Jul 26, 2005

என் பெயர் நளினி ஜமீலா

என் பெயர் நளினி ஜமீலா, வயது 51, நானொரு பாலியல் தொழிலாளி. திருச்சூர், கேரளாவிலிருந்து வருகிறேன். என்னைப் பற்றி ஒரு வலைப்பதிவிலும் செய்திகள் இல்லை. சரியென்று நானே என்னைப் பற்றி எழுதிக் கொள்கிறேன். பெரிதாய் காரணங்கள் ஒன்றுமில்லை. நான் பாலியல் தொழிலை சார்ந்தவளாதலால், என்னையும், என் தொழிலையும், என் அனுபவங்களையும், என் வாடிக்கையாளர்களையும், சக தோழிகளையும், ஏமாற்றுபிசகுகளையும் கொண்டு புத்தகம் எழுதியிருக்கிறேன். இந்தியாவில் பாலியல் தொழிலாளியால் எழுதப்படும் முதல் புத்தகம் என்பதில் எனக்கு பெருமைதான். Oru Laimgika Thozhilaliyude Athmakatha (The Autobiography of a Sex Worker) என்றழைக்கப்படும் இதனை DC பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். நான் முதலில் கொஞ்சம் பயந்தேன். ஆனால், இதற்கு மக்களிடேயே கிடைத்த வரவேற்பு அப்ரிதமானது. 2000 புத்தகங்கள் இதுவரை இரண்டு வாரத்தில் விற்றிருக்கிறது.

ஒடாதீர்கள். கண்டிப்பாக, இதில் நான் யாரோடு படுத்தேன், எப்படி என்னை புணர்ந்தார்கள் என்றெல்லாம் விரிவாக எதுவுமில்லை. ஏற்கனவே இரண்டு விவரணப் படங்களை எடுத்திருக்கும் அனுபவத்தில் தான் இப்புத்தகத்தினை எழுதியிருக்கிறேன். கிளுகிளுப்பூட்டவோ, கிறங்க வைக்கவோ இந்த புத்தகத்தில் இடமில்லை. கேரளாவின் பாலியல் வறட்சியையும், பாலியல் இரட்டைத்தன்மையையும் தான் இதில் போட்டு உடைத்திருக்கிறேன். நான் விரும்பி தான் இத்தொழிலை செய்கிறேன். எல்லா பாலியல் தொழிலாளியின் ஆரம்பமான வறுமை தான் என்னை இதில் இழுத்தது, ஆனால் இதில் எனக்கு இப்போது உடன்பாடே. பத்தினிகளாய் தினமும், கணவரோடு அடிப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மேல் ரோட்டில் நடமாட பயப்பட்டு, எல்லோருக்கும் அடங்கி நடுங்கும் ஒரு சராசரி கேரளப் பெண்ணை விட என் நிலை எவ்வளவோ பரவாயில்லை. எனக்காகவாவது, யாரை அனுமதிக்க வேண்டும், யாரோடு படுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையிருக்கிறது.

நான் தற்போது கேரள பாலியல் தொழிலாளிகளின் மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். கேரளாவின் பாலியல் தொழில் ஒரு ஆண்களின் வடிகாலின் வறட்சியாக தான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு சராசரி மலையாளி ஆண், தன் பாலியல் சார்ந்த இச்சைகளை தணித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, இங்கே சமூக விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலேயே, அதிகமாக, தற்கொலைகளும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளும் நடக்குமிடம் கேரளாவாகதான் இருக்கும். சாதாரண தொழிலாளியிலிருந்து அமைச்சர்கள் வரை ஏதேனும் ஒரு வகையில் பாலியல் பலாத்காரர்களாகவோ, பலவீனர்களாகவோ இருக்கிறார்கள்.

நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. சமூகமும், போலிஸூம், கலாச்சார காவலர்களும் இதனை ஒத்துக் கொள்ளாத வரையில் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும் இந்நாட்டினை விட்டு வெளியேறாது.

நளினி ஜமீலா, இந்தியாவின் முதல் பாலியல் எழுத்தாளர். பாலியல் உறவினைப் பற்றி மற்றவர்கள் எழுதுவதற்கும், ஒரு பாலியல் தொழிலாளியே எழுதுவதற்கும் உள்ள வித்தியாசங்களும், இந்த புத்தகம் வந்த இரண்டே வாரத்தில் 2000 பிரதி விற்றதும், இந்தியாவில் பாலியல் பற்றிய பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. இன்னமும், பாலியல் தொழிலை அங்கீகாரம் பெற்ற தொழிலாய் அறிவிக்காத வரையில் ஜமீலா பேசும் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும், வன்புணர்வுகளும் குறையாது.


ஜமீலா என்றொரு மனுஷி
பார்க்க - நளினி ஜமிலாவின் புத்தகத்திற்கான தி வீக்கின் விமர்சனம்

Comments:
Thanks for the information Narain.

-Mathy
 
நல்ல மாற்றமாகத் தெரிகிறது. நன்றி
 
படித்ததில் உறுத்தியவை:

//According to Nalini, the scenario today is one of ‘male tragedy’; a view that is in conflict with the notion that women are the victims of sexual crimes. "The socio-cultural establishment in Kerala forbids a man from seeking an outlet for his sexuality. So the average Malayali male is sexually frustrated," she says. "This is why he gets involved in sex rackets. The men that the media and society accuse as sex offenders, including former minister P.K. Kunhalikutty, are the real victims. Women and girls are the secondary victims." //

சரீஈஈ.... what about femlae sexual drive?
Are men alone in this???

//"Occasional sex outside the home is good because it adds to the lustre of sex between husband and wife."//

I am not prude. But, this has to be discussed at various levels. Individual choice is one. But, spouse' thoughts is another.

dont have the time to discuss elaborately. But, the above quotes need to be examined.

enna sollureenga Narain?

-Mathy
 
அருமையான பதிவு. சூப்பர் நாராயணன்.
அந்த புத்தகம் எங்கு கிடைக்கும்? மலையாளமா? அல்லது ஆங்கிலம், தமிழாக்கம் உள்ளதா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
//சரீஈஈ.... what about femlae sexual drive?
Are men alone in this???//

இதற்கான பதிலை சில மாதங்களுக்கு முன்பு ஸ்டார் நியுஸில் பார்த்தேன். என்னுடைய பாலியல் தொழிலும், அங்கீகாரமும் பதிவில் இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். பெண்களுக்கான இச்சைகள் இல்லையென்றில்லை. இப்போதைக்கு பணக்கார மேல்தட்டு பெண்கள், ஜிகாளு என்றழைக்கப்படும், ஆண் பாலியல் தொழிலாளிகளை வரவழைத்து தத்தம் இச்சைகளை தீர்த்துக் கொள்கிறார்கள். பெண் பாலியல் தொழிலாளிப் போல அடிமட்ட நிலையில் இன்னமும் ஜிகாளுக்கள் இல்லை. ஆனால், இந்தியாவில் நானறிந்தவரை இது கொஞ்சம் கொஞ்சமாய் பரவி வருகிறது. இங்கே சென்னையில் பெரம்பூரில் இம்மாதிரியான ஜிகாளுக்கள் அதிகம்.

இந்தியாவில் இருக்கும் முக்கால்வாசி பாலியல் தொழிலாளர்களுக்கு வேறு தொழில் தெரியாது. அப்படியே போனாலும், அங்கேயும் பாலியல் அத்துமீறல்கள் நடக்காமலில்லை. இங்கே ப்ராட்வே பஸ் நிலையத்தில், கெட்ட வார்த்தைகளை மட்டுமே பேசி, பாலியல் தொழில் செய்து வரும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களால் இதை விட்டு வெளியே வரவிரும்பவில்லை.

தன் வாழ்க்கை துணைவரை தாண்டி பாலியல் தேவைகளைப் பார்ப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். இதில் சரி, தவறு என்கிற ஜட்ஷ்மெண்டல் தியரிக்குள் போக விருப்பமில்லை. என்னளவில், இது ஒரு நல்ல மாற்றமாக தெரிகிறது. நீங்கள் சொன்னது போல இதை விரிவாக விவாதிக்கலாம்.
 
சிவா, புத்தகம் மலையாளத்தில் வெளிவந்திருக்கிறது. தமிழ், ஆங்கிலம் பற்றிய செய்திகள் இல்லை. வலையில் பதியும் மலையாளமும், தமிழும் நன்கறிந்த இரா.முருகன் போன்றவர்கள் மேலும் விவரங்களோ, புத்தகக் குறிப்போ எழுதுவார்கள் என்று நம்புகிறேன்.
 
மிக்க நன்றி நாராயணன்.
இரா. முருகன் இதுப் பற்றி சொல்லும் வரை பொறுத்து இருக்கிறேன்.
மயிலாடுதுறை சிவா...
 
நரேன் இந்தப்பதிவுக்கு நன்றி. இது குறித்து ஞாநியும் விகடனில் எழுதியிருந்ததை வாசித்திருந்தேன்.
//நிறைவான பாலுறவு என்பது ஒரு அடிப்படை மானுட தேவை. சமூகமும், போலிஸூம், கலாச்சார காவலர்களும் இதனை ஒத்துக் கொள்ளாத வரையில் பாலியல் வறட்சியும், வெறுப்பும், பூடகமான அடக்குமுறைகளும் இந்நாட்டினை விட்டு வெளியேறாது.//
என்பது ஓஷோ கூறியும், கொஞ்சம் நிக்ழ்த்திக்காட்டியதுமானதுமான (விளைவு எதிர்த்திசையில் நகர்ந்திருந்தாலும்) பாலியல் சுதந்திரத்துக்கு அண்மையாக இருப்பது போன்று தெரிந்தது.
 
நாராயணன், குறிப்புக்கும் இணைப்புக்கும் நன்றி
 
ரயணன்...என்னுடைய பொதுவான கருத்துக்கள்!!!
இந்தவிஷயங்களில் நம் சமுதாயம் மிகவும் ஆணாதிக்கம் கொண்டதாகவே உள்ளது...நம்மில் பெரும்பாலான ஆண்கள் மனைவியின் தேவைகளை ஒருப்போது கேட்பதில்லை...எந்த கனவனாவது படுக்கைய்றையில் மனைவிக்கு ஒரு முறையாவது நன்றி என்று சொல்லியிருப்பானா...நீங்களே எண்ணிப்பாருங்கள்....
உண்மையாக சொல்லப்போனால் இந்த சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் தங்கள் தேவைய பூர்த்திசெய்துகொள்ள வெளியே செல்லவேண்டும்...ஆனால் இந்தவிஷயத்திலும் ஆண்களே வெளியே தங்கள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்கின்றனர்...
ஆதே நேரத்தில் பெண்ணின் தேவை என்பது வெறும் படுக்கை அறை தேவை என்பது மட்டுமல்ல..இன்றைய பெண்கள் (நான் பார்த்த வரையில்) ஆண் நன்பர்களோடு கைகோத்தும்,பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதில் மிகவும் ஆர்வமாகயிருக்கிறார்கள்...(திருமணம் ஆன,ஆகாத )

நாராயணண் பெரம்பூர் ஜிகளு பற்றி என்க்கு அதிகம் தெரியாது...ஆனால் ஜிகளுகள் எல்லாஇடத்திலுமிருக்கிறார்கள் என்பதே உண்மை
 
"....இன்றைய பெண்கள் (நான் பார்த்த வரையில்) ஆண் நன்பர்களோடு கைகோத்தும்,பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதில் மிகவும் ஆர்வமாகயிருக்கிறார்கள்...(திருமணம் ஆன,ஆகாத )...."

மிக சரியாக சொன்னீர்கள் அரவிந்தன். எத்தனை ஆண்கள் அதை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கமால் இருந்து இருக்கிறார்கள். அதே சமயத்தில் பெண் அதை தவறாக பயன்படுத்தி அடுத்த குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்கும் வரை எல்லாம் நலமே?!

நன்றி
மயிலாடுதுறை சிவா...
 
//நல்ல மாற்றமாகத் தெரிகிறது. நன்றி
//
The same.

Thanks for the post

sarah
 
தகவலுக்கு நன்றி நா.

ஆனால், பின்னூட்டமிடும் சிலர் பொதுப்பார்வைக்கு முற்போக்காய் இருக்க வேண்டுமோ என்றோ, சில "வித்தியாசமான" கருத்துகளை முன் வைக்கிறார்கள். உதாரணம் கீழே :

//எந்த கனவனாவது படுக்கைய்றையில் மனைவிக்கு ஒரு முறையாவது நன்றி என்று சொல்லியிருப்பானா...நீங்களே எண்ணிப்பாருங்கள்....//

திருமண வாழ்வில் பாலுறவு என்பது
இருவரும் மகிழ்ந்து ஈடுபடும் ஒரு விஷயம் அல்லவா..?? யாரும் யாருக்கும் எதையும் "தராதபோது" அங்கு நன்றி சொல்வதற்கு அவசியம் என்ன..?? இதெல்லாம் கேட்க மிகப் போலித்தனமாக, ராஜ்கிரண் படத்தில் பெண்டாட்டியை உட்கார வைத்து பூ எடுத்துப் போடுவதை ஒத்ததாய் இருக்கிறது. மனைவியோ/ கணவணோ பாலியல் தேவைகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு தோழமை என்று எண்ணிக் கொண்டால் குறையேதுமில்லை என்பது எ.தா.அபிப்ராயம். பகிர்ந்து கொள்ளலில் பிரச்சினை வரும்போது தீர்க்க முயல்வதும், முடியாத பட்ச்த்தில் உறவை விலங்காக்காமல், அவர்களை
விவாகரத்து செய்து( அவர்கள் விரும்பும் பட்சத்தில்) , வேறு துணையோடு சேர்த்து வைப்பதே விவேகம்.
 
பதிந்தவர்களுக்கு நன்றிகள். அரவிந்தன் சொல்வதில் இருக்கும் உண்மைகளை கொஞ்சம் ஆராயலாம். இந்தியாவில் பாலுறவு என்பது ஆண்வழி பாலுறவாகத் தான் இருந்து வருகிறது. பெண்ணடிமைத்தனம் முற்றிலுமாக நீங்காத நிலையில் இதை மாற்ற முடியுமென்கிற நம்பிக்கை இல்லை. ஆனாலும், இந்த காலத்துப் பெண்களின் பாலியல் தெரிவுகளை, தேவைகளை கணக்கில் கொண்டுப் பார்க்கவேண்டும். இதை வேறுமாதிரியாகவும் பார்க்கலாம். இந்த கோணம் சரியா, தவறா என்று விவாதிப்பதை தனியாக வைத்துக் கொள்வோம். 40-50 வருடங்களுக்கு முந்தி பெண்கள் பூப்படைவதும், ஆண்கள் பாலுறவுக்கு தயாராவதும் 17 -19 வயதுகளில் நடந்து வந்திருக்கிறது. பெண்கள் பூப்படைவதற்கு முன்பே பெரும்பாலான சமூகங்களில் திருமணங்கள் நடந்துவிடும். இன்றைக்கு நிலை அப்படியல்ல. ஒரு நகர சூழ்நிலையில் வாழும் பெண் 12-14 வயதிற்குள் பூப்பைய்துகிறாள். அவளின் திருமணமென்பது 24-29க்குள் நடக்கிறது. ஆண்களுக்கு அதிலிருந்து ஒரு 3-6 வருடங்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

14-25 வயதிற்குள், சமூகம், ஊடகம், சூழல், பொருளாதாரம், peer pressure [பெயரிலி நல்ல தமிழ் சொல் தாருங்கள்] என்கிற காரணிகளை வைத்துப் பார்க்கும் போது கண்டிப்பாக பாலியல் இச்சைகள் தலை தூக்கும். சென்னை பெண்கள் ஹாஸ்டல்களின் கதைகளைக் கேட்டால், பெண்களும் எவ்வளவு பாலியல் வறட்சியில் இருக்கிறார்கள் என்று தெரிய வரும்.

ஆண்களைப் போல நண்பர்களோடோ, அல்லது தனியாகவோ பாலியல் தொழிலாளியிடத்தில் போவது போல இங்கே பெண்களால் முடியாது. அப்படியே ஒரு பெண் பழகினால், உடனே அந்த பெண் "கேஸ்"ஸாகி விடுவாள்.

ஒரு மானுட ஆதார விஷயத்திற்கு எவ்வளவு முகமூடிகள், கதைப்பின்னல்கள், குடும்பம் என்கிற அமைப்புகள், வன்புணர்வுகள், அத்துமீறல்கள். பெண்களுக்கு கற்பு என்று ஒன்றை கற்பித்தவன் மிகப் பெரிய சூத்ரதாரியாக இருந்திருக்க வேண்டும். மிக அழுத்தமான, ஆழமான அரசியலை வெகு சுலபமாக தள்ளிவிட்டு, அதன்மூலம் தன் தேவைகளை காலங்காலமாக ஆண்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்கள்.
 
நண்பரே!!!...

கொடுத்து வாங்குவது அல்லது இணைந்து இன்பம் காண்பது இது இரண்டும் இல்லாத இடங்களில் குறைந்த பட்சம் நன்றியுனர்வாது இருக்க வேண்டும் என்ற அர்த்ததில் எழுதினேன்...
 
ஆ.வி யில் ஞாநி எழுதியுள்ளதையும் படித்தேன். ஜமீலாவின் சில கருத்துக்கள் புத்தகத்தில் எப்படி வெளியாகியுள்ளன என்பதை அறியாமல் ஊடகங்களில் வெளியானதன் அடிப்படையில் நான் விவாதிக்க விரும்பவில்லை. பெண்ணியவாதிகளில் பாலியல் தொழிலை தொழிலாக அல்லது சேவையாக அங்கீகரிப்பதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.இந்த விஷயத்தில் எனக்கு இன்னும் தெளிவான கருத்துக்கள் உருவாகவில்லை. கொஞ்சம் தவறினாலும் வார்த்தைகள் வேறு ஒரு பொருள் தந்துவிடும். பொருள்மயமாதல் குறித்தும் இங்கு பேசியாக வேண்டும். எனவே இங்கு இப்போது கூறுவதற்கு அதிகம் இல்லை.உங்கள் முந்தைய பதிவில் பின்னூட்டமிடாததற்கும் இதுவே காரணம்,.
 
நாராயணன் என்ற பெயர் கொண்ட நீங்களும் அல்வா என்று தம்மை சொல்லிக் கொள்ளும் விஜயும் பல பச்சை பச்சையான பதிவுகளை கொச்சை கொச்சையாக எழுதுகிறீர்கள்! உங்களுக்கும் சாருவுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை! ஆனாலும் உங்கள் போன்ற ஆட்களைத்தான் மதியும், அருணாவும், பத்மாவும், ரம்யாவும், ஜெயந்தியும், சித்ராவும், துளசியும் இன்னும்பல பெண் எழுத்தாளர்களும் ரசிக்கிறார்கள். காமம் எழுதினால் மட்டும்தான் நல்ல எழுத்தாளராக முடியும் என்று புதுச்சட்டம் வந்து விட்டதோ?!
 
நாராயணன், பதிவுக்கு நன்றி.
 
வழக்கம் போல் விவாதத்தை திசை திருப்ப ஒரு அனானிமஸ் மரத்தடி முளைத்து விட்டார். அவர் எதைப் பற்றி சொல்லுகிறார் என்பது புரியவில்லை. அதனால் பதில் சொல்வது சாத்தியமில்லை.

நாராயண், இது மதி சொன்னது போல் யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒரு topic.

என் மனதை உறுத்தும் விஷயம்: விதவைகள். மறுமணம் செய்து கொள்வதும் சுலபமில்லை. முக்கியமாக குழந்தைகள் இருப்பவர்களை மணமுடிக்க பலர் முன் வருவதில்லை. என் கண்ணால் நான் இரண்டு இளம் விதவைகளில் வாழ்க்கையை பார்த்திருக்கிறேன். இவர்களின் நியாயமான உணர்ச்சிகளுக்கு நம்மால் ஒரு expressionனும் கொடுக்க முடியவில்லையே? 'இவர்கள் சுலபமாக நம் கைக்குள் வருவார்கள்' என்று advantage எடுத்துக் கொள்ள நினைக்கும் சில ஆண்களைத் தவிர, as a society what have we offered them?
 
நாராயணன்
இவரைப்பற்றி முன்பு எங்கோ வாசித்த நினைவு. நல்ல அறிமுகம்.

ஒரு பாலியல் தொழிலாழி நான் கஸ்ரப்படுகிறேன் ஆண்களால் வஞ்சிகப்படுகிறேன் போன்ற சமூக எதிர்பாப்பை/பரிதாபத்தை மீறி இவருடைய வெளிப்பாடு ஆரோக்கியமாய் இருக்கிறது. இதுவும் ஒரு தொழில் அதை வேறுமாதிரி பார்க்கவேண்டியதில்லை இது என்னுடைய தேர்வு என்று அழுத்தமாய் சொல்லுகிறார்.

தனிய அடக்கப்பட்ட பாலியல் உணர்வின் வெளிப்பாடாய் விபச்சாரத்தை பார்க்கின் இன்று மேற்குலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் தொழிலாழிகள் மீது பிரயோகிக்கப்படும் வக்கிரங்களை/ வன்முறையை எப்படிப் பார்ப்பது. தங்கள் துணையுடன் ஈடுபடமுடியாத fantasy க்களை வக்கிரமான எதிர்பார்ப்புக்களை காசு கொடுத்துப் பண்ணுகிறார்கள் என்றா?.

பாலியல் சுதந்திரமிக்கவர்கள் என்று சொல்லப்படும் மேலைத்தேயபெண்கள் இன்னமும் இருட்டில் தான் உடலுறவு கொள்கிறார்கள் என்பது பாலியல் சார்ந்த குற்றஉணர்வுகளையும் தங்கள் உடல் சார்ந்த அருவருப்புக்களையும் பெண்கள் ஒரே மாதிரித்தான் எதிர்தொள்கிறார்கள் என்பதையல்லவா காட்டுகிறது.


"எனக்காகவாவது, யாரை அனுமதிக்க வேண்டும், யாரோடு படுக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையிருக்கிறது."
உண்மையில் தான் யாருடன் படுப்பது என்பதான தேர்வு எல்லாப் பெண்களுக்கும் இருக்கிறதா? அப்படி இருப்பின் அது மிகப்பெரிய விடுதலையாக அல்லவா இருக்கவேண்டும்.
அப்படியான ஒரு தேர்வு செய்யும் நிலமை நளினி ஜமீலாவுக்கு இருப்பது ஆரோக்கியமான விடயம் தான்.
 
//வழக்கம் போல் விவாதத்தை திசை திருப்ப ஒரு அனானிமஸ் மரத்தடி முளைத்து விட்டார். அவர் எதைப் பற்றி சொல்லுகிறார் என்பது புரியவில்லை. அதனால் பதில் சொல்வது சாத்தியமில்லை.//

ரம்யா அவர்களே,

உங்களை நான் தவறாகச் சொல்லவில்லை. அற்புதமான ஒரு சேவையை தன்னலம் கருதாமல் செய்து வரும் சிறந்தவர் தாங்கள். நல்ல எழுத்தாளர்கள் வரிந்து கட்டிக் கொண்டு பலரும் பல நல்ல பதிவுகளை வரிசையாகத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறுக்க முடியாது. தாங்கள் இந்த ப்ளாக்கர் உலகத்தில் படித்து பயனுற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனவே உங்களுக்கு இந்நேரம் தெரிந்திருக்கும் யார் யார் அருமையாக எழுதுகிறார்கள் என! அருமையான எத்தனை பதிவுகளுக்கு நீங்கள் கமெண்ட் எழுதினீர்கள் என நான் அறிய விரும்புகிறேன்?! அல்வா குமுதம் நடுப்பக்க படம் போட்டு சிம்பு நயன்தாரா உதட்டினை கவ்வி இழுப்பதை கண்டு ரசித்தீர்கள். பல பெண் உறுப்பினர்கள் மனமுவந்து பாராட்டினீர்கள். காமம் கொண்ட பதிவுகள் அவர் எத்தனை இட்டார் என்பது எனக்கும் தெரியும். அங்கே அவரை ஊக்குவித்து மென்மேலும் பதியச் சொன்னீர்கள். இங்கே நாராயணன் அவர்களும் அதேபோல காமம் பொருந்திய பதிவு போட்டதும் பற்பல பெண் உறுப்பினர்கலும் படை எடுத்து கமெண்ட் கொடுக்கிறீர்கள். ஆகா அருமையாக இருக்கிறது என தட்டிக் கொடுக்கிறீர்கள். பாராட்டுகிறீர்கள். நானும் ஒரு எழுத்தாளன்தான். எனக்கெல்லாம் ப்ளாக் இல்லை. வைத்துக் கொள்ளவும் விருப்பமில்லை. தங்களின் வாயில் இருந்து அல்ல அல்ல.. தட்டச்சில் இருந்து penis enlargement என்று ஓரிடத்தில் கமெண்ட் வந்தபோது அருவெறுப்புடன் முகம் சுழித்தேன்! நல்ல குடும்பத்து பெண்களுக்கு தேவையா இதெல்லாம்?!

நன்றாக எழுதும் எல்லா எழுத்தாளர்களையும் ஊக்குவித்து அறிவுரை கூறுங்கள். காமப் பதிவுகள் எழுதும் பலரை உங்களுக்கு வேண்டப்பட்டவர் படாதவர் எனப் பார்க்காமல் அங்கெல்லாம் மறுமொழி தராமல் வந்து விடுங்கள். அவர்கள் எழுதும் மற்ற நல்ல பதிவுகளுக்கு கமெண்ட் கொடுப்பது தவறு இல்லை.
 
ஆமாம். நானும், விஜய்யும் காமப்பதிவுகள் தான் எழுதுகிறோம். ஒத்துக் கொள்கிறேன். நாங்கள் காமப்பதிவு எழுதினால், உங்களுடைய பிரச்சனை என்ன. ஒரு பெண் penis enlargement என்று எழுதியதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு நாளைக்கு 200 ஈமைல்கள் எனக்குக் கூட தான் வயாக்ரா விற்கிறேன், ஆண்குறி விரைக்க, பெண்களின் மார்புகளைப் பார்க்க என எல்லா இடங்களிலிருந்தும் வருகிறது. அதனால் அவர்கள் கெட்டவர்களா, இல்லை நான் கெட்டவனா. இன்னமும் உங்களின் கலாச்சாரத்தினை ஒரு பெண்ணின் இறுகிய தொடைக்குள் போட்டு இறுக்காதீர்கள். பாவம், மூச்சு திண்றி செத்து தொலைக்கப் போகிறது. பிறகு, கலாச்சாரத்தினை கொன்ற பாவி என்கிற அவப்பெயர் எதற்கு உங்களுக்கு?

// நல்ல குடும்பத்து பெண்களுக்கு தேவையா இதெல்லாம்?//

நல்ல குடும்பத்து பெண்கள் என்பவர்களை எப்படி தரம் பிரிப்பீர்கள். சீ.எம்.எம் லெவல் 5 வைத்தா, இல்லை ஸிக்ஸ் ஸிக்மா பெல்டுகளைக் கொண்டா? ஐய்யா, நல்ல குடும்ப பெண்கள் கெட்டுப் போகாமல் இருக்க, விர்பூல் பிரிட்ஜ் வாங்கி உள்ளே உட்கார வைத்துவிடுங்கள். மணமும், சுகமும் தந்து கெட்டுப் போகாமல் இருப்பார்கள். பாலியல் பற்றிப் பேசினாலே உடனே அவர்கள் நல்ல குடும்பத்து பெண்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. பலே. சுன்னத் செய்யாத கலாச்சார குஞ்சுகள் ஐய்யா நீர். காப்பாற்றுங்கள். தமிழ் கலாச்சாரம் இன்னமும் கட்டிக் கொள்ளூம் புடவையில் தான் இருக்கிறது என்று நம்புவர்கள், போத்தீஸ், குமரன் சில்க்ஸ் போய் கலாச்சாரத்தினை கட்டி அழுங்கள். மாறும் சமூகவெளியின் தாக்கங்கள் புரியாமல் உளராதீர்கள்.

ஆனால், ரம்யாவும், தான்யாவும் கேட்ட கேள்விகளுக்கு, உங்களின் சீர்தூக்கிய சமூகத்தினால் பதில் சொல்லமுடியுமா? அவர்களின் கேள்வியில் இருக்கும் தகிப்பும், வெறுமையும் உங்களால் புரிந்துக் கொள்ள முடியுமா? மதி கேட்ட கேள்வியின் உள்ளிருக்கும் உளவியலும், சமூக கட்டமைப்பின் ஆழமான சங்கிலிகளை உங்களால் உடைக்க முடியுமா ? உங்களால் முடியாது. உங்களுக்கு தேவையானதெல்லாம், யாராவது வேசி, பாலியல் தொழில் செய்பவர்கள், மார்பு, ஆண்குறி, பெண்குறி என்று எழுதினால் உடனே அவர்களை காம எழுத்தாளர்களாக முத்திரை குத்தி விடுவீர்கள்.

தாராளமாய் முத்திரை குத்துங்கள். தூற்றுங்கள். இகழுங்கள். ஒரு போதும் நான் கவலைப் பட போவதில்லை. சே குவாராவின் வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு எவையெவை தவறானதாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறதோ அவையெல்லாம் உடையும். அப்போது வரலாறு என்னை விடுதலை செய்யும்.
 
நாராயணன்!!!

விதவைகள் மறுமனம் அதிலும் தலில் பெண்கள் மறுமனம் என்பது பலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது...இதற்க்கான சமூக காரணிகள் என்னவாக இருக்கமுடியும்...இதுப்பற்றி தலித் இயக்கங்கள் எதேனு கள ஆய்வு செய்திருக்கின்றனவா....

பெங்களூர் தமிழ்ச்சங்கம் நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சியில் தலித் விதவைகள் யாருக்குமே மணமகன் கிடைக்கல்லை...
 
மரத்தடி உங்களுடைய பிரச்சினை எங்களுக்குப் புரிகிறது. பொம்மனாட்டி வேலைக்குப் போறாளே, நாலு ஆணோட பழகறாளே, சிவ சிவ கலி முத்திப் போச்சு என்று சொன்னாலும், நீங்கள் எழுதியதும் அதன் பின்னால் இருக்கும் கருத்து ஒன்றுதான். பேசாமல் தெய்வத்தின் குரல் படியுங்கள். காஞ்சி மடத்தில் அல்லது விஸ்வ இந்து பரிஷத்தில் அல்லது ஆர்.எஸ்.எஸ் சில் சேர்ந்து உங்களுடைய 'பண்பாட்டினை' காப்பாற்றுங்கள். குடும்ப பெண்கள் என்றால் கலைமகள் படித்துக் கொண்டு, மாலையில் விளக்கேற்றி பக்தி பாடல்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிற ரகம் நீங்கள். மரத்தடி ஒரு கால முரண்.
 
நீங்கள் சில்க் சுமிதா பற்றிய பதிவெழுதியபோதும் இப்படி ஒரு கருத்து வந்ததென நினைக்கிறேன் (“காம” எழுத்தாளர்). உங்களைப் போன்றவர்களின் பிரச்சினை இதுதான் நாராயணன். சில்க் சுமிதாவை மனுஷியாகவும் 'வேசி'களை பாலியல் தொழிலாளிகளாகவும் பார்க்க 'முயல்வது.' நீங்கள் ‘அது’களையெல்லாம் ஒரு படத்தைப் போட்டு ஜொள்ளுவதாகவோ, வர்ணித்தோ எழுதத்தான் அனுமதி உண்டு.
'அது'கள் எல்லாம் தேடுபொறியில் தேடி 'தேவை'யானபோது உபயோகிக்க மட்டுமே. அப்பால் அவர்களைப் பற்றி எல்லாம் என்ன எழுதக் கிடக்கு?


இப்படியான கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கும் (பெண் எழுத்துக்களை ஆபாசம் எனுகிறவர்களுக்கும்) காமமும் புரியிவில்லை. காம எழுத்தும் புரியவில்லை.

இதில் மரத் தடி பெண் பெயர்களை மட்டும் எடுத்துப்போட்டிருப்பதில் ஒன்ற தெரிகிறது, அப் பதிவுகளில் ஆண்கள் பலர் பதிலளித்திருந்தாலும் ஏற்கனவே “கெட்டவர்கள்” ஆன ஆண்கள் பற்றியல்லாமல், ‘கெட்டுப்போகிற’ பெண்கள் பற்றியே பதட்டம்.

இந்த blog இல் நிறைய விசயங்கள் பேசப்படுகின்றன நாராயணன். அது காமம் பற்றிய அல்ல – சக மனிதர்களாகி பெண்கள் பற்றிய நல்ல புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது. சிலக் சுமிதா பற்றி பேசவேண்டும் என நினைப்பதும் எழுதுவதும் “முற்போக்கு வாதியாக” காட்டிக்கொள்வதற்காக ஆகவே 'இருந்தாலுங்கூட', அதில் ஒரு தவறும் இல்லை. காட்டிக்கொள்ளவேண்டுமென நினைப்பவர்கள் எல்லா இடங்களிலும்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து காட்டிக்கொண்டிருப்பதும் அவரவர் இஸ்டம். எல்லோரும் எதோ ஒரு வகையில் அதைத்தான் செய்கிறோம்/றார்கள்.

தாம் தமது காமத்தை தீர்க்க உபயோகிக்கிற பெண் வர்க்கத்தைக்குறித்துக் கூட மரியாதையற்று இழிவாகவே நினைக்கிற, தனது வசைச்சொற்கள் ஊடாக அதை வெளிப்படுத்திற ஆண்களது உளவியல்: செக்ஸ் பற்றிய ஒட்டுமொத்த சமூக/மதக் குற்றஉணர்வின் வெளிப்பாடுதான் எனத் தோன்றுகிறது.

இந்த பதிவில், ஜமீலா, ‘கேரளாவின் பாலியல் தொழில் ஒரு ஆண்களின் வடிகாலின் வறட்சியாக தான் என்னால் பார்க்க முடிகிறது. ஒரு சராசரி மலையாளி ஆண், தன் பாலியல் சார்ந்த இச்சைகளை தணித்துக் கொள்ள முடியாத அளவிற்கு, இங்கே சமூக விலங்குகள் போடப்பட்டிருக்கின்றன.” என்பது குறித்து,
இந்த நோக்கில் பார்த்தால் பாதிக்குமேல் பெண்கள்தான் தற்கொலைதான் செய்திருக்க வேணும் (அல்லது நல்ல/கெட்ட குடும்பங்களுள் நுழைந்ததுமே அது நடந்துவிடுகிறதோ?) அத்தோடு ‘இந்தியாவிலேயே, அதிகமாக, தற்கொலைகளும், பாலியல் சார்ந்த பிரச்சனைகளும் நடக்குமிடம் கேரளாவாகதான் இருக்கும்’ இது கணக்கெடுப்பின்படியான கூற்றா தெரியவில்லை. பிற இந்திய மாநிலங்களைவிட கேரளாவில்தான் அதிகம் என்பது ஆச்சரியம் அல்லவா?
 
மரத்தடி என்பவர் out of contextல் என்னை quote பண்ணியிருக்கிறார். அந்த original commentஐ மட்டும் (நாரயண் உங்க அனுமதியோடு) இங்கே இட விரும்புகிறேன். நாராயண், இது அநாவசியமாக விவாதத்தை திசை திருப்புவதாக நீங்கள் நினைத்தால், தாராளமாக delete செய்யலாம்.

சக ப்ளாகர் ஒருவர் பலர் ஆபாச பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் இருந்தோம் என்று எழுதியிருந்தார். அதற்கான என்னுடைய பதில்:


"Viagra மற்றும் P**** enlargement மின்னஞ்சல்களுக்கு unsubscribe அனுப்பி என்ன பயன் சொல்லுங்கள்? ஒன்றல்ல 20 மெயில் பதிலுக்கு வரும்." என்பது என் பதிலின் முதல் வரி.

()

நான் சொன்ன விதவைகளில் ஒருவர் 28 வயதே ஆனவர். இரண்டு பெண் குழந்தைகள். கணவர் ஒரு ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டார். இந்தப் பெண் எங்கள் வீட்டிற்கு சமையல் வேலை செய்ய வருவார். எப்பொழுதும் உற்சாகமாக இருப்பார். எங்கள் பக்கத்து வீட்டிலும் அவரை வேலைக்கு அமர்த்தினார்கள். 12 மணிக்கு வீட்டிற்கு செல்லும் அவர் இந்த வேலையையும் முடித்து விட்டு 3 மணிக்கு செல்ல ஆரம்பித்தார். அதற்கு அவர் தங்கியிருந்த வீட்டு சொந்தக்காரரின் 17 வயது மகன் கேட்கிறானாம், "என்ன இப்பேல்லாம் சரியான நேரத்துலே திரும்பறதில்லை? வேறே என்னேல்லாம் வேலை செய்யறீங்களோ?" என்று. ஒரு விதவை என்றால் யார் என்ன வேணும்னாலும் பேசலாம், கேட்கலாம்.

அவருக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சித்தேன். "இரண்டு, அதுவும் பெண் குழந்தைகளா?" என்று கேட்டு விட்டு யாரும் முன் வரவில்லை.

மரத்தடி போன்றவர்கள் நான் யாருக்கு பின்னூட்டமிட்டேன், என்ன வார்த்தை உபயோகித்தேன் என்று பார்ப்பதை விட இது போன்ற விஷயங்களுக்கு உங்க மனதின் பின்னூட்டங்களை ஆராய்ந்து, நாம் என்ன செய்யலாம் என்று தயவு செய்து யோசியுங்கள்.
 
நாராயணன்,

உங்கள் எழுத்தை நான் தவறாகச் சொல்லவில்லை. கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள். உங்களின் பழைய பதிவுகளைப் புரட்டிப் பாருங்கள் உங்களுக்கே தெரியும். எத்தனை பதிவுகள் காமப் பதிவுகள்? சில்க்கு ஸ்மிதா என்ன.. ஜமீலா என்ன.. உறவு கொள்வது என்ன.. பம்பாய் என்ன.. எப்படி முடிகிறது உங்களால்? மஞ்சள் பத்திரிக்கையா நடத்துகிறீர்கள்? ஒரு புத்தகம் பார்த்தேன். அதில் மருத்துவ ஆலோசனை என பெயர் இட்டு முழுதும் கணவன், மனைவி அந்தரங்கம், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க, விரைக்க, நீட்ட, வளைக்க, இறுக்கிப் பிடிக்க, தொங்காமல் தூக்கி நிறுத்த என பல பதிவுகள் கொச்சையாக இல்லாவிட்டாவிட்டாலும் பயனுள்ள ஆலோசனைகள் தான். நீங்களும் இங்கே பெண்வர்க்கம் பேசும் பெண்களும் கடைக்குச் சென்று அந்த புத்தகத்தை பெயர் சொல்லி வாங்கி வர முடியுமா உங்களால்? அதனை வாங்குவதோ, படிப்பதோ தவறில்லை. வாழ்க்கையில் நாம் அந்த வழிமுறைகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அவர்கள் நம்மை கஞ்சா அடிக்கச் சொல்லவில்லை, நீலப்படம் காண்பிக்கவில்லை. என்றாலும் பேசப்படும் விஷயம் அவ்வாறு. ஏன் அவ்வளவு? நீரோத் கூட நல்ல பொருள்தான். உபயோகித்தால் பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். குழந்தை பிறப்பினையும் தடுக்கும். சொறி சொறியான காண்டம்கள் அணிந்து நாம் உறவு கொண்டால் பெண்மையின் சுவர்களில் மோதி அவர்களுக்கு சாதா உறவை விட அதிக ஆனந்தம் அளிக்கலாம். பக்க விளைவுகள் இல்லாததுதான். உங்களால் கடைக்குச் சென்று எல்லோருக்கும் கேட்கும் வண்ணம் பெயர் சொல்லிக் கேட்டு வாங்கி வர முடியுமா? உங்களைவிட மூத்தவர்தான் உங்கள் தந்தை. கடைக்குச் செல்லும் அவரிடம் 10 ரூபாய் கொடுத்து அப்பா எனக்கொரு காண்டம் பாக்கெட் வாங்கிவர முடியுமா என சொல்ல முடியுமா உங்களால்? ஏன் முடியாது என சிந்தித்தீர்களா?

சில விஷயங்களை பப்ளிக்காக பேச முடியாது. பேசினால் தப்பில்லைதான். ஆனால் நம்மை அவர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடும். ரம்யா அவர்கள் Enlargement பற்றி எழுதியபோது அவர் எத்தனை நன்மைகள் செய்து இருந்தாலும் அவர் இப்படி எழுதி இருக்க வேண்டாமோ என என் மனதில் நினைத்தேனே தவிர தவறாக எண்ணவில்லை.

எல்லாவற்றையும் எல்லாரிடத்திலும் பேசமுடியாது. அதோ தெருவில் செல்லும் அழகான பெண்ணைப் பார்த்து என் நண்பனிடத்தில், "மாப்ள.. 65 மார்க்குடா!" என்று சொல்வார்கள். அதே வார்த்தையை த ஆசிரியர் இடத்தில் சொல்ல முடியுமா? அந்த பெண்ணைப் பெற்றவரிடத்தில் சொல்ல முடியுமா? அப்பெண்ணின் சகோதரர் இடத்தில் சொல்ல முடியுமா? சொன்னால் செருப்பால் அடிப்பார்கள்.

கற்பழிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து, "எந்த இடத்தில் அவன் கைவைத்தான்? எந்த இடத்தில் உறவு கொண்டான்? எத்தனை முறை கற்பழித்தான்? அவன் கற்பழிக்கும்வரை நீ என்ன செய்து கொண்டு இருந்தாய்? அப்போது உனக்கும்தானே சந்தோசம் கிட்டியது? அதற்கு முன் நீ உறவு கொண்டதே இல்லையா? கற்பழித்ததற்கு என்ன சாட்சி? நீயாக ஒத்துக் கொண்டுதான் அதற்கு இணங்கினாயாமே?" என எதிர்வக்கீல் கேட்பது போல இருக்கின்றன உங்கள் கேள்விகள்.

பெண்களை வியாபாரப் பொருளாக்கியது யார்? ஆண்களா? பெண்களா? அல்லது இருவருமா? ஏன்ன் பெண்கள் விரும்பியே இத்தொழிலை நாடிச் சென்றதில்லையா? உங்களுக்கு எத்தனை சான்றுகள் வேண்டும்? நாராயணன் இருக்கும் சென்னையின் வடபழனிக்கு என்னோடு கொஞ்சம் 5 நிமிடம் வரமுடியுமா? உங்களுக்கு நான் விரும்பியே இந்த வாழ்க்கையில் ஈடுபட்ட பலரைக் காண்பிக்கிறேன். அப்பா சீக்கு, அம்மா பக்கத்து வீட்டுக்காரருடன் ஓடிப்போயிட்டா, ஒரே தம்பி, படிக்க வச்டஹி இல்லை.. அதனால் இதற்கு வந்தேன் என ஒவ்வொரு பயனாளரிடமும் ஒவ்வொரு கதையாகச் சொல்லும் மிருகப் பெண்டிரை வகைவகையாகக் காட்டுகிறேன்!

சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் எங்களுக்கு எதுவுமே தெரியாது என எண்ண வேண்டாம் ரம்யா அவர்களே, லிட்டில் இந்தியா எனப்படும் பகுதியில் கிருபாவ் ரோடு பக்கம் சென்று பாருங்கள். அங்கே கேலாங் வட்டாரத்தின் சந்து எண்24ல் விசாரித்துப் பாருங்கள். கைநிறைய பெங்களூரில் கணினிச் சில்லு கம்பெனியில் வேலை பார்த்த பெண்கள். அதிக காசுக்கு ஆசைப்பட்டு தாமாகவே விரும்பி வந்து இத்தொழிலில் ஒருமாத விசாவில் வந்து தொழில் செய்கின்றனர். இதுதான் பெண்ணடிமையா? கணினியின் அத்தனை புரோகிராமையும் தப்பின்றி ஒப்புவிக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் அறிவுக்கு இன்னுமொரு தொழிற்பூங்காவையே பெங்களூரில் அல்லது கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் கட்டலாம். அவ்வளவு புத்திசாலிகள். ஆனால் சிந்தனை எங்கே சென்றது? காசைப் பார்த்த பெண்களை நீங்கள் கூப்பிட்டு அறிவுரை கூறினாலும் கேட்க மாட்டார்கள். சகதியில் புரண்ட பன்றிகள் போல மீண்டும் புரளவே ஆசை கொள்வர். இவர்களை யார் தள்ளியது? ஆண்களா? பெண்களா? சமூகமா? சொல்லுங்கள் பதிலை?

ஜமீலா விரும்பியே இந்த தொழிலை தேர்ந்தெடுக்க வில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

நாராயணன், விஜய் ஆகியோரின் எத்தனை காமப் பதிவுக்கு நீங்கள்(என்றால் நீங்கள் மட்டுமல்ல.. ஒட்டுமொத்த வலைப்பூ பெண்கள் சமுதாயம்) பின்னூட்டி பாராட்டி இருக்கிறீர்கள் என தேடிப் பார்க்கவும். காமம் என்பது பாவம் அல்ல. ஆனால் அதுவே முழு வாழ்க்கையும் ஆகாது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எத்தனையோ நல்ல பல செய்திகள் இருக்க நாராயணன் அவர்களும் விஜய் அவர்களும் காமப் பதிவுகள் போடுவது சிறந்ததா? அதனை ஆதரிப்பதும் பாராட்டுவதும் பண்புள்ளவர்களின் செயலா என்ன?

அதனை விளக்கிச் சொன்னால் சே குவாராவின் வார்த்தைகள் வருகின்றனவாம் நாராவுக்கு. காமத்துக்கும் சேகுவாராவுக்கும் என்ன சம்பந்தம் எனச் சொல்வாரா அவர்? மஞ்சள் பத்திரிக்கைகளின் எழுத்துக்கும் இவர்களின் எழுத்துக்கும் எனக்கு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை!
 
Maரத்தடி அண்ணா,

நான் உங்கள் கட்சி அண்ணா. எனக்கு வலைமரத்தில் அசிங்கமாக எழுதும் நாராயாணன், விஜய் ஆகியோரை கழுமரத்தில் ஏற்றவேண்டும்.

M அண்ணா நீங்கள் எய்தியதில் பிதித்த சில வரிகள்

//மருத்துவ ஆலோசனை என பெயர் இட்டு முழுதும் கணவன், மனைவி அந்தரங்கம், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க, விரைக்க, நீட்ட, வளைக்க, இறுக்கிப் பிடிக்க, தொங்காமல் தூக்கி நிறுத்த என பல பதிவுகள் கொச்சையாக இல்லாவிட்டாவிட்டாலும் பயனுள்ள ஆலோசனைகள் தான்.//

//உங்களைவிட மூத்தவர்தான் உங்கள் தந்தை. கடைக்குச் செல்லும் அவரிடம் 10 ரூபாய் கொடுத்து அப்பா எனக்கொரு காண்டம் பாக்கெட் வாங்கிவர முடியுமா என சொல்ல முடியுமா உங்களால்? ஏன் முடியாது என சிந்தித்தீர்களா?//

நோபல் பரிசு வாங்கப்போகும் M அண்ணாவின் வரிகளில் இந்த வரிய் ரொம்பப் பிடித்தது.

//நீரோத் கூட நல்ல பொருள்தான். உபயோகித்தால் பல நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும். குழந்தை பிறப்பினையும் தடுக்கும். சொறி சொறியான காண்டம்கள் அணிந்து நாம் உறவு கொண்டால் பெண்மையின் சுவர்களில் மோதி அவர்களுக்கு சாதா உறவை விட அதிக ஆனந்தம் அளிக்கலாம். //

அய்ய்யேயோ என்னா வரிங்க என்னா வரிங்க.கலெக்கிரீங்க. M அண்ணா இவ்வளவு நாலு எங்கிருந்தெ அண்ணா. ஒடம்பெல்லாம் ஆடுது M அண்ணா

//சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் எங்களுக்கு எதுவுமே தெரியாது என எண்ண வேண்டாம் ரம்யா அவர்களே//

M அண்ணா ஏன் அண்ணா நீங்க ஜிங்கப்புர்ல இக்காப்பெல ஜொள்ளவேயில்ல.

//சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால் எங்களுக்கு எதுவுமே தெரியாது என எண்ண வேண்டாம் ரம்யா அவர்களே//

M அண்ணா அங்கன தான் வேலெய் ஜெய்றிங்களன்னா

//penis enlargement என்று ஓரிடத்தில் கமெண்ட் வந்தபோது அருவெறுப்புடன் முகம் சுழித்தேன்! நல்ல குடும்பத்து பெண்களுக்கு தேவையா இதெல்லாம்?!//

M அண்ணா அப்படியே சுளுக்கிட்ட்ட்டி நிண்ட்ராமே குடும்பபென்கல திட்டி தீர்பம் வர்ரிய அன்னா..

// நானும் ஒரு எழுத்தாளன்தான். எனக்கெல்லாம் ப்ளாக் இல்லை. வைத்துக் கொள்ளவும் விருப்பமில்லை. //

M அன்னா எங்க உங்க் ப்லாக் இங்கன இருந்தது எத்திட்டுங்கலா.

நிரய எழ்துங்க மரத்தடி அன்னா உங்க எலுத்த பட்கினும் போல போல இர்க்கு
 
//மஞ்சள் பத்திரிக்கைகளின் எழுத்துக்கும் இவர்களின் எழுத்துக்கும் எனக்கு வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை! //

M அன்னா ஒன்னு கேக்க மர்ந்துபோச்சி. நெர்ய மஞ்சல் பத்ரிக்க பட்சிருக்கீங்கப் பொலிருக்கு. M அன்னா ரொம்ப நல்ல இர்க்கும் ஒரு புக்கு சொல்லுங்கலேன். நான் வான்கி பட்கனும். துபயில அத்து எங்கன கிடைக்கும்?
 
தகதிமிதா அவர்களே,

நான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. சென்னையின் அழகிய சிந்தாதிரிப் பேட்டையில் இருக்கிறேன். வேண்டுமானால் என் தருகிறேன். அழையுங்கள். நீங்கள் சவுதியில் இருந்து அழைக்க பெரும்பணம் செலவாகும்! அல்லது நாராயண் அவர்களை அழைக்கச் சொல்லுங்கள். எண் தருகிறேன். எனது எழுத்தினில் என்ன குற்றம் கண்டீர்? காமம் செப்பி கண்டது மொழியும் பதிவர்களை இனங்காட்டல் தவறா?

மற்றபடி யாருடைய வலைப்பூவையோ என் வலைப்பூவாகச் சொலுவது சுத்த அபத்தம். சம்பந்தப் பட்டவர்கள் வந்து பதிலிறுப்பார்கள் என நம்புகிறேன்.
 
//மரத்தடி போன்றவர்கள் நான் யாருக்கு பின்னூட்டமிட்டேன், என்ன வார்த்தை உபயோகித்தேன் என்று பார்ப்பதை விட இது போன்ற விஷயங்களுக்கு உங்க மனதின் பின்னூட்டங்களை ஆராய்ந்து, நாம் என்ன செய்யலாம் என்று தயவு செய்து யோசியுங்கள்.//

ரம்யா அவர்களே,

உங்களைப்பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் ஏழைச் சிறுவர்களுக்கு தாங்கள் திரட்டும் நிதி பற்றி தெரிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதனால் என் மனதில் மற்றவர்களைவிட அதிக அளவில் நல்லவராக அமர்ந்தீர்கள்.

ஆனால் உங்கள் எழுத்தினில் என்லார்ஜ்மெண்ட் என இருந்ததும் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன் என நினைக்கிறேன். இங்கே உங்களை மட்டும் சுட்டிக் காட்டவில்லை. பொதுவாக பல பெண் உறுப்பினர்களையும் சுட்டித்தான் சொன்னேன். நீங்கள் மட்டுமே பதில் தந்ததால் விவாதம் மாறிப் போனது. உங்கள் மனம் வருந்தும்படியாக நான் ஏதும் சொல்லி இருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்.

மற்றபடி தகதிமிதா என்பவர் யாரையோ நினைத்து என்னவோ சொல்லிக் கொண்டு இருக்கிறார். நோ கமெண்ட்ஸ்.

தாங்கள் அறிந்த பெண்ணிற்கு இருபிள்ளைகள் எனவும் மறுமணம் செய்துவைக்கலாமா எனவும் கேட்டீர்கள். உண்மை உண்மை நோக்கம் சரியானது. 28 வயது எல்லாம் பெரிய வயது இல்லை. தாராளமாக செய்து வைக்கலாம். இரு ஆண் பிள்ளைகள் இருந்தால் கைப்பிடிக்க நினைப்பவர்கள் இரு பெண் பிள்ளைகள் இருந்தால் ஏன் ஒதுங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. அப்பெண்ணிற்கு நல்ல கணவர் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன். என்னால் கூட நல்ல மாப்பிள்ளையாக அவருக்குப் பார்க்க முடியும். சிங்கையில் பணிபுரிபவரையே. நிரந்தரவாசம் கொண்டவர் அல்லது சிங்கப்பூரர்கள் எனக்குப் பழக்கம் இல்லை. தங்களின் தொடர்பு முகவரி தெரிந்தால் இந்த விஷயத்தில் உதவ நான் காத்திருக்கிறேன்.
 
நாராயணன்:

இந்தச் செய்தியைப் படித்திருக்கலாம். இங்கு எண்ணங்களை இட்டுள்ள மற்றவர்களுக்கும் படிக்க இந்த இணைப்பு: http://www.nakkheeranbiweekly.com/Nakkheeran/home.html

சென்னை(யும்) எப்படி மாறி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. 2 வார முந்தைய விகடனில் ஈ.சி.ஆர் ரோடு சமாச்சாரங்களையும், நேற்றைய த்ரிஷா நாட்டியங்களையும் மற்ற செய்தித்தாள்களில் வாசித்திருக்கலாம். ஸ்டார் டிவியில் என்.டி.டிவியில் அடிக்கடி இந்த கிகோலோக்கள், மற்றும் இந்த (வட இந்திய ஊர்) சமாச்சாரங்களை ஒளிபரப்புகிறார்கள். தமிழ் டிவி சானல்கள் இன்னும் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

- அலெக்ஸ்
 
Maraththadi : Your ideas are reflecting the same as that of Moorthi's as said in Manti's last blog. Comment #21. Wow, what a coincidence
 
//Maraththadi : Your ideas are reflecting the same as that of Moorthi's as said in Manti's last blog. Comment #21. Wow, what a coincidence //

Dear Jenbagam,

You don't need to do great research to identify moorthi's comment. Obviously everybody knows about his comment style and writing flow. You know one thing. Recently he shutdown his blogger account also. Why you know? One of his personality is planning something. 'Marathadi' is just his 'Ambi' Vs 'Kaveri' personality. He will come as 'Anniyan' Vs 'chandramuki' later.

As you said, to let the people know about him, I am making link here to reach mantreesor blog's comment by him.

what a coincident... what a coincident. It seems that great people think alike... isn't it? I think that's what happened with marathadi :-))

Thank god. Monty is using weblog.us. So moorthi cannot delete his comment from there. Otherwise there is a chance to delete his comment after seeing my head.
 
ஐய்யே தோடா சிந்தாரிபேட்டையா நைனா நீ?
ஒன்னாட்ட கஸ்மாலங்க ஒரு காலத்துல , கொயந்தைங்கல்லாம் கடவுள் குட்த்துன்னு சொல்லிகின்னுதா பெத்து தள்ளி இந்தியாவையே மந்தையாக்கிட்டானுவ. இன்னிக்கி நீங்கல்லாம்
மாட்டிகினு வேலை செய்ல. நைனா நீ எய்துனதுதான் நாராசமா கீது. வந்டாரு நாயம் சொல்ல.
இவரு சொல்ட்டாருன்னா எல்லா பொம்நாட்டிகளும் அவிசாரிங்க.. இவரு ஓகேன்னுட்டாருன்னா எல்லா பிதிவெரதைங்க.. போ நைனா போய் வேலவெட்டி இருந்தாபாரு. நீ மொதல்ல தெர்ஞ்சிக்க வேண்டிதே காமம்னா இன்னானுதான். மஞ்ச புஸ்தொகத்தல்லாம் உட்டுட்டு போயி நல்ல பொஸ்தவமா வாங்கி பாரு , "காமம்"னா இன்னான்னு போட்டிருக்குனு. சொம்மா பிளாகுல வந்து கூவிகுனு..
 
To let the know people clearly.

Following comment is from monty's blog by a person called moorthi.
//காமத்தினையே முழுமூச்சாய் எழுதும் அது பக்கம்தான் பெண்கள் கூட்டம்! என்னத்தை சொல்ல?//

But in this post, 'marathadi's comment is,

//உங்கள் போன்ற ஆட்களைத்தான் மதியும், அருணாவும், பத்மாவும், ரம்யாவும், ஜெயந்தியும், சித்ராவும், துளசியும் இன்னும்பல பெண் எழுத்தாளர்களும் ரசிக்கிறார்கள். காமம் எழுதினால் மட்டும்தான் நல்ல எழுத்தாளராக முடியும் என்று புதுச்சட்டம் வந்து விட்டதோ?! //

People who has brian and thinking power knows who writes what. Marathadi + another M doesn't have any brain.

Please never reply to his comment.

He does not even know how to make mistake.
 
Dear வழவழா_கொழகொழா,

Everybody knows who is marathadi. Please don't waste your energy typing comment for him.

Let us ignore him.
 
Anyway Marathadi will come and reply tomorrow morning as per singapore time. Perhaps he may come in different name during that time. Let us rest in peace till that time. Bye.
 
வழவழா-கொழகொழா, கஜேந்திரபாலன், செண்பகம் உங்கள் கமெண்டுகளுக்கு நன்றி.

வலை நினைத்துக் கொண்டு உரலை இடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். கஜேந்திரபாலன் அவர்களின் எழுத்தும் தகதிமிதா என்பவரின் எழுத்தும் ஒன்றாக இருக்கிறது. இருவரும் ஒன்றா? முகமூடி என்று எழுதும் அன்பரின் எழுத்தும் மாயவரத்தான் என்று எழுதும் அன்பரின் எழுத்தும் ஒன்றாகவே இருக்கிறது. இருவரும் ஒன்றா?

காமம் எழுதுபவர்களை எதிர்த்தேன். அவர்களை வாழ்த்தி வரவேற்று பின்னூட்டியவர்களை எதிர்க்கேள்விகள் கேட்டேன். என்ன கேட்டேன் என்பதனைப் பாருங்கள். உங்களின் உண்மைப் பெயர் வழவழா-கொழகொழாவா? உங்களின் உண்மைப் பெயர் கஜேந்திரபாலனா? உங்களின் உண்மைப் பெயர் செண்பகமா? ஒரே கருத்துடைய பலர் இணையத்தில் உலவலாம். அப்படி சொல்பவர்கள் எல்லாம் ஒருவரே என அனுமானிப்பது தவறு. அவ்வாறு நீங்கள் அனுமானித்தாலும் கூட இந்த காம எழுத்தாளர்கள் இவ்வாறெல்லாம் எழுதியதை எழுதுவதை எழுதப்போவதை சரி என்றா சொல்ல வருகிறீர்கள்? குமுதம் நடுப்பக்க நடிகைப்படம் போட்டு வாய்க்கால் தெரிகிறதா எனக் கேட்டவர் எல்லாம் நல்ல எழுத்தாளரா உங்களுக்கு?
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇

美女視訊,辣妹視訊,視訊交友網,免費視訊聊天,視訊,免費視訊,美女交友,成人交友,聊天室交友,微風論壇,微風成人,情色貼圖,色情,微風,聊天室尋夢園,交友,視訊交友,視訊聊天,視訊辣妹,一夜情

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]