Nov 17, 2005

இந்தியா everywhere

இன்றைய பிபிசி செய்தி ஒன்று. இந்திய சிறைச்சாலைகளில் இருக்கும் பெண்களுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்கள் தங்கள் தாயாரோடு சிறையில் இருக்கலாம். ஹைதராபாத் சிறைச்சாலையில் ஒரு குழந்தைகள் காப்பகமும், இலவச கல்வியும் இவ்வாறாக தாயோடு இருக்கும் குழந்தைகளுக்கு தரப்படுகிறது. இதே செய்தியில் சில தன்னார்வ நிறுவங்கள், சிறைக்குள் தன் முதல் ஐந்து வருடங்களைக் கழிக்கும் குழந்தைகளின் மன/உளநிலை மாறுபாடுகளைப் பற்றிய கவலைகளைத் தெரிவிக்கின்றனர். ஐந்து வயதுக்குட்பட்ட ஏழைக் குழந்தைகள் தங்கள் உறவினர்களோடு சிறைக்கு வெளியே இருந்தால் எல்லாவிதமான வன்முறைக்கும் உள்ளாகும் வாய்ப்புகள் உள்ளது, ஏனெனில் சிறையிலிருக்கும் பெரும்பாலான பெண்கள், மிகவும் ஏழ்மையான சூழலிருந்து வந்தவர்கள். எது எப்படியோ, பெண்களின் நிலை, குழந்தைகளின் வாழ்சூழ்நிலை, கல்வி, உளவியல் பார்வை என நிறைய விவாதங்களை இது உள்ளடக்கியிருக்கிறது.


பொதுவாக ஜீவானம்ச வழக்குகளின் சாராம்சம் சம்பாதிக்கும் கணவர்கள், வருமானமில்லாத அல்லது வருவாய் இல்லாத மனைவி /ex-மனைவிக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையினை மாதாமாதம் அளிக்கவேண்டும். சமீபத்தில் அலஹாபாத் நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பினை அளித்திருக்கிறது. இதன்படி, சம்பாத்தியம் இல்லாத / சம்பாதிக்க துப்பில்லாத / வருமானம் குறைவான கணவன்மார்கள், பொருள் ஈட்டுகின்ற மனைவியை மனமுறிவு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கும் இப்போது மனைவியின் வருமானதிலிருந்து ஜீவானாம்சம் வழங்க வேண்டும் என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இதன் சாதகபாதகங்களை அலசலாம். ஆனால், இன்னமும் நகரங்களில் ஏற்றுமதி ஆடையகத்துக்கு மனைவியை அனுப்பி பொருளீட்டச் சொல்லி, குடித்து சீரழியும் கணவர்கள் இருக்கும் இடத்தில் இது ஒரு முன்னுதாரணமா தீர்ப்பா?


நேற்று பெங்களூர் வாசம். இந்தியாவின் தொழில்நுட்ப நகரம் எந்நேரமும் ஆடிக் கொண்டேயிருக்கிறது, அவ்வளவு மோசமான சாலைகள். பன்னர்கட்டா சாலையில் நான் செல்ல வேண்டிய வாடிகையாளரின் அலுவலகமிருந்தது. கோரமங்களாவிலிருந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சீரழிந்து, சின்னாபின்னாமாகி, என் வாழ்நாளில் ஒரு இரண்டுவாரங்களை கார்பன் மோனாக்சைடினை சுவாசித்து குறைத்துக் கொண்டு, போய் சேர 50 நிமிடங்கள் ஆயிற்று. இத்தனைக்கும் அசென்சர், ஐஐஎம் பெங்களூர், ஆரக்கிள் என பெருநிறுவனங்கள் இருக்கும் சாலையது. மகா கேவலமாக இருக்கிறது. இன்னமும் ஆச்சர்யமாக இருப்பது, எப்படி அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் இதனை பொருட்படுத்தாமல் பெங்களூரில் புதிது புதிதாய் நிறுவனங்களை ஆரம்பிக்கிறார்கள், பயணிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள். ஒரு வேளை பாம்பு, சாமியார், பொம்மலாட்டம் ஆடும் "நிஜ இந்தியாவினை" தரிசிக்கிறார்களோ, குண்டும் குழியுமான சாலையில். அட தேவுடா, கொஞ்சம் சென்னை வந்து பாருங்கள் சாமி, பெருமைக்கு சொல்லவில்லை, பெங்களூரை விட 100 மடங்கு பரவாயில்லை. இந்தியாவின் தொழில்அனுக்கமான சூழ்நிலையில் முதல் நிலையில் இருந்தாலும், இன்னமும் ஏன் பெருநிறுவனங்கள் பெங்களூரை கட்டிக் கொண்டு மாரடிக்கின்றன?

Comments:
நாராயண், ஒருநாளைக்கே இப்படி பீல் ஆனா எப்படி? நாங்க தினமும் 3மணிநேரம் செலவழிக்கறோம்! 12கிமி போகவர! பஸ்சுலயே மனிக்கணினி மூலமா வேலை செய்ய ஆரம்பிச்சிருவாங்க!

Infosys, Wipro எல்லாம் இங்க புதுசா ஆபீஸ் திறக்கறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு! எல்லாம் ஹைதராபாத்துக்கும் புனாவுக்கும் போறாங்க. நம்ம ஊருல 10% கட்டிங் கேக்கறதுனால வர்றதில்லையோ என்னவோ!?
 
அட தேவுடா
deva gowda :)
 
நம்ம மாண்புமிகுவுக்கு டெமோ காமிச்சிருப்பாங்க... "ஆபிஸ்ல எல்லாப்பயலும் சின்ன சின்னதா டி.வி பாக்கறான், ஆனா ஒருத்தனும் நம்ம டிவிய பாக்க மாட்டேங்கறாம்மா"ன்னு தகவல் அறிக்கை கொடுத்திருப்பார்.
 
சீரியசான கேள்வி. இந்த அமெரிக்காவில எல்லாம் ஜீவனாம்சம்னு சொல்றது கிடையாது.
child supportனு பேரு. அது குழந்தைக்கு கொடுப்பது. மனைவிக்கு கொடுப்பது அல்ல.

இந்தியாவிலதான் ஜீவனாம்சம் குடுக்கறாங்க. அந்த காலத்துல (இப்பவும்) பெரும்பாலான
பெண்கள் வேலைக்கு போகாததால், படிக்காத்தால் பெண்களுக்கு ஜீவனாம்சம் குடுத்தாங்க. இந்த நீதிபதி
சமத்துவம்னு நினைச்சுக்கிட்டு கணவனுக்கு ஜீவனாம்சம் குடுக்க சொல்றாரு. நம் ஊர் ஆண்கள்
படிக்காமல் , வேலைக்கு போகாமல் வீட்டில் மனைவியையே நம்பி இருந்திருந்தார்களாமா?
 
Mumbai was also facing the same issue of collapsing infrastructure. Once people started going out of Seepz and Marol MIDC, some sense prevailed. I fully agree with you on the Banglore issues. Unless Chennai wakes up agressively and market itself, it would be difficult.
anpudan
K.Sudhakar
 
இந்த தீர்ப்பு ஒரு அறிவு கெட்டத்தனமானது என்று படுகிறது. தகவலுக்கு நன்றி.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]