May 22, 2005

கண் கெட்ட பிறகு.....

"தமிழ் வேறு; நான் வேறா? தமிழை நான் பழித்தால் அது மல்லாந்து துப்பிக் கொள்கிற மாதிரி ஆகாதா? தமிழ்மீது படைப்பாளிகளுக்கு இருக்கும் சொந்தம் வேறு. மற்றவர்களுக்குத் தமிழ் தாய் என்றால் படைப்பாளிகளுக்குத் தமிழ் மனைவி. நம்முடைய பெருமை நம்மீது மட்டும் இருக்கக் கூடாது. பிறரையும் நேசிப்பதாக இருக்கவேண்டும். அதற்காக மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள் வித்தியாசத்தைச் சொன்னேன். அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்ளவா சொன்னேன். இதனால் சில சமயம் பேசாமலே இருந்துவிடலாமா என்று கூடத் தோன்றுகிறது. இன்னும் பேசுவதற்கு சீண்டுகிறார்கள். நான் யாரையும் புண்படுத்துவதற்குப் பேசுவதில்லை. நான் அப்படிப் பேசிவிட்டால் அன்று முழுவதும் தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த மாதிரியான ஆத்மா நான். ஆறாவது அறிவால் வந்த வினையைப் பாருங்கள்.

என்னை நம்புகிறவர்களை நான் நம்புகிறேன். என் பிடிவாதம் என்னுடன் நின்று போகட்டும். என்னதான் பல மொழிகள் பேசினாலும் அது என் தமிழ்மொழி போலாகுமா? எந்த அச்சமும் எனக்கில்லை. பகைமை நிரந்தரமானதில்லை. வாழ்க்கையிலும் அப்படி இருக்கக்கூடாது. ஏதோ நான் நாய் என்று பேசியதாகச் சொல்கிறார்கள். அதை சிங்கம் என்று திருத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான் என்று எழுதுங்கள். சரியாகப் பேனா பிடிக்கிறவர்கள் இதை எழுதுங்கள்.

கோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய். என்னுடைய கோபத்தை தமிழ்ச் சமூகம் தவறாக நினைத்துவிடக்கூடாது."

- புதிய பார்வையில்(மே 16-31) ஜெயகாந்தன் சொன்னதாக வெளியாகி இருக்கிறது.

பல்டியடிப்பது எதிர்ப்பினைக் கண்டா அல்லது சரியான சொற்களை கையாள தவறியதாலா ? இன்னமும், ஜெயகாந்தனின் எதைப் பற்றியும் கவலையற்ற தன் நிலையினை அடித்து சொல்லும் பாங்கு அப்படியே இருக்கிறது. இதில் கொஞ்சமும் மாற்றமில்லை. இதில் தன்னுடைய ஆறாவது அறிவினால் சொன்ன சொற்கள் வினையாக போய் விட்டதாக புலம்புகிறார். ஆறாவது அறிவு வடமொழியாக கூட இருக்கலாம் ;-) எதுவாயினும், ஜெ.கா கண் கெட்ட பிற்கு சூரிய நமஸ்காரம்.

Comments:
சரியாகச் சொன்னீர்கள், நாராயணன்!திரு.ஜெயகாந்தன் அவர்கள் சொல்வதும்,வேறொரு சாதரணமான மனிதர் சொல்வதற்கும் வித்தியாசமுண்டு.தமிழில் உச்சங்களைத் தொட்ட படைப்பாளி,ஏனிப்படிச் சிந்தித்தார்?அவருக்குக் கட்டாயம் புரிந்திருக்கும்-தன்னை வானளாவப் புகழ்ந்த தமிழினம் கோபமுற்றுத் தூற்றுவதின் நியாயம்.அவர் சொன்னார்,விட்டுவிடுவோம்.தமிழுக்குச் சிறப்புச் செய்த படைப்பாளிதானே? மறப்போம்.
 
//ஆறாவது அறிவு வடமொழியாக கூட இருக்கலாம் ;-) //

:-) :-) :-)

///கோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய்.///

ஜெயகாந்தன் அவர்கள் சமீபத்தில் பேசியதில் இந்த வரிகள் எனக்கு மிகப் பிடித்திருக்கின்றன.
 
வாங்க நாராயணன், தொழில் ரீதிப் பயணங்கள் வெற்றியா..?

சரி, இந்த ஆளைப் பற்றி எல்லாம் எழுதி உங்கள் நேரத்தை ஏன் வீணாக்குகிறீர்கள்?
 
ஸ்ரீரங்கன், முத்து, சுதர்சன் நன்றிகள். இன்னும் பயணங்கள் முடியவில்லை. நடுவில் ஒரு வாரம் சென்னையிலிருக்க வேண்டியதாக போனது. அதனால், சற்றே கொஞ்சமாய் வேலைகளுக்கிடையில் எழுதியது இது. இதை எழுதியதன் காரணம், ஜெ.கா வைப் பற்றிய புரிதல்களும், தெரிதல்களும் மட்டுமே. எல்லோர்க்கும் ஜெ.கா எப்படிப்பட்ட மனிதர் என்று சொல்வதற்காக எழுதிய பதிவே இது. மற்றபடி என்னுடைய ஒட்டம் ஆரம்பம்.

இது போக, பெங்களூரிலிருந்து எழுதும் நண்பர்கள் எனக்கு தனி மடல் அனுப்பவும்.narain [at]gmail [dot] com புதன், வியாழன் அங்கிருப்பேன் என்று நினைக்கிறேன். வாய்ப்பிருப்பிருந்து, நேரமிருப்பின் பார்ப்போம்.
 
//கோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய்.//

அவருக்கே புரியவில்லையோ!
 
//கோவம் ஒரு பருவத்தில் அழகு. கிழப் பருவத்தில் அது ஒரு நோய்.//

நல்ல பதிவு! நன்றிகள்!
 
நல்ல பதிவு! நன்றிகள்!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]