Apr 29, 2005

தலித் அதிகாரிகளும், தமிழக அரசும்

பத்ரியின் பதிவில் "கட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்" என்கிற தலைப்பில் நீங்கள் சாராம்சத்தினைப் படிக்கலாம். நான் தெஹல்காவில் பார்த்தாலும், அவர்களின் இணையத்தளத்தில் இருக்கிறதா என்று தேடி, கிடைக்காத காரணத்தினால், முழு செய்தியினை அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். இது ஏப்ரல் 30, சனிக்கிழமை தெஹல்கா இதழில் வெளியான செய்தி

Dalit Outcasts in Jayalalitha's bureaucracy

A 1977 Batch IAS Officer, Chirstodas Gandhi, known for his work for the downtrodden, has been put on 'compulsory wait" for more than three months. Gandhi, who serve as managing director of the Tamil Nadu Warehousing Corporation (TNWC) till Dec.2004, has approached the Central Administrative Tribunal (CAT) for remedy.

Gandhi's plea has caused ripples in the state's IAS circles. The senior officer has leveled serious charges against Vinayaga Moorthy, the non official chairman of TNWC, and alleged that Chief Secretary Lakshmi Pranesh advised him to desist from having any "association with scheduled castes". His allegations against Moorthy, a ruling party functionary, relate to the proposed construction of two go downs at an estimated cost of Rs.2.38 crore. Gandhi has alleged that Moorthy forced him to annual a MoU signed with the Central Warehousing Corporation for the construction of the go downs.

Gandhi, a dalit himself, points out in his petition that "there are four IAS officers who are on compulsory wait and all of them belong to the scheduled castes". The other officers are Govindan, Sivakami and Kannagi Packianathan. Two of them have been given postings after Gandhi filed his plea.

Pranesh has issued show-cause memos to Gandhi and Sivakami on April 4, 2005 seeking explanation for attending a dalit meeting in Chennai in January. Terming the meeting as "communal" Pranesh noted in her letter to Sivakami, "In the above said meeting, you had made a speech and stressed the need for true and sincere participation of the said community to get their rights.. You had also criticized the alleged acquirement of Panchami land from dalits". In the letter to Gandhi, Pranesh stated, "You had addressed and urged the dalits to work unitedly to get at least 20 seats in the next Assembly polls"

Advocate K. Chandru, representing Gandhi, argues he hadn't violated rules. Citing rules in the All India Services (Conduct) Rules, 1968, he points out "a member of the service may, without the previous sanction of the government, undertake honorary work of a social or charitable nature". Gandhi has claimed in his petition that the Chief Secretary wanted to punish him as “he was a member of the scheduled caste"

The issue has put the spotlight on the caste factor in the bureaucracy. "Brahmins hold the key posts. Among the top 50 IAS Officers, about 45 are Brahmins", a senior officer says. In the past few years, there has been increasing solidarity among dalit officers. Some of them formed an association in 1996 called Paalam, which means bridge. Gandhi is the president of this forum

Report by PV Vinoj Kumar, Chennai, Tehelka

திருமதி. லட்சுமி பிரெனேஷின் கூற்றில் இருக்கும் லாஜிக் புரியவில்லை. காந்தி சொன்னது, தலித்துக்கள் தங்கள் உரிமையை கோரவேண்டுமானால், நேர்மையான முறையில் வரும் தேர்தலில் 20 இடங்கள் பெற வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். இதில் எங்கு வந்தது "வகுப்புவாதம்"? எல்லா அரசியல் கட்சிகளும் கூடதான், ஏன் விஜயகாந்த் கூட இன்னும் கட்சி ஆரம்பிக்காமலேயே, 25 இடங்களை பிடிப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.அதிலும், தொடர்ச்சியாக சிவகாமி தலித் கூட்டங்களுக்கு சென்று பேசி வருபவர். புதிய கோடங்கியில் தொடர்ந்து எழுதி வருபவர். பெரியாரின் தலித்திய சிந்தனைகளை விமர்சித்து முன்வைக்கும் நபர்களில் மிக முக்கியமானவர். லட்சுமி பிரனேஷ் போன்றவர்கள் இருக்கும்வரை ஐ.ஏ.எஸ் ஆனாலும், ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது போல. ஒரு தனி மனிதனாக, நான் எனக்கு பிடித்த அரசியல் கட்சியோ, வேறு எதுவோ அல்லது பச்சையாக எந்த ஜாதி கட்சியையோ ஆதரிக்கவோ, எதிர்க்கவோ சுதந்திரமுண்டு. ஐ.ஏ.எஸ் படித்து நாட்டினை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அந்த சுதந்திரம் கூட இல்லையென்றால் பேசாமல் மாடு மேய்க்க போகலாம்.

Comments:
நாராயணன்:

உங்கள் பார்வையின் கோணம் தவறானது. விஜயகாந்த் அரசு அதிகாரியல்ல.தனி மனிதர்.

அரசு அதிகாரிகள் ஜாதிக்கட்சி மாநாடுகளில் பங்கு பெறுவது ஒரு தவறான முன்னுதாரணம்.
 
நான் சொன்னதை படியுங்கள்

// ஏன் விஜயகாந்த் கூட இன்னும் கட்சி ஆரம்பிக்காமலேயே, 25 இடங்களை பிடிப்போம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.//

நான் சொன்னது பேசிக் கொண்டிருக்கிறார் என்றுதான். அவர் எந்த மாநாட்டில் வேண்டுமானாலும் பங்கு பெற்றுக் கொள்ளட்டும். அரசு அதிகாரிகள் ஜாதிக் கட்சி மாநாடுகளில் பங்குக் கொள்ளக்கூடாது என வரிந்துக் கட்டும் நீங்கள், ஏன், அனைத்து பிராமண அதிகாரிகளுக்கும் "ஆவணி அவிட்டம்" அன்று சிலமணி நேரங்கள் அனுமதி கொடுக்கறீர்கள் ? அதுவும் சாதிரீதியான ஒதுக்குமுறைதானே. முதலில் ஏன் சாதிக் கட்சிகள் உண்டாகின என்று பாருங்கள். அங்கு தெரியும் அடக்குமுறையும், அதிகார வெறியாட்டமும்.

அரசு அதிகாரியும் மனிதனே. அவனுக்கும், சொந்த, விருப்பு வெறுப்புகளுண்டு. வால்டர் தேவாரமோ, முன்னாள் தேர்தல் அதிகாரி, மலைச்சாமி செய்யாத எதை காந்தி செய்துவிட்டார் ? காந்தி சொன்னது அவருடைய கவலை. இனத்தின் மீது இருக்கும் அக்கறை. காந்தி பேசினால் ஜாதி. லட்சுமி ப்ரனேஷ் பேசினால் அதிகாரமா? நன்றாக இருக்கிறதே உங்களின் நியாயம்.
 
நாராயணன், இவர்கள் ஏன் அரசிடமிருந்து வேலையை எதிர்பார்க்கவேண்டும்? டீ கடை, இட்லிகடை அல்லது ஏதாவது கைத்தொழில் செய்து சுயமரியாதையோடு வாழக்கூடாதா?

//"Brahmins hold the key posts. Among the top 50 IAS Officers, about 45 are Brahmins"//

அசோகமித்திரன் கவலைப்பட்டதுபோல ஒன்னும் உண்மையில் நடக்கவில்லைபோல.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆடுவோமே!
பதிவுக்கு நன்றி!
 
முன்னாள் தேர்தல் அதிகாரி மலைச்சாமி பதவியில் இருக்கும் போது ஜாதிக்கட்சி மாநாடுகளுக்குப் போனதாக நினைவில்லை. ஓய்வு பெற்ற பிறகு அவர் தனி மனிதர்.

என் கேள்வி, அரசு ஊதியம் வாங்கும் அதிகாரியைப் பற்றி. என் பார்வையில், அவர்கள் பணி நீக்கம் (Dismiss) செய்யப்பட வேண்டியவர்கள்.
 
Narain,
It is highly reprehensible that the said officers are put in "compulsory wait" just because they are Dalits. The attitude of concerned govt. officials need to be condemned strongly and remedy for this needs to be found quickly.

In the same vein, I wish to add what நாடோடி says makes sense. As a Govt. official you cannot (as per rules) be a member of a political party OR participate in casteist conferences.

//வால்டர் தேவாரமோ, முன்னாள் தேர்தல் அதிகாரி, மலைச்சாமி செய்யாத எதை காந்தி செய்துவிட்டார் ?
//
They never did such things when in service.

//அரசு அதிகாரிகள் ஜாதிக் கட்சி மாநாடுகளில் பங்குக் கொள்ளக்கூடாது என வரிந்துக் கட்டும் நீங்கள், ஏன், அனைத்து பிராமண அதிகாரிகளுக்கும் "ஆவணி அவிட்டம்" அன்று சிலமணி நேரங்கள் அனுமதி கொடுக்கறீர்கள் ? அதுவும் சாதிரீதியான ஒதுக்குமுறைதானே
//
This is a ridiculous argument. What a govt. officer does at his house as a religious ceremony (which you may not believe in!) and what an officer does at a casteist meeting simply cannot be equated.

//"Brahmins hold the key posts. Among the top 50 IAS Officers, about 45 are Brahmins"//

One cannot comprehend why it is like this despite reservation for the last many years. This means the policy was never properly implemented or progressively amended to reach the deserving and a small section of backward and dalit people have always cornered most of the benefits of reservation policy. God help this country!

enRenRum anbudan
BALA
 
நாடோடி, பாலா கொஞ்சமாய் நீங்கள் அக்காலத்திய ஜூனியர் விகடனையும், நக்கீரனையும் படித்திருந்தீர்களேயானால் தெரிந்திருக்கும். அதிகார துஷ்பிரயோகமும், தன் சாதிக் காரர்களுக்கு அவர்கள் செய்து கொடுத்த குற்றேவல்களையும் நாம் மறக்கலாம். வரலாறு மறக்காது. கைவசம் ஆதாரங்கள் இல்லாமையால், இது குறித்து மேலே பேச முடியாது.

அவா அவா ஆத்துல அவா அவா பண்ணறதுல எனக்கொன்றும் பிரச்சனையில்லை. ஆனால், அதைக் காரணம் காட்டி, நீங்கள் வேலைக்கு 3 மணி நேரம் தாமதமாக போகலாம். யாரும்,எவரும் கேள்விக் கேட்க மாட்டார்கள். ஆனால், ஒரு தலித், தன் சக தலித்தினைப் பார்த்து, நீயும் தேர்தலில் போட்டியிட்டு நமக்கான இடத்தினை பிடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் "ஜாதி வெறி" "வகுப்பு வாதம்" "தலித்திசம்" "வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள்" என்று கூப்பாடுகள் போட ஆரம்பித்து விடுகிறீர்கள்.

இதை சொல்லாமல், தன் அத்திம்பேர்,மச்சினர், சொந்தக் கார பிள்ளைகளை எல்லா இடங்களிலும் ரெக்மண்டடேஷனில் உட்காரவைக்கும் மாமாக்களைப் பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள். ஏனென்றால், வெளிப்படையாக அவர்கள் எதுவும் சொல்லமாட்டார்கள். சொல்லாமல் செய்வார்கள்.

//This means the policy was never properly implemented or progressively amended to reach the deserving and a small section of backward and dalit people have always cornered most of the benefits of reservation policy.//

பாலிசி நன்றாக தான் இருந்தது. ஆனால், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் அவாள் கைங்கரியத்தில், நடக்க வேண்டியது நடக்கவில்லை என்பது தான் உண்மை. மண்டல் கமிஷனை எதிர்த்தவர்கள்தானே இவர்கள் அனைவரும். இதைப் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை. அவாளுக்கு இங்கில்லாவிட்டால், இருக்கவே இருக்கிறது அமெரிக்காவும், ஐரோப்பாவும். சேற்றிலும், பீயிலும், ரோட்டிலும் உருளவேண்டியது தலித்தின் "விதிப்பயனற்றோ", நடக்கட்டும். காலம் ஒரு நாள் மாறும்.
 
பாலா இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

//Gandhi's plea has caused ripples in the state's IAS circles. The senior officer has leveled serious charges against Vinayaga Moorthy, the non official chairman of TNWC, and alleged that Chief Secretary Lakshmi Pranesh advised him to desist from having any "association with scheduled castes".//
 
"அரசு அதிகாரிகள் ஜாதிக் கட்சி மாநாடுகளில் பங்குக் கொள்ளக்கூடாது என வரிந்துக் கட்டும் நீங்கள், ஏன், அனைத்து பிராமண அதிகாரிகளுக்கும் "ஆவணி அவிட்டம்" அன்று சிலமணி நேரங்கள் அனுமதி கொடுக்கறீர்கள் ? அதுவும் சாதிரீதியான ஒதுக்குமுறைதானே. முதலில் ஏன் சாதிக் கட்சிகள் உண்டாகின என்று பாருங்கள். அங்கு தெரியும் அடக்குமுறையும், அதிகார வெறியாட்டமும்"

கலக்கல் பதில் நரேன்...தொடரட்டும் உங்கள் பணி!!!

நன்றி.
மயிலாடுதுறை சிவா...
 
//என் கேள்வி, அரசு ஊதியம் வாங்கும் அதிகாரியைப் பற்றி. என் பார்வையில், அவர்கள் பணி நீக்கம் (Dஇச்மிச்ச்) செய்யப்பட வேண்டியவர்கள்.//
அண்ணே நாடாடோ என் பார்வையில் நீங்கள் கொலை செய்யப்படவேண்டியவர்.
 
Narain,

They all could start tea stalls. kaiththozil irukkunga!
 
Narain,

//"ஜாதி வெறி" "வகுப்பு வாதம்" "தலித்திசம்" "வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள்" என்று கூப்பாடுகள் போட ஆரம்பித்து விடுகிறீர்கள்.
//
I didn't say all these things. Pl. do not put words into my mouth, in a hurry! I just said that rules do not permit such things.

//இதை சொல்லாமல், தன் அத்திம்பேர்,மச்சினர், சொந்தக் கார பிள்ளைகளை எல்லா இடங்களிலும் ரெக்மண்டடேஷனில் உட்காரவைக்கும் மாமாக்களைப் பற்றி நீங்கள் பேசமாட்டீர்கள்.
//
ரெகமண்டேஷன் என்பது பொதுவாக எல்லாரும் செய்யும் ஒன்று தான். ஆனால், அரசாங்கத்தில் "open quota" வில் வேண்டுமானால் ஒருவரை வேலைக்கு சிபாரிசு செய்யலாம். மற்றபடி, நான் கேட்டது, பிற்படுத்தப்பட்டோ ர்க்கும், தலித்துகளுக்கும், அரசாங்கப் பணியில் ஒதுக்கப்பட்ட இடங்களைப் பற்றி! அதனால், மாமாக்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்படவில்லை!

Finally, even if you are not in agreement, it is a fact that people (among backward and dalit) who have come up owing to the reservation policy continue to reap the benefits denying the many poor and deserving people in those communities. My point is economic criterion (and any other valid criteria) needs to be considered in reservation. Pl. understand I am not suggesting to include Brahmins while considering the economic criterion.

enRenRum anbudan
BALA
 
//Terming the meeting as "communal" Pranesh noted in her letter to Sivakami, //

இதுக்கு என்ன அர்த்தம் பாலா சார். இதை தான் சொன்னேன். ஒபன் கோட்டா தானே சாமி, அப்ப எப்படி 95% பேர் பிராமின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்க முடியும் ? ஆக, கோட்டா இருந்தாலும், இல்லையென்றாலும், அதிகாரிகளை மாற்றி, தூக்கியடித்து, எப்படியாவது அவர்களின் அஜென்டாவை நிறைவேற்றிக் கொள்வார்கள். அதுதானே நடக்கிறது.

//Finally, even if you are not in agreement, it is a fact that people (among backward and dalit) who have come up owing to the reservation policy continue to reap the benefits denying the many poor and deserving people in those communities.//

நீங்க ஏன் இடம் கொடுக்கலைன்னு கேட்டா, நீங்க கேள்வியை திருப்பிப் போட்டு, திசை மாத்தறிங்க. சரி உங்க லாஜிக் படியே வருவோம். 4 தலித் அதிகாரிகள், எத்தனை தலித்துக்கள் வயிற்றில் மண் அள்ளிப் போட முடியும் ? 45 அதிகாரிகள் எத்தனை வயிற்றினை காயப்போட முடியும் ? இரண்டாம் கிளாஸ் கணக்கு சார் இது. சும்மா ஜல்லியடிக்காதிங்க. இருக்கற, வந்த வாய்ப்புக்களே மிகக் குறைவு, அதுக்குள்ள, ஒரு தலித்தோடு, இன்னொரு தலித்திற்கு சண்டை மூட்டி விடாதீர்கள்.
 
என்ன மசிரு பெனிபிட்? எது பெனிபிட்?
மொத்தத்தில் சரியான விநியோகம் இல்லை என்பது பாலா போன்ற ஆட்களுக்கு பெனிபிட் ஆக தெரிகிறது. இதுதுதான் இவர்கள் அயோக்கியத்தனம். சமூகத்தில் அடக்குமுறையின் காரணத்தினால் அடித்தளத்தில் இருந்து மேலே வந்தவர்கள் சிலரை உதாரணமாக காட்டி மொத்த பிரச்சினையையும் திசை திருப்ப வேண்டியது. இது ஒரு குறைவற்ற பார்ப்பனியமாகத்தான் என் கண்ணுக்கு தெரிகிறது.
சட்டப்படிசொந்த விருப்பு வெறுப்பு காரணமாக , தான் சாரும் கருத்துலகத்தோடு தொடர்பு வைக்கக்கூடாது என்று மேலதிகாரி எப்படி அட்வைஸ் செய்ய முடியும்(அது உண்மையாய் இருக்குமென்றால்) . அதைப்பத்தி கேட்டால் வாயைப் பொத்திக்கொள்பவர்கள், சட்டப்படி மீட்டிங்க் அடெண்ட் செய்தால் , பணிநீக்கம் செய்வார்கள். வளர்ந்தவர்களை காரணம் காட்டி, மொத்த ரிசர்வேஷன் சிஸ்டத்தையே ஓட்டை சொல்லவேண்டியது!
 
பாலா போன்ற ஆட்களால் இப்பட்டித்தான் யோசிக்கமுடியும் இதுதான் அவர்கள் மனம். அதைத்தாண்டி யோசிக்க முடியாது.
ஒரு லாஜிக்கையும் ஒழுங்காக யோசிக்க முடியாது.

//My point is economic criterion (and any other valid criteria) needs to be considered in reservation. Pl. understand I am not suggesting to include Brahmins while considering the economic criterion.//
பொருளை கணக்கில் வைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்று சொல்லி நிறுத்தவேண்டியதுதானே, அது எதுக்கு , நான் பிராமிண்களை சேர்க்க சொல்லவில்லை யென்று சொல்ல்வேண்டும்?
 
i think the issue has been twisted.the real issue is different.it is some officials vs
state govt. it is not a brahmin vs dalit issue.i doubt the veracity of the claim that of the 50 top i.a.s officials 45 are brahmins.

mayawati had created a history of sorts by transferring ias and ips officials.how upper caste officials were treated by here was an open secret.putting ias officials to compulsory wait is not new.in 2001 jayalalitha govt did the same to many who were perceived to be close to the previous regime.so i think the root cause is something else.dalits
have quota of 18% in IAS.so 18% of IAS officials would be dalits.of these why these four were put in compulsory wait - i dont know.
 
//அதுக்குள்ள, ஒரு தலித்தோடு, இன்னொரு தலித்திற்கு சண்டை மூட்டி விடாதீர்கள்.
//
Honestly, it was not my intention to create a rift among Dalits. I just gave my opinion on reservation as it exists now. I request you not to interpret my point, like you have done.
 
//I just gave my opinion on reservation as it exists now//.

why dont you give your VALUEBLE opnion on this Mr.BALA ????????

//The senior officer has leveled serious charges against Vinayaga Moorthy, the non official chairman of TNWC, and alleged that Chief Secretary Lakshmi Pranesh advised him to desist from having any "association with scheduled castes". His allegations against Moorthy, a ruling party functionary, relate to the proposed construction of two go downs at an estimated cost of Rs.2.38 crore. Gandhi has alleged that Moorthy forced him to annual a MoU signed with the Central Warehousing Corporation for the construction of the go downs.//
 
Ravi , I think You missed a point,
They are talking about "top 50 IAS offiers", and not by quoto.
anyway thanks for your input.
 
நாராயண், பாலாவின் வாத்ங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதற்காக நான் உங்களை கண்டிக்கிறேன்.
// அதுக்குள்ள, ஒரு தலித்தோடு, இன்னொரு தலித்திற்கு சண்டை மூட்டி விடாதீர்கள்.//

என்னயா இது? சுத்து வந்து கும்மி அடிச்சுகிட்டு!!!
 
ஒரு ஐஏஸ்க்கு எத்தனை கஷ்ட்டப்படவேண்டும். அதும் ஒரு தலித்திலிருந்து ஒரு ஐஏஸ் வரவேண்Dஉம் என்றால் அதற்க்கு சமூகக்காரணைகளைத்தாண்டி எத்தனை பிரச்சினை இருக்கிறது.
அவர்கள் பதவிக்கு மதிப்பு உள்ளதா? சொல்வது அரசின் காதுகளில் விழுகிறதா? அரசு அளவில் டிஸ்கிரிமினேஷன் இருக்கிறதா? என்பதெல்லால் விட்டுவிட்டு, இங்கெ ஒரு மசிருக்கும் லாயக்கில்லாத நானும், நாடாடியும் 4 ஐஏஸ் ஆபீசர்களை, அப்படியே டிஸ்மிஸ் செய்துவிடுவோம்?
தூத்தெறி!! ப்ளாக்காம் ப்ளாக்கு, அசிங்கமா வருது வாயில.
 
ஒரே உணர்ச்சிகளின் வெளிபாடுகளா இருக்கறதால நான் சொல்ல வர்றது எடுபடுமோ எடுபடாதோ. இருந்தாலும் முயற்சி பண்றேன்.

என்னை பெற்றவர் அரசுப் பணியில் இருந்ததால் ஓரளவுக்கு அங்கு நிலவும் கட்டுப்பாடுகள் பற்றி எனக்கு பரிச்சயமுண்டு. ஒரு அரசு அதிகாரி, மேலிடத்திலிருந்து முன்னனுமதி இல்லாது எந்த ஒரு பொது நிகழ்விலும் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. அரசு பணியிலிருந்து கொண்டு வேறு வருமான வாய்ப்புகளை பின் தொடர (pursue) முடியாது. மீடியாக்களுக்கு பேட்டியளிக்க முடியாது. சுருக்கமாக சொல்லப் போனால் பொது வாழ்வில் ஈடுபடமுடியாது. திரு.ராம்தாஸ் அவர்களும் அரசு பணியிலிருந்து வெளி வந்துதான் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார் என அறிகிறேன். என்னைப் பெற்றவர் ஆராய்ச்சி செய்வதற்காக விடுப்பில் சென்று, அதற்கு அனுமதியை 'சரியாகப்' பெறவில்லை என்று enquiry, disciplinary action என்று இழுத்தடிக்கப் பட்ட அனுபவமெல்லாம் உண்டு.

இந்த பின்னணியில், தண்டிக்கப் பட்ட IAS அதிகாரிகள் விதிமுறைகளை மீறினார்களா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டும். தண்டிக்கப்பட்டவர், தண்டித்தவர் ஆகியோர் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக நாம் இங்கு இரு குழுக்கள் அமைத்துக்கொண்டு சாதீய விவாதம் செய்து கொண்டிருப்பதில் எந்த அர்த்தமுமில்லை.
 
இதை ஏற்றுக்கொள்கிறேன்.
// இந்த பின்னணியில், தண்டிக்கப் பட்ட ஈஆஸ் அதிகாரிகள் விதிமுறைகளை மீறினார்களா, இல்லையா என்பது ஆராயப்பட வேண்டும்.//

இதைத்தாண்டி விவாதிக்க ஆரம்பிக்கலாம் என்றால் , அதற்குள் இங்கே இதே புளிச்சுப்போன, பிராமணிய-தலித்து ரிசர்வேஷன் ரகளை.
 
//சட்டப்படிசொந்த விருப்பு வெறுப்பு காரணமாக , தான் சாரும் கருத்துலகத்தோடு தொடர்பு வைக்கக்கூடாது என்று மேலதிகாரி எப்படி அட்வைஸ் செய்ய முடியும்(அது உண்மையாய் இருக்குமென்றால்) .///

வாய்ஸ்,
இது பற்றி ஏதாவது உங்களுக்கு தெரியுமா? உங்கள் கருத்தென்ன?
 
அடப் பாவி மக்கா, சாப்பிட்டு வர்றத்துக்குள்ள இவ்வளவா!! அது சரி. கார்த்திக், நான் தலித்துக்களுக்குள் சண்டை மூட்டி விடாதீர்கள் என்று சொன்னதின் காரணங்கள் தெரிந்திருக்கும். அதே நான் வேறுவிதமாக படித்துவிட்டேன் என்று வியாக்கியானம் சொன்னால், நான் என்ன சொல்வது.

தர்க்க ரீதியாக பார்ப்போம். எனக்கு சொந்தமான ஒரு பொருளையை, பதவியையோ, சேவையையோ நீங்கள் வைத்துக் கொண்டிருந்தால், எனக்கு உங்கள் மீது கோவம் வருமா ? காதல் வருமா? இதுல நான் தவறாக படித்து விட்டேன் என்று சொன்னால், எனக்கு உண்மையிலேயே சிரிப்புதான் வருகிறது.

விங்ஸின் பாயிண்டோடு ஒத்துப் போகிறேன். ஆனால், மதநல்லிணக்க ஜிகனாவாக, ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியோ, கலெக்டரோ, தீ மிதிக்கும் விழாவிலும், ரம்ஜான் நோம்பு கஞ்சி குடித்தலும், சைதாப்பேட்டை மூர் தெருவிலுள்ள 33 நம்பர் வீட்டுக்கு போய் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லுதலும் நடக்கலாம். இதெல்லாம், மத சம்பந்தமான பிரச்சனைகள் அல்ல. ஆனால், ஒரு தலித் அதிகாரி, சக தலித்தோடு பேசிக் கொண்டிருந்தான் என்பதை பொறுக்க இயலாமல், வானுக்கும், பூமிக்கும் குதிக்கும் ஆட்களின் மீதுதான் என் கோவமும், வெறுப்பும். மத சம்பந்தப்பட்ட, சாதி சம்பந்தப்பட்ட எவ்விதமான விஷயங்களிலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பேசக் கூடாது என்று சொல்லட்டும், நான் ஒதுங்கிப் போய்விடுகிறேன்.
 
கார்த்திக், தார்மீக முறையில் சமூக நலன் கருதிச் செய்த செயல்களாகத் தென்பட்டாலும், விதிமுறைகள் மீறப் பட்டிருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

1. மேலதிகாரியின் அனுமதியின்றி பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது
2. அரசு நடவடிக்கை ஒன்றைக் கண்டித்தது (criticising the acquisition of lands etc etc)

ஆகிய இரு செயல்கள், ஒரு அரசு அதிகாரி செய்திருக்கக்் கூடாதவை என எனக்குத் தெரிந்தவரையில் தோன்றுகிறது. என்னைவிட விஷயமறிந்தவர்கள் எனது கருத்திலிருந்து மாறுபட வாய்ப்பிருக்கிறது.
 
வாய்ஸ்,நரைன் ,
உங்கள் கருத்தை படித்தேன். யோசிக்கிறேன். நன்றி.
 
மாமியா ஒடச்சா மண்சட்டி, மருமக ஒடச்சா பொன்சட்டி. தியாகராச ஆராதனையில போயி சிஞ்சாக் அடிக்கிறதெல்லாம் சாதிக்கூட்டமில்ல. அதை விடுங்கள். இவர்கள் சாதீயக் கூட்டத்துக்குப் போகாமலிருந்தால் மட்டும் இவர்களைச் சும்மாவா விட்டு வைத்திருப்பார்கள்? இதெல்லாம் ஒரு சாக்கு என்பதை சின்னப் பிள்ளை கூடப் புரிந்து கொள்ளும். சிவகாமி FETNA மாநாட்டில் தலித்து ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலில் எதிர்கொள்ளும் சாதீய ஒடுக்குமுறைகளைப் பற்றிக் கோடிட்டுக் காட்டினார். இட ஒதுக்கீட்டில் சி மற்றும் பி பிரிவு இடங்கள் நிரப்பப் படும் அளவுக்கு ஏ பிரிவு இடங்கள் நிரப்பப் படுவதில்லை என்பதையும் சொன்னார். ஏனெனில் இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தோட்டிகளும் எடுபிடிகளும் மட்டுமே. பெருங்காரியங்களைச் செய்யப் பிறந்தவர்களெல்லாம் வேறு ஆட்கள்.
 
இரவி சொல்வது போல அரசியல் கட்சிகள் தங்களுடன் ஒத்துப் போகாத அல்லது முந்தைய அரசுக்கு இணக்கமாக இருந்த அதிகாரிகளை பந்தாடுவதும், கட்டாயக் காத்திருப்பில் வைப்பதும் இயல்புதான். இதை எல்லா கட்சி அரசுகளும் செய்து வந்திருக்கின்றன. இதில் சாதியப் பாகுபாடு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டை வைக்க முடியாதுதான்.

ஆனால் இங்கு தலித்தியச் சிந்தனையை முன்னெடுத்து அவர்களின் விழிப்புணர்வுக்காகவும் விடுதலைக்காகவும் தங்களுடைய ஓய்வு நேரத்தில் உழைத்து வரும் தலித்து அதிகாரிகளை மட்டும் காத்திருப்பில் வைப்பதும், அதற்காக தலமைச் செயலாளர் சொல்லும் காரணங்களும் சாதிய வெறியைத்தான் (திரும்பவும் வலியுறுத்துகிறேன், இது வெறும் பாகுபாடு இல்லை வெறி) குறிக்கிறது. இதே காரணத்தை இங்கு ஆதரித்து பேசும் லாஜிக்கும் அவர்களுடைய அறியாமையில் வரும் சாதியப் பார்வைதான்.

பெரும்பாலான அதிகாரிகள் சாதி மற்றும் மதக் கூட்டங்களில் கலந்து கொண்டிருப்பது அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும். மலைச்சாமியும் பொன்.பரமகுருவும் பணியிலிருக்கும் போதே தேவர் சாதி கூட்டங்களில் கலந்து கொண்டதுண்டு. எத்தனையோ அதிகாரிகளும், நீதிபதிகளும் கூட தமிழ் நாடு பிராமணர் சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டதையும், உழைத்ததையும் நான் படித்திருக்கிறேண். சில பிராமண நண்பர்களே இதை எனக்குச் சொல்லியிருக்கிறர்கள். நான் தூத்துக்குடியில் படிக்கும் பொழுது உரிமை பறிக்கப் பட்ட முற்படுத்தப் பட்டோர் இயக்கம் என்று ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்காக உழைத்த சைவப் பிள்ளைமார் மற்றும் பிராமணர் அதிகாரிகளைக் கண்டிருக்கிறேண். அதெல்லாம் இங்கு வலைப் பதிவில் எழுதுபவர்களுக்கு தோன்றியிருக்காது. ஏனென்றாம் சாதியென்பதை நம்மிடமிருந்துப் பிரித்துப் பார்த்தால்தான் தெரியும். இதே போல்தான் முன்பு எல்லா சாதித் தலைவர்கள் பெயரையும் மாவட்டத்துக்கும், பேருந்துக்கும் சூட்டிய பொழுது சும்மாயிருந்த அறிவாளிக் கும்பல்கள் தலித்து பெயரை வைத்த பொழுது மட்டும் கூப்பாடு போட்டு எல்லாத் தலைவர்கள் பெயரையும் அரசு நீக்கியது.


கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் கூட சாதி உண்டு !

இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அரசியல் சட்டப் படி பிற்படுத்தப் பட்டோர்களின் மற்றும் தலித்துகளின் முன்னேற்றத்துக்கு உழைக்கலாம். இல்லையெனில் நம் அரசாங்கங்கள் ஆதி திராவிடர் நலத் துறை என்றெல்லாம் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஒரு அமைச்சகமும் அதிகாரிகளும் நியமிக்கப் படுகின்றனர். இந்த அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் மொன்னையான கைப் பாவைகளை நியமித்து விட்டு பிலிம் காட்டி விட்டுப் போவார்கள். விதி விலக்காக முன்பு ஒரு முறை கிறிஸ்து தாஸ் காந்தியை நியமித்த பொழுது அவர் நிறைய நல்ல திட்டங்களை செயல் படுத்தினார் என்பதற்காகவே இவரை ஒழிக்க முடிவு பண்ணியிருப்பார்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி
 
45/50. odukkapattavarkalin nilaya idhu?


srirangathil oru (iyengar)thirumanathil vibathu yerpatapodhu paadhikapatavarkaluku arasanga velai endru arivithargal. thinamum saalaiyoram vipathil poy serubavargalin kudumbathuku idhu pondra baakiyam kidayadhu.idhu pondra idea kal engirundhu varugiradhu endru therigiradhu.
 
நாடோடி, தங்கமணி, பாலா, கார்த்திக் (பலமுறை), மதி, ரவி சீனிவாஸ், விங்ஸ், சுந்தரவடிவேல், சங்கரபாண்டி, ஆதிரை நன்றிகள்.

சற்றே விலகி, இந்த வார தெஹல்கா பார்த்தால், வட கர்நாடகாவில் உடுப்பி அருகே கன்றுகுட்டி வாங்கியதற்காக, ஹிந்து யுவ சேனாவால், தந்தையும் (70)மகனும்(29)மக்கள் முன்பு நிர்வாணமாக்கப்பட்டு போட்டோ எடுக்கப்பட்டுள்ளார்கள். அடித்து,உதைத்து, மிரட்டி பொதுமக்களின் முன்பு இது நடந்துள்ளது. கன்றுகுட்டி வாங்குதல், விற்றல், உண்பது என்பது ஒரு சாதாரண நிகழ்வு. ஹிந்து யுவ சேனா போன்ற வலதுசாரி அமைப்புகள், இதனை ஒரு கலாச்சார எதிர்ப்பாக பார்க்கிறார்கள்.

Their Shame.Our Shame


வெட்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது, இது நடந்தது தகவல் தொழில்நுட்ப துறையில் உலகின் முண்ணணி நாடாக சொல்லிக்கொள்ளும் நாட்டில். என்ன பிரயோசனம், உலகம் முழுவதும் நுட்பத்தினை பரப்புவோம். ஆனால், சொந்த ஊரில் மனிதர்களை மனிதர்களாக மதிக்க மாட்டோம். வாழ்க ஜனநாயகம்
 
கார்த்திக்,

//பாலா இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

//Gandhi's plea has caused ripples in the state's IAS circles. The senior officer has leveled serious charges against Vinayaga Moorthy, the non official chairman of TNWC, and alleged that Chief Secretary Lakshmi Pranesh advised him to desist from having any "association with scheduled castes".//
//

என் முதல் பின்னூட்டத்திலேயே, இப்போக்கு வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறியிருக்கிறேன். ''It is highly reprehensible that the said officers are put in "compulsory wait" just because they are Dalits. The attitude of concerned govt. officials need to be condemned strongly and remedy for this needs to be found quickly.'' நான் தலித் முன்னேற்றத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவன் அல்லன். You could refer my comments made in other blogs too! மறுபடியும் சொல்கிறேன், தலைமைச் செயலாளர் அப்படி கூறியிருந்தால், அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.


//என்ன மசிரு பெனிபிட்? எது பெனிபிட்?
மொத்தத்தில் சரியான விநியோகம் இல்லை என்பது பாலா போன்ற ஆட்களுக்கு பெனிபிட் ஆக தெரிகிறது. இதுதுதான் இவர்கள் அயோக்கியத்தனம்.
//
18% இட ஒதுக்கீடு (+ பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு) தான் நீங்கள் கூறும் "பெனிபிட்". இந்த விநியோகம் பற்றி என் கருத்தை (நான் சொன்னது அயோக்கியத்தனமானது அல்ல என்பதை) நிதானமாக (IAS பணி என்று அல்லாமல், பொதுவாக) விளக்குகிறேன். இட ஒதுக்கீட்டால் பயன் அடைந்து முன்னேறியவர்கள், தற்போது படிப்புக்கு மட்டுமே அதை உபயோகிக்கிறார்கள். அரசாங்க வேலையை விட தனியார் நிறுவன பணியில் அதிகம் பொருளீட்ட முடிவதால், அரசாங்க வேலைகளுக்கு அவர்கள் பெரும்பாலும் செல்வதில்லை. உதாரணமாக, நான் அறிந்த ஐந்தாறு நண்பர் குடும்பங்களின் வாரிசுகளை கூறலாம். இந்த காரணத்தாலும், 18% க்கான இடங்கள் அரசாங்கத்திலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும் நிரப்பப்படாமல் உள்ளன. இதை வைத்தே, "economic criterion" தேவை என்று சொன்னேன். கல்விக்கான இட ஒதுக்கீட்டில், பொருளை கணக்கில் கொண்டு செயல்பட்டால், இது வரை பெனிபிட் அடையாத தரப்பினர் (பிற்படுத்தப்பட்டோரையும் சேர்த்து தான் சொல்கிறேன்) அதை பயன்படுத்தி படித்து, மத்திய / உயர் அரசாங்கப் பதவிகளில் சேரலாம் அல்லவா ? தற்போது, அடிமட்ட அரசாங்கப் பணிகளில் தான் தலித்துகள் அதிகம் காணப்படுவது மாறுவதற்கு (உடனே நடக்காவிட்டாலும் கூட) வாய்ப்பு ஏற்படும் அல்லவா ? என் கருத்தில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

//பொருளை கணக்கில் வைத்து சட்டம் இயற்ற வேண்டும் என்று சொல்லி நிறுத்தவேண்டியதுதானே, அது எதுக்கு , நான் பிராமிண்களை சேர்க்க சொல்லவில்லை யென்று சொல்ல்வேண்டும்?
//
நான் அப்படி கூறாமல் இருந்திருந்தால், நீச சிந்தனை உடைய யாராவது, பார்ப்பனர்களை இட ஒதுக்கீட்டுக்குள் எப்படியாவது கொண்டு வருவதற்கான ஒரு யோசனையை பாலா முன் வைத்திருக்கிறார் என்று அநியாயமாக திரித்து விடுவார்களே என்ற எண்ணத்தில் (அல்லது அச்சத்தில்) தான் நான் "Pl. understand I am not suggesting to include Brahmins while considering the economic criterion." என்று ஒரு கராலரி (corollary) போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன்!

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா
 
இதுதான் பிரச்சினை பாலா அவர்களே. நீங்கள் எவ்வளவு விலகிப்போனாலும் வம்புக்கலைபவர்கள் நீங்கள் பார்ப்பனர் என்பதை மறக்கப் போவதில்லை. நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்பதுதான் எனது கோஷம். பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் ஏழை பார்ப்பனனுக்கு ஏன் இட ஒதுக்கீடு செய்யக்கூடாது? அதைக்கூற யாருடைய அனுமதியும் நமக்குத் தேவையில்லை. இதைக்கூறும் நான் பார்ப்பனன் என்று கூறிக்கொள்வதில் எனக்கு எப்போதுமே தயக்கம் இல்லை. படிப்புதான் நம்மவர்களின் பலம். தேவையில்லாமல் மற்றவர்கள் உங்களை ஒரு குற்றமனப்பான்மையில் விழ விடாதீர்கள். வாழ்க்கை மிகக் குறுகியது. கிடைக்கும் வாய்ப்புக்களை வைத்துக் கொண்டு முன்னேறுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
 
http://ravisrinivas.blogspot.com/2005/04/blog-post_111487694027366631.html
 
//நான் அப்படி கூறாமல் இருந்திருந்தால், நீச சிந்தனை உடைய யாராவது, பார்ப்பனர்களை இட ஒதுக்கீட்டுக்குள் எப்படியாவது கொண்டு வருவதற்கான ஒரு யோசனையை பாலா முன் வைத்திருக்கிறார் என்று அநியாயமாக திரித்து விடுவார்களே என்ற எண்ணத்தில் (அல்லது அச்சத்தில்) தான் நான் "Pl. understand I am not suggesting to include Brahmins while considering the economic criterion." என்று ஒரு கராலரி (corollary) போட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானேன்!
//

இந்த கருத்து புரிய வேண்டிய சென்மங்களுக்கு புரிந்தால் சரி. "எல்லா விஷயத்தையுமே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதவர் என்று மட்டுமே பார்க்கக் கூடிய நசிவு மனப்பான்மைக்கு விரும்பித் தண்ணீர் விட்டு வளர்த்துக் கொண்டிருக்கிற இப்படிப்பட்டவர்களைப் பற்றியும் நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும், மேற்குறிப்பிட்ட சாரார்கள் வளர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்று பிகே சிவகுமார் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
 
இது ,
பாலாவுக்கும், பிகே சிவகுமாரின் சீடர் சங்கமித்திரனுக்கும் அல்ல.
பொதுவாக வாசிக்கும் வாசகர்கள் சிலர் இருக்கலாம் என்ற நம்பிக்கை இருப்பதால் அவர்களுக்கு,

இங்கு நரைன் தலித் இ.ஆ.ப அதிகாரிகளைப்பற்றி எழுதியதும் "பாலிசி சரியில்லை" என்று சொன்னது யார்? (பாலிசி)"இ.ஆ.பா" அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவேண்டும் " என்று சொன்னது யார்? (நாடோடி)

பாலிசி என்பது பற்றி சற்றும் தெரியாத உங்களோடு பாலிசி பற்றிச் சொல்லி என்ன ஆகிவிடப்போகிறது.

அப்படித்தான் சொல்ல்கிறீர்களே உங்கள் லாஜிக் தான் என்ன என்று எவனாவது கேள்வி கேட்டால்,
அவனுக்கு பெயர், "நசிவு மனப்பான்மை உடையவன்". நல்ல நீதி. நன்றி. எங்களுக்கும், மேற்குறிப்பிட்ட சோ'ரர்கள் வளர்'வால்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ;-)


பாலா, இது தனிப்பட உங்களுக்கு: இந்த இட ஒதுக்கீடு விஷயம் , கோடி முறை பெரியாராலும், அம்பேத்காரலும், அன்றைய எதிர்ப்பாளர்காளிடமும் விவாதிக்கப்படாகிவிட்டது. நீங்கள் தான் அதைத் தெரிந்து கொள்ள்வேண்டும். உங்கள் யோசனையில் நீங்கள் அதை தெரிந்து கொண்டிருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், "பாலிசி இம்ப்ளிமென்ட் செய்ய முடியவில்லை" என்று மட்டையடிக்கும்போது (இதை குட்டையடி என்று வேண்டுமெனில் கூறலாம்.) தான் எழுத வேண்டிய அவசியம் வருகிறது.

எதோ எல்லாம் யோசித்து , முடிவுக்கு வந்து இதுதான் நீதி என்ற தோரணையில், "பொருளை முன் வைத்து " ஒரு லாஜிக் எழுதினீர்கள். அதிலும் உருப்படியில்லாமல். ஒரு கராலரி. இந்த விவாததிலிருந்து உங்களுக்கும் தலித்துக்கும் எந்த வித சம்பந்தமோ , எந்த வித தலித் பற்றிய அறிவோ உங்களுக்கு "குறைந்த பட்ச " அளவில் கூட இல்லை என்பதை **நிறுவி**, தெரிந்து கொள்கிறேன். அதனாலேயே , உங்கள் "பொருள் வாததுக்கு" மட்டையடி பதில் கூட லாயக்கில்லை என்று தெளிகிறேன். நன்றி.

ஐயா டோன்டு அவல்களே ;-) ,
உங்களுக்குப் பதில் பிறிதொரு சமயத்தில். இப்போதைக்கு 'வம்புக்கலைபவன்' என்ற தங்கள் பட்டத்தை சிரமேற் கொண்டு திரிந்து மகிழ்வேன். :-)
 
வாய்ஸ்,
இந்த "கட்டாய வேலையின்மை" சட்டத்தின் போர்வையின் வந்திருக்கலாம் என்ற ஒரு விஷயத்தை தள்ளிவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன். என்னிடமும் நிருபிக்க ஏதும் விஷயம் இல்லை. நன்றி.
 
நான் கூறிய கருத்துக்கள் குறித்து நேரடியாக எதுவும் பேசாமல், ஏதேதோ மட்டையடித்து விட்டு என்னை மட்டையடி (குட்டையடி!) என்று திருப்புவது தான் யோக்கியத்தனம் போலும் ;-)

//எதோ எல்லாம் யோசித்து , முடிவுக்கு வந்து இதுதான் நீதி என்ற தோரணையில், "பொருளை முன் வைத்து " ஒரு லாஜிக் எழுதினீர்கள். அதிலும் உருப்படியில்லாமல். ஒரு கராலரி.
//
"இதுதான் நீதி" என்று போதிக்கும் அளவுக்கு நான் ஒன்றும் அறிவாளி கிடையாது. அதே சமயம், உருப்படியாக சிந்திக்கும் திறன் இல்லாதவரிடம் "உருப்படியில்லாத" லாஜிக்கை (மற்றும் கராலரி) தான் முன் வைக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்வது?

//இந்த இட ஒதுக்கீடு விஷயம் , கோடி முறை பெரியாராலும், அம்பேத்காரலும், அன்றைய எதிர்ப்பாளர்காளிடமும் விவாதிக்கப்படாகிவிட்டது. நீங்கள் தான் அதைத் தெரிந்து கொள்ள்வேண்டும்.
//
யாரய்யா இடஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசியது ? அதனால் சரியானவர் பயனடைய ஒரு கருத்தை முன் வைத்து "என் கருத்தில் ஏதாவது தவறு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்." என்று தானே கூறினேன். சரியாக படியுங்கள். நீங்கள் தான் சம்மந்தமில்லாமல், "**நிறுவி**, தெரிந்து கொள்கிறேன், லாயக்கில்லை என்று தெளிகிறேன்." என்று அறிவுஜீவி தோரணையில் மட்டையடிக்கிறீர்கள். நன்றி!
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
என்றென்றும் வம்புடன் பாலா ;-),
இந்த சுட்டி உதவுமா பாருங்கள்.
http://karthikramas.blogspot.com/2004/10/blog-post_109787363380569035.html
இந்த பதிவிலிருந்து சில இணைப்புகளுக்கு செல்லாலாம்.
சிவகாமியின் கருத்து யோசிக்கப்படவேண்டியது.
 
//Finally, even if you are not in agreement, it is a fact that people (among backward and dalit) who have come up owing to the reservation policy continue to reap the benefits denying the many poor and deserving people in those communities.//

இதுவும்

//8% இட ஒதுக்கீடு (+ பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு) தான் நீங்கள் கூறும் "பெனிபிட்".//
இது உங்களுக்கு பெனிபிட் ஆக தெரிகிறதே என்பதுதான் நான் உங்கள் மீது வைக்கும் குற்றசாட்டு.
மட்டையடிப்பது நானா நீங்களா?

அறிவு ஜீவி -தோரணை என்று சொன்னதற்கு ஒரு நன்றி.
 
http://thoughtsintamil.blogspot.com/2004/07/blog-post_29.html#comments
 
என்.டி. மணி அவர்கள் எழுதுகிறார்: "நாராயணன், இவர்கள் ஏன் அரசிடமிருந்து வேலையை எதிர்பார்க்கவேண்டும்? டீ கடை, இட்லிகடை அல்லது ஏதாவது கைத்தொழில் செய்து சுயமரியாதையோடு வாழக்கூடாதா?" இதை மதி கந்தசாமி அவர்கள் வேறு வழிமொழிந்திருக்கிறார்.

புரிகிறது. இப்போது தலித் அதிகாரிகளின் பிரச்சினையைப் பார்ப்போம். ஒவ்வொரு பிரச்சினையையும் அதன் சூழ்நிலைக்கேற்பத்தான் கையாள வேண்டும். இரட்டைத் தம்ளர் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சொன்ன யோசனை அம்முறையைக் கடைபிடிக்கும் கடைகளைப் புறக்கணிப்பதேயாகும். அதற்கு நாமே டீக்கடை வைப்பது ஒரு முதல் படியே. ஏற்கனவே ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்முறை தேவையில்லை. அவர்களுக்கு ஏற்ற முறையை மனப்பூர்வமாகக் கூறுவேன். அதற்கு முன் ஒரு சிறிய ஆனால் நான் சொல்லவிருப்பதை இன்னும் தெளிவாக்கும் சிறு டைவர்ஷன்.

சமீபத்தில் 1973-ல் "விக்டோரியா நம்பர் 203" என்றத் தலைப்பில் இந்திப் படம் ஒன்று வந்தது. அதில் ஒரு சீன். அஷோக் குமார் மற்றும் ப்ரான் கைகால் கட்டிப் போடப்பட்டு படகில் கிடப்பார்கள். பிரான் அஷோக் குமாரின் விஸ்கி பாட்டிலை வாயினால் கௌவி போட்டின் சைடில் மோதி உடைப்பார். பிறகு வாயில் கௌவியபடி வைத்திருக்கும் பாட்டில் துண்டால் அஷோக் குமாரின் கைகட்டுகளை அறுத்து விடுவார். விடுதலையான அஷோக் குமார் இப்போது பிரானைக் காப்பாற்ற அதே மாதிரி பாட்டில் துண்டை வாயில் கௌவிக் கொண்டு பிரானின் கைகட்டை அறுக்க முயற்சிப்பார். பிரான் அவரைத் திட்டுவார். "உன் கைகள்தான் சுதந்திரமாக உள்ளனவே, பிறகு ஏன் வாயில் கௌவிக் கொண்டு அவஸ்தைப்படுகிறாய்" என்று.

இப்போதுதான் கைகள் சுதந்திரமாகி விட்டனவே, டீக்கடை யோசனை இவர்களுக்கில்லை. நான் அவ்வாறு காத்திருப்பில் வைக்கப்பட்ட தலித் அதிகாரி என்று வைத்துக் கொள்வோம். இப்போது பாருங்கள்.

முதலில் காத்திருப்பில் வைத்திருப்பது என்ன என்பதைப் பற்றி நான் புரிந்துக் கொண்டதைக் கூறி விடுகிறேன். தவறு இருந்தால் திருத்தவும். அதாவது போஸ்டிங் கொடுக்க மாட்டார்கள், வீட்டில் அமர்ந்திருக்க வேண்டும். சம்பளம் தாமதமில்லாமல் மாதா மாதம் கொடுப்பார்கள் அல்லவா? அவ்வாறு காத்திருக்கும் காலத்தை லீவாகக் கணக்கெடுத்துக் கொள்ள் மாட்டார்கள்தானே? இந்த அனுமானத்தில் யோசனை கூறுகிறேன். தவறு என்றால் சரியான சட்ட நிலைமையைக் கூறுங்கள். அதற்கேற்ப யோசனையை மாற்றித் தருகிறேன்.

நான் ஏற்கனவே கூறியது போல அவ்வாறு பாதிக்கப்பட்ட தலித் அதிகாரி. முதலில் ஹாய்யாக ஓய்வெடுப்பேன். அதே சமயம் நான் செய்ய வேண்டியவற்றையும் திட்டமிடுவேன். கூட்டங்களுக்குப் போவது வேலை ஒழுங்கு விதிகளுக்கு முரணானதா? சரி பரவாயில்லை. மீட்டிங்கில் நம்மவர்கள் என்னென பேச வேண்டும் என்பதை பின்னணியிலிருந்து வியூகம் அமைத்துக் கூறுவேன். கையில் எழுத்து வேலை இருந்தால் அதைப் பார்ப்பேன். அரசு உத்தியோகத்திலிருந்துக் கொண்டே அதை செய்ய அனுமதி கிடைக்கும்தானே? ஆகவே இது செய்ய முடிந்ததே. வேறு பொழுதுபோக்குகளை மேற்கொள்வேன். இது ரொம்ப முக்கியம். காத்திருக்கச் செய்து என் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் அரசுக்கு அந்த வேலையை எளிதாக்க மாட்டேன். அதற்கு பதில் நான் ரிலேக்ஸ்டாக இருந்து அரசு யந்திரத்தை வெறுப்பேற்றுவேன். இது ஒரு யுத்தம். என் கையில் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் பயன்படுத்துவேன். எவ்வளவு நாட்கள்தான் காத்திருப்பில் வைத்திருக்க முடியும்? ஒரு வருடம்? 12 மாத சம்பளம் பெற்று அரசு எனக்காக வேறு செலவுகள் செய்ய வைப்பேன். உறவினர் கல்யாணங்களுக்கு செல்ல விடுமுறை எடுக்கத் தேவையில்லை. நான் கூறிய யோசனைகள் விளையாட்டுக்கல்ல. மனப்பூர்வமாகவே கூறியது. என்னைத் தேவையில்லாமல் சீண்டி என்னைக் கட்டாயக் காத்திருப்பில் வைப்பவர்களை இவ்வாறு எதிர்க்கொள்வதில் எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை என்பதையும் கூறுவேன்.

டீக்கடை யோசனை சொன்ன போது நானே டீக்கடை நடத்தியதைப் பற்றிக் கூறினேன் அல்லவா? இப்போதும் நான் மேலே சொன்ன யோசனைகளும் ஒரு சமயம் என்னாலேயே கடைபிடிக்கப்பட்டவையே. எப்படி என்று விளக்குகிறேன். திடீரென்று என்னை ஐ.டி.பி.எல். தலைமையகத்திலிருந்து பக்கத்து வளாகத்தில் இருந்த தொழிற்சாலைக்கு மாற்றி விட்டார்கள். அப்போது நான் உதவி மின் பொறியாளர் மற்றும் பிரெஞ்சு மொயிபெயர்ப்பாளராகப் பணி புரிந்து வந்தேன். அதே நேரத்தில் தொழிற்சாலையில் இன்னொரு உதவி மின்பொறியாளர் இருந்தார். என் சீனியாரிட்டி அவருடையதை விட அதிகம். அவர் என் கீழ் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். அதுவும் அது வரை நான் வெறும் மொழிபெயர்ப்பு வேலைகள்தான் பார்த்து வந்தேன். அது வேறு அவருக்கு கடுப்பு. எங்கள் மேலதிகாரியிடம் போய் தன் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கிறார். விளைவு நான் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்த உடனேயே என்னைத் தலைமையகத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகள் முதலியவற்றைப் பார்த்துக் கொள்ளுமாறும் நான் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்றும் கூறி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சம்பளம் மட்டும் தொழிற்சாலை கொடுத்து விடும். மின் பிரிவில் மிக அதிக சீனியாரிட்டி உள்ள நான் ஒரு சாதாரண மேற்பார்வையாளன் செய்யக் கூடிய வேலையைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் என்ன செய்தேன்? பேசாமல் திரும்பி வந்தேன். என்னுடைய பழைய மேஜை நாற்காலிகள் எனக்கு கொடுக்கப்பட்டன. உதவிக்கு ஒரு எலெக்ட்ரீஷியன், ஒரு ஹெல்பர் மட்டுமே. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு நாள் வேலை பத்து நிமிடங்களில் முடிந்து விடும். சந்தோஷமாக மீதி நேரங்களில் என் சைட் பிஸினஸை செய்ய ஆரம்பித்தேன். தில்லி முழுக்க எனக்கு வாடிக்கையாளர்கள். அவர்கள் கொடுக்கும் மொழி பெயர்ப்பு வேலைகளை ஹாய்யாகச் செய்து கொண்டிருந்தேன். நல்ல பிராக்டீஸ், நல்ல அனுபவமும் கூடக் கிடைத்தன. என்னைக் கண்காணிக்க வேண்டியவர்கள் தொழிற்சாலையில், நான் இருப்பதோ தலைமை அலுவலகத்தில். அங்கு இல்லையென்றால் தொழிற்சாலையில் இருப்பதாக இவர்கள் நினைத்துக் கொள்ள ஒரே தமாஷ்தான் போங்கள். இந்தக் கண்ணாமூசி 6 வருடம் நீடித்தது.

ஆகவே தலித் ஐ.ஏ.எஸ். நண்பர்களே, உற்சாகம் பெறுங்கள். சோர்வடையாதீர்கள். நீங்கள் அனுமதித்தால் மட்டுமே மர்றவர்கள் உங்களை டிஸ்டர்ப் செய்ய முடியும். அதுவும் அரசில் முதல் வகுப்பு அதிகாரிகள் நீங்கள். அதன் நெளிவுசுளிவுகளை அறிந்தவர்கள். ஆல் தி பெஸ்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


情色文學,色情小說,情色小說,色情,寄情築園小遊戲,情色電影,aio,av女優,AV,免費A片,日本a片,美女視訊,辣妹視訊,聊天室,美女交友,成人光碟

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]