Apr 26, 2005

நான் ஒரு காட்டுமிராண்டி

3 மாதங்களாக தேடியலைந்த டிவிடி கடைசியில் கண்டேன் சீதையை கணக்காய், சின் சிட்டி கிடைக்குமா என்கிற ஆவலில், தேடிய போது சினிமா பேரடைசவோவில் கிடைத்தது. அல்வாசிட்டி விஜய் சென்னை வந்து என்னோடு தொலைபேசியில் பேசிய நீண்ண்ண்ண்ண்ட சம்பாஷனையில் நான் குறிப்பிட்டு சொன்ன படமிது.

வருடம் 1955. ஒரு மனிதன் அமெசான் நதியோடும் கரையிலுள்ள பெருவினுள்ளே (தென்னமரிக்கா அல்லது இன்றைய லத்தின் அமெரிக்கா) மனிதர்களை தின்னும் ஒரு காட்டுமிராண்டி ஆதிவாசிகளிடம் போய்ச் சேர்ந்தான். அஸ்மத் என்கிற மனிதர்களை தின்னும் பழங்குடிகளிடம் மாட்டிய எவரும் உயிரோடு திரும்பியதில்லை. அவனிடத்தில் ஒன்றுமில்லை. வரைப்படமில்லை. துணைக்கு ஆளில்லை. அவனுக்கு சொல்லப்பட்ட ஒரே விஷயம், "நதியை எப்போதும் உன் வலது பக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்". உள்ளே போனவன் திரும்பி வரவில்லை. இறந்துப்போய்விட்டதாக முடிவு கட்டிவிட்டார்கள்.

ஒரு வருடம் கழித்து அங்கிருந்து நிர்வாணமாக ஒரு மனிதன், உடலெங்கும் சாயங்களுடன் வெளிப்பட்டான். அவன் டோபியாஸ் ஷீன்பீம். அவனை அஸ்மத் இனவாசிகள் தத்தெடுத்துக் கொண்டார்கள். ஒரு வெள்ளையன் நரபலி கொடுக்கும் இனத்திலிருந்து வாழ்ந்து வெளிவருவது ஆச்சர்யமென்றால், டோபியாஸ், அஸ்மத் இனக்குடியில் தத்தெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, பின் வருடங்கள் கழித்து மீண்டும் நியுயார்க் வந்தடைந்தார். அன்றிலிருந்து 1975 வரை தொடர்ச்சியாக அஸ்மத் மக்களிடேயே சென்று வாழ்ந்து, அவர்களின் மொழியினை கற்று உண்டு, உறங்கி, அவர்களின் கலைப்படைப்புகளை நியுயார்க்கிற்கு கொண்டு வந்து அவர்களுக்கான ஒரு மையத்தினை உருவாக்கி, அவர்களின் வாழ்வியல் முன்னேற பாடுபட்டவர்.

45 வருடங்கள் கழித்து மீண்டும் டோபியாஸ் தான் வாழ்ந்த அஸ்மத் இனக்குடி இடங்களை பார்வையிட செல்கிறார். அது தான் Keep the river on your right என்கிற இந்த ஆவணப்படத்தின் கதை. 93 நிமிடங்களே ஒடக்கூடிய இந்த படம் தரும் அனுபவங்கள் பரவசமானவை. இரண்டொரு நாட்களுக்கு முன் பாலாஜி-பாரி எழுதிய இன்ன்யூட்களுக்கு சற்றும் சளைக்காத பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டவர்கள் அஸ்மத் தொல்குழுவினர். உலகின் நாகரிகங்கள் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம், ஏனோ இன்கா நாகரிகத்திற்கு சரியான அளவில் இடமளிப்பதில்லை. கிரேக்க, ரோம, எகிப்திய, சிந்து சமவெளி நாகரிகங்களுக்கு இணையான நாகரிகமாக இருந்தது தான் மட்சூ-பிட்சூ மலைகளை சூழ்ந்திருக்கும் இன்கா தொல்குடியினரின் நாகரிகம். அஸ்மத் இனத்தவர்கள் இன்கா காலக்கட்டத்திலிருந்து (கிமு 1200 -1575) வாழ்ந்தவர்கள். பெருவிலுள்ள மட்சூ-பிட்சூ தான் (இப்போது பெருவிலுள்ளது) இன்காக்களின் நகராக விளங்கியது. அத்தகைய பழமை வாய்ந்த ஒரு தொல்குடியினரின் கலாச்சாரம் இப்படத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.

டோபியாஸ் என்ற மனிதன் செய்திருக்கும் வேலை சாதாரணமானதல்ல. உலகே அஞ்சிய நரமாமிச பட்சிணிகளான அஸ்மத் இனக்குடியில் நுழைந்து, அவர்களோடே வாழ்ந்து, அவர்களின் கலாச்சாரத்தினைக் கற்று, உறவு கொண்டு, அவர்களின் கலைகளை வெளியுலகிற்கு கொண்டுவந்தவர் சாதாரணமானவராக இருக்க இயலாது. அஸ்மத் கலாச்சாரத்தில் கட்டாயமாக அனைவருமே ஃபை செக்ஸ்வல்தான். எல்லா ஆண்களும், அவர்களுக்கு துணையான ஒரு அல்லது பல ஆண்களோடு உறவு வைத்திருப்பார்கள். அத்தோடு பெண்களோடும் அவர்கள் உறவு கொள்வார்கள். ஆடைகள் ஏதும் கிடையாது. கொலை நடந்ததில்லை. உணவுப் பொருட்கள், ஒரு தலைவரின் மூலம் சரியாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. டோபியாஸின் காதலன் அர்கெட். படத்தில்வரும் இந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். 50 வருடங்கள் கழித்து படக்குழுவினர் அர்கெட்டினை தேடி கண்டுபிடித்து அவர்களிருவரையும் ஒரு படகில் ஒன்றாக செல்ல செய்து படம் பிடித்திருக்கிறார்கள். அவர்களின் சம்பாஷனைகளின் முடிவில், அர்கெட்டின் ஊர் வருகிறது. அவர் படகிலிருந்து இறங்கி, டோபியாஸினை முத்தமிட்டு பின் விடைபெறுகிறார். இருவரின் கண்களும் கலங்குகின்றன. கேமரா, டோபியாஸின் முகத்தையும், அர்கெட்டின் முகத்தையும் காண்பிக்கிறது. ஒரு வெள்ளையன், ஒரு கருப்பன். மார்ட்டின் லூதர் கிங்கின் ஞாபகம் தான் வந்தது. இருவரின் கண்களும் கலங்கியிருக்கின்றன. வாழ்வில் அன்பு, பாசம், காதல் எனப்படுவதின் அர்த்தங்கள் கணநேரத்தில் தெரிகிறது. மாறாத அன்பும், காதலும் சாஸ்வதமானவை.

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி, படக்குழுவினர், டோபியாஸ் சொல்லிய திசையில் சென்றால், அவர் முந்தி சென்ற இடத்தின் பாதியில் அமெசான் பெருக்கெடுத்து ஒடுகிறது. அங்கிருக்கும் இனக்குடிகளிடம் பழைய போட்டோக்களை காண்பித்து அடையாளம் கேட்கிறார்கள். அவர்களில் முதியவர்கள் டோபியாஸினை அடையாளம் கண்டுக் கொள்கிறார்கள். ஒரு பள்ளி, கல்லூரி ரீ-யூனியனை போல அவர்கள் பேசுகிறார்கள். குதூகலிக்கிறார்கள். ஆனந்தம் அடைகிறார்கள். அவர்களோடு நடக்கும் உரையாடலில் அவர்கள்
"அஸ்மத்க்கள் மாறி விட்டார்கள். மனிதர்களை கொல்லுவதில்லை இப்போது. ஆனாலும், உலகம் அவர்களை இன்னமும் அகிரெய்கெர் என்று தான் பார்க்கிறது. அகிரெய்கெர் என்றால் கிரிமினல், கொலைக்காரன், திருடன் என்று பொருள். ஆனால், தங்களை "ஹம்பெர்கெட்"கள் என்று இடத்தினாலான பெயரிட்டு அழைப்பதேயே தாங்கள் விரும்புவதாக"
சொல்லுகிறார்கள்.

பின் கொஞ்ச கொஞ்சமாய் காடுகளை வெட்டி, டோபியாஸ் முதன்முதலில் சென்ற இடத்திற்கு செல்கிறார்கள். இன்றைக்கு 78 வயதாகும் அந்த முதியவர், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் பிண்ணணியில் அஸ்மத்களின் வாத்தியங்களின் இசை சங்கமங்கள் தெறிகின்றன. படமுழுக்க அவர் வெவ்வேறு இடங்களில் வகுப்பெடுக்கும் போது பாடிக் காட்டும், அஸ்மத் இனக்குடிகளின் பாடல் ஒலிக்கிறது. படம் நிறைவு பெறுகிறது.

அப்பாடலின் தமிழாக்கம்

நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.
நதியில் நாம் மலம் கழிக்கிறோம்.
நதியில் நாம் மூத்திரமடிக்கிறோம்.
மீன்கள் மலத்தை உண்கின்றன
மீன்கள் மூத்திரத்தினை உண்கின்றன.
நாம் மீன்களை உண்கிறோம்.
இது ஒரு சுழற்சி
(நதியில் மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன.....)

“I am a cannibal... No matter into what far corner of my mind I push those words, they flash along the surface of my brain like news along the track that runs around the building at Times Square.”



Keep the River on your Right - A Modern Cannibal Tale ---
IMDB | Docurama | Book

விருதுகள்:
Best Documentary Feature; Hamptons International Film Festival, 2000
Special Jury Award; Amsterdam International Documentary Film Festival, 2000
Audience Award, Special Critics Award; Los Angeles Independent Film Festival, 2000
Truer Than Fiction Award; IFP Independent Spirit Awards, 2001
Best Documentary, Newport Beach Film Festival

Comments:
என்ன கொடுமையிது சரவணன் !!(சந்திரமுகி பிரபு டயலாக் டெலிவரியை நினைத்துக் கொள்க)

நரேன், இன்ன இது ஒரே செயின் ரியாக்ஷன் பதிவா வருது. பாலாஜி-பாரி இனூயிட் பத்தி நல்ல கருத்தை சொன்னாரு போங்க. நானும் இனூயிட் பத்தின ஒரு டாக்குமெண்ட்ரி படம் பத்தி எழுதி போஸ்ட் பண்ணிட்டு வந்த, நீங்க வேற அன்னிக்கு பேச்சிக்கிட்டுருந்த இந்த படத்தை பத்தி போட்டிருக்கீங்க. எப்படி இது இந்த செயின் ரியாக்ஷன் ட்ரிகர் ஆச்சி?

//அல்வாசிட்டி விஜய் சென்னை வந்து என்னோடு தொலைபேசியில் பேசிய நீண்ண்ண்ண்ண்ட சம்பாஷனையில் நான் குறிப்பிட்டு சொன்ன படமிது.//

ஒரு சரியான சந்தர்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன் பழிவாங்க :-)))
 
Narain
thanks for the info,
I will check this movie, must be available in blockbuster.
I would also recommend you a movie called 'The Medicine Man'
starring Sean Connery
its about deforestation in amazon forest and loosing precious nature and its people.
By end we will understand who is barbaric, the civilized man in the name of his western culture seeks to possess everything at any cost, whereas the native tribe that leads a symbiotic life, treats and respect mother nature comes out as more humane and civilized

K K Nagar Kirukkan
 
Nalla karuthu. I have never heard of this movie / documentary before. Thanks for sharing.
 
நாராயணன், விஜய்:
ஆஹா!! கிளம்பிட்டாங்கையா...கிளம்பிட்டாங்கையா....இந்த மாதிரி ஒரு செய்தி நமக்கு எவ்ளோ சந்தோசத்த தருது. இல்ல?.

அப்புறம் மறக்காம இன்னொன்னும் சொல்லனும். இந்த வரிசைல சுவாரசியமானது நம்ம தோடர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலத்தவர்களின் வாழ்க்கை முறை. இந்த கதைகள ஒரு தொடராக யாராவது எழுத வந்தா சூப்பரா இருக்கும்.

அருணா அவர்கள் சொன்ன மாதிரி, இந்த சங்கதிகள் மூலம் ரிவர்ஸ் கியர்ல போய் இயல்பான விசயங்கள பார்க்கப் பழகுவோம்.

நன்றிகள் நண்பர்களே!!
 
எனது பட லிஸ்டின் இன்னுமொன்று. அது சரி நாராயணன் எனக்கும் இந்தப் படம் பிடிக்கும் நோய் ஒன்று இருக்கின்றது. இந்தியா வந்து ஒரு மாதம் அளவில் தங்கி ஒரு சிறிய விவரணப்படம் எடுக்கும் எண்ணம் இருக்கின்றது. (ஈழத்தில் போய் எடுக்க விருப்பம் அதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது ஆனால் அங்கே கட்டுப்பாடுகள் அதிகம்) நான் சுதந்திரமானவே எதையும் செய்ய விரும்புகின்றேன். சாத்தியப்படுமா? ஏதாவது தகவல் தந்தால் உதவியாக இருக்கும்.
 
நல்ல பதிவு. நான் செவ்விந்தியர்கள், அமேசான் ஓரம் வாழும் குடிகள் இவர்களைப்பற்றியெல்லாம் அறிந்துகொள்ள மிக்க ஆவல் உள்ளவன். இன்னும் உங்கள் லிஸ்ட்டில் படங்கள் இருந்தால் சொல்லுங்கப்பா!

நன்றிகள்
 
Inca [videorecording] : secrets of the ancestors / Time-Life Video and Television presents ; produced, directed & written by Tom Simon.

இப்படி ஒரு படம் இருக்கு இங்க நூலகத்துல. பார்க்கணும்.
 
நல்லதொரு பதிவு நரேன். படவிபரத்திற்கு நன்றி. எங்கையாவது தேடி எடுத்துப் பார்க்கவேண்டும்.
ஏற்கனவே விஜயின் பதிவில் இட்டதை இங்கேயும் இடுகின்றேன்....
பாரி, நரேன், நீங்கள் என்று ஆதிக்குடிகள் பற்றி தொடர்ச்சியாக எழுதுகையில் அதிக விசயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.
....
நரேன், இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போதுதான், வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது. ஒரு பதிவை புத்தகம் ஆக்கும் திட்டம் குறித்து எழுதுங்களேன் நரேன்.
 
அண்ணாச்சி... என்னடா இது வலைப்பதிவு உலகத்தில் உண்மையை ஒத்துக்கொள்ளும் ஒருவர் இருக்கிறாரே அன ஆச்சரியப்பட்டு திறந்தால் அடடா.. அருமையான பதிவு. (ஹிஹிஹி கோச்சுக்காதீங்கண்ணா)
 
விஜய், கிறுக்கன், .நெட், பாலாஜி, கறுப்பி, தங்கமணி, டிசே, மூர்த்தி மற்றும் படித்து சும்மா போனவர்களுக்கும் நன்றி.

கறுப்பி தனியாக மடலெழுதுங்கள். பேசலாம்.

தங்கமணி, டிஸ்கவ்ரியா அல்லது என்.ஜி.சியா என்று தெரியவில்லை. பூர்விகக்குடிகள் என்று தலைப்பிட்ட 8 மணி நேரம் ஒடக்கூடிய ஒரு டிவிடியை எங்கோ பார்த்ததாக ஞாபகம். சரியாக நினைவில்லை. அதன் பின்னட்டையில், எல்லாவிதமான தொல்குடிகளையும் தொட்டிருப்பார்கள். லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க, ஆஸ்திரேலிய, மங்கோலிய, இந்திய, செவ்விந்திய பழங்குடிகள் குறித்த நீண்ட ஆவணப்படமது.அங்கே கிடைக்கிறதா என்று தேடிப்பாருங்கள்.

சிக்கல் என்னவென்றால், இவ்வாறாக தொல்குடிகளிடம் செல்பவர்கள் எல்லோருமே அல்லது 90% கிறிஸ்துவ மதத்தினை பரப்புவதற்காக செல்பவர்கள். நான் எழு
திய படத்திலும் கூட ஒரு பாதிரியாரைப் பற்றிய குறீப்பு வருகிறது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]