May 10, 2005

எஸ்கேப்

அடுத்த மூன்று வாரங்களுக்கு நான் எஸ்கேப். தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் காத்திருக்கின்றன. நான் போனாலேயொழிய வேலை நடக்காது. அதுவுமில்லாமல், என்னுடைய அலுவலகமும் இடம்பெயரும் சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே, மக்களே, கோடையினை என் கழுத்தறுப்புகள் எதுவுமின்றி கொண்டாடுங்கள். கொஞ்சநாள் பைனாகுலர் பரண் மேல் கிடக்கட்டும், வந்து தூசு தட்டி பார்க்க ஆரம்பிக்கிறேன். அதேப் போல் டிவிடியில் படம் பார்ப்பதற்கும் அடுத்த மூன்று வாரங்கள் தடா/மிசா/பொடா. தமிழ்மணம் தொடர்ந்து படிப்பேன் என்றெல்லாம் கதை விட விரும்பவில்லை. நேரம் கிடைக்கும் போது படிப்பேன் அவ்வளவே.

போவதற்கு முன், முந்தா நாள் மாலை, நண்பர் ஒருவர் போன் செய்து 1.50 ரூபாய் மதிப்புள்ள புத்தகத்திற்கு எவ்வளவு தருவாய் என்று கேட்டார், விவரங்கள் கேட்டறிந்தபின் 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன். 1936-இல் இராஜாஜி இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். இது ஒரு கதை தொகுப்பு. 1957 இல் மலிவுப் பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள். கதைகள் அனைத்தும், 1900த்தின் ஆரம்பங்களில் கதாசிரியன் எப்படி சமூகத்தை பார்த்திருக்கிறான் என்று சொல்லும்போது நெருப்பாய் வாழ்ந்திருக்கிறான் அவனென்று தெரிகிறது. தமிழின் மிகச்சிறப்பான கதாசிரியனாகவும், கவிஞனாகவும் இருந்திருக்க வேண்டியவன், அல்பாயுசில் செத்துப் போனான். (தமிழில் சாகாவரம் படைத்த நிறைய பேர்கள் அல்பாயுசில் போயிருக்கிறார்கள். கணித மேதை ராமானுஜம், புதுமைப்பித்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என ஒரு பெரும் பட்டியல் நீளும்.)

அவன் - சுப்பிரமணிய பாரதி. மகாகவி பாரதியார் எழுதிய கதைகளை கொண்ட தொகுப்பிது. பாரதியின் கவிதைகளைப் படித்திருக்கிறேன், சில வசன கவிதைகளை கதைப் போல சொல்லியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், கதைகளை படித்ததில்லை. வாங்கி புரட்டி பார்த்ததில் (ஜாக்கிரதையாக வேறு புரட்ட வேண்டும். செல்லரித்து போய், கிழியாமல் அட்டைப் போட்டிருக்கிறார்கள்) தான் வாழ்ந்த காலத்தின் சமூகத்தினை அதன் அழுக்குகளோடு சொல்லியிருக்கிறான். இந்த புத்தகத்தினை வாங்க காரணம், பாரதியின் மீதிருக்கும் காதல் மட்டுமல்ல, அந்த கால உரைநடையின் மீதும், செத்துப் போன தமிழ் சொற்கள் மீதிருக்கும் காதலும் கூட. கொஞ்சம் மணிபிரவாள நடையின் சாயலடித்தாலும், நிறைய புதிய சொற்களை மீட்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நைந்துப் போன புத்தகத்தின் முதல் பக்கம் பாரதியாரின் சங்கற்பங்கள்.இது ஜெயகாந்தனுக்கு அல்ல
"இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன். சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன். எப்போதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் - அதனையே தியானஞ் செய்து கொண்டிருக்க முயல்வேன். அதனைக் குறித்தே ஒயாமல் எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்."
இது தாண்டி சொல்லிவைத்து வாங்கியிருப்பது Same-Sex Love in India – Readings from Literature and History , by Ruth Vanita and Saleem Kidwai. இந்தியாவில் தன்பால் புணர்ச்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியம், புராணம், கதைகள் வாயிலாக நிறுவும் ஒரு அட்டகாசமான புத்தகம். கொஞ்சம் தலையணை சைஸ் இருந்தாலும், படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

ஒரு மாதம் கழித்து இவற்றை படித்து முடித்திருந்தால் எழுதுகிறேன்.

இப்போதைக்கு அபீட்டு. மூணு வாரம் கழிச்சு ரிபீட்ட்டு.

Comments:
பூம்புகார் பதிப்பகம் அவரது கட்டுரைகள், கதைகள் என இரண்டு தொகுதிகளை வெளியிட்டிருந்தது. இப்போது வேறு பதிப்பகங்கள் கூட வெளியிட்டிருக்கலாம். அவரது கதைகளில் பல மிக அற்புதமான நகைச்சுவையுடன் கூடியவை. சின்ன சங்கரன் கதை, சந்திரிகையின் கதை இதெல்லாம் மிக அற்புதமானவை. அவரை மகாகவி என்று சொல்வதால் அவர் கதை எழுதுவதில் குறைந்தவர் அல்ல என்று சொல்வீர்கள்பாருங்கள்.

அவரது கட்டுரைகளும் மிக அருமையானவை. இன்றும் அவை தமிழ் சமூகத்துக்கு தேவையாகவும், பொருந்துகிறவையாகவும் இருப்பது அவரது மேதமையைக் காட்டுகிறது என்று மகிழ்வதைக்காட்டிலும், அப்படியே இருக்கிறதே என்ற வருத்தம் தான் மேலோங்குகிறது.

ஜெயகாந்தனை நினைவு படுத்தி ஒரு நல்ல நினைவு மீட்டலில் எரிச்சல் வரவைத்துவிட்டீர்கள் :)

இதில் இந்த மாதிரி அவருக்கு வாரிசுகள் வேற.
 
சரி. நல்லபடியாக சென்று வருக!
 
//தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் காத்திருக்கின்றன//

அப்படியே சிங்கப்பூருக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் போடுங்க. உங்களை நிறைய பேச வைக்க வேண்டியிருக்கு.

பதிவில் மற்றவைகளைப் பற்றி... மூச்...
 
//அப்படியே சிங்கப்பூருக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் போடுங்க. //

போட்டால் போச்சு. நல்ல வணிக வாய்ப்புகள் வந்தால், சிங்கப்பூர்க்கும் சேர்த்து ஒரு ஓ போடலாம். :) அழைப்புக்கு நன்றி விஜய்.

நன்றி தங்கமணி, சின்ன சங்கரன் கதை, ஞானரதம், நவதந்திரக் கதைகள், சந்திரிக்கையின் கதை என்று விரிவாக எழுதியிருக்கிறது. சின்ன சங்கரன் கதையும், சந்திரிக்கையின் கதையும் முடிக்குமுன்னரே பாரதி இறந்துவிட்டார் என்பது புத்தகத்தில் பார்த்த சேதி
 
அப்படியே எங்க ஊருக்கும் வாங்க!!!!

சீக்கிரம் வேலகளை முடிச்சுட்டு வந்துடுங்க!!!
இங்கே எல்லா ப்ளாக் ஆளுங்களும் கொண்டாடிடப்போறாங்க:-)
 
அப்பாடா....இந்த மூணு வாரத்தில இவர் பிளாக் எடுக்கின்ற நேரம் மிச்சம்.
நன்றிகள் நாராயணன்.. ;))
 
"தொழில் ரீதியாக நிறைய பயணங்கள் காத்திருக்கின்றன"

பயணம் நன்கு அமைய வாழ்த்துக்கள்!!!

எங்கு தமிழகத்திற்கு வெளியிலா?

மூன்று வாரம் கழித்து உங்களிடம் இருந்து நிறைய சிந்தனையை தூண்டும் பல பதிவுகளை எதிர்ப் பாக்கிறேன்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
// வாங்கி புரட்டி பார்த்ததில் (ஜாக்கிரதையாக வேறு புரட்ட வேண்டும். செல்லரித்து போய், கிழியாமல் அட்டைப் போட்டிருக்கிறார்கள்) //
அப்படியே இந்தப் புத்தகம் பத்தி ஒரு பதிவு போட்டால் என்ன?
முடிஞ்சா ஒரு ஸெராக்ஸ் காப்பி போட்டு வைக்கவும்(இதில சந்தேகம் வேறயா ? எனக்குத்தான்).

//எஸ்கேப்//
இப்படி திடீர் உருப்பட்ற வழிய பாக்க ஆரம்பிச்சுட்டா இங்க நாங்க என்ன பண்றதாம்?
 
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நான் ஒரு வேலையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் விரைவில் மீண்டு உங்களுக்கு மடலிடுவேன்
 
துளசி கோபால், பாலாஜி-பாரி, சிவா, கார்த்திக், அருள் நன்றிகள். வெற்றிகரமாக இருக்குமென்று எதிர்ப்பார்க்கிறேன். பார்ப்போம்.
 
நாராயணன், வெளியூர் சென்றால் என்ன? அப்பப்போ, பைனாகுலருக்கு ஏதாவது விஷயம் அகப்படும். எதுக்கும் கையிலே மடிக்கணினி வைச்சிருப்பீங்களே. அதிலே சேகரித்துக் கொண்டு வாருங்கள். இங்கே வந்து ஒன்று ஒன்றாக எடுத்து விடலாம்.
Jokes Apart, all the best and have a great time.
 
/எஸ்கேப்/
குடுத்துவச்சவரு
 
ஃபிரான்ஸ் வரும் திட்டம் ஏதாவது உண்டுங்களா வாத்தியாரே?
 
எட்டுதிக்கும் சென்று கடமையே கண்ணாக மெய்வருத்தம் பாராமல் பணி செய்து வாருங்கள். யாரங்கே நமது நண்பனுக்கு வீரதிலகமிட்டு வாழ்த்துரை பாடுங்கள்.
 
அப்படியே சிங்கப்பூருக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் போடுங்க. //
ட்ரிப் போட ரெட்ய்.டிக்கெட் போட நீங்க ரெடியா..:)-..நாராயணன் 2001 தமிழியினைய மாநாட்டின்போது சிங்கை வந்திருந்தார்....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]