Sep 2, 2005
அஞ்சலி - ஹெக்கோடு சுப்பண்ணா (1932 - 2005)

ஹெக்கோடு சுப்பண்ணா பற்றி பெரியதாக ஒன்றும் எனக்குத் தெரியாது. இன்னமும் சொல்லப்போனால், அவரின் இறப்பிலிருந்து தான் எனக்கு அவரை தெரியும் என்று சொன்னால் அது ஒரு irony. ஹெக்கோடு சுப்பண்ணாவின் மறைவுப் பற்றி தீம்தரிகிடவிலும் பின்பு திண்ணையிலும் படித்தேன். எப்பேர்ப்பட்ட மனிதராய் வாழ்ந்திருக்கிறார் என்று படிக்கும் போதுதான் தெரியவருகிறது. இன்றைக்கு உலக சினிமாக்கள் பேசும், அல்லது பாவலா காட்டும் மனிதர்களுக்கு மத்தியில் 1972-ல் பேட்டில்ஷிப் பொட்டெம்கின் பற்றி 250 பக்கம் கன்னடத்தில் ஒரு மனிதன் புத்தகம் எழுதியிருக்கிறான். உலக சினிமாக்களையும், நாம் ஒரங்கட்டிய ரே, ரித்விக் கட்டக் படங்களையும் பார்த்து அலசியிருக்கிறான் என ஒரு பட்டியலே நீளுகிறது.
1949-இல் சுப்பண்ணாவிற்கு 17 வயதாக இருக்கும் போது தன் நண்பர்களோடு இணைந்து தொடங்கிய நீலகண்டேஸ்வர நாட்டிய சேவா சங்கம் (நிநாசம்) தற்போது நாடகப்பள்ளி, திரைப்படக்கழகம், நூல் வெளீயிட்டு நிறுவனம் என்று பல கிளைகளாக உருவெடுத்திருக்கிறது.கர்நாடாகாவில் பெங்களூருக்கு 350 கீமீ தொலைவில் ஷிமோகா மாவட்டத்திலிருக்கும் தன் சொந்த கிராமமான ஹெக்கோடில் தான் இந்த புரட்சி நடந்திருக்கிறது. நிநாசத்திலிருந்து தான், 1973-இல் பிலிம் சொசையிட்டியினை ஆரம்பித்திருக்கிறார், அதுவும் ஒரு அசல் குக்கிராமத்தில். தான் கொண்ட கொள்கைகளில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் என்பதும், விருதுகள் அவரின் தாகத்தையும், ஆர்வத்தையும் மங்கடிக்கவில்லை என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது. திண்ணையில் வெங்கட்சாமிநாதன் ஒரு அருமையான இரங்கல் கட்டுரை எழுதியிருக்கிறார்.
"ஆக, இது வெறும் பொழுது போக்காக, இலவச சினிமா காட்டும் விவகாரமாக ஆகிவிடாது, மக்களின் ரசனையில் மாற்றங்கள் நிகழ்வதை அறியும் சாத்தியங்களையும் கொண்டுள்ளது. யாத்ரா 84-ல் பிரசுரித்த சுப்பண்ணா சிறப்பிதழ் பேசிய 1977- வருட திரைப்பட விழாவில் பெர்க்மனின் Wild Strawberries, சார்லி சாப்ளினின் Gold Rush, ராபர்ட் ஃப்ளாஹர்ட்டியின், Nanook of the North, டி சிகாவின் பைஸைக்கிள் திருடன், ரேயின் பாதேர் பஞ்சலி, ஐஸ்ன்ஸ்டைனின் Battleship Potempkin, அகிரா குரஸாவாவின் ரோஷோமோன், Incident at Owl Creek, Wages of Fear, Wedding, Happy anniversary என்று ஹெக்கோடு கிராமத்து ஜனங்கள் பார்க்கக் கிடைத்த படங்களின் பட்டியல் நீள்கிறது." (திண்ணையிலிருந்து மறுபிரசுரிப்பு)எத்தனை விதமான படங்கள், அதுவும் 77-இல், மகசேசே விருது பெற்றிருந்தாலும், மீண்டும் மீண்டும் நல்ல படங்களையும் நல்ல கலைகளையும் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்த்தவராக இருந்திருக்கிறார் சுப்பண்ணா. இத்தகைய மனிதர்கள் நாம் வாழும் காலகட்டத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து வருகிறார்கள் என்கிற நினைப்பே பிற மொழி இலக்கியங்களின் மீதும், மனிதர்களின் மீதுமான பிணைப்பையும், நெகிழ்வையும் அதிகரிக்கிறது. என்னைப் போல உலகசினிமாக்களின் மீது காதலும், தேடலும் மிக்கவர்களுக்கு ஆசானாய் விளங்கியிருக்கிறார் என்று தெரியும் போது நெக்குருக்கிறது.
இத்தகைய மனிதர்களைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு தனி இயக்குநர் சொன்ன வார்த்தையையும், அதன் உள்,வெளி, புற குத்துகளையும் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால்..............
நன்றி: தீம்தரிகிட, திண்ணை.
பார்க்க: வெங்கட் சாமிநாதனின் இரங்கல் உரை
Comments:
<< Home
//இத்தகைய மனிதர்களைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு தனி இயக்குநர் சொன்ன வார்த்தையையும், அதன் உள்,வெளி, புற குத்துகளையும் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால்..............//
:-):-) :-)
:-):-) :-)
//இத்தகைய மனிதர்களைப் பற்றி பேசும்போது, நாம் ஒரு தனி இயக்குநர் சொன்ன வார்த்தையையும், அதன் உள்,வெளி, புற குத்துகளையும் ஆராய்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால்..............//
எதற்லு இந்த கடைச்செருகல்? சற்றும் பொருந்தவில்லையே...
Post a Comment
எதற்லு இந்த கடைச்செருகல்? சற்றும் பொருந்தவில்லையே...
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]