Aug 31, 2005

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 25 கோடி

யாழிசையில் விவேக் சொல்லியதாக சொன்னதைப் பார்த்தவுடன் சில விதயங்கள் தோன்றியது.
"தமிழ்நாட்டில் மொத்த ஜனத்தொகை ஆறரை கோடி. அதில் மூன்றரை கோடி நமது தேவர்
இனம்தான்."
என்று விவேக் சொன்னதாக சொல்லியிருக்கிறார். பா.ம.க தலைவர் எப்போதோ தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் நாங்கள் பெரும்பான்மையினர் (சரி ஒரு ஒன்றரை கோடி என்று வைத்துக் கொள்ளலாம்) என்று கேட்டதாக நினைவு. நாடார் பேரவையும் தமிழ்நாட்டில் 50 இலட்சம் பேர்களுக்கு மேற்பட்டு இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆதாரங்கள் இப்போது கைவசமில்லை. திருமாவளவன் + கிருஷ்ணசாமி + தமிழகமெங்குமிருக்கும் தலித் பேரவைகளைச் சேர்த்துப் பார்த்தால் அது ஒரு 25 இலட்சம் இருப்பதாக சொல்லலாம். [அரசு 12.35 இலட்சம் என்று கணக்கு சொல்கிறது]. நாயக்கர்கள், வேளாளர்கள், செட்டியார்கள், யாதவர்கள், பூந்தமல்லி முதலியார்கள், வேலூர் முதலியார்கள், சத்திரிய குல வெள்ளார்கள், இடும்பர்கள், பிள்ளைகள், வண்ணார்கள் பற்றிய குறிப்புகள் இல்லை. குறிப்புகள் இல்லையென்றாலென்ன, அவர்களும் மொத்தமாய் ஒரு 90 இலட்சம் பேர்கள் தமிழ்நாட்டில் தங்கள் சாதி சார்ந்து இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம்.

இதுதாண்டி, தமிழ்நாட்டில் விஜயகாந்திற்கு பின் ஒரு கோடியும், ரஜினிகாந்திற்கு பின் ஒரு கோடியும், தி.மு.க, அ.தி.மு.க விற்கு பின் சில கோடிகளும், கம்யுனிஸ்ட், காங்கிரஸ், திராவிட தெலுங்கு முன்னேற்ற கழகம், வன்னியர் குலப்பேரவை, நாயுடு சங்கம் இவையீடாக ஒரு 30-40 இலட்சம் மக்களும் இருக்கலாம். இதுதாண்டி, தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இவர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் 70 இலட்சம் பேர் இருக்கலாம். ஆக மொத்தமாய் கூட்டிப் பார்த்தால் தமிழ்நாட்டின் மக்கள்தொகை, சற்றேறக்குறைய கனடாவின் பிரேசில் மக்கள்தொகைக்கு ஈடாக இருக்கலாம். ராதாரவி அண்ணாமலையில் சொல்வதுப் போல கூட்டிக் கழித்துப் பார்த்தால், கணக்கு சரியாகத்தான் வரும் போல இருக்கிறது. நல்லாதான்யா கணக்கு பண்றாங்க. கேக்கறவன் கேணப்பயலா இருந்தா ........................................

தகவலுக்கு: தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 62405679.[மக்கள்தொகை கணக்கெடுப்பு 2001] இதில் இந்துக்கள் என்று அறியப்படுபவர்களின் மொத்த மக்கள்தொகை 54985079 [ஆண்கள் 27732367 + பெண்கள் 27252712 ] கிறிஸ்துவர்களின் மக்கள்தொகை 3785060, இஸ்லாமியர்களின் மக்கள்தொகை 3470647. இதுதாண்டி, மிகவும் குறைவான எண்ணிக்கையில் சீக்கியர்களும், புத்தக் கொள்கையினை ஆதரிப்பவர்களும், சமணர்களும் இருக்கிறார்கள். என் அலுவகத்துக்கு பக்கத்தில் பஹாய் என்றொரு மதத்தின் தலைமை அலுவலகமிருக்கிறது.

Comments:
கலக்கல் சாரே!
 
நாராயண், சொல்ல வந்த உட்கருத்து சரிதானென்றாலும்... ஏன் தேவர்களும் செட்டியார்களும் மற்ற கட்சிகளில் இல்லையா?

ரஜினி ரசிகர்களும் காங்கிரஸ் கட்சியும் (அல்லது விஜயகாந்த் ரசிகர்களும் நாயுடு சங்கமும்) Mutually exclusive figures என்று எப்படி கணக்கெடுத்தீர்கள்?

.:டைனோ:.
 
டைனோ, பதிவே எள்ளல், இதில் நீங்கள் இப்படி நுணுக்கிக் கேட்டால் நானென்ன சொல்ல?
 
கனடா மக்கள் தொகை எவ்வளவுங்க? 3.2 கோடிங்க
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]



Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]