Apr 10, 2005

23 பேரும், ஒரு எக்ஸ்ட்ரா லார்ஜ் சிலோன் பரோட்டாவும்

பிரகாஷ் வெற்றிகரமாக சொன்னதை செய்து காட்டிவிட்டார். சென்னை வலைப்பதிவர் சந்திப்பு என்னளவில் நிறைவாக சென்றது, நான் பேசலாம் என்று நினைத்து விஷயத்தைத் தவிர. பிரகாஷின் பதிவில் அவர் சொன்னதை தாண்டி, தனிப்பட்ட அளவில் நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நெடுநேரம் நான் நுட்பமும், டிஜிட்டல் ஜிகனாக்களையும் பேசியதைக் கேட்ட எஸ்.கேக்கு நன்றி. அடுத்த முறை சந்திப்பினை டீக்கடையிலோ, ஒயின் ஷாப்பிலோ வைத்தாலேயொழிய இதற்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்காது என்று கலாய்த்தற்கும், ஆதரவு அளித்து பேசிய பிரகாஷ், மீனாக்ஸ், ராம்கிக்கு நன்றிகள் (தனியாக பிளான் போடுவோம் ;-)) இராம.கி ஐயா அழகாக ஆழமாக பேசினார். தோழியர் பதிவின் உரலை என் வலைப்பதிவில் எப்போதோ சேர்த்திருந்தாலும், கொஞ்சம் சந்தேகமாக இருந்ததினால், உரத்து பேசவில்லை. ராமசந்திரன் உஷா, நான் உங்கள் பக்கம். தாமதமாக கை தூக்குவதற்கு மன்னிக்கவும்.

காசிக்கு ஏதேனும் ஒருவகையில் உதவவேண்டும் என்பதை ஒரு விவாதமாக முன்வைத்து எடுத்துச்சென்ற எஸ்.கேவுக்கும், உடனடியாக ஏதேனும் செய்யலாம் என்று உறுதியளித்த மாலனுக்கும் நன்றிகள். வராத நபர்களை கட்டம் கட்டாமல் பெருந்தன்மையாக மன்னித்து விட்ட பிரகாஷுக்கும், பக்கத்தில் சாதாரணமாய் பள்ளி மாணவன் போல் இருந்து, தன் கவிதைகளை தளத்தில் பார்வைக்கு வைக்கும் மணிகண்டனுக்கும், பொது பேச்சுக்கள் முடிந்து எம்.ஆர்.ராதா என்கிற ஆளுமையை சிலாகித்து பேசி, என்னை மீண்டும் "சுட்டாச்சு, சுட்டாச்சு" படிக்க தூண்டிய பத்ரிக்கும், காக்டெய்ல் பற்றிய பேச்சினை ஆரம்பித்து வைத்த சந்தோஷ் குருவுக்கும், ஒரம் கட்டி விரிவாக விவாதித்த சுரேஷுக்கும், எவ்வளவு கடுமையான விமர்சனங்களை ரஜினி மீது வைத்த போதும் அமைதியாய் பதில் சொன்ன ராம்கிக்கும், சொன்ன சொல்லை சரியாக ஞாபகம் வைத்து புத்தகங்களை கொடுத்த சந்திரனுக்கும், பொறுமையாக பதில் சொன்ன வெங்கடேஷுக்கும், பார்த்தும் பேச இயலாமல் போன நண்பர்களுக்கும் ஸ்பெஷல் சல்யூட்கள்.

இந்தியப் பொருளாதாரம் பற்றி விவாதிக்க நினைத்து அருணா சீனிவாசனிடம் பேச இயலாமல் போனதும், மாற்று சினிமா பற்றிய விவாதத்துக்கு சரியான களமில்லாமையும் தவிர நிறைவாகவே சென்றது.

இதற்காகவே, சொல்லி வைத்தாற்போல் 4.30 மணிக்கே கிரிக்கெட் மேட்சினை முடித்தருளிய இந்திய கிரிக்கெட் அணிக்கும், கங்குலிக்கும் தனிப்பட்ட நன்றிகள்.

சபை நாகரீகம் கருதி இங்கேயே முடிக்க நினைத்தாலும், நல்ல சிக்கன் பிரியாணியும் சிலோன் பரோட்டவும் வாங்கி தந்து இலக்கிய விவாதங்களையும், கல்லூரி கதைகளையும் பகிர்ந்து கொண்ட பிரகாஷுக்கு ஒரு சூப்பர் சலாமு. இதை இங்கே பதிய மறந்தால் நன்றியற்றவனாவேன். (அடுத்த முறை பஃப்-ல பார்ப்போம் தலைவரே)

பாலியல் தொழிலும், அங்கீகாரமும் - பகுதி 3- க்கான சில பூர்வாங்க விஷயங்களை சேகரித்துக் கொண்டிருப்பதால், அப்பதிவு கொஞ்சம் தாமதமாக வரும்.

காசி, உங்கள் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். விமான நிலையத்திற்கு எத்தனை பேர்கள் வந்தார்கள் ?

Comments:
நல்ல சிக்கன் பிரியாணியும் சிலோன் பரோட்டவும்... (ஆஹா... first class மெனு, miss ஆயிடுத்து) கொடுத்து உபசரித்து, சொன்னதை நடாத்திக் காட்டிய, திரு,பிரகாஷ் அவர்களுக்கும், அது எவ்வாறு வெற்றிகரமாக இருந்தது என்று எடுத்துரைத்த திரு.நாராயணண் அவர்களுக்கும் பாராட்டுக்கள் பல உரித்தாகுக.
 
கவலைய விடுங்க தலீவா... அடுத்த கூட்டத்துல மேடை போட்டு தான் பேசனும்... கூட்டம் சேர்த்திரலாம். நான் கூட கூடிய சீக்கிரம் பழைய சென்னை வாழ்க்கையை மேற்க்கொள்ளலாம்....
 
நாராயணன்,

கேட்க சந்தோஷமாக இருக்கிறது.

//காசி, உங்கள் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். விமான நிலையத்திற்கு எத்தனை பேர்கள் வந்தார்கள் ?//

அது வேற கதை. அதை அப்புறமா சொல்றேன்.
 
வாழ்த்துக்கள்.

என் போன்ற புலம் பெயர்ந்து வாழ் தமிழர்களால் பொறாமை படுவதை தவிர்த்து வேறொன்றும் செய்யலாம். உங்களின் இந்த சந்திப்பு மீண்டும் மீண்டும் தொடர பிரார்த்திக்கலாம், வாழ்த்தலாம்.

அக்பர் பாட்சா
 
நல்லது நாராயணன். சந்திப்பு இனிதே நடந்தது குறித்து மகிழ்ச்சி!
 
நல்ல சந்திப்பா இருந்திருக்கு!!! சிலோன் பராட்டா நல்லா இருந்துச்சா?

நன்றி நாராயணன்! சந்தோஷமா இருக்கு!

அன்புடன்,
துளசி கோபால்
 
அனைவருக்கும் நன்றி.

விஜய், இந்த வருடமென்ன மீட்சி வருடமா? எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கையினை துறந்து (அல்லது துரத்தியடிக்கப்பட்டு ;-))இந்தியாவுக்கு வருகிறார்கள். வாங்க, கொஞ்ச நாள்ல கடற்கரையில கட்சிக் கூட்டங்களுக்கு இணையாக வலைப்பதிவர் சந்திப்பும் அமைந்திருப்பின் நன்றாக தான் இருக்கும்.

காசி, பிரகாஷின் பதிவில் உங்களுக்கான பதிலிருக்கிறது. இதனை தாண்டி ஏதேனும் விவரங்கள் தேவைப்படுமாயின் தொடர்பு கொள்ளுங்கள்.

துளசி கோபால், சிலோன் பரோட்டா அருமை. அதுவும், சிக்கன் பிரியாணியும் நல்ல காம்பினேஷன் என்பதை இப்போதுதான் கண்டறிந்தேன். அது தாண்டி, ஆம்லெட் & தயிர்சாதம், நெத்திலி வறுவல் & நூடுல்ஸ், கேழ்வரகு கூழ் & ஊறுகாய், பழைய சாதம் & வெங்காயம் என பல காம்பினேஷன்கள் கைவசமுண்டு. தனியாக என்றைக்காவது நேரமிருக்கும்போது பதிகிறேன்.
 
// இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதும் ஏதோ ஒரு வெற்றிடம் எங்கோ நிரப்பப்படுவது போலத்தான் இருக்கிறது. அது வயிறாகக் கூட இருக்கலாம்.! // இப்படி ஒரு பதிவில் சொல்லியிருந்தார் எம்.கே.குமார்.

ம்ம்ம்... மீண்டும் அந்த வரிகளை ஞாபகப்படுத்திட்டீங்க ! : )))))
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]