Aug 3, 2005

தூக்கியாச்சு!!

இனி என் பதிவுகளில் நட்சத்திர பதிவுக்கான குறிகள் இருக்காது. எனவே என்னை தெரிந்தவர்களுக்கும், என்னோடு வலைப்பதிவிலும், தனிப்பட்ட வாழ்விலும் நெருங்கி பழகுபவர்களுக்கும் விடுதலை. இனி நீங்கள் பழகிய பாவத்துக்காகவும், நான் எழுதிய குற்றத்துக்காகவும், மனதுக்குள் வைதுக் கொண்டே நட்சத்திரத்தினை சொடுக்கத் தேவையில்லை. கொஞ்ச நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். இது தேவையில்லாத ஈகோ கிளர்ச்சியை உண்டு செய்கிறதோ என்கிற சந்தேகமிருந்தது. சமீபத்தில் 2-3 வாரங்களாக பார்த்த வாசகர் பரிந்துரையின் மூலம் முன்னுக்கு வந்த நட்சத்திரப் பதிவுகள் இதை உறுதி செய்தன. எனவே, சுத்தமாக வழித்துவிடலாம் என்று எண்ணி மொத்தமாக தூக்கியாச்சு. இதனால், நான் பதிவதில், எழுதுவதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. "நான்" எழுதினேன், இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்கிற கர்வத்தின் சாயல் என்மேல் விழுமுன் இதனை எடுப்பது நல்லதாக தெரிகிறது. மிகை நாடகத்தனமையும், அபத்தமும் சூழ்ந்த வெற்று வெளியில் அரசனாய் இருப்பதைப் போலிருக்கிறது என்று இலக்கியத்தரமாகவும் ஜல்லியடிக்கலாம். மொத்தத்தில் இப்படி குத்து குத்தென்று குத்தி தேர்ந்தெடுக்கும் விதத்தில் என் நம்பிக்கைப் போய்விட்டது.ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்தின் இலட்சணங்கள் பற்றி நம்மை விட யாருக்கு நன்றாக தெரியும்?

பிரைவசி பற்றிய பிரச்சனையில் ரவி சீனிவாஸூம், மாண்டீயும் மாற்றுப் பார்வைப் பார்த்ததுப் போல, நட்சத்திர குறீயிடுகளையும், அதன் விளைவுகளையும் கொஞ்சம் மறுபரீசிலனை செய்ததின் விளைவு தானிது. இதுப் போக, என் பதிவில் இன்னமும் நெட்ஸ்டாட் கவுண்டர் இருப்பதாலோ என்னமோ மாண்டீயினை மற்ற பதிவுகளில் பார்ப்பதுப் போல இங்கேப் பார்க்க முடிவதில்லை ;-) இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் போரடித்தால் தூக்கப்படும். மற்றபடி சால்னா தூக்கலாக பதிவுகள் வரும். இது நாள் வரை என் மீதுள்ள அன்பினாலும், கோவத்தினாலும் குத்தோ குத்தென்று குத்திய உள்ளங்களுக்கு நன்றிகள்.

தமிழ்மணம் குழுவினரின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். எவருடைய முயற்சியையும், உழைப்பினையும் இதன் மூலம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும் இது என் எண்ணம். இனி back to basics. நட்சத்திர குறீயிடுகள், தலையீடுகள் இல்லாத அக்மார்க் ரகளை மட்டுமே.

Comments:
//இது நாள் வரை என் மீதுள்ள அன்பினாலும், கோவத்தினாலும் குத்தோ குத்தென்று குத்திய உள்ளங்களுக்கு நன்றிகள்//

நீங்க இப்படிச் சொல்லிட்டீங்க. என் பதிவுலே எப்பவும் ஒரே ஒரு குத்துதான் விழும். அது யாருதுன்னு சொல்லவும் வேணுமா:-))))
 
// இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்கிற கர்வத்தின் சாயல் // இவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்ற கர்வம் stat counter பார்த்தால்தான் வரும்... நட்சத்திரம் வெறும் பரிந்துரைதான்... stat countera வச்சிகிட்டு நட்சத்திரத்த தூக்கினா கர்வம் வராம எப்படி இருக்கும்கிறேன்... நாராயண... நாராயண...

அப்புறம் உங்க பதிவ பிடிக்கலைன்னா இனி நாங்க எங்க குத்தறது :-(
 
நல்ல முடிவு
 
எடுத்தவரை நலம்.
அதை ஏன் பார்க்கிறீர்கள்? சுந்தர் சொல்லித்தான் எனக்கு (-) ஓட்டுக்கள் விழுவதுகூட எனக்கு சமீபத்தில் தெரிந்தது. அதை நான் பார்ப்பது கிடையாது. நம்மைப் பத்தி தெரிஞ்சவுங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. திட்றவங்களுக்கு ஒரு வடிகால் வேணாமா?
 
அது ஒரு காரணமில்லை; அப்பப்போ படிச்சுனுதான் கீறேன் தலைவா.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]