Jul 19, 2005

எத்தனை அம்மாக்கள்

ரொம்ப நாளானாதே என்று கொஞ்சம் அண்ணா நகர் பக்கம் ஒரு ரவுண்ட் போகலாமே என்று போனால், ஆச்சர்யம் காத்திருந்தது. சிகப்பு துணியில் மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆஹா, காரல் மார்க்ஸ் இப்போது தான் அண்ணாநகருக்கு தெரிந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு செத்துக் கொண்டிருக்கும் கம்யுனிசத்தினை கொஞ்சமாவது உயிர்பிக்க, சாந்தி தியேட்டர் சப்வேயில் மட்டுமல்ல, அண்ணாநகரிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்கிற பேரானந்தத்தில், தாடியாசானுக்கு மனதார ஒரு ரெட் சல்யூட் அடித்துவிட்டு எங்கே போகிறார்கள் என்று பின்னால் போனால், விஷயம் வேறுமாதிரியாகிவிட்டது. அவர்கள், "அம்மா" ஆதிபராசக்தி மேல்மருத்துவத்தூர் பக்திமான்கள். ...த்தா.. ஒழுங்கா போறானுங்களா பாரு என்று சைக்கிள்காரார்களை ஒரு சிகப்பு சட்டையணிந்தவர் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பக்தி பரவசம் பொங்கிவிடும். நம்மூரில் தான் மாலைப் போட்டிருந்தால், அவருக்கு ஒயின் ஷாப்பில் தனி மரியாதை கிடைக்கும். கிடைக்கும் நெகிழிக் கோப்பைக் கூட சுத்தமாக தருவார்கள். சாமி குடிக்குதில்லை. இப்படியாக இங்கே ஒரு "அம்மா" இருந்தால், தமிழ்நாட்டினை ஏமாந்தால் ஏலம் விட இன்னொரு அம்மா, இதயதெய்வம், கோட்டை நாயகி இருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தினை உலகின் தலைசிறந்த நரகமாக ஆக்காமல் விடமாட்டேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கும் அம்மா இவர்கள். இது போதாதென்று, இங்கே விருகம்பாக்கத்தில் இருக்கும் "அம்மா" அமிர்த்தானந்தாமாயி வேறு எப்போதாவது சென்னை வந்தால் போதும், அந்த சாலையே பரபரப்பாகிவிடும். மாதா அமிர்தானந்தாமாயி பற்றி யோசித்தால், காலச்சுவட்டில் பால் சக்கரியா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. நிறைய சைரன் வைத்த கார்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். அம்மா வரம் கிடைக்குதில்ல, வேறென்ன வேண்டும். இதைப் போல நியுமராலஜியில் ஒரு அம்மா, கையேழுத்தின் மூலம் உங்கள் தலையெழுத்தினை மாற்றும் அம்மா என தமிழ்நாட்டில் அம்மாக்களுக்கு பஞ்சமில்லை. இதை ஒரு படத்தில் பாக்யராஜ் இதை நன்றாக கலாய்த்திருப்பார். ஒரு பொட்டிக் கடையில் ஒரு பெரியவர் ஒரு சிறுவனுக்கு, அம்மா போனால் கிடைக்காது, அம்மா மாதிரி யாரும் கிடையாது, அம்மாவினை வாங்கமுடியாது என்று நீண்ட லெக்சர் கொடுக்கும்போது, சர்வசாதாரணமாக "ஒரு தாய் கொடுங்க" என்று வாரப்பத்திரிக்கையினை வாங்கிப் போய் பெரியவர் முகத்தில் கரியினை பூசுவார். தமிழ்நாட்டில் "அம்மாக்களுக்கு" பஞ்சமில்லை. அதுப் போல, தமிழ்நாட்டில் இனி வரப்போகும் பக்திமான்கள், கடவுளின் இடைத்தரகர்கள், அம்மாவினை விட்டு, சித்தி, அக்கா, பெரியம்மா, ஆயா வாக இருக்கலாம். தமிழ்நாட்டில் அம்மாக்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அதைத் தவிர பிற பொறுப்புகளினை இவர்கள் ஏற்கலாம். இல்லாவிட்டால், சத்தியராஜுடன் சேர்ந்து உம்மா, உம்மம்மா மாதிரி அம்மா, அம்மம்மா என்று பாடலாம்.

Comments:
Sorry I couldnt resist:-)

"ஒரு தாய் கொடுங்க" was from a Pandiarajan Movie
 
நாராயணன்,
தற்போது இந்தியாவிலிருந்து ஒரு "அம்மா" அடிக்கடி கனடா வந்து கனேடிய மக்களுக்கு அருள் கொடுத்து விட்டுப் போகின்றா. அவவை “கக்கம்மா” என்று சொல்கின்றார்கள். அவர் பக்தர்களை கட்டி அணைத்துத்தான் அருள் கொடுப்பாராம்.. நான் ஒரு கடைக்குப் பொருட்கள் வாங்கப் போயிருந்தேன் அந்தக் கடை முதலாளி அம்மாவின் படத்தைக் காட்டி அம்மா கனடா வருகின்றார் கட்டாயம் போங்கள் நல்ல அருள் கிடைக்கும் என்று எனக்குச் சொன்னார். எனக்குக் கடுப்பானது. ஒன்றும் சொல்லவில்லை. எப்போதும் எதிர்கருத்தைச் சொல்லிச் சொல்லிக் களைப்புத்தான் வருகின்றது.
இந்த வாரத்தோடு எனக்கும் வேலை இல்லை. பேசாமல் ஒரு "அம்மா"வாக மாறலாமோ என்ற எண்ணமும் இருக்கிறது. இலகுவான வேலை பணமும் கனேடிய டொலரில் குவியும் என்ன நினைக்கின்றீர்கள்? (*_*)
 
சரிப்பா, அவரு சிஷ்யன் படம் ஒத்துக்கறேன். என்ன படம்?

கருப்பியம்மா ;-)இதுப்போல அப்பாக்களுக்கு கட்டியணைத்து ஆசீர்வாதம் கொடுக்கும் பாக்கியங்கள் இருக்கிறதா என்றுப் பாருங்கள். அப்பாவாகலாம் ;-))))))
 
சரி... எல்லா அம்மா கூடயும், ஜி.என்.செட்டி ரோட் 'அம்மா' வையும், நேத்து ராத்திரி யம்மாவையும் சேத்துருக்கலாம். முதல்துலே, கோழியைச் சாவடிச்சு தோலை உரிப்பாங்க. ரெண்டாவதுலே, நல்லா உரிச்சு காட்டிட்டு , அப்புறமாச் சாவடிச்சாங்க.. ( சாரு ஏங்கோவர் இன்னும் போவலை )

//சரிப்பா, அவரு சிஷ்யன் படம் ஒத்துக்கறேன். என்ன படம்? //

கன்னிராசி
 
/முதல்துலே, கோழியைச் சாவடிச்சு தோலை உரிப்பாங்க. ரெண்டாவதுலே, நல்லா உரிச்சு காட்டிட்டு , அப்புறமாச் சாவடிச்சாங்க/
:-)))
 
கறுப்பி....

கட்டியனைத்து அருள் பாவிப்பது அமிர்தமாயி அம்மாவின் வழக்கம்!!! அவங்களுக்கு போட்டியா யாரந்த புது அம்மா..?

நாராயண்ன்

பங்காரு அடிகள் அம்மா என்றால் அவரது மனைவியும் அம்மா..அப்படின்னா அம்மா+அம்மா....சரியில்லையே!!!
 
அண்ணா நகரில் சாந்தி காலனியில் உங்களுக்கென்ன வேலை....இதெல்லாம் சரியில்லை!!!!
 
அம்மாவின் பெயர் எனக்குத் தெரியவில்லை அரவிந்தன். ஒருவேளை நீங்கள் கூறிய அம்மாவும் நான் கூறுகின்ற அம்மாவும் ஒன்றாகக் கூட இருக்கலாம். விரைவில் கனேடிய மக்களுக்கு அருள் தர வருகின்றார். இந்த முறை நானும் போய்ப்பார்க்கவுள்ளேன். பின்னர் எழுதுகின்றேன்.
கட்டிப்பிடி கட்டிப்பிடிடா அம்மா.(*_*)
 
//அம்மா+அம்மா....சரியில்லையே!//!!


இது கொஞ்சம் விவகாரமாய் போகுது,,,
Not that anything wrong in it !
(thanks . Seinfield )
 
நாரா...

பின்னி எடுக்குறீங்க... அடிச்சு ஆடுங்க...
 
எங்கெங்கு காணினும் சக்தியடா....

அன்னைக்கே சொல்லிட்டுப் போயிட்டாரே!
 
பின்னே!! அம்மான்னா சும்மாவா...
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]