Apr 28, 2005

பைனாகுலர் 10347

தேவரடியார்கள் என்றழைக்கப்பட்ட முறையான பாலியல் அமைப்பு எவ்வாறு திரிக்கப்பட்டது, எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டது என விரிவாக எழுதியிருக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன் புதுவிசை ஏப்ரல் இதழில். இதேப் போன்றதொரு செய்தியினை தெஹல்காவும் "கடவுளின் அடிமைகள்" என்று தலைப்பிட்டு தனியாக வங்காளத்தில் நடந்துவரும் கொடுமைகளைப் பற்றிய குறிப்பினை சொல்லியிருக்கிறது. இது தாண்டி, இனி "புதுவிசை" இதழ் புத்தகமாகவும் ஏப்ரல் முதல் வர இருக்கிறது.

பார்க்க - ஆ.சிவசுவின் பத்தி | தெஹல்காவின் செய்தி

வித்தியாசமான வேலைகள் உலகில் நிறைய இருக்கின்றன. நான் முன்பு வேலை பார்த்த இடத்தில், வேலை நிமித்தமாய் ஒரு நபரை சென்னையில் சந்தித்தேன். அவருடைய வேலை, தேவாலயங்களில் உயரே காணப்படும் பெரிய வெண்கல மணிகளை செய்வது. சென்னை வெலிங்டன் ப்ளாசாவிலிருக்கும் அவரது அலுவலகத்திலிருந்துதான் உலகெங்குமிருக்கிற நிறைய தேவாலயங்களுக்கு மணிகள் போகின்றன. வாடிகனுக்கு சென்றதா என்று தெரியவில்லை. இவ்வரிசையில், இன்று மாலை எந்த டிவிடி எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட டிவிடி இது. இது ஒரு விவரணப்படம். ப்ரெட் லாய்ஸ்டர் என்கிற பொறியாளனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ப்ரெட் ஒரு மரண தண்டனை இயந்திரங்கள் வடிவமைப்பாளன் (Execution devices specialist). ஆஸ்விட்ஸில் "கேஸ் சேம்பர்கள்" இல்லவே இல்லை என்று பொய் சான்றிதழ் கொடுத்து செய்தி எழுதியதால் பாழாய்ப் போனவர். வித்தியாமான களன். வித்தியாமான மனிதர். Mr. Death என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் உள்ளடக்கம் என்னை கவர்ந்தது. பார்த்து விட்டு பதிகிறேன்.

பார்க்க - Mr. Death: The rise and fall of Fred A. Leuchter, Jr.

குரு தேசம், சூரஸேந தேசம், குந்தி தேசம், குந்தலதேசம், விராட தேசம், மத்ஸ்ய தேசம், த்ரிகர்த்த தேசம், கேகய தேசம், பாஹ்லிக தேசம், கோஸல தேசம், பாஞ்சால தேசம், நிஷத தேசம், நிஷாத தேசம், சேதி தேசம், தசார்ண தேசம், விதர்ப்ப தேசம், அவந்தி தேசம், மாளவ தேசம், கொங்கண தேசம், கூர்ஜர தேசம், ஆபீர தேசம், ஸால்வ தேசம், ஸிந்து தேசம், ஸெள்வீர தேசம், பாரஸீக தேசம், வநாயு தேசம், பர்பர தேசம், கிராத தேசம், காந்தார தேசம், மத்ர தேசம், காச்மீர தேசம், காம்போஜ தேசம், நேபாள தேசம், ஆரட்ட தேசம், விதேஹ தேசம், பார்வத தேசம், சீந தேசம், காமரூப தேசம், ப்ராக்ஜோதிஷ தேசம், ஸிம்ம தேசம், உத்கல தேசம், வங்க தேசம்,அங்க தேசம், மகத தேசம், ஹேஹய தேசம், ஆந்தர தேசம், யவன தேசம், மஹாராஷ்டிர தேசம், குளிந்த தேசம், த்ராவிட தேசம், சோள தேசம், ஸிம்மள தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், கர்ணாடக தேசம். சோம்பல் படாமல், எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் 56 தேசங்கள் இருக்கிறதா என்று. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் என்கிற 1918-ல் பி.வி. ஜகதீச அய்யர் என்பவரால் எழுதப்பட்டுள்ள நூலில் சொன்ன தகவல் தான் மேலே சொன்னது. அதை அப்படியே அச்சுப் பிசகாமல், மணிபிரவாள நடையில் பதிப்பித்திருக்கின்றார்கள். இரண்டு தொகுதிகளாக இருக்கும் இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிறைய செய்திகளில் எனக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை சுவாரசியமாக இருக்கின்றன. நிறைய செய்திகளையும், மக்கள், கலைகள், சுற்றுச்சூழல், நதிகள், அரசு என நிறைய விஷயங்களை அறிந்துக் கொள்ள முடிகிறது. சென்னையில் நியு புக்லேண்ட்ஸில் கிடைக்கிறது. விலை ரூ.125 (இரண்டு பகுதிகளும் சேர்த்து)

படிக்க - புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்

கூகிள் என்றொரு நிறுவனம் என்னை அடிக்கடி பிரமிப்புக்குள்ளாகினால், அதே வரிசையில் தொடர்ச்சியாக இன்ப அதிர்ச்சி தரும் நிறுவனம் நோக்கியா (இதில் இன்னும் இரண்டு நிறுவனங்கள் இருக்கின்றன - ஆப்பிள் & இகியா) முந்தாநாள் நெதர்லாந்தில் நடந்த ஒரு அரங்கில் புதிதாக நோக்கியா N91 என்றொரு செல்பேசியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இனி எல்லா இடங்களிலும் விற்றுக் கொண்டிருக்கும் MP3 ப்ளேயர்களுக்கு ஆப்பு வைத்தாகிவிட்டது. இந்த பேசியில் குறைந்தது 4 GB வரை (அதாவது சராசரியாக 3000 பாடல்கள்) பாடல்களை சேமிக்கலாம். சும்மா ஜிகினா போனுப்பா இது என்று எஸ்-ஆக வேண்டாம். ஸ்மார்ட் போன் வகையினை சார்ந்த இந்த புது செல்லில் எல்லாவிதமான அலுவலக வேலைகளையும் செய்ய முடியும். நேற்று தான் நோக்கியா 7710 பார்த்து வாங்கலாம் என்ற யோசனையில் இருந்தேன். சரி ஐபாடு, செல் என்று இரண்டு தனித்தனியாக வாங்காமல், இந்தியா வரும்வரை நோக்கியா N91க்கு காத்திருக்கலாம் என்ற யோசனையுடன் வாங்குவதை தள்ளி வைத்து விட்டேன். :)

பார்க்க - நோக்கியா N91 | நோக்கியா 7710

இந்தியப் பத்திரிக்கைகளில் இரண்டு நாட்களாக அடிபடும் விஷயம், திருவள்ளுவரின் பிறப்பிடம், அவர் வாழ்ந்த இடமும். நாகர்கோயிலில் இருக்கும் கன்னியாகுமரி வரலாறு மற்றும் கலாச்சார ஆய்வு மையத்தின் தலைவரான எஸ்.பத்மநாபன் திருவள்ளுவர் "வள்ளுவ நாடு" என்றழைக்கப்படும் கன்னியாகுமரியின் மலைகளையொட்டிய பகுதிகளை ஆண்டவர் என்றும், அங்கு இப்போதிருக்கும் பழங்குடிகளின் வாழ்க்கைமுறைக்கும், செய்திகளுக்கும், திருக்குறளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் அறிவித்திருக்கிறார். ஆக, தற்போதைக்கு, திருவள்ளுவர் மயிலாப்பூரிலிருந்து பேக்-அப்.

பார்க்க - ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

Comments:
நரேன், ஒரு Ipod வாங்கலாம் என்றிருந்தால் நீங்கள் இப்படி Nokia பற்றிக்கூறுகின்றீர்கள். சென்றவாரந்தான், செல்லில் நேரடியாக TV பார்க்கும் வசதியை ரொரண்டோவில் Rogers நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. சரி, சிறிபெரும்புத்தூருக்கு Nokia வருகின்றது என்று கேள்விப்பட்டேன். அங்கேயே போய் நீங்கள் புது Nokia modelஜ வாங்கலாம்தானே :-).
 
நாராயணன் சுட்டிகளுக்கு நன்றி!
 
/த்ராவிட தேசம், சோள தேசம், ஸிம்மள தேசம், பாண்டிய தேசம், கேரள தேசம், கர்ணாடக தேசம்/
அப்படியானால், த்ராவிடதேசம் என்பதுதான் எது?
 
டிசே, தங்கமணி, பெயரிலி நன்றிகள்.

பெயரிலி, சுவாரசியமான புத்தகமது. நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...

"த்ராவிட தேசம்(1) குளிந்த தேசத்தின்(2) தென்பாகத்தில் ஒடும் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும், ஒர் விசால பூமியில் கர்னாடக தேச எல்லைவரையில் பரவியிருக்கிறது. இது ஒரு பெரிய தேசமேயாகும்."

1. இதற்கு தமிழ்தேசமென்று பொருள்; ஏனெனில் இதில் பெரும்பாலும், தமிழ் பாஷை நெடுநாளாய் வழங்குவதால், அக்ஸ்தியரால் ப்ரச்சாரத்தையடைந்த தமிழ் மொழிக்கு த்ராவிடம் என்று வடமொழியில் பெயர் ஏற்பட்டபடியால் புராணங்களுரைக்குங் காலத்திலேயே சக்தி ஸ்ங்க்மந்ட்ரத்தில் த்ராவிட தேசம் என்று வழங்கலாயிற்று.

2. குளிந்த தேசம் தற்போது ஆந்திராவின் உட்பிரிவான மாவட்டமாகிவிட்டது.

3.
 
//முந்தாநாள் நெதர்லாந்தில் நடந்த ஒரு அரங்கில் புதிதாக நோக்கியா N61 என்றொரு செல்பேசியை அறிமுகம் செய்திருக்கிறார்கள். //

இந்த மாதிரி புத்சு புத்சா நோக்கிய நம்மளை நோக்கும் என்பதால் இன்னும் ஆதிகாலத்து நோக்கியா மாடலை இன்னும் விடவில்லை. நோக்கியாவின் கடைசி மாடலை பார்த்து வாங்கிக்கொள்ளலாம் என விட்டு விட்டேன். ஆன என்ன பிரச்சனை சிங்கப்பூரில் பப்ளிக் இடத்தில் அந்த போனில் பேசினால் கேவலமாக பார்க்கிறார்கள் :-)))))))))
 
அண்ணாச்சி அப்படி இந்த சுட்டில உள்ள கைக்கணினியையும் பத்தி யோசிங்க.

http://www.seeo2.com/product/XdaIImini/template/Product.vm

என்ன இந்த ஜன்னல் ஆப்பரேட்டிங்சிஸ்டம் தான் கொஞ்சம் தொல்லை பண்ணும். மத்தபடி சும்மா காலாய்க்கும்.(PDA, mp3 player, IE, WiFI, Bluetooth, IrDA etc...)
 
டிசெ, தங்கமணி, பெயரிலி, விஜய், சம்மி நன்றிகள்.

சம்மி, விண்டோஸ் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே என் நண்பரின் ஐபேக்கில் அது கொடுக்கும் தொல்லைகள் அதிகம். அதனால், விண்டோஸ் ஒஎஸ்க்கு பெரிய கும்பிடு. நான் பார்ப்பது திறமூல ஒஎஸ், ஜாவா, ஸிம்பியன், நோக்கியா ஒஎஸ் மாதிரி ஏனெனில் நிறைய நிபுணர்கள் தொடர்ந்து நிரலிகள் எழுதுவார்கள். ஆனால், விண்டோஸ் ஒரு சொதப்பல். மற்றபடி, நீங்கள் தந்த சுட்டியில் ப்ளாஷ் நன்றாக 3D-யில் செய்திருக்கிறார்கள். நான் கண்ட பயன் அதுமட்டுமே ;)
 
ஐயா சாமி, N91-ன் விலைக்கு 4 iPod Mini-யும் ஒரு சாதாரண செல்பேசியும் வாங்கிவிடலாம். சோனியின் w800i பார்த்தீர்களா?
ஒப்பீடு இங்கே: http://www.gsmarena.com/compare.php3?idPhone2=1154&idPhone1=1089
 
சுதர்சன், விலை கண்டிப்பாக சரியும். காத்திருப்போம். என்ன கெட்டுப் போய்விடப்போகிறது. சாரி, நானொரு டை-ஹார்டு நோக்கியா ஆளூ.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]