Dec 1, 2005
இயல்பாய் கொஞ்சம் தண்ணீர்
மூன்று நாட்களுக்கு முன் குளிக்கலாம் என்று குழாயினை திறந்தால் தண்ணீர் கொட்டியது. எப்போதும் கொட்டும் இதிலென்ன அதிசயம்! ஆனால் கொட்டிய தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது. பளிங்கு மாதிரி என்று சொல்லுவார்களே அந்த மாதிரி. கொஞ்ச நேரம் தண்ணீரையேப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
கொஞ்சம் வியப்பாயிருக்கலாம், பளிங்கு மாதிரி தண்ணீருக்கு எதற்கு தேட வேண்டுமென்று. நகரவாசியய்யா நான். 150% சென்னைவாசி. மற்றவர்களுக்காகவாவது சொந்த ஊர் என்ற ஏதாவது ஒன்று இருக்கும். அவ்வப்போது வெளியே போகலாம். எனக்கு அந்த கொடுப்பனையில்லை. சென்னை தான் எனக்கு எல்லாம். சென்னையில் தொடர்ந்து வசித்து வந்தால், தண்ணீரின் அருமை உங்களுக்கு தெரியும். எத்தனை விதமான தண்ணீரைப் பார்த்து இருப்பீர்கள். நான் பார்த்து இருக்கிறேன். கலங்கலான தண்ணீர், ஃபோர் மோட்டார் போட்டு உறிஞ்சப்பட்டு சவட்டுத்தன்மையோடு இருக்கும் தண்ணீர், கார்ப்பரேஷன் பைப்பும், கழிவு நீர் பைப்பும் அருகருகே போவதால் வரும் கருப்பு தண்ணீர், மஞ்சள் நிற தண்ணீர், குளோரின் நிரப்பப்பட்ட நாற்றமடிக்கும் லாரி தண்ணீர், பாய்ச்சலாய் அடிக்கும் போது நல்லதாய் தெரிந்து வீட்டுக்கு வந்து பார்த்தால் கசடு கீழிறங்கும் தண்ணீர், பிளாஸ்டிக் குடுவைகளில் மினரல் வாட்டர் என்று சொல்லி தலையில் கொட்டப்படும் தண்ணீரின் சுவை சிறிதுமில்லாத செத்துப் போன தண்ணீர், அடிப்பம்பில் மார் வலிக்க அடித்து ரொப்பினால் பொங்கும் நுரையுடன் கசப்பு சுவையுடன் அசடாய் பல்லிளிக்கும் தண்ணீர் என எல்லா வகையான தண்ணீரையும் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் வணிக ரீதியாய் வெளி மாநிலங்கள் போகும் போதும் செய்யும் முதல் காரியம், தண்ணீர் எப்படி இருக்கிறதென்று பார்ப்பது தான். எத்தனையோ முறை பெங்களூரில் ஹோட்டல் அறையில் வெறுமனே தண்ணீரை திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். இந்தியாவோ, வெளிநாடோ எல்லா இடங்களிலும் என் முதல் கவனம் தண்ணீர் தான். அழகாய் நுரையில்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டமுமில்லாமல், பளிங்கு போல கொட்டும் தண்ணீர். கையிலெடுத்துப் பார்த்தால், ஒழுங்காய் ரேகைகள் காட்டும் தண்ணீர். மாங்கு மாங்கென்று ஷாம்பூ போட்டு நுரை வர தேய்க்கவைக்காத தண்ணீர். அழகாய் கண்ணாடி கிண்ணங்களில் இருந்தும் இல்லாமலிருக்கும் தண்ணீர். ஷவரிலிருந்து துளிகளின் பிரவாகமாய் கொட்டும் ஜில்லென்ற தண்ணீர். குடித்தால் மெதுவாய் தொண்டையின் சுவர்களைத் தொட்டு ஒடும் தண்ணீர். மென்மையாய் கையினை அரிக்காத தண்ணீர்.
மூன்று, நான்கு வருடங்களாகவே, மோட்டாரில் தான் ஒடிக் கொண்டிருக்கிறது என்னுடைய அடுக்ககம். அதனால், மண்ணோடு அதன் மஞ்சள் தன்மையோடு தான் தண்ணீரைப் பார்க்க முடியும். அந்த தண்ணீரில் தோய்த்தால், மூன்று தோய்ப்பில் மஞ்சளுக்கு மாறிவிடும் ஆடைகள். வெந்நீராய் இருந்தாலும், வடிக்கட்டி குடிக்கும் நிலை, அடித் தண்ணீரில் கசடுகள் தேங்கியிருக்கும்.ஆக, இப்படி இருந்தவனுக்கு பளிங்கு போல தண்ணீர் வந்தால் என்ன செய்வான்? அன்றைக்கு நான் குளிக்கவில்லை. வீட்டில் இருக்கும் எல்லா பக்கெட்டுகளையும் சீராய் கழுவி, மஞ்சள் கறைகளை நீக்கிவிட்டு, மீண்டும் மீண்டும் தண்ணீர் பிடித்தேன். பளிங்கு போல உள்ளதை உள்ளபடி காட்டும் தண்ணீர், மென்மையாய் கரங்களை வருடும் தண்ணீர். எல்லா பக்கெட்டுகளிலும் சீரான தண்ணீர். என் அடுக்கக கிணறுகள் நிரம்பி விட்டன.
ஆனால், இதைப் பெற 3000 கோடி வெள்ள நிவாரண நிதியும், 200 உயிர்களுக்கு மேலும் காவு கொடுக்க வேண்டியிருக்கிறது. 3000 கிராமங்கள் தீவாக இருக்கின்றன. 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்கள். இப்போதும் குளிர் காற்று வெளியே அடிக்கிறது. தண்ணீர் பளிங்காய் இருக்கிறது. ஆனால் இதற்காக தவித்த தவிப்பு போய், இன்றைக்கு வெறுமை மட்டுமே மிஞ்சி இருக்கிறது. எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல், குழாயினை திறந்தால் பளிங்கு போல தண்ணீர். ஆனால் இந்த தண்ணீர் நிறைய பேருக்கு எமன். இந்த தண்ணீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம். எவ்வளவு உயிர்கள் போயிருக்கின்றன. எவ்வளவு மனிதர்கள் தங்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்திருக்கிறார்கள். ஏனோ நிறைய சலித்துக் கொண்டாலும், அயர்ச்சியுற்றாலும் கொஞ்சம் மஞ்சள் நிற தண்ணீர் அழகாய் தெரிகின்றது இப்போது. ஆனால், என்றைக்கும் அழகாய், அமைதியாய், மென்மையாய் இருக்கும் எல்லாமும் சந்தோஷம் அளிப்பதில்லை, சில சமயங்களில் பளிங்காய் மின்னும் தண்ணீர் போல.

Comments:
<< Home
Been there, seen that.
Great post.
BTW, How is the cyclone stuff right now in Chennai? How are you guys holding up?

//அழகாய் நுரையில்லாமல், எவ்விதமான ஆர்ப்பாட்டமுமில்லாமல், பளிங்கு போல கொட்டும் தண்ணீர். கையிலெடுத்துப் பார்த்தால், ஒழுங்காய் ரேகைகள் காட்டும் தண்ணீர். மாங்கு மாங்கென்று ஷாம்பூ போட்டு நுரை வர தேய்க்கவைக்காத தண்ணீர். அழகாய் கண்ணாடி கிண்ணங்களில் இருந்தும் இல்லாமலிருக்கும் தண்ணீர். ஷவரிலிருந்து துளிகளின் பிரவாகமாய் கொட்டும் ஜில்லென்ற தண்ணீர். குடித்தால் மெதுவாய் தொண்டையின் சுவர்களைத் தொட்டு ஒடும் தண்ணீர். மென்மையாய் கையினை அரிக்காத தண்ணீர்.//
உள்ளேயிருந்து எழுதியிருக்கிறீர்கள் நாராயணன். நானும் சென்னையில் ஒரு வருடம் கோட்டூரில் தண்ணீர் அடித்து (நள்ளிரவில்) குளித்தேன். அதற்குப்பிறகு பெங்களூர் வந்தபின்தான் அது மனதை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று அறிந்துகொண்டேன். யாராவது பைப்பை திறந்து வைத்திருந்தால், பல்துலக்கும் போது குழாய்த் தண்ணீர் திறந்து ஓடிக்கொண்டிருந்தால் கொலை வெறியே வந்துவிடும். மனிதன் தண்ணீர் இல்லாமல் சாவதுதான் சுரண்டலின் உச்சம். நாம் அதைத்தான் நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதுவரை நாம் சமூகத்தின்/ வாழ்வின் பல் தளங்களில் செய்த ஊழல்கள், சுரண்டல்கள், அனைத்தும் தண்ணீர்ப்பஞ்சமாகவே முடியப்போகிறது. இப்போது வெள்ளம். இன்னும் எண்ணி 6 மாதத்தில் தண்ணீர்ப் பஞ்சம் வரும்.

நாராயணன்,
அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
சென்னையில் கிணற்றுத் தண்ணியை வடிகட்டி (கல் மணல் போட்டு இதற்காகவே அமைத்த தொட்டி) பலமணிநேரம் காத்து இருந்து குளித்ததும் உண்டு.
எனது பாட்டி ஊரில் ஒரு குடம் குடி தண்ணீருக்காக பலமைல் நடந்த அனுபவமும் உண்டு.
மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்.
தங்கமணி,
//இதுவரை நாம் சமூகத்தின்/ வாழ்வின் பல் தளங்களில் செய்த ஊழல்கள், சுரண்டல்கள், அனைத்தும் தண்ணீர்ப்பஞ்சமாகவே முடியப்போகிறது. //
அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை :-((((

சென்னைவாசியின் கோணத்தில் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். சென்னையல்லாத ஊர்க்காரனின் கோணத்தில் சென்னை எப்படி இருக்கிறது தெரியுமா?
இன்று வரை சென்னை எனக்குப் பிடிக்காத ஊர் - ஒரே காரணம் தண்ணீர் என்று சொன்னால் மிகையில்லை. முதன்முதலில் சென்னைக்கு வந்தபோது குழாயைத் திறந்ததும் வந்த அந்தத் 'திரவத்தைப்' பார்த்து மிரண்டு போனேன். அந்த மிரட்சி இன்னும் மோசமான நிலையிலேயே இன்றுவரை இருப்பது சோகம். நட்சத்திர ஹோட்டலானாலும் இதற்கு விதிவிலக்கில்லை. குளித்தால் அழுக்கான மாதிரி இருக்கும். இன்னொரு முறை "உண்மையான தண்ணீரில்' குளிக்கவேண்டும் என்று தோன்றும். கிணற்றிலும், ஆற்றிலும் நீங்கள் சொன்ன 'பளிங்குத்' தண்ணீரில் குளித்து வளர்ந்தவனுக்கு சென்னை பெரிய அதிர்ச்சி அளித்தது. அதிலிருந்து நான் சலாமியாவிற்குக்கூட மாற்றலாகிப் போய் வேலை பார்க்கத் தயார் - ஆனால் சத்தியமாக சென்னைப் பக்கம் போக முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டேன்.
எண்ணையும் மணலும் மட்டும் இருக்கும் வளைகுடா நாடுகளில் கூட பளிங்கு மாதிரி குழாயில் தண்ணீர் வருகிறது.
சென்னை வாசிகள் உண்மையிலேயே நிரம்பப் பாவம் செய்தவர்கள்.
பளிங்கு மாதிரி தண்ணீர் வராதது அந்தத் தண்ணீரின் குற்றமில்லையே.
உடனடியாக விழித்துக்கொண்டு அவசர கால நடவடிக்கையாக உருப்படியான திட்டங்களை நிறைவேற்றி நிலத்தடி நீரையும் மழை நீரையும் காப்பாற்றிச் சேமிக்காவிட்டால் மொத்தத் தமிழகமும் சென்னை போலாகிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நல்ல பதிவு. பாராட்டுகள்.

அருமை. தண்ணீரின் அருமை அது இல்லேன்னாத்தான் தெரியும்.
தண்ணியை வீணாக்கினா எங்க பாட்டி சொல்ரது இது' தண்ணியை வீணாக்குனா வீட்டுலே நிதானம் போயிரும்'
பி.கு: இங்கே எங்க ஊர்லே கிடைக்கும் தண்ணீர்தான் இந்த நாட்டுலேயே உயர்ந்த ரகம். எதுவும் சேர்க்கலை. அப்படியே இயற்கையானது. ஆனா இன்னும் எத்தனை வருஷத்துக்கு இது வருமோன்ற கவலை இப்போ வந்திருக்கு.

ஸ்ரீகாந்த், சென்னையில் வடசென்னையிலும் கொஞ்சம் தள்ளியிருக்கும் சோழிங்கநல்லூரிலும் தான் இன்னமும் தண்ணீர் தேங்கியிருக்கிறது. சிதம்பரம், கடலூர் மகா மோசம். திருச்சி, ஸ்ரீரங்கம் பற்றிய தகவல்கள் பெரிதாக இல்லை. இங்கே புயல் வருவதற்கான அறிகுறிகள் கொஞ்சமும் இல்லை, நன்றாக வெயிலடிக்கிறது.
//சென்னை வாசிகள் உண்மையிலேயே நிரம்பப் பாவம் செய்தவர்கள்.//
சபிக்காதீங்கய்யா. ஏற்கனவே நொந்து போயிருக்கிறோம் ;)
//இதுவரை நாம் சமூகத்தின்/ வாழ்வின் பல் தளங்களில் செய்த ஊழல்கள், சுரண்டல்கள், அனைத்தும் தண்ணீர்ப்பஞ்சமாகவே முடியப்போகிறது. //
தத்துவார்த்த தளத்திலிருந்து பார்த்தால் இது மிக பெரும் உண்மை. அடுத்த உலகப் போர் என்ற ஒன்று வருமானால்,அது தண்ணீருக்காகவோ அல்லது பெட்ரோலுக்காகவோ தானிருக்கும் என்று தோன்றுகிறது, போர் வரக்கூடாது என்று உள்மனம் சொன்னாலும்.

சென்னையில் தண்ணீர் பிரச்சனை மிகவும் கொடியது. இந்த நிலை மாறினால் நல்லது. மாற்றுவது மழையால் மட்டுமே முடியும்.
எனக்கும் தண்ணீரை வீணடித்தால் பிடிக்காது. முடிந்தவரைக்கும் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

Dear Narayan
Very nice post. I wish you to have this good water for a while longer...
Murali
KS, USA
I feel the lack of planning and the population explosion in chennai is the reason for the water shortage.
Stayed in chennai during the '88 and I still remember feeling worse after taking bath then :(
Post a Comment

Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]