May 2, 2005

நெடுமாறன் மீதான பொடா வழக்கு

பழ. நெடுமாறன் மற்றும் நால்வர் மீதான பொடா வழக்கினை திரும்ப பெறுமாறு தமிழக அரசுக்கு பொடா மறுபரீசிலனை குழு அறிவுறுத்தல்பொடா வழக்கினைப் பார்த்துக் கொள்ளும், மறு பரீசிலனை கமிட்டி, பழ.நெடுமாறன் மீதான பொடா வழக்கினை வாபஸ் வாங்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது, புலிகளை ஆதரித்ததாக காரணம் காட்டி, பழ.நெடுமாறன் மற்றும் நால்வர் ( சுப.வீரபாண்டியன்(சுபவீ), தாயப்பன், புதுக்கோட்டை பாவாணன், சாகுல் அமீது) மீது தமிழக அரசு இரண்டு வழக்குகளை பதிவு செய்திருந்தது.

முதல் வழக்கு, ஏப்ரல் 13,2002 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக போடப்பட்டு பொடாவில் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது வழக்கு, தமிழ் தேசிய கழகத்தின் செயலாளர் பரந்தாமன், ஒரு தனியார் டிவிக்கு அளித்த நேர்காணலுக்காக போடப்பட்டது. அந்த நேர்காணலில் பரந்தாமன், புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும், ஜெயலலிதா அரசினை குற்றம் சாட்டினார்.

மறுபரீசிலனை குழுவிற்கு தலைமை தாங்கிய நீதிபதி. உஷா மெஹ்ரா தமிழக அரசு குற்றம் சாட்டி சிறையிலடைத்தமைக்கு சரியான காரணங்கள் இல்லையென்றும், ஈழத்தமிழர்களை ஆதரித்து பேசுவதால் வன்முறையினை தூண்டிவிடுகிறார்கள் என்கிற தவறான கருத்தமைவும் கொண்டதாக தமிழக அரசுக்கு சொல்லியிருக்கிறார். புலிகள் எதிர்ப்பில் முழு ஈடுபாடு காட்டிவரும் தமிழக அரசுக்கு இது பெரிய பின்னடைவாக இருக்கும்.

முழு செய்தி. ஹிந்துவில் இன்று வந்தது.

POTA panel asks TN Govt. to withdraw case against Nedumaran

New Delhi, May. 2 (PTI): In a setback to the Tamil Nadu Government, the Review Committee on POTA has directed the State to close two separate cases booked under anti-terrorism law against Tamil National Movement (TNM) leaders, including its chief P Nedumaran.

In the first case, the committee cleared Nedumaran and four others from the allegation that their speech delivered on April 13, 2002 in Chennai amounted to supporting the Liberation Tigers of Tamil Eelam (LTTE) -- banned under POTA.

In the second case, the panel held that the Tamil Nadu Government was not justified in invoking POTA against TNM General Secretary Paranthaman, for his alleged interview to a private channel criticising the Jayalalithaa Government for its stand against the Tamil Tigers.

While asking the Tamil Nadu Government to withdraw the charges under POTA against Nedumaran, Suba Veerapandian (then spokesman of MDMK), Paavanan alias Podukottai Paawanan, Thayappan and Shahul Hameed, the panel said "there is no prima facie case for proceeding under POTA against them."

"In the material placed before the committee, there is nothing to suggest that the accused had in any manner, been involved in any act of violence which leads to terrorism. In these circumstances, sympathy or oral support for the cause of Eelam Tamils does not mean support for the ideology or methodology adopted by LTTE," a three-member committee headed by Justice Usha Mehra said.

Other members of the Committee comprise K Roy Paul (retired IAS officer) and R C Jha (retired IPS officer).

The committee held that "expressing sympathy and asking others to understand and appreciate or even share the misery suffered by Eelam Tamils in Sri Lanka and to espouse the cause of Tamils would not bring their said speeches within the ambit of encouraging or furthering terrorism or the terrorist activities of LTTE."

The Tamil Nadu police had slapped the charges of POTA against them for their speeches evaluating the interview given by LTTE Chief Prabhakaran, in Sri Lanka.

Police had alleged that the speech of Nedumaran and others instigated the gathering to act against the Government and amounted to supporting the banned LTTE.

However, the panel said the accused persons made the speeches primarily to support the cause of Tamils, including Eelam. "Therefore their speeches will not fall within the ambit of encouraging support for a terrorist organisation under Section 21 of POTA," it added.

On Nedumaran's speech, the committee observed that his speech was only political in nature and was not indicative of any support to the LTTE.

The TNM leader only criticised the State Government in handling the Tamils in Sri Lanka, the committee said adding, that emphasis was on the state of affairs of Tamils living in various parts of the world.

ஹிந்துவின் சுட்டி

இதன் மூலம், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி பேசுதலில் மாற்றங்கள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். மேலும், தமிழகத்தின் இரண்டாம் நிலை அரசியல் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் (கலைஞர், ஜெயலலிதா தாண்டி) வை.கோ, மருத்துவர் ராமதாசு, திருமா வளவன் ஆகியோர் ஆரம்பம் முதலே ஈழத்தமிழர்கள் பற்றி பேசி வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகள் மீதான நேரடியான ஆதரவாக இதை கருத முடியாமல் போனாலும், ஈழத்தமிழர்களின் வாழ்வினைப் பற்றி தமிழகத்தில், புலிகளைச் சார்ந்து தைரியமாக பேசலாம் என்பது காலம் கடந்து நிருபணமாகியிருக்கிறது

Comments:
நாராயணன்
தங்கள் பதிவிற்கு நன்றி. எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் துளியும் சுயநலம் இல்லாத அரசியல்வாதி ஐய்யா நெடுமாறன்.
இப்படிப் பட்ட தீர்ப்பு ஓவ்வொரு தமிழனும் இதனை உணர வேண்டும். வீதிகள்,கடைத் தெருக்கள் மக்கள் மக்கள் கூட்டம் கூட்டமாக
நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழத் தமிழரின் விடுதலைப் பற்றிப் பேச வேண்டும். காலம் நிச்சயம் நம் ஈழ மக்களுக்கு நல்ல ஓரு
தீர்வை தரும். அரசியல்வாதிகள் மட்டும் பேசமால் கடைக்கோடி தமிழனும் ஆதங்கப் பட்டால் அதுவே நம் ஈழ மக்களுக்கு நம் செய்யும் மரியாதை. அரசுகள் வரும் போகும் ஆனால் ஈழ தமிழ்ர்கள் தமிழ் நாட்டு தமிழ்ர்களை சகோதர சகோதிரிகளாக பார்ப்பது நிதர்சனமான உண்மை.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
நன்றி நாராயண்!
 
இன்றைய பிபிஸி தமிழோசையினையும் கேட்க

சல்மாவின் முஸ்லீம் மணம் குறித்த செவ்வியும் உண்டு
 
நன்றி சிவா, தங்கமணி, பெயரிலி. இது ஒரு முக்கியமான தீர்ப்பாக நான் கருதுகிறேன். இந்நாள் வரை ஈழம் என்று பேச்செடுத்தாலே, இந்தியாவில் அதனை புலிகள் ஆதரவு என்றுதான் நினைப்பார்கள். அதைத் தாண்டி ஒரு நீதிபதி, மனிதாபிமானத்தின் அடிப்படையில் மக்களைப் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருப்பது, காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சூசகமாக தெரிவிக்கிறது.
 
சோ ராமசாமி இதைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதை முடிந்தால் எழுதிப் போடுங்கள்.

பல வருடங்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த இந்திரா காந்தியை,திமுக-காரர்கள் கல்லெறிந்து தாக்கிய போது,தன்னுயிரை பணயம் வைத்து கல்லடிகளை தாங்கிக் கொண்டவர் பழ.நெடுமாறன் என பிறர் சொல்லக் கேட்டதுண்டு.

-வாசன்
 
நல்ல தீர்ப்பு; நல்ல செய்தி! இன்னும் ஒருதரம் (இம்முறை காரணம் இல்லாமல்கூட) நெடுமாறன் ஐயாவை செல்வி ஜெயலலிதா சிறையிலடைப்பார்; அவர் ஒரு நூறு, இருநூறு நாட்கள் அடைபட்டிருப்பார். பிறகு இரண்டு மூண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மனிதாபிமான நீதிபதி தற்செயலாய் ஒரு நியாயமான தீர்ப்பை வழங்குவார். அது இந்துவில் செய்தியாகும்; நாராயணனும் அதை வலைப்பதிவிலிடுவார். ஆகா தர்மம ஜெயித்ததென்று நாங்களும் உவகையுறுவோம். ஆனால் நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்? அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது? உண்மையில் தர்மம் ஜெயித்ததா?

என்னைப் பொறுத்தவரையில் ஜெயித்தது அம்மையாரே.
 
தகவலுக்கு நன்றி நரேன்.
இப்படித்தான் முதலில் வைகோவை ஒராண்டுக்கு மேலாய் சிறையில் அடைத்ததும் தவறு என்று பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, பொடாச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கூறியதாய் வாசித்தது நினைவிலுண்டு. அண்மையில் சுபவீ எழுதி வெளியிட்ட பெரியார் பற்றிய புத்தகவெளியீட்டில் கூட பழ.நெடுமாறன் அவர்கள், இந்த வழக்கின் காரணமாகத்தான் எதுவும் வாய்திறந்துபேசாமல் சைகையால் மட்டும் சிலவற்றைப் பேசியிருந்தார் என்று வாசித்திருந்தேன். ஆக்ககுறைந்தது இந்தத் தீர்ப்பானது அவருக்கு அவர் விரும்புவதைப் பொதுமேடைகளில் பேச வாய்ப்புக்கொடுக்கும் என்றால் மிகவும் நல்லது.
வைகோ, பழ.நெடுமாறன், சுபவீ என்பவர்களோடு இன்னும் எத்தனை பேர் பெயர்கள் வெளியே தெரியாது, ஈழப்போராட்டத்திற்கு குரல்கொடுத்ததற்கு சிறைகளில் வாடுகின்றார்களோ தெரியாது. நேற்றுத்தான் புதியபார்வை மார்ச் இதழ் வாங்கிவாசிக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. அதில் கொளத்தூர் மணியின் நேர்காணல் இருக்கின்றது. அவரது நேர்காணலை வாசித்தபோது அவர் வெளியே இருந்ததைவிட சிறைகளில் இருந்த காலந்தான் அதிகம் போலத்தோன்றியது. சும்மா சும்மா எல்லாம் வழக்குகளைப் போட்டு உள்ளே எல்லாம் அடைத்திருக்கின்றார்கள். இவ்வளவு கஷ்டங்களுக்கும் அப்பாலும் அவற்றின் வலிகளைப் பெரிதுபடுத்தாது தமிழ்நாட்டு மக்களுக்காகவும், ஈழத்தமிழர்களுக்காகவும் அவர் அக்கறையுடன் பேசுவதை வாசிக்கும்போது, எவ்வளவு அருமையான மனிதர் என்று யோசித்தேன்.
கிஸோ,
//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்? //
உண்மைதான். ஆனால் எத்தனையோ விடயங்களில் நமது நாட்டைவிட இந்தியாவின் ஜனநாயகம் மிகு வலியதும் பாராட்டவும் படக்கூடியதும் கூட. இப்படியான, எல்லோருக்கும் நெகிழ்ந்து கொடுக்ககூடிய ஜனநாயகம் இன்னுமிருப்பதால்தான், இந்தியாவின் மாநிலங்கள் தனித்துப் பிரிந்துபோகாமல் இருக்கின்றன என்று நினைக்கின்றேன்.
 
நெடுமாறன் போன்றவர்களின் வாழ்வின் கணிசமான சக்தியை வம்பு வழக்குகளிலே வடிக்க வைப்பது இன்னொரு தந்திரம். இந்தத் தீர்ப்பு வந்ததாலேயே வியாழக்கிழமை சென்னை தராக்கி கண்டன ஊர்வலத்தில் ஆள் கூடுமென்றா நினைக்கிறீர்கள்? இரண்டு மூன்று (+) வருடங்களை நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தலில் செலவிட யார் விரும்புவார்? கிஸோக்கண்ணன் சொன்னது போல் அடக்கு முறைச் சட்டத்துக்குத்தான் வெற்றி.
 
நன்றி நாராயணன். சில நம்பிக்கை ஒளிகள் இன்னும் இருப்பதால்தான் ஈழத்தமிழினம் ஆறுதல் கொள்கிறது. தொப்புள் கொடி உறவு நிலை ஏற்படக்கூடாதென்பதில் உறுதியாக நின்ற அம்மணிக்கு இது தோல்விதான்.
 
//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்? அவரது மன உளைச்சலுக்குப் பதிலேது? உண்மையில் தர்மம் ஜெயித்ததா?//

நீங்கள் கூறியது உண்மைதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனாலும், ஒரு ஜனநாயக நாட்டில், அரசுக்கு எதிரான விஷயத்தினை நீங்கள் பேசும்போது இது நடப்பது சகஜம். இந்தியாவிலாவது நீதிமன்றங்கள் இன்னமும் வலிமை இழக்காமல் இருப்பதால் தான் வை.கோ, நெடுமாறன், சுபவீ போன்றவர்கள் சிறையிலிருந்து வெளியில் வருகிறார்கள். கொஞ்சமாய் இந்தியாவின் பக்கத்து நாடுகளை பாருங்கள். ஆங் சாங் சூயி இன்னமும் வீட்டுக் காவலில்தான் இருக்கிறார் மியான்மரில், மண்டெலாவின் சிறைவாசம் 26 ஆண்டுகள், டினாமென் சதுக்கங்கத்தில் எழுந்த மாணவர் புரட்சியில் கைது செய்யப்பட்டவர்கள், இன்னமும் அடையாளம் தெரியாத, பொது ஜனப்பார்வைக்கு அப்பாலிருக்கும் சிறைகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பார்க்கும்போது இந்திய நீதிமன்றங்கள் பரவாயில்லை. வை.கோவின் 18 மாதங்களும், நெடுமாறனின் 21/2 வருடங்களும் யாராலும் திருப்பி தந்துவிடமுடியாது, ஆனாலும் எல்லா சுதந்திர போராட்டத்திற்கும் இது பொருந்தும்.
 
வாசன், நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே. கிஸோக் கண்ணன், டிசே, சுந்தரவடிவேல், தமிழ்வாணன் நன்றிகள்.

ஈழத்தமிழர்களுக்காக பேசிய எவ்வளவோ உள்ளங்கள், தமிழகத்தில் அநியாயமாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள். "நந்தன்" என்கிற ஒரு இதழ், ஸ்டுண்ட் ஸெராக்ஸின் பின்புலத்தோடு வெளிவந்துக் கொண்டிருந்தது. பெரியவர் போனபின் அவரின் மகன் செளரி ராஜன் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அவரை அரசாங்கம், பொடா,தடா வழக்குகளில் பதியவைக்கப்போவதாக மிரட்டி, அவரின் வணிக நிறுவனங்களுக்கு மென்பொருள் நிறுவங்களின் ரெய்டுகளை அனுப்பி, இன்னும் பலவழிகளில் தொல்லைகள் தந்து, நந்தனை மூடவைத்தது. ஆனாலும், அவர்களின் இணையத்தளம் [www.intamm.com] இன்னமும் செயல்பட்டுக்
கொண்டிருக்கிறது.

3 மாதங்களுக்கு முன்னர், நானும் என் நண்பரும் தி.நகர் முருகன் இட்லி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது செளரியும் அவரின் நண்பர்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. தெரிந்த முகமாக இருந்தபடியால் என் நண்பர் அவரோடு பேசிக் கொண்டிருந்தார். சற்று தொலைவிலிருந்து நான் பார்க்கும்போது, அவரின் சிரிப்பில் ஒளிந்திருந்த வேதனை அப்பட்டமாக தெரிந்தது. காலமும், அரசும் எவ்வளவு வலிமையானவை. சில மனிதர்களாலேயே காலத்தினை தாண்டி பேச முடிகிறது.
 
//"நந்தன்" என்கிற ஒரு இதழ், ஸ்டுண்ட் ஸெராக்ஸின் பின்புலத்தோடு வெளிவந்துக் கொண்டிருந்தது. பெரியவர் போனபின் அவரின் மகன் செளரி ராஜன் அதை பார்த்துக் கொண்டிருந்தார்.//
'நந்தன்' அருணாசலத்திற்கு என்ன நடந்தது :-( ?
 
அருணாச்சலம் ஐய்யா எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலக கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அவர் இப்போது எவ்விதமான நிர்வாக பொறுப்பிலுமில்லை. அவரின் மகன்கள் மட்டுமே எல்லா வணிகத்தையும் பார்த்துக் கொள்கிறார்கள். எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
 
தகவலுக்கு நன்றி நரேன்.
நந்தன் இதழ்கள் இன்னும் சேகரிப்பில்/சேமிப்பில் எங்கள் வீட்டு அலுமாரியில் இருக்கின்றன. இதழ் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தேடித்தேடி நலிந்த எழுத்தாளர்களுக்கு உதவி செய்து எழுத வைத்ததில் அவரில் எனக்கு நிரம்ப மரியாதையுண்டு. அப்படியேதான் அவரது தமிழ்ச் சான்றோர் பேரவையிலும், தமிழிசை விழாக்கள் மீதும்.
 
digressing

நாராயணன்

சவுரிராஜன் பற்றி மனோஜ் அண்ணாதுரை வழி கேள்விப்பட்டதுண்டு.வருத்தமாயுள்ளது, அவரது தந்தை பற்றிய செய்தி கேட்டு.
 
நன்றி நாரயணன் அருணாசலம் அவர்களைப் பற்றி எழுதியமைக்கு. அவர் ஒரு அருமையான மனிதர்.
 
//நெடுமாறன் ஐயாவின் அநியாயமாய் செலவழிந்து போன நாட்களை எவர் திரும்பக்கொடுப்பார்? //

'அது ஒரு துன்பியல் சம்பவம், வேற என்னா சொல்ல' அப்படீன்னு பதில் வந்திடப்போகுது!
 
நெடுமாறன் அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற தீர்ப்பை விட முக்கியமானது தீர்ப்பின் இன்னொருபகுதி விடுதலைப்புலிகளைப் பற்றி மேடையில் பேசுவதோ அவர்களின் கொள்கைகளை ஆதரிப்பதோ பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல.ஈழம் பற்றிப் பேசினாலே சிறையிலடைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மௌனியாகவிருந்தவர்கள் இனி வாய்திறக்கக்கூடும்
 
நன்றி வாசன், தங்கமணி, ஈரோடு பிலிம்ஸ், ஈழநாதன் (எங்கேய்யா ஆளையே காணோம், உருப்படியா படிச்சிட்டு இருந்தீங்களோ?)
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

a片下載,線上a片,av女優,av,成人電影,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,成人網站,自拍,尋夢園聊天室

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]