Apr 22, 2005
பைனாகுலர் 10346
இரண்டு விளம்பரங்கள். இரண்டுமே ஆரஞ்சு சம்பந்தப்பட்டவை.
முதலில், திரிஷாவின் பேன்டா விளம்பரம். "புது புட்டி, புல்லா Naughty" என்கிற வாசகத்தோடு வருகிற புதிய டிவி விளம்பரத்தினைப் பார்த்தால் பகீரென்றிருக்கிறது. அதில் வரும் ஆண் பெண் உடலை சைகையால் காட்டுகிறார். அதற்கு திரிஷாவும் ஆமாமென்கிறார். என்னடா வென்று பார்த்தால், பேன்டா ஆரஞ்சு பானம் புதிய புட்டியில் வந்திருக்கிறது. அந்த புது புட்டி, மேலே உப்பி, இடையிலே மெலிந்து, மீண்டும் அடிப்பாகம் பெருத்து இருக்கிறது. இது பெண் உடல் போல இருக்கிறதாம். இதில் அதில் வரும் விளம்பர பாடலில் "குட்டி, புட்டி" என்று ஒப்பீடுகள் வேறு. கேவலமாக இருக்கிறது. பேர் & லவ்லியில் ஒரு பெண் கலராக இல்லாததால், கல்யாணம் நடக்காமல் போய்விடுவது போல ஒரு விளம்பரம் ஒரு வருடத்துக்கு முன்பு வந்தது. உடனே இந்தியாவின் எல்லா மகளிர் சங்கங்ளும் களத்தில் குதித்தன. லீவர் நிறுவனம் அவ்விளம்பரத்தினை நிறுத்தியது. அதைவிட மோசமாக, ஒரு குளிர்பானம் இருக்கும் குப்பியினை, பெண்ணுடலாக சொல்லி ஒரு விளம்பரம் வருகிறது. ஒரு சத்தத்தையும் காணோம். இத்தனைக்கும், மதர்த்த டைட்டான டீ-சர்ட்டோடு திரிஷா, புது புட்டி என எல்லா விளம்பரபலகைகளிலும் நகரெங்கும் சிரித்துக் கொண்டிருக்கிறார். சூடு சுரணையற்று போய்விட்டோமா நாம் ? பெண்ணுடலாக எப்படி ஒரு குப்பியினை பார்க்கமுடியும். அதிலொளிந்திருக்கும் வக்கிர சிந்தனைக்கு செருப்படி தரவேண்டாமா ? சீரியல் பார்த்து,பார்த்து இங்கே உணர்வுகள் மங்கி போய்விட்டன என்று நினைக்கிறேன். வெட்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இது, விவேக் நடிக்கும் மிரிண்டா விளம்பரம். "ஜாலிக்கு டேஸ்டே இதான் டா....." என நீளும் விளம்பரத்தில் மிக முக்கியமான வாசகம் "லோக்கல் தான் டா கலக்கல்".ஐயா, என்றைக்கு பெப்சி இந்திய கம்பெனியானது. இன்னும் அது பன்னாட்டு கம்பெனிதானே? நான் உலகமயமாக்கலை எதிர்ப்பவனில்லை. அதே சமயத்தில் உலகமயமாக்கம் என்கிற பெயரில் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடாதீர்கள். மிரிண்டா எப்படி லோக்கல் பானமாக இருக்கும். இங்கே ஆரஞ்சினை கொள்முதல் செய்து போட்டால் உடனே அது லோக்கலாகிவிடுமா ? என்னய்யா கதையிது. என்றைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக தான் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களாக மாறப் போவதில்லை. அப்படியிருக்கையில், மிரிண்டா லோக்கல் என்று விளம்பரம் செய்வது எவ்விதத்தில் நியாயம்? அதில் கொடுமை, லோக்கல் என்று சொல்லிவிட்டு, வரும் விளம்பர அழகிகளைப் பார்த்தால் ஒரே மும்பாய் மயம். இதிலே எங்கே லோக்கல் வந்தது? விவேக் முதன்மையாக வரும் விளம்பரம், தமிழ்நாட்டினை சார்ந்துதான் இருக்கும். இங்கே பக்கத்து மாநில மலையாளியே லோக்கல் கிடையாது. அப்படி இருக்கும்போது மும்பாய் மாடல்கள் எப்படி லோக்கலாக முடியும். நல்லா அரைக்கறாங்கய்யா தலையில மொளகா..
தாஸில் சங்கர் மகாதேவனும், மகாலட்சுமியும் பாடியிருக்கும் பாடல் ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சரியான டூயட் கலவையான பாடல். ரொம்ப கவித்துவமாகவுமில்லாமல், அதே சமயம் ரொம்ப லோக்கலாவும் இல்லாமல் நன்றாக கலந்தடித்திருக்கிறார். ஏற்கனவே கேட்ட நிறைய ராஜாவின் பாடல் சாயல் அடித்தாலும், ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. லாஜிக்கெல்லாம் இந்த பாடலில் பார்க்காதீர்கள். தூக்கி குப்பையில் போடுங்கள். எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி சுவாரசியமான பாடல் கேட்டு. வா,வா நீ வராங்காட்டி போ என்கிற பாடல் அப்படியே அவர் அப்பாவின் "அடியே மனம் நில்லுனா நிக்காதேடியின்" டிட்டோ காப்பி. அது சரி யார் யாரோ அவர் அப்பா பாடலை காப்பியடிக்கும்போது, பையன் அடிக்கக் கூடாதா ;-)எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பாடல் சூப்பர் ஹிட்.இன்னொரு "அப்படிப் போடு" ரெடி. (இசை: யுவன் சங்கர் ராஜா )
பால் சக்கரியா, மலையாள எழுத்தின் மிகமுக்கியமான அங்கம். நிறுவனமயமாக்கப்பட்ட பல்வேறு இலக்கிய கோட்பாடுகளை கட்டுடைத்தவர். சமூக போராளி. முக்கியமாய், பாலியலை தொடாத மலையாள எழுத்தாளர்கள் மத்தியில், துணிச்சலாய், பாலியல் தொடர்பான விஷயங்களை எழுதி, இன்றைய எழுத்தாளர்களுக்கு பாட்டை போட்டுக் கொடுத்தவர். இப்போது காலச்சுவட்டில் பத்தி எழுதி வருகிறார். தருண் தேஜ்பால், தெஹல்கா என்கிற ஒரு இணையதளத்தினை வைத்துக் கொண்டு ஆயுத பேர ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர். இன்றைக்கு தெஹல்கா வாரப் பத்திரிக்கையாக வருகிறது. அரசும், ஊடகங்களும் மறைக்கும் இடங்களில் தெஹல்கா, துணிச்சலாக பயணம் செய்கிறது. தருண் தேஜ்பால், இன்று இந்தியாவின் பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான நபர். இப்போது முதன்முறையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Alchemy of Desire என்று பெயரிடப்பட்ட அப்புத்தகத்திற்கு, பால் சக்கரியா விமர்சனமெழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள், என்ன நடை, என்ன ஆங்கிலம்.
ஜென்சி என்றொரு பாடகி இருந்தார். அவரது குரல் குரலல்ல. தேவகானம். சோகமும், தவிப்பும் இழையோட "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து" என்று ஆரம்பித்தால் போதும். உலகம் கொஞ்சம் நின்று கேட்டு விட்டுப் போகும். எத்தனைப் பாடல்கள். "தெய்வீக ராகம்""ஆசையை காத்துல தூது விட்டு" "ஏன் வானிலே ஒரே வெண்ணிலா" "ஆயிரம் மலர்களை, மலருங்கள்" "நம்தன நம்தன தாளம் வரும், புது ராகம் வரும்" என நீளும் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு பாடலையும் குறைந்தது ஆயிரம் தடவைகளாவது கேட்டிருப்பேன். யாராவது மொத்த ஜென்சியின் பாடல்கள் கலெக்ஷன் வைத்திருப்பின் சொல்லுங்கள், Fed Ex செலவு முதற்கொண்டு வாங்கி கொள்கிறேன். உச்சத்தில் இருக்கும்போது, கேரளாவில் ஒரு பள்ளியில் இசையாசிரியராக வாய்ப்பு கிடைத்து சென்றுவிட்டார். 20 வருடங்கள் ஒடி விட்டன. சிறிது காலத்திற்கு முன்பு ஆனந்த விகடனுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார். இளையராஜா அழைத்தால் பாட ஆசைப் படுவதாக. இசைஞானி கொஞ்சம் மனசு வைக்கணும். கந்தர்வ குரலென்பார்களே அப்படிப்பட்ட குரல். அதேப் போன்றதொரு குரல் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு. போஸ் என்கிற டப்பா படத்திலும் ஒரு அருமையான பாடல் பாடியிருப்பார் - "நிஜமா, நிஜமா, இது என்ன நிஜமா, நீயா நான் நிஜமா". தாஸிலும் ஒரு அருமையான பாடல ("சாமி கிட்ட சொல்லிப்புட்டேன். உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்")பாடியிருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் அலையோய்ந்து இது யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, இமான் காலம். இப்போதைக்கு ஜென்சிக்கு பதில் ஸ்ரேயா கோஷலுக்காவது நிறைய பாடல்கள் தரவேண்டுமென்று பிரார்த்திக்கலாம்.
நண்பர் சொன்னது: "உலகத்திலேயே சொல்லும் சொல் படி நடப்பவர்களில் மைக்கேல் ஜாக்சனும் ஒருவர். பார், நமக்கெல்லாம் மூக்கு ஒழுகிறது என்றால், மூக்குக்குள்ளிருந்து ஒழுகும். அவரை பார், சொன்ன சொல் தவறாமல் மூக்கே ஒழுகுகிறது (பிளாஸ்டிக் மூக்கு ;-)) "
முதலில், திரிஷாவின் பேன்டா விளம்பரம். "புது புட்டி, புல்லா Naughty" என்கிற வாசகத்தோடு வருகிற புதிய டிவி விளம்பரத்தினைப் பார்த்தால் பகீரென்றிருக்கிறது. அதில் வரும் ஆண் பெண் உடலை சைகையால் காட்டுகிறார். அதற்கு திரிஷாவும் ஆமாமென்கிறார். என்னடா வென்று பார்த்தால், பேன்டா ஆரஞ்சு பானம் புதிய புட்டியில் வந்திருக்கிறது. அந்த புது புட்டி, மேலே உப்பி, இடையிலே மெலிந்து, மீண்டும் அடிப்பாகம் பெருத்து இருக்கிறது. இது பெண் உடல் போல இருக்கிறதாம். இதில் அதில் வரும் விளம்பர பாடலில் "குட்டி, புட்டி" என்று ஒப்பீடுகள் வேறு. கேவலமாக இருக்கிறது. பேர் & லவ்லியில் ஒரு பெண் கலராக இல்லாததால், கல்யாணம் நடக்காமல் போய்விடுவது போல ஒரு விளம்பரம் ஒரு வருடத்துக்கு முன்பு வந்தது. உடனே இந்தியாவின் எல்லா மகளிர் சங்கங்ளும் களத்தில் குதித்தன. லீவர் நிறுவனம் அவ்விளம்பரத்தினை நிறுத்தியது. அதைவிட மோசமாக, ஒரு குளிர்பானம் இருக்கும் குப்பியினை, பெண்ணுடலாக சொல்லி ஒரு விளம்பரம் வருகிறது. ஒரு சத்தத்தையும் காணோம். இத்தனைக்கும், மதர்த்த டைட்டான டீ-சர்ட்டோடு திரிஷா, புது புட்டி என எல்லா விளம்பரபலகைகளிலும் நகரெங்கும் சிரித்துக் கொண்டிருக்கிறார். சூடு சுரணையற்று போய்விட்டோமா நாம் ? பெண்ணுடலாக எப்படி ஒரு குப்பியினை பார்க்கமுடியும். அதிலொளிந்திருக்கும் வக்கிர சிந்தனைக்கு செருப்படி தரவேண்டாமா ? சீரியல் பார்த்து,பார்த்து இங்கே உணர்வுகள் மங்கி போய்விட்டன என்று நினைக்கிறேன். வெட்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இது, விவேக் நடிக்கும் மிரிண்டா விளம்பரம். "ஜாலிக்கு டேஸ்டே இதான் டா....." என நீளும் விளம்பரத்தில் மிக முக்கியமான வாசகம் "லோக்கல் தான் டா கலக்கல்".ஐயா, என்றைக்கு பெப்சி இந்திய கம்பெனியானது. இன்னும் அது பன்னாட்டு கம்பெனிதானே? நான் உலகமயமாக்கலை எதிர்ப்பவனில்லை. அதே சமயத்தில் உலகமயமாக்கம் என்கிற பெயரில் எல்லாவற்றையும் சொந்தம் கொண்டாடாதீர்கள். மிரிண்டா எப்படி லோக்கல் பானமாக இருக்கும். இங்கே ஆரஞ்சினை கொள்முதல் செய்து போட்டால் உடனே அது லோக்கலாகிவிடுமா ? என்னய்யா கதையிது. என்றைக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்களாக தான் இருக்கும். உள்நாட்டு நிறுவனங்களாக மாறப் போவதில்லை. அப்படியிருக்கையில், மிரிண்டா லோக்கல் என்று விளம்பரம் செய்வது எவ்விதத்தில் நியாயம்? அதில் கொடுமை, லோக்கல் என்று சொல்லிவிட்டு, வரும் விளம்பர அழகிகளைப் பார்த்தால் ஒரே மும்பாய் மயம். இதிலே எங்கே லோக்கல் வந்தது? விவேக் முதன்மையாக வரும் விளம்பரம், தமிழ்நாட்டினை சார்ந்துதான் இருக்கும். இங்கே பக்கத்து மாநில மலையாளியே லோக்கல் கிடையாது. அப்படி இருக்கும்போது மும்பாய் மாடல்கள் எப்படி லோக்கலாக முடியும். நல்லா அரைக்கறாங்கய்யா தலையில மொளகா..
தாஸில் சங்கர் மகாதேவனும், மகாலட்சுமியும் பாடியிருக்கும் பாடல் ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு சரியான டூயட் கலவையான பாடல். ரொம்ப கவித்துவமாகவுமில்லாமல், அதே சமயம் ரொம்ப லோக்கலாவும் இல்லாமல் நன்றாக கலந்தடித்திருக்கிறார். ஏற்கனவே கேட்ட நிறைய ராஜாவின் பாடல் சாயல் அடித்தாலும், ஆரம்பம் அசத்தலாக இருக்கிறது. லாஜிக்கெல்லாம் இந்த பாடலில் பார்க்காதீர்கள். தூக்கி குப்பையில் போடுங்கள். எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி சுவாரசியமான பாடல் கேட்டு. வா,வா நீ வராங்காட்டி போ என்கிற பாடல் அப்படியே அவர் அப்பாவின் "அடியே மனம் நில்லுனா நிக்காதேடியின்" டிட்டோ காப்பி. அது சரி யார் யாரோ அவர் அப்பா பாடலை காப்பியடிக்கும்போது, பையன் அடிக்கக் கூடாதா ;-)எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பாடல் சூப்பர் ஹிட்.இன்னொரு "அப்படிப் போடு" ரெடி. (இசை: யுவன் சங்கர் ராஜா )
பால் சக்கரியா, மலையாள எழுத்தின் மிகமுக்கியமான அங்கம். நிறுவனமயமாக்கப்பட்ட பல்வேறு இலக்கிய கோட்பாடுகளை கட்டுடைத்தவர். சமூக போராளி. முக்கியமாய், பாலியலை தொடாத மலையாள எழுத்தாளர்கள் மத்தியில், துணிச்சலாய், பாலியல் தொடர்பான விஷயங்களை எழுதி, இன்றைய எழுத்தாளர்களுக்கு பாட்டை போட்டுக் கொடுத்தவர். இப்போது காலச்சுவட்டில் பத்தி எழுதி வருகிறார். தருண் தேஜ்பால், தெஹல்கா என்கிற ஒரு இணையதளத்தினை வைத்துக் கொண்டு ஆயுத பேர ஊழலை வெட்ட வெளிச்சமாக்கியவர். இன்றைக்கு தெஹல்கா வாரப் பத்திரிக்கையாக வருகிறது. அரசும், ஊடகங்களும் மறைக்கும் இடங்களில் தெஹல்கா, துணிச்சலாக பயணம் செய்கிறது. தருண் தேஜ்பால், இன்று இந்தியாவின் பத்திரிக்கைத்துறையின் மிக முக்கியமான நபர். இப்போது முதன்முறையாக ஒரு நாவல் எழுதியிருக்கிறார். Alchemy of Desire என்று பெயரிடப்பட்ட அப்புத்தகத்திற்கு, பால் சக்கரியா விமர்சனமெழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள், என்ன நடை, என்ன ஆங்கிலம்.
"Tarun Tejpal’s first novel takes on what could be called near-impossible ground in the Indian cultural situation, or, for that matter, in a lot of ‘advanced’ cultures all over the world. It is the depiction of sexuality in fiction in words that squarely face up to their task — or in words, so to say, that are accountable. Khajuraho and Kama Sutra may be recalled fondly, but Indians in general, in public, wince when they run into sex in writing. "- பால் சக்கரியாவின் விமர்சனம் | புத்தகம் பார்க்க, வாங்க
"The Alchemy of Desire — in deciding to be accountable for his words and his genius. And he powers his words with an exhilarating energy and force, making them re-state the erotic in Indian writing. Tejpal’s novel is easily the most beautifully sensuous work by an Indian that I’ve ever read. His narrative of the body’s desire shines with a heart-warming vibrancy."
ஜென்சி என்றொரு பாடகி இருந்தார். அவரது குரல் குரலல்ல. தேவகானம். சோகமும், தவிப்பும் இழையோட "விழியில் விழுந்து, இதயம் நுழைந்து" என்று ஆரம்பித்தால் போதும். உலகம் கொஞ்சம் நின்று கேட்டு விட்டுப் போகும். எத்தனைப் பாடல்கள். "தெய்வீக ராகம்"
நண்பர் சொன்னது: "உலகத்திலேயே சொல்லும் சொல் படி நடப்பவர்களில் மைக்கேல் ஜாக்சனும் ஒருவர். பார், நமக்கெல்லாம் மூக்கு ஒழுகிறது என்றால், மூக்குக்குள்ளிருந்து ஒழுகும். அவரை பார், சொன்ன சொல் தவறாமல் மூக்கே ஒழுகுகிறது (பிளாஸ்டிக் மூக்கு ;-)) "
Comments:
<< Home
//"விழியில் விழுந்து, இதயம் நுழைந்து" //
பாடியவர் சசிரேகா.
//ஆசையை காத்துல தூது விட்டு" // ஷைலஜா.
//ஆயிரம் மலர்களை, மலருங்கள்" "நம்தன நம்தன தாளம் வரும், புது ராகம் வரும்" //
ஆமாம், பாதி பெண்குரல் ஜென்ஸி

லிரில் விளம்பரத்தை பார்த்தீரா? நான் என்னமோ காண்டம் விளம்பரம் என முதலில் நினைத்தேன். வயக்கர மாதிரி ஆகி போச்சா இந்த லிரில் சோப்பு?
அப்புறம் ஜென்சியின் குரல் எனக்கு மிக மிக பிடிக்கும். குரலை கேட்கும் போதெல்லாம் நினைத்ததுண்டு 'இந்த அம்மா இப்போ எங்கே?" என்று. நல்ல தகவல். மீண்டும் கோகிலா படத்தில் 'சின்னஞ்சிறு வயதில் எனக்கோ சித்திரம்" என்ற பாடல் ஜென்சி என்று நினைக்கிறேன். சைலாஜா மற்றும் ஜென்சி குரல் குழப்பும் எப்போதுமே.

//'சின்னஞ்சிறு வயதில் எனக்கோ சித்திரம்" என்ற பாடல் ஜென்சி என்று நினைக்கிறேன்.//
இல்லை ஷைலஜா.
//சைலாஜா மற்றும் ஜென்சி குரல் குழப்பும் எப்போதுமே.//
எப்படி என்று எனக்கு புரியவில்லை.

ஜென்ஸி, ஸைலஜா, ஜானகி குரல் வித்தியாசம் காண, எல்லோரும் மகேந்திரனின் ஜானி பாருங்கள்/கேளுங்கள் ;-)
ஜென்ஸி:"என் வானிலே ஒரே வெண்ணிலா" & "ஒரு இனியமனது"
சைலஜா:"ஆசையக் காத்தில தூதுவிட்டு"
ஜானகி: "காற்றில் ஆடும் கீதம்"
/"லோக்கல் தான் டா கலக்கல்"./
சரியாகக் கேட்டீர்களா? அவர் "low கள் தான் ரா கலக்கல்" என்றிருப்பாரோ என்னவோ? ;-)

ஷ்ரேயா கோஷலையும், ஜென்சியையும் கம்பேர் பண்றீங்களா? இன்னா ஒரு இது இருந்தா........இருக்கட்டும்.... ஏரியா பக்கம் வராமலேயா போய்டுவீர்...?
மயிலே மயிலே உன் தோகை எங்கே..
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே...
மயிலே மயிலே உன் தோகை எங்கே..
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே...
இங்கே இன்னும் சொல்லாத ஜென்சியின் சில பாடல்கள்.
எனக்கு ஜென்சி பாடி மிக மிக மிக மிக (வெறி) பிடித்த பாடல்கள் இரண்டு. அதை இன்னும் சொல்லாததால்..
1. இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. (நிறம் மாறாத பூக்கள்)
2. இதயம் போகுதே ...!(புதிய வார்ப்புகள்)
மற்றவை
1. காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)
2. மீண்கொடி தேரில் மன்மதராஜன்.. (கரும்பு வில்)
3. தேவன் திருச்சபை மலர்களே
4. பனி மழைவிழும் பருவத் துயில் எழும் (தீபன் சக்ரவர்த்தியுடன் 'உனக்காகவே வாழ்கிறேன்.)
5. அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை (முள்ளும் மலரும்)
6. கீதா சங்கீதா.. (ஜெயசந்திரனுடன்)
7. பனியும் நானே மலரும் நானே (பனிமலர்)
8. பூ மலர்ந்திட நடமிடு பொன் மயிலே (டிக் டிக் டிக்)
9. என்னுயிர் நீதானே பிரியா)
10. நான் நான் பாடணும் (பூந்தளிர்)
இதுக்கு மேலே வேற இருக்கான்னு தெரியல.

கலக்கல் லிஸ்ட் ரோசா. இதில் எல்லாமே அடிக்கடி கேட்பது.என்னிடம் உள்ள MP3 கலெக்ஷனில் நிறைய பாடல்கள் இருக்கின்றன.நன்றி
//1.காதல் ஓவியம் (அலைகள் ஓய்வதில்லை)
2.பனி மழைவிழும் பருவத் துயில் எழும் (தீபன் சக்ரவர்த்தியுடன் 'உனக்காகவே வாழ்கிறேன்.)
3. அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை (முள்ளும் மலரும்)
4. பூ மலர்ந்திட நடமிடு பொன் மயிலே (டிக் டிக் டிக்)
என்னுயிர் நீதானே பிரியா)
5. இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. //
இது போறுமய்யா சோறு தண்ணியில்லாம கேட்கலாம். கேட்டிருக்கறேன்.
பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி.

'ராஜபார்வை' யில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன். 'விழியோரத்து கனவும் வந்து கலைந்தோடியதே.....
சமீபத்திய ஆனந்தவிகடனில் கூட ஜென்சியின் பேட்டி வந்திருந்தது. இளையராஜாவை மிகவும் சிலாகித்து சொல்லியிருந்தார். ஏதோ பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் போல் ஜென்சியின் குரலில் ஒரு சாதாரணத்தன்மையும் அதே சமயத்தில் ஒரு வசீகரமும் கலந்திருக்கும். என்னுடைய பேவரிட் 'தெய்வீக ராகம்'..... அதுவும் ஆரம்பத்தில் வரும் அந்த ஹம்மிங்......... Fantastic.
Narain
I just finished my blog about Thiraisail sila ragangal -part 2
I have mentioned about Jensi there
check it out
KKNK

நரேன் நல்லதொரு அலசல். பால்சக்காரியா பற்றியும் அவருக்கு விருது கிடைத்தது குறித்தும் சுகுமாரன் எழுதியதை ஏற்கனவே வாசித்திருந்தேன். தாஸையும் கேட்டேன்; இரசித்தேன்.
//பேர் & லவ்லியில் ஒரு பெண் கலராக இல்லாததால், கல்யாணம் நடக்காமல் போய்விடுவது போல ஒரு விளம்பரம் ஒரு வருடத்துக்கு முன்பு வந்தது. உடனே இந்தியாவின் எல்லா மகளிர் சங்கங்ளும் களத்தில் குதித்தன. லீவர் நிறுவனம் அவ்விளம்பரத்தினை நிறுத்தியது. //
நல்ல விசயம்.( நான் ஈழத்தில் நின்றபோது fair n lovely விளம்பரத்திற்கு ஹரிணி ஒரு கிரிக்கெட் ஒலிபரப்பாளராய் வருவதுபோன்ற விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம்.) Fanta விளம்பரத்திற்கும் தங்கள் எதிர்ப்பை மகளிர்சங்கங்கள் காட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.
.....
//கோதாரி! எல்லாமே என் காலத்துக்கேசுகள்தானா? :O//
பெயரிலி நான் அப்படியில்லை. நான் பாகவதர் காலத்து ஆளாக்கும். அதுசரி, அவருடைய காலத்து நாயகிகளின் பெயர்கள் என்ன? அடிக்கடி கனவில் பலரோடு டூயட் பாடியதால் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டேன் :-).

anybody having mp3 songs of eera vizhi kaaviyangal?...if u have can u share it with me. it seems u cant get the cd or cassete of the movie anymore.
//songs of eera vizhi kaaviyangal?...if u have can u share it with me. it seems u cant get the cd or cassete of the movie anymore//
நீங்க ஆருன்னு தெரியலை... இருந்தாலும், ராஜா பாட்டு வேணும்னு கேட்டு வரவரங்களை, ஆண்டவனும் , நானும் கைவிடறதே இல்லை.... என்சாய்ய்ய்ய்ய்
1. கனவில் மிதக்கும்
2. பழைய சோகங்கள்
3. காதல் பண்பாடு

Thx icarus. but i am looking for mp3 not ram format. moreover u cant download any songs from the site (or u can?)...
அய்யா இகாரஸ், அப்படியே இந்த 'எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்" (நதியை தேடி வந்த கடல்)பாட்டை தேடித்தர முடியுமா? மியூசிகிண்டியா, தூளில் இல்லை. இந்த ராஜாதளத்திலும் மேலோட்டமாய் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தால் உமக்கு இணையத்தில் ஏதாவது யாஹூதளத்தில் ஒரு சிலை வைக்கிறேன். நன்றி
kavi : i dont think mp3 version is available. if you are desperate, i have a way out.
http://www.allformp3.com/ram-mp3-recorder/ram-mp3-recorder.htm
download the tool, and record and the song, the output will be in mp3 format

rosa: நீர் நானெல்லாம் ஒரே சாதி ஓய் ( தலைவர் & பண்ணைபுர ராசா மேட்டர்லே மட்டும்) ... நமக்குள்ளே எதுக்கு இந்த சிலையும், கிலையும்? இந்தா புடிங்கோ...
http://www.thaalam.net/page/build/album/Nathiyai_Thedi_Vantha_Kadal/

ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா. மகாசனங்களே என் பதிவு மெஸேஜ் போர்டு மாதிரி ஆகிடுச்சு. நாளைக்கு எவனாவது இந்த பதிவைப் பார்த்து All India Recording Association க்கு போட்டு கொடுத்தான் நான் காலி. எம்பி3 எல்லாம் இந்தியாவுல இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கலையா. என் குடி கெடாம இருந்தா சரி :)
ஆகா, கலக்கீட்டீரய்யா! உங்களுக்கு மனச்சிலை ஒன்று ஏற்கனவே கட்டியாச்சு! நான் முதல்வரானால் அண்ணாசாலையிலேயே வைக்கிறேனய்யா!
ஆனால் மகன் தூங்குவதால் இப்போ உடனே கேட்கமுடியாது. நாளைக்கு பாத்துக்கறேன். மிக மிக நன்றி!

பழைய காலத்திலே பாடல்கள் ரேடியோவில் கேட்கையில் யார் பாடுகிறார்கள் என்பது பற்றி கவலைப்படாத ஒரு பழக்கம் இருந்தது. அது ஜெனெரேஷந்கேப் -ஆக இருந்திருக்கலாம் . அல்லது வீட்டில் டேப் ரிக்கார்டர் இல்லாததால், கேசட் வாங்கும் அவ்சியம் இல்லாத்தால் (?) இருந்திருக்கலாம்.
ஜென்சியின் சில பாடல்கள் தான் கேட்டு ரசித்திருந்தேன். இப்படி ஜென்சி பைத்தியங்கள் நிறைய சுட்டிகள் கொடுத்தற்கு நன்றி(இகாரசும்).
Post a Comment
ஜென்சியின் சில பாடல்கள் தான் கேட்டு ரசித்திருந்தேன். இப்படி ஜென்சி பைத்தியங்கள் நிறைய சுட்டிகள் கொடுத்தற்கு நன்றி(இகாரசும்).
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]