Nov 14, 2005

பொம்பள!!

தமிழ் முரசின் தலைப்பு செய்தி [சுஹாசினி மீது கிரிமினல் வழக்கு] இது. நேற்று நானும் ரோசாவசந்தும், நண்பர் கார்த்திக் ராமசாமியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தப் போது அலசிய விஷயம். எல்லோர்க்கும் தெரிந்த விஷயம்தானிது, குஷ்புவினை ஆதரித்து சுஹாசினி இப்போது களத்தில் குதித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் விவாத மேடைகள் நடத்தும் ரேவதி, சுஹாசினி, லட்சுமி மீது பெரிதான அபிப்ராயங்கள் எனக்கில்லை. ஆனாலும், இன்றைக்கு சுஹாசினி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன.

இன்றைக்கு அ.தி.மு.கவில் இருக்கும் தீப்பொறி ஆறுமுகம் ஒரு காலத்தில் தெருவோர கூட்டங்களில் ஜெயலலிதாவினைப் பற்றி பேசியதை எழுத முடியாது. கேட்கவும் முடியாது. நாராசத்தின் உச்சம் என்ன என்பதை அங்கு தெரிந்துக் கொள்ளலாம். மைக்கினை மூடிக் கொண்டு, சட்ட சபையில் கருணாநிதி அன்றைக்கு ஜெயலலிதாவினை என்ன சொல்லி ஏசினார் (வாயை மூடுறீ ********* முண்ட) என்பது உலகறியும்.

சமீபத்தில் தீபாவளிக்கு வந்த விஜய் படத்தில், மிகக் கேவலமாக நாயகியின் ஆடையினை ப்ரா, ஜட்டி லெவலுக்கு பேசியிருப்பார். தமிழ்க் கலாச்சார காவலர்கள் விசிலடித்து கைதட்டி படத்தினை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியிருக்கிறார்கள். உச்ச நட்சத்திரம் ஒரு படத்தில் அதிகமாக கோவப்படும் பெண்ணும்..... என்று டயலாக் பேசியிருப்பார். சூப்ப்ர் ஆச்சே விட்டுவிடுமோ நாம். படத்தினை கைத்தட்டி பார்த்து ரசித்து இருக்கிறோம்.

இவையனைத்துக்கும் அடிப்படையான காரணம் இதில் எல்லாவற்றிலும் சமூகத்தின் கருத்தினைத் தாண்டி சொன்னவர்கள் பெண்கள். ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு தைரியமான பெண் சந்திக்க வேண்டிய சோதனைகள் நிறைய. கலைஞரையோ, திருமாவினையோ மிக கேவலமாக, அநாகரீகமாக பல பேர் பேசியிருக்கிறார்கள். ஆனால் பிரச்சனை ஒரு பெண் பேசும் போது தான் ரோஷம் பொத்துக்கொண்டு வருகிறது. உள்ளே சும்மா குவார்ட்டர் அடிந்து குந்தியிருக்கும், கலாச்சார காவலன், தலைக்கு குளித்து, கையில் அரிவாளோடு சாமியாட புறப்பட்டு விடுகிறார். ஆணாதிக்க, தந்தை வழி சமூக சிந்தனையினால் வரும் பிரச்சனையிது. இன்றைக்கு தமிழகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள், எத்தகைய பிற்போக்கு, புறம்போக்கு தனம் என்பதைப் பற்றிய சிந்தனை ஊடகங்களுக்குக் கொஞ்சமும் இல்லை. ஊடகங்களுக்கு தேவை செய்திகள். இச்செய்திகளின் வழியே ஊட்டப்படும் சிந்தனைகள் அபாயகரமானவை. சில பல வழக்குகளைப் போட்டு எல்லோரையும் வாய் மூடச் செய்துவிடும், வாயடைக்கச் செய்துவிடும் புல்லுறுவிகள் தமிழகத்தில் ஏராளம். ஒரு கருத்தினைச் சொல்லக் கூட ஒரு சுதந்திர நாட்டில் உரிமையில்லை என்பதை யோசித்தால், எத்தகைய அழுகிய ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உண்மை புலனாகும்.

"அவ பொம்பள! அவளுக்கென்ன அவ்வளவு வாயி" என்று என் அடுக்கக்கத்திலேயே பெண்கள் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். மாற்றமும், மாற்று சிந்தனைங்களும் தான் சுதந்திரத்தினை நிர்ணயிக்கின்றன. மாற்றமில்லாத சமுகமும், மொழியும், மக்களும் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்படுவார்கள். பெண்ணின் கருத்து சுதந்திரத்தினை காண சகிக்காதவர்கள் தான் இன்றைய கலாச்சாரக் காவலர்கள். "ஒரு பொம்பள போயி நம்மள விட ஜாஸ்தியா யோசிக்கிறாயா" என்று உறுமும் அடிப்பட்ட ஆண் புலிகள் தான் கொடும்பாவி எரிக்கிறார்கள். இதில் இன்னொரு கொடுமை, சில கட்சிகளில் மகளிரணி என்ன பேசியிருக்கிறார் என்று தெரியாமலேயே நடுரோட்டில் மறியல் செய்வதை தமிழகத்தினைத் தவிர வேறெங்கும் காண இயலாது. பெண்ணடிமையினை ஒட்டு மொத்தமாக முச்சந்தியில் போட்ட பெரியாரின் வாரிசுகள் தான் இன்றைக்கு பேண்டிஸ்களில் கற்பினை காபந்து பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்கு சொத்தில் பங்குக் கொடுத்த தலைவனின் பேரர்கள் தான் பெண்ணடிமையின் அங்கீகரிக்கப்படாத ஹோல்சேல் ஏஜெண்டாக இருப்பதை விட வேறென்ன சொல்ல முடியும். அந்த கொடுமையினையும், வன்முறையினையும் ஒரே பத்திரிக்கையில் பார்க்க முடியும் - முதல் பக்கம்| கடைசி பக்கம்.

கூவத்தின் கரையிலிருக்கும் குடிசை வாசிகளுக்கு நாற்றமென்றால் என்னவென்று தெரியாது. நாம் தான் அந்த பக்கம் போனால் மூக்கினைப் பொத்திக் கொள்வோம். ஒரு வேளை தமிழகமெங்கும், "கலாச்சார கூவம்" ஒட ஆரம்பித்துவிட்டதோ!

Comments:
வாங்க, வாங்க! ஜூவில குஷ்பூவின் பேட்டி படிச்சீங்களா? நடிகை என்ற கண்ணோட்டத்தை விட்டு விட்டுப் பார்த்தால், (குஷ்பூவின் எந்த படமும் எனக்கு பிடிக்காது) அவரின் போராட்ட குணம், அரசியலுக்கு ஏற்றது. சுஹாசினி தெரியாமையா இதுல குதிச்சியிருப்பாங்க? சன் டீவில தலைப்பு செய்தியே இதுதான். எங்க போய் நிக்கப் போகுதோ??
 
இது இன்றைக்கு கீற்றில் படித்தது (http://www.keetru.com/literature/essays/pamaran_3.html). பாமரனின் தீர்க்கதரசினம் இது:
"திருமதி.குஷ்பு இ.டு.வுக்குக் கொடுத்த பேட்டியில் அதாவது இ.டு.வின் குல வழக்கப்படி எடுத்த கருத்துக் கணிப்புகள் மீதான கருத்தைச் சொன்னதில் எந்தப் பிழையும் இல்லைதான். ஆனால் அதன் பிறகு அதன் மீதான ஒரு கேள்விக்குக் குமுறி எழுந்து ஒரு நாளிதழிடம் "இந்த ஊர்ல 'அது'க்கு முன்னாடி 'அது' நடக்காத ஆம்பள பொம்பள யார் இருக்கா? எடுத்துக் காட்டு உன் லிஸ்ட்டை..." என எகிறியதுதான் அவர் செய்த மகாதப்பு. (அப்படிச் சொல்லவேயில்லை என்றார் குஷ்பு)

எனக்குத் தெரிந்து 'உன்னைப் போல் பிறரையும் நேசி' என்றுதான் ஏதோ ஒன்றில் சொல்லப்பட்டிருப்பதாக ஞாபகம். ஆனால் 'உன்னைப் போல் பிறரையும் யோசி' என்று எங்கும் படித்ததாக நினைவில்லை."

இது நீங்கள் குறிப்பிட்ட "உள்ளே சும்மா குவார்ட்டர் அடிந்து குந்தியிருக்கும், கலாச்சார காவலன், தலைக்கு குளித்து, கையில் அரிவாளோடு சாமியாட புறப்பட்டு விடுகிறார்." இதன்
நல்ல உதாரணம். முன்பு குமுதத்தில் 'நடிகையின் கதை' வந்தபோது ரேவதிக்க எதிராக பாமரனின் வாதமும் இப்படி ஒன்றாகவே இருந்தது. 'விபச்சாரிகளை' எப்படி 'இவர்களுடன்' ஒப்பிட மனம் வந்தது தங்கர்பச்சானுக்கு போன்றதொரு கேள்வி வேறு.
 
அரசியல்வாதிகளெல்லாம் தம் நலமற்ற 'சமூகப் பொறுப்புடன்' இந்தப் பிரச்சினையில் 'குதித்திருக்கிறபோது' சுஹாசினி, குஷ்பு போன்றவர்கள் 'மார்க்கெட் போன நடிகைகள்'பொழுதுபோக + பப்ளிசிட்டிக்காக இதைச் செய்கிறார்கள் என்று எழுதுவது வேறு ................ என்னத்த சொல்றது!
 
முதல் பக்கம் கண்ணகிக்கு, கடைசி பக்கம் மாதவிக்கு.
தமிழ் கலாச்சாரத்தை சரியாக கடைபிடிக்கிறார்கள்.
 
பொடிச்சி, பாமரனை தனிப்பட்ட முறையில் பிடிக்குமென்றாலும், அவரின் பல்வேறு கருத்துக்களோடு ஒத்துப் போவேன் என்றாலும், இந்த விதயத்தில் பாமரன் மிக "பாமரனாக" தான் காட்சியளிக்கிறார். வழக்கமான எள்ளல் பாணியில் பேசியிருந்தாலும், பாமரனின் கருத்துக்களோடு ஒன்ற முடியவில்லை. ஆனந்த விகடனில், குஷ்புவின் பேட்டி வந்த பிறகு என் நண்பர் ஒருவர் சொன்னது போலதான் இருக்கிறது இது. "பார்த்தியா இவ பல்டி அடிச்சிட்டா. இவளே ஒரு ********. இவ பேச வந்துட்டா" ஏன் குஷ்புவினை ஒரு சமூக விஞ்ஞானியாக பார்க்க வேண்டும். அவருக்குத் தோன்றியதை அவர் சொன்னார் அவ்வளவுதான். இதில் "மார்க்கெட் போன நடிகைகள்" என்று பேசுவது ஒவர். அப்படிப் பார்த்தால், தங்கரின் ஊத்திக் கொண்ட படம் [சி.ஒரு.அப்பாசாமி] என்று சொல்வார்களா! இது சும்மா தமிழின ஜால்ரா வகையறா!

இதற்கு நடுவில் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் வேறு நடுநிலை முழக்கங்களோடு இணையத்தில். அட தேவுடா! ஒருவரின் தனிப்பட்ட கருத்தோடு இணையலாம்/முரண் படலாம். ஆனால் அவரை மையப்படுத்தி கட்டுறுதப்படும் வழக்குகள், கலாச்சார சர்வாதிகாரம், முன்மொழியப்படும் பெண்ணடிமைத் தனங்கள் போன்றவைதான் எரிச்சலூட்டுகின்றன.

கூழ், கஞ்சி குடிப்பதையும், விவசாயம் செய்வதையும் காட்டியதாலேயே தங்கருக்கு ஆதரவாக கடைவிரித்திருக்கும் பாமரன், அறிவுமதி போன்றவர்களின் பாகுபாட்டினை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது.

உஷா, இதெல்லாம் இன்னும் இரண்டு வாரத்துக்கு. அப்புறம் தமிழ் நாட்டுல வேற செய்தி கிடைக்காமயா போய்டும் ;) ஜெயலட்சும், செலீனா மாதிரி இப்ப ஊடகத்துக்கு தீனி - குஷ்பு, சுஹாசினி அவ்வளோதான்.
 
அப்படிப்போடு அருவாளைன்னானாம்!

அரசியல் கட்சிகளுக்கும் மக்களைத் திசை திருப்ப இப்படியெல்லாம் வேண்டித்தானே இருக்கு.

வர வர எதுக்குத்தான் வழக்குப் போடுறதுன்றதுக்கு விவஸ்தை இல்லாமப் போச்சு.
இதுலே குஷ்பு கட்டாயம் கோர்ட்டுலே ஆஜராகணுமுன்னு மாஜிஸ்ட்ரேட் பிடிவாதம் பிடிக்கறாராமே! அட தேவுடா....
 
//கொடுமையினையும், வன்முறையினையும் ஒரே பத்திரிக்கையில் பார்க்க முடியும் - முதல் பக்கம்| கடைசி பக்கம்.

//

ஹி..ஹி இதல்லாம் பத்ரிக்கைத் தொழிலில் சகஜமுங்க :-))))
 
எனது நிலையை அழகாக எடுத்துச் சொன்ன அம்பி நாராயணன் அவர்களுக்கு முதலில் ஒரு 'ஓ' போடுகிறேன்.

குஸ்பூவை திருமா, கருணாநிதி, ராமதாஸ் எதிர்க்கின்றனர். அதனால் நான் குஸ்பூவினை ஆதரிக்கிறேன். குஸ்பூவை ஆதரித்ததால் மட்டுமின்றி சுகாசினி எங்கள் ஜாதி பெண் கூட. எனவே சுகாசினி சொன்னதில் தப்பில்லை.

ப்ராமணர்களோடு பழகிப் பழகி நாராயணன் அவர்களும் குஸ்பூ சார்பாக எழுதுகிறார். அவருக்கு எனது நன்றி. கருணாநிதியை எதிர்த்து எழுதி இருப்பதால் அவரின் மீதான எனது மதிப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

விரைவில் சக பார்ப்பனர்களான ராமுருவன், கிச்சி, தெருமலை, அருண்சொறியநாதன், மாயமரத்தான், சொறிகிருஷ்ணன், வாரா, சுனாமி எல்லோரும் சேர்ந்து அம்பி நாராயணன் அவர்களுக்கு பாராட்டுவிழா நடத்த இருக்கிறோம்.

வாழ்க "பிரா" "மணம்"!
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]