேன். அடிப்படையில் எனக்கும் கம்யுனிசம் பிடிக்குமாயினும், அதை தாண்டி வெகு தொலைவு நீங்களும், நானும், உலகமும் சென்று கொண்டிருக்கிறோம். மனிதர்களை மனிதர்களாக பாருங்கள். இஸங்களையும், ஈகோக்களையும் தூக்கியெறிந்துவிட்டு பேசுவோம்.

மேலும், இது உங்களை கோபமூட்டினாலும் சொல்ல விரும்புகிறேன். என்பதிவில் என்ன எழுதவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு. அதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.
 
ப்ளொக்கரில் மறுமொழி போடுவதே கஷ்டமாக இருக்கிறது. இதாவது முடிகிறதா பார்க்கணும்!

பைனாகுலர் என்று வைத்துக் கொண்டு பொறாமைப்பட வைக்கிறீர் அய்யா. நடத்தும்! நடத்தும்!!


---

walking with dinosaurs போரா?

இங்கேயும் நூலகத்தில் சிறுவர்கள் பிரிவில்தான் வைத்திருந்தார்கள். நூலகத்தில் கேட்டதில், அவர்களுக்கும் தெரியவில்லை. :( அகஸ்மாத்தாக அங்கே ஏதோ எடுக்கப் போனபோது கிடைத்தது. நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. எப்படிச் செய்தார்கள் என்று வியந்துகொண்டேன். எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டேஏஏஏ... இருந்துவிட்டேன். நீங்களாவது எழுதுங்கள்.

முன்பு கா.ரா. winged migration என்ற சுவாரசியமான பதிவு எழுதியிருந்தார்.
 
டிஸ்கவரி சேனலின் எகிப்திய நிகழ்ச்சி பற்றிய சுட்டிக்கு நன்றி. சுவாரசியமான தகவல்கள். சில வருடங்களுக்கு முன்னால், BBCயில் எகிப்தின் அரச குடும்பத்தைப் பற்றிய அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தது இன்னமும் பசுமையாக நினைவிலிருக்கிறது...
டிஸ்கவரியைப் பார்க்க முடியாவிட்டாலும், இணையத்தளத்தைப் பார்த்துத் திருப்திப்படுத்திக்கொள்கிறேன். :-)
 
Narain

There is no need to be angry and I am not here on an Ego trip.
chill out bro!!
Whatever you decide to post is at your own discretion and I am not going to question it.
The point I was making it humanist should be at all the levels and they shouldnt be used to black mail Govt or people.
In many cases human rights folks are also playing political. More on that later . Coming back to your topic, being in US, I am seeing the changes this country is going thorough, its becoming conservative by the second.
During the election time, Kerry's own community rejected him and all Catholics where told to vote for Bush :),xstian evangelist worked overtime to make sure Kerry is defeated. What more he was also refused holy communion by his own church.So much for kindness and pava mannippu
These folks also has big agendas expansion of their xstiandom. Needless mention India is their next target :).
They are against Darwins theory of creation against science, against abortion saying they are pro life,but for them war is ok, kill innocent people is fine. And whatmore they see Bush as Gods Agent :)
Anyway have you read Mr.Rajan Raghurams book 'Saving Capitalism From Capitalists', he is from chennai, now IMF adviser first asian and indian,tamilan to hold that post is only 40.
 
This comment has been removed by a blog administrator.
 
நாராயணன், வேலையில்லாமல் போரடித்தபடி இருந்தால் கூட இரண்டு பைனாக்குலர் எழுதவும். பலருக்கு பயன் படும்.
 
வசந்த், நக்கலடிக்கிறீர்களா அல்லது சீரியஸாக சொல்லுகிறீர்களா என்று புரியவில்லை. கொஞ்சம் விளக்கவும்.
 
சீரியஸ்தான், இதில் (உங்களிடம்) விளையாட என்ன இருக்கிறது?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]