Jun 20, 2005

பள்ளிகள் சொல்லும் தீண்டாமை்பள்ளிகள்ப

பள்ளிகளும், நவீன சமூக தீண்டாமையும்

தீண்டாமை ஒரு பாவச் செயல்.
தீண்டாமை ஒரு சமூக குற்றம்

என்றெல்லாம், தமிழ்நாட்டின் எல்லா பாடப் புத்தங்களின் முதல் மூன்று பக்கங்களுக்குள் அச்சிடப்பட்டிருக்கும். சாதீய ரீதியிலான தீண்டாமை இன்னமும் வேரூன்றியிருக்க, இன்னொருவிதமான தீண்டாமை தமிழ்நாட்டில் இப்போது பரவலாக புக ஆரம்பித்திருக்கிறது. அது பாவம் எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்/ சிறுமியர்கள். இவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இவர்களுக்கான கிருமிகள் கருவிலிருந்தே பரவியிருக்கக்கூடும். வெகு அபூர்வமாக, ரத்த மாற்றின் மூலம் இடம் பெயர்ந்திருக்கலாம். எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்/சிறுமியர்களை பள்ளிக் கூடங்களில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று நிறைய பள்ளிக் கூடங்கள் முடிவெடுத்திருக்கின்றன.

இதைப் பற்றி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு செவ்வி வந்திருக்கிறது. திண்டுக்கல் அருகேயுள்ள காந்தி நினைவு இடைநிலைப் பள்ளியின் முதல்வர் திரு. பத்மநாபன் 4 எய்ட்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை [மணிகண்டன் (8), சவடமுத்து (10), மோகன் (5) புகழேந்தி (4)] பள்ளியில் சேர்க்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இத்தனைக்கும், பத்மநாபன் நிறைய எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியவர். இது ஒரு முக்கியமான பிரச்சனை. தமிழகம், இந்தியாவிலேயே முதன்மையான எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மாநிலம். நாமக்கல், மதுரை, திண்டுக்கல் போன்ற பெருநகரங்களில் 10,000 க்கும் அதிகமான எய்ட்ஸ் பாதிப்பாளர்கள் உள்ளார்கள். இது வளர்ந்த ஆண்/பெண் மட்டுமான புள்ளிவிவரங்களில்லை. இதில், புகழேந்தி போன்ற நான்கு வயது சிறுவர்களும் அடங்குவார்கள்.

இறுதியான தீர்வேதுமில்லாத பட்சத்தில், எய்ட்ஸின் முடிவு மரணம் மட்டுமே. அப்படியிருக்கையில் கொஞ்ச நாளே வாழப்போகும் இப்பிஞ்சுகளின் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டாவது அரசு இவர்களுக்கான மாற்று திட்டங்களை முன் வரைய வேண்டும். அவர்களையும், குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாட படிக்க அனுமதிக்க வேண்டும். எய்ட்ஸ் கிருமியானது, தொட்டாலோ, பழகினாலோ, ஒன்றாக குளித்தாலோ வராது என்பது அறிவியற்பூர்வமாக நிச்சயிக்கப்பட்ட உண்மை. இக்குழந்தைகள் ரத்தமாற்றம் செய்யப்போவதில்லை. உடலுறவு செய்தல் இயலாது. பிற போதையூசிகள் பழகக்ங்கள் ஏற்படப்போவதில்லை. அப்படியிருக்கையில் என்ன காரணங்களினால், இக்குழந்தைகள் பிற குழந்தைகளோடு ஒன்றாக பள்ளியில் சேர்ந்து படிக்கக் கூடாது என்று எனக்குப் புரியவில்லை. திரு. பத்மநாபன் சொல்லும் காரணம் மிக பலவீனமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாடும் போது அடிப்பட்டால் அதன் மூலம் பரவும் வாய்ப்புகளிருக்கிறது என்கிறார். அக்குழந்தைகளுக்கு அறிவுறுத்தினால் போதும், கேட்டுக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. கீழே விழுந்து அடிப்பட்டால், எச்சில் தொட்டு குழந்தைகள் தடவும், அவ்வளவே. இதனையும் முறையாக சொல்லிக் கொடுத்தால் குழந்தைகள் கேட்டுக் கொள்ளப்போகிறார்கள். அதை விடுத்து, அவர்களை பள்ளியிலேயே சேர்க்க மாட்டேன் என்று சொல்வது, அவர்களை தனிமைப்படுத்துதலாகிவிடும். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளின் மனநிலையினை அணுகுவது எளிதான விஷயமல்ல.

அரசு உடனே தலையிட்டு இதற்கான தீர்வினை கண்டறியவேண்டும். இதனை பரவலாக்கல் மிக முக்கியம். இது நான்கு குழந்தைகளைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல. இது ஒரு பெரிய சமூக பிரச்சனையின் ஆரம்ப அடித்தளம். இது கண்டிப்பாக இந்தியா முழுக்க விரிவாகும். இந்தியாவிலேயே தமிழகம்தான் எய்ட்ஸில் முதன்மையான மாநிலம் என்பது கூட என்னளவில் ஒரு ஒப்புமையே. ஏனெனில் சரியான புள்ளிவிவரங்கள் வடமாநிலங்களில் கிடைப்பதில்லை. கொஞ்ச நாளைக்கு முன்பு வடகிழக்கு இந்தியாவில் பாதுகாப்பிலிருந்த நிறைய ராணுவ வீரர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளின் பாதிப்பு இருந்தது இந்தியாவில் அதிர்ச்சியலையை உண்டாக்கியிருந்தது. இதே நிலை இந்தியா முழுக்க இருக்கிறது. இந்நிலையில், "எய்ட்ஸ் அநாதைக் குழந்தைகள்" என்றொரு பரிதாபகரமான சமூக வெளி உருவாகும். ஏற்கனவே ஆப்ரிக்காவில் இது ஒரு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதையெப்படி நாம் கையாளப் போகிறோம் ?

Comments:
கவனம் செலுத்தவேண்டிய பிரச்சனை. ஏனெனில் எய்ட்ஸ் இந்தியா விரைவில் சந்திக்கப்போகிற மிகப்பெரிய பிரச்சனை!
 
நாராயண்,

இதை நானும் அதி முக்கிய பிரச்சனையாகப் பார்க்கிறேன். படித்தால் இதயம் தான் வலிக்கிறது.எயிட்ஸில் 2வது இடத்திற்கு இந்தியா முன்னேறி விட்டது. வறுமை ஒழிப்பை விட தற்போது எயிட்ஸ் விழிப்புணர்வுக்கு தான் இந்தியா முக்கியம் தரவேண்டும். வெளிஉலகத்துக்கு இந்தியா முகமூடி நடித்தது போதும். நிறைய எயிட்ஸ் பிரச்சாரங்களை நடத்தினாலும் திரு.பத்மநாபனின் விழிப்புணர்வே அப்படியிருக்கும் போது மற்றவர்களை நாம் கேட்க வேண்டுமா?

முக்கியமான ஒரு வலைப்பதிவு இங்கே http://aidsindia.blogspot.com/
 
முதலிடத்தை நோக்கி அதிவேகமா முன்னேறுதாம். என்னத்த சொல்றது?
 
நாராயணன்
இதில் மற்ற குழந்தைகளின் பெற்றோர் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பது முக்கியமான காரணம்மக இருக்கும் என்று தோன்றுகிறது. இங்கே அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஸ்ட்ரெப் வந்தாலே வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். கோடை விடுமுறை முடிந்து பள்ளி வரும் குழந்தைகள் தலைப்பேன் இருக்கிறதா என்று பள்ளி செவிலியால் பரிசோதிக்க பட்டு இர்ப்பின் அது நீங்கும் வரை பள்ளியிலிருந்து விலக்க படுகிறார்கள். இது தவறு என்றாலும் மற்ற குழந்தைகள் நலம் கருதி செயல் படுத்த படுகிறது. மேலும் AIDS போன்றா நோயுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகலூம் அரசே அவர்களை அழைத்து கொண்டு போக பேருந்து வசதியும் தருகிறது. இது அவர்களாஇ தள்ளி ஒதுக்கி வைக்க அவேண்Dஉம் என்றா நோக்கத்தைவிட, மற்றா குழ்ந்தைகளுடன் விளையாட அவர்கள் உடலில் சக்தி இல்லை, மற்ற குழந்தைகளை விட அடிக்கடி உடல் நோய்வாய்ப்பட சாத்தியம் உண்டு என்பதும், அவர்களால் கேலிக்கு ஆளாகமல் இருக்க வாய்ப்பு உண்டு என்பதும் காரணம். யோசித்து பாருங்கள் பள்ளியில் சேர்க்க பட்டபின் மற்றா குழந்தைகளால் ஒதுக்கி விடுவதும் தனிமைப்படுத்த படுவதும், அவர்கள் வீட்டிற்கு எல்லா குழந்தைகளும் செல்லும் போது இவர்களை தனித்து விடுவதும் இன்னும் காயங்களை உருவாக்கும்.
அப்படியே குழந்தைகளுக்கு கற்று கொடுத்து இருப்பினும், ஒரு குழந்தைக்கு உடல் சுகம் இல்லாமல் போனால் உடனே பெற்றோர்கள் செய்யும் அமர்க்களம் அதிகம்.அந்த குழந்தைக்காக என் குழந்தைக்கு உடல் நலமில்லாமல் போனது என்றெல்லாம் சொல்வார்கள்.
சம் என்பது நல்ல விழிப்புணர்ச்சி ஏற்பட்ட ஒரு சமூகத்தில் மட்டுமே சாத்தியம்.
இது ஒரு கசப்பான உண்மை.If he has to learn reality, why not now என்பதே பலரின் காரணங்களாக இருக்கிறது. It is sad, but we need more outreach workers and educators to teach parents.
 
I am sorry for the mistakes. I could not check and edit the comment.
 
விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடத்துபவரே இதுமாதிரியான கருத்துகளைக் கொண்டிருந்தால் சாதாரண மக்களை எண்ணிப்பார்க்க வேண்டும். பல்வேறு தளங்களில் சிக்கல்களைக் கொண்ட பிரச்சனை இது. அதை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் நம் சமுதாயத்திற்கு இல்லையென்றே சொல்வேன். இருந்தாலும், கண்ணுள்ளபோதே சூரியனை நமஸ்கரித்துவிடுவது நல்லது.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]