Jun 9, 2005

புத்தம் சரணம் கச்சாமி

இலங்கையில் ட்சுனாமி நிவாரண நிதியாக உலக நாடுகளிடம் இருந்து கிடைத்த தொகையை, தமிழர் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 புத்த சாமியார்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள் - தினந்தந்தி செய்தி
விடுதலைப்புலிகளுக்குட்பட்ட பகுதிகளில், அவர்களைத் தவிர வேறெவரும் மீட்பு,மறுவாழ்வு பணிகளில் ஈடுபடமுடியாது என்பது உலகறிந்தது. புலிகள் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் தான் பெருமளவு சேதம் விளைந்திருக்கிறது. இந்நிலையில் கட்சி, இன வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு மனிதர்க்ளை காபாற்றும் பணியில் தான் முழு கவனமும் இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உலக மக்களின் உதவித் தொகை மிக அதிக அளவில் தேவை.

ஆனால், அமைதியையும், சாந்தத்தையும் போதித்த புத்தனை தொழுபவர்கள், அடுத்த மனிதன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும், ஆனால் புலிகளுக்கு எவ்விதமான உதவித்தொகையும் கிடைக்கக் கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். புத்தனின் எல்லா கொள்கைகளும் ஆலயத்தோடு முடிந்துவிடும் போல. பசியால் வாடும் ஒரு மனிதனுக்கு போதனைகளை விட உணவு தான் முக்கியம், அதனால் முதலில் உணவு கொடுங்கள் என்று தன் சீடர்களுக்கு புத்தர் சொன்னதாக ஒரு கதையுண்டு. இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது.

தானும் தரமாட்டேன், அடுத்தவர் கொடுப்பதையும் அளிக்க மாட்டேன், துயரத்தில் இருக்கும் மனிதன் சாகட்டும் என்று நினைப்பதை என்னவென்று சொல்வது? காட்டுமிராண்டிகள் கூட தனக்கு தேவையானவற்றை தான் வேட்டையாடுவார்கள்.புத்த சாமியார்கள் என்கிற பெயரில் உலாவும் இவர்கள், காட்டுமிராண்டிகளை விட கேவலமானவர்கள். புத்த மதக் கோட்பாடுகளை கேவலப்படுத்துகிறார்கள். புத்தன் பாவம், பாமியானில் மூக்குடைந்தது போததென்று இன்று தன் சீடர்களினால் அவமானப்பட்டு நிற்கிறான். உலகெங்கும், இறை தூதர்கள், தங்களின் சீடர்களால், வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டு கூனி, குறுகி உலகினை காண அச்சப்பட்டு ஒடிவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

புத்தம் சரணம் கச்சாமி! - இனி இதனை இலங்கையில் இருக்கும் புத்த சாமியார்கள் சொல்லத் தேவையில்லை. சொன்னால் "உன்னால் முடியும் தம்பி"யில் வரும் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

"வாயிலென்ன மந்திரமா
மனசு என்ன யந்திரமா"

Comments:
நாரயணன், இப்போதாவது அவர்களது தமிழர் விரோத தன்மையை, பேரினவாத மனநிலையை தெளிவாக உலகம் உணர்ந்துகொண்டால் சரிதான்.

//புத்தன் பாவம்//

ரொம்பப்பாவம். வியட்நாமிலும் புத்ததுறவிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது உயிரைக்கொடுத்து போராடினார்கள். அதனால் அமெரிக்கக் கொடுமைகள் முடிவுக்கு வந்தன. இப்போதும் பேரினவாதம் இந்த உண்ணாவிரதத்தால் முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்.

பதிவுக்கு நன்றிகள்.
 
எல்லா மதங்களும் அதன் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து விலகி நீண்டநாட்கள் ஆகி விட்டன.

மதத்தின் பெயரில் நடப்பது அரசியல்தான்.

ராஜ்குமார்
 
பிறக்கும் போது, யாரும் எந்த மதத்தையும் தூக்கிபிடிச்சிகிட்டு வருவதில்லை,
வந்த பிறகு தான் ஆரம்பிக்கிறது, வேலையே.....

உண்மையில் மதம் என்பது என்ன அது பைத்தியம் தானே!. யானைக்கு பிடிக்கிற "மதம்" இப்போ ஆறறிவு இருக்குன்னு சொல்லிக்கொள்கிற மனுசனுக்கு பிடிச்சிருச்சி....

பைத்தியம் பிடிச்சா அதுக்கு என்ன வைத்தியம் செய்யிரது...., யாருக்கு தெரியும்?....

ராஜ்குமார் சொன்னது போல,
இப்போ மதங்களுக்கிடையில் அரசியல் தான் நடக்குது, ஆனாலும் பாருங்க நம்ம ஜனங்க இத தெரிஞ்சிகிட்டே அந்த அரசியலுக்கு துணைபோகுதே!....
உருப்புடுமா??.......

இப்பவாவது உலகம்
இலங்கை தமிழரின், உண்மை நிலையறியுமா?....,
இல்லை தூங்கிவிடுமா
இல்லை தூங்கிதாய்
நடிக்குமா?.....
இல்லை தூக்கிவிடுமா?.....
 
தங்கமணி, ராஜ்குமார், இருதயராஜ் நன்றிகள். சிங்கள அரசாங்கம், விடுதலைப்புலிகள், தமிழீழம் போன்றவைகளை சற்றே புறந்தள்ளி வெறும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டிய பிரச்சனையிது.

ஆனால், மக்களுக்கு அமைதியையும், சகிப்புத்தன்மையையும் போதிக்க வேண்டியவர்களே, மக்கள் விரோதிகளாக இருக்கும் நிலை கொடுமையாக இருக்கிறது. சிங்கள அரசாங்கமோ அல்லது ராணுவமோ இதை செய்திருப்பதின் பின்னாலுள்ள தர்க்கரீதியான காரணங்களை என்னால் அனுமானிக்க முடியும். ஆனால், புத்த பிட்சுகள் இவ்வாறு இறங்கியிருப்பது, புத்த மார்க்கத்தின் அடிப்படை தவறாக திரிக்கப்படுகிறது. ஹிந்து மதத்தின் அடிப்படை பிரச்சனைகளிலிருந்து வெளியேறிய ஒருவன் உண்டாக்கிய மார்க்கம் இப்படி அநியாயமாய் பலியிடப்படுவது முன்னமே தெரியுமானால், புத்தன் யாருக்கும் தன் மார்க்கத்தினை போதித்து இருக்க மாட்டான்.
 
ஈழப்பிரச்சனை புத்தத்தை விலக்கி தனியே பார்க்க முடியாதபடி வலுவடைந்து விட்டது. கிட்டத்தட்ட ஈராயிரம் ஆண்டு காலப் பிரச்சினை, புத்தத்தால் தூபம் போடப்பட்டு வந்தது. அவ்வளவு இலகுவில் புத்தம் (இலங்கைப் பௌத்தம்) மாறிவிடாது.
 
மனித நேயம் அவர்களிடம் அவ்வளவுதான் போலுள்ளது; ஈழப் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதில் வியப்பேது.
 
தேவையான மிக முக்கியமான பதிவு.
ஆனால் தூங்குவோரை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்போருக்கு எதுவும் பயனில்லை.
நன்றிகள் நாராயணன்.
 
நன்றி.
 
நாராயணன், இரு வாரங்களுக்கு முன்னர் எனது நண்பனுக்கு அவரது ஊரில் இருந்து ஒரு கடிதம் வந்தது. தனது மீன் பிடிக்கும் வள்ளமும் வலையும் சுனாமியால் அடித்துப் போய் விட்டது குடும்பத்துடன் மிகவும் சிரமப்படுகின்றேன் உங்களால் ஆன உதவியை எமக்குச் செய்வீர்களா என்று கேட்டு எழுதியிருந்தார். என் நண்பனுக்கு அவரை முன்பின் தெரியாது. வெளிநாட்டில் இருக்கும் ஊர்க்காறர் என்று அறிந்து யாரிடமிருந்தோ விலாசம் பெற்றுக் கடிதம் போட்டிருக்கின்றார். தன்னை தவறாக நினைத்து விடக் கூடாது என்று எண்ணியோ என்னவோ தனது 8 வயது மகளிடமிருந்தும் தமது குடும்ப நிலை பற்றி ஒரு சிறுகடிதம். அதை விட சில அத்தாட்சிப் பத்திரங்கள் என்று அனுப்பியிருக்கின்றார். படிப்பதற்க மிகவும் கவலையாக இருந்தது. சுனாமியின் பின்னர் தொலைக்காட்சிகள் வானொலிகள் தொண்டர் நிறுவனங்கள் என்று எத்தனை கோடி பணம் சேர்த்தார்கள். நாங்களும் கொடுத்திருந்தோம். இப்பணத்திற்கு என்ன நடந்தது என்று கொடுத்தவர்களுக்குத் தெரியாது. பேசாமல் இப்படியாக ஏதாவது நடக்கும் போது பணத்தை நாமே சேகரித்து நம்பிக்கையான ஒருவர் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்திருந்திருக்கலாமோ என்று தோன்றுகின்றது. எமது மனச்சாட்சிக்குப் பயந்துதாம் நாம் கொடுக்கின்றோம். அதன் பின்னர் எமது வழமையான வாழ்வு தொடர்கின்றது. அங்கிருப்பவர்கள் நிலையை ஒருவரும் எண்ணுவதில்லை.
 
நன்றிகள் வசந்தன், இராதாகிருஷ்ணன், பாலாஜி-பாரி, கா.ரா ;-) கறுப்பி.

கறுப்பி, நம்மாலான உதவியை நேரடியாக செய்தல் என்பது எத்தனை பேருக்கு சாத்தியப்படும். என்னால், நேரடியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிக்கு சென்னையிலிருந்து உதவிப் பொருட்கள் அனுப்ப முடியாது. ஆயிரம் கேள்விகள், குடைசல்கள், கொஞ்சம் நேரம் சரியாக இல்லாவிடில், "ரா" போலிஸ் விசாரிப்பு என நீளும். இந்நிலையில் நீங்கள் அங்குள்ள மக்களுக்கு உதவவேண்டுமானால், யாரேனும் இடைநிலை நிர்வாகிகளை நம்பித்தான் ஆகவேண்டும்.

புலிகள் பற்றிய உங்களது/எனது பார்வைகள் வேறாக இருக்கலாம். இன்றைய நிலையில், புலிகளுக்கு மாற்றாக ஒரு அமைப்பு இல்லாத நிலையில் எவ்வாறு உலகநிதியை அவர்களிடத்தில் கொடுக்காமல் இருக்க இயலும். இத்தனைக்கும் நான் படிக்கும் தெஹல்காவின் செய்திகள் 100% உண்மையாய் இருப்பின், புலிகள், இலங்கை அரசினை விட முதிர்ச்சியாக இச்சீற்றத்தினை கையாண்டு இருக்கிறார்கள். பார்ப்போம் புத்தர் மனித நேயத்திற்கு கைக் கொடுக்கிறாரா இல்லை அவரின் சீடர்களுக்கா என்று.
 
இதற்கு முன்னர் காவிகளைக் களைந்துவிட்டு இராணுவத்தில் இணைந்து ஆயுதம்
தூக்கி தமிழர்களுக்கு எதிராக போரிட்டவர்கள் தானே இந்தப் பிக்குகள்.

//ஆனால், மக்களுக்கு அமைதியையும், சகிப்புத்தன்மையையும் போதிக்க வேண்டியவர்களே, மக்கள் விரோதிகளாக இருக்கும் நிலை கொடுமையாக இருக்கிறது. சிங்கள அரசாங்கமோ அல்லது ராணுவமோ இதை செய்திருப்பதின் பின்னாலுள்ள தர்க்கரீதியான காரணங்களை என்னால் அனுமானிக்க முடியும். ஆனால், புத்த பிட்சுகள் இவ்வாறு இறங்கியிருப்பது, புத்த மார்க்கத்தின் அடிப்படை தவறாக திரிக்கப்படுகிறது//

இலங்கையின் அரசியல் பற்றி நன்கு
தெரிந்தவருக்கு தெரியும் இலங்கையின்
அரசியலில் புத்த பிக்குகள் செலுத்தும்
செல்வாக்கு பற்றி.ஆரம்பம் தொட்டே
தமிழர்களின் மீது துவேஷத்தினை சிங்கள மக்களிடம் வளர்த்துவருபவர்கள் இந்த பிக்குகள் தான்.இனவெறி அரசாங்கம்.இராணுவம் போன்றன
மரங்கள் என்றால் இவர்கள் விதைகள்
என்று சொல்லலாம்.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை
விதைகள் சொல்வதுதான் அம்பலம் ஏறும்.
 
நாராயணன்
வரலாற்றை உற்று நோக்கினால் அன்றிலிருந்து இன்று வரை மதமும் அரசியலும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. அதுவும் புத்தம் ஆரம்பித்த போது இல்லாத அரசியல் தழுவல் பிற்பாடு மிகவும் விசாலமாக மாறி மன்னர்கள் பலரையும் புத்த மதத்திற்கு மாறினால் தான் அரசியல் நடத்த முடியும் தங்களது அதரவு கிடைக்கும் என்று மாற்றிய பிக்ஷ்க்கள் உண்டு.

இலங்கையின் புத்த மதத்திற்கு எந்த அளவிற்கு பிக்ஷுக்கள் உதவினார்களோ, அங்கு தங்கள் பேச்சினைக் கேட்கக் கூடிய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதில் இன்று இல்லை ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு குறையாமல் பார்த்துக் கொண்டு வந்துள்ளனர். புத்தம் இல்லாத அரசியல் அன்றும் இலங்கையில் இல்லை. இன்றும் அது இல்லாமல் இல்லை. பல நல்ல மன்னர்களின் மணிமுடியினை இழக்க வைத்ததும் வரலாறில் உள்ளது.

புத்தரின் போதனைகளை அனுபவப் பூர்வமாக உணராத அடிமடையர்கள் இவர்கள் என்பதனை புத்தரின் வாழ்க்கைக் கதையை கேட்கும் ஐந்து வயது குழந்தை கூட தெளிவாக கூறிவிடும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல், இவர்கள் இந்த செயலே அவர்களுக்கு அழிவுப் பாதையைக் காட்டிக் கொடுத்து விடும்.
 
இப்படியொரு பிரச்சினையே ட்சூனாமிப் பங்கீட்டில் இருப்பதில் முன்னிலைப்படுத்தி எழுதியதற்கு நன்றி நரேன்.
....
ட்சுனாமி கட்டமைப்பில் அரசாங்கத்துடன் புலிகள் இணைந்து பணியாற்றுவதற்கு ஜேவிபி மட்டுமல்ல இந்திய அரசாங்கமும் விரும்பவில்லை என்பதுவும் முக்கியமான செய்திதான் :-( (எரிக் சொல்கெய்ம் கூறியிருந்தார்)
 
நன்றிகள் கரிகாலன், கங்கா, டிசே.

டிசே, இந்திய அரசாங்கம் பங்குப்பெறாமைக்கு மிக முக்கிய காரணம் எனக்குத் தெரிந்து தமிழக முதல்வர்தான். செல்வி.ஜெ தனக்கு டெல்லியில் மதிப்பு குறைவதுப் போல தெரிந்தால் போதும்,உடனே தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளால் ஆபத்து என்கிற பிரச்சாரத்தினை கிளப்பிவிடுவார். டெல்லியிலிருக்கும் மாக்கான்களுக்கு இந்தியாவின் எந்தப் பிரச்சனையும் முழுசாய் தெரியாது. அவர்களும் ஆமாஞ்சாமி போட ஆரம்பித்து விடுவார்கள். என்றைக்குமே இந்தியா பெரிய அளவில் தமிழீழத்திற்கு ஆதரவாய் இருக்காது. இது ஒரு சாபக்கேடு. மக்கள் மனசு மாறினாலும், ஆட்சியிருப்பவர்கள் மனசு மாறுமா என்று தெரியாது. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இது கசப்பாய் இருந்தாலும், நிலைமை என்னவோ இங்கே அதுதான். இலங்கை என்று பேசினாலே சிறைக்குள்ளேப் போகும் அபாயங்களிருக்குமிடத்தில் வேறெதை நீங்கள் எதிர்பார்க்க முடியும் ;-(
 
நரைன் இந்தப் பதிவுக்கு நன்றி.இதே கருத்தில்தான் நானும் ஒரு பதிவு இட்டிருந்தேன்.உயிர்மையில் இளைய அப்துல்லாஹ் கூட பாவம் தமிழ் மக்கள் என்று கட்டுரை எழுதியிருக்கிறார்.புத்தரின் பெயரால் பிழைப்பு நடத்தும் இவர்களைப் போன்ற கேவலமான ஜந்துக்கள் அரசை ஆட்டுவிக்கும் வரைக்கும் பிரச்சனை தீராது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]