Jul 13, 2005

ப்ளமரும் புஷ்ஷின் பொருளாதாரமும்

அன்னியனை எழுதும்போது வாத்தியார் இதற்கும் க்யாஸ் தியரிக்கும் சம்பந்தமிருக்கிறது என்று சொன்னது போல ஞாபகம். வாத்தியார் தவறாக சொல்லமாட்டார்,சரி எளிமையாக க்யாஸ் தியரியினை எப்படி விளக்கிக் கொள்வது?

உங்கள் வீட்டு பாத்ரும் அடைத்துக் கொண்டுவிட்டது, ப்ளம்பர் வரவில்லை. பள்ம்பர் வராததால், காலை, முன்னிரவு கடன்களை சுமந்துக் கொண்டு நீங்கள் ஆபீஸ் போய்விட்டீர்கள். டாய்லெட் போன சமயம் பார்த்து உங்கள் முதலாளி உங்களை தேடியிருக்கிறார். நீங்கள் கண்ணில் படாததால், உங்களுக்காக ஒதுக்கப்பட்ட வேலையை சொல்லாமல் போய்விடுகிறார். சொல்லாமல் போனதால் நீங்கள் வேலை செய்யவில்லை. நீங்கள் வேலை செய்யாததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. இதனால், உங்களின் சப்ளையருக்கு குறித்த நேரத்தில் பொருள் போய் சேரவில்லை.

பொருள் சேராததால், அவர் தினமும் தொடர்பு கொள்ளும் பன்னாட்டு நிறுவனத்தின் தேவையை சமாளிக்க முடியாமல் அவர் அந்த ஆர்டரினை தவற விடுகிறார். இந்தியாவில் தவறவிட்ட ஆர்டர் ப்ரான்ஸுக்கு போகிறது. தரக் குறைவினாலும், குறைந்த கட்டணத்தினாலும் ப்ரான்ஸ் நிறுவனம் அதனை ஒரு இஸ்ரேல் நிறுவனத்திற்கு தாரை வார்க்கிறது. வாய்ப்பினை எடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் முதலாளியின் கார் ஒரு வெடிகுண்டில் சேதமடைகிறது. சேதமடைந்த காரினை காப்பீடு செய்த நிறுவனம் அமெரிக்க நிறுவனம்.

இப்படியாக அதிகப்படியாக இழப்பீடினை சந்திக்கும் அமெரிக்க காப்பீடு நிறுவனம், அங்கே உள்ளவர்களை நிந்தித்து பாலஸ்தீனத்திற்கு எவ்வித உதவியும் தரக்கூடாது என்கிறது. பாலஸ்தீனியர்கள், பிற அமெரிக்க நிறுவனங்களால் பாதிக்கப்பட்டவர்களும், அமெரிக்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் பிரச்சனைகள் செய்கிறார்கள். பிரச்சனைகள் பெருகியதாலும், பயம் அதிகரித்ததாலும், அரசு பாதுகாப்பிற்கு அதிக செலவினை செய்கிறது. பாதுகாப்பிற்காக செய்யும் செலவுகள் பெருகியதால், அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. டாலர் மதிப்பு குறைகிறது. புஷ்ஷின் பொருளாதாரம் டல்லடிக்கிறது. தேய்கிறது.

இப்படியாக அமெரிக்க பொருளாதாரத்தினை வெற்றிகரமாக சிதைக்க உங்கள் வீட்டு ப்ளம்பர் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்கள் வீட்டு ப்ளம்பரினால் அமெரிக்க பொருளாதாரம் சிதைவுறும் அபாயங்கள் உண்டு. இவ்வாறாக சம்பந்தா சம்பந்தமில்லாத இரண்டு நிகழ்வுகளின் பிண்ணணியினை தொடர்ந்துப் போய் பார்த்தால் க்யாஸ் தியரி புலப்படும் என்று யாராவது சொன்னால் நம்புவதும், நம்பாததும் உங்களிஷ்டம்.

தனியாக மடலெழுதினால், சீன, ஐரோப்பிய, பாகிஸ்தானிய பொருளாதாரத்தினை க்யாஸ் தியரியின் மூலம் எப்படி சிதைப்பது என்று கற்றுத்தருகிறேன்.

Comments:
adengappa!!!!

butterfly theory -nnu onnu kelvi pattu irukken! ithu athai thooki sappututhe!

inime class-le Chaos theory edukkanumunna ithai use pannikkalama?
 
>>புஷ்ஷின் பொருளாதாரம் டல்லடிக்கிறது. தேய்கிறது---

இதனால் பங்குச்சந்தை சரிகிறது. கூகிளின் பங்கும் முன்னூறுக்கு விற்றது மூன்று டாலருக்கு விழுந்து விடுகிறது. ஆள்குறைப்பு, பணத்தட்டுப்பாடினால், ப்ளாகரை இலவச சேவையில் இருந்து காசு கட்டுபவர்களுக்கு மட்டுமாக ஆக்கிறார்கள். எல்லாரும் இலவசமாக இடம் கொடுக்கும் யாஹூ பக்கம் செல்கிறார்கள். அதில் சிலருக்கு இயங்கு எழுத்துரு வேலை செய்யவில்லை.

(பின்னூட்டத்தை விடுங்க :-) பயனுள்ள பதிவு. நன்றி.)
 
Suresh,

"butterfly effect" is an example (layman version) for understanding Chaos theory.

Source: en.wikipedia.org/wiki/Butterfly_effect

"Butterfly effect" is a phrase that encapsulates the more technical notion of sensitive dependence on initial conditions in chaos theory. The idea is that small variations in the initial conditions of a dynamical system can produce large variations in the long term behavior of the system.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]