Dec 22, 2005

காந்தி பார்க்கும், கலாச்சார 'காவலர்களும்'கலாச்சார காவலர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள் என்பது தெரிந்ததே. வேலைண்டன் நாளில் இது மும்பையில் சிவசேனாவாகவும், பாலுறவில் இது தமிழகத்தில் விடுதலைசிறுத்தைகள்-பா.ம.க+தமிழ் கலாச்சாரக் காவலர்களாகவும் இருப்பது அறிந்ததே. இந்த லிஸ்டில் இன்னொரு புதிய அறிமுகம் உத்தரப்பிரதேசத்தில் மீரட் நகர் காவல்துறை. 'ஆபரேஷன் மஞ்சு' என்கிற பெயரில் பூங்காவில் அமர்ந்திருந்த கணவன் - மனைவி, காதல் ஜோடிகளை காட்டுமிராண்டித்தனமாய் அடித்து, உதைத்து வெளியேற்றி இருக்கிறார்கள். என்.டி.டி.வியில் கண்ட காட்சிகளில் பெண்காவலர்கள், பெண்களின் முகத்தில் அறைகிறார்கள். தலைமுடியினை பிடித்து இழுத்து வெளியேற்றுகின்றார்கள். உலகம் ஒரினச் சேர்க்கை முறையில் திருமணங்களை ஒத்துக் கொள்ளும் காலக்கட்டத்தில், இன்னமும் கணவன் மனைவி ஜோடியாக ஒரு பூங்காவில் இருக்க இந்தியாவில் பயப்பட வேண்டியதாகிறது. காந்தி மகான் வாழ்க! ஹிம்சையின் மூலம் அஹிம்சை போதிக்கும் இந்திய காவலர்கள் வாழ்க. வாழ்க கலாச்சாரம். பாராளுமன்றத்தில் சுஸ்மா சுவராஜ், அம்பிகா சோனி போன்ற பெண் 'தலைகள்' இதை கடுமையாக கண்டித்திருக்கின்றார்கள். சமுக அமைப்பின் மாற்றங்களை உள்ளடக்காமல் இன்னமும் 1960களில் போடப்பட்ட சட்டங்களை வைத்துக் கொண்டு காவலர்கள் பார்ப்பார்களேயானால், இது ஒரு பெரிய விஷயத்தில் கொண்டு போய்விடும். ஆங்காங்கே எச்சரிக்கை மணிகள் இவ்வாறாக ஒலித்தாலும், யாராவது செத்தாலோ, அல்லது கூட்டமாய் தற்கொலை செய்துக் கொண்டாலேயொழிய இதனைப் பற்றிய விழிப்புணர்வும், அறிமுகமும் வெளியே வராது. அது வரை நாமும் நம் சமுகமும் சாண்டாகிளாஸ் இலவசமாக வேட்டி சட்டை ரேஷன் கார்டு காட்டாமல் தருவதற்கு பிரார்த்திக்கலாம்.

என்.டி.டி.வி செய்தி | ஐபிஎன் செய்தி & படங்கள் | ஐபிஎன் வீடியோ

Comments:
Men fight for freedom and then start making laws to get rid of it.

- William Spurgeon
 
//யாராவது செத்தாலோ, அல்லது கூட்டமாய் தற்கொலை செய்துக் கொண்டாலேயொழிய இதனைப் பற்றிய விழிப்புணர்வும், அறிமுகமும் வெளியே வராது.//

அப்படியெல்லாம் விழிப்புணர்வு வந்துராது நாரயணன். திமிரெடுத்து செத்துட்டாங்கன்னு சொல்லிட்டு பண்பாட்ட நினைச்சு பெருமிதப்பட்டுகிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.
 
கூட்டமா செத்தமட்டும் விழிப்புணர்வு வந்துடுமா என்ன? நாலு நாளு துக்கம் அனுஷ்டித்துவிட்டு, அப்பால, கலாசாரத்தைக் காப்பாற்றுவது தானே தலையாய பணி.
 
முன்னொரு காலத்தில், கடற்கரை/பூங்கா போன்ற பகுதிகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு சாட்டாம்பிள்ளைகளின் குழுவினால் தொந்தரவு ஏற்படும். அந்த பணியினை தற்போது காவலர்கள் பிடித்துக்கொண்டனர்.
 
கொடுமை
வீடியோ படத்தைப் பார்த்தால் நடுக்கமாக இருக்கிறது.
வாழவே பயமாக இருக்கிறது. பொது இடங்களில் தகாத முறையில் நடந்து கொண்டிருந்தால் போலீஸ் ஏதாவது செய்யலாம். இது தவறு. ஏங்க கேட்குறதுக்கு யாருமே இல்லையா?
 
காவலர்கள் இன்னமும் எந்த விதமான orientation campலிலும் பங்கு பெறும் சூழல் இங்கில்லை. நேற்று இரவு நான் என்.டி.டி.வியில் பார்த்த போது மும்பையின் போலிஸ் கமிஷ்னர் orientation camp இருக்கிறது என்றார். அதுவும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்வில் நுழைவது என்பது மிகப் பெரிய குற்றம். ஒரு காவலர் பொது இடத்தில் ஒரு ஆண்-பெண் ஜோடிகளிடம் எவ்விதமாக நடந்துக் கொள்வது என்பதை முதலில் வரையறுக்காமல் இவ்விதமான நிகழ்வுகளை தடுக்க இயலாது. ஏற்கனவே என் பதிவில் எழுதியிருந்ததுப் போல (பார்க் ஹோட்டல் விவகாரம்) ஒரு பெண் அல்லது ஆண் புகார் கொடுத்தாலேயொழிய, வேறு எந்த விதத்திலும் காவலருக்கு அங்கே வேலையில்லை.

அடித்தது, உதைத்தது தாண்டி இது தனி மனித சுதந்திரத்தில் மூக்கை நுழைக்கும் செயல். மனித உரிமை கமிஷனின் தலைவர் இதைப் பற்றி நேற்றுப் பேசியிருக்கிறார். ஆனாலும், இரண்டு தம்பதிகள்/ஜோடிகள் முந்தாநாள் முதல் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் தற்கொலை செய்துக் கொண்டாலோ, அல்லது அவர்களின் குடும்பம், உறவினர்கள் மற்றவர்களின் பேச்சினைக் கேட்டுக் கொண்டு அவர்களைத் தள்ளி வைத்தாலோ, அதற்கான ஈடு தான் என்ன? அரசாங்கம் காவலர்களை மட்டும் ஒரு சஸ்பெண்ட் செய்யும். ஆனால், மனோவியல் ரீதியாக அந்த தம்பதிகளின் மனங்களில் கீறப்பட்டிருக்கும் காயங்களை யார் ஆற்றுவார்கள் ?

ஒரு விழாவிலோ, நிகழ்விலோ, "நீ தான் அவளோட போயிருந்து போலிஸ்கிட்ட அடிவாங்கின ஆளா" என்று யாராவது கேட்டால் அவர்களின் நிலையென்ன. அவற்றைப் பற்றியும், அவர்களின் உளவியல்ரீதியான பாதிப்புகளையும் எப்படி ஈடுகட்டப் போகிறோம்.
 
I have registered my thoughts here at http://chennaicutchery.blogspot.com/2005/12/blog-post_113518010652886309.html
 
நாராயணன், அடுத்த ஆட்சியில் ஒருவேளை இப்படி ஒரு நிலமை வந்தால் அச்சரியப்பட முடியாது. அதற்காகத்தான் நாம் இப்போதே குரல் கொடுக்க வேண்டியுள்ளது. உங்கள் பதிவுக்கு நன்றி.
 
பேசாமல் பொதுக்கழிப்பிடங்களில் 'ஆண்கள்', 'பெண்கள்' என்று பிரித்து வைத்திருப்பதுபோல் பூங்கா, கடற்கரை போன்ற பிற பொது இடங்களையும் பிரித்து வைத்துவிட வேண்டியதுதானே?

நம் நாட்டில் பெண்காவலர்களை நியமிக்க முற்பட்டபோது பெண்கள் பெண்களை கண்ணியமாக நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஆரம்பிக்கப்பட்டது. அதிகாரம் கையிலிருந்தால் மனிதமே காணாமல் போகும். பிறகு ஆண் ஏது பெண் ஏது?
 
இந்த அராஜகத்தை நேற்றுப் படித்தபோதே மகா எரிச்சலாக இருந்தது. உ.பியிலும் இந்தியாவிலும் தற்போதைய தலையாய தேவை இதுதான் போல. சாதாரண உடையில் அதே பார்க்கில் அமர்ந்திருக்கக்கூடிய ஒரு போலீஸ் தம்பதி இப்படி மாறி மாறி செவிட்டில் அறையப்பட்டிருந்தால் ஒருவேளை போலீஸுக்கு உறைத்திருக்குமோ என்னவோ. வீடியோ சுட்டிகளுக்கு நன்றி.
 
காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
http://www.dinamalar.com/2005Dec22/imp1.asp

இருந்தாலும் எது தவறு என்று வரையறுக்கப்படாதவரை போலீஸின் பார்வையில் எல்லாம் தவறுதான். சென்னையில் ஈவ்டீஸிங்கிற்காக நடந்த கொடுமை எல்லாரும் அறிந்ததே.
 
அனைவருக்கும் இந்த நேரத்தில் மற்ற ஒன்றையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

சென்னை அண்ணா நகர் பூங்காவில் பல கல்லூரி,பள்ளி ஜோடிகள் புதர் மறைவில் செய்யும் செயல்களை வார்த்தையில் எழுதினால் காசி நம்மை ஓரங்கட்டிவிடுவார். அதுவும் பள்ளிக் குழந்தகள் அங்கே உள்ள கழிவறையில் (Rest Room) சென்று சீருடையை மாற்றிவிட்டு வேறு உடையில் வந்து இது போன்ற புதர் விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பல முறை பார்த்து இருக்கிறேன். பொது இடங்களை எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்பது மக்களுக்கும் தெரிய வேண்டும்.உருப்படாத சமூகத்துக்கு காவல் தேவைதான். என்ன அந்த காவலே உருப்படாமல் போனால் எதுவும் உருப்படாது.

எனக்கு கல்யாணம் முடிந்த பிறகு நண்பர்கள் கொடுத்த அறிவுரை:

தமிழ நாட்டில் மனைவியுடன் எங்கு போனாலும் கல்யாண போட்டோவுடன் போ. போலீஸ் கண்ணுக்கு எல்லாமே தப்புத்தான்.

இனிமே ஒரு போட்டோவ கழுத்துல கட்டித் தொங்க விட்டுக்க வேண்டியது தான்.
 
இந்தியாவில் அனுமதியின்றி காவலர்கள் யார் மீதும் கைவைக்கக்கூடாது என்ற சட்டம் இல்லையா என்ன? அப்படியே இருந்தாலும் எலோரும் மான நஷ்ட வழக்கு போட்டுக்கொண்டு அலையமுடியுமா?
காவலர்கள் செய்தால் அது "வன்முறை" இல்லை சட்ட நடவடிக்கை? அடக்கடவுளே

/தமிழ நாட்டில் மனைவியுடன் எங்கு போனாலும் கல்யாண போட்டோவுடன் போ. போலீஸ் கண்ணுக்கு எல்லாமே தப்புத்தான். /
இன்றைய நிலைமைக்கு இது நல்ல யோசனையாக தெரிகிறது.

உங்கள் பதிவுக்கு நன்றி.
 
:-*
 
பதிவுக்கு நன்றி.

இதைப்படித்து என் மனதில் பட்டவைகள் இதோ.

http://kuzhappam.blogspot.com/2005/12/blog-post_23.html
 
நேரமாயிற்று
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் இருக்கிறவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.

-கவிஞர் அறிவுமதி அவர்களின் கவிதை(நட்புக்காலம் தொகுப்பில்). இந்த பதிவை படித்ததும் நினைவுக்கு வந்தது!
 
Too much, law order is in politicians hand who uses it for their personal revenge game, and now on top of this one.

I value nice things about our culture and tradition but if someone is going to enforce it on others I will be first one to protest
And these things bring shame to our country.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]