Aug 24, 2005

அக்கம்பக்கம் பாருடா சின்ன ராசா!

இரண்டு நாளைக்கு முன் அம்மா அமிர்த்தானந்தமாயினை கொலை செய்யும் நோக்குடன் அருளாசி வழங்குமிடத்திற்கு வந்த ஒருவரை பிடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளார்கள். அம்மா கொஞ்சம் பதட்டப்பட்டு, பின் சகஜமாகி, இப்போது அருளாசி வழங்க தயாராகிவிட்டார். தன்னை கொலை செய்ய வரும் ஒருவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியாத அம்மா, ஊரிலிருக்கும் அனைவரின் குறைகளையும் போக்கி, செளந்தர்யங்களை வாரி இறைக்கிறார். நம்மாட்கள், தன்னை தானே பாதுகாத்துக் கொள்ளாமல், பயந்து கலவரப்படும் அம்மாவிடம் தன் குறைகளைச் சொல்லி தன்னை பாதுகாக்குமாறு கெஞ்சுகிறார்கள். உங்களுக்கெல்லாம், ஒன்றல்ல, நூறு பெரியார் வந்தாலும், பேச்சினைக் கேட்டுவிட்டு, பெருமாள் கோவில் தொத்தியோனம் வாங்கி சாப்பிட்டு, கீரி-பாம்பு சண்டை பார்த்துவிட்டு, லேகியம் வாங்கி சாப்பிட்டுவிட்டு, இரவில் மூச்சிறைக்க ************ விட்டு, மறுநாள் காலை தன்னை பாதுகாக்க யாருமில்லையே என்று அம்மாவிடம் ஓடுவீர்கள். நீங்களும் உங்க பக்தியும்?

வலையுலகில் இருக்கும் "ஜனநாயகவாதிகளின்" கண்களில் புலி என்று ஒரு வார்த்தை பட்டுவிட்டால் போதும். உடனடியாக துள்ளிக் குதித்து, களத்திலிறங்கி, கொட்டை எடுத்ததா, எடுக்காததா என்றெல்லாம் பார்க்காமல், தங்களின் நடுநிலை வழுவாமல் பார்த்துக் கொண்டு, முதுகெலும்பு செங்கோல் வளையாமல் நீதி சொன்ன காரணத்தினால், பில்டர் காபி சாப்பிட்டு, ஹிண்டு படித்து, மாம்பலம் சுரங்கப்பாதையில் யாரும் யோக்கியமில்லை என்று அம்பி கதைகள் பேசிக் கொண்டு போவார்கள். போன வார தெஹல்காவில் ராஜீவ் உதிர்த்துவிட்டுப் போன அருமையான(?!) வார்த்தையினை, சீக்கிய சமூகத்தினர் அக்கு வேறு ஆணிவேறாக கிழித்துவிட்டார்கள். "ஒரு மரம் பெயரும் போது சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்." ஆனால், ஒரு மனிதன் ஒரு மரணத்தினை (சரி கொலையை, உங்களின் ஆசையினை ஏன் கெடுப்பானேன்) துன்பியல் சம்பவம் என்று சொன்னப்பின்னும் அக்கூட்டத்தின் மீது வசைபாடாமல் போனால் நிறைய பேருக்கு அன்றைய உணவு ஜீரணமாகாது. இந்த வார ஆ.விகடனில் ஞாநி நான் சொல்ல வரும் கோணத்தினை முன்வைத்திருக்கிறார். கதிர்காமரின் மரணத்தினால், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் என்ன லாபம் கிடைத்திருக்கிறது? ஆனால், போர் மேகங்கள் சூழ்வதினால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம். ஆக இந்த கொலை நிகழ்த்தப்பட்டதற்கான மாற்றுக் காரணங்களை யோசிக்காமல், வெறுமனே புலிகளின் மீது மட்டுமே சந்தேக கண் கொண்டு பார்க்காமல், கொஞ்சம் அகலமாகவும் பார்க்கலாம்.

அழகி தந்த தங்கர் பச்சானை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் கூட்டமொன்று இருக்கிறது. தங்கர் பச்சானிடத்தில் எனக்கு பெரிதான எதிர்பார்ப்புகள் இல்லை. நாஞ்சில் நாடன் கதையாய் போனதால் இரண்டாம் படம் பிழைத்தது. ஜெயகாந்த மேதாவிலாசத்தினை அடிப்படையாகக் கொண்டு வந்த தென்றல் அண்ணா தியேட்டரில் கோன் ஐஸ்கீரிம் காலியாகும்முன் தியேட்டரை விட்டே ஒடிபோனது. ஆனாலும், தங்கருக்கு நாக்கில் சனி. இரண்டு வாரத்திற்கு முன்பு 600 ரூபாய் கதை நாயகியின் சிகையலங்கார பெண்ணுக்கு தராமல் போய், அவர் வராமல் நின்று, உடனே இவர் யாருக்கும் பொறுப்பில்லை. 600 ரூபாய்க்காக லட்சம் பணம்பொட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளருக்கு தானே நஷ்டம் என்றெல்லாம் பத்திரிக்கைகளில் சீறிப் பாய்ந்து ரிப்போர்டர்களின் கன்னத்தில் கீறாமல் போனதுதான் மிச்சம். ஐயா, தங்கர், லட்சக் கணக்கில் பணம்போட்டு படமெடுக்கும் நீங்கள் ஏன் வெறும் 600 ரூபாய் அப்பெண்ணிற்கு பாக்கி வைக்கவேண்டும். உங்களுக்கும் எனக்கும் ஏன் இதை படிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் 600 ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், அந்த பெண்ணிற்கு அது பெரிய விதயம். கதைகளிலும், படங்களிலும் பாட்டாளி உயர வேண்டும் என்று சொல்லும் போதே அப்பாட்டாளியின் கூலி என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் 600 ருபாய்காக நீங்கள் போடும் சீனை என்ன சொல்வது. வில்லாதிவில்லன் என்றொரு சத்யராஜ் படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உழைக்கும் கரங்களேன்னு எல்லா ஹீரோவும், கைய உயர்த்தி, மாருல தட்டி, ஏழையின் வாழ்வு உயரவேண்டும். பாட்டாளிக்கு சம்பளம் கிடைக்கவேண்டும்ன்னு பாடுவானுங்க. இதுல காமெடி என்னன்ன இவனுங்க யாரும் ஏழை கிடையாது". தங்கர் நீங்களும் ஹீரோவாகிவிட்டீர்கள் அல்லவா?

Comments:
நல்ல பதிவு நாராயணன். மரம் பெயர்ந்த சலசலப்பில் கொல்லப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர். வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் அனேகர். முன்னின்று நடத்தியவர்கள் அரசியல் தூண்கள். வாழ்க மனுநீதி ஜனநாயகம்!
 
நல்ல பதிவு நாராயணன்
 
//வலையுலகில் இருக்கும் "ஜனநாயகவாதிகளின்" கண்களில் புலி என்று ஒரு வார்த்தை பட்டுவிட்டால் போதும். உடனடியாக துள்ளிக் குதித்து, களத்திலிறங்கி, கொட்டை எடுத்ததா, எடுக்காததா என்றெல்லாம் பார்க்காமல், தங்களின் நடுநிலை வழுவாமல் பார்த்துக் கொண்டு, முதுகெலும்பு செங்கோல் வளையாமல் நீதி சொன்ன காரணத்தினால், பில்டர் காபி சாப்பிட்டு, ஹிண்டு படித்து, மாம்பலம் சுரங்கப்பாதையில் யாரும் யோக்கியமில்லை என்று அம்பி கதைகள் பேசிக் கொண்டு போவார்கள். போன வார தெஹல்காவில் ராஜீவ் உதிர்த்துவிட்டுப் போன அருமையான(?!) வார்த்தையினை, சீக்கிய சமூகத்தினர் அக்கு வேறு ஆணிவேறாக கிழித்துவிட்டார்கள். "ஒரு மரம் பெயரும் போது சில சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும்." ஆனால், ஒரு மனிதன் ஒரு மரணத்தினை (சரி கொலையை, உங்களின் ஆசையினை ஏன் கெடுப்பானேன்) துன்பியல் சம்பவம் என்று சொன்னப்பின்னும் அக்கூட்டத்தின் மீது வசைபாடாமல் போனால் நிறைய பேருக்கு அன்றைய உணவு ஜீரணமாகாது. இந்த வார ஆ.விகடனில் ஞாநி நான் சொல்ல வரும் கோணத்தினை முன்வைத்திருக்கிறார். கதிர்காமரின் மரணத்தினால், இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் என்ன லாபம் கிடைத்திருக்கிறது? ஆனால், போர் மேகங்கள் சூழ்வதினால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம். ஆக இந்த கொலை நிகழ்த்தப்பட்டதற்கான மாற்றுக் காரணங்களை யோசிக்காமல், வெறுமனே புலிகளின் மீது மட்டுமே சந்தேக கண் கொண்டு பார்க்காமல், கொஞ்சம் அகலமாகவும் பார்க்கலாம்.
//

Well said Narain.

-Mathy
 
// ஐயா, தங்கர், லட்சக் கணக்கில் பணம்போட்டு படமெடுக்கும் நீங்கள் ஏன் வெறும் 600 ரூபாய் அப்பெண்ணிற்கு பாக்கி வைக்கவேண்டும். உங்களுக்கும் எனக்கும் ஏன் இதை படிக்கும் பெரும்பாலானவர்களுக்கும் 600 ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால், அந்த பெண்ணிற்கு அது பெரிய விதயம். கதைகளிலும், படங்களிலும் பாட்டாளி உயர வேண்டும் என்று சொல்லும் போதே அப்பாட்டாளியின் கூலி என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாமல் 600 ருபாய்காக நீங்கள் போடும் சீனை என்ன சொல்வது. வில்லாதிவில்லன் என்றொரு சத்யராஜ் படத்தில் கவுண்டமணி சொல்லுவார் "உழைக்கும் கரங்களேன்னு எல்லா ஹீரோவும், கைய உயர்த்தி, மாருல தட்டி, ஏழையின் வாழ்வு உயரவேண்டும். பாட்டாளிக்கு சம்பளம் கிடைக்கவேண்டும்ன்னு பாடுவானுங்க. இதுல காமெடி என்னன்ன இவனுங்க யாரும் ஏழை கிடையாது". தங்கர் நீங்களும் ஹீரோவாகிவிட்டீர்கள் அல்லவா?//

ithuvum!

-MAthy
 
நல்ல பதிவு.

//போர் மேகங்கள் சூழ்வதினால், ஆயுத வியாபாரிகளுக்கு கொண்டாட்டம். //

இது ஒரு வித்தியாசமான கோணம். இந்த கோணத்திலும் பார்க்க அகலப் பார்வை மிக அவசியம்.
 
ரொம்ப நாளாகாவே அமெரிக்க அரசிற்கு திரிகோணமலையின் மீது ஒரு கண். ஏற்கனவே "தீவிரவாததுக்கு எதிரான யுத்தம்" என்று சொல்லிக் கொண்டு மத்திய கிழக்கில் ராணுவத்தினை நிறுவியாயிற்று. அமைதிக்கான போர் என்று சொல்லிக் கொண்டு, ஆப்ரிக்காவில் ப்ரெட்டும், கோக்குமாக உள்ளே போயாயிற்று. ஆசியாவில் இன்னமும் முழுமையான ராணுவதளம் அமெரிக்காவிற்கு கிடையாது. அதனாலேயே, அவர்கள் தொடர்ச்சியாக ஆப்கானிஸ்தானில் போர், பாகிஸ்தானுக்கு ஆதரவு, வடகொரிய எதிர்ப்பு என்று காரணங்கள் சொல்லிக் கொண்டு ஆசியாவில் மூக்கினை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த கொலை மிக சரியான சாக்கு. இதன்மூலம், இலங்கை அரசுக்கு உதவி செய்வதாக சொல்லிக் கொண்டு முதலில் ஆயுதங்களை விற்கலாம். பின் knowledge transfer, technology transfer என்று ஜல்லியடித்துக் கொண்டு உள்ளே நுழையலாம். தனக்கு நெருக்கமானவர்களை தீர்த்துக் கட்டி, அரசியலில் குழப்பம் விளைவித்து அந்நாட்டு அரசியலில் உள்ளே நுழைவது அமெரிக்காவிற்கு புதிதல்ல. கொஞ்சம் அகலமாய் பார்த்தால் இது சாத்தியம். தொடர்ச்சியாக இன்னமும் அவர்கள் பிடல் காஸ்ட்ரோவினை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்க சர்வாதிகார அரசர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸூம், சீமை சரக்கும், அமெரிக்க டாலர்களையும் கொடுத்து இயற்கை வளங்களை கொள்ளையடித்த தேசமது. சிஐஏ நினைத்தால், அமெரிக்க ஜனாதிபதியினைக் கூட கொல்ல முடியும். இன்னமும் அமெரிக்க படைகள் கல்ப் யுத்தம் படிந்து கிட்டத்திட்ட 15 வருடங்கள் ஆனபின்னும், குவைத்திலிருந்து காலி செய்யாமல் தங்கி மத்திய கிழக்கு நாடுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆக அவர்களுக்கு கொஞ்சமாவது பயனிருக்கும் என்று நினைத்தால், அவர்கள் எதை செய்யவும் துணிவார்கள். அஹிம்சாமூர்த்தி அமெரிக்காவிற்கு இதனால் என்ன பயன்? நிறைய இருக்கிறது. முதலில் அவர்கள் இந்தியாவினை அருகிலிருந்து கண்காணிக்க முடியும். இதற்கு கண்டிப்பாக இந்திய அரசின் எதிர்ப்பு இருக்கும். ஆனால், நம்மூர் அரசியல்வாதிகளின் பெருங்கூச்சல் எடுபடாது. இலங்கை என்றொரு நாட்டிற்கு இன்றைக்கு பணம் தேவைப்படுகிறது. மாறி வரும் உலக சூழலில் போட்டிப் போட இலங்கைக்கு உலக உதவி (அமெரிக்க உதவி என்றும் படிக்கலாம்) தேவைப் படுகிறது. சென்ற முறை ரோசாவசந்த் சென்னை வந்திருந்தபோது சொன்ன தகவல், ஜப்பானில் கிறிஸ்துவமதம் வேகமாக பரவி வருகிறது. நவீன உலகில் இன்னமும் பழைமைவாத கிறிஸ்துவத்தினை மேலேடுத்து செல்ல முயன்றுவரும் அரசு, அமெரிக்க அரசினைத் தவிர வேறொன்றுமில்லை. இது தாண்டி, ஒரு வாதத்திற்கு புலிகள் இக்கொலைகளை செய்ததாக வைத்துக் கொள்வோம். இது வரை புலிகள் நிகழ்த்திய தாக்குதல்களை கணக்கிலெடுத்தால் அவையெல்லாமே, வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டுகள் மூலமாக நிகழ்த்தப்பட்டவை. ஆனால், JFK காலத்திலிருந்தே ஸ்நைபர் மூலம் ஆட்களை தீர்த்துக் கட்டுவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள். புலிகளாய் இருந்தால், அந்த ஏரியாவே காலியாகி இருக்கும். ஆனால், நைச்சியமாக, சர்வசாதாரணமாக இன்னொரு பக்கத்து கட்டிடத்திலிருந்து குறி பார்க்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். கதிர்காமர் இலங்கையின் மிக முக்கியமான விஐபி. அவர் ஒரிடத்தில் தங்குகிறார் என்றால், சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்திருக்கும். அவ்வாறிருக்கையில் ஒரு புலி ஆதரவு மனிதன் சுற்றுவட்டாரத்திலு உலாவுகிறார் என்று மோப்பம் பிடித்தாலே இலங்கை அரசு நிர்வாகித்தினர் பிடித்துவிடுவார்கள். எனக்கு வந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரியாது, ஆனால், கடந்த 6 மாதங்களில் ட்சுனாமி விதயம் என்று கூறி நிறைய வெளிநாட்டவர்களின் வ்ருகை இலங்கையில் அதிகமாயிருக்க்கிறது. ஏன் இது அமெரிக்க கூலிப்படையால் செய்யப்பட்டிருக்கக் கூடாது?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]