Apr 3, 2005

பாலியல் தொழிலும் அங்கீகாரமும் - பகுதி 1

"ஷக்தி கபூரிடம் சான்ஸ் கேட்க சென்ற ஒரு நிருபரை படுக்கைக்கு அழைத்தார்"
"டெல்லி பள்ளியில் ஒரு மாணவனும் மாணவியும் உறவு கொண்டதை, செல்பேசியில் படம்பிடித்து பரப்பியுள்ளார்கள்"
"தலைமையாசிரியர் தன் பள்ளி மாணவியை கற்பழித்தார்"
"சென்னையில் வேனில் விபச்சாரம் செய்த அழகிகள் கைது"
"நடிகை புவனேஸ்வரியின் மீதான விபச்சார வழக்கு தள்ளுபடி"
"மைத்துனியோடு இருந்த கணவரை வெட்டிக் கொன்றாள் பெண்"
"9வது படிக்கும் மாணவி திருமணம் செய்து கொண்டார்"
செய்தி தாள்களில் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம். பொருளாதாரமில்லாமல் இருக்கலாம். ஆனால் மேற்கண்ட மாதிரியான செய்திகள் இல்லாமல் இருக்காது. இவையனைத்திலும் அடிநாதமாக விளங்குவது அடக்கி வைக்கப்பட்ட, கட்டவிழ்க்கப்பட்ட பாலியல் இச்சைகள், வன்முறைகள்.

ஈவ் டீஸிங் அத்துமீறல்களால் சரிகா ஷா என்கிற மாணவி உயிரிழந்ததும், அதற்கு பிறகு ஊடகங்கள் தாவி குதித்ததும் தெரிந்ததே. அம்மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால், ஆதாரமான விஷயத்தை நாம் கண்டுகொள்ளவேயில்லை. அவர்களை ஒரு பெண்ணினை சாகுமளவிற்கு கிண்டல் செய்ய தூண்டியதெது ? இதே ஊடகங்கள் தான். தமிழ் சினிமா கல்லூரி கதாநாயகன்கள் அனைவருமே பெண்ணினை கிண்டல் செய்து ஒரு பாடல் பாடாமல் இருந்ததில்லை. பெண்ணின் இருப்பினை கீழ்த்தரப் படுத்தும் உச்ச நட்சத்திரங்களின் நிலை இன்னொரு கதை. இதையும் தாண்டி, நாம் புரிந்து கொள்ள தவறிய மிக முக்கியமான விஷயம் பதின்ம வயதில் ஏற்படும் பாலியல் இச்சைகள், மாற்றங்கள். இதற்கு முறையான, தெளிவான ஒரு கல்விமுறை இன்னமும் இல்லை. விலங்குகளின், பூச்சிகளின் இனப்பெருக்கத்தை படித்து, அறிவியல் தேர்வில் மதிப்பெண் வாங்கும் நம் மாணவர்களுக்கு தத்தம் உடல் சார்ந்த மாற்றங்கள், இச்சைகள், அதற்கான வடிகால்கள் பற்றிய தெரிதல் இல்லை. உடனே நான், வயதுக்கு வந்த எல்லா ஆண்/பெண்களும் உறவு கொள்ளவேண்டுமென்று சொல்லவில்லை. ஆனால், வடிகால் இல்லாத, பாலியல் தெளிவு இல்லாத ஒரு சமூகத்தில் எவ்வளவு போதித்தாலும் மாற்றங்கள் வாராது என்பது தான் அடிப்படை.

பாலியல் சார்ந்த பிரச்சனைகள் எல்லோருக்குமுண்டு. திருவல்லிக்கேணி அல்லது வடசென்னை ஒண்டுக்குடித்தனங்களை நினைத்துப் பாருங்கள். ஒரே வீட்டில், வெவ்வேறு போர்ஷன்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களிருக்கும். அவர்களுக்கான அந்தரங்க தனிமை எங்கு கிடைக்கும் ? அவர்களின் வீடு தவிர வேறெந்த இடங்களும் பாதுகாப்பானவையல்ல. எல்லா லாட்ஜ்களும், தனியறைகளும், ஹோட்டல்களும் போலீஸ் சோதனைக்கு உட்பட்ட்வையே. தாலியிருந்தாலும், சரியான சாட்சிகள் வரும்வரை போலீஸ் நிலையத்தில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்த நாட்டில், என் பாலியல் இச்சையினை நிர்ணயிப்பவை போலிஸூம் அரசும்தான். இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு பாலியல் சார்ந்த ஒழுங்குமுறையை எதிர்பார்க்க முடியும். அரசே, நீங்களும் நானும் அடல்ட்ரி செய்யவோ, வேலைக்காரியினை புணரவோ தூண்டுகின்றன. அடக்கி வைக்கப்படும் வன்முறையும், பாலியல் உணர்வும் வேறெப்படி வெளியேறும் என்று நினைக்கிறீர்கள் ? இவர்களை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால், இவ்வடக்குமுறையினால் தான் நிறைய பாலியல் வன்புணர்வுகளும், வன்முறைகளும் நடக்கின்றன.

பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், அவர்களை விலைமகளாக்க பார்க்கலாமா என்கிற விவாதங்கள் தனி. ஆனால், இன்றைக்கு நடக்கும் நிஜங்களென்ன. பீகாரில் பெற்றோர்க்கு தெரிந்தே பெண்கள் பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள். பயம் தெளியவேண்டும் என்பதற்காகவும், முதல் உடலுறவில் பெண் மிரண்டு விடக் கூடாது என்பதற்கும், தகப்பனை பெற்ற பெண்ணை தாயின் அனுமதியுடன் புணர்வது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இன்னமும், கலாச்சார ஜல்லியடித்துக் கொண்டிருப்பது இன்னமும் நிறைய பெண்களின் நிம்மதியை குலைக்குமேயொழிய எந்தளவிற்கும் பெரிதாய் பயன் தராது. வருமானத்திற்கு கையேந்திக் கொண்டிருக்கும் பெண்ணிடத்தில் தீர்க்க வேண்டியது வயிற்றுப் பசியையும், நிரந்தர வருமானத்திற்கான வழியையும். பட்டினியாய் கிடந்தாலேயொழிய சாப்பாட்டின் அருமையும், பசியின் கொடுமையும் தெரியாது. ஒழுக்கங்கள், கலாச்சார விதிகள் போன்ற ஜிகினாக்கள் அனைத்தும் வயிற்றுக்கு பிறகு தான். மனிதன் உயிரோடு இருந்தால் தானே இதெல்லாம். வறுமையால், பட்டினியால், ஒழுக்கமாய் வாழ்ந்து செத்து போனால், இந்தியாவில் "பாரத் ரத்னா" தரப்போவதில்லை. உயிர் வாழ்தல் முதலில் மிக அவசியம். பிறகு பார்க்கலாம், ஒழுக்கமாய் இருப்பதைப் பற்றி.

சென்னையில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலான விலை மகளிர், ஆந்திராவிலிருந்து வந்தவர்கள். சென்னையிலிருந்து திருப்பதி போகும் வழியில் இருக்கும் சத்யவேடு, சிலுக்களூர்பேட்டைகளில் இருக்கும் முக்கால்வாசி பெண்களின் தொழில் இதுதான். சாமி கும்பிட்டு வரும் நம்மாட்கள், உடனே, தம் உடலுக்கு அங்கே படையல் போட்டு விடுவார்கள். இந்த பெண்களுக்கு கிடைக்கும் சம்பளம் கேட்டீர்களேயானால் மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள் - 100 ரூபாய்க்கும் குறைவாக தான். வறுமை, ஆதரவற்ற தன்மை, பாதுகாப்பின்மை, இதைத் தாண்டி பாலியல் நோய் வந்து செத்து போவார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல. எல்லை தாண்டி வரும் நேபாள பெண்களின் நிலையும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும், தென் மாநிலத்திங்களிருக்கும் வானைப் பார்த்துக் கொண்டிருக்கும் விவசாய நிலங்களிருந்தும் வருபவர்களில் பெரும்பாலோனோர் இத்தொழிலில் முடக்கப்படுகிறார்கள். இன்னமும், காமத்திப்புத்ராவிலும், சோனாகஞ்சியிலும் ரெய்டுகள் நடக்கும், சம்பாதித்த பணம் ஏதேனும் போலீஸ்காரருக்கோ, மாமா வேலைப் பார்ப்பவர்களுக்கோ, அல்லது விடுதியை நடத்தும் கிழ முதலாளிகளும் போய்விடும். உடலை விற்று, பலருடன் படுப்பவளுக்கு கிடைப்பது 3 வேளை சோறும், இலவசமாக பால்வினை நோய்களும், எய்ட்ஸூம். அணுகுண்டு வெடித்து, ராணுவ செலவீனத்தினை அதிகரித்து கொண்டு "பெரியண்ணவாய்" காட்டிக் கொள்ள முயற்சிக்கும் இந்திய அரசுக்கு, தன்னை விற்கும் இந்த பெண்கள் குற்றவாளிகள். கேவலமான பிறவிகள். சமூகவிரோதிகள். வாழ்க இந்திய ஜனநாயகம்!

பெண்களை தெய்வமாக பார்க்கும் தேசத்தில் தான் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நாட்டில் தான் உண்மையில் 72% பெண்கள் தங்கள் நெருங்கிய உறவினாரால் தங்களுடைய வாழ்நாளுக்குள் ஒருமுறை பாலியல் பாலத்காரம் செய்ய படுவதாக ஆரய்ச்சிகள் கூறுகின்றன." பெண்களை கற்புமிக்கவளாக சித்தரிக்கும் நாட்டில்தான், பாலிவுட் கதாநாயகிகள், கர்ச்சீப்பினை ஆடையாக உடுத்திக் கொண்டு பேட்டிக் கொடுக்கிறார்கள். போலீஸ்காரரிலிருந்து(ஜெயலட்சுமி), மடாதிபதி (அனுராதா ரமணன்) குஞ்சாலி குட்டி (நன்றி: சுதர்சன்) வரை எல்லோரும் பெண்களை "தெய்வமாய்" பார்க்கிறார்கள். உடல் இச்சை என்பது மனித வாழ்வின் அடிப்படை. அதனை சட்டபுத்தகத்தில் சில பக்கங்களில் அடக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனம். "ஒருவனுக்கு ஒருத்தி" என்று ராமன் வாழ்ந்த நாடு என்று யாராவது சொவாரேயானால், கொஞ்சம் காதைக் கொடுங்கள், அவர் தந்தைக்கு 60,000 மனைவிகள் என்று வரி வருகிறது. கொஞ்சம் கொச்சையாய் இருந்தாலும், எப்படி இவர் இவ்வளவு மனைவியரை உடல், உடமை, மனரீதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியும். தமிழனின் பரம்பரையில் அதெல்லாம் கிடையாது என்று சொல்ல வருகீறிர்களா ... பிடியுங்கள், தமிழ் கடவுள் முருகனுக்கு ஒன்றுக்கு இரண்டு மனைவிகள். அப்புறம் இந்த இந்திரன் என்றொரு கதாபாத்திரமிருக்கிறது, அவர் பாதி நாட்கள், பிறன் மனை பார்த்து சாபத்திலேயே வாழ்வை கழித்தவர். புராண, இதிகாசத்திலிருந்து உதாரணங்கள் காட்டுவதை முதலில் நிறுத்துவோம். எனக்கென்னவோ, அதெல்லாம், வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் வேலைகள்.

விபச்சாரம் அல்லது பாலியல் தொழில் என்பது இந்தியாவில் ஏன் உலகிற்கு ஒன்றும் புதிதில்லை. உலகின் புராதன தொழில் என்றழைக்கப்படும் இதனை நெறிப்படுத்துவதில் தவறொன்றிருக்க முடியாது. நான் பார்த்த இணைய தள புள்ளி விவரங்களிலிருந்து இந்தியாவில் 2 மில்லியன் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்றும், இதில் 40% பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் சொல்கிறார்கள் (ஜூலை 2001). ஆனால், இது எனக்கென்னமோ மிகக் குறைவான எண்ணிக்கையாக இருக்கிறது. நாமக்கல்லிலும், மதுரையிலும் மட்டுமே 50,000 மேலான பாலியல் தொழிலாளிகள் இருக்கக்கூடும் என்பது இவ்விரண்டு ஊர்களின் எய்ட்ஸ் மக்கள் தொகையிலிருந்தே தெரியும். இரண்டு பக்கங்களிருந்து பார்த்தாலும் (பாலியல் தொழிலாளி, வாடிக்கையாளர்) பாலியல் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பதால் பலன்கள்தான் அதிகம். கலாச்சார காவலர்கள் உடன டியாக கலாச்சார சீர்கேடுக்கு வழிவகுக்கும் என்று கூறினால், என் பதில் குடிப்பது கூடத்தான் உடலுக்கு கெடுதி, ஏன் அரசாங்கமே ஒயின் ஷாப்புகளை நடத்துகிறது (ஆனாலும், குடிப்பதினால் மனிதன் கெட்டு போவான் என்பது இன்னொரு இட்டுக்கட்டிய பொய்) இதில் சட்டசபையில் புரட்சிதலைவி நடத்தி, மிக அதிகமான வருமானம் ஈட்டிய துறை என்கிற பெயர் வேறு. இதனால், நான் அரசை "மாமா வேலை" பார்க்கச் சொல்லவில்லை. அரசாங்கம், என் குறியினை வேவு பார்க்கும் வேலையினை விட்டு மற்ற உருப்படியான வேலைகளை செய்யலாம். பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாம். அங்கீகரிப்பதினால், போலீஸாரின் வேலையும் (மாமூலும்) குறையும். மற்ற உருப்படியான சமூக மேன்மைக்கான விஷயங்களை எதிர்கொள்ளலாம்.

பாலியல் தொழிலாளி என்றவுடன் பெண்கள் மட்டும்தான் என்றில்லை. நான் பார்த்த சில மாதங்களுக்கு முந்திய ஸ்டார் ப்ளஸின் செய்தியில் பணக்கார பெண்களுக்கு, "சேவை" செய்வதற்காக செய்யும் ஆண்களைப் பற்றிய ஒரு குறிப்பினைக் காட்டினார்கள். நம்பாதவர்கள், சுட்டியினை படித்து விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மும்பையில் மட்டும் சுமார் 50,000 ஆண் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக இந்த சுட்டி சொல்லுகின்றது. அங்கீகாரம், பெண் பாலியல் தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல. ஜிகாலோ என்றழைக்கப்படும் ஆண் பாலியல் தொழிலாளிகளுக்கும் சேர்த்துதான்.

பாலியல் தொழிலை அங்கீகரிப்பதால் விளையும் நன்மைகள், விளைவுகள், எதிர்வினைகள், இந்தியாவில் பாலியல் தொழிலின் பாதிப்பும், எய்ட்ஸின் பாதிப்புகள் அடுத்தடுத்த பதிவுகளில்.

(மூன்று பகுதிகளாக விரியும் தொடர் பதிவில் முதல் பகுதி இது)

நன்றி (சரவணன், பாலாஜி, பத்மா அரவிந்த், தங்கமணி, பாலாஜி-பாரி)

Comments:
நாராயணன்!
ஆவலாய் வாசித்து வருகிறேன். சொல்லவந்ததை தெளிவாய்ச் சொல்கிறீர்கள். எனக்கு இன்னொரு மகிழ்ச்சி தெரியுமா? எங்கோ வெட்டியாகப் போகும் விவாதம் கொஞ்சம் பிரயோசனமாகத் திசை திரும்பும்.
 
கொஞ்சம் பழைய கள்ளு, இங்கே கிளற உதவுமே என்று, ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுக்கவும்.
------------------------------------------------------------------------------------------
இளமையில் கலவி??
===================
இளமையில் கல்வி என்று சமூகத்தின் பெரியவர்கள் எல்லோருடைய வாயாலும் சொல்ல கேட்டிருப்போம். இளமையில் கல்வி முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த
ஒன்றுதான். மறுக்கவும் முடியாத ஒன்றுதான். இளமைக் கால கல்வியின் அடிப்படையிலேயே ஒருவனின் / ஒருவளின் பிற்கால வாழ்வு வசதிகளின் அடிப்படையில் வெற்றிகரமாய் அமைகிறது. எனவேதான் கல்வி இளமையில் அவசியம் என்பது மறுக்க முடியாததாகிறது.

இப்பொழுது நான் எழுத வந்த பிரச்சினை அதை பற்றியதல்ல. இளமையில் கலவிக்கு அதாவது இளமையில் ஏற்படும் பாலியல் உணர்வுக்கு வடிகாலாய் என்ன உள்ளது? என்பதுதான். இளைஞர்கள் என்ன செய்வது என்று பெரியவர்களைப் பார்த்து கேட்டால் என்ன சொல்லுவார்கள்?. நான் கேட்ட பெரியவர்களிடம் சரியான விடை இல்லை. சமூகத்தில் எந்த பெரியவரும் , எழுத்தாளருமோ, சிந்தனாவாதியோ இதற்கு சரியான விடை சொல்லியோ எழுதியோ நான் பார்த்ததில்லை.

பாலியல் உணர்வுகளால் பையன் கெட்டு போய்விடாமல் வளர்ப்பதுவே பெற்றோரின் முக்கிய கடமை என இருக்கும் சமூக நிலைமை சரியில்லை என்றே தோன்றுகிறது எனக்கு. இந்த கெட்டு போய்விடாமல் வளர்க்கும் முறை என்பது இளைஞர்களின்/யுவதிகளின் வாழ்வில் ஒரு தடுப்புச் சுவர்போன்று அமைந்துவிடுவது நாம் நம் கண்களைமூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைத்து கொள்வதாம். இந்த தடுப்புச் சுவரை இளையவர்கள் மீற முயல்வதும் அதை பெற்றோர்களிடம் சொல்ல மறைத்து அவர்கள் மிகவும் அபாயகரமான பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

பாலியல் உணர்வை ஒரு இளைஞனோ அல்லது யுவதியோ திருமண வயது காலம் வரைதள்ளி போடவேண்டும் என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. இவ்வாதத்தில் முட்டாள் தனத்தை வேறொன்றுமில்லை. ஏன்?

உடல் வளர்ச்சியின் விளைவால், ஒரு பெண் தாய்மைப்பேறின் ஆயத்த நிலையாகிய பூப்பெய்தும் நிலைக்கு 14 லிருந்து 16 வயதுக்குள்ளோ அல்லது அருகாமை வயதிலோ வந்து விடுகிறாள். ஓர் ஆண் 16 வயதில் தந்தைப்பேறின் ஆயத்த தகுதிக்கு வந்துவிடுதலும் நடக்கிறது. எனினும் இதை மிகவும் ரகசியமாய் வைத்திருக்கும் பிள்ளைகளாக இவர்கள் வளர ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் மேலும் உடலுணர்வு விஷ்யங்களை தனது நண்பர்களிடமிருந்தே தெரிந்துகொள்கிறார்கள். அனேகமாக எல்லா சமயங்களிலும் இவர்கள் நண்பர்களிடமிருந்து பெறும் பாலியல் உணர்வு மகிழ்ச்சியை தரும் விதத்தில் தான் அமைகிறது.பிரச்சினையின் ஆரம்பம் இங்குதான் உள்ளது. பிள்ளைகள் பாலியல் உணர்வுகள் தரும் சுகத்தினாலும், அவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தினாலும் , திருமணம் ஆவது வரை இச்செயல்கள் தவறு என்பதுபோல் சமூகத்தினால் பாவிக்கபடும் காரணத்தினாலும் இவர்களது சுகங்களை மறைத்து வளரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கபடுகிறார்கள்.
இதில் சமூகப்பார்வையின் தவறே மிகபெரியதாய் நான் எங்கும் வாதாடுவேன். முறைப்படி பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டிய கட்டாயத்தை எய்ட்ஸ் என்கிற உயிர்கொல்லி நோயும்,பிற சமூகச் சீர்கேடுகளும்சமூகத்தின் மிகப்பெரும் உடனடித்தேவையாய் மாற்றியும் நாம் இன்னமும் இது குறித்து மூடத்தனம் காட்டிகொண்டிருப்பது நாமே நம்து குழந்தைகளுக்கு சாவு மணியை அடிக்கக் காத்து கொண்டிருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறாது.
. இக்கல்வி நமது குழந்தைகளை இழி செயல்களாகிய கற்பழிப்பு,விபச்சாரம்,பாலியல் நோய்களுக்கு பலியாதல், பாலியல் சிறுமதித்தனம் எனப்படும் பெர்வர்ஷன் போன்றவற்றில் ஈடுபடாமல் நிச்சயம் காப்பாற்றும். இக்கல்வியின் கட்டமைப்பும், நடைமுறைப் படுத்தப்படும் விதமும்
சிந்தானாவாதிகளினால் ஒழுங்கமைக்கப்பட்டு வடிவமைக்கப்படலாம்.

இக்கல்வியின் போதாமையினாலும், பெரியவர்கள் பாலியலை தீண்டதாகாதனவாக எண்ணி பிள்ளைகளை அவர்கள் காப்பாற்ற செய்யும்
எத்தனத்தினாலும் நிகழ்பவையாக நான் இவைகளை வகுக்கிறேன்.
1. மாணவன் ஒருவன் தனது சக மாணவியை மிக இளம் வயதிலேயே காதலியாக பாவிப்பது.
2. தனது ஆசிரியைகளை பாலியல் பார்வையில் பார்ப்பது, கிண்டல் செய்வது போன்றன.
3. திரையரங்குகளுக்கு சென்றுத் திரைமறைவு திரைப்படங்களைப் பார்ப்பது.
4. தவறான பாலியல் பழக்கங்களை வளர்த்துக் கொள்ளுதல்.
5. திரைப்படங்களை பார்ப்பதன் விளைவால், திரைப்பட காதாநாயகியையோ, அல்லது தனது அருகாமையில் உள்ள ஒரு பெண்ணையோ காதலியாய் பாவித்தல்.
6. பெற்றோர்களை எதிரியாய் பார்த்தல்.
7. இளைஞர்கள் கற்பழிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுதல். நான் இங்கு நல்ல குடும்ப இளைஞர்கள் மனதளவில் அடையும் பிரச்சினையை சுட்டுகிறேன். ரவுடுகளையோ குண்டாக்களையோ அல்ல.

இன்னும் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாலியல் உணர்வை ஒரு இளைஞனோ அல்லது யுவதியோ திருமண வயது காலம் வரைதள்ளி போடவேண்டும் என்று சொல்லும் பெரியவர்களை பார்த்து நான் கேட்பதெல்லாம் , உங்களால் எத்தனை நாள் பாலியல் உணர்வை தள்ளி போடமுடியும் என்பதுதான். யாரை ஏமாற்ற முயல்கிறோம்? எத்தனை நாள் ஏமாற்றுவதாய் நினைத்து கொண்டு ஏமாந்து கொண்டிருக்கப் போகிறோம். எத்தனை செய்திகளில் படிக்கிறோம்? இளைஞர்கள் உடலுறவு சம்பந்தமான விஷயங்களில் சிக்கிக் கைது செய்யப்படுவதும், இளம் பெண்கள் விபச்சாரம் வரை செல்வதும் இன்றைய நாளிதழ்களின் மிக சாதரணமான செய்திகளாகிவிட்டது.

எனது கேள்வியெல்லாம், இளைஞர்கள் பாலுணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு வடிகாலாய் இருப்பதற்குமான வழிகள் என்ன உள்ளன இன்றைய நடைமுறையில் என்பதுதான்? நமது மிக பழைய பழக்கமான "பால்ய விவாக முறை" யே கூட சரியாய் இருக்குமோ என்ற கேள்வி எழுப்ப வைப்பனவாக உள்ளன தற்சமயம் நடைமுறையில் இருக்கும் , திருமண முறைகளும், வயது வரம்புகளும் இன்றைய பிழைப்பு மற்றும் உடலுறவு சார்ந்த பழக்கங்களும்.

பால்ய விவாக முறைக்கும், இன்றைய திருமணவயது முறைக்கும் இடைப்பட்டதானதாகவு, சமுக சீர்குலைவுக்கு காரணமாய் அமையாததுமாகிய ஒரு தீர்வு முறை,பிரச்சினைகளை களையும் ஒரு முறை நமக்கு அவசியம்.இதற்கு விபச்சாரம் ஒரு தீர்வுமுறையாகுமா? இல்லைதான். ஆனால் நிலவுகின்ற நிலைமையைப் பார்த்தால், சட்டம் எந்த அளவுக்கு தடுத்து விட்டது? எனக் கேட்கத் தோன்றுகிறது. சமூகப் பெருசுகள் மட்டும் இம்முறையை உபயோகிக்க வில்லையா?
விபச்சாரத்தை முறைப்படுத்துவது ஒரு நல்ல தொடக்க நிலை முயற்சியாக இருக்கும். இளைஞர்களும் யுவதிகளும் தவறான முறைகளில் ஈடுபட்டு உடல் நிலையையும், மன நிலையும் கெடுத்துக்கொள்ளாமல் இருக்க இது வழி செய்யும். இதில் மிகவும் கண்டிப்பான சட்டங்கள் அமுலாக்க வேண்டிய அவசியமும் உள்ளது.உதாரணமாய்,
1.வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு கடுமையுடன் கடைபிடிக்கப் படவேண்டும்.
2.ஆணுறைகளும், பெண்களுக்கான சாதனங்களும் அவசியம் கடைபிடிக்கப் படவேண்டும்.
இது போன்ற மற்றவைகளையும் சிந்தித்து செயல்படுத்தலாம்.


இதுவும் உதவலாம்
=================
நிறைய எழுத இருந்தாலும் , முக்கிய சில கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.
வெ.சா. //ஆக, படிப்போரை, ஆண்களை, சமூகத்தை இவ்வாறு எழுதித் திடுக்கிட்டு ஆடவைத்து விடவேண்டும் என்று நினைத்துச் செய்த காரியத்தில் அவ்வாறு திடுக்கிட வைக்கும் வார்த்தையைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கே தயக்கம் நிறைய இருந்திருக்கிறது.//இந்த தயக்கத்துக்கும் காரணம் ஆணாதிக்க சமுதாயமே என்று நான் சொன்னால் மறுக்கமுடியுமா?
பெண்களை சில வார்த்தைகளை புழங்க முடியாதபடிக்கு ஆளாக்கியதில் ஆண்களுக்கு பங்கு இல்லையா என்ன? கிராமங்களில் சர்வ சாதாரணமாய் இத்தகைய வார்த்தைகள் பெண்களால் உபயோகிக்கப்டுகின்றன. அங்கு ஆணதிக்கம் இந்த மொழிக்கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்தவில்லை போலும்.

வெ.சா.// இங்கே கூட சம்பந்தப்பட்ட கவிஞர்கள் யோனி என்ற, புழக்கத்தில் இல்லாத, தமிழ் அல்லாத வார்த்தையைத்தான் வýந்து எழுதியிருக்கிறார்களே தவிர அதற்கான தமிழ் வார்த்தையை, ஒரு தரப்பட்ட சமூகத்தில் மாத்திரமே புழக்கத்தில் உள்ள வசையான, ஆனால், எல்லாத் தமிழரும் அறிந்த வார்த்தையைப் பயன்ப டுத்தவில்லை. தெரிந்தே பலத்த யோசனையின் பிறகே என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.//புழக்கமில்லாதது அதனால் எழுதப்படக்கூடாது என்பது ஒரு கியானத்தனமான வாதம். இந்த வார்த்தைக்கு அதாவது "யோனி" ("யோனி" எனக்கு மிகப் பழம் வார்த்தை,புழக்கத்தில் உள்ள வார்த்தை)
இப்பொழுதிலிருந்து இந்த கவிதாயினிகாளாலேயே புழக்கத்துக்கு வர ஆரம்பிக்கட்டுமே? யாருக்கு நட்டம்?
வெங்கட சாமிநாதன் இப்பொழுது செய்வது போலவே தான் ,பல வார்த்தைகளை பெண்கள் புழங்கவிடாமல் செய்து உள்ளது சமூகம். அதில் ஆண்கள் உள்ளனர் என்பதை மறைக்க முடியாது.
புழக்கத்துக்கு ஆரம்பம் இன்று இருக்கக்கூடாது என்று சொல்வதற்கு இவர் யார்?
சமஸ்கிருதத்தில் இருந்து வேறு எத்தனிஅயோ வார்த்தைகளைப் பெற்ற தமிழ் இதையும் பெற்றுக் கொள்ளட்டுமே?
நம் புழக்கம் என்ன எல்லா சமஸ்கிருத வார்த்தைகளையும நீக்கப்பட்டதாகவா உள்ளது?

1. சத்ய சாய் பாபா பற்றிய செய்தி ஒலிப்பதிவு மற்றும் கட்டுரை.
===========================================================
சில நாட்கள் முன் நண்பர் பாஸ்டன் பாலாஜி, சாயி பாபா பற்றி பேச்சு எழுகையில் எனது கருத்துகளை கேட்டிருந்தார். இந்த பதிவுக்கும் அதற்கும் எவ்விததொடர்பும் இல்லை.இது ஒரு மேலதிக விவரமே. பெரும்பாலான சாயி பக்தர்களுக்கு இவை(போன்ற செய்திகள்) பழகிப்போனவையாக இருக்க வாய்ப்புள்ளது.

க்ட்ட்ப்://ந்ந்ந்.ப்ப்c.cஒ.உக்/டமில்/கிக்க்லிக்க்ட்ச்/ச்டொர்ய்/2004/06/040621_சைபப.ஷ்ட்ம்ல்

ஒலிப்பதிவு ரியல் ப்ளேயரில் இயங்குவது.


===
>>பணிவிடை செவ்தில் வேலைக்காரியாகவும்,
>>ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும், அழகில்
>>லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும்,
>>பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப்
>>பெண்ணாவாள். இப்படி உலகில் குடும்பப் பெண்
>>கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு மனத்துடன்
>>வாழ வேண்டும்.


இந்த பக்கத்தைப் படித்தவுடன் நினைத்ததை அப்படியே
எழுதியிருந்தேன் எனில் யாரும் படிக்க முடியாது.
தூத்தேறி! ஒரு ஞான பீடத்தின் லக்ஷ்ணம்இதைவிட கேவலமாக இருக்க முடியாது. அசிங்கமா வருது வாயில தே... (அட கெட்ட வார்த்தைங்க)அதே லாஜிக்கில் இங்கு பீடத்தில் தலைவராய் இருப்பவரின் தாயாரும் கூட அவரது த ந்தைக்கு வேசி போலவே இருந்தார் என்று மனம் கூசாமல் எல்லோரும் சொல்வார்களா? அதை ஏற்றுக் கொள்வார்களா? அப்படி வேசி போல் இரு ந்தவரை வேசி என்று வரது தந்தை அழைத்தால் சரி என்று சொல்வார்களா? வெட்கங் கெட்ட ஜென்மங்கள். இப்படி அறிவற்ற ஒரு கருத்தை எப்படி கூச்சமில்லாமல் அறிவுரை என்று சொல்ல முசிகிறது.

>>இந்த உலகம் எப்பொழுதும், யாரால் படைக்கப் பட்டதென்று இன்னும்
>> நிர்ணியக்கப்படவில்லை. ஆகவே அநாதி காலந்தொட்டு உலகம் இருந்து >>**வருவதாகச் சொல்கிறார்கள்.**

இது போன்ற அறிவான சமாச்சாரங்களில் ஆழப் பேசுகிறார்களா பாருங்கள். அதெல்லாம் பேசத்தெரியாது. விளக்கிச் சொல்லத்தெரியாது. வெட்டி அறிவுரைக்கு ஒன்னும் குறைச்சல் இருக்காது. இ ந்த மாதிரி விஷயங்களில் மட்டும் "சொல்கிறார்கள்" , "அந்த மந்திரம் சொல்லுது" , "இந்த மூத்திரம் சொல்லுது " என்று மூடி மறைத்துவிட்டு, பெண்களை மட்டம் தட்டும் கருத்தை எடுத்துக் கொண்டு ஒரு ஆண் கும்பல் பேசி பெருமை அடைந்து கொள்கிறது.

ஏன்? இந்த மந்திரம் இப்படி சொல்லியுள்ளது , ஆனால் இது இ ந்த காலத்துக்கு பொருந்துவதாக இல்லை என்று நிராகரித்திருக்கலாமே. அல்லது
குறைந்தது *அப்படி சொல்லியிருக்கிறார்கள்*, எனக்கு சரியாக விளங்கவில்லை என்றாவது சொல்லலாமே? இந்த கருத்து நமது மானமிழந்த சமூகத்தில் எளிதில்
விற்பனையாகும் சரக்கு எனவேதான் "அறிவுரை" என்ற பேரில் விற்கிறார்கள்.

>>உண்மையான குடும்பப் பெண்ணானவள் தன்னுடைய பதியின் மீது எந்தவித
>>உவச்சொல் ஏற்பட்டாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது
>>என்பதுதான் கலை. குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க
>>வேண்டுமென்று நீதி நூல் கூறுகிறது.

அட நாசமா போனவனுங்களே! ஏண்டா இப்படி எழவெடுக்கிறீங்க?
காம கோடி பீடத்தை பின்பற்றுபவர்கள் , குடும்பஸ்தர்கள் இ ந்த நீதியை
பின்பற்றுவார்களா? பின்பற்றத்தான் முடியுமா? அட இப்போதைய பெண்களை விட்டு விடுங்கள். அ ந்தகாலத்துப் பெண்கள் கூட இதைப் பின்பற்ற முடியுமா?
இ ந்த எழவெடுத்த நீதி சொல்வது போல் நடக்கலாம் என்றால், எல்லா பதிகளும் திருடனாய் கொலைகாரனாய் கூட இருக்கலாமா? யார் என்ன சொன்னாலும் அதை பத்னி கேட்டுப் பொருட்படுத்தக்கூடாதா? போலிஸ் பிடித்துக் கொண்டு போனால் கூடவா? மனைவியை வேசிபோல் என்று நினைப்பவன் வேறு என்ன சொல்லப்போகிறான். அட அநியாயக்காரர்களே! உங்கள் அகராதிப்படி வேசி என்பவள் யார் ? பத்தினி என்பவள் யார்?

>>இதை வைத்துத்தான் நமது வீடுகளிலே திருமணம் நடக்கும்போது, "கௌரீ
>>கல்யாணம் வைபோகமே, சீதா கல்யாணம் வைபோகமே" என்று
>>பாடுவார்கள்.

ஏன்? நீங்கள், "வேசியாய் இருக்கப் போகிறவள் கல்யாணமே" என்று கூட மந்திரம் சொல்லலாமே? சொல்வீர்களா?
=====
பழைய கள்ளு முற்றும் :-) இனி வடித்தால்தான் ;-)

---
http://www.who.int/reproductive-health/publications/towards_adulthood/14.pdf
 
//உமன் சாண்டி வரை எல்லோரும் பெண்களை "தெய்வமாய்" பார்க்கிறார்கள்.//
உம்மன் சாண்டி!?! நீலலோகிததாசன் நாடார்-நளினி நெட்டோ குறித்துச் சொல்கிறீர்களென்று நினைக்கிறேன்...
 
நன்றி வசந்தன். கார்த்திக். மாண்டீ அது உம்மன் சாண்டி தான். கேரள அமைச்சர், ஜஸ்கீரிம் பார்லர் பாலியல் குற்றச்சாட்டில் அடிப்பட்டவர். இவர்களை குறிப்பிட்டது ஒரு உதாரணத்திற்காகவே, விந்திய மலைக்கு அப்பால் இன்னமும் அதிகமான நபர்களை காட்ட இயலும். ஆனால், சொல்லவந்த சேதி அதுவல்ல என்பதால் நிறுத்திக் கொள்கிறேன்.
 
நாராயணன்,

எழுதத்தூண்டும் பதிவு. எழுத வேண்டியதும் கூட. எனக்கு இந்தப் பாலியல் விவகாரம் முழுக்க மத சம்பந்தப்பட்டதாகவே தெரியும். மதம் காதலுக்கு மாற்றாக திருமணத்தைக் உருவாக்கி காதலை ஒழித்திருக்கிறது என்று புரிந்துகொண்டுள்ளேன். காதல் என்பதை நான் காதலினால் கலவி என்றாகத்தான் சொல்கிறேன். திருமணம் என்பதை (சமூக மரியாதை, வழக்கம், மட்டுறுத்தப்பட்ட பாலுறவு, குடும்ப, குழந்தை காரணங்களை முன்னிருத்தும்) அடிமைகளுக்கும், சுயமரியாதை இல்லாதவர்களுக்குமான, மத/அரசு பீடங்களுக்கு தேவையான அதிகாரத்தையும் ஆட்பலத்தையும் தருவதற்காக நிறுவப்பட்ட ஏற்பாடாகப் புரிந்துகொள்கிறேன். காதலை முழுமையாக அனுபவிக்கும் ஒருவன் இந்த பீடங்களுக்கு பயனற்றுப் போகிறான்; சுதந்திரத்தை சுவைத்தபின் கடவுள், கடமை இவைகள் புண்ணாக்கு. அவன் அபாயகரமானவனும் கூட; ஏனெனில் அவன் இந்த அமைப்பின் அடிமைத்தனத்தை, மடத்தனத்தை வெளியிலிருந்து நிருபிக்கிறான்.

காதலை/உடலை/இயல்பை மறுக்கும் நிறுவன மயப்பட்ட திருமணம் வழக்கொழியும் போது, விபச்சாரம்/விவாகரத்து/அனாதைக் குழந்தைகள் இன்னும் பல விசயங்கள் ஒழியும். அதற்கும் முன் இந்தப் பேரரசுகள் இருக்காது என்றெல்லாம் எண்ணுகிறேன். இப்போது இதை என்னால் விரித்து எழுத முடியாது; நேரமின்மையால். நல்லது; நன்றி!
 
நன்றாக உள்ளது. தொடருங்கள் நாராயண்.
 
பெரும்பாலும் தெளிவில்லாமலேயே அணுகப்படும் ஒரு விவாதத்தை மிகுந்த தெளிவோடு அணுகியிருக்கிறீர்கள் நாராயணன், நல்ல பதிவு! ஓமன் சாண்டி கேரள முதல்வர், நீங்கள் குறிப்பிட நினைப்பது குஞ்ஞாலி குட்டி என்ற முன்னால் அமைச்சரையா? இவர் ஓமன் சாண்டியின் அமைச்சரவையில் இருந்தார், பின்னர் பாலியல் குற்றச்சாட்டால் பதவி விலகிவிட்டார் .
 
//காதலை முழுமையாக அனுபவிக்கும் ஒருவன் இந்த பீடங்களுக்கு பயனற்றுப் போகிறான்; சுதந்திரத்தை சுவைத்தபின் கடவுள், கடமை இவைகள் புண்ணாக்கு. அவன் அபாயகரமானவனும் கூட; ஏனெனில் அவன் இந்த அமைப்பின் அடிமைத்தனத்தை, மடத்தனத்தை வெளியிலிருந்து நிருபிக்கிறான்.//

appadi poodu poodu poodu :)
 
தங்கமணி, பாலாஜி, சுதர்சன் நன்றிகள். தங்கமணி, உங்களின் பார்வை மிக கூர்மையானது. நீங்கள் சொல்லவந்தது நடக்குமானால், உலகம் சுதந்திரமானவர்களாலும், நெறி சார்ந்த கலகக்காரர்களாலும் இருக்கும். இப்போதிருக்கும் நிலையில் அது சாத்தியப்படுமா என்றால் என்னளவில் இல்லை என்றுதான் பதிலளிக்க முடியும். இருக்கின்ற சூழ்நிலையை முற்றிலுமாக மாற்ற, இந்தியாவிற்கு குறைந்தது, 50-100 ஆண்டுகளாகும் என்று நினைக்கிறேன், அது கூட மாற நினைத்தாலே மட்டும். இன்னும் குடும்பம் என்கிற அமைப்பு இங்கு போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது தேவாலயம்,அரசு போன்ற நிறுவனங்களை விட வலிமையான மனிதர்களை பலவீனமாக்கும் ஸ்தாபனமாக இருக்கிறது. ஆக, இப்போதிருக்கும் நிலையில் காதலை உணர்ந்தறியும் வாய்ப்பினை நெறி சார்ந்த முறையில் ஏற்படுத்துவது ஒரளவு உடல் சார்ந்த மயக்கத்தை குறைக்குமென்று நினைக்கிறேன்.

கார்த்திக், அப்படிப் போடு சபாசு!!
 
நாராயணன் அவர்களே, இதைப் பற்றி நான் மூன்று மாதங்களுக்கு முன் எழுதியுள்ளேன் பார்க்க:
http://dondu.blogspot.com/2005/01/sita-is-ultravires-of-constitution-of.html
நீங்கள் கூறிய ஆலோசனையை நிறைவேற்றும் முன்னால் SITA சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று யாரேனும் ரிட் பெடிஷன் போட்டால் வெற்றியடையுமா என்றுப் பார்க்க வேண்டும். பாலியல் தொழிலாளியை மட்டும் தண்டித்து விட்டு வாடிக்கையாளனைப் போக விடுவது எந்த ஊர் நியாயம் என்பது புரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
நாராயணன் நன்றி, மிக அவசியமான பதிவு.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]