May 5, 2005

என் பெயர் பால் ரோசெசாபெகினா...

"என் பெயர் பால் ரோசெசாபெகினா(Paul Rusesabagina). நான் டி மெலே காலின்ஸ் ஐந்து நட்சத்திர விடுதியின் மேலாளன். ரூவாண்டாவின் தலைநகரான கிகாலியில் இருக்கும் மிகச் சிறந்த விடுதியிது. ருவாண்டா தான் என்னுடைய வீடு. மிகப் பெரும் மனிதர்களும் வரும் விடுதியானதால், மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களுடன் பழகியவன் நான். உலகம் ரொம்ப சின்னதாக தோன்றியது... அது நடக்கும்வரை"

ரூவாண்டா ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு நாடு. தொடர்ந்து இனக்குழுக்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நாடு. எல்லா ஆப்ரிக்க நாடுகளும் அப்படித்தான் என்கிறீர்களா, எனக்கு தெரியாது. ஒரு வேளை எரித்ரியா போன்ற நாடுகளில் இதேப் போன்றதொரு பிரச்சனை இருக்கலாம். நாம் ருவாண்டா பற்றி பேசலாம். ரூவாண்டாவில் இருக்கும் பிரச்சனை மிகவும் தீவிரமானது. ரூவாண்டா சில வேளைகளில் இலங்கையையும் நினைவுறுத்தலாம். அமெரிக்க,பிரிட்டிஷ், பிரெஞ்ச் காலனி நாடாக இருந்து பின்னர் விடுதலை பெற்ற ரூவாண்டாவின் அரசின் பொறுப்பினை டுட்ஸியிடம் கொடுத்துவிட்டு, சிண்டு முடிந்து போய்விட்டது பிரெஞ்ச் அரசு. டுட்ஸி என்பது ரூவாண்டாவில் இருக்கும் ஒரு இனக்குழு. ஆனால், பெருமளவில் இன்று இருப்பவர்கள் ஹூட்டு என்கிற இனக்குழுவினர். ஏன் ஹூட்டுக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்று தெரியவேண்டுமானால், கொஞ்சம் 10 வருடம் முன்னால் போகவேண்டும் .......

"மாமா, வாசலில் காவலாளிகள் துப்பாக்கியோடு பக்கத்துவீட்டுக்காரரை மிரட்டுகிறார்கள் என்று சொன்னவுடன், நான் சன்னலை விலக்கிப் பார்த்தேன். அவர்கள் ஹூட்டு போராளிகள். எதிர்வீட்டுக்காரன் ஒரு டுட்ஸி. நான் ஒரு ஹூட்டு. ஆனாலும் என் மனைவி தாட்டியானா டுட்ஸி. ஏதோ பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. ஆனாலும், எனக்கு ருவாண்டாவின் ஜெனரலை தெரியும். இதுதாண்டி, ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் என் விடுதியில் நடக்கிறது. பெரிதாய் ஒன்றும் நடக்காது. பார்த்துக் கொள்ளலாம். ஆனால், என் மைத்துனன் மறுநாள் விடுதிக்கு வந்து இனக்கலவரம் வெடிக்கும் அபாயமிருக்கிறது என்று சொன்னான். ஜெனரலும், ஐ.சபையின் சமாதான குழு தலைவர் கர்னல் ஆலிவரும் இருந்ததால் அதை நிராகரித்து விட்டேன். மறுநாளிலிருந்து, என் மைத்துனன் பற்றியும், அவனின் குழந்தைகள் பற்றியும் தகவலில்லை.ஏதோ தீவிரமாய் நடக்க இருக்கிறது....."

1994-ல் ஹூட்டு இனக்குழுவினர் ஆளும் டுட்ஸியினரின் மீது அபாரமான அன்பு வைத்திருந்தனர். அப்போதுதான் ரூவாண்டாவின் பிரதமர் கொல்லப்பட்டார். பார்க்கும் டுட்ஸிகள் ஒருவரை கூட இந்த உலக கஷ்டங்கள் எதையும் அனுபவிக்க இடம் தராமல் கொல்ல ஆரம்பித்தனர். சில சமயத்தில் அன்பு மிகுதியாகும் போது, வீடுகளை எரித்து, அனைவரைம் கொன்று எக்களித்தனர். இது இலங்கையினை நினைவுறுத்தினால் நான் பொறுப்பல்ல. கொஞ்சம் கொஞ்சமாய் தனி ரேடியோவினை வைத்துக் கொண்டு கரப்பான் பூச்சிகளை (டுட்ஸீகளின் செல்லப்பெயர்) கொல்ல இளைஞர்களை உருவேற்றிக் கொண்டிருந்தனர். வேலையின்மை, வறுமை, பொருளாதார கீழ்நிலைமை இவற்றில் சிக்கியிருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டுமில்லையா, அடுத்தவர்களை சீண்டுவதற்கும், தன் ஹூரோயிசத்தை நிருபிப்பதற்கும். கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு பார்க்கும் கரப்பான்பூச்சிகளை கொல்ல ஆரம்பித்தனர். கரப்பான்களை முழுவதுமாக அழித்தொழிப்பதில் தான் தங்களின் வாழ்க்கையிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு வேட்டையாட ஆரம்பித்தார்கள். ஹேராமில் அதுல் குல்கர்னி (ஸ்ரீராம் அபயங்கர்) கமலை முதலில் சந்திக்கும் போது ஒரு கேள்வி கேட்பார்... ஹன்டிங்(hunting) எப்படிப் போச்சு ? இங்கே ரூவாண்டாவில் ஹன்டிங் இப்போதுதான் ஆரம்பித்தது.

"மறுநாள் என் வீட்டு வாசலில் போராளிகளின் ஜீப் நின்றது. நேற்று இரவுதான் கொஞ்ச டுட்ஸிகள் என் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். காலையில் கரப்பான்கள் எங்கே என்று கேட்டுக் கொண்டு ஜீப் வந்துவிட்டது. நான் அவர்களை சமாதானகும் படி பேசி பார்த்தேன். ஒரே வழி, லஞ்சம் கொடுப்பதுதான். அவர்களின் தலைவனிடத்தில் பேரம் பேசினேன். தலைக்கு 10,000 பிராங்குகள் என்று சொல்ல, அவர்களையும் அழைத்துக் கொண்டு என் விடுதிக்கு வந்தேன். என் லாக்கரிலிருந்து பணத்தினை எடுத்து தந்து அவர்களை மீட்டேன். ஆனாலும், ரொம்ப நாளைக்கு கைவசம் இருப்பு இருக்காது. அதனால், கர்னலுடனும், பிற வெளிநாட்டினருடனும் பேசினேன். அவர்களும் அவர்களின் நாடுகளோடு பேசினார்கள். இரண்டு நாட்களில், அமெரிக்க, பிரெஞ்ச் ராணுவம் உதவிக்கு வந்தது. ஒரு வழியாக கஷ்டங்கள் முடிந்து விட்டது. இனி நிம்மதியாக வேலையைப் பார்க்கலாம் என்றிருந்தபோது, கர்னல் ஒரு குண்டினை தூக்கிப் போட்டார்"

ஹூட்டுகளில் இருக்கும் தீவிரவாத பிரிவினர் இன்ட்ராஹாம்வே (Interahamwe). வடகிழக்கு ரூவாண்டாவில் இருந்து பயணித்து டுட்ஸீகளுக்கு பரலோக பதவி கொடுத்தவர்களில் முதன்மையானவர்கள். ரூவாண்டாவின் ராணுவம் டுட்ஸீகள் நிறையபேர் அடங்கிய ராணுவம். அதனால், இன்ட்ராஹாம்வேயின் முக்கிய குறிக்கோள், அடுத்த தலைமுறை டுட்ஸிகள் இருக்கக் கூடாது என்பதுதான். டுட்ஸி குழந்தைகள், சிறுவர்கள், சிறுமியர்கள் என்று தேடி, தேடி, ஹன்டிங் தொடங்கியது. பார்க்குமிடங்களிலெல்லாம் ஹூட்டு இளைஞர்கள் கையில் கத்தி, துப்பாக்கியுடன் 1. டுட்ஸிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள் 2. பெண்களை வன்புணர்ந்து கொண்டிருந்தார்கள் 3. ஆப்ரிக்க தொல்குடி நடனத்தினை ஆடிக் கொண்டிருந்தார்கள். சாத்தான் ஹூட்டுகளிடம் தோழமையுடன் பழகி, வன்மத்தினை வளர்த்துக் கொள்ள சொல்லிக் கொடுத்தான். அவர்களும், நல்ல மாணாக்கர்களாக வெகு சீக்கிரத்தில் சாத்தானின் பாடத்திட்டத்தினை கற்றுத் தேர்ந்தார்கள். இனி ரோட்டில் இறங்கி சொல்லிக் கொடுத்ததை நல்ல மாணாக்கனாய் பரிசோதித்து பார்த்துவிடுவதுதான்.

"ராணுவ உதவி எங்களுக்கு இல்லை. எங்கள் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பயணிகளுக்கு. அவரவர் அவரவர் நாடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல தனி விமானமும், ராணுவமும் வந்தது. நீ ரூவாண்டனா என்று கேட்டார்கள். ஆம் என்றேன். அப்படியானால், உனக்கு விமானத்தில் இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஸ்காட்ச் வாங்கி தந்து, கியுப சுருட்டுகள் வாங்கிக் கொடுத்து, நிமிடத்துக்கொருமுறை, பால் இதை செய்வாயா, அதை செய்வாயா என்று கேட்டவர்கள், மொத்தமாய் புட்டத்தை காண்பித்து விட்டு வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறுவதில் கர்னலும் ஒருவர். பாவம் அவர் என்ன செய்யமுடியும். ஐ.நா சபையின் குழுவினரையும், பாதுகாப்பாக அழைத்து செல்லதான் ராணுவம் வந்திருக்கிறது. மழை கொட்டியது. என் விடுதியினுள்ளே திடீரென நூற்றுக்கணக்கில் ஆங்கில பாதிரிமார்களோடு, டுட்ஸீ மக்கள் வந்தார்கள். எல்லாம் இன்ட்ராஹாம்வேயின் சதிராட்டம். இந்த பெயரினை ரொம்ப நாள் கழித்து தான் அறிந்துக் கொண்டேன். ராணுவம், அக்கூட்டத்தில் வந்த வெளிநாட்டவர்களை மட்டும் பிரித்து அவர்களையும் பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு கிளம்பிப் போய் கொண்டிருக்கிறார்கள். இனி நான் பேசுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை. மரணம் நிச்சயம். இன்றோ, நாளையோ ....."

மக்களை கொன்று, அண்டை ஆப்ரிக்க நாடுகளிடமிருந்தும், மலேசியாவிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும், சர்வ சாதாரணமாய் கத்திகளும், துப்பாக்கிகளும் புழங்க ஆரம்பித்தன. எப்படி வாங்குவது ? இருக்கவே இருக்கிறது, டுட்ஸிகளின் வீடுகள். அவர்களை கொன்றுவிட்டால், அவர்களின் உடமை ஹூட்டுதாகிவிடும். அப்புறம் என்ன கவலை. துப்பாக்கிகளும், கத்திகளும் வெகு சுலபமாக கிடைக்கும். இங்கே சென்னையில் நல்ல அரிவாள் வேண்டுமானால் சொல்லுங்கள், எழும்பூரின் காந்தி இர்வின் பாலத்தில் ஏறி இறங்கி, நேராக வந்து சித்ரா திரையரங்கு போகுமிடத்தில் இருக்கும் குடிசைகளில் இருக்கும் புரோக்கர்கள் நீங்கள் கொடுக்கும் காசுக்கு வஞ்சனையில்லாமல் வாங்கி தருவார்கள். அப்படியே வலதுபுறம் திரும்பி புதுப்பேட்டில் நுழைந்தால், திருடிய வண்டியிலிருந்து சைக்கிள் செயின், ஆசிடு பாட்டில்கள் வரை சல்லிசாக கிடைக்கும் - அம்மா அப்பா தவிர. பெரிதாய் கஷ்டப்பட தேவையில்லை. அமைதிப் பூங்காவான சென்னையிலேயே இவ்வளவு சல்லிசாக கிடைக்கும்போது, உள்நாட்டு கலவரமும், பசியும்,பட்டினியும் தாண்டவ மாடும் ஆப்ரிக்காவில் ஆயுதங்களுக்கா பஞ்சம். ரூவாண்டா ராணுவம் அப்போதுதான் வந்திறங்கிய ஹென்கெய்ன் பியர் அருந்தி தாகத்தினை தணித்துக் கொண்டிருந்தது. பாவம், சூடு உச்சத்தில் இருந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்

"என்ன செய்வது என்று தெரியவில்லை. விடுதியில் இருக்கும் அனைவரையும், அவர்களுக்கு தெரிந்த வெளிநாட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் செய்ய சொல்லி, அவர்களின் நிலலயினன எடுத்து சொல்வதன் மூலம், உலகின் கவனத்தினை திருப்ப சொன்னேன். வேறு வழியில்லை. இனி எங்களை நாங்கள் தான் காபாற்றிக் கொள்ள வேண்டும். கண்டிப்பாக டுட்ஸீகளை வைத்திருப்பதால், போராளிகள் வருவார்கள் இல்லை வந்தார்கள். காலையில் என் கன்னத்தினை தழுவியது ஒரு பிஸ்டல். தலைவன் போல் தெரிந்த ஒருவன் என்னை எழுப்பி, விடுதியில் இருக்கும் மொத்த கரப்பான்களின் விவரத்தினை கேட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் மெதுவாக நழுவி, என் முதலாளிக்கு போன் செய்தேன். என் முதலாளி நல்லவர். பெல்ஜியத்தில் இருக்கிறார். பெருந்தலை. நான் நிலவரத்தினை சொன்னேன். எப்படியாவது கொஞ்ச நேரத்தினை கழிக்குமாறு சொல்லி மீண்டும் பேசுவதாக சொன்னார். ஒவ்வொரு விநாடியும் நரகமாக கழிந்தது. வாழ்வில் யாராவது மரணத்தினை வெளியில் உட்காரச் சொல்லி பியர் தந்து உபசரிப்பார்களா ? நான் செய்தேன். எல்லா போராளிகளும் பியர் குடித்துக் கொண்டிருந்தார்கள். என் குடும்பம் மற்றும் என் விடுதியிலிருக்கும் அனைவரின் உயிரும், அவர்கள் மெதுவாக குடிக்கும் பியரில்தான் அடங்கியிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அது நடந்தது. அதன் தலைவன் என்னை கூப்பிட்டு என் பெயரினைக் கேட்டு, வாழ்நாளின் அவன் என்னை மறக்கமாட்டேன் என்று சொல்லி அவன் படையுடன் கிளம்பி போனான். என் முதலாளி பேசினார். அவர் பிரெஞ்ச் ஜனாதிபதியோடு இதுப்பற்றி பேசியிருக்கிறார். அப்பாடா, உயிர் திரும்பி வந்தது. உள்ளே வந்த ஜீப்பில் கர்னல் சந்தோஷத்துடன் விடுதியில் இருக்கும் பெரும்பாலானோரை விடுவிக்க விமானமும்,பாதுகாப்புக்கு வீரர்களும் வந்திருக்கும் சந்தோஷ செய்தியை சொல்லி இறங்கினார். எங்களின் பிரார்த்தனையும், போன் அழைப்புகளும் வீண்போகவில்லை. எல்லா துயர்களும் முடிவுக்கு வந்து விட்டன....."

ஐக்கிய நாடுகளின் அமைதி படை மிகவும் சிறியது. அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை, அமைதியாக வேலை செய். அவ்வளவு தான். அமைதியை நிலைநாடுவது அவர்களின் வேலையல்ல. அது அந்தந்த நாட்டின் ராணுவத்தினரின் பணி. இது ஹூட்டுகளுக்கு வசதியாகி போனது. அவர்கள் வெளிநாட்டவர்கள் மீது கைவைக்கவில்லை. அதனால் எந்த நாடும் அவர்களை பகையாய் பார்க்கவில்லை. எல்லா நாடுகளும், காப்பசினோ குடித்து கொண்டு, ஐரோப்பிய லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனெட்டட் ஜெயிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஹூட்டுக்கள் இங்கே கொலைக்கார ஆட்டத்தில் இடைவெளியே இல்லாமல் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். நான் 95-இல் நண்பனின் காதலியை பார்க்க துணையாக, நல்ல திருந்திய தமிழ் சினிமா நண்பன் போல, எத்திராஜ் கல்லூரி வாசலில், டீயும் பிஸ்கெட்டும் சாப்பிட்டுக் கொண்டு, 3 மணிக்கு விடும் கல்லூரிக்கு, 12 மணியிலிருந்தே காத்துக் கொண்டிருந்தேன். அங்கே ரூவாண்டாவின் ஜெனரல் சாதுரியமாக யார் கை ஒங்குகிறதோ அங்கு சேர்ந்துவிடலாம் என்பதால், கவலையில்லாமல் ஸ்டார் குத்திக் கொண்டு ஸ்காட்ச் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்.

"என்னையும் சேர்த்து சில நூறு பேர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. பஸ் புறப்பட காத்திருந்தது. இந்த யுத்த பூமியிலிருந்து விடுதலை. இனி தினம் தினம் நாளைக்கு வாழ்வோமா, உயிரோடு இருப்போமா என்கிற கவலையிருக்காது. என் மனைவி மக்கள் உட்பட எல்லோரும் இங்கிருந்து புறப்படலாம். எல்லோரும் ஏறிவிட்டார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன். ஏறியவர்களை விட நிறைய பேர் எங்களை நிராதராவாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாட்டேன். நான் போகமாட்டேன். போக விரும்பவில்லை. இது என் வீடு, ரூவாண்டா. இவர்கள் என் சகோதர, சகோதரிகள். இவர்களை விடுத்து நான் எங்கேயும் போகமாட்டேன். பஸ்ஸில் ஏறிய நண்பனொருவனிடத்தில் என் மனைவி மக்களை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி ஏறாமல் இறங்கிவிட்டேன். பஸ் புறப்பட்டு போனது. இனி இவர்கள் தான் என் மக்கள். ஒரு முறை பணமும், ஒரு முறை முதலாளியும், சில முறை ஜெனரலும் காபாற்றிவிட்டார்கள். விடுதியில் உணவு இருப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. ஜெனரலும் கையை விரித்து விட்டார். முதலாளியும் இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது. ஒருவேளை நாளை காலை என் நெற்றியினை புல்லட் துளைத்து ஈ மொய்க்க கிடைப்பேனோ என்னவோ........ ஆனால், எது நல்லது என்று நினைத்தனோ,அது நடக்கவில்லை. பாதி உயிர்கள் ஊசலாட போன பஸ் ரத்தக் களரியுடன் திரும்பி வந்தது. கர்னல் வழியில் ஹூட்டுக்கள் மடக்கி தாக்குதல் நடத்தினார்கள் என்று சொன்னார்... ஆக நாளை உயிர் பிழைப்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை"

பல்வேறு நாடுகளை சேர்ந்த பத்திரிக்கையாளர்களின் கூட்டுமுயற்சியால், ரூவாண்டாவில் நடக்கும் கலவரத்தின் மீது கொஞ்சமாய் பாலேடு போல், உலக நாடுகளின் கவனம் திரும்பியது. அப்போதும், அவர்கள் ஐ.நாவின் அமைதிப்படை இருப்பதால் பெரிதாய் கலவரங்கள் நடக்க வாய்ப்பில்லை என்கிற தோரணையில் மீண்டும் செகண்ட் ஹாப் ஸாக்கர் பார்ப்பதில் மும்முரமானார்கள். நானும், ஒரு ஹோலி பண்டிகையின் போது எத்திராஜ் வாசலில் தெரிந்த பெண்ணுக்கு சாயம் பூசப் போய், போலிஸ் பேட்ரோல் துரத்த, ஒரு நக்ஸலெட் போல் பேருந்து மாறி, மாறி கல்லூரி அடைந்து நண்பர்களுடன், எங்களின் வீரதீர சாகசங்களை பேசி மகிழ எம்.எம்.டி.ஏ காலனிக்கு எதிரிலிருக்கும் அய்யனார் ஒயின்ஸில் சரணடைந்தோம். அங்கே டுட்ஸிகளை மொத்த மொத்தமாய் ஹூட்டுகள் வேட்டையாட தொடங்கினார்கள். வீடுகள் கொளுத்தப்பட்டன. ஒரு நதிக் கரையின் ரோடெங்கிலும், டுட்ஸிகளின் பிணங்களைப் போட்டு வேகத்தடை ஏற்படுத்தினார்கள். போராட்டம் உச்சக்கட்டத்தினை எட்டியது. டூட்ஸியல்லாதவர்கள் மட்டுமே, கையில் கத்தியுடனும், துப்பாக்கியுடனும், சாலைகளில் வலம் வந்தார்கள். அத்துமீறல்கள் தொடங்க ஆரம்பித்தன. கொன்று போடுவதற்கு டூட்ஸிகள் இல்லாததால், கத்தி பிடித்த கை, பிற நாட்டவர்களைப் பார்க்க ஆரம்பித்தது. ஆப்ரிக்க சனி பகவான் சற்றே ஹூட்டுகளை பார்த்து புன்னகை சிந்தினார்.

"கர்னல் தைரியம் சொன்னார். என் முதலாளியிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசினேன். ஜெனரலிடம் பேசி, அமெரிக்க படைகள் சாட்டிலைட் மூலமாக அவரை கண்காணிப்பதாக பொய் சொன்னேன். அவர் நிரபராதி என்று நிருபிக்க வேண்டுமெனில் நான் அமெரிக்கர்களோடு பேச வேண்டியது அவசியமென்று புருடா விட்டேன். ஜெனரல் முதலில் என்னை குறிப்பார்த்தாலும், என் வார்த்தைகள் உரைத்திருக்கவேண்டும். இறுதியில் சம்மதித்தார். இங்கேயிருக்கும் 1,268 பேர்களின் வாழ்க்கைக்கும் ஒரே வழி, ஜெனரலின் படையுடன், கர்னலோடு எல்லைக்கருகில் செல்ல வேண்டியதுதான். அங்கிருந்து எங்கேயாவது சென்றுவிடலாம். நாளை காலை தான் எங்களின் இத்தனை நாள் போராட்டங்களுக்கு இறுதிநாள். வாழ்வோ, சாவோ நாளை தெரிந்துவிடும்.

காலையில் கிளம்பினோம். எதிர்பார்த்தபடியே கையில் ஆயுதங்களோடு ஹூட்டுகள் எதிர்திசையில். முன்னால் சென்ற ஜெனரலின் வீரர்களை அவர்கள் வீழ்த்திவிட்டார்கள். மரணம் கண்முன்னே ஜெகஜோதியாய் தெரிய ஆரம்பித்தது. இன்னமும் 200 அடி தூரம் தான் எங்களின் வாகனம் அவர்களிடத்தில் சிக்கி சின்னாபின்னமாக. வாகனத்திலிருக்கும் அனைவரும் கடவுளை வேண்ட ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அது நடந்தது. எங்களின் பக்கவாட்டு திசைகளிலிருந்து ஜெனரலின் படைகள் ஹூட்டு படைகளை தாக்க ஆரம்பித்தன. இதை எதிர்ப்பார்க்காத ஹூட்டுக்கள் சிதறி ஒட ஆரம்பித்தார்கள். கண்களின் முன்னே சாலை தெரிகிறது. என்னை கிள்ளிப் பார்க்கிறேன். நான் உயிரோடு இருக்கிறேன். என்னோடு பயணித்தவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். தங்கு தடையின்றி எங்கள் பயணம் ஐ.நா. அமைதி முகாமிற்கு வந்தது. நானும், என்னோடு வந்தவர்களும் உயிரோடு இருக்கிறோம். இனி பயமில்லை. எல்லோருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம். "

95-இல் உலக படைகள் ரூவாண்டாவில் களத்தில் இறங்கின. இன்ட்ராஹாம்வேயினை எல்லைக்கு அப்பால் துரத்தியடித்தன. அவர்களுக்கு பயந்து ஏற்கனவே நிறைய டூட்ஸிகள் பக்கத்து நாடான காங்கோவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள். விரட்டியடித்தபின் கணக்கெடுத்து பார்க்கையில் ஒரு வருட அவகாசத்தில் ஹூட்டு தீவிரவாதிகள் பத்து லட்சம் டூட்ஸிகளை கொன்று குவித்திருந்தனர். நாடும், ரோடும் பிணக்காடாய் மாறியிருந்தது. 2005-இல் பத்தாம் வருட நினைவாக டுட்ஸிகள் நினைவுறுத்துகின்றார்கள். இன்னமும், ரூவாண்டாவின் எல்லைகளில் இன்ட்ராஹாம்வேயினர் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருகிறார்கள். சென்ற மார்ச்சில் தான் ஹூட்டுக்கள் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். இரு இனக்குழுக்களுக்கு இடையே நடந்து வந்த தொடர் போர் ஒரளவிற்கு இப்போது தான் முடிவிற்கு வந்திருக்கிறது. 2005-இல் தான் ஆப்ரிக்க பிரச்சனைகளைப் பற்றி அறிய ஆரம்பித்திருக்கிறேன். கலவரம் நடந்த காலத்தில் கிரிக்கெட் பார்த்து, கல்லூரி வாசல்களில் காத்திருந்தற்காக வெட்கப்படுகிறேன்.

இதுவரை பேசிய நான், பால் ரோசெசாபெகினா இப்போது பெல்ஜியத்தில் இருக்கிறேன். ஆனால், நாராயணாகிய நான் பார்த்தது, பால் ரோசெசாபெகினாவின் உண்மை சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஹோட்டல் ரூவாண்டா என்கிற திரைப்படத்தினை. டான் சியேடுல், பால் ரோசெசாபெகினாவாக வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தினைப் பற்றி எழுதினால், ரூவாண்டாவின் பின்புலம் தெரிய வேண்டும். அதற்காகவே, வழமையான நடையிலிருந்து மாறி, பால் ரோசெசாபெகினாவாக இதை எழுத வேண்டியிருந்தது.

பால் ரோசெசாபெகினாவிற்கு மிக உயர்ந்த விருதுகள் கிடைத்தன. உலகமே கை கழுவி விட்டு போன நிலையில், தன் ஹோட்டலினை வைத்துக் கொண்டு 1,268 டூட்ஸி இனத்தவர்களை காத்திருக்கிறார். ஹாலோகாஸ்ட்டில், எவ்வாறு ஷிண்டலரின் பெயர் நிலைத்திருக்கிறதோ, அதேப் போல ரூவாண்டா படுக்கொலை பேசப்படும் போதெல்லாம் பால் ரோசெசாபெகினா நினைவு கூறப்படுவார். இன்றுவரை அவரின் மைத்துனரைப் பற்றிய தகவல்கள் இல்லை. அவர் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், மைத்துனரின் குழந்தைகளிருவரையும், ஜ.நா. அமைதி முகாமில் கண்டெடுத்து, இன்று தன் பிள்ளைகளோடு அவர்களையும் சேர்த்து பெல்ஜியத்தில் வளர்க்கிறார்.

இந்த படத்தின் டிவிடியில் வரும் தொடக்கப்பாடல், டூட்ஸிகளின் இனக்குழு பாடல். அதில் ஆங்கிலம் சேர்த்து பாடியிருப்பார்கள். அதன் ஒலம் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அசல் பால் ரோசெசாபெகினாநகல் பால் ரோசெசாபெகினாபடம்: ஹோட்டல் ரூவாண்டா (2004)
இயக்கம்: டெர்ரி ஜ்யார்ஜ்
நடிப்பு: டான் சியேடுல், ஜீன் ரெனோ, நிக் நோல்டே

Winner AGF People's Choice Award - Torento international Film Festival
Winner Audience Award - Best Feature AFI Festival 2004
Winner One of the top films of the year Nation Board of Review
Winner Stanley Kramer Award Producers Guild Awards
Winner IFP Gotham Awards - Actor of the Year
Oscar Nomiation - Original Screen Play, Actor in a Leading Role, Actress in a Supporting Role

Comments:
in TSCII

¿øÄ §Å¨Ä ¦ºö¾¢Õ츢ȣ÷¸û ¿¡Ã¡Â½ý.

þó¾ô À¼õ À¡÷òÐÅ¢ðÎ ´Õ Å¡ÃòÐìÌõ §ÁÄ¡¸ àì¸õ ÅáÁÄ¢Õó§¾ý. ÀÄ ¾¼¨Å ±Ø¾Ä¡õ ±Ø¾Ä¡õ ±ýÚ ÅóÐ þÂÄ¡Áø Å¢ðÎÅ¢ð§¼ý. ÓÂýÈ¢Õó¾¡Öõ þó¾Ç×ìÌ ±Ø¾ Åó¾¢Õ측Ð.

¿ýÈ¢ ¿¡Ã¡Â½ý!

Þð…¢ þÉô ¦Àñ¸ÙìÌ þýÉÓõ ¦¾¡ø¨Ä¸û ¦¾¡¼÷¸¢ýÈÉ. «¨¾Ôõ ¿¡õ §Àº §ÅñÎõ.

-Á¾¢
 
மதியின் கருத்து ஒருங்குறியில்

//நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் நாராயணன்.

இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக தூக்கம் வராமலிருந்தேன். பல தடவை எழுதலாம் எழுதலாம் என்று வந்து இயலாமல் விட்டுவிட்டேன். முயன்றிருந்தாலும் இந்தளவுக்கு எழுத வந்திருக்காது.

நன்றி நாராயணன்!

டூட்ஸி இனப் பெண்களுக்கு இன்னமும் தொல்லைகள் தொடர்கின்றன. அதையும் நாம் பேச வேண்டும்.

-மதி//
 
நாராயணன் நேற்றிரவு இதே படுகொலைகளோடு சம்பந்தப்பட்ட இன்னொரு HBO-PBS இருமணிநேரப்படத்தினையும் (Sometimes in April) பார்த்தேன். ஆனால், சென்ற ஆண்டு பிபிஸியின் Frontline இலே வந்த Ghost of Rwanda என்ற உண்மையான படக்குறிப்புகளுடனான விவரணம் இவை இரண்டையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும். சொல்லப்போனால், Hotel Rwanda இன் சில காட்சிகள் & Sometimes in April இந்த விவரணத்திலே காட்டப்படும் உண்மையான காட்சிகளைப் பின்பற்றியே எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றன. இயலுமானால், அந்நேரத்திலே ஐநாபடையின் பொறுப்பாளராக இருந்த க்யூபெக்கின் Lieutenant-General Roméo Dallaire இதுமேலான புத்தகத்தினையும் வாசித்துப்பாருங்கள். நான் அவரின் புத்தகத்தினை வாசிக்கவில்லை; ஆனால், மேற்படி விவரணத்திலும் பின்னர் சென்ற வாரம் Charlie Rose இன் நிகழ்ச்சியிலேயும் அவர் சொன்னதைக் கேட்டேன். அதன்பிறகு நேற்று Sometimes in April இன் பின்னர் ஓர் அரைமணிநேரம் இதுகுறித்து சில முக்கிய தலைகளின் கலந்துரையாடல் PBS இலே நிகழ்ந்தது. வழக்கம்போல, போல் உல்ஃப்பெவிட்ஸ் தன்னுடைய அகங்காரத்தைக் காட்டினார் :-( அடுத்தது சூடானின் டவ்பர் பற்றியே எல்லோரும் பேசுகின்றார்கள். பேசிக்கொண்டேயிருக்கின்றார்கள். பாருங்கள் எல்லாம் முடிந்தபின்னால், பத்து ஆண்டுகளிலே இரண்டு படங்கள் வரும். குறிப்பிடத்தக்கவிடயம்; Hotel Rwanda இன் இயக்குநர் ஐரிஸ் குடியரசு இராணுவத்தினைச் சேர்ந்தவர் என்று சந்தேகப்படப்பட்டவரென்றால், Sometimes in April இன் இயக்குநர் முன்னைய அரிஸ்டைட்டின் ஆட்சியிலே ஹெய்டியின் பண்பாட்டு அமைச்சராக இருந்தவர். Welcome to JollyWOOD ;-)
 
நாராயணன் நல்ல பதிவு. எங்கள் மக்கள் பலருக்கும் பல துரதிட்ட நினைவுகளை இப்படம் கொண்டு வந்திருக்கும். சுனாமிக்கு உலகெங்குமிருந்து உதவிகளும் தொண்டர்களும் கொடுத்த ஆதரவை ஏன் ருவண்டா கைநீட்டிக் கதறிபோது கொடுக்கவில்லை? கரப்பான் பூச்சிகள் என்றுதான் ருவண்டா மக்களை மேற்கு உலகம் பார்க்கின்றாதோ தெரியவில்லை.

பெயரிலி "Ghost of Rwanda" இது DVD இல் கிடைக்குமா?
 
http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/ghosts/etc/tapes.html
http://www.shoppbs.org/product/index.jsp?productId=1786689

you can watch the excerpts here too:
http://www.pbs.org/wgbh/pages/frontline/shows/ghosts/video/
(Hope the links work)
 
நன்றிகள் நாராயணன்.
இந்த படம் பார்க்கின்றேன். ஆனால் உங்கள் பதிவு மிக தெளிவாக விவரங்களை முன் வைத்தது. மிக்க நன்றி.
 
நன்றி மதி, ரமணி, கறுப்பி, பாலாஜி-பாரி. இந்த படம் எல்லா ஈழத்தமிழர்களும் பார்க்கவேண்டிய படம். இதை தாண்டி உலகமெங்கும் பரவியிருக்கும் பணம் படைத்த ஈழத்தமிழர்கள், இது போல ஒரு படத்தினை எடுக்க வேண்டும். சினிமா ஒரு மிகப்பெரிய ஊடகம்.

இது ஈழத்தமிழர்களுக்கு, தயவு செய்து தமிழக இயக்குநர்களை நம்பாதீர்கள். எதிர்பார்க்காதீர்கள். அது மணிரத்னமேயானாலும், அரையும் குறையுமாய் தான் பிரச்சனை வெளிவரும். உங்களுடைய வலிகள், வெளியிலிருந்து பார்க்கும் எங்களைவிட உங்களுக்கு தான் நன்றாக தெரியும். அவ்வாறிருக்கையில், நீங்கள் தான், சேவியர் போலவோ, ஹோட்டல் ரூவாண்டா போலவோ படமெடுத்து உலகிற்கு காண்பித்தாகவேண்டிய கட்டாயம் உங்களுக்கிருக்கிறது. இதன்மூலம், நிறைய நன்மைகள் நடக்க கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்.
 
நாராயணா...நாராயணா...

நீங்கள் அன்று விஜயின் பதிவிலே இதை பற்றி சொல்லும் போதே இந்த விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.

கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும்.

ஆனாலும் உங்கள் வித்தியாசமான எழுத்துநடை படிக்கும் போது எங்கும் நகல முடியாமல் கட்டிப்போட்டுவிட்டது.

எம் ஈழத்து மக்களும் உலகத்தின் பார்வையை தம் பக்கமிழுக்க இதுபோன்ற ஒரு படம் தேவை. அது விரைவில் நடக்க வாழ்த்துக்கள்.
 
நாராயணன், மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள். நாகரீகம் அடைந்த மனிதனின் தோலைச் சுரண்டினால் வெளிப்படும் கோரம் ஒரு பக்கம், எது நடந்தால் எனக்கென்ன என்றும், அவனவன் அடித்துகொண்டால் தான் எனக்கு நல்லது என்றிருக்கும் மனிதர்களையும் பார்க்கையில்...

படம் பார்க்கவேண்டும்.
பெயரிலிக்கும் நன்றி!
 
யப்பா... எவ்வளவு விவரங்கள். கலக்கலாக/விவரமாக எழுதியிருக்கிறீர்கள் நாராயணன். நன்றி.

அப்புறம் ஒரு கேள்வி. "The Boy Who Plays on the Buddhas of Bamiyan" என்ற விவரணப் படத்தை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இன்று மதியம் அந்த விசிடியை வாங்கலாம் என்ற உந்துதல் இருந்தும் படத்தைப் பற்றி கேட்டப் பிறகு வாங்கலாமென விட்டுவிட்டேன். சுமாராக இருந்ததல் வாடகைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம். நல்ல இருந்தால் விலை கொடுத்து வாங்கி என் பட நூலகத்தில் ஆவணப்படுத்திக் கொள்வேன். அதற்காக தான் நான் கேட்கிறேன். IMDB (http://www.imdb.com/title/tt0398801/) விவரங்கள் போக நண்பர்கள் யாராவது பரிந்துரைப்பீர்களா?
 
நன்றி சம்மி, தங்கமணி, விஜய். விஜய் உங்களுக்கு மடலனுப்பியிருக்கிறேன்.
 
நரேன், அருமையானதொரு பதிவு. ஆறுதலாக இப்போதுதான் இதை வாசிக்கமுடிந்தது. Hotel Ruwanda ஒவ்வொருமுறையும் வாடகைக்கு எடுக்கவேண்டும் என்று நான் வாடகைக்கு படம் எடுக்கும் கடைக்குப் போகும்போது நினைப்பேன், ஆனால் அதற்குமுன் யாரோ ஒருவர் அதை எடுத்துச் சென்றுவிடுவார். உங்களின் இந்தப்பதிவு விரைவில் இந்தப்படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கின்றது. பால் ரோசெசாபெகினாவின் மனிதாபிமானம், (Schindler's List)Schindlerஐ நினைவுபடுத்துகிறதல்லா
ஈழத்தமிழர்களும் தங்கள் பிரச்சனையை வெளிக்கொணர இவ்வாறான படங்கள் எடுக்கப்படவேண்டும் என்ற உங்களைப் போன்றவர்களின் ஆதங்கம் புரிகின்றது. ஆகக்குறைந்தது இனிவரும் இளந்தலைமுறை அதைச் செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதற்கான சில மொட்டவிழ்ப்புக்களை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.
ஆபிரிக்க நாடுகளின் கலை, இலக்கியங்கள் பரவலாகத் தமிழில் பேசப்படவில்லைபோலத்தான் நான் வாசித்தளவில் எனக்குத் தெரிந்ததது. ஆனால் ஆபிரிக்கா நாடுகளின் வாழ்க்கை முறைகளில் பல, எங்கள் நாட்டுமுறைகளோடு ஒத்துப்போவதை, ஒரு ஸிம்பாவே நாட்டுத் தோழியொருத்தியுடன் உரைடாடியபோது/உடையாடுகின்ற பொழுதுகளில் கண்டுகொள்கின்றேன். கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து, பெண் அடக்குமுறை வரை பல விசயங்கள் ஒத்திருந்தன. நேற்று The lose of sexual innocence ஒரு படம் பார்க்கத் தொடங்கினேன்(முழுதாய் பார்த்து முடிக்கவில்லை). கொஞ்சம் வித்தியாசமாய் எடுத்தது போலத்தோன்றியது.....கென்யாவில் கதை ஆரம்பித்து, இலண்டன் இன்னபிற இடங்கள் என்ற கிளை விரிப்பது போன்ற கதை.
 
When i saw this movie i cannot resist the temptation of equating the Rwanda Hutu-tutsi case with indian Aryan-Dravidian case. Wherever Europeans ruled they divided and ruled. And obviously there are fall outs. Rwanda faced it with ethnic clensing. Forunately in India good sense prevailed over and ethnic clensing was averted. But, still there are people in high places who beleive in these fantasies and try to preach hate.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]