Dec 29, 2005

புதுப்பேட்டை: நிழலுகம் - 101நண்பர் ரவிசங்கர் "படிச்ச நாயே கிட்ட வராத" என்ற புதுப்பேட்டை பாடலுக்கு தன் கண்டனத்தையும் கருத்துக்களையும் தெரிவித்தார். இதில் ஒன்றும் பெரியதாக தவறு இருப்பதாக தெரியவில்லை. படித்தவர்கள் என்பதால் கொம்பாக முளைத்திருக்கிறது. வேண்டாம் கொம்பு என்றால் இங்கே சுஹாசினி போல வேறு வழக்குகளை சந்திக்கும் அவநிலைக்கு உள்ளாவேன் ;) நாம் கூடதான் ரோட்டில் போகும்போது குறுக்கே வரும் நபர்களை "நாயே" என்று சொல்வதுண்டு. அதுப் போல தான் இதுவும். வன்முறையின் கிளர்ச்சியில் இருப்பவர்களுக்கு படித்தவர்கள் நாய்களாக தான் தெரிவார்கள். இளரத்தம். ஆயத பலம். வன்முறையின் மீதுள்ள காதல். அது அப்படிதான் வெளிப்படும்.

புதுப்பேட்டை சென்னையின் நிழலுக இடங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம். செல்வராகவன் - யுவன் - நா.முத்துக் குமார் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். இது நான் நினைப்பதுப் போல எடுத்திருந்தால், எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இது ஒரு cult படமாகும் வாய்ப்புகளதிகம். தமிழ் சினிமாவில் நிழலுகம் பற்றிய படங்களும், விவரணைகளும் குறைவு. செல்வராகவன் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையில் எனக்குத் தெரிந்த நிழலுகம் பற்றிய ஒரு சின்ன ப்ரைமர். படம் வந்து பார்க்கும் போது உபயோகமாக இருக்கும். இது தாண்டி, இந்த பதிவினை எழுத தூண்டியது கமல் அட்டகாசமாக பாடியிருக்கும் "நெருப்பு வாயினில் ஒரமாய் எரியும்" என்கிற பாடல், நிழலுகம் பற்றிய அற்புதமான ஆவணம்.

நான் வாழ்ந்த இடம் கொண்டித்தோப்பு, வடசென்னை. தாதாகள், ரவுடிகள், வன்முறையின் மீதுள்ள கிளர்ச்சியும், கவர்ச்சியும் கொண்ட மனிதர்கள் என City of God இல் வரும் ரியோடி ஜெனிரோ குப்பம் போல இல்லையென்றாலும், மக்கள் திராவிட அரசியல் பேசிக் கொண்டு, லுங்கியினை மடித்துக் கட்டிக் கொண்டு, நாற்றமும், பூக்காரிகளின் அழைப்பும் (இன்னா, பூ வாங்கினு போயேன் கண்ணூ ) கெட்ட வார்த்தைகளின் சகிதம் (நிறைய பேருக்கு '...த்தா' இல்லாமல் பேச வராது) வாழ பழகிய இடம். உண்மையான ரியோ டி ஜெனிரோ காண, பேசின் பிரிட்ஜ் தாண்டி இடப்புறம் திரும்பி வியாசர்பாடி பாலத்தில் இறங்கி கொஞ்சமாய் பாலத்திற்கு முன்பே வலப்புறம் திரும்பி போனீர்களேயானால் மகாகவி பாரதி நகரின் (என்ன அருமையான பெயர்!) ஹவுஸிங் போர்ட்டினையொட்டி குடிசைகளும், சாக்கடைகளும் நிரம்பி இருக்கும். எனக்கு தெரிந்த அச்சு அசல் ரியோ அதுதான். தெரு நடுவில் சர்வசாதாரணமாக உயரமான ஸ்டூல்களில் கேரம் போர்டு ஆடிக் கொண்டிருப்பார்கள். தூக்கி மடித்துக் கட்டிய லுங்கியுடன் அவர்களின் விரல்கள் விளையாடும். எனக்கு தெரிந்த நிழலாளிகள் ஒரே ஷாட்டில் மூன்று காய்கள் வரை போடுமளவிற்கு திறன் வாய்ந்தவர்கள். கேரம் போர்டு தரையென்றால், காற்றாடி மிக முக்கியமான பொழுது போக்கு. காற்றாடி அறுந்து விழுந்தால், எதிராளி அறுத்தால் அரிவாள் வெட்டு வரை போவது எல்லாம் சகஜம். காற்றாடிக்காக இரண்டு குப்பங்கள் அடித்துக் கொள்வதெல்லாம், கடலோர சென்னை குப்பங்களில் மிக சகஜம். அடியென்றால், ஆட்களை கொல்வது வரை போகும். கடவுள் பக்தி அதிகம். எல்லா இடங்களிலும், அம்மன் கோவில்களோ, மேரி மாதா சிறுகோயில்களோ பார்க்க முடியும். 'டாஸ்மாக்குகள்' வருவதற்கு முன்பு சென்னையில் ஒயின் ஷாப்புகள் தான். மூன்று மானிட்டர் உள்ளே போனவுடன், பியர் சாப்பிட வந்திருக்கும் எங்களுக்கு அறிவுரை சொல்லும் நடுத்தர வயது தாதாக்கள் (" இன்னாடா, இந்த வயசுல தண்ணியா, போய் படிங்கடா, நாதாரிகளா") , "ரா"வாக அடிக்கிறேன் பேர்வழி என்று குடித்து ஆண்மையை நிருபிக்கும் இளம் (budding) நிழலாளிகள் ஒரு புறம், "மச்சான், சீதாக்காவோட புருசன் ஒடிட்டானேமே, மசியுமா மாமே" என வாழ்வியல் கவலைகளோடு சாமான்களை டேபிளில் பரப்பி வைத்து குடிக்கும் நிழலாளிகள் என்று கலவையாக வாழ்க்கை மறுவாசிப்பு செய்யப்படுவதை கண்ணார பார்த்திருக்கிறேன்.

ஸ்டான்லி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் கல்லூரியில் படிக்கும் போது சேவை செய்து கொண்டிருந்தேன். இடக்கையினை வலக்கையில் தூக்கிக் கொண்டு ஒடிவந்த ஒருவன் "சிலிப்பாயிருச்சி. தவறி வூந்துட்டேன் சீட்டு கொடுரா" என்று கேட்டது இன்றும் நினைவிருக்கிறது. அது காற்றாடியால் வந்த சண்டையில் வாங்கிய வெட்டு. ஒரு கையினன வெட்டி விட்டார்கள். காத்தாடி, மாஞ்சா, பாட்லோடு, பிரியாணி, பீடி, கால்வாய், கேரம் போர்டு, டீ, கஞ்சா, டப்பா சோறு, தண்டல், சாராயம், வாந்தி, பீ நாற்றம், 'அத்து விடுதல்', தகராறு, கானா பாடல்கள், டாடா சுமோ என்று அவர்களின் உலகம் தனியுலகம். அவர்களின் அகராதியில் இருக்கும் சொற்கள் பொது வழக்கில் நீங்கள் கேள்விப்படாத சொற்களாக இருக்கும். ஐஸ் பிரியாணி என்றால் என்ன தெரியுமா? பழைய சோற்றில் கஞ்சி ஊற்றி வெங்காயமோ, ஊறுகாயோ வைத்து கொடுத்தால் அதுதான் ஐஸ் பிரியாணி. இதில் லேட்டஸ்டாக, செல்போன், ஏதேனும் ஒரு ஜாதி கட்சியின் / நட்சத்திர கும்பலின் செயலாளர் பதவி (தலித் / யாதவ / அம்பேத்கார் இளைஞர் பேரணி / பரமசிவன் அஜீத் ரசிகர் மன்றம் / சீயான் விக்ரம் ], கொஞ்சம் ரத்ததானம், முப்பத்து ஏழாவது பிறந்தநாளுகான சுவரொட்டி [கொள்கை வேந்தர், ஏழைகளின் ஏர்முனை, தொழிலாளிகளின் தோழன் ] போன்றவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் போல் நண்பர்களுக்கு உதவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்று சொன்னால் அது கிளிஷேவாகிவிடும். ஆனால் உண்மை. ஒரு குழந்தைக்கு ரத்தம் தேவை என்று சொன்னபோது ஒரு பெரும்தலைவரின் பிறந்தநாள் அதுவுமாய் குடிக்காமல் இருந்து, மறுநாள் வரை காத்திருந்து 7 பேர்கள் ரத்தம் கொடுத்து, பின் குடிக்க போனது தனிக்கதை. பார்க்க முரடாய் இருக்கும் நபர்கள், அருகில் நெருங்கி பார்த்தால் உள்ளே அமைதியை விரும்பும் நபர்கள். இன்றும் எம்.ஜி.ஆரினை நினைவு வைத்துக் கொண்டு, பிறந்த நாள், இறந்த நாள், ரிக்சா வழங்கிய நாள் என்று ஒவ்வொன்றையும் கொண்டாடுபவர்கள் அவர்கள் தான். இன்னமும் நிறைய இடங்களில் 'டெல்லி செட்' டேப் ரிகார்ட்டர்களில், டி.எம்.எஸினையும், சிதம்பரம் ஜெயராமனையும் அங்கே தான் கேட்க முடியும். எப்.எம்களில் அல்ல. வெற்றிலை பாக்கு கூட போடாமல் இருக்கும் நிழல் நபர்களை எனக்கு தெரியும். அவர்களை பேருந்திலோ, வேறு நிகழ்விலோ பார்த்தால் அவர்கள் நிழல் நபர்கள் என்று சொல்ல தோன்றாது.

உண்மையில் ஒரு ரவுடியாக இருப்பதற்கு நிறைய 'தில்'லும், நெஞ்சழுத்தமும் வேண்டும். நான் பார்த்த முக்கால் வாசி நிழலாளிகள் லேசாக தாங்கி தாங்கி அல்லது ஒரு பக்கம் சாய்ந்து தான் நடப்பார்கள். போலிஸ் ஸ்டேஷனில் 'லாடம்' கட்டியதின் விளைவது. லாடம் கட்டுதல் என்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும்,நிழலாளிகள் அசாதாரணமான தாங்கு சக்தி உடையவர்கள். லாக்கப்பில் மூன்று காவலர்கள் மரண அடி அடிக்க, நான் திருடவில்லை, அடிக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக சொல்லிவிட்டு, வெளியே வந்து டிஞ்சர் போட்டுக் கொண்டு, சரக்கு அடித்துவிட்டு, பிரியாணி சாப்பிட்டுக் கொண்டே "த்தா, நான் தான் போட்டேன் மச்சான். ஒவரா துள்ளினான், சொருவிட்டென்" என சர்வசாதாரணமாக சொல்லும் மனிதர்களை கண்ணருகில் பார்த்திருக்கிறேன்.ஆயுதங்களுக்கு நிழல் மொழியில் "சாமான்", "பொருள்", "மேட்டர்" என்று பல பெயர்கள். 'சாமானோட கிளம்பு மாமே' என்றால், ஆயுதம் எடுத்து ஒரு சண்டைக்கு தயாராகு என்று பொருள். தென்தமிழகத்தில் தான் அரிவாளை சட்டைக்கு பின்புறம் வைப்பார்கள். அப்புறம் பொறுமையாய் பின்னாடியில் இருந்து தமிழ் சினிமா ஹீரோக்கள் நெஞ்சுக்கு நேரே பிடிப்பார்கள். இங்கே, வடசென்னையில், லுங்கியின் வலப்பக்கத்தில் வைப்பார்கள். லுங்கியின் இடுப்புக்கு மேலே கைப்பிடியும், கூரான பகுதி தொடைக்கு வெளியே இட/வலப்புறத்திலோ இருக்கும். சண்டை என்று வந்துவிட்டால், லுங்கியினை இறக்கி கட்டினால், கையில் அரிவாளோ, கத்தியோ வந்துவிடும். ஒரே போடு, ஆள் காலி. இரு குழுக்களுக்கு இடையே சில சமயங்களில் சமரச பேச்சுக்கள் நடக்கும். 'காம்பரமெய்ஸ்' அல்லது 'பேசி முடிச்சிக்கலாம்' என்று பொருள். இந்த காம்பரமெய்ஸ் பேசும் போதெல்லாம், முதலில் இரு அணியினரும் அணைத்துக் கொள்வார்கள். இது பரஸ்பர மரியாதை இல்லை. லுங்கியின் இடையில் ஆயுதம் இருக்கிறதா என்று கேட்காமல் அறிந்துக் கொள்வது. [என்ன பண்பாடுய்யா இது! ஒரு பயலும் நிழலுலக பண்பாட்டில் முனைவர் பட்டம் செய்ய மாட்டேன்கிறார்கள்!]தமிழ் சினிமாவில் வருவது போல அடியாட்கள் தெளிவாக பின்னாலெல்லாம் வந்து நிற்க மாட்டார்கள். ஒரு நிழல் நபர் ஒரு தெருவில் இருந்தால், தெரு முனையிலுள்ள டீக்கடையில் அவனுடைய ஆட்கள் மூன்று பேர்கள் இருப்பார்கள். தெருவிலிருக்கும் சைக்கிள் கடையில் ஒருவன் பஞ்சர் பார்த்துக் கொண்டிருப்பான். யாராவது இரண்டு பேர்கள் தெருவில் உலாவிக் கொண்டிருப்பார்கள். முட்டு சந்தாயிருந்தால், குட்டி சுவற்றில் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பார்கள். நிழலாளியிடம் ஆயுதம் இருக்காது, மற்றவர்களிடத்தில் இருக்கும். ஒரு தெருவில் நுழையும் போதே, பரிச்சயம் உள்ளவர்களால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு தனி நபரையோ, கூட்டத்தையோ 'போட்டுத் தள்ளு'வதற்கு பெயர் 'ஸ்கெட்சு'. ஸ்கெட்சு போட்டாச்சு என்றால், வளைத்தாகிவிட்டது என்று பொருள். நிழல் உலகம் என்பது சும்மா கத்தி தூக்கவதற்கு மட்டுமல்ல. கூர்மையான அறிவு வேண்டும். ஒரு கூட்டத்திலோ, கடைத்தெருவிலோ எதிராளியை அடையாளம் காணும் திறன் வேண்டும். ஒரு assignment செய்ய வேண்டுமென்றால் தூங்காமல் அந்த நபரை பின்தொடர வேண்டும். நபரின் எல்லா உறவுகளையும், பழக்கவழக்கங்களையும் நுண்ணியமாக கண்காணிக்க வேண்டும். கத்தியோ, அரிவாளோ தூக்குபவரெல்லாம் நிழலாளியாக முடியாது. ஸ்கெட்சு போட்டாகிவிட்டால், அதனை நடைமுறைப்படுத்த பல்வேறு மக்களை இணைக்கவேண்டியிருக்கும். நம்மவரில் கமல் ஒரு ப்ளேடு வாங்கி, விரலிடுக்கில் வைத்திருப்பார். இங்கே அதேயே இன்னும் கொஞ்சம் உள்ளேப் போய், ப்ளேடினை துகளாக்கி, பான் பராக், பீடா சகிதம் வாயில் அடக்கிக் கொண்டிருப்பார்கள். சில இடங்களில் இதற்கு 'மாஷ்' என்று பெயர். மாஷா இருக்கேன் என்றால் பேசாதே என்று பொருள். அதாவது, உமிழ்நீரை தேக்கி, எதுவும் முடியாத பட்சத்தில், வாயிலிருக்கும் துகள்களையும் பான்பராக்கையும் ஒருசேர எதிராளியின் மீது துப்பினீர்களேயானால், முகமெங்கும் கிழித்து விடும். படு அபாயகரமான விஷயம், வாயில் துகள்கள் இருப்பது. ஆனாலும், அதையும் செய்யும் நிழலாளிகள் இருக்கிறார்கள். ஒரு ஸ்கெட்சு முடிந்தால் அந்த கூட்டத்தினையே ஆறு மாதம் பார்க்க முடியாது. எங்கேனும் போய்விடுவார்கள். ஆனாலும், அந்த வலைப்பின்னலும் தொடர்புகளும் தொடர்ச்சியாக இருக்கும். படிக்க சுவாரஸ்யமாகவும், திரிலிங்காகவும் இருக்கும் அவர்களின் வாழ்க்கை நடைமுறையில் படு மோசமாக இருக்கும்.

வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ முடியாது. ஒரே தெருவில் உங்களால் பாதிக்கப்பட்டவனும் நீங்களும் இருப்பீர்கள். அவன் உங்களை பழிவாங்க காத்துக் கொண்டிருப்பான். தூக்கம் வராது. தூங்க முடியாது. மிதமிஞ்சி குடித்தால் தான் நிதானமாக இருக்க முடியும். 'பாங்' இல்லாமலோ, 'கிராஸ்' இல்லாமலோ வாழ பழகுதல் கடினம். சாதாரணமாக இருந்தால், நினைவுகளும், கற்பனைகளுமே உங்களை பைத்தியம் பிடிக்க வைத்து விடும். எங்கேயும், பாத்ரூம் போனால் கூட தனியே போகமுடியாது. காதலிக்க முடியாது. எதிராளி பார்த்தால், உங்கள் காதலி நாசமடைவாள் அல்லது அவளை மிரட்டி, உங்களை அழைக்க வைத்துப் போட்டு தள்ளி விடுவார்கள். பொண்டாட்டியோடு படுக்கும் போது கூட கதவுக்கு வெளியே இரண்டு பேர்கள் உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டோ, டிவி பார்த்துக் கொண்டோ இருப்பார்கள் என்று சொன்னால், அது தான் உண்மை. போலீஸுக்கு மேலிடத்திலிருந்து 'அழுத்தம்' வந்தால் எந்நேரமும் உங்களை என்கவுண்டரில் போட்டு தள்ளி விடுவார்கள். அரசியல்வாதிகள் உங்களோடு பிரியமாய் இருப்பதுப் போல நடிப்பார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நேராக பார்க்க மாட்டார்கள். நள்ளிரவு சந்திப்புகள் மட்டுமே நடக்கும். கூட இருக்கும் ஆட்களை கட்சி மாறி, குரூப் மாறி காட்டிக் கொடுப்பார்கள். போட்டு தள்ளுவார்கள். ராயபுரத்தில் ஒரு பெரும் மதிமுக பிரமுகர் *(முன்னாளைய நிழலாளி) காலையில் வாக்கிங் போகும் போது நடுரோட்டில் கழுத்து திருகப்பட்டு கொல்லப்பட்டார். உயிர் எப்போது எடுக்கப்படும், போகும் என்று தெரியாது. யாரையும் நிரம்ப நெருக்கமாகவோ, நிரம்ப தொலைவிலோ வைக்கக்கூடாது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செல்போனோ, தொடர்புகளேயோ மாற்ற வேண்டியதிருக்கும். மக்களோடு மக்களாய் உலவ முடியாது. அடிதடியோடு இருக்கும்வரை தான் மரியாதை. மீண்டும் மீண்டும் அங்கிருந்து வெளியே வராமல் தவிக்கும் நிறைய நபர்களுக்கான காரணங்கள் தான் இவை. அபூர்வமாக வெகு சில நபர்கள் அங்கிருந்து வெளியே வந்து பெரிய வணிக நிறுவனங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். [சென்னையில் ஒடும் கால் டாக்சிகள், துறைமுகத்தில் பொருட்களை ஏற்றி, இறக்கும் ஒப்பந்தம், எண்ணூர் நாராயணணுக்கு சொந்தம். போரூர் ராமசந்திரா மருத்துவமனை, ஹாட் சிப்ஸ் உணவகங்கள், நிறைய கல்யாண மண்டபங்கள் உடையாருக்கு சொந்தம் [உடையார் சென்னையில் 1980களின் பிற்பகுதியில் மிகப் பெரிய தாதா]. ஜி.என்.செட்டி சாலையில் இருக்கும் டிரேடர்ஸ் ஜந்து நட்சத்திர ஹோட்டல் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தம் (எம்.ஜி.ஆர் காலத்தில் மிகப் பெரிய கட்டப்பஞ்சாயத்து நபர்)]ஆனால் இவை அபூர்வம். பெரும்பாலும், வாழ்க்கை எங்கே தொடங்கினீர்களோ அங்கேயோ முடிந்து போகும். வடசென்னையில் இருக்கும் போது பார்த்த ஒரு மரணம் மறக்க முடியாதது. வெறும் 20 பேர்கள் மட்டுமே, என் தந்தை உள்பட போன அந்த சவ ஊர்வலம், 1950-60களில் வடசென்னையினை தன் கையில் வைத்திருந்த ஒரு முன்னோடி தாதாவின் சவ ஊர்வலம். தன் பின்னாட்களில் ஒன்றுமில்லாமல், மோசமான நிலையில், மனநிலை பாதிப்படைந்து இறந்து போனார். வாழ்க்கை அவ்வளவுதான். கூட்டமாய் இருக்கும் போது உரத்து பேசினாலும், தனியே இருக்கும்போது ஒண்ணுக்குப் போக கூட பயந்து சாக வேண்டியதிருக்கும். நிழலாளியாய் துடிப்பாய் இருக்கும் போது இருக்கும் கவர்ச்சியும், கிளர்ச்சியும், கத்தி பிடிக்கும் போது இருக்கும் தைரியமும் வாழ்நாள் முழுக்க வாராது. நாற்பது வயதிற்கு மேல் நீங்கள் ஒரு குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் ஐம்பதாவது வயதினை பார்க்க மாட்டீர்கள். யாராவது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களை கொன்று விடுவார்கள். அடையாளம் தெரியாத பிணம் கூவத்தில் கரை ஒதுங்கியது என்று தினசரியில் ஒரு பெட்டிச்செய்தியில் வாழ்க்கை முடிந்துவிடும். ஒரு முறை கத்தி தொட்டிர்களேயானால் முடிந்தது கதை. வேறு எதாவது மாநிலமோ, நாடோ போனாலேயொழிய தப்பிக்க முடியாது. அதுவும் உத்தரவாதமில்லை (உ.தா. சோட்டா ஷகில், அபு சலீம் )

ஹிந்தியில் சத்யா, கம்பெனி, சமீபத்தில் வந்த சர்கார், அபஹாரன் போன்ற நிழலுகத்தினை மையமாக கொண்ட படங்கள் அதிகம். தமிழில் மிகக் குறைவு. தொட்டி ஜெயா போல அடியாட்கள் படங்கள் வந்ததுண்டு. முழுமையான நிழல் உலகப்படங்கள் மிகக்குறைவு. 'ஆறு' படம் அந்த மாதிரி பின்புலம் தான் என்றாலும், த்ரிஷா போன்ற பெண்கள் ஒரு ரவுடியினை காதலிப்பது என்பது 'புதியபாதை' காலத்திய சரக்கு. புதுப்பேட்டை பட ஸ்டில்களைப் பார்த்தால், கொஞ்சம் விஷய ஞானத்துடனும், யதார்த்துடனும் வெளிபடும் என்று தெரிகிறது. ஆ.வி. பேட்டியில் செல்வராகவன் இதை சொல்லியிருக்கிறார். தென்சென்னை, அமெரிக்க, ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்களுக்கான பிரைமர் இது. இதன்மூலம் படம் பார்க்கும்போது தேவையில்லாமல் சில விஷயங்கள் நடக்காது, சாத்தியமில்லை என்று ஒதுக்கி தள்ளாதீர்கள். இதில் நான் சொன்ன விஷயங்கள் வரவில்லையென்றாலும், ஒரு வரலாற்று ஆவணமாக இதை படித்து உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது எதிர்கால சந்ததிகளுக்கு வடசென்னை நிழலுலகம் எப்படி இருந்தது என்பதை விளக்கவாவது பாதுகாப்பாய் ஒரு குறுந்தகட்டில் எழுதி, புதைத்து விடுங்கள். நமக்கு பின் வரும் சந்ததிகள் படித்து தேர்ச்சி அடையட்டும் : )))))))))

முக்கிய பின்குறிப்பு: இதை எழுதுவதால் செல்வராகவன் எதுவும் எனக்கு பணம் தரவில்லை என்பதை சத்யம் திரையரங்கு பார்க்கிங் டிக்கேட்டின் மீது அடித்து சத்தியம் செய்கிறேன்.

* அந்த பிரமுகர் ஏழுமலை நாயக்கர். சென்னையின் அத்தனை தாதாகளுக்கும் அண்ணன். என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட வீரமணி இவரின் சிஷ்யன்

Comments:
Simply awesome.Good job done.
 
Great post...
 
நாராயண், இதைப் பத்தி நாம பேசியிருக்கோம். தலித் இலக்கியம் மாதிரி, பிற வட்டார வழக்கு இலக்கியம் மாதிரி, வடசென்னையின் வாழ்க்கை, இது வரை இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதை பின்புலமாக வைத்து, நீங்க ஒரு குறுநாவல் எழுதுங்கள். சீரியஸாகத் தான் சொல்கிறேன்.
 
You’ve painted a mesmerizingly gritty and a dramatically vivid picture that I doubt any movie will ever capture – much less, one from Selvaragavan.

I strongly second Prakash’s second comment.
 
Very Interesting Post! உங்க English Blog ல நிறைய படிச்சிருக்கேன். தமிழ்ல இதுதான் first! Good one!
 
இவ்ளோ மேட்டர் இருக்குன்னு தெரியும் ஆனா இன்னிக்குத் தான் இன்னா மேட்டர்ன்னு கண்டுகினேன். சும்மா சீவி எடுத்துட்ட மாமூ.
 
யாரும் phd செய்யவில்லையென்று வருத்தம் எல்லாம் வேண்டாம். நீங்கள் thesis மட்டும் எழுதினால் அந்த குறை நீங்கி விடும் :) எல்லா டைரக்டர்களும் பெரிசாகத் தான் பேசுகிறார்கள். படம் பார்த்தால் தான் சொதப்பல்கள் தெரிகிறது. (எனக்குத் தெரிந்து பாலா, கௌதம் மேனன் மட்டும் அவர்கள் சொன்னதை செய்தார்கள் தத்தம் கடைசிப் படங்களில்)..செல்வராகவன் மேல் எனக்கு அவ்வளவு எதிர்பார்ப்பில்லை. ரெயின்போ காலனியை பலர் காவியம் range-க்கு பேசினார்கள். எனக்கு என்னவோ அது passable படம் தான். காதல் கொண்டேன் முதல் பாதி மட்டும் பிடித்திருந்தது.
 
பிரகாஷ், ஒரு குறுநாவல் அளவிற்கு விஷயமிருக்குமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் இணையாக ஏதாவது எழுத முயலலாம்.

வடசென்னையின் விஷயங்களைப் பற்றி எழுதிக் கொண்டே போகலாம். அதுவும் நிழலுலகம் என்பது இன்னமும் ஆழமாய் விரிவாய் விவாதிக்கவும், பேசவும் ஏற்புடைய களம். அதனால் இதற்கு ஒரு ஸீக்யுல் எழுதுவேன், ஆனால் எப்போது எழுதுவேன் என்றெல்லாம் உத்தரவாதம் தரமுடியாது. போகிற போக்கில் சில விஷயங்களை சொல்லிவிட்டு போக முடியாது. இன்னமும் ஆழமாக படிக்க வேண்டும். பழக வேண்டும். அப்போதுதான் நிறைய விஷயங்களையும், வியப்பான உண்மைகளையும் கொண்டு வரமுடியும்.பார்க்கலாம்.
 
நல்லா இருக்குது நாராயணன். இப்போதான் முதல் தடவையா உங்க ப்ளாக் படிக்கிறேன். சூப்பர் பதிவு
 
நாரயணன், மிக நிதானமாக முழுவதும் படித்தேன். மிக விரிவான பதிவு. பிரகாஷ் சொன்னதை நானும் வழிமொழிந்தாலும், குறுநாவல் எழுதுவது சமய சந்தர்ப்பம், உங்கள் தேர்வு, கற்பனை சார்ந்த விஷயம். மேலும் தகவல்கள் இருப்பதனால் மட்டும் மெனெக்கிட்டு குறுநாவல் எழுத முடியாது. ஆகையால் நாவல் எழுதுவது வேறு பல விஷயங்களை பொறுத்தது. (நான் எதிர்மறையாக சொல்லவில்லை என்பது புரியும் என்று நினைக்கிறேன்.) ஆனால் உங்களின் பல அனுபவங்களை, இன்னும் பல விவரங்களை, குறைந்த பட்சம் இங்கேயாவது, இன்னும் விரிவாய் பல தளங்களில் பதிய வேண்டும். பல அனுபவங்களை கதை போன்ற நடையிலும் எழுதலாம். வேறு வடவங்களில் இதை எழுதவும் முயற்சிக்கலாம். எனக்கு மேலும் ஏதாவது தோன்றினால் பிறகு சொல்கிறேன்.
 
நிச்சயமாக குறுநாவலுக்கு வேண்டிய சரக்கிலும் மேலாகவே இருப்பதாகத் தோன்றுகிறது
 
தூள் மாமூ. :-)

நானும் வடசென்னைக்காரன் என்பதால் பல இடங்களை மிக நெருக்கமாய் உணர முடிந்தது. நானும் இதைப்பற்றின பதிவொன்றை எழுதுகிற உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

நிழலுலக மனிதர்களையும், இடங்களையும் சம்பவங்களையும் சினிமாவில் கதாநாயகத்தன்மையோடு சித்தரிப்பதுதான் வேதனை. இந்த மாதிரிப் படங்களை கீழ்தட்டு 'தம்த்த' பையன்கள் கூட இதே மாதிரியான ஹீரோயிசத்தோடு சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்வதை இப்போது பிடிபடும் குற்றவாளிகளின் புகைப்படங்ளைப் பார்த்தால் பிடிபடும். வெளியிலிருந்து பார்ப்பதற்கு திரில்லாக தெரியும் அந்த வாழ்க்கை, அனுபவிக்கையில்தான் தெரியும் தெருநாய் வாழ்க்கையை விட கொடுமையானது என்று. எனக்குத் தெரிந்த ஒரு 'ஆள்' தூங்குவதற்கு இரவு நேர பேருந்து பயணங்களை தோந்தெடுப்பதை சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் கண் முன்னே பார்க்க நேர்ந்த ஒரு திட்டமிட்ட கொலையும் அது பத்திரிகையில் செய்தியாக வந்த போது எந்தவிதமான பரிணாம நிலையை எட்டியது என்பதை இப்போது நினைத்தாலும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த நிழல்உலக வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக ராம்கோபால் வர்மா சில படங்களில் நெருங்கியிருந்தாலும் அவரும் தன் நாயகர்களை கதாநாயகத்தன்மையோடுதான் சித்தரித்திருப்பார். (இந்தி) சத்யா படத்தில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டவுடன் அவர்களை துறையே வெகுண்டு கண்ணில் பட்ட ரவுடிகளையெல்லாம் 'போட்டுத்தள்ளுவதுதான்' நிஜம்.

அழகிய பெரியவனின் 'தீட்டு' என்கிற குறுநாவலிலும் ஜி.நாகராஜனின் சில சிறுகதைகளிலும் இவ்வாறான மனிதர்கள் நாயகத்தன்மையோடு இல்லாமல் யதார்த்தமான முறையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்றாலும் வடசென்னை என்றாலே இவ்வாறான நிழலான மனிதர்களும் இடங்களும் சார்ந்த பகுதி என்பது மாதிரியான தோற்றத்தை ஏற்படுத்தியிருக்காமல், நாட்டுக் கோட்டை செட்டியார்களும், தெலுங்கர்களும், செளகார் பேட்டை மார்வாரிகளும், மற்றும் என்னைப் போன்ற சில நல்ல மனிதர்களையும் உள்ளடக்கிய பகுதி என்பதையும் தெளிவு படுத்தியிருக்கலாம். :-)
 
Man, what a scorching write-up! very well done, this one will stay with me for long...
 
நரேன், நல்லதொரு பதிவு. இவ்வாறான விடயங்களை எழுதும்போது பலர், judge செய்துகொண்டே எழுத ஆரம்பிப்பாகள். அந்த சாயல் எதுவுமில்லாது அவர்களின் வாழ்வுமுறையை உங்கள் பதிவு இயல்பாய் விரிக்கிறது. உங்களைப் போல அதிகம் நெருங்கிப்பார்க்காவிட்டாலும், இங்கேயுள்ள நிழலாளிகள், அவர்களது உலகத்தைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். இன்று மனைவி, பிள்ளைகள் என்று ஒதுங்கி ஒரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருந்தாலும், அவர்களின் கண்களின் இருக்கும் அமைதியின்மையையும், எந்த நேரத்திலும் பழைய பகையாளி மண்டையில் போடுவான் என்று பயத்துடன் வாழ்பவர்களைக் கண்டிருக்கின்றேன். எந்தப் பொழுதிலும் இப்படியான வாழ்க்கைக்குள் நுழைந்துவிடாதீர்கள் என்று காணும்போதெல்லம் கூறிக்கொண்டேயிருப்பார்கள்.
நிற்க.
செல்வராகவன் இந்த நிழலுலகத்தை எதோ ஒருவிதத்தில் தெளிவாய் capture செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை காதல் கொண்டேனும், 7/G ரெயின்போ காலனியும் தந்திருக்கிறது. மற்றும்படி 'படிச்ச நாயே கிட்ட வராதே' பாட்டு எனக்குப் பிடித்தமான ஒன்று. சும்மா கேட்சும்மா கேட்டுக்கொண்டிருக்கவே ஆடவைக்கும் அதன் பீட்டும், பாவிக்கப்பட்ட வார்தைகளும் மிகு இயல்பு.
 
வசந்த், இதுக்கு கொஞ்சம் விளக்கமா பதில் சொல்லணும். கொஞ்ச காலமாக வலைப்பதிவுகள் ரொம்ப போரடிக்கின்றன. ரெண்டு நாளாக ஊரில் இல்லாம, இன்னிக்குத் தான் வந்து தமிழ்மணம் ஆவணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அரைச்ச மாவேதான்.. நாராயண் பதிவு, வாய்ஸ் ஆ·ப் விங்ஸ் பதிவு, ஆகியவற்றை படிச்சதும் சட்டுன்னு ஒரு மனசுக்குள்ளே, ஒரு விதமான புத்துணர்ச்சி வந்தது நிசம். ஒரு நல்ல படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, " ச்சே இந்தப் படத்துக்கு மட்டும் மொட்டை ம்யூசிக் போட்டிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு" முஷ்டியை குத்திப்பேன்... அந்த மாதிரியான ரீயாக்ஷன் இது...குறுநாவல் எழுதுவது என்பது ரொம்ப பர்சனலான தேர்வு. இருந்தாலும், இவை, முறையாக பதிவு செய்யப்படவேண்டும். அதைத்தான் நான் சொல்ல நினைத்தேன்.

நாராயண் : குறுநாவல் என்கிறதை வாபஸ் பெறுகிறேன். ஆனால், எழுத்திலே பதிவு செய்யப்படவேண்டும் என்று நிச்சயம் நம்புகிறேன். பர்மா பஜார் துவங்கி, எண்ணூர் வரையிலான கடலோர குப்பத்தில் இருக்கும் மக்கள், அவங்களோட வருமான வழிமுறைகள், கடவுள் வழிபாடு, உபயோகிக்கும் சொற்கள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், பர்மா பசாரின் கடத்தல், லஞ்சம், துறைமுகத்தின் மற்றொரு இருட்டுமுகம், சட்டென்று புதுப்புது தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ளும் தாதாக்கள், ஸ்கெட்சு, மான்கராத்தே,டப்பா சோறு போன்றவற்றை, உள்ளது உள்ளபடி, பதிவு செய்ய வேண்டும். சினிமாவிலே, வர்த்தகக் காரணங்களுக்காக, glorify செய்து விடுகிறார்கள். அடுத்த வாட்டி 'அங்கே' போகிற போது சொல்லுங்கள். நானும் வரேன்.. டிஜிகாம் சகிதம் :-)
 
சுரேஷ் கண்ணன் : அது நாட்டுக் கோட்டை செட்டியார்கள் அல்ல, ஆரிய வைசியச் செட்டிகள். சுகஜீவனம் படிச்சிருக்கீங்களா? சா.மு பாலகுமாரன் எழுதியது ( சாமியாராவதற்கு முன்னால்) :-). பத்ரி பதிவுலே, உங்களுதைப் படிச்சேன். சந்தேகமில்லாம, நான் உங்க கட்சிதான்..word verification, comment moderation ன்னு ஏழுகடல், ஏழுமலை தாண்டி மறுமொழி போட சோம்பலா இருந்தது.. அதான் இங்கேயே... நாராயண், எச்சூஸ்மீ ப்ளீஸ்..
 
என்ன அறிவு? என்ன ஆய்வு? சாமி, ஒனக்கு Dr.DADA பட்டமே கொடுக்கலாம்.

ராம்கோபால் வர்மாவின் "சத்யா" ரிப்பீட்டு ஆவாமல் "தமிழ்நாட்டு" "தாதாயிஸம்" இருந்தால் மெத்த மகிழ்ச்சி. செம expectations பாட்டு கேட்டதுலயிருந்து.
 
பிரகாஷ், நீங்கள் சொன்னதை ஒத்துக் கொள்கிறேன். பர்மா பஜாரிலிருந்து சிங்கப்பூர் போய், 'சரக்கு' வாங்கி மீண்டும் சென்னை வந்து கொடுத்துச் செல்லும் 'குருவிகள்' பற்றி எழுதலாம் என்று உத்தேசம். பார்க்கலாம்.

//.word verification, comment moderation ன்னு ஏழுகடல், ஏழுமலை தாண்டி மறுமொழி போட சோம்பலா இருந்தது.. அதான் இங்கேயே... நாராயண், எச்சூஸ்மீ ப்ளீஸ்..//

மன்னிக்கணும் தலைவா. இன்னும் வயாகரா விற்பவர்களும், கன்டென்ட் ஸ்பேமர்களும் இருப்பதால் கொஞ்ச நாளைக்கு ஆடுறா ராமா, தாண்ட்ரா ராமா தான்.
 
டிசே எனக்கு மொத்த ஆடியோ சிடியுமே பிடித்திருக்கிறது. செல்வராகவன் மீது நம்பிக்கையிருக்கிறது. ஸ்டில்கள் மேலும் நம்பிக்கை கொடுக்கின்றது. பார்க்கலாம். பிரகாஷ் பாஷையில் சொன்னால் "மொட்டை பையன்னா சும்மாவா" ;)

பிரகாஷ், வாய்ஸ் ஆன் விங்ஸ் பதிவு சுட்டி தரமுடியுமா?
 
narain, here is the link
 
அடேயப்பா!!! இப்பவே ஏதோ நாவல் படிச்ச மாதிரிதான் இருக்கு. Great post Narayanan!! Thanks.
 
Narain,

Good work. Most of the gangsters' lives are interesting to read and glossy, but very few works have captured the real essence of their lives. That is the reason, lot of books/movies about gangsters were good to read/watch but hollow in the content.

I have also tracked some of the South American/Mexican, New York shadow worlds(No, I am not exaggerating, after I moved to US only, I was able to read lot of books/periodicals in that area, so naturally I chose the continent where I live) through books and I see the stunning similarities of their lives with your work.

I have heard about North Chennai through my friends(like do not go to Rayapuram after 8PM etc.), but never read about them in detail. Looks like you have lot of experience in that. Please document them as much as possible.

As Prakash suggested, we need to put some work in Tamil about that world(not a typical cinema style), so you should try your hands on that.

Martin Scorsesse has registered the gangster's lives beautifully in "Mean Streets" and "Good Fellas". Besides the HBO TV seiral "Sophranos" deal with the dark side of the gangster. I didn't include "Godfather" as I see that movie is a polished work rather than showed the brutal life. Still that movie cannot be ignored.

Overall nice article and expecting more on this area.
 
நாராயணன் நல்லதொரு பதிவு. இன்னும் விஷயங்கள் இருந்தால் எழுதலாமே. பார்த்த, கேட்ட சம்பவங்களை விரிவாக எழுதுங்கள். பல பதிவுகளகாவும் செய்யலாம். வடிவத்தை பிறகு யோசிக்கலாம்.
 
நாராயணன்,

சூப்பரா இருக்கு. நீங்க எழுதின ரேஞ்சுக்கு செல்வா படம் பண்ணியிருந்தார்னா, இந்தப் பதிவு மாதிரியே படம் சூப்பர் ஹிட்டுதான்.

ஏன்னா, இந்த மேட்டர்ல அல்லாருக்கும் தீனி இருக்கு :-)
 
இனிய நாராயண்,

'ஸ்கெட்ச்' சமீப காலமாக வழக்கில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன் 'சுத்து போடறது' கிட்டத்தட்ட ஸ்கெட்சுக்கு இணையாக வழங்கப்பட்டது.

சாமானிலும் எடுத்துச் செல்லும் 'சாமானை' சரியாகக் குறிப்பிட மடிப்பு (ஷேவிங்கிற்கு உபயோகிக்கும் மடக்கு கத்தி), சுலைமான் (சுருள் கத்தி), பட்டா (பெரிய கத்தி) என்று தனித்தனியாகவும் வழங்கப்பட்டது.

ஜொஞ்சம் வடசென்னையிலிருந்து கீழே வாருங்களேன். புதுப்பேட்டையில் வேலப்பன், பார்டர் தோட்டத்தில் மஜீத், ஜாம்பஜாரில் மன்னு, அயோத்தியா குப்பத்தில் கோல்டு அன்பு (வீரமணிக்கு முன்) என அந்தக் கால தாதாக்களின் வரலாறுகள் கண்களில் விரியுமே.

தங்கசாலை காட்பாடா லேனுடன் (சுடுகாட்டுச் சந்து) இரண்டாண்டுகள் தொடர்புண்டு.

நல்ல பதிவு. புதுப்பேட்டையைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.

ஏதோ ஒரு நாவலில் பாலா கொஞ்சம் புதுப்பேட்டையை வலம் வந்த நினைவு.

குருவிகள்:
காலையில் கொழும்பு விமானத்தைப் பிடித்து அங்கே போய் சும்மா வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்து ட்யூட்டி ஃப்ரீயில் 555 வாங்கி அடுக்கி, சென்னையிலிருந்து கொண்டுபோன இட்லி வடையை ட்ரான்சிட் லவுஞ்சில் உட்கார்ந்து தின்றுவிட்டு, முதலாளி அருகிலேயே ஒரு பேப்பரை விரித்துப்போட்டு லவுஞ்சிலேயே படுத்து, நள்ளிரவு விமானம் பிடித்து வரும் குருவிகள்...
எழுதுங்க நாராயண்ஜி.

அன்புடன்
ஆசாத்
 
I have linked this article in Desipundit today. Hope you dont have any objections.

http://www.desipundit.com/2005/12/29/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4/
 
//புதுப்பேட்டையில் வேலப்பன், பார்டர் தோட்டத்தில் மஜீத், ஜாம்பஜாரில் மன்னு, அயோத்தியா குப்பத்தில் கோல்டு அன்பு (வீரமணிக்கு முன்) என அந்தக் கால தாதாக்களின் வரலாறுகள் கண்களில் விரியுமே.//

ஆஹா ஆசாத்ஜி, வாங்க. கோல்டு அன்பு பத்தி நிறைய கதை பேசலாம். போலிஸ் ரவுண்ட்ஸ் வரும்போது இப்போது கோயில் குளமிருக்கும் தெற்கு மாடவீதியின் மாடிகளில் ஏறி, ஒட்டினைப் பிரித்து இறங்கி, கிணற்றின் படிக்கட்டினுள் ஒளிந்திருப்பார் என்று சொல்ல கேள்வி. நீங்க சொன்ன ஆளுங்க எல்லாம் இரண்டு தலைமுறை ஆளுங்க.

பொன்னேரி ஜோசப் என்றொரு நிழலாளி இருந்திருக்கிறார். பொன்னேரி வடசென்னையும், ஆந்திர எல்லையும் தொடுமிடத்தில் இருக்குமிடம். திருப்பதி ரூட்டு. கட்டுமரங்கள் இணையும் இடைவெளியில் கஞ்சா பொட்டலங்களை வைத்து கடத்தி பெரியாளனவர். கொஞ்சம் கேப் விட்டு விரிவாக எழுதுகிறேன்.
 
வழக்கம்போலவே எழுதி இருக்கிறீர்கள். இந்த மனிதர்களிடம் இருக்கும் நம்பகத்தன்மை (loyalty)பற்றி சொல்ல மறந்துவிட்டிர்கள் என்று நினைக்கிறேன். செய்யாத கொலையானாலும் தலைவன் சொன்னதற்காக தண்டனை ஏற்பது ஒரு உதாரணம். ஒருசமய்த்தில் பழைய தில்லியில் இப்படியான சிலரை சந்திக்கநேர்ந்தது. இத்தகைய சூழ்நிலையில் மடியில் எப்போதும் பயத்தை கொண்டு மேலுக்கு வீரனாய் வாழ்வதும் கஷ்டம். இவர்கல் தேடும் அமைதியையும் அழகாக எழுதி இருக்கிறீர்கள். இவர்களை பலர் பயன் படுத்திக்கொண்டு காவு கொடுத்துவிடுவதும் கண்டுகொள்ளாமல் போகிற ஒரு நிகழ்வு. நான் செல்வராகவனின் எந்த திரைப்படங்களையும் பார்க்காததால் படத்தை பற்றி சொலவதற்கொன்றும் இல்லை. நல்ல பதிவு.
 
நாராயன்
இதை காலம் வாய்க்கும்போது விரிவாக்குங்கள். மிகத்தேவையான தவறாமல் எழுதப்படக்கூடிய இத்தகைய பெருநகர வாழ்க்கையின் பதிவுகள் தமிழில் இல்லை. ஒருவிதத்தில் சென்ற நூற்றாண்டுத் தமிழக வரல்லாறும் இதைச் சார்ந்ததுதானே.
அருள்
 
நல்ல பதிவு. பெருநகர வாழ்க்கையின் அனைத்துப் பரிணாமங்களையும் பதிந்து/ஆவணப்படுத்தி வைக்கவேண்டியது மிக அவசியம். அருள் சொன்னதுபோல, குறிப்பாகத் தமிழில். வடிவம் குறித்தெல்லாம் யோசிக்காமல் தோன்றியதைத் தோன்றியபடி எழுதுங்கள் - இப்போதுள்ள வடிவங்களனைத்தும்கூட ஒருகாலத்தில் இல்லாமலிருந்தவைதான்.

மற்றபடி, நீங்கள் குறிப்பிடும் இந்த பிளேடு துப்பும் விஷயம், பல்லவன் பஸ் பிக்பாக்கெட்டுகள் மத்தியிலும் பிரபலமான ஒன்றென்றும், துப்பப்பட்டபின், துப்பிவிட்டார்களே என்று முகத்தில் கைவைத்துத் 'துடைத்தால்'தான் கிழிந்தது சங்கதி என்பதும் கேள்விப்பட்டதுண்டு. இந்த கோஷ்டிகளுடன் சுற்றும் விடலைகளின் remodeled மோட்டார்சைக்கிள்களை விட்டுவிட்டீர்களே? இஞ்சின் மட்டும் பெரும்பாலும் RX100, மற்றது அனைத்தும் ஒரு காக்டெய்லாய், சைலன்ஸர் கழற்றிவிடப்பட்டு உர் உர்ரென்று உறுமிக்கொண்டு...
 
நாராயண்,

அருமையான பதிவு. ஒரு நல்ல நாவலின் synopsis படித்தது போல் இருந்தது. உங்களால் இதை நிச்சயம் நாவலாக்க முடியும்.

வாழ்த்துகள்.
 
நரேன் அருமையான பதிவு. மேலும் விரிவாக எழுதுங்கள்
 
City of god கொஞ்ச நாள் முன்புதான் பார்த்தேன். அதே போல தமிழில் எடுக்கலாம்தான். இந்த பஞ்ச் டையலாக், ஹீரோவொர்சிஃப் இதெல்லாம் இல்லாமல் எடுக்கக்கூடிய இயக்குனர் கிடைத்தால். நீங்கள் எழுதுங்கள். நன்றி.
 
எக்ஸ்படேசனை எகிற வைக்கறீங்க நாராயண்!

பின்னூட்டங்களும் அமர்க்களம்
 
கலக்கலான பதிவு நாராயணன். கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும் போல உங்ககிட்ட :-) பின்னே நிழலுகம் பத்தி இவ்வளவா?

BTW,நீங்கள் கேட்ட சிட்டி ஆப் காட் டிவிடி எல்லாம் வாங்கிட்டு வந்தேன். உங்களை சந்தித்து கொடுக்க நேரம் கிடைக்காம அதுவும் sleeping beauty-ஆ இருக்கு. கிடைச்ச gap-ல காதுல போட்டுற்றேன்.
 
இதை காலை படித்தபோது விறுவிறுப்பாக, சுவாரசியமாக இருந்தது. பின்னூட்டமிட்ட எல்லோருக்குமே அப்படிப்பட்ட அனுபவம் கிடைத்திருக்க வேண்டும். இவற்றைப் படிக்கவும், படமாகப் பார்க்கவும் விறுவிறுப்பாக இருக்கும். கலையின் நோக்கம் நிறைவேறும். பதிவு செய்யவேண்டியதின் அவசியம் தெரியும். முக்கிய சமூகவியல் ஆவணமாகவும் தெரியும். நாம் அனுதாபம் கூட செலுத்துவோம். எல்லாமே நாம் இச்சூழலில் மாட்டிக்கொள்ளாத வரை தான்.

இச்சூழலில் இயங்குவோர், பாதிக்கப்பட்டோர், 'வெற்றி' பெற்றோர் என்று சில தரப்பினரை விரிவாக பதிவு செய்திருக்கிறீர்கள். இத்தகைய வாழ்வில் சிக்கிக்கொள்ளாமல் அல்லது சிக்கியபிறகு சுயமுயற்சியாலும், வெளியாட்கள் முயற்சியாலும் (போலிஸ், அரசாங்கம் அல்ல; சமூக ஆர்வலர்கள், NGO க்கள்) விடுபட்டு வாழ்க்கையை கண்டுபிடித்தவர்களும், சாதனை செய்தவர்களும் கூட இருப்பார்கள். அவற்றைப் பற்றியும் எழுதுங்கள். சில வாரங்களுக்கு முன் இந்த இளைஞரைக் குறித்த செய்தியைப் படித்தபோது இதமாக இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் விஷ ஊசிபோடப்பட்டு கொல்லப்பட்ட மரண தண்டனைக் கைதி Stanley "Tookie" Williams பற்றிய செய்தியை படித்திருக்கக்கூடும். எழுபதுகளில் லாஸ் ஏஞ்சலெஸை நடுங்க வைத்த கும்பலின் தாதா. கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனைப் பெற்ற பிறகு மனம் திருந்தி கும்பல் வன்முறைக்கு எதிராக சிறையிலிருந்தே பிரச்சாரம் செய்தல், கும்பல்களுக்கிடையில் சமரசம் செய்து வைத்தல் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதுதல் போன்ற செயல்களுக்கு பிறகு பரவலான அனுதாபத்தைப் பெற்று அமைதிக்கான நோபெல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டவர். அவரது ஆதரவாளர்கள் இறுதி நிமிடம் வரை முயன்றும் கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போனவாரம் ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்டேன். சான் ஃப்ரான்சிஸ்கோ நகரில் ஒரு முன்னால் பாலியல் தொழிலாளி நடத்தும் 'மாமா'க்களுக்கான பள்ளி பற்றியது. இதில் பயிற்சி பெறும் 95%க்கும் மேலானவர்கள் அத்தொழிலிலிருந்து மீண்டு வேறு வாழ்க்கையை மேற்கொள்வதாகச் சொன்னார்.

வாழ்க்கையின் இருண்ட பக்கத்தை பதிவு செய்வது அவசியம் தான். அந்த இருளிருந்து தோன்றும் ஓரிரு ஒளிக்கீற்றுகளையாவது பதிவு செய்வது அதைவிட முக்கியம்.
 
ஒரு விஷயம் ..காலையிலேயே சொல்ல விட்டுப்போனது. மகாகவி பாரதி நகர் என்று நீங்கள் சொன்னது கொஞ்சம் உள்ளே தள்ளி, கொடுங்கையூர் பாலத்தின் பக்கத்தில் இருக்கிற இடம். அதற்கு முன்னால் அதன் பெயர் அஷோக் லேலெண்ட் நகர். எண்ணூர் அசோக் லேலெண்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெருமளவில் வசிக்கும் இடம்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இருந்து ரைட்டில் கட் பண்ணி போனால் உள்ளே வரும்.

நீங்கள் சொல்கிற இடம் கொஞ்சம் முன்னால், பேசின் பிரிட்ஜ் இறங்கியவுடனேயே வருகிறது. அந்த இடத்துக்கு பர்மா காலனி என்று பெயர். சேரா, வெள்ளை ரவி போன்ற நிழலாளிகள் ( சோக்கான பேர்பா இது..) உலாவிய இடம்.

இடம் அவ்வள்வு முக்கியமில்லை என்றாலும் தெரிந்ததால் சொல்லத் தோன்றியது. தொண தொணப்பலுக்கு மன்னிக்க. :-)
 
நாராயணன் பெரிய அரசியல் புள்ளிக்கூட காட்டுல சுற்றுலா போகிறார். பாலுமகேந்திராவின் மகன்
நண்பன் என்கிறார். இன்று தாதாக்களைப் பற்றி புட்டு புட்டு வைக்கிறார். நாளை ஒரு பிரச்சனை என்றால் நாராயணனை உதவி கேட்கலாம் :-)

இவர்களின் இன்னொரு பக்கம், பயந்த வாழ்க்கை குமுதத்தில் ஒரு முறை வந்தது.

படிக்க சுவாரசியமாக இருந்தாலும், பரிதாபமாய் இருக்கிறது. பதிவு சல் என்று போகிறது. கீ போர்ட்டில் விரல்களை வைத்து அப்படியே தொடர்ந்து நிற்காமல், தட்டச்சு செய்தீர்களா?
 
Very informative and a good read.

A related topic is worth exploring: the relatioship between South and North Chennai. I've always wondered how the average South Chennai resident remains completely ignorant of the North Chennai way of life - not just crime but most of the city's industrial labour and trade is located in North Chennai.

If you read "Madras: The Unhurried City" (ed. CS Lakshmi, Penguin India, 2004), you would think that North Chennai simply doesn't exist! So complete is the appropriation of the city's identity by the denizens of the South. There are obviously political, sociologial and cultural reasons for such ignorance, indifference and exclusion, but their continuance would not augur well for the city's healthy development.
 
நான் சொல்ல நினைச்சது எல்லாத்தையும் மத்த எல்லாரும் சொல்லிட்டாங்க.

அருமையான பதிவு செஞ்சிருக்கீங்கய்யா... அப்படியே தொடருங்க.
 
படிக்க அருமையாகவும் பரவசமாகவும் இருந்தது. பிரகாஷ் சொன்னது போல் ஏதேனும் முயற்சி செய்யுங்க தலை.
 
//ஆனால் அவர்கள் போல் நண்பர்களுக்கு உதவும் ஆட்கள் இருக்க மாட்டார்கள்//
- உண்மை.

//வன்முறையின் கிளர்ச்சியில் இருப்பவர்களுக்கு படித்தவர்கள் நாய்களாக தான் தெரிவார்கள//

எல்லா நிழலாளிகளும் படிக்காதவர்கள் என சொல்ல முடியாது. பொறியியல் கடைசியாண்டு வரை படித்து சந்தர்ப்பவசத்தால் நிழலாளி ஆனவரை சந்தித்திருக்கிறேன்.
 
நாராயண்,

மிகவும் அருமையான கட்டுரை.

இலக்கியங்களால் பதிவு செய்யப்படாதா யதார்த்தங்களும் வாழ்க்கை முறைகளும் ஏராளம். வடசென்னை வாழ்க்கை அவற்றுள் ஒன்று. நீங்கள் ஒரு நாவல் இதை வைத்து எழுத கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

அன்புடன்

ராஜ்குமார்
 
நாராயணன்
நிழலுலக மக்கள் உருவாக நாமும் நம்மை அறியாது ஒருவகையில் காரணமாகிவிடுகிறோம்.
தீவிரவாதிகளாக உருவாக்கி விடுகிறோம்.
கீழே உர்ல் பாருங்கள்.

http://madhumithaa.blogspot.com/2005/07/blog-post_112131259234384813.html.

எப்போதும் ஆண்ட்டி ஹீரோக்களுக்கென தனி இமேஜ் உண்டு.அது ராபின்ஹுட் காலத்திலிருந்து ஆரம்பித்திருக்கலாம்.
வீரப்பன் வரை தொடர்ந்தது.
இனியும் தொடரலாம்.
கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவுதல் பணம் இருப்பவர்களிடம் பறித்து.
பின் வந்த காலகட்டங்களில் வாழ்தலுக்காக என மாறி உயிர் காக்க ஒளிந்து வாழும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.
நாம் வாசிக்கலாம்;எழுதலாம்.

கனிவான,அன்பான பார்வை கூட பார்க்கத்தயாராயில்லாது
வேறு என்ன செய்து விடப் போகிறோம் அவர்களுக்காக.
 
nice post naarayan


keep it up
 
Being a guy who was born and brougt up in royapuram i could identify almost all the thing which you have said..

But i just want to tell you that the MDMK functionary Ezhumalai was not murdered by veeramani's gang but by another guy named Teeka Ram around 10:00 PM near royapuram bridge ..there were totally 15 people headed by teekaram (he was once an aide of Ezhumalai) who came in a mahendra van and attacked Ezhumalai with sickles who was sitting in a Cycle repair shop..
It was a gruesome murder..It all happened within minutes that nobody could ever react..
the murder was engineered by ex ADMK MLA E.Madhusoodhanan at the behest of JJ.
It was a major political murder during that time considering the fact that Ezhumalai was the backbone of MDMK (he literally controlled the entire North madras)..no trailer can get inside Harbour without his permission.and t was he who successfully completed the first ever Rally of MDMK (Ezhuchi perani,took 16 hours to reach the destination of the rally)
And the best part of the plan was that DMK was accused of this since MDMK was at loggerheads with DMK then.
Such is the planning of these people.
 
நாராயணன் எழுதினதுதான் அப்டின்னா, கடைசியில் ஷ்ரெக் எழுதியிருக்கிறதையும் சேர்த்து வைத்து வாசிச்சா ஏதோ city of God படத்தை ரெண்டாவது தடவை பார்க்கிறதுமாதிரிதான் இருக்கு.
நல்ல திரைப்படக் கதாசிரியர்கள் தமிழ்மணத்தில் உலா வர்ராங்களோ..?
 
தினகரன் வசந்தம் இதழில் வந்துவிட்டது. நாராயண் பதிவின் ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாவற்றையும் திருத்தி நன்றாக வந்துள்ளது:-)

அட்டையில் "புதுப்பேட்டை exclusive" என்று போட்டிருக்கிறார்கள். எல்லோரையும் மொத்தமாகக் குழப்பியிருக்கும்.

(இதே பின்னூட்டம் பிரகாஷ் பதிவிலும்...)
 
I really hope that i could read this article but due to me being illiterate in Tamizh, i'm unable to do so. I wish there is a translation of this article in English.
 
Compelling read. Primer - apt title.
 
நல்ல அழுத்தமான முறையில் பதிவு செய்திருக்கிரீர்கள். பாராட்டுக்கள்! வடசென்னையின் வன்முறை வாழ்க்கையை ஒரு குற்றவியல் நடுவரின் மகன் என்ற முறையிலும், மத்திய சென்னையின் முன்னாள் பிரஜை என்கிற முறையிலும் ஒரு சுமாரான பரிச்சயம் எனக்கு உண்டு. இளம் வயதில் இந்த வன்முறையின் காரணம் புரியாததால் ஒரு பொதுப்படையான வெறுப்பு வந்ததுண்டு. ஜெயகாந்தனின் சில சிறுகதைகள் இந்த வாழ்க்கை முறையின் விசித்திரமான பரிமாணங்களை காட்டியதும், நான் முன்பு கொண்ட சில கருத்துகள் மாறின. உதாரணமாக "ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும்" என்கிற கதை, சாராயம் கடத்தும் ஒரு மனிதனின் "அழகி" போன்ற காதல் கதை! அவற்றில் சில வியக்க வைக்கும் மனித உணர்வுகளை என்னால் உணர முடிந்ததது. மற்றுமோர் சிறுகதையில் "டோனி" என்கிற துரைசாமி என்கிற சிறுவன் "நிழல்" உலகில் இருந்து படும் பாட்டினை அழகாக ஆனால் இயல்பாக கொடுத்திருக்கிறார் ஜேகே. அவர் எழுத்தினில் கொடுத்த அந்தச்சேரிகளின் முடுக்குகளை சிந்தாமல் சிதறாமல் என்று இல்லாவிட்டாலும் ஓரளவேனும் சிதைக்காமல் சொன்னது பாரதிராஜா மட்டுமே(என் உயிர் தோழன்). செல்வராகவன் வடசென்னையை இருக்கும் விதமாகவே(நீங்கள் இந்த வலைப்பதிவில் செய்தது போல்)சொன்னாலே போதும் வெற்றிக்கனிகளை எளிதில் சுவைக்கலாம். மீண்டும் ஒரு முறை, வாழ்த்துக்கள்! இந்த இணையத்தமிழ்ப்பணி இனிதே தொடரட்டும்!!
 
my movie review

http://nanthavanam.blogspot.com/
 
உருப்படியான கட்டுரை - நிழலுலகம் தான் சரி என்று நினைக்கிறேன்

நானும் சென்னையிலும் மும்பையிலும் இது போன்ற நிழலுலக மனிதர்களை சந்தித்திருக்கிறேன். இவர்களில் பலர் மிகவும் நல்லவர்கள் என்பதும் எந்தவித கெட்டப்பழக்கங்களுக்கும் அடிமையானவர்கள் அல்ல என்பதும் வியக்கவைக்கும்.

அருமையான பதிவு.

உங்கள் அனுமதியுடன் முத்தமிழ் குழுமத்திலும் இடுகிறேன்.
 
நான் இது வரை படித்த பதிவுகளிலே ,பாதியில் ஐயோ சீக்கிரன் முடியாமல் இன்னும் நிறைய படிக்க இருக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டே படித்தது இந்த பதிவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன் .எடுத்துக்கொண்ட கருப்பொருள் அதற்கு ஒரு காரணமெனினும் உங்கள் எழுத்து நடை அபாரம் .கண்டிப்பாக விரிவான நாவலாக வேண்டியது .மிக்க நன்றி!
 
Really a very beautiful blog... After seeing Pudhupettai, I came to so many unknown underworld things... Now, ur blog revealed the rest. It looks like seeing Pudhupettai - II, while reading ur post. Hats off to u!!
 
情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


成人電影,微風成人,嘟嘟成人網,成人,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,成人文章,成人影城,愛情公寓,情色,情色貼圖,色情聊天室,情色視訊

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖
 
(法新社倫敦四日電) 英國情色大亨芮孟的a片下載公司昨天AV片說,芮孟日成人影片前去成人網站世,sex享壽八十二歲;色情這位身av價上億的房地產開發情色電影商,曾經在倫敦推成人網站出第一場脫衣舞表av演。

色情影片
芮孟的財產成人影片估計成人達六億五千萬英鎊(台幣將a片近四百億),由於他名下事業大多分布在倫敦夜生活區蘇活區色情成人因此擁有「蘇活情色視訊之王」日本av的稱號。
部落格

他的成人電影公司「保羅芮孟集團」旗成人網站下發行多a片種情色雜av誌,包括「Razavzav女優leavdvd」、「男性世界」以及「Mayfai情色電影r」。色情a片
a片下載
色情
芮孟情色本名傑福瑞.安東尼.奎恩,父av女優親為搬運承a片包商。芮孟十五歲離開學校,矢言要在表演事部落格業留名,起先表演讀心術,後來成為巡迴歌舞雜耍表演av女優的製作情色人。


許多評論a片成人電影認為,他把情色表演帶進主流社會,一九五九部落格年主持破天荒的脫衣舞表演,後來成人影片更靠著在蘇活區與成人光碟倫敦西區開發房地產賺得大筆財富。


有人形容芮孟是英國的海夫納,地位等同美國的「花花公子」創辦人海夫納。


 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]