Aug 11, 2005
சத்தமில்லாமல் ஒரு மாற்றம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய சட்டங்கள் குறைவு. தமிழகத்திலிருக்கும் முக்கால்வாசி மகளிர் காவல் நிலையங்களிலும் மிரட்டல்களும், உருட்டல்களும் தான் நடக்கின்றன என்று சொன்னால் அது பொய்யாகாது. பெண்களுக்கு எதிராக குடும்ப அமைப்புக்குள் நடைபெறும் வன்முறைகள் ஏராள, தாராளமாய் இருந்தபோதிலும், இதுவரை இந்தியாவில் 1983-இல் இயற்றப்பட்ட குடும்ப வன்முறைக்கு எதிரான மகளிர் பாதுகாப்பு சட்டம் (376-A) தான் ஒரளவுக்கு வ்ரதட்சணை கொடுமை, ஸ்டவ் வெடித்தல் போன்ற விதயங்களை வெளிக் கொணார்ந்து தண்டனையளித்தது. ஆயினும், இது ஒரு முழுமையான சட்டமாக இல்லாமல், நிறைய ஒட்டைகள் இருந்ததால் குடும்ப அமைப்பிலிருந்துக் கொண்டு சர்வசாதாரணமாக குற்றங்களைச் செய்ய ஏதுவாக இருந்தது. இப்போது இந்திய அரசு ஒட்டைகள் குறைவான ஒரு சட்ட முன்வ்ரைவினை (Bill) முறைப்படுத்தியுள்ளது.
கிட்டத்திட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜுன் 13,2005-தினை இந்திய பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாக குறிப்பிடலாம். குடும்ப வன்முறைக்கெதிரான மகளிர் பாதுகாப்பு சட்ட முன்வரவமைவு 2005 -தினை (Protection of Women from Domestic Violence Bill, 2005) பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த யூனியன் காபினெட் கையெழுத்திட்டிருக்கிறது. புதிய மொந்தையில் பழைய கள்ளுப் போல அல்லாமல், இத் திட்ட அறிமுகத்தில் நிறைய விதயங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
முக்கியமான அம்சங்கள்
1979 ஐக்கிய நாடுகளின் கூட்டமைவில், எல்லாவிதமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் "Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பற்றிய விவாதத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணிய அமைப்புகளின் தொடர் போராட்டங்களாலும், தன்னார்வ குழுக்களின் விடாமுயற்சியாலும் இப்போதுதான் சட்டமாக மாறும் சாத்தியத்தினை உள்ளடக்கியுள்ளது.
இந்திய சட்ட தளத்தில் இன்னமும் இது பதியப்படவில்லை. ஆனாலும் ப்ரண்ட்லைன் இதனை விரிவாக எழுதியிருக்கிறது. நான் படித்து தெரிந்துக் கொண்டு மனுபத்ராவிலிருந்து. இது சட்டமாகுமா என்கிற கேள்விக்குறிகள் இருந்தாலும், இதைப் பற்றிய விரிவான விவாதங்கள் அவசியம்.

- குடும்ப வன்முறை என்பதன் வ்ரையறை
- இந்திய குடும்பங்களின் வழமையான கணவன் - மனைவி உறவினைத் தாண்டி, மொத்த கூட்டுக் குடும்பமும், குடும்ப அங்கத்தினர்களும், முக்கியமாக பெண் அங்கத்தினர்களும் (மாமியார், நாத்தனார், பெரிய மருமகள், சின்ன மருமகள்) இதில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்
- இந்திய ஆணின் ஆளுமைத்தன்மையின் கூறுகளை துண்டு துண்டாக உடைத்துக் காட்டிருக்கிறார்கள்
- "Abuse" என்பதற்கான வரையறைகள் விரிவாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணை உடல், மனம், பாலுறவு, சொல், எமோஷனல், சென்டிமெண்டல் என எல்லா வகைகளிலும் செய்யப்படும் abuse (நல்ல தமிழ் வார்த்தை என்ன?) இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது
- மிக முக்கியமாக, முக்கால்வாசி பெண்கள் வீட்டில் நடக்கும் வன்முறைகளை சொல்லாமலிருப்பதற்கு காரணம், சொன்னால், வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்கிற பயம்தான். இதை கணக்கில் எடுத்துக் கொண்டு secure housing என்கிற கட்டளையை வைக்கிறது. இதன் மூலம், பெண் தன் புகுந்த வீட்டினைப் பற்றி வழக்கு தொடர்ந்தாலும், தொடர்ந்து அவ்வீட்டிலேயே இருக்கின்ற உரிமையை இதன் மூலம் பெற முடியும்
1979 ஐக்கிய நாடுகளின் கூட்டமைவில், எல்லாவிதமான பெண்களுக்கு எதிரான கொடுமைகள் "Elimination of All Forms of Discrimination against Women (CEDAW) பற்றிய விவாதத்தில் இந்தியா கையெழுத்திட்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணிய அமைப்புகளின் தொடர் போராட்டங்களாலும், தன்னார்வ குழுக்களின் விடாமுயற்சியாலும் இப்போதுதான் சட்டமாக மாறும் சாத்தியத்தினை உள்ளடக்கியுள்ளது.
இந்திய சட்ட தளத்தில் இன்னமும் இது பதியப்படவில்லை. ஆனாலும் ப்ரண்ட்லைன் இதனை விரிவாக எழுதியிருக்கிறது. நான் படித்து தெரிந்துக் கொண்டு மனுபத்ராவிலிருந்து. இது சட்டமாகுமா என்கிற கேள்விக்குறிகள் இருந்தாலும், இதைப் பற்றிய விரிவான விவாதங்கள் அவசியம்.
Comments:
<< Home
இது மிகவும் நல்ல சேதி. இதை தவறாக சில பெண்கள் உபயோகித்துக்கொள்ளமுடியும் என்றாலும் வரவேற்புக்குரியதுவே.
ரொம்பவே நல்ல செய்தி. தவறான
உறவுகளில் சிக்கிக்கிட்டுக் கஷ்டப்படுற பேர்களுக்கு விடிவுகாலம் வந்தா நல்லதுதானே.
ஆனா, சட்டம் வந்தாலும், காவல்துறையின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கணும்.
சின்ன லெவல்லே இருக்கர காவல்துறை ஆட்களிலே பலர் இன்னமும்
ரொம்ப பிற்போக்கான எண்ணம்
கொண்டவர்களே!
என்றும் அன்புடன்,
துளசி.
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]