Aug 23, 2005
கூகிள் டெஸ்க்டாப் 2 (beta)
கூகிள் டெஸ்க்டாப் 2 பீட்டாவினை நேற்று வெளியிட்டிருக்கிறது. டெஸ்க்டாப் 2வில் நிறைய மாற்றங்களை கூகிள் செய்திருக்கிறது. முக்கியமான விதயமாய் தெரிவது, சைடு பார் என்றழைக்கப்படும் உங்களின் கணினியில் இட,வல புறங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒரு சிறிய ஆனால் செம்மையான நிரலி. கூகிள் டெஸ்க்டாப் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இது. கூ.டெ ஒரு சிறிய நிரலி. உங்களின் கணினியில் உள்ள எல்லா கோப்புகளையும் உடனடியாக இதைக் கொண்டு தேட முடியும். அதற்குதான் விண்டோஸ் தேடல் இருக்கிறதே என்று சொல்லாதீர்கள். அது ஒரு மகா சொதப்பலான தேடல் பொறி. அது தேடி முடிப்பதற்குள் நமக்கு ஆயுசு முடிந்துவிடும். கூ.டெ எப்படி கூகிள் தளம் இயங்குகிறதோ, அதேப் போல வேகமாக வடிவமைக்கப்பட்ட நிரலி. கேட்ட கோப்பு, உடனடியாக, நிரலிக்குள் காணக் கிடைக்கும். கூ.டெ.2வில் செய்துள்ள மிக முக்கியமான மாற்றம் சைடு பார். சைடு பாரில் உங்களின் மின்னஞ்சலை சேர்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் உங்கள் மின்னஞ்சல் பொட்டியை திறக்க வேண்டிய அவசியமில்லை. செய்திகள் வாசிக்க, பதிவுகள் படிக்க, சும்மா கிறுக்க, சமீபத்தில் பார்த்த தளங்களை பார்வையிட, அறிவியல் செய்திகள் அறிந்துக் கொள்ள, வானிலை ஆராய, பங்கு சந்தை பரிமாற, உங்கள் கணினியில் கோப்புகளைத் தேட என எல்லாவற்றுக்கும் வழி இருக்கிறது. இந்த ஜிகினாக்கள் வேண்டாமென்றால், சைடு பாரினை மூடிவிட்டால், உங்கள் டாஸ்க் பாரில் "தேமே"னென்று உட்கார்ந்துவிடும். உங்கள் கோப்புகளை மட்டும் தேடிக் கொள்ள பயன்படுத்தலாம். வெறும் 1.32 எம்.பியில் உங்களின் சகலவிதமான விதயங்களையும் உங்களின் வசதிக்கேற்ப மாற்றி வைத்துக் கொள்ளலாம்.
பார்க்க - கூகிள் டெஸ்க்டாப் 2 தரவிறக்க
பார்க்க - கூகிள் டெஸ்க்டாப் 2 தரவிறக்க
Comments:
<< Home
இது மாதிரி நிறைய விஷயம் (ஃபயர்பாக்ஸ் இன்னபிற) முயற்சி பண்ணலாமா வேணாமான்னே தள்ளிப்போகும். (எனக்கு மிகவும் பிடிச்சது கூகிளின் பாப்பப் தடுப்பான்) இன்னிக்கி உங்க பதிவ பாத்தவுடன் சரின்னு கூகிள் டெஸ்க்டாப் இறக்கியாச்சி. இன்டக்ஸிங் ஓடிக்கிட்டு இருக்கு. பிடிச்சா அட்வான்ஸ் தாங்க்ஸ். பிடிக்கலையின்னா உங்கள எப்படி திட்டறதுன்னு கொஞ்சம் சொல்லிப்போடுங்க ;-))
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]