Jul 23, 2005

சனங்களின் குரல்

சப்போட்டா விலை ஏறிப்போச்சு. வெங்காயம் உருளைக்கிழங்கு போட்ட போண்டா போடும் மாஸ்டர் தேவை. இரா.முருகன் தமிழ்நாட்டின் தேசிய உணவாக பரோட்டாவினை அறிவித்துவிட்டு, சால்னாவை மறந்துவிட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கீரிஸிலும், நைஜீரியாவிலும் சந்திரமுகி 800 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது. ஐம்பது வயது அசின் ஒரு காலத்தில் தமிழ் மலையாள படங்களின் ராணியாக திகழ்ந்திருந்தார். மன்மோகன்சிங் ஆட்சிக்கு வருவாரா மாட்டாரா என்கிற சந்தேகம் இன்னமும் காங்கிரஸ் அபிமானிகளுக்கு இருக்கிறது, ராவ் விடுவாரா என்று தெரியவில்லை. சீவக சிந்தாமணியில் சீவகன் பெயர் இல்லையென்றால் வெறும் சிந்தாமணியினை வைத்துக் கொண்டு ஆர்.வி உதயகுமார், பொன்னுமணி படமெடுத்திருப்பாரா என்று தெரியாது.

சிந்துவில் ஏற்பட்ட வெள்ளத்தில் மிஞ்சியிருப்பது காளையின் இலச்சினை தான். சிந்து பை ரவியில் பாடகர் ரவி உலக டூர் போகப்போகிறார். மக்புல் சாஹிப் தன் மகள் வஹிதாவுக்கு நிக்காஹ் செய்வதற்காக தினமும் தொழுகிறார். குஷ்டரோகிகள் தனியாக உள்ள ஒரு இடத்தில் தான் பென்ஹரில் திருப்பம் ஆரம்பிக்கிறது. மஹேந்திரா டிராக்டர்களுக்குப் போட்டியாக டாபேயின் ட்ராக்டர்கள் இருந்தாலும், ப்ரொக்டர் & கேம்பள் போல வராது. மஹேஷ் மூர்த்தி தெரியாமல், வென்ஞ்சர் பண்டிங் பேசமுடியாது. ஜானகிராமன்கள் எழுதும் கதையெல்லாம் மோக முள்ளாகாது. அபுர் ஜகரிதாஸ், வயது 67, கும்மிடிப்பூண்டி சரக்கு ரயிலில் பிணமாக கிடந்தார், அவரின் சட்டையெல்லாம் ரத்தமில்லை. அவர் அபுர்தானென்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. சிட்டி ஆப் காட் தமிழில் புதுப்பேட்டையாக வரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல் தீட்சை வாங்கிக் கொண்டு ரஜினி,ஸ்ரீமன், யூகிசேது, ஜெயராம், நாசர் இவர்களுடன் நேற்று காலை சஹாரா விமானத்தில் இமயமலை வந்தடைந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையான சுதந்திரம் கிடைத்துவிடும் என்று நேரு நம்பிக்கை தெரிவித்தார். நாளை முதல் ரேடியோவில் சரோஜ் நாராயணசாமி செய்தி படிப்பார். சுசித்ராவோடு பேசும் போது தான் தெரிந்தது, சின்மயி போல அவரும் சிஃபி தயாரிப்புதான். ஐபாடில் வீடியோ வருமா என்று தீவிரமாக அதன் வெறிபிடித்த ரசிகரான பில் கேட்ஸ் கேட்டிருக்கிறார். அஸ்ஸாமினை பங்களாதேஷோடு ஒருங்கிணைக்க ஒரு மேல் மட்ட குழு இன்று பெஷாவரில் கூடுகிறது. பவணகொளசிக பண்டிதர் தான் முதன்முதலில் தலித்துகளுக்காக 1732-இல் போராடியவர் என்று "அடி பம்பு" சிற்றிதழில் காலபைரவன் ஆதாரங்களோடு எழுதியிருக்கிறார். இன்றோடு தெண்டுல்கரின் நூறாண்டு விழா கொண்டாடப் படுகிறது, இந்தியாவின் தலை சிறந்த் பேஸ்பால் விளையாட்டு வீரராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

இத்துடன் ஆல் இந்தியா ரேடியோவின் ஒலிபரப்பு முடிவடைகிறது. பிரபாகரனிடமிருந்து தனி நாடு கேட்கும் கோரிக்கையினை முஸ்லீம் முன்னேற்ற தலைவர்கள் தீவிரமாக செயல்படுத்தப் போவதாக அவர்களின் இணையதளம் தெரிவிக்கிறது. பசுல்லா ரோடு சங்கீதாவில் சர்வரிடமிருந்து தவறி விழுந்த காபி-சாம்பார் விஷயத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக அயிரி-அக்பரி-பாபரி தீவிரவாத இயக்கம் அறிவித்திருக்கிறது. அத்வானி லாகூர் சென்றிருக்கிறார், இந்த முறையும் ஜின்னா பற்றி உளறுவதாக விமானம் ஏறுமுன் உறுதியளித்தார். ஆகஸ்ட் மாதம் நம் நண்பர் சந்திரன், சந்திரனுக்கு பிரதமருடன் போகப் போகிறார். சந்திரன் சந்திரனுக்கு போவதையொட்டி தமிழ்நாடு அரசு ஒரு நாள் விடுமுறை விடும் என தெரிகிறது. இந்த வார குமுதம் பழமை ஸ்பெஷலாக வெளிவருகிறது ... ராதா, மாதவி, சிம்ரன் போன்ற இரண்டு தலைமுறைக்கு முந்தியவர்கள் நடுப்ப்பக்க படங்கள் தனி இதழாக தரப்படுகிறது. இந்தியா 4000 கோடி ரூபாய்களை வறட்சி நிவாரண நிதியாக அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கிறது, மேலும், ஐ.நா சபையில் சீனாவோடு பேசி இன்னமும் உதவி, நலத்திட்டங்களை செய்வதாக உறுதியளித்திருக்கிறது. ரிலையன்ஸ் குழுமம், ஆப்ரிக்காவில் மூன்று நாடுகளை வாங்கியினைத்திருக்கிறது, இதன்மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மொத்த நாடுகளின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்திருக்கிறது.

சென்னை ராஜதானியில் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் புதிராக விளங்கிய மாண்டீ என்கிற மாண்டிரஸர் எனப்படும் வலை எழுத்தாளாருக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக எதுவுமே எழுதவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ஷாங்காயில் இன்டெல் ஒசாமா கணினிகள் கூட்டாக தற்கொலை செய்துக் கொண்டன. கால்குலேட்டரின் விலை 35 ரூபாய்கள். பதினாறணா என்பது ஒரு ரூபாய். இவா ஊதுனா அவா வருவா. அவா அவா சேம லாபத்தை அவா அவா கவனிச்சுக்கணும். இப்ப அது தான் என்னோட அவா.

ஆட்டுக்கார அலமேலுவில் நடித்த ஆட்டுக்கு கல்யாணம், ஸ்ரீபிரியா நேரில் வந்து வாழ்த்து சொன்னார். பாகிஸ்தானிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அவசரமாக இரண்டுக்கு வந்தது. வாந்தியெடுத்து கவிழ்ந்தபின் தமிழின் மிகச்சிறந்த கவிஞன் பாட்டிலை விட்டு வெளியேறினான். ஒரே போடில் துண்டாய் போன தலையை எடுத்துக் கொண்டு வந்தவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். சத்யம் திரையரங்கில் மேஜிக் ஹாட் என்று புதிதாய் குழந்தைகளுக்கான காப்பகத்தினை திறந்திருக்கிறார்கள். வங்காளத்தில் வந்து இந்தியாவினை கலக்கிக் கொண்டிருக்கும் "நவ புருஷ்"ஷின் கதை எப்போதோ தமிழில் வந்த அந்நியன் படத்தின் தழுவல் என்று பாதாள பைரவியில் மு.ச.இ.க.வ.த.சவின் செயலாளர் மூன்று பக்கம் எழுதியிருக்கிறார். தமிழக முதல்வராய் நான்காவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் செல்வமணி, தன் நன்றிகளை மக்களுக்கு தெரிவித்தார், இவர் அன்புமணி ராமதாஸின் எள்ளூப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ் இன்னில் பார்த்த பெண்ணின் முகம் நினைவுக்கு வரவில்லையென்றாலும் கூட, இதை சாக்காக வைத்து இன்னொரு கூட்டம் போடலாமே என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக, என் கருத்தினை சொல்ல முனைந்து, அதை தவறாக பார்த்தால், தவறிவிடுமே என்கிற அச்சத்தினாலும், பயத்தினாலும், இக்கருத்தினை படித்ததை மறந்துவிடுங்கள். நோகியா போனில் வந்த எம்.எம்.எஸ் மல்லிகா ஷெராவத் இல்லை என்றாலும் நம்பி பாருங்கள், பிரச்சனைகள் ஏதுமில்லை. ஒரு வழியாக ஆத்திச்சுவடிக்கு வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார், 12 ஆண்டுகள் ஆப்ரிக்க ஆர்கெஷ்ட்ராவுடன் போராடி இதை எம்பி 3 வடிவத்தில் தந்திருக்கிறார்கள். கோவி மணிசேகரனின் முகம் ஏன் எப்போதும் எதையோ சிந்திக்கிறது. ஒல்ட் மாங்கிற்கு இணையாக சொல்லப்பட்டாலும், எம்.ஜி.எம்மில் கிக் இல்லையென்று டாஸ்மாக்கின் மனசாட்சி சொல்கிறது.

இஸ்கானிலிருந்த கிருஷ்ணர் புதிதாக டுஷான் கார் வாங்கியுள்ளார். சபரி கிழவி தாசில்தார் ஆபிஸ் வாசலில் பென்ஷன் சான்றிதழுக்காக காத்திருந்த போதில், இந்தியன் தாத்தா வந்திருக்கலாம். கில்மா, சில்மா, பல்மா, மல்மா போன்றவைகளை தேமா, புளிமாவின் நீட்சியாக பார்க்கவேண்டும் என்று டைமண்டு கவிஞர் சொல்லியிருக்கிறார். திருவண்ணாமலையில் ஜில்லட் விற்பதில்லை. கூகிளுக்கு பதிலாக பூபிள் என்று அடித்து பலான தளத்திற்கு போகும் அபாயமிருப்பதால், எப்போதும் பூபிள் என்றே டைப் செய்யவும். நெடுஞ்சாலை காணாமல் போய்விட்டது, தனிமைக்கு பயந்து ஏதாவது சந்தில் பதுங்கியிருக்கலாம். அர்ஜூன் என்றாலே நினைவுக்கு வருவது ஆரோக்கியா பால்தான். என்றைக்கு லாப்-டாப் எடுத்துக் கொண்டு டூர் போனாலும், மறக்காமல் காண்டம் எடுத்துப் போ என்று ஜெனரல் மேனேஜர் சேல்ஸ் டீமிற்கு அறிவுறுத்தினார். தர்மபுரி, ஒட்ரையாம்பட்டி குக்கிராமத்தில் High Definition எடுக்கும் நல்ல பாம்பு இருக்கிறது. நண்பன் பெண்பார்க்கும் படலம், ராம நாராயணன் படம் போல ப்ளாப்பாக போய்க் கொண்டிருக்கிறது. வாடாமல்லி பூ என்று எழுதினாலும் ஒரு நாளும் பார்த்ததில்லை.

திரையில் ஆர்.ஆர் அதிகமாகும்போது திரையரங்கில் முன் சீட்டு ஜோடிகளை உற்று கவனிக்காதீர்கள். நர்சரிகளில் ஏனோ பனைமரம் விற்பதில்லை. பேர் & லவ்லி போட்டாலும் காக்கா சிவக்காது. ஜனங்களுக்கான வரி ஜனவரி என்றால், பெரியவர்களுக்கான வரி பெப்ரவரியா. விபத்து நேரக்கூடாது என்று வேண்டிக் கொண்டு தொடங்கும் எல்லா வண்டிகளாலும், எலுமிச்சம்பழத்திற்கு விபத்து நேரிடுகிறது. வேலைக்காரிகளின் பெயர்கள் பெரும்பாலும் முனியம்மாளாக இருக்க ஒரு ஆதிமுனிதான் காரணமென்று சண்பக ஜோசியர் சொன்னார். பேர் ஒன்றாக முடிவதால் என்றைக்கும் ரவி சீனிவாஸ், சமிந்தாவாஸ்க்கு சொந்தக்காரராக முடியாது. கிணற்றிலிருந்து மேலே பார்த்தாலும், மேலிருந்து மேலே பார்த்தாலும், கிணற்றின் மேலேறி மேலே பார்த்தாலும், வானம் மட்டும் தான் தெரியும் என்பதை கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே இன்கா பழங்குடியினரின் போற்றப்பட்ட கவியான லோரென் ரெசோ பர்ஹா சொல்லியிருப்பதாக அமெசானின் கரையோரமிருக்கும் கல்வெட்டு சொல்கிறது. தாமஸ் ப்ரீட்மேன் வேர்ல்ட் இஸ் ஸ்கொயர் என்கிற புத்தகத்தினை ஃபோர் ஸ்கொயர் ஸ்பான்சர்ஷிப்பில் எழுதுகிறார். இரண்டு வரிகள், பதிமூணே முக்கால் வார்த்தைகளுக்கு மிகாமல் எஸ்.எம்.எஸ் கதைகள் எழுதி என்னுடைய மொபைலுக்கு அனுப்பினால் சிறந்த கதைகள் பிரசுரமாகும் என்கிற உத்தரவாதத்தினை தரமுடியாது.

Comments:
நாராயாணா!!!

இந்த விளையாட்டுக்கு நாண் வரலை....அமாம் நீங்கதானே....பாரதியார் நடத்தும் இந்தியா பத்திரிக்கையில வேலை செய்யும் நாரயணன்...

அன்புடன்
அரவிந்தன்
 
நல்ல பதிவு. :-)
 
ம் இலங்கைத் தமிழர் பற்றி உங்கள் கண்ணுக்கு ஒண்ணுமே தெரியலையா?
 
கறுப்பி, இலங்கைக்காக நீங்க எழுதுங்களேன். இது ஒரு நவீன நீட்சிவாதம். பின் நவீனத்துவத்தினை தூக்கி குப்பையில் போடுங்கள். நீட்சி வாதத்தின் அடிப்படை எல்லா செயல்களும் ஒரு செயலின், நிறைய செயல்களின் நீட்சிகளே. இதை முடக்குவாதம், பக்கவாதம் என்று கிண்டல் செய்தாலும், அதையும் தன்னுள் கொண்டு நீட்சி செய்யலாம். நவீன, பின்நவீனத்துவ போண்டாக்களுக்கு பிறகான பிரஷ்ஷான காபி தான் நீட்சிவாதம். இவர்களை நீங்கள் நீட்சியலிஸ்ட்ஸ் என்று அழைக்கலாம். நீட்சியலிட்ஸின் குறிக்கோள் சொல்லப்படும் எல்லாப் பொருள்களையும் அதனதன் எல்லைகள் தாண்டி நீட்சிப்பதே. நீட்சியே சிருஷ்டி. சிருஷ்டி என்பதெ நீட்சி தான். நீட்சிவாதம் தான் உலகின் பரிமாணங்களை தெளிவாக உணர்த்தும் விஷயம்.

நீங்களும் நீட்சியலிஸ்டாக மாறுங்கள். 5 நீட்சியலிஸ்டுகளுக்கு 2 இலவசமாக பெறுங்கள்.
 
நாராயணன்:
சினிமாவுக்கு ஒரு ஒன்லைனர் சொன்னவுடனே இப்படி ஒரு பதிவை நேற்று பிலடெல்பியாவில் கரி உடைத்து ரெயில் ரோடு போடும் போது யோசித்தேன்..
எதிர்காலத்தை துல்லியமாக சொல்லும்,
 
தலை!!!

சின்ன சந்தேகம்!!!..நிவாரன் 90-அடிச்சா நீட்சயலிஸ்ட் -ஆகமுடியுமா?...
 
அரவிந்த், நிவாரண் 90 அடிச்சா, நிர்வாண நிலையை அடையலாம்ன்னு பீடி சாமியார் சொல்லியிருக்கலாம். எனக்குத் தெரியாது. ஆனால் நீட்சியலிஸ்டாக நீங்கள் செய்ய வேண்டியது ரொம்ப சுலபமான விஷயம்.

முதலில் 2 முட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பின் ஐபாடில் பாட்டுக் கேளுங்கள். லல்லுவினை வைத்து மட்டும் பீகாரிகளை எடைப் போடக் கூடாது. கிங் பிஷர் விலை அநியாயமாக 125 ரூபாய் சொல்கிறார்கள். எடுத்த முட்டைகளை மீண்டும் ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். கடன் வாங்கிய ஐபாடினை திருப்பிக் கொடுங்கள். ஏபிஎன் ஆம்ரோவில் பர்சனல் லோன் போடுங்கள். பாக்தாத் இன்னமும் ஈராக்கின் தலைநகராகதான் இருக்கிறது.

இதை காலையில் எழுந்து ஒன்றுக்கு போய்விட்டு திரும்பி வந்து படுத்துக் கொண்டு முன் தூங்கி பின்னெழுந்து படிக்காமல் இருங்கள். விரைவில் நீங்களும் நீட்சியலிஸ்ட் ஆகலாம்.
 
மாறிட்டாப் போச்சு நாராயணா.
 
நாராயணன்!!!

நீட்டி முழுக்கி பேசும் அரசியல்வாதிகளும் நீட்சியலிஸ்ட்-தானே ....சரியா...
 
நீட்சியலிஸம்....சிறு குறிப்பு.....

வாழும் வாழ்க்கையே ஒரு நீட்சய்லிஸம்--நீட்சயலிஸம் என்பது ஒரு எக்ஸ்டென்ஷன்....உயிர் இல்லா ஜடபொருட்களில் கூட நீட்ச்யலிஸ தன்மைய காணலாம்...டெலிபோன் போர்ட் லைன் மற்றும் எக்ஸ்டென்ஷன்..லைன்...

குழந்தை -குமரன்....ஒரு எக்ஸ்டென்ஷன் தானே......இப்படி சொல்லிட்டே போகலாம்
 
நாராயணா.................

சாருவோட சமீபத்துல எங்காவது போட்டோ சேஷனுக்கு போனீங்களா?
 
//சேஷனுக்கு// sorry செஷன் கொஞ்சம் நீட்சியாய்டுச்சு
 
எதெல்லாம் நீட்சியில்லை...
தோசை --மாவின் நீட்சியில்லை...-அது உருமாற்றம்..
சரக்கு அடித்தபின் வரும் வாந்தி...நீட்சியில்லை..அது ஆப்டர் எபக்ட்ஸ்...
 
//படிச்சினுக்கீறது

Autobiography of a Yogi by Paramahansa Yogananda//

யோவ் நாரா, ஒரு வருசமா இதேதான்யா இருக்கு! இன்னமா படிக்கிறீங்க? படிச்சு முடிச்சதும் நம்மளாண்டை கடனா தள்றது?
 
;-)
 
நீட்சியவாதிகள் அனைவருக்கும் நன்றி. தங்கமணி, சாருவோடு சேஷன் என்றெல்லாம் எதுவுமில்லை. கொஞ்ச நாள் முன்னாடி பார்த்தது அவ்வளவுதான். மற்றபடி ஒரு முடிவினை நோக்கிப் போகும் எல்லா விதயங்களும் போரடிக்கின்றன. அதை மாற்றி கொஞ்சம் லேட்ரல் திங்கிங்கும், கொஞ்சம் எதிர்பாரா தன்மையும், எள்ளலும், கிண்டலும், சுவாரசியமும் மிக்க ஒரு நடையினைத் தேடி பரிசோதித்துக் கொண்டிருந்தபோது கிட்டியது இது. அப்படியே தொடர்கிறேன். அவ்வளவே. மற்றபடி எவ்வித இசத்துக்கும், ரசத்துக்கும் இதற்கும் தொடர்புகளில்லை.

மூர்த்தி, இதைப் பற்றி போன பதிவிலேயே எழுதிவிட்டேன்.

பெயரிலி, வெறும் :-)-வா இல்லை :-))))) -வா
 
:-)

//இவா ஊதுனா அவா வருவா//

நாராயண், இதை நான் மட்டும் தான் கவனித்தேன் என்று கண்மூடிப் பூனையாய் இருந்து விட்டேன். 'சபாஷ் சரியான போட்டி' மாதிரி இதுவும் பிரபலம் தானோ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]