Aug 23, 2005

கூகிள், நேரு, அஸின், சையது மற்றும் 33%

அது ஒரு காலம். கண்களில் கிராபிக்ஸூம், நெஞ்சில் ஹாலிவுட்டும் கிளர்ந்து வெறித்தனமாய் எல்லா வீடியோ தொழில்நுட்பங்களையும் மேய்ந்து கொண்டிருந்த போது முதலில் காதலாகி, கசிந்து, கண்ணீர் மல்காத பெயர் - சிலிகன் கிராபிக்ஸ் சுருக்கமாய் எஸ்ஜிஐ. 3D கிராபிக்ஸ் என்றால் எஸ்ஜிஐ என்று உதாரணம் சொன்ன காலம். ஐந்து வருடங்களில் எல்லாம் தலைகீழாய் போனது. எஸ்ஜிஐ செய்த வேலைகளை இப்போது அடித்துக் கொண்டிருக்கும் மடிக்கணினி செய்துவிடும். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு கணினி கிராபிக்ஸ் என்றால் எஸ்ஜிஐ தான். இன்றைக்கு முகவரி இல்லாமல் போன துரதிர்ஷ்டசாலி. பாஸ்ட் கம்பெனி தளத்தில் கூகிளின் எதிர்காலம் பற்றிய கேள்வியோடு ஒரு செய்தி வந்திருந்தது. நேற்று எஸ்ஜிஐ இருந்த அதே இடத்தில் தான் இன்றைக்கு கூகிள் குடிபெயர்ந்திருக்கிறது. எஸ்ஜிஐ வேறெங்கோ சிறிய இடத்தில் குடிபெயர்ந்து இன்னமும் தாங்கள் தான் நுட்ப கண்டுபிடிப்புகளின் ஆதிகுடிகள் என்று காலி பெருங்காய டப்பாவாக இருக்கிறார்கள். இன்னும் பத்து வருடத்தில் கூகிளுக்கு இந்த நிலைமை வருமா? விரிவாக விவாதிக்கிறது இந்த செய்தி. அடுத்த 10 வருடங்களில் நுடபங்களில் எவ்விதமான மாற்றம் நிகழும் என்று யூகிக்க முடியாதபோது, ஒரு காமெடி இந்தியாவில் நடந்திருக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இன்போசிஸின் அடுத்த 25 வருடங்களுக்கான நிர்வாக திட்ட பாதையினை (roadmap) வெளியிட்டு இருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களில் நுட்பத்தில் எவ்விதமான மாறுதல்கள் வருமென்று தெரியாத நிலையில் மென்பொருள் சேவையினையும், மென்பொருளையும் மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நிறுவனம் 25 வருடங்களுக்கான பாதையை வகுக்கிறது என்பது என்னளவில் ஒப்புமையாகாத, நகைப்புக்குரிய விஷயம். நடத்துங்க ராசா நடத்துங்க, பில்லிங் $20 தானே இப்போ?

பார்க்க - எஸ்ஜிஐ | பாஸ்ட் கம்பெனி செய்தி | இன்போஸிஸஸ் அறிவிப்பு

58 வருடங்களாக சுதந்திரம் கிடைத்தும் இன்னமும் சுதந்திர காற்றினை நிம்மதியாக சுவாசிக்காமல் இருப்பவர்கள் இந்தியாவில் இருக்கும் காஷ்மீரிகள். சமீபத்தில் ஒரு எழுத்தாளரோடு பேசிக் கொண்டிருந்தேன். நண்பர் அ-புனைவுகளில் ஜித்தர். நிகழ்காலம், சரித்திரம், நுட்பம் என்று எழுதுபவர். அவர் இப்போது எழுதி வரும் ஒரு புத்தகத்திற்கு சேகரித்த விதயங்களில் எனக்கு சொன்ன உறுத்திய விதயமிது. 1947 இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின், இந்தியாவில் இருந்த பல்வேறு சம்ஸ்தானங்கள் இந்தியாவோடும், சிந்து நதிக்கு அருகிலிருந்த இடங்கள் பாகிஸ்தானோடும் இணைந்தன. அவ்வாறு இணையாமல் முரண்டு பிடித்த இடங்கள் ஹைதராபாத், ஜுனோகர் (இப்போதைய குஜராதில் இருக்கிறது), காஷ்மீர், . இதில் வல்லபாய் படேல் இந்தியாவோடு மற்ற இரண்டையும் இணைத்துவிட்டு, இணைக்க முடியாது என்கிற மனப்பினக்கோடு இருந்த இடம் - காஷ்மீர். காஷ்மீரின் பிரச்சனைகளைக் கணக்கில் கொண்டு, படேல் காஷ்மீரினை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தோடு இருந்தபோது, அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர் - நேரு. அதற்கான மிக அற்ப காரணம், நேருவின் தந்தை மோதிலால் நேரு காஷ்மீரில் பிறந்தவர். நேரு குடும்பம் ஒரு காஷ்மீரி பண்டிட் குடும்பம். அதனால், அவர் பிறந்த மண்ணின் காதல் அவருக்கு. ஆனால் ஒரு தனிமனிதனின் ஆசையினால், இன்னமும் ஸல்பர் வாசனையும், குண்டடிப்பட்ட மரங்களுமாய் காஷ்மீர் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் குடும்பத்தின் சுகதுக்கங்களோடு தான் இந்த நாடும் மக்களும் ஒன்ற வேண்டும் போல இருக்கிறது. வீரப்பா ஒரு படத்தில் சொல்வார் "இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்" என்று, ஒரு விதத்தில் அதுதான் நடக்குமோ என்னவோ?

சிம்ரனுக்கு குட்பை சொல்லிவிட்டு இடத்தினை காலியாக வைத்திருந்தேன். அந்த இடத்திற்கு நிறைய பேரினை பரிசீலனை செய்து முடிவாக அஸினுக்கு கொடுத்துவிடுவது என்று தீர்மானித்து வைத்திருக்கும் போதுதான் அது நடந்தது. வீணாய் போன 1960களில் எடுத்துத் திரையிட வேண்டிய "தாஸ்"ஸினைப் பற்றி ஏதோ சானலில் பார்த்தப்போது பற்றிக் கொண்டது ரேணுகா மேனன் (தங்கர் பச்சான் நவ்யா நாயரினை தன் படத்துக்கு நாயகியாக போட்டு, நாயர் என்கிற அடையாளத்தினை போட முடியாது என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் மேனன் ஸ்ட்ரைக் அவுட்) என்கிற நெருப்பு. பின் ரேணுகாவிற்காக பிப்ரவரி 14-ம் பார்க்கும் முடிவில் இருக்கிறேன். எனக்கு தெரிந்தவரையில் சுருள்முடி சாயலோடு உள்ள இந்திய நடிகைகள் குறைவு. இதனாலோ என்னவோ பெனொலப் குருஸ் நிரம்ப பிடிக்கும். பின் டாம் குரூஸோடு போனபின் ஹாலிவுட் நடிகைகளின் மீது பற்று போய்விட்டது. ஆனாலும், பியான்ஸின் மீது ஒரு கண் இருக்கிறது. நேற்றுப் பார்த்த பென்டாஸ்டிக் போரி்ன் நாயகி ஜெஸிக்கா ஆல்பா கூட பரவாயில்லை ;-) இதுதான் பிரச்சனை எங்கோ ஆரம்பித்து எங்கோ போய்விட்டது. ரேணுகா பிடித்ததற்கு சுருள் முடி கூட காரணமாக இருக்கலாம். கேரளா பெண் என்பதால், இயல்பாக இருக்கும் குழந்தைத்தனமாக இருக்கலாம். அழகான சிரிப்பாக இருக்கலாம். சாலையில் பார்க்கும் பெண்ணுக்கான லட்சணங்களோடு திரும்பி பார்க்க வைக்கும் முகமாக இருக்கலாம். கொஞ்சம் பப்ளியாக இருக்கும் குணமாக இருக்கலாம். எதுவேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனாலும் ரசிக்க முடிகிறது. ஆனாலும், அஸினின் இடம் பறிக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அட அஸினும் மல்லுதான். மல்லுக்களோடு மல்லுக்கு நிற்கமுடியாது போல. சினிமா பேசும் போது மாண்டீ, பெயரிலி, அருண், விஜய் மாதிரியான ஆட்களுக்கான இன்னொரு வேண்டுகோள்.சிட்டி ஆஃப் காட் படத்தினைப் போலவே சிட்டி ஆஃப் மென்(Cidade dos Homens) என்கிற ஒரு படம் வந்திருக்கிறது. இரண்டு படங்களும் ஒரே குழுவினரால் ரியோவில் இருக்கும் ஒரு மோசமான இடத்தினைப் பற்றிய கதைதான். யாராவது இருந்தால் தகடு அனுப்புங்கள் அல்லது பார்த்துவிட்டு பதியுங்கள்.

ப்ளிக்கர் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியாதவர்களுக்கு, ப்ளிக்கர் இணையத்தில் புகைப்படங்களை சேகரித்து, பத்திரப்படுத்தி, பகிர்ந்துக் கொள்ளும் ஒரு தளம். ப்ளிக்கரினை யாஹூ! கையகப்படுத்தி விட்டது பழைய கதை. மேட்டர் அதுவல்ல. ப்ளிக்கர் போல் நிறைய தளங்கள் பின் வந்து, தங்கி சுற்றிக் கொண்டிருக்கின்றன. ப்ளிக்கர் புகைப்படங்கள் என்றால் அதை தூக்கிச் சாப்பிடுவது போல இன்னொரு தளம் வந்திருக்கிறது. யூட்யூப் என்ற பெயருடைய தளத்தில் வீடியோ கிளிப்பிங்களை ப்ளிக்கர் போல சேகரித்து, பிறர்க்கு காண்பித்து, பத்திரப்படுத்தி, பகிர்ந்துக் கொள்ள முடியும். வெப் 2.0 என்று சொல்லப்படும் அடுத்த தலைமுறைக்கான இணையத்தில் இவ்வகையான விதயங்களின் சாத்தியக்கூறுகள் அதிகம். எதிர்கால நுட்பங்களை தொடர்ந்து ஆராயும் டெக்க்ரன்ஞ்சில் வெப் 2.0வின் அடுத்த தலைமுறை தளங்களையும், மென்பொருட்களையும் பற்றிய நேர்காணலில் இந்நிறுவனமும் இடம்பெற்றிருக்கிறது. உங்கள் விருப்பத்திற்காக யூட்யூபில் நான் பார்த்த கியுபிகல் அத்லெடிக்ஸ் என்கிற ஒரு குறுவீடியோ (caution: Dont' try at your office)

பார்க்க - டெக் க்ரன்ஞ்ச் | யூட்யூப்

இந்தியாவின் ஹை-ஜாக் பாலிஸி கொஞ்சநாளைக்கு முன்னாடி அறிவிக்கப்பட்டது. இதன்படி கடத்தப்படும் ஒரு விமானத்தினை சுட்டு தள்ளலாம் என்று சொல்கிறார்கள். ஐயா, கடத்தப்படும் விமானத்தில் முக்கிய பிரமுகர்கள் இருப்பின் இது நடக்குமா ? ஏனெனில், ஐ.ஒ.சி.யின் முதனிலை அதிகாரி காஷ்மீர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டப்போது பணிந்து போகாத அரசு, இன்றைக்கு அங்கே முதல்வராய் இருக்கும் முப்தி முகமது சைதின் மகள் கடத்தப்பட்டப் போது முந்திக் கொண்டு போய் தீவிரவாதிகளை விடுவித்து அமைச்சரின் மகளை மீட்டது. ஆக சட்டம் அமைச்சருக்கொன்று, மற்றவர்களுக்கு வேறு. இதற்கு நடுவே இன்று ஆரம்பித்துவிட்டது பாராளுமன்றத்தில் 33% இடஒதுக்கீடு கலாட்டா. அடப் போங்கடா, எல்லா தாய்குலங்களும் கொஞ்ச நாளில் துடைப்பத்தோடு டெல்லியில் அமர்ந்தாலேயொழிய இந்த இட ஒதுக்கீடு அமுலாகப் போவதில்லை. அர்த்தநாரீஸ்வரர் கொஞ்சம் பின்னாடி யோசித்திருந்தால் 33% கொடுத்திருப்பாரோ 50% கொடுக்காமல். முதலில் ஒரு ஜனநாயக நாட்டில் பெண்கள் 33% கேட்டு பிச்சை எடுக்கும் அவலத்தினை நினைத்தாலே கேவலமாக இருக்கிறது. அதையும் தாண்டி அவர்களும் ரொம்ப நாட்களாய் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், நாமும் நன்றாக டபாய்த்துக் கொண்டிருக்கிறோம். "இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"?

Comments:
நாரயண், நல்ல பதிவு, நிறைய விஷயங்கள் நன்றி. அஸினுக்குத்தான் என் ஓட்டும். ரேணுகா ஒன்னும் அவ்வளவு அப்பீல் ஆகல. பார்ப்போம். இன்னும் திரிஷாவுக்கெல்லாம் ரசிகர் - ங்க இருக்காங்கன்னு நினைச்சாதான் மனசு வலிக்குது ;-)

நாரயணமூர்த்தி பற்றி சொல்வது எனக்கு அவ்வளவாக ஒத்துப்போகமுடியவில்லை. காரணம் பெரிசா இல்லை. :-)
 
//அடுத்த 10 வருடங்களில் நுடபங்களில் எவ்விதமான மாற்றம் நிகழும் என்று யூகிக்க முடியாதபோது, ஒரு காமெடி இந்தியாவில் நடந்திருக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இன்போசிஸின் அடுத்த 25 வருடங்களுக்கான நிர்வாக திட்ட பாதையினை (roadmap) வெளியிட்டு இருக்கிறார். //

//பார்க்க - எஸ்ஜிஐ | பாஸ்ட் கம்பெனி செய்தி | இன்போஸிஸஸ் அறிவிப்பு
//

Hindu Business Line-இல் படித்தேன், நீங்கள் கூறியிருப்பதுபோல எதுவும் road map எல்லாம் நாராயணமூர்த்தி கூறியருப்பதாய் தெரியவில்லை. It was just a celebration of the completion of 25 years of the company operation. I guess you just skimmed the article.
From the article: "we have completed 25 years and look ahead, ready to face challenges."

//வீரப்பா ஒரு படத்தில் சொல்வார் "இந்த நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்" என்று, ஒரு விதத்தில் அதுதான் நடக்குமோ என்னவோ?//

நாசமாய்ப்போவது என்றால்? உலகத்தில் யாரும் நாசமாய் போவதில்லை நாராயணன். அப்படி நினைக்கவும் நம்பிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவின் ஏழை நாடுகளில் வாழும் கீழ்த்தட்டு மக்களும் கூட நாசமாய்ப் போய்விடவில்லை. அவர்களின் மகிழ்ச்சியும் புன்னகையும் கூட சில சமயம் பலருக்குக் கிடைப்பதில்லை.

//அந்த இடத்திற்கு நிறைய பேரினை பரிசீலனை செய்து முடிவாக அஸினுக்கு கொடுத்துவிடுவது என்று தீர்மானித்து வைத்திருக்கும் போதுதான் அது நடந்தது. //

அடப்பாவிகளா. என் ஆளுக்கு இவ்வளோ போட்டியா! ;0)
 
Prasanna, check this http://www.rediff.com/money/2005/aug/12infy.htm I am not against any roadmaps, but in Technology it is a different ball game. The businessline link is vazhavazha. Skip that.
 
தல இவ்ளோ நாள் பிரம்மச்சாரியா இருந்திட்டீங்க அசினை எங்கிட்ட விட்டுடுங்க உங்களுக்கென்று இன்னொருத்தி கிடைக்காமலா போய்விடுவா.

மற்றும்படி அடிக்கடி எழுதுவதில்லை என்றாலும் உங்கள் பைனாகுலர் பார்வைகள் காரம்
 
தல!!!
1999 வருட இறுதியில் நடந்த விமான கடத்தல் சம்பவத்தில் எந்த வி.ஐ.பி யும் இல்லையே!!! ஆனாலும் அரசு அப்பாவி பொதுமக்களின் நலன் கருதி தீவிரவாதிகளின் கோடிக்கைகளை நிறைவேற்றவில்லையா....அரசு முப்திமுகமது மகள் உயிரும்,மற்ற பொதுமக்களில் உயிரும் ஒன்றுதான்...
அன்புடன்
அரவிந்தன்.....
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]