May 1, 2005

மனித இனத்தின் வரலாறு

முதலில் தெஹல்காவிலும், பின்னர் என்.டி.டிவியிலும் பார்த்து, இணையத்தளத்தில் ஆராய்ந்த பின்னரே இதனை எழுதுகிறேன். போன புதன்கிழமை, என்.ஜி.சி ஒரு முக்கியமான உலகளாவிய திட்டத்தினை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்வைத்திருக்கிறது.

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல் ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இந்த ப்ரொஜக்டிற்கு ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் (GP) [Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். என்னுடைய அறிவியல் அறிவு குறைவாக இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி விரிவாக விளக்கமாக எழுத இயலாது என்று நினைக்கிறேன். இந்த தளத்தினைப் பார்த்து பத்மா அரவிந்த், தங்கமணி இன்னபிற வலைப்பதியும் ஆராய்ச்சியாளர்கள் விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.

நான் படித்து புரிந்தவரையில், இந்த திட்டத்தினைப் பற்றி எளிமையாக சொல்ல முயற்சிக்கிறேன். மனித உடல் ஜீன்களின் கட்டமைப்பாலானது. ஆதி மனிதனின் ஜீனிலும், உங்கள் பக்கத்து பெஞ்சுக்காரரின் ஜீனிலும் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் இருக்க வாய்ப்புண்டு. மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும், எவ்வளவு வெயிலில் கிரிக்கெட் ஆடினாலும் தலைவலியே இல்லாமல் சிலபேர் இருப்பதும் ஜீன்களை சார்ந்ததே. இதற்கு மேல், ஜீன்கள், ஜீன்களின் கட்டமைப்பு, மனித உடலில் ஜீன்களின் பங்கு போன்றவற்றை ஆழமாக அறிய விரும்பினால், HGP என்றழைக்கப்படும் மனித ஜீன்களை கண்டறியும் ப்ரொஜெக்ட் (humane genome project) தளத்தில் பாருங்கள்.

உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்ததிட்டம். GP இணையத்தளத்தில் ஒரு அருமையான, அவசியமான, ஜீன் உலக வழித்தடத்தினை வைத்துள்ளார்கள். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் சில செய்திகள். இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம். என்.ஜி.சியின் மொழியில் M என்பதற்கான அடையாளப் பொருள்
M is a macro-haplogroup that arose from the African lineage defined by L3. Haplogroups M and N trace the first human migrations out of Africa. M's various sub groups are found in Eastern Eurasia , East Asia (M7,M8) America (C,D) and the Indian subcontinent -though not in europe.
ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின் வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20. M52 என்பது "இந்தியன் மார்க்கர்" என்றே அழைக்கப்படுகிறது. இது 20,000 -30,000 ஆண்டுகளுக்கு முன்பாக மத்திய ஆசியாவிலிருந்து, ஈரான், கிழக்கு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஒருமுறை பாலாஜி-பாரியோடு பேசிக் கொண்டிருக்கும்போது, ஜராவாஸ் என்கிற அந்தமானில் வசிக்கும் பழங்குடிகள், தொல் ஆப்ரிக்கக் குடிகளாக இருப்பார்கள் என்கிற சந்தேகத்தினை முன்வைத்திருந்தேன். அது இப்போது உறுதியாகிவிட்டது.

ஆக வரலாறு, மொழி ஒற்றுமை, பழங்குடிப் பாடல்கள், உருவ அமைப்புகள் இவற்றினைத் தாண்டி எல்லா இனத்தையும், அதன் ஆதி மூலங்களோடு பட்டியலிடும் காலம் வந்துவிட்டது. இனி நாங்கள் வந்தேறிகள் இல்லை என யாரும் ஜல்லியடிக்கமுடியாது. இதைத் தாண்டி, உலகளாவிய இனங்களின் ஆதி,அந்தங்கள் புலனாகும். எனவே, கொலம்பஸ் அமெரிக்க பழங்குடிகளை நசுக்கிக் அழித்தொழித்ததையும், பிரிட்டிஷ், ஸ்பானிய மாலுமிகள், ஆஸ்திரேலிய இனக்குடிகளை ஒரம் கட்டியதையும், கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து தமிழகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் இனத்தவர்கள் வரை எவரும் தப்பமுடியாது. இனிமேல் கண்ணாமூச்சி ஆடமுடியாது. ஆட்டம் ஒவர் என்று நினைக்கிறேன். அவரவர்கள் அவரவர்களின் சுயங்களையும், மூலங்களையும் ஒத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.

ஆதாம் கண்டிப்பாக கறுப்பினத்தவனாக தான் இருந்திருக்கவேண்டும், நீங்கள் ஆதாம்-ஏவாள் தியரியை நம்புவதாக இருந்தால். நாம் எல்லோரும் ஒரு வயிற்றிலிருந்து வந்தவர்கள் என்பதற்கான மிக முக்கியமான ஆய்விது. ஆனாலும், வாடிகன் ஒரு ஆப்ரிக்க இயேசுவினை ஒத்துக் கொள்ளுமா என்பது கேள்வி.

இது வெறும் ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் ஆய்வல்ல. இதில் நீங்களும், நானும் கூட பங்கு பெறலாம். உலகெமெங்கும் நிறைய நபர்களின் ஜீன்கள் இந்த ஜீன் வரைப்படத்தினை சரி பார்க்க உதவும். பங்கேற்பார்கள் கிட் ஒன்று தருகிறார்கள். அதன் மூலம் உங்களின் ஜீன்களை நீங்களை மாதிரிகள் எடுத்து, இந்த GP இணையத்தளத்தில் கொடுத்துவிடலாம். ஒரு ரகசிய GP எண்ணினைக் கொண்டு உங்களது ஜீனின் முடிவுகளை, பாதுகாப்பான இணையத்தளத்தில் பார்வையிட இயலும். உங்களின் மூதாதையர்களின் பாரம்பரியம், அவர்களின் ஜீன்களின் பயணம், எங்கிருந்து வந்தார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பது போன்ற கழுகுப்பார்வை தகவல்கள் கிடைக்கும். மனித இனத்தின் கதை உங்களுக்கு மொத்தமாய் $99.95 களில் தெரியவரும். இந்த பணம் இதைப் போன்ற பல்வேறு மனித இனத்தேடல்களுக்கு செலவிடப்படும்.

இந்தியாவில் மொத்தமாக கிடைக்க வழி செய்யுமானால், எல்லா பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் இதனை பல்வேறு இனத்தவரிடையே எடுத்து செல்லமுடியும். இதற்கான செலவும் குறையும். இதை இந்தியாவிலிருந்து படிக்கும் பல்கலைக்கழக, IIT, IISc போன்ற பெரு கல்விநிறுவனங்களில் உள்ளவர்கள் இதை முன்னெடுத்து செல்லலாம். ஆனாலும், இந்தியாவில் ஒரு சோதனைக்கு 4,500 ரூபாய்கள் கொடுத்து பரிசோதிப்பவர்கள் எவ்வளவு பேர் என்பது கேள்விக்குறி. இருந்தாலும், மனித இனத்தின் மிக முக்கியமான ஆய்வு இது. அமெரிக்கா, கனடாவில் இருப்பவர்கள் கொஞ்சம் காசு பார்க்காமல் இதை வாங்குங்கள். உங்களின் ஜீன்களின் மூலம் இந்திய/ஈழத் தமிழர்களின் பின்புலம் புலப்படும்.
There was a massive genetic influx into India from the steppes within the past 10,000 years. Taken with the archaeological data, we can say that the old hypothesis of an invasion of people - not merely their language - from the steppes appears to be true - Spencer Wall, Team leader of Genographic Project
பார்க்கவேண்டிய சுட்டிகள்

ஜெனோகிராபிக் ப்ரொஜெக்ட்
ஜீன் வழித்தடங்கள்
பங்கேற்பாளர் கிட் வாங்குதல்

இதன் தொடர்ச்சியாக, கொஞ்ச நாள் கழித்து, சுந்தரவடிவேல் எழுதியிருந்ததை இங்கே படிக்கலாம்

Comments:
நாராயணன்,
போனமுறை விஜயின் தளத்திலே இன்னூய் பற்றி எழுதியபோது, குறிப்பிட விரும்பினேன். நீங்கள் மேலே குறித்திருக்கும் திட்டத்திலே பங்குபெரும் Dr. Spencer Wells விவரித்துச் செல்லும் Journey of Man கிடைத்தால், பாருங்கள். இதிலே. தமிழ்நாட்டிலே ஒருவரின் DNA உம் பரிசோதிக்கப்பட்டு, ஆபிரிக்க அடியோடு தொடர்புபடுத்தப்படுகின்றது. அதேபோல, செவ்விந்தியர்களும் கஸாகஸ்தானியர் ஒருவரும் சைபீரியாவின் அடியிலே இருக்கின்ற ஒருவரும். இந்நிகழ்ச்சி, என்னைப்போன்ற இத்துறைசாராச் சாதாரணர்களுக்கு நல்லதொரு முன்வைப்பு.
 
மிக நல்ல தகவல். அனைவரும் அறியவேண்டியதும்
 
ada, appo vairamuthu sonnathu correct-aa? (boomiyile muthal muthal porantha manushan karupputhan)
 
கிட்டில் பல குறைகள் இருப்பதாக முன்னர் செய்திகள் வந்தது. சரி்யாகி விட்டதா என்று தெரியவில்லை. நான் இதன் நிறை/குறைகளை எழுத ஆரம்பித்து ஆராய்சி குறிப்புகள் அப்படியே உள்ளன. இப்போதுசமூகத்தின் தேவையை கண்டறிய ஒரு சந்தை ஆராய்ச்சி செய்ய திட்டமிடுதல், சர்வே் முன்னோட்டம் விடு்தல் என்று நான் மேற்பார்வையிடும் பணிகள் அதிகமாகி விட்டபடியால் முழுமுனைப்புடன் எழுதி முடிக்கவில்லை.
நல்ல பதிவு. பயன்படுத்தும்முன், இதன் தகுதியை அறிதல் முக்கியமாகும்.
 
there were controversies over human genome diversity project.indigenous people were critical of that.in social sciences the concept of race, aryan invasion theory etc have
undergone changes.genetics alone
cannot explain history.it is all the more difficult when it comes to mass migrations that were supposed to have occured few thousands of years ago.tracing ancestors and genealogy is necessary but one has to be aware of the limitations of what science
can do.i am skeptical of using genetics to use complex historical and social phenomena.so i dont share your enthuasism for this project or its objectives.
 
i am skeptical of using genetics to use complex historical and social phenomena- it should be

i am skeptical of using genetics to explain away complex historical and social phenomena in terms of genes and mutations.
 
உங்களின் மூதாதையர்களின் பாரம்பரியம், அவர்களின் ஜீன்களின் பயணம், எங்கிருந்து வந்தார்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பது போன்ற கழுகுப்பார்வை தகவல்கள் கிடைக்கும். மனித இனத்தின் கதை உங்களுக்கு மொத்தமாய் $99.95 களில் தெரியவரும்

this is utter nonsense.
 
இனி நாங்கள் வந்தேறிகள் இல்லை என யாரும் ஜல்லியடிக்கமுடியாது. இதைத் தாண்டி, உலகளாவிய இனங்களின் ஆதி,அந்தங்கள் புலனாகும். எனவே, கொலம்பஸ் அமெரிக்க பழங்குடிகளை நசுக்கிக் அழித்தொழித்ததையும், பிரிட்டிஷ், ஸ்பானிய மாலுமிகள், ஆஸ்திரேலிய இனக்குடிகளை ஒரம் கட்டியதையும், கைபர்-போலன் கணவாய் வழியாக வந்து தமிழகத்தினை ஆட்டிக் கொண்டிருக்கும் இனத்தவர்கள் வரை எவரும் தப்பமுடியாது. இனிமேல் கண்ணாமூச்சி ஆடமுடியாது. ஆட்டம் ஒவர் என்று நினைக்கிறேன். அவரவர்கள் அவரவர்களின் சுயங்களையும், மூலங்களையும் ஒத்துக் கொண்டாகவேண்டிய கட்டாயம் வந்துவிடும்.

i understand the politics behind this. you are back to racist theories and notions of inferior and superior races.you want to claim that this race is the original people in this area.social sciences have moved beyond such notions many years ago.
it is a pity that you are propagating old myths and biases in terms of new theories and 'scientific evidence'.
 
see this
http://www.ipcb.org
as i am too busy i will not post any further comments.
 
பெயரிலி, குமிலி, சுரேஷ், பத்மா, ரவி சீனிவாஸ் நன்றிகள்.

ரவி, உங்களின் பார்வை புரிகிறது. ஆனாலும், இன்னமும் வந்தேறிகள் எல்லாம் மாறிவிட்டனர்,அந்த தியரியே பொய் என்று சொன்னீர்களேயானால் அதை ஒத்துக் கொள்ள இயலாது.

எல்லா துறைகளையும் போலவே இதிலும், பிரச்சனைகள் இருக்கலாம். நான் ஜெனடிக்ஸ் நிபுணனில்லை. இது என் துறையுமில்லை. அதனால் தான் இதைப்பற்றி விரிவாக எழுத தங்கமணி, பத்மா அரவிந்த் போன்றவர்களை அழைத்திருந்தேன். இது ஒரு அறிவியல் செய்தி. அதில் இந்தியா எங்கெங்கு குறிக்கப்படுகிறது, இனங்கள் எப்படி பகுக்கப்படுகிறது என்பது பற்றிய பார்வையினை முன்வைத்தேன். அவ்வளவே. வரலாறு, மொழியியல் என பல்வேறு கூறுகளில் சமூகத்தினை பார்த்ததுப் போக, ஜீன்களின் வழியேவும் பார்க்க இயலும். அவ்வளவுதான். அதைவிடுத்து, ஜீன்களால் மட்டுமே என்று எங்கும் நான் சொல்லவில்லை.
 
Narain
One of the main drawback of this HGP is that it can pave ways for racial descrimination. It can also help insuarance and othercorporations to descrimiate agaist providing services. A race can be rooted out by super powers. but we all need to hope that such things will not be allowed by human rights, UN etc. I am writing in details here, but please understand that any inventions can either be used for constructive or destructive pruposes. I also know how HLA allels were identified and used against Dalits and secluding people. But this blog was only talking about it as a mean to understand roots, not analyzing the merits and demerits of HGP, atleast what I understood from this.
I apologise for my English comment as I dont have Tamil fonts in this PC.
 
I am sorry. It should read as "I am not writing in details here"
 
அமெரிக்காவில் சில கறுப்பர்களைப் பார்த்து எத்தனையோ முறை இந்தாளு நம்ம ஊரு இன்னாரு மாதிரியே இருக்காரேன்னு நெனச்சிருக்கேன். என் வடக்கிந்திய நண்பர்கள் பலரையும் நீ ஐரோப்பியனா என்று மற்றவர்கள் கேட்பதையும் கண்டிருக்கிறேன். பரதக்கண்டத்தை உருவாக்கிய தேவர்கள் வண்ண வண்ணமாக மனிதர்களைப் படைத்து உள்ளே போட்டு உலுக்கியதாலா இந்த வேறுபாடுகள்?
ஒரு குடியின் சமூக வழக்கங்களை (உதாரணமாகத் தாய்வழி மரபு) வைத்து எந்த அளவுக்குத் தமிழர்களை ஆப்பிரிக்க/ஏனைய பழங்குடியினருடன் ஒப்பிட முடியுமோ அந்த அளவுக்கு மரபியல் குறியீடுகளாலும் மனிதர்களின் இடம் பெயர்தலைக் கணக்கிட இயலும். இது குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த மரபியல் சோதனைகள் அல்லது அடிப்படைப் புள்ளி விபரங்கள் இனங்களை/பெயர்வுகளை அடையாளம் காண்பதற்கு மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட வியாதி பீடிக்கும் சாத்தியக் கூறுகளை அறியவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் எனப் பலவிதங்களில் பயன்படுத்தப் படுகின்றன. அந்தக் குழுவின் மரபியல் புள்ளி விபரம் கிடைக்காமல் சரியாய் அனுமானிக்கப் பட முடியாத மரபு வியாதிகள் எவ்வளவையோ பார்க்கிறோம். இது ஒவ்வொரு இனக்குழுவுக்கும் அவசியமான ஒரு புள்ளி விபரம். நம் சமூகத்தில் காணப்படும் சாதிகளுக்குள்ளான திருமணங்களால் இத்தகைய மரபுக்கூறுகளில் சாதிகளுக்கிடையேயான வித்தியாசங்களைக் கூடத் துல்லியமாக அளவிட முடிந்திருக்கிறது. இது ஒரு அறிவியல் முறை. மேலும் மேலும் தெளிவான உபகரணங்களோடு நடக்கும் ஒரு புரிதலுக்கான முயற்சி. இது வரவேற்கப் பட வேண்டியது. இந்த ஆராய்ச்சிக்கு யார் முட்டுக்கட்டை போடுவார்கள்? தம் முகத்திரை கிழிக்கப் படுவதை விரும்பாதவர்கள். இதனால் பாரிய சேதங்கள் ஏற்படலாம் என யார் அஞ்சுவர்? பாரிய சேதங்களை ஏற்படுத்தியவர்களும், பலவிதமான கலாச்சார அழித்தொழிப்புகளை நடத்தியவர்களும், நடத்துபவர்களும்தான். ஆனால் நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவரும் கலப்புகளால் யாரை யார் என்று காண்பீர்கள்? கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்டதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? அதனால் யாரும் யாரையும் விரட்டியடித்து விட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். அப்போதைக்கும் இப்போதைக்கும் செய்ய வேண்டியது என்னவென்றால் வரலாற்று உண்மைகளை ஆராய்வதும், ஆராய ஊக்குவிப்பதும், வெளியிடுவதும், உண்மைகளைத் திறந்த மனதுடன் ஒத்துக் கொள்வதுமேயாகும்.
 
சுந்தர வடிவேல், நான் சொல்வதும் இதுதான். யாரும் யாரையும் விரட்டியடிக்கப்போவதில்லை. அதே சமயத்தில், யார் யார் இன்னார் இன்னார் என்று அறிந்துக் கொள்ளும் முயற்சியே இது. பத்மா அரவிந்தின கவலைகளில் தொனிக்கும் நியாயத்தினை உணர்ந்திருக்கிறேன். ஆனால், முதலில் நீங்கள் சொன்னதுபோல, மரபுவழி சாத்தியங்களையும், சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அதன் வழித்தடங்களை ஆராய்வதன் மூலம், நிச்சயிக்கப்பட்ட மருத்துவமுறைகளை கண்டறியமுடியும். உதாரணமாக, நாமும், ஆப்ரிக்கர்களும் ஒருவரே எனும் பட்சத்தில் நமக்கு வரக்கூடிய இனம்புரியாத நோய்களுக்கான சிகிச்சைமுறைகளையும், மருந்து மாத்திரை இன்னபிறவைகளையும், ஆப்ரிகர்களுக்கும் கொடுத்து காபாற்ற முடியும். இப்போதைய நிலையில் அது சாத்தியமில்லாதது போலதான் தெரிகிறது

//அப்போதைக்கும் இப்போதைக்கும் செய்ய வேண்டியது என்னவென்றால் வரலாற்று உண்மைகளை ஆராய்வதும், ஆராய ஊக்குவிப்பதும், வெளியிடுவதும், உண்மைகளைத் திறந்த மனதுடன் ஒத்துக் கொள்வதுமேயாகும்.//

மிகச்சரியான கூற்று.

இது தாண்டி, காலையிலிருந்து இந்த பதிவு எழுதி முடிந்தும் ரொம்ப நேரம் ஜீன்களுக்கு தமிழில் என்ன என்பது மறந்துப்போய் மண்டையை பிய்த்துக் கொண்டிருந்தேன். "மரபணு" என்கிற வார்த்தை உங்களின் பதிவினைப் பார்த்து தான் ஞாபகம் வந்தது. இம்மாதிரி, வார்த்தைகள் சடாலென மறந்து போய், இடங்கள், படங்கள், உறவுகள் மறந்து போவதற்கு என்ன பெயரிட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு நடக்கிறது. நேற்று பிரெசிலினைப் பற்றி பதிவு எழுதிவிட்டு, ரொம்ப நேரமாய் ஒரு படத்தினைப் பற்றி யோசித்து பின் என் டிவிடி கடையில், கதை சொல்லி "சிட்டி ஆப் காட்" பேரினை மீட்சி செய்தேன். என்ன சொல்வது, என் மூதாதையனுக்கு இருந்த வியாதியோ என்னவோ ;)
 
தமிழில் மொழிபெயர்க்க நேரம் இல்லாத படியால் இந்த செய்தியை அப்படியே ஆங்கிலத்தில் தருவதற்கு மன்னிக்கவும்.

A 2001 examination of male Y-DNA by Indian and American scientists indicated that higher castes are genetically closer to West Eurasians than are individuals from lower castes, whose genetic profiles are similar to other Asians. These results indicates that at some point male West Eurasians provided a significant genetic input into the higher castes, a result which supports the notion that the caste system was an attempt by these predominantly male arrivals to keep themselves separate from the native population. [4] (http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf)

The genetic studies by Michael J Bamshad and his team (2001) from University of Utah and Dr. Spencer Wells (2003) from Harvard University, give strong backing to the Aryan invasion theory.

In the study by M.J Bamshad and his team [5] (http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf) they wrote, "Our results demonstrate that for biparentally inherited autosomal markers, genetic distances between upper, middle, and lower castes are significantly correlated with rank; upper castes are more similar to Europeans than to Asians; and upper castes are significantly more similar to Europeans than are lower castes."

The genetic study involves the analysis of genetic material known as the Mitochondrial DNA which is only passed maternally and so it is used to study female inheritance. The male-determining Y chromosome, is passed along paternally and is therefore used to study male inheritance. The evidence implies that few millennia ago group of males with European affinities invaded the Indian subcontinent from the Northwest of the sub-continent.

The researchers went on to state that the genetic variations among the upper castes and lower castes is the evidence to the origin of the caste system. The people who were either migrating or invading the sub-continent had descendants in the male population largely in the higher castes than in the lower castes. The researchers state that these invading or migrating people might have instituted the caste system.

In the abstract to their paper the researchers stated, "In the most recent of these waves, Indo-European -speaking people from West Eurasia entered India from the Northwest and diffused throughout the subcontinent. They purportedly admixed with or displaced indigenous Dravidic-speaking populations. Subsequently they may have established the Hindu caste system and placed themselves primarily in castes of higher rank."

The study also revealed another classic anthropological observation, that of women being significantly more mobile in terms of caste and hierarchical class than men, who are almost not socially mobile at all in terms of caste and hierarchical class. Genetic evidence reveals that over millennia men have married women from lower castes but women have rarely married men from lower castes. Thus the researchers imply that caste and class to a large extent is perpetuated by women and has also thereby contributed to the minimal mixing of Aryan blood with the natives.

The latest genetic research paper (2004) on Indo-European origins, support the conclusions of the (2001) study, backing the Aryan invasion theory[6] (http://www.gnxp.com/IndependentOriginsOfIndianCaster.pdf).
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
//M.J Bamshad and his team [5]//
காஞ்சி, Bamshadன் இந்த ஆராய்ச்சிக்கட்டுரை குறித்து பல்வேறு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன... இம்மாதிரிப் பிரிவுகள் ஆராய்ச்சி சௌகரியத்துக்காக மேற்கொள்ளப்படுவையே. வரவர, புள்ளியியல் உயிரியலை விழுங்கிக்கொண்டு வருவதால், there are innumerable ways by which you can torture the data to no end and force it to spit out the answers you like to see. இது பெரும்பாலும் வேண்டுமென்றே நடப்பதில்லை எனினும், இந்தச் சாத்தியப்பாடு உள்ளதென்று நினைவுகொள்ளவேண்டியதும் முக்கியம்....
 
காஞ்சி, மாண்டீ நன்றிகள். மாண்டீ சொல்வது போல புள்ளிவிவரங்களை எப்படி வேண்டுமானாலும், திரிக்க முடியும். ஆனாலும், ஆதாரமான விஷயங்களை மாற்றியமைக்கமுடியாது என்று தோன்றுகிறது. இங்கே இது பதிந்தவுடன், பெயரிலி சொன்ன Journey of Man தேடி கிடைக்கவில்லை. ஆகவே யாராவது அதனை பார்த்திருந்தீர்களென்றால் பதியலாம்.

இதுதாண்டி, அனாதை ஆனந்தன் அவர்களுக்கும் நன்றிகள். என் பதிவினையொட்டி அமைந்த விஷயத்தினை அவரின் பதிவில் எழுதியிருக்கிறார்.
சுட்டி: http://anathai.blogspot.com/2005/05/blog-post.html
 
ஆகா பெயரிலி,
இதைத்தான் ஒரு மாதத்துக்கும் மேலே தேடிக்கொன்டிருந்தேன். தலைப்பு மறந்துவிட்ட காரணத்தால் பிடிபடவில்லை. பி பி எஸ் -லும் கூட.
// தமிழ்நாட்டிலே ஒருவரின் Dணா உம் பரிசோதிக்கப்பட்டு, ஆபிரிக்க அடியோடு தொடர்புபடுத்தப்படுகின்றது.//
இவரது ஆராய்ச்சி தமிழ் நாட்டிலே மதுரையிலே நடத்தப்பட்டது. 'ஜெனிடிக் கோட்' மரபணுத்தொடர் எண் மூலம் இதை நிருபித்துள்ளதாக தெரிகிறது. அது வெள்ளையர்களின் மரபணு தொடருக்கும் ஒரே மூலம்தான் என்று நிகழ்ச்சியின் முடிவில் சொல்லியிருந்ததாக ஞாபகம். இது போன்ற 'உண்மைகள்' பரப்படுதம் தலையாய அவசியம் என அப்போது பட்டது.

இனி ட் பி எஸ்சில் கிடைக்கிலைன்னா பெயரிலியை தொடர்பு கொள்ளவேண்டியதுதான்.
 
THE JOURNEY OF MAN, from Jeremy Bradshaw/Tigress Productions (IN THE WILD, AFRICA) will examine the latest in genetic evidence to tell the story of the great migrations of man through history. Dr. Spencer Wells, an American scientist who runs a laboratory at the Wellcome Trust Centre for Human Genetics at Oxford University in England, will host the two-hour special. He will travel to Africa, Australia, Siberia, the Middle East, the Himalayas and the United States to piece together our history with clues gathered along the way: facial features, cultural artifacts, fossils and meteorological records. Astonishing research indicates that our family trees can be traced back to just one man who lived as little as 60,000 years ago. The series will synthesize the latest evidence from many different scientific fields - genetics, linguistics, anthropology and paleoclimatology - to explain our exceptional survival against all odds. Justine Kershaw is producer.
 
http://www.pbs.org/aboutpbs/news/20010726_journeyeinstein.html
 
இது குறித்து பூர்விககுடி மக்கள் என்னதான் கூறுகிறார்கள் என்பதை முதலில் படியுங்கள். இது போன்ற சோதனைகளைச் செய்வதால் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் அவர்கள் கூறுகிறார்கள். நீ 100% பூர்விகம் இல்லை என் மரபணுவில் உன்னைவிட பூர்விகத்தன்மை அதிகள் என்றெல்லாம் வாதிடுவது அபத்தமாகக் தோன்றலாம்.அதுதான் நடக்கிறது. இன்று இனம் அதாவது ரேஸ் என்பது குறித்த சமூக அறிவியல் கண்ணோட்டம் மாறிவிட்டது, ஆனால் நாராயணன் எழுதியதில் ஒரு மிகவும் பழைய கலாவதியான கண்ணோட்டமே வெளிப்படுகிறது வந்தேறிகள் என்றெல்லாம் எழுதுவதில் உள்ள அரசியல் எனக்குத் தெரியும்.தமிழ் நாட்டில் முன்பு பிராமணர்களை அப்படிக் கூறினார்கள். இப்போது தமிழ் தேசிய வாதிகள் தெலுங்கு பேசுவோரை அப்படிக் கூறுகிறார்கள்.ஏப்ரல் உயிர்மையில் மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரையினைப் படியுங்கள். சங்க பரிவாரங்கள் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பலரை பங்களாதேஷிலிருந்து வந்த வந்தேறிகள் என்று சொல்லி விரட்டிவிடத் துடிக்கிறார்கள்.என்னால் விரிவாக எழுத முடியும்.அதற்கு இப்போது நேரமில்லை.
 
The following should help to understand why DNA tests are contoversial.But those who have naive faith in science and still
thinking in terms of 19th century concepts of race may not like it.
Dont worry soon hindutva groups will ask for such a test to determine who is an Indian and who is not.I am sure that many of you
will understand the political implications of such tests only then.
-----------------------------------
[Previously published in The Native Voice (Dec. 3-17, 2004), D2]
“Native American DNA” Tests: What are the Risks to Tribes?
Kim TallBear

Deborah A. Bolnick

Does DNA make an Indian?

In Red Earth, White Lies (Scribner, 1995), Vine Deloria Jr. muses about the dramatic rise in people
self-identifying as Native American since the political upheavals of the 1960s. Deloria asks:
“can whites really become Indians? A good many people seriously want to know.”
Deloria did not refer to “Native American DNA”, but the question he poses is one that many
people are hoping DNA can answer. In this age of genetic determinism, when many Americans
believe that identity, kinship, and race are determined by one’s genes, more and more people
are turning to DNA testing to validate their claims of Native American ancestry. At least
fourteen companies now sell Native American DNA tests ($80-600, depending on the type of
test ordered). After rubbing a sterile cotton swab on the inside of the cheek and sending it in a
vial to the DNA testing company, the test taker will be told if he or she possesses particular
genetic markers that are commonly found in individuals with Native American ancestry. Test
takers also receive a frameable document certifying their genetic ancestral affiliation.
Since 30 million Americans have set up websites tracing their family histories and 80% of those
surveyed by the genealogy portal RootsWeb.com say that it would be important to use DNA to
determine their ancestry, these DNA tests have the potential to influence many people.
Unfortunately, this may mean trouble for tribes. Will Native American DNA tests be used to
challenge tribal rights and governance authority?
DNA companies profit while tribes may lose out
In the September 22, 2004 Indian Country Today, an advertisement by the company Genelex
asked readers, “Do you need to confirm that you are of Native American descent?” Genelex
claims that its Ancestry DNA Test reveals genetic markers that are “unique to Native
Americans”, making it “the only scientifically rigorous method available” for “validating . . .
eligibility for government entitlements such as Native American Rights”.
Tall Bear & Bolnick 2
Two features of this ad epitomize the problems with Native American DNA testing and the
way it is hyped by DNA testing companies. First, the claim that these tests identify uniquely
Native American markers is not completely accurate: some of the genetic markers used in these
tests are found only in Native Americans, but many are not. This claim therefore exaggerates
what DNA can tell us about ancestry and ethnic identity, and implies a greater correspondence
between genetic markers and ethnic groups than really exists. We further explain such
problems with the science behind these tests later in this article. Second, although Genelex
describes its test as validating rather than determining eligibility for Native American rights,
careful use of verbs does not diminish the central message that DNA testing proves Native
American identity in a scientifically objective manner. The implication is that successful DNA
test takers should have the right to access Native American “government entitlements” whether
or not they belong to federally-recognized tribes. Other DNA testing companies suggest that
test results can also be used to qualify for ethnicity-specific scholarships and race-based college
admissions.
However, eligibility for Native American rights is ultimately a political and cultural issue that
will never be satisfactorily answered by genetics.
Native American tribes need to ask themselves, “since when does a genetic test rather than
government get to decide who is Native American and therefore eligible for Native American
rights?” For 150 years, Native American rights have been determined by legal criteria that
support the idea of tribal sovereignty. Are tribes willing to give up authority to the scientists,
entrepreneurs, and investors who run DNA testing companies and who seem less familiar with
Native American politics and history?
Tribal sovereignty and legal rights are contentious in American politics today. States, industry,
and others wage expensive legal battles to challenge tribes’ rights to govern their lands and
citizenries or to exist at all. There are also many American citizens who may not realize that
tribes are political entities and not simply quaint ethnic groups. Some of these romanticize
Native America and search with heavy emotional investment for a Native American ancestor
that is sometimes real and sometimes imagined.
Given the current political and cultural environment, many Americans might sooner look to
DNA than to tribal and federal law to determine who is Native American and who can access
Native American rights.
Because tribal and federal law focus on tribal group relations, cultural continuity, and a tribal
land-base, many individuals with Native American biological ancestors are nonetheless
ineligible for federally-recognized tribal status or tribal enrollment. When law fails to recognize
them as Native American, these individuals may turn to DNA testing. For example, after
failing to meet federal recognition standards, a group calling themselves the “Western Mohegan
Tribe and Nation” attempted to use DNA analysis to prove their Native American identity in
order to get into the gaming business. Although their efforts were unsuccessful, hopes of
gaming profits may motivate others to seek recognition in this manner, and tribal sovereignty
could be undermined as a result.
Tall Bear & Bolnick 3
Indeed, some early signs suggest that DNA testing could become a legal requirement for
proving Native American affiliation even if opposed by tribes. After the 9,000 year old remains
known as “Kennewick Man” were unearthed in 1996, DNA analysis was authorized to help
determine his “cultural affiliation” despite opposition from the tribes claiming the remains
under the Native American Graves Protection and Repatriation Act. DNA testing proved
unsuccessful because too little DNA was preserved in the bones for analysis, but a precedent
has been set. Legislation has also been proposed in at least one state (Vermont) that would
require DNA testing to prove the Native American affiliation of both human remains and
individuals seeking state recognition.
Can DNA be useful to federally-recognized tribes?
A few federally-recognized tribes, such as the Mashantucket Pequot of Connecticut, have
considered using Native American DNA tests for enrollment purposes. For the Pequot, as for
other wealthy casino tribes, the financial stakes of enrollment are high: the Pequot disburse
monthly payments to each member totaling thousands of dollars. If DNA could exclude those
who cannot legitimately claim Pequot ancestry, the financial benefits for the remaining tribal
members would be great.
However, these Native American DNA tests rarely (if ever) identify genetic markers for
particular tribes. Because no tribe has been completely isolated from other human groups
throughout history, very few genetic markers are present only in the members of one tribe. In
all likelihood, genetic markers found in the Pequot also exist in many other tribes.
Consequently, adoption of a DNA-based enrollment policy might actually expand the number
of individuals qualifying for tribal enrollment because individuals without Pequot ancestry
could claim membership based on the shared genetic markers.
This example should serve as a red flag to tribes: enrollment policies based on DNA alone could
backfire. Furthermore, because individual identity is shaped by more than genetic ancestry,
other enrollment criteria might be better able to meet the needs of land-based tribal nations.
Reservation residence or tribal community involvement, for example, can help ensure that tribal
members are also culturally connected to the tribe and committed to its future.
Some companies may encourage the notion that genetic ancestry alone makes an Indian,
though, because there is a potentially lucrative market in such over-simplification. For
example, the DNA testing company DNAToday has teamed up with DCI America (a for-profit
tribal management consulting firm) to sell “genetic identification systems” to tribes. Their $320-
per-person photo ID cards sport computer chips and list specific DNA markers. DNAToday
advocates tribal-wide DNA testing, and claims that their product is “100% reliable in terms of
creating accurate answers” to questions of tribal enrollment. But one must ask, “which
questions do they answer?”
DNAToday’s test is simply a paternity test that confirms an individual’s biological parentage.
While this could help demonstrate an enrollment applicant’s relationship to an ancestor on the
tribe’s base roll, that relationship can usually be documented through other less expensive
means (such as birth certificates and the enrollment documents of parents and grandparents).
When it can’t, many tribes already use paternity tests. Thus, in many cases, DNAToday’s
Tall Bear & Bolnick 4
products are redundant and cost exorbitant. The cost would range from tens of thousands of
dollars for small tribes to tens of millions for the largest tribes, and few tribes would gain much
new or useful information.
The science of Native American DNA testing
DNA testing for Native American identity and enrollment is clearly problematic on a social,
cultural, and political front. But what about the science behind such tests? There are problems
there too. The tests can fail to detect Native American ancestry in individuals with Native
American ancestors, and incorrectly identify it in others who do not have such ancestors.
First, Native American DNA tests examine only a small proportion of the test taker’s DNA.
Most tests fall into one of two categories: mitochondrial DNA (mtDNA) tests and Ychromosome
tests. MtDNA tests examine DNA that is inherited only from one’s mother (and
her mother, and her mother before her...). Y-chromosome tests examine DNA that is passed
down from grandfather to father to son (and so on). These tests examine less than 1% of the test
taker’s DNA, and shed light on only one maternal or paternal ancestor. Thus, even if all of your
grandparents were Native American except for your mother’s mother, a mtDNA test would still
fail to detect Native American ancestry.
Second, DNA tests may certify some individuals as having Native American ancestry when in
fact they do not. These tests use the following logic: if a genetic marker is common in Native
Americans, and you have the marker, you are probably Native American. The problem is that
‘common’ is not the same as ‘only found in’ Native Americans. Given the high level of genetic
variation within all human populations, relatively few markers are restricted to a single group
in this way. In fact, not all “Native American” markers used in the DNA tests are actually
found only in Native Americans. Some of the markers are most common in Native American
populations, so any individual with those markers most likely has Native American ancestry.
But because such markers can still be found in non-Native American populations, just at lower
frequencies, Native American DNA tests may falsely identify some individuals as having
Native American ancestry.
Such “false positives” may be responsible for the more perplexing results of these tests. Several
come from DNAPrint’s AncestrybyDNA test, which examines 175 markers found throughout
the genome to estimate the test taker’s “ancestral proportions” (% Native American, %
European, % East Asian, and % African). Based on their test results, DNAPrint claims that most
Mediterranean Europeans, Middle Easterners, Jews, and South Asian Indians have Native
American ancestry. If, however, some of the markers they consider diagnostic of Native
American ancestry are really not, then such results are not accurate and the reliability of this test
is cast into doubt.
Thus, Native American DNA tests do not provide foolproof answers to questions of Native
American ancestry. In many cases, their results are accurate and informative. But in others,
they fail to detect such ancestry in individuals with Native American ancestors, and they
incorrectly identify it in others. The appropriate use of such imperfect tests must be considered
carefully.
Tall Bear & Bolnick 5
Conclusion: Can DNA tell us anything about Native American identity?
Ultimately, the answer to this question depends on how we define “Native American”. Up
until now, the definition has incorporated ideas of tribal citizenship and sovereignty,
acculturation as a Native American, and biological ancestry.
But now that genetics carries such cultural power, we face several pressing questions: Will
Native American identities and rights that have been reckoned through a combination of
kinship ideas, law, and policy now be reckoned increasingly through DNA? Will DNA tests be
required in law and policy? Will prevailing cultural notions of kin, race, and genetic ancestry
undermine tribal notions of kin that emphasize a close cultural connection to the tribe? How
will the focus on DNA affect ongoing U.S. negotiations with tribal nations? Tribes need to
consider these possibilities carefully.
 
//ஆனால் நாராயணன் எழுதியதில் ஒரு மிகவும் பழைய கலாவதியான கண்ணோட்டமே வெளிப்படுகிறது வந்தேறிகள் என்றெல்லாம் எழுதுவதில் உள்ள அரசியல் எனக்குத் தெரியும்.தமிழ் நாட்டில் முன்பு பிராமணர்களை அப்படிக் கூறினார்கள். இப்போது தமிழ் தேசிய வாதிகள் தெலுங்கு பேசுவோரை அப்படிக் கூறுகிறார்கள்.ஏப்ரல் உயிர்மையில் மார்க்ஸ் எழுதியுள்ள கட்டுரையினைப் படியுங்கள். சங்க பரிவாரங்கள் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் பலரை பங்களாதேஷிலிருந்து வந்த வந்தேறிகள் என்று சொல்லி விரட்டிவிடத் துடிக்கிறார்கள்.//

நான் எழுதியதன் அர்த்தம் சரியாக சொல்லப்படவில்லை என்று நினைக்கிறேன். நான் வந்தேறிகள் என்று சொன்னது, தனக்கு சொந்தமில்லாத ஒரிடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, அவ்விடத்தினை ஆண்டுக் கொண்டு, அவ்விடத்தின் பூர்விகக்குடிகளை அடிமைப் படுத்துதலும், அவ்விடத்திற்கு சொந்தம் கொண்டாடுதலையொட்டியதேயாகும். இது கொலம்பஸுக்கு பொருந்தும் (பிரேம்-ரமேஷின் உயிர்மை கட்டுரையினை படியுங்கள்). வந்தேறிகள் வேறு. அகதிகள் வேறு. சங்க பரிவாரங்கள் கையிலெடுப்பது அரசியல் (நான் இந்திய முஸ்லீம்களை அகதிகளாக சொல்லவில்லை. அவர்களும் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள்). தமிழ் தேசியவாதிகள் சொல்வதில் உண்மையிருந்தாலும் அது Extremism. இங்கே நான் சொல்வது, சொல்ல வருவது மரபணுக்களின் மூலம் உங்களின் பாரம்பரியத்தினை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பு. முதலில் இதன் பயன் அவ்வளவே. இதனை சமூக, பொருளாதார, வரலாற்று விஷயமாக முன்னெடுக்கும்போது நான் எழுதிய கருத்துக்கள் முன்வைக்கப்படும். நீங்களும், நானும் எவ்வளவு கருத்து வேறுபாடுகளோடு வாதம் நடத்தினாலும், இந்த ப்ரொஜெக்ட் நடக்கப்போவது உறுதி. பெயரிலியின் கருத்தினைப் பாருங்கள். இது ஆரம்பித்து நடந்து கொண்டும் இருக்கிறது.

//இது குறித்து பூர்விககுடி மக்கள் என்னதான் கூறுகிறார்கள் என்பதை முதலில் படியுங்கள். இது போன்ற சோதனைகளைச் செய்வதால் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் அவர்கள் கூறுகிறார்கள். நீ 100% பூர்விகம் இல்லை என் மரபணுவில் உன்னைவிட பூர்விகத்தன்மை அதிகள் என்றெல்லாம் வாதிடுவது அபத்தமாகக் தோன்றலாம்.//

"என் மரபணுவில் உன்னைவிட பூர்விகத்தன்மை அதிகள் என்றெல்லாம் வாதிடுவது அபத்தமாகக் தோன்றலாம்" - இது அபத்தவாதம் தான். ஒத்துக் கொள்கிறேன். நாளைக்கே என் மரபணுவை சோதித்துப் பார்த்து, நான் ஐரோப்பிய கூறுகள் நிரம்பியவன் என்று சொன்னால், உடனே நான் பிரான்ஸுக்கோ, ஜெர்மனிக்கோவா மூட்டை கட்டப் போகிறேன்? கண்டிப்பாக இல்லை. இதன் விளைவுகள் வேறு. உலகின் எந்த அரசாங்கமும், உங்களின் மரபணு சார்ந்த அடையாளத்தை தான் உங்களுக்கு வழங்கும் என்று ஒற்றைக் காலில் நிற்கவில்லை. எல்லா அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் சொல்லப்படும் "நன்மை, தீமை" என்கிற இரட்டைப்படை கிளிஷே இதற்குமுண்டு. இதனால் ஆராய்ச்சிகள் தடைப்பட போவதில்லை. உலகம் முன்னேறி கொண்டுதான் இருக்கப் போகிறது.

நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் "இனம்" என்பதின் அர்த்தங்கள் மாறிவிட்டன. அறிவியலை முழு மூச்சாக, ஒற்றை தீர்வாக பார்க்காதீர்கள் என்பதைப் பற்றி எனக்கும் கருத்துக்கள் உள்ளன. ஆனால், ஒரு உலகளாவிய ஆராய்ச்சியினை குற்றம் சொல்வதின்மூலம் எதை நிறுவ முயல்கிறீர்கள் என்று புரியவில்லை? உங்கள் சுட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் பூர்விக அமெரிக்க குடி மரபணு சோதனையின் விளைவுகளையும், பின்னடைவுகளையும் ஆராய வேண்டியது அமெரிக்க அரசின் பொறுப்பு. இதற்கு அறிவியலை குற்றம் சொல்லாதீர்கள். நிறைய எழுத வேண்டுமென்று நினைத்து, நேரமின்மையால் எழுத இயலவில்லை. இனி இதை பற்றி மேலும் பேசப் போவதில்லை. நம்மிருவரின் நிலையில் நாமிருக்கலாம். Over and out.
 
இன்றுதான் இதைப்பார்த்தேன். நான் உயிரியல்/ மரபியல் துறையைச்சேர்ந்தவன் இல்லை, நாராயணன். எனக்கு இதைப்பற்றி அறிவியல் பூர்வமாக என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஆராய்ச்சிகளுக்கு மருத்துவப் பயன்கள் கடந்து சில சமூகப் பயன்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். ஆனால் வரலாறு/ மொழியியல்/ தொல்லியல்/அகழ்வராய்ச்சித் துறைகள் கூட இந்தத் துணைக்கண்டத்தில் நிகழ்ந்த அரசியல், பண்பாட்டு மாற்றங்கள் குறித்து விரிவான ஒரு பார்வையை, சமூக மாற்றங்கள், கலைகள், மருத்துவம், கட்டிடக்கலை உள்ளிட்ட மரபு சார் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு இனத்தின்/ மொழியின் பங்களிப்பை, அதை மக்கள் மயப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் உள்ளவாய்ப்புகளை தெரியப்படுத்தவும், அதன் மூலம் அவ்வினங்களின் நியாயமான பெருமிதங்களை அங்கீகரிக்கவும்செய்ய முடியும். ஆனால் மைய, மாநில அரசுகள் இதைச் செய்தார்களா? மைய அரசுசார்ந்த அமைப்புகள் சில இனங்களுக்கு/ மொழிகளுக்கு சாதகமான நம்பிக்கைகளை காப்பாற்றவும், அவர்களது மொழியை, பண்பாட்டை எல்லா இனங்களுக்குமான பண்பாடாகக் காட்டுவதை இன்னும் தொடர்ந்து செய்வதையும், அதன் மூலம் அவ்வினங்களின் அரசியல் மேலாதிக்கத்தை காப்பாற்றி வரவுமே செய்கின்றன. எந்த அறிவியல் அணுகுமுறையையும் முதலில் கைப்பற்றி அதை தங்களது நலனை, பெருமையை மட்டும் காப்பாற்றிக்கொள்ளுமாறு முடக்குவதும் நடக்கிறது. இந்நிலையில் இது போன்ற ஆராய்ச்சிகள் அன்னிய நிறுவன/ ஆராய்ச்சி அமைப்புகளால் நடத்தப்படுவதால் வேறு சில வகைகளில் இனங்களின் அடையாளங்களை குறிப்பிடுவதன் மூலம் மறைமுகமாக இவ்வாராய்ச்சிகளை முன்னெடுக்க உதவுமா என்றே நான் ஆர்வம் கொள்கிறேன்.

பதிவுக்கு நன்றி நாராயணன்.
 
ஆமா, பின் தொடர்தல் வசதி இந்தப் பதிவில் இல்லையா?
நீங்கள் பிற்சேர்க்கையாகச் சுட்டியிருக்கிறதைப் பார்த்தேன். நன்றி.
 
This comment has been removed by the author.
 
Thanks for providing This Resource to Share the Technical knowledge...This is helpful for lot's of people...I like this selenium Classes Concepts and information's about it...Keep doing this Ever
Java training in chennai | Java training in annanagar | Java training in omr | Java training in porur | Java training in tambaram | Java training in velachery
 
Excellent blog thanks for sharing the valuable information..it becomes easy to read and easily understand the information.
Useful article which was very helpful. also interesting and contains good information.
to know about python training course , use the below link.

Python Training in chennai

Python Course in chennai

 
Share great information about your blog , Blog really helpful for us. I enjoyed over read your blog post. This was actually what i was looking for and i am glad to came here!

Java Training in Chennai

Java Course in Chennai

 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]