Jul 15, 2005

எத்தனாலா, எத்தன நாளா?

தன்மான சிங்கம், தங்க தலைவர் டி.ஆர் புறப்பட்டு விட்டார். பெட்ரோல் விலைவாசி உயர்வினை கண்டித்து, சென்னையில் சைக்கிள் பேரணியினை நடத்தி, சைக்கிளை பெட்ரோல் இல்லாமல் ஒட்டமுடியும் என்கிற அரிய உண்மையினை ஊருக்கு உணர்த்த, உலகிற்கு காட்ட, பெடலை மெறித்து கொண்டு கிளம்பிவிட்டார்.

"பெடல் கட்டை மெறீக்கும் போது மாரு எலும்பு வலிக்குது. பட்டை சாராயத்தை....."

டன் டணக்கா, ஏய்ய்ய்ய்ய் டணக்குணக்கா

தென்னமரிக்க நாடுகளில் மிக முக்கியமாக பிரெசிலிலும், சீலேயிலும், வென்சூலாவிலும் மிக முக்கியமான எரிபொருளாக எத்தனால் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளையே பெரும்பாலும் எரிப்பொருளுக்காக உலகம் தொங்கிக் கொண்டிருக்கும் போது, மாற்று எரிப்பொருளாக கரும்பு சக்கையிலிருந்து எடுக்கப்படும் எத்தனாலை தென்னமரிக்க நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. பெட்ரோலினை பயிரிட முடியாது, ஆனால் கரும்பினை செய்ய இயலும்.

பெட்ரோல் நிலைய நிறுவனர்கள் தங்களுக்கு வரும் கமிஷன் தொகை பத்தாது என்பதற்காக, கால வரையற்ற தொடர் போராட்டத்தினை ஜுலை 18-ஆம் தேதி முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறார்கள். அவர்களின் கமிஷன் ஏறுமா இல்லையை என்பது மணி சங்கர் அய்யரிடத்தில் தான் இருக்கிறது. மணி சங்கர் அய்யர் இன்றைய தேதியில் எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

ஏய், நான் எம்.ஜி.ஆர் காலத்துல, துணிச்சலா, எம்.ஜி.ஆரையே எதிர்த்து நின்னவன். கலைஞர் காலத்துல, வெளியில வந்து கலைஞரை எதிர்த்து நிக்கறேன். தங்க தலைவி அம்மா தான்டா எல்லாம். மத்ததெல்லாம் சும்மா. மத்தவங்களுக்கு பின்னாடி தமிழ்நாடு தான்டா நிக்கும், இதுக்காகவே டிடிகே மேப் வாங்கி என் ஆபிஸ்ல எனக்கு பின்னாடி உலகமே இருக்கற மாதிரி செட் பண்ணியிருக்கேன் டா. ரஜினி கூடவும் என்னால மோத முடியும். சிம்பு கூடவும் என்னால ஒடவும் முடியும். செட் போட்டு தமிழ்நாட்டை கலக்கினவன் டா நான், என்னாலயா, என் கூட்டத்துக்கு ஆட்களை செட் பண்ணமுடியாது.

எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் பொருட்டு இந்தியாவிற்கு மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. இந்தியா கரும்பு உற்பத்தியில் உலகின் முதல் 5 நாடுகளுக்குள் வந்து விடும். இம்மாதிரியான முயற்சிகள் இந்தியாவில் ஏற்கனவே நடந்துக் கொண்டு இருக்கின்றன. ஆனாலும், அரசின் போதிய கவனத்தையும் ஒத்துழைப்பையும் பெறாததால், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கிறதேயொழிய நாடு தழுவிய மாற்றத்தினை இதனால் உண்டாக்க முடியவில்லை. பயோடீசல் என அழைக்கப்படும் இத்தகைய மாற்று எரிப்பொருட்களைப் பற்றிய செய்தியொன்று சில மாத இடைவெளிக்கு முன் பிஸினஸ்வேர்ல்ட்டில் வந்திருந்தது. அதிலிருந்த ஒரு செய்தியினை ஆங்கிலத்திலேயே தருகிறேன்

The Chalbardi Model
When the natives at Chalbardi, a tribal hamlet in Andhra Pradesh's Adilabad forest, were told that they could pay for electricity with the abundant Pongamia [Karanji] seeds strewn on the forest floor, they gazed in disbelief.

Two off-the-shelf gensets of 7.5 KVA each were installed in a hut. The hamlet was wired. Karanji oil engines powered a decorticator and an oil mill. In June 2001, darkness made way to light, right in the middle of a forest with no pylons, no pollution, no down-time and no bills to pay. This self-sustaining miracle cost just Rs 5 lakh.

In the months since mid-2001, 10 forest villages in Adilabad have followed the Chalbardi model: converting vegetable oil to diesel power. In less than five years, the idea has begun to deliver results and make economic sense. It is an idea that has probably had the fastest run from lab to land in India.

States like Andhra Pradesh and Tamil Nadu are taking up large-scale plantation of the Karanji seeds. Andhra Pradesh has formulated an ambitious plan of bringing 15 lakh acres under these two crops by giving nearly 90 per cent subsidy for drip irrigation equipment on 5 acres per farmer. It is also planning to put wasteland into use and provide employment opportunities for thousands of local youth by leasing the land to individuals and companies.
இன்னா சார் உனுக்கே தெரியும் பெட்ரோல் வெல ஏறிப் போச்சுன்னு. சென்ட்ரலருந்து விருகம்பாக்கம் போகணும் சார், 120 ரூவா ஆவும். காலீயில முத சவாரி நீதான் சார், ஏறு சார், உழைப்பாளி நானு என்ன பெருசா கேட்டுற போறேன். பாத்து போட்டு குடு சார். மெட்ராஸ்ல ஒரே வெயிலு சார். பெட்ரோல் வெலய வேற ஏத்திப்புட்டாணுங்க, ஒவ்வொரு சவாரி கிட்டயும் கெஞ்ச வேண்டியதா இருக்கு. ஏறு சார், ஜோதிகாவை சூர்யா கல்யாணம் பண்ணிப்பாருன்னு சொல்றாங்களே சார், நெசமாவா சார்

நியுயார்க் டைம்ஸில் எழுதும் தாமஸ் ப்ரீட்மேன் [ The world is flat ] கொஞ்ச நாளைக்கு முன் ஜெனரல் மோட்டார்ஸீனை டொயட்டா வாங்கி விடவேண்டும் என்று எழுதினார். அதற்கு அவர் சொல்லும் மிக முக்கியமான காரணம், அமெரிக்க அரசு எரிப்பொருளுக்காக செலவிடும் தொகை. டொயட்டாவின் க்ரீன்ப்யூல் என்றழைக்கப்படும் பயோடீசலும், மின்சாரமும் பயன்படுத்தி ஒடும் கார்களினால், அமெரிக்க மக்களும், அரசும் நிறைய லாபமடையலாம் என்கிற நோக்கில் எழுதப்பட்ட பத்தியது. இதே கண்ணோட்டத்தினை இந்திய அரசும் எடுக்கவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம். பெட்ரோலொன்றும் வற்றாத ஜீவநதியல்ல. இப்போதே எரிப்பொருளுக்காக அமெரிக்க அரசும், அரசின் குடிதாங்கியும் என்னென்ன நாடுகளை குறிவைத்து போர் தொடுக்கிறார்கள் என்பது தெரிந்ததே. இன்னும் 20-30 வருடங்களில், எரிபொருள் வற்ற ஆரம்பிக்கும்போது, மூன்றாம், நான்காம், ஐந்தாம் உலகப்போர்கள் மூளுவதற்கான சாத்தியக்கூறுகள் ஈராகின் ஆளுகைக்கு பின் தெளிவாக தெளிகின்றன.

ஆகவே என் இனிய தோழர்களை, இந்த டி.ஆர் ஒரு நாளும் உண்மை பேசமாட்டான் ச்சீ.. உங்களை கை விட மாட்டான். எம்.ஏ படித்திருந்தாலும், ஏழை எளிய மக்களின் துயர் துடைப்பதை, துடைப்பம் கொடுத்தால் பெருக்குவதை, முறவாசல் செய்வதை, துணி தோய்த்து கொடுப்பதை, பாத்திரம் அலம்புவதை தான் நான் விரும்புகிறேன்.

அர்ஜுனன் விட்டான்டா அம்பு
நாயுக்கு இல்லடா கொம்பு
எங்கிட்ட வச்சுக்காத வம்பு
நான்தான்டா அம்மாவோட சொம்பு

Comments:
¿øÄ À¾¢×. þí§¸ ±ý À¢ ¬÷ §Ãʧ¡Ţø, §º¡Çò¾¢Ä¢ÕóÐ ±ò¾É¡ø ±ÎòÐ «¨¾ ±Ã¢¦À¡ÕÇ¡ìÌÅÐ ÀüÈ¢ ºÁ£À ¸¡Äí¸Ç¢ø §Àº¢ì¦¸¡ñÎûÇÉ÷.
 
நல்ல பதிவு. இங்கே என் பி ஆர் ரேடியோவில், சோளத்திலிருந்து எத்தனால் எடுத்து அதை எரிபொருளாக்குவது பற்றி சமீப
காலங்களில் பேசிக்கொண்டுள்ளனர்.
 
நல்ல விதயத்தை இப்படிச் சொல்ல உங்களால் தான் முடியும்.


புங்கை மரங்களை தமிழ்நாட்டின் பரவலாகக் காணமுடியும். கள்ளச்சாராயம் காய்ச்சாம நீங்களே இப்படி இதைக்காய்ச்சி, கரண்டு எடுத்து காசு சம்பாரிச்சுக்கப்பான்னா நம்ம தோழர்கள் செய்யமாட்டாங்களா என்னா? (அதுக்காக நாட்டுச்சாரயம் மட்டம், சீமைச்சாராயம் உசத்தின்னு கருத்து வச்சிருக்குற கவர்ண்மெண்ட கண்டிக்கிறது தனி)
 
interesting and informative
narain, i have been reading about these alternatives for many years.brazil seems to have succeeded with ethanol mix.but this has not seem to have been repeated elsewhere.
will these alternatives be viable as fuels without subsidies.what is
their environmental impacts.are they really as efficient as petrol is.
i am not cynical but unable to come to a very positive outlook
as i think there are many ifs and buts which are yet to be analysed.
 
நல்ல பதிவு.
யேனுங்க, நம்மூரு காளியப்பன் இனிமே இதிலிருந்து எண்ணெய் எடுப்பாருங்களா? :)
 
தங்கமணி, எள்ளலாக சொல்கிறீர்களா இல்லை நல்லவிதமாக சொல்கிறீர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும், மாற்று எரிப்பொருளுக்கான தேவைகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதுவும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் [70% எரிபொருள் தேவை இறக்குமதி செய்யப்படுகிறது, இந்தியாவில்]மாற்று எரிப்பொருளுக்கான தேவைகள் மிக அதிகம்.

ரவி, உங்களின் கருத்தினையும் கவனத்தில் கொள்ளவேண்டியதிருக்கிறது. இதுவரை இந்தியாவில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதேப் போல் பிரேசிலிலும், அரசு மான்யங்கள் தந்து கரும்பு உற்பத்தியினை பெருக்கி எத்தனால் மூலம் ஒடக் கூடிய வாகனங்களை பெருமளவில் உற்பத்தி செய்து, சந்தையில் உபயோகித்து காட்டியிருக்கிறது. வெனிசூலாவிலும் இதே கதை தான்.

என்னுடைய கேள்வி, இன்னமும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவின் பேச்சினைக் கேட்டுக் கொண்டு, ஈரான்,ஆப்கனிஸ்தான், தஜகஸ்தான், பாகிஸ்தான், இந்தியா பெட்ரோல் பைப்லைன் வேலையினை தள்ளிப் போட முடியும். அப்படியே நிறைவேறினாலும், அமெரிக்கா சும்மா இருக்குமா ? அமெரிக்கா சும்மா இருந்தாலும், அந்த பைப்லைனில் எவ்வளவு வருடத்திற்கு பெட்ரோல் பாயும் சாத்தியங்கள் இருக்கும்? இதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், மாற்று எரிப்பொருளினை தேடியோடும் காலம் வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு, பெங்களூரில் எல்லா அடுக்ககங்களிலும், சூரிய ஒளியினை பயன்படுத்தி நீரை சூடாக்கும் சோலார் ஹீட்டர்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கு சிறிது காலம் முன்புவரை கர்நாடக அரசு மான்யங்கள் தந்திருக்கிறது. வருடத்தில் 300 நாட்கள் வெய்யில் புரட்டியெடுக்கும் சென்னையில் ஏன் இதனை அரசாலோ, பிற நிறுவனங்களலாலோ செய்ய முடியவில்லை. அவ்வாறு இருக்கும் பட்சத்தில்
எத்தனை வீடுகளில் சமையல் எரிவாயுவினை சேமிக்க இயலும். இதன்மூலம் ஒவ்வொரு முறையும் 50ரூபாய் ஏற்றும்போதும், இதனை மக்கள் விரோத நடவடிக்கையாக பார்க்காமல், உலக சந்தையின் அடிப்படையில், உள்ளூர் தேவைகளின் விலையையும் கருத்தில் கண்டு எடுக்கப்பட்ட முடிவாக பார்க்கலாமே.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]