Aug 12, 2005

கடவுளின் கையெழுத்து

லண்டன் பஸ்ஸில் வெடிகுண்டு வெடித்த தீவிரவாதிகளுக்கு பின்னும், பள்ளிக் கூடங்களில் பரிணாம வளர்ச்சி கற்றுக் கொடுக்கக்கூடாது என்று போராடும் சிலுவைகளின் பின்னும், மசூதிகள் எல்லாவற்றையும் இடித்து கோயில் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களின் பின்னும் ஒரே காரணம் தான் இருக்கிறது. அந்த ஒரு காரணம் அவரவர்களின் கடவுளர்கள் அவர்களுக்கு விட்டுச்சென்றதாக சொல்லப்படும் சாசனங்கள். தாத்தாவின் சொத்து பேரனுக்கு எவ்வளவு பாத்தியதை உள்ளதோ, அதைவிட தீவிரமாக, கடவுளின் சொற்களும், கடவுளால் கொடுக்கப்பட்ட உரைகளும் இவர்களுக்கு.

இன்னமும் கிறிஸ்துவத்தில் புவியியல், இஸ்லாத்தில் வேதியல், பகவத் கீதையில் உயிரியல் என்று விரிவுபடுத்திக் கொண்டு ஒவ்வொரு சொல்லுக்கும் அவரவர்க்கு தோதான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு, கடவுளின் கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டுப் போன power of attorney தனக்கு தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். உண்மையான கிறிஸ்துவர்கள், அடிப்பதற்காக மறு கன்னம் காட்டாமல், அடிப்பதற்கு முன்பே வட கொரியாவினை அழிக்க முனைந்துக் கொண்டிருக்கிறார்கள். வட்டிக்கு காசு வாங்காத இஸ்லாமியர்கள், எரிபொருளின் விலையினை ஏற்றி விட்டு மே-பாக்கில் வலம் வருகிறார்கள். கடமையை செய்வதற்கு முன்பே லஞ்சம் வாங்கும் அலுவலர்களின் அறையில் கட்டாயமாக பகவத் கீதை கேலண்டர் காற்றிலாடுகிறது. அவரவர் கடவுளர்களின் வார்த்தைகளை உண்மையாக்க சக மனிதர்களையும், தன் கடவுளை மதிக்காதவர்களையும் கொன்றழிப்பதையும், சீர் குலைப்பதையும் தான் கடவுளிட்ட ஆணையாக கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள். பாவம் கடவுள்கள். உலகினை படைக்கும் போதே, ஆப்ரிக்காவினை படைக்காமல் இருந்திருக்கலாம். லண்டன் பஸ் போனதும் இஸ்லாமிய-கிறிஸ்துவ அறிவுஜீவிகள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். நைஜரில் எஞ்சியிருக்கும் எலும்பும் தோலுமான கடவுளின் மாற்றாந்தாய் பெற்ற பிள்ளைகள் இரண்டு ஸ்லைஸ் ரொட்டித்துண்டுக்காக கியுவில் நிற்கிறார்கள். அதுவா முக்கியம், பைபிளின் வாக்கினையும், குரானின் வாக்கினையும் உண்மையாக்காத கிறிஸ்துவனோ, இஸ்லாமியனோ அவரவர் மதங்களின் அடிப்படை தெரியாதவர்கள். ஆடிமாதம் அம்மனுக்கு கூழ் ஊற்ற நன்கொடை வசூலிப்பதால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த விநாயகர் தாங்க மாட்டாமல் திருவல்லிக்கேணி மேன்ஷனில் குடியேறிவிட்டதாக கேள்வி. பாகிஸ்தானில் பிச்சையெடுக்கும் இந்து கடவுள்களுக்காக புண்ருத்ராணம் பண்ணலாம் என்று பேசியவுடன், ஆப்கன் அடிப்படைவாதிகள் பொங்கி எழுந்துவிட்டார்கள். பாவம், அயோத்தியில் அல்லாவினை தரைமட்டமாகியதன் பலனை சிவனும், பார்வதியும் பாகிஸ்தானில் அனுபவிக்கிறார்கள்.

மனிதர்களைப் பற்றி கவலைப் படும் உண்மையான கடவுள், பாவம், கையெழுத்திட்ட பாவத்திற்காக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். கெரன் ஆர்ம்ஸ்ட்ராங் கார்டியனில் எழுதிய நேற்றைய பத்தி கடவுளுக்காக மனிதர்கள் போடும் சண்டையை மையமாகக் கொண்டிருக்கிறது. [இன்றைய ஹிந்துவில் மறுபதிப்பு]. கெரன் ஆர்ம்ஸ்ட்ராங்கின் புத்தகம் Battle of God இதனை விரிவாக அலசுகிறது.

இன்னும் கொஞ்ச நாளில் ஹிந்துவின் ஆப்சுவரி காலத்திலேயோ, என்.பி.சியின் காணாமல் போனவர்களின் பட்டியலிலோ் "கடவுளும்" வருவார். அதை பார்த்து விட்டு நாம் நம் வேலையை மறுபடியும் துவங்கி அடித்துக் கொள்வோம்.

Comments:
பாவம் கடவுள்!
 
அதே அதே, பாவம் கடவுள்
 
நாம் என்னதான் அடித்துக் கொண்டாலும் 'அவர்கள்' என்னவோ மாறப்போவதில்லை; நாமும் நம் மனசாட்சிக்குப் பந்தகம் இல்லாமல் நம் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இது ஒரு நீ....ண்....ட தொடர்கதை; முடிவில்லா தொடர்கதை. துளசி சொன்னதுபோல 'பாவம் கடவுள்' என்று சொல்லிச்செல்வதா, இல்லை கடவுளையேக் காப்பாற்ற முனையும் இந்த "..." பாவம் என்பதா?
 
எல்லா மதங்களின் பின்னாலும் ஒரு கும்பலின்/அதிகார வர்க்கத்தின் நலன் தங்கியுள்ளது. தீக்குளிக்கவும் தயாராயிருக்கும் ரசிகர்களின் முட்டாள்தனத்தில் நடிகர்கள் புகழடைந்து பணத்தைச் சுருட்டுவது போல, மதத்தின் பெயரால் சக மனிதரை கொல்லவும் தயாராக இருக்கிற பக்தர்களின் வெறியில் ஆளும் கும்பல்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றன.

குஜராத்தில் முஸ்லீம்களைக் கொன்று சைவத்தைக் காத்தார்கள். இலண்டனில் பொது மக்களைக் கொன்று இஸ்லாம் காத்தார்கள். கிறிஸ்தவத்தைக் காக்க உலகெங்கும் பைபிளைத் தூக்கிக் கொண்டு அமெரிக்கா/நேட்டோ/ஐ.நா படைகள் ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஒன்றிற்கெதிராக மற்றொன்றைத் தூண்டி விடுபவர்கள் தங்கள் நலனைக் காத்துக்கொள்ள ஒன்றாகவே நிற்கிறார்கள்.

முஸ்லீம்களின் புனித மெக்கா அமைந்துள்ள சவூதி அரேபியாதான் முஸ்லீம்களுக்கு எதிராக பைபிளுடன் வந்திருக்கும் அமெரிக்க வேட்டை இராணுவத்திற்கு தங்க இடம் கொடுத்துள்ளது. இது இஸ்லாமுக்கெதிரான சிலுவைப் போர் என்று முழங்கிய George W Bush தான் சனாதிபதியாவதற்கு முன் பின்லாடன் தனக்காக போட்டுக் கொடுத்த கொம்பனியில் காசு வாங்கிக்கொண்டு ஒழுங்காகத் தேவாலயம் போய்க் கொண்டிருந்தார். அகண்ட இந்துப் பாரதம் என்று முழங்கிய பி.ஜே.பி.தான் கிறிஸ்தவ அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் அகலக் கால் வைக்கவும் பட்டுக் கம்பளம் விரித்தது.

மதங்களை தங்கள் கவசமாக வைத்துள்ள அனைத்து மதப்பிரிவு ஆளும் கும்பல்களும் தங்களுக்குள் ஒன்றொடொன்று கூடிக் குலாவிக் கொண்டிருக்கின்றன.

பாவம் தொண்டர்கள், அடுத்தவரை அழிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.

பொறுக்கி
http://porukki.blogsome.com/
 
//மசூதிகள் எல்லாவற்றையும் இடித்து கோயில் கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களின் பின்னும் ஒரே காரணம் தான் இருக்கிறது. அந்த ஒரு காரணம் அவரவர்களின் கடவுளர்கள் அவர்களுக்கு விட்டுச்சென்றதாக சொல்லப்படும் சாசனங்கள். //

Could you please tell, based on which 'sasanam' of hindu the Mosque is destroyed?

That Gaurdian aritical talks about the people who is literally following what is said in their holy books.but ur article doesen't reflect the same.

On writing such a critical matter please have some responsibility and please be careful on what you write.
 
இந்த சண்டையெல்லாம் பார்த்து கவலை கொண்டு கடவுள் புதிதாக கண்டுபிடித்த கோளத்திற்கு சென்றுவிட்டாராம். சுட்டிக்கு நன்றி நாராயணன்
 
மதங்கள் சொல்லுவதைத் தன் தேவைக்குத் தகுந்தவாறு உபயோகிப்பவன் தானே மனிதன்.
 
//Could you please tell, based on which 'sasanam' of hindu the Mosque is destroyed?//

The reason i quote that is, the hindu fundamentalists strongly believe that the "disputed place" is the birth place of Lord Rama. Their "sasanam" is numerous to substantiate their point incl. the Ramayana.

Religious fundamentalism is unifying factor for all religious fundamentalists irrespective of their views. I dare to say that like all other fundamentalists, hindu fundamentalists also look in Vedas, Ramanyana, Mahabharatha and other ritual texts to get down to atrocities.

I hope you have seen the rumour that Taj Mahal was a Siva Temple earlier. The game is on and will not stop so easily.
 
//The reason i quote that is, the hindu fundamentalists strongly believe that the "disputed place" is the birth place of Lord Rama. Their "sasanam" is numerous to substantiate their point incl. the Ramayana.//

Could you pls let me know where in Ramayana it is mentioned ?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]