Oct 27, 2005

சென்னை மழை நிலவரம் - 2

சென்னை செனட்ரலிருந்து காலையிலிருந்து எந்த ரயிலும் வரவில்லை. தென்னக ரயில்வே பொது மேலாளரின் சன் டிவி நேர்காணலில் நாளை காலை 12மணி வரை எவ்விதமான ரயிலும் சென்ட்ரலிலிருந்து புறப்படாது என்று தெரிவித்தார். எழும்பூரிலிருந்து தேர்ந்தெடுத்த சில வண்டிகள் செல்லும் என்று தெரிகிறது. சென்னை விமானநிலையத்தின் ஒடுபாதை தண்ணீரில் இருப்பதால், சில உள்நாட்டு வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது தாமதமாக தரையிறக்கப்படுகின்றன. கோயம்பேட்டிலிருந்து எவ்வித வெளியூர் வண்டிகளும் எனக்கு கிடைத்த தகவல்களின் படி செல்லவில்லை. தமிழக அரசு மீட்புப் பணிக்கு ராணுவ உதவி கோரியிருக்கிறது.

மாநகர பேருந்துகள் பெரும்பாலான இடங்களில் இல்லை. நான் வரும்போது ஆங்காங்கே பஸ் ஸ்டாண்ட்களில் மக்கள் காத்திருப்பதைப் பார்த்தேன். பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோக்கள் ஒடவில்லை.

Comments:
நன்றி நாராயணன்,
வலைப்பதிவுகளின் சேவை எவ்வளவு முக்கியமானது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இங்கே இன்று அதிகாலையில் ஜெர்மனியில் இருந்து எனது நண்பர் ஒருவர் சொந்த ஊரான தஞ்சாவூருக்குச் சென்றிருக்கிறார். அவர் பயணத் திட்டப்படி இன்னும் ஐந்து மணிநேரத்தில் அவர் சென்னை விமான நிலையத்தை அடைய வேண்டும். அவரின் பெற்றோர்கள் விமான நிலையத்துக்கு வருவதாய் இருந்தார்கள். நிலமை எப்படி இருக்குமெனத் தெரியவில்லை.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]